Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   01 MAY, 2024 | 09:37 PM

image

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.

அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது.

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு.

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/182440

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும்.

இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். 

தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர்....  "பக்கத்து இலைக்கு பாயாசம்" கேட்கிற கதையாய் இருக்கு. 😂
ம்ம்ம்... நடக்கட்டும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொல்வது

4 hours ago, ஏராளன் said:

பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து

வெற்றி பெறுகின்ற தமிழ் பொதுவேட்பாளர் மும்மொழிகளிலும் எமது லெமூரியா கண்ட வரலாறு பற்றி உலகிற்கு விளங்கபடுத்துவார் .
மும்மொழிகளில் உலகுக்கு எடுத்துரைக்கபடும் என்றால்  ஒன்று ஆங்கிலம் மற்றயது ரஷ்ய, சீன மொழிகளா

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் விக்கியர். அவருக்கு மறை கழன்றுபோய்விட்டது. 

இந்தியா பாடுகிறது . விக்கியர் ஆடுகிறார். 

🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

மும்மொழி வித்தகர் முதலமைச்சராக, எம்பி யாக இருந்து சொன்னதை கேட்காத உலகம் - வெறும் கட்டுக்காசை இழக்கபோகும் ஜனாதிபதி வேட்பளராக இருந்து சொன்னால் மட்டும் கேட்குமா?

லாஜிக் இடிக்குதே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும்.

ஐயா

அந்த இரண்டாவது வேட்பாளர் ரணில் தான் என்று உங்கள் வாயாலேயே சொல்லலாமே.

முதலாவது வாக்கெண்ணும் போது எப்படியும் 50 வீதம் வராது.

இரண்டாவது தடவை எண்ணும் போது ரணிலுக்கு தேவையானது கிட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நன்றி. வணக்கம். செல்லுங்கள். மீண்டும் வராதீர்கள். உங்களையும் நம்பி ஏமாந்து விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU   01 MAY, 2024 | 09:37 PM

image

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.

அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது.

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு.

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/182440

விக்கியார். சொல்வதில் பிழை இல்லை    

நீங்கள் வாக்குகளை என்ன செய்ய போகிறீர்கள்??,...ஒரு சிங்கள வேட்பாளருக்குப். போடத் தான் போகிறீர்கள்,.......அவர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்பது நன்கு தெரியும் ......ஆகவே சிங்களவருக்கு வாக்குப்பதிவு செய்வது பிரயோஜனம் அற்றது .......அந்த வாக்கை ஒரு தமிழருக்கு போட்டால் என்ன??? தமிழர் வெல்ல போவதில்லை தான் .....அதேவேளை சிங்களவரை வெல்ல செய்தும். எங்கள் விருப்பம் எதுவும் நிறைவேற்றப்படாது,....தமிழன் ஒன்றும் செய்ய முடியாது   காரணம் பெரும்பான்மை இல்லை ஆட்சி அதிகாரமும் இல்லை    தமிழர்கள் எல்லோரும் தமிழனுக்கு வாக்கு போடும் போது  வெல்ல விட்டாலும் தமிழர்களின் நம்பிக்கை வளர்கிறது  நம்பிக்கை வளர்த்து எடுங்கள் பிரச்சனை ஒரு நாள் தீரும். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

அந்த இரண்டாவது வேட்பாளர் ரணில் தான் என்று உங்கள் வாயாலேயே சொல்லலாமே.

முதலாவது வாக்கெண்ணும் போது எப்படியும் 50 வீதம் வராது.

இரண்டாவது தடவை எண்ணும் போது ரணிலுக்கு தேவையானது கிட்டும்.

இதுதான் இவர்களது நோக்கம்.. 

எத்தனை காலத்திற்குத் தான் இவர்களை நம்பி ஏமாறவேண்டும் என நினைக்கிறார்கள்.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

இதுதான் இவர்களது நோக்கம்.. 

எத்தனை காலத்திற்குத் தான் இவர்களை நம்பி ஏமாறவேண்டும் என நினைக்கிறார்கள்.. 

ஐயா ஏற்கனவே ரணிலுக்குத் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அது சித்திரையில்.

இது வைகாசியில்.

ஆனியில் எந்த ஆணியைப் புடுங்கப் போகிறாரோ?

இப்படி ஆளுக்காள் இழுபறிப்பட்டு அங்கு போய் யார் யாருக்கு வாக்கு போடப் போகிறார்களோ?

அதைவிட கஜேகுழு சொல்வது போல பேசாமல் பகிஸ்கரிக்கலாம் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6449.jpeg.2aa18904ac30d8e9a0f2

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6449.jpeg.2aa18904ac30d8e9a0f2

அருமை ஐயா. தமிழ் நண்டு, தமிழ் நத்தை ஆகி விட்டது🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அருமை ஐயா. தமிழ் நண்டு, தமிழ் நத்தை ஆகி விட்டது🤣

நீங்கள் சொல்வது சரி goshan . நண்டு எங்களுக்கானதுதான். தப்பி ஓடி பொந்துக்குள் மறைவதிலாவது நண்டு வேகம் காட்டும்.

நத்தையின் நகர்வு மிகவும் மெதுவானது. அத்தோடு கோடை நெடுந்தூக்கமும் அதற்கு இருக்கிறது. தமிழர்களுக்கான பிரச்சனை என்னவென்பது தெரியும். இதற்குள் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக ஒவ்வொரு பக்கமும் இழுத்துக் கொண்டிருந்தால்..

எங்கே விழுந்தோமோ அங்கேயே நகராமல் அப்படியே இருக்கிறோம்.

ஆமையைப் போட்டிருக்கலாம். சகோதரம் கோவப்படும் என்பதால், நத்தையை தெரிவு செய்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதி தேர்தலில்,   மரபு வழி வந்த, காலாவதியான, அறளை பெயர்ந்த தமிழ் அரசியல்வாதிகளின் பிதற்றல்களை புறக்கணித்து, கடந்த காலங்களில் ஏற்ப்பட பட்டறிவுகளில்  இருந்து தமது சுய புத்திக்கு ஏற்ற மாதிரி வாக்க்களிக்கவேண்டும்.  தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கு  மாத்தரமல்ல அரசியல் இருப்புக்கும் பொருந்தும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

உங்கள் பார்வையில் - மக்கள் என்ன செய்ய வேண்டும்?

6 hours ago, Kavi arunasalam said:

நீங்கள் சொல்வது சரி goshan . நண்டு எங்களுக்கானதுதான். தப்பி ஓடி பொந்துக்குள் மறைவதிலாவது நண்டு வேகம் காட்டும்.

நத்தையின் நகர்வு மிகவும் மெதுவானது. அத்தோடு கோடை நெடுந்தூக்கமும் அதற்கு இருக்கிறது. தமிழர்களுக்கான பிரச்சனை என்னவென்பது தெரியும். இதற்குள் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக ஒவ்வொரு பக்கமும் இழுத்துக் கொண்டிருந்தால்..

எங்கே விழுந்தோமோ அங்கேயே நகராமல் அப்படியே இருக்கிறோம்.

ஆமையைப் போட்டிருக்கலாம். சகோதரம் கோவப்படும் என்பதால், நத்தையை தெரிவு செய்தேன்.

சிரிப்பு குறி கடைசி வசனத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

உங்கள் பார்வையில் - மக்கள் என்ன செய்ய வேண்டும்?

வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்துக்கு அல்லது NPP க்கு வாக்கு அளிக்கலாம். நான் தாயகத்தில் இருந்தால் NPP க்கே வாக்களிப்பேன் ஏனெனில்.

1. மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது இனவாதம் குறைவாகும் ( முன்னைய தலைவர் சோமவன்சவின் விலகல், விமல் வீரவன்சவின் பிரிவுடன் அநேக இனவாத உறுப்பினர்கள் அவருடன் சென்றுவிட்டனர்)
2. மற்றைய கட்சிகள் போல் அல்லாது புத்த மதத்தை முன் நிறுத்தி அரசியல் செய்யவில்லை. ( பன்சலைக்கு செல்லும் போது பிக்குவினால் கட்டப்படும்  பிரித் நூலை,  பன்சலைவிட்டு வெளியேறும் போது அறுத்து விடுவார்கள் என்ற குற்றச்சாடும் NPP மீது உள்ளது )
3. ஊழல்/மோசடி  அற்ற கட்டுக்கோப்பான  கட்சி உறுப்பினர்கள். (  அப்படி யாரும் தவறு செய்தால் உடனடியாக விசாரணை செய்து கட்சியை விட்டு விலக்கி விடுவார்கள் - இயக்கம் மாதிரி )
4. அண்மை காலத்தில் அவர்களின் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் ( சோஷலிசத்தில் இருந்து சந்தை பொருளாதாரத்துக்கு )
5. NPP ஆட்சிக்கு வந்தால், அவர்களுடன் இணைத்து தமிழ் தேசிய விரோத அரசியல் செய்யும் டக்ளஸ், பிள்ளையான், அருண், கருணா போன்றவர்களை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற கூடிய சாத்தியம் உள்ளது ( 90 இல் இயக்கம் பிரேமதாசாவுடன் செய்தது போல் ).
6. அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
7. குடும்பவாத அரசியல் ( nepotism)  இன்மை.
8. தனிமனித வாதத்தை இன்றி, கொள்கைகளை முன் வைத்து அரசியல் செய்தல்.
9. தமிழ் மக்களை போல் NPP/ஜேவிபி உறுப்பினர்கள் கடுமையான அரச பயங்கரத்தைதை அனுபவித்தவர்கள், எங்களுடைய வலி அவர்களுக்கும்  புரிந்திருக்கும் ( நான் பல்கலைகழகத்தில் இருந்து போது நான் உணர்ந்து இருக்கிறேன் )

இவையனைத்து எனது சுய புத்திக்கு எட்டியவை, இவற்றில் தவறுகள் இருக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

மிகவும் விரிவானதும், சிந்தனையை தூண்டக்கூடியதுமான பதில்கள்.

நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி.

புலி தன் வரிகளை மாற்றாது என்பார்கள் - அதே போல் ஜேவிபி தன் இனவாதத்தை, கம்யூனிசத்தை கைவிடுமா? நான் NPP ஐ ஒரு முகமூடி என்றே பார்கிறேன்.

அத்தோடு - இனப்பிரச்சனைக்கு ஏனையோர் போல இவர்களும் ஒரு தீர்வைத்தானும் அறிவிக்கவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

2 hours ago, goshan_che said:

மிகவும் விரிவானதும், சிந்தனையை தூண்டக்கூடியதுமான பதில்கள்.

நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி.

புலி தன் வரிகளை மாற்றாது என்பார்கள் - அதே போல் ஜேவிபி தன் இனவாதத்தை, கம்யூனிசத்தை கைவிடுமா? நான் NPP ஐ ஒரு முகமூடி என்றே பார்கிறேன்.

அத்தோடு - இனப்பிரச்சனைக்கு ஏனையோர் போல இவர்களும் ஒரு தீர்வைத்தானும் அறிவிக்கவில்லையே?

இவர்கள் தமிழருக்கு தீர்வே தேவையில்லை என்கிறார்களே?

ஐக்கிய இலங்கை தான் குறிக்கோள்.

ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினாலும்

பாராளுமன்றைக் கைப்பற்ற முடியுமா?

ஒவ்வொரு சட்டங்களையும் பாராளுமன்று அல்லவா நிறைவேற்ற வேண்டும்.

மிக முக்கியமாக இவர் கலந்து கொண்ட எந்த ஒரு சந்திப்பிலும் இனப்பிரச்சனை பற்றி மூச்சே விடுவதில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2024 at 10:24, zuma said:

( 90 இல் இயக்கம் பிரேமதாசாவுடன் செய்தது போல் ).

இயக்கம் பிரேமதாசாவுடன் செய்தது போல் என்றால் சஜீத்தை தானே ஆதரிக்க வேண்டும்.
அவர்களின் காலபகுதி தமிழர்கள் ஒரு சிலருடன் பேசி இருக்கிறேன் இவர்கள் தமிழர் பகுதிகளில் இருந்திருக்க இல்லை அதனால் தமிழர்கள் அனுபவிக்கவில்லை. சிங்கல மக்கள் இவர்களால் துன்பம் அனுபவித்து இருக்கின்றனராம் மற்றது கோஷான்சே சொன்ன மாதிரி இவர்கள் இனவாதம், கம்யுனிச கொள்கைகளை கைவிட்டது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2024 at 23:52, Kandiah57 said:

விக்கியார். சொல்வதில் பிழை இல்லை    

நீங்கள் வாக்குகளை என்ன செய்ய போகிறீர்கள்??,...ஒரு சிங்கள வேட்பாளருக்குப். போடத் தான் போகிறீர்கள்,.......அவர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்பது நன்கு தெரியும் ......ஆகவே சிங்களவருக்கு வாக்குப்பதிவு செய்வது பிரயோஜனம் அற்றது .......அந்த வாக்கை ஒரு தமிழருக்கு போட்டால் என்ன??? தமிழர் வெல்ல போவதில்லை தான் .....அதேவேளை சிங்களவரை வெல்ல செய்தும். எங்கள் விருப்பம் எதுவும் நிறைவேற்றப்படாது,....தமிழன் ஒன்றும் செய்ய முடியாது   காரணம் பெரும்பான்மை இல்லை ஆட்சி அதிகாரமும் இல்லை    தமிழர்கள் எல்லோரும் தமிழனுக்கு வாக்கு போடும் போது  வெல்ல விட்டாலும் தமிழர்களின் நம்பிக்கை வளர்கிறது  நம்பிக்கை வளர்த்து எடுங்கள் பிரச்சனை ஒரு நாள் தீரும். 

It makes sense. சிங்களவனுக்கு வாக்களிக்காமல் ( இரண்டாவதை போடாமல்), தமிழன் ஒருவருக்கு வாக்களித்து தமிழரின் சிங்கள எதிர்ப்பை ஒருமித்து காட்டலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragaa said:

It makes sense. சிங்களவனுக்கு வாக்களிக்காமல் ( இரண்டாவதை போடாமல்), தமிழன் ஒருவருக்கு வாக்களித்து தமிழரின் சிங்கள எதிர்ப்பை ஒருமித்து காட்டலாம். 

மகிந்த எனும் இனக்கொலையாளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணி பொன்சேக்கா எனும் இன்னொரு இனக்கொலையாளிக்கு வாக்குச் செலுத்தி, அவன் செய்த அக்கிரமங்களை நாம் நியாயப்படுத்தியதை விடவும் தமிழருக்கென்று பொதுவான வேட்பாளரை நிறுத்தி அவரை ஆதரிப்பது எவ்வளவோ மேல். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.