Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

55 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த 3 ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தரையில் மோதியதாக இரான் அரசு ஊடகம் கூறும் அந்த ஹெலிகாப்டரில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்திருப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த இடத்தை அடைவதில் சிரமம் இருப்பதாகவும் இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

 

அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உள்ளது.

ஹெலிகாப்டர் தரையில் மோதிய இடம், தப்ரிஸ் நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வர்செகான் நகருக்கு அருகில் உள்ளது.

தப்ரிஸ் நகரம் இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

உள்ளூர் ஊடக செய்திகளின்படி, அஜர்பைஜானில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறந்து வைத்த பிறகு, தப்ரிஸ் நகரத்தை நோக்கி அதிபர் ரைசி சென்று கொண்டிருந்தார்.

கடும் மூடுபனி காரணமாக விமானம் தரையிறங்கியிருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படும் பகுதியில் வெறுங்கண்ணால் மிகக் குறைந்த தொலைவையே பார்க்க முடிவதாக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.

முரண்பட்ட தகவல்கள்

என்ன நடந்தது என்பது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைந்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிம் கூறுகிறது.

மற்றொரு ஹெலிகாப்டரில் ரைசி மட்டுமல்ல, இரானின் வெளியுறவு அமைச்சரும் பயணித்தார் என்று தஸ்னிம் செய்தி கூறுகிறது.

விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் பனிமூட்டம் நிலவுவதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

  • இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார்.
  • 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
  • 2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2019 ஆம் ஆண்டில், அயதுல்லா கமேனி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
  • அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை - ஈரான் ஊடகங்கள் தகவல்

Published By: RAJEEBAN   19 MAY, 2024 | 08:45 PM

image
 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது

ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மோசமான காலநிலை நிலவுகின்றது- குறிப்பிட்ட பகுதியில் மழையும் கடும் பனியும் காணப்படுவதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிக்காக அனுப்பப்பட்ட ஹெலிக்கொப்டர் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிவிட்டது என தகவல்கள் வெளியாகின்றன.

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் தொலைதூர பகுதியொன்றில் அவசரமாக தரையிறங்கியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தார் ஈரானின் வெளிவிவகார அமைச்சரும் அவருடன் பயணம் செய்தார் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹெலிக்கொப்டர் அவசரமாக தரையிறங்கிய பகுதிக்கு செல்வது கடினமாக உள்ளது என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/183984

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது என நினைக்கின்றேன். 👀

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்தில் ஏதோ சதி உள்ளது.

2 hours ago, ஏராளன் said:

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை - ஈரான் ஊடகங்கள் தகவல்

சிலவேளை செய்தியையும் நம்ப முடியாது.

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த Bell 412 ஹெலிக்கொப்டர் 1980 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது. ஈரானிடமுள்ள  பெரும்பான்மையான இராணுவ விமனங்களும் ஹெலிகொப்ரர்களும் 80 ஆண்ட்டுக்கு முற்பட்ட தயாரிப்புகளாகும். பொருளாதாரத் தடைகளினால் இவை சரியான முறையில் பராமரிப்புச் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த விபத்தில் ஏதோ சதி உள்ளது.

சிலவேளை செய்தியையும் நம்ப முடியாது.

கொலிக‌ப்ட‌ரில் ப‌ய‌ணித்த‌ அனைவ‌ரும் பெரிய‌ ஆட்க‌ள் 

 இதில் ச‌தி இருக்க‌ வாய்ப்பு மிக‌ குறைவு என்று நினைக்கிறேன்

ஈரான் உள‌வுத்துறை இவ‌ர்க‌ளின் பாதுக்காப்பை எல்லாம் சரி செய்து தான் அனுப்பி இருப்பின‌ம்

இய‌ற்க்கை அழிவை கொடுத்தால் அதில் ஒன்றும் செய்ய‌ முடியாது

முன்னாள் அமெரிக்கா வாஸ்கேட் வீர‌ர் kobe bryant 2020 க‌லிபோனியாவில் வானுர்த்தியில் ப‌ய‌ணித்த‌ போது வெத‌ர் மிக‌வும் மோச‌மாய் இருந்த‌ ப‌டியால் கெலிக‌ப்ட்ட‌ர் கீழ‌ விழுந்து நொறுங்கி தீ பிடிச்சு எரிந்த‌து அதில் ப‌ய‌ணித்த‌ அனைவ‌ரும் ப‌லி உட‌லை கூட‌ எடுக்க‌ முடிய‌ வில்லை

ஈரான் ஜ‌னாதிப‌திக்கு துணைக்கு போன‌ ம‌ற்ற‌ இர‌ண்டு கெலிக‌ப்ட‌ருக்கு என்ன‌ ஆன‌து

அன்மைக் கால‌மாய் வெத‌ர் கார‌ண‌மாய்  கெலிக‌ப்ட‌ர் விவ‌த்துக்க‌ள் அதிக‌ம்........................................

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, இணையவன் said:

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த Bell 412 ஹெலிக்கொப்டர் 1980 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது. ஈரானிடமுள்ள  பெரும்பான்மையான இராணுவ விமனங்களும் ஹெலிகொப்ரர்களும் 80 ஆண்ட்டுக்கு முற்பட்ட தயாரிப்புகளாகும். பொருளாதாரத் தடைகளினால் இவை சரியான முறையில் பராமரிப்புச் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

அப்படியானால் இவற்றை சுட்டு வீழ்த்தவும் தற்போது ஆயுதங்கள் 🙃இருக்காது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் இருப்பதுபோல் கெலிக்குள் "கறுப்புப் பெட்டி இருக்காதா..........!  😴

Edited by suvy
எ .பி. திருத்தம்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

விமானத்தில் இருப்பதுபோல் கெலிக்குள் "கறுப்புப் பேட்டி இருக்காதா..........!  😴

நான் அறிந்த‌வ‌ரை இல்லை த‌லைவ‌ரே......................

ஈரான் ஜ‌னாதிப‌தி ப‌ய‌ணித்த‌ கெலிக‌ப்டர‌ ப‌ல‌த‌ட‌வை ச‌ரி பிழை பார்த்து விட்டு தான் அனுப்பி விட்ட‌வை

ஆனால் இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌ம் கெலிக‌ப்ட‌ருக்கை வைத்து இருப்பின‌ம்......................இய‌ற்கை ஆவ‌த்து சூழ் நிலை வ‌ந்தால் உட‌ன‌ பாதுகாப்புதுறைக்கு த‌க‌வ‌ல் கொடுத்து இருப்பின‌ம்

ஆனால் இதுவ‌ரை ஒரு த‌க‌வ‌லும் கொடுக்க‌ வில்லை

க‌ண் இமைக்கும் நொடியில் விவ‌த்து ந‌ட‌ந்து இருந்தால் ஒன்றும் செய்ய‌ ஏலாது😥......................தேடுத‌ல் ப‌ணி அதிக‌ரிச்சு இருக்கு இப்ப‌ அங்கு இர‌வு நேர‌ம் என்றால் இருண்டு இருக்கும் 😥......................எல்லாம் குழ‌ப்ப‌மாய் இருக்கு இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் வெத‌ர் க‌ண்டிச‌னை பார்க்காம‌ வ‌ழி அனுப்பி வைச்ச‌து முட்டாள் த‌ன‌ம்.................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது என நினைக்கின்றேன். 👀

இஸ்ரேல் ஊட‌க‌ங்க‌ள் ஈரான் அதிப‌ர் இற‌ந்து விட்டார் என்று தொட‌ர்ந்து செய்தியை ப‌ர‌ப்பின‌ம்.............................................

33 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் வெத‌ர் க‌ண்டிச‌னை பார்க்காம‌ வ‌ழி அனுப்பி வைச்ச‌து முட்டாள் த‌ன‌ம்.................................

இது மட்டுமில்லை. ஒரு நாட்டின் அதிபர் பயணிக்கும் விமானத்தில் இரகசிய சமிக்ஞைகள் பாதுகாப்பு அணியுடன் இருக்கும். விபத்து ஏற்பட்டாலும் அதன் இடத்தையாவது காட்டும். அத்துடன் ஹெலிகொப்டரின் நகர்வுகள் கண்காணிக்கப்படும். இவருடன் சென்ற ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களும் பத்திரமாக உள்ளன.

40 வருட பழைய டப்பாவில் தனது நாட்டு அதிபரை ஏற்றி அனுப்பியவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்காது என்பது புலனாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

40 வருட பழைய டப்பாவில் தனது நாட்டு அதிபரை ஏற்றி அனுப்பியவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்காது என்பது புலனாகிறது.

இந்த லட்சணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சவால்??

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வந்தும் தண்ணி துரந்துவிட்டுத்தான் போனவர்...இப்பவும் தண்ணி திறக்கதந்தான் போனவர்...இலங்கை அல்லா  வலிமையானவர் போல.. இவ்வளவு நீண்ட தூரம் போகையில் ஒரு ஆபத்தும் வரவில்லை...இப்ப தன்னுடைய நாட்டிலையே ஆளைக்காண வில்லை.....லங்காவை  தரிசித்த பலன் ...தமிழர்களின் கண்ணீர் நிறைந்த நாளில்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

இலங்கைக்கு வந்தும் தண்ணி துரந்துவிட்டுத்தான் போனவர்...இப்பவும் தண்ணி திறக்கதந்தான் போனவர்...இலங்கை அல்லா  வலிமையானவர் போல.. இவ்வளவு நீண்ட தூரம் போகையில் ஒரு ஆபத்தும் வரவில்லை...இப்ப தன்னுடைய நாட்டிலையே ஆளைக்காண வில்லை.....லங்காவை  தரிசித்த பலன் ...தமிழர்களின் கண்ணீர் நிறைந்த நாளில்...

வேத‌னை என்ன‌ என்றால் ஈரான் அதிப‌ருக்கு துணைக்கு போன‌ இர‌ண்டு கெலிக‌ப்ட‌ரும் என்ன‌ செய்தார்க‌ள்...........................
உட‌ன‌ த‌லைமைக்கு அறிவித்து இருக்க‌னும் அதிப‌ர் வ‌ந்த‌ வானுர்த்தி தொட‌ர்வு துன்டிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து என்று........................இதில் ச‌தியும் இருக்க‌லாம் வெத‌ர் ச‌ரி இல்லாம‌ கீழ‌ விழுந்தும் இருக்க‌ கூடும்

நாளைக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று தெரிய‌ வ‌ரும்......................ஈரான் தொட‌ர்ந்து முக்கியமான‌வ‌ர்க‌ளை இழ‌ந்திட்டு வருது க‌ட‌ந்து 5ஆண்டுக‌ளில்.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

இது மட்டுமில்லை. ஒரு நாட்டின் அதிபர் பயணிக்கும் விமானத்தில் இரகசிய சமிக்ஞைகள் பாதுகாப்பு அணியுடன் இருக்கும். விபத்து ஏற்பட்டாலும் அதன் இடத்தையாவது காட்டும். அத்துடன் ஹெலிகொப்டரின் நகர்வுகள் கண்காணிக்கப்படும். இவருடன் சென்ற ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களும் பத்திரமாக உள்ளன.

40 வருட பழைய டப்பாவில் தனது நாட்டு அதிபரை ஏற்றி அனுப்பியவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்காது என்பது புலனாகிறது.

2014ம் ஆண்டு MH370 மலேசிய விமானம்  239 பேரோட மேல எழும்பினது இன்னும் கீழ இறங்கவே இல்லையாம்.🤣  மொத்த உலகமும் இண்டுவரைக்கும் தேடிக்கொண்டுதான் இருக்குதாம்.... தேடுற ஆக்கள் ஆருயிர் அமெரிக்கா மற்றது அன்பே ஆருயுரே அவுஸ்ரேலியா.

ஒரு வேளை இதுவும் பழைய டப்பாவாக இருக்குமோ? 😎

 

MH370 Flight disappearance could be an outcome of mass murder plan says British aviation expert

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

இந்த லட்சணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சவால்??

டப்பா ஈரான் தங்கள் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவி செய்யுங்கோ என்று   ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விட்டுள்ளது. .அவர்கள் செயற்கைக்கோள் மூலம் தகவல்கள் பெற்று வழங்குகின்றனர்.
இவர் ஒரு மோசமான மதவாதி. ஹிஜாப்  அணியாதற்காக அமினி பொலிசினால் அடித்து கொல்லபட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நடந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்குமுறைக்கு அவர் உத்தரவிட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, விசுகு said:

இந்த லட்சணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சவால்??

வணக்கம் விசுகர்!
முஸ்லீம் இனத்தவர்கள் மெல்ல மெல்ல கொல்லும் விஷங்களாக அகதிகள் மற்றும் வேலைவாய்ப்பு குடியேற்றம் எனும் போர்வையில் ஐரோப்பா,அமெரிக்கா என பரப்பி விட்டுள்ளனர். அவர்களின் பலம் அதியுச்ச ஆணிவேர் அரசியலிலும் புகுந்து விட்டார்கள்.

அதை விட....

அண்மைய / இன்றைய பலஸ்தீன விடுதலை சார்பாக மேற்குலகில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆட்சியாளர்களையே அதிர வைக்கின்றது. பலஸ்தீனத்தில் அமைதி இல்லையேல்  சர்வதேசத்திலும் அமைதி இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
நீங்களோ இன்னும் அமெரிக்காவின் பலம் தெரியுமா இஸ்ரேலின் பலம் தெரியுமா என கருத்து மழை பொழிந்து கொண்டிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இஸ்ரேல் ஊட‌க‌ங்க‌ள் ஈரான் அதிப‌ர் இற‌ந்து விட்டார் என்று தொட‌ர்ந்து செய்தியை ப‌ர‌ப்பின‌ம்.............................................

தட்டித் தூக்கினவங்களுக்கு உண்மை தெரியும் தானே. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இந்த லட்சணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சவால்??

சகல அரசுகளும் குண்டுகளை போட்டு  பொது மக்களை அழிப்பதை தவிர வேறு என்ன தெரியும்? ஆயிரத்தில் ஒரு  பேச்சுவார்த்தை வெற்றியை தவிர......

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

2014ம் ஆண்டு MH370 மலேசிய விமானம்  239 பேரோட மேல எழும்பினது இன்னும் கீழ இறங்கவே இல்லையாம்.🤣  மொத்த உலகமும் இண்டுவரைக்கும் தேடிக்கொண்டுதான் இருக்குதாம்.... தேடுற ஆக்கள் ஆருயிர் அமெரிக்கா மற்றது அன்பே ஆருயுரே அவுஸ்ரேலியா.

ஒரு வேளை இதுவும் பழைய டப்பாவாக இருக்குமோ? 😎

 

MH370 Flight disappearance could be an outcome of mass murder plan says British aviation expert

 

gianna-bryant-gty-er-200126-hp-Main.jpg

இவ‌ர் தாத்தா அமெரிக்கா முன்ன‌னி Basketball Player

இவ‌ரின் சொத்துக்க‌ள் ப‌ல‌ வில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர்

இவ‌ர் த‌ன‌க்கென்று சொந்த‌மாய் கெலிக‌ப்ட‌ர் வைத்து இருந்த‌வ‌ர்

2020 தை மாச‌ம் த‌ன‌து ம‌க‌ளுட‌ன் க‌லிபோனியாவில் இருந்து வேறு இட‌த்துக்கு ப‌ய‌ண‌ம் செய்தார்........................அந்த‌ அன்று ந‌டு வானில் இய‌ற்கை மிக‌வும் மோச‌மாக‌ இருந்த‌து

வானுர்த்தி ஓட்டுன‌ரால் கெலிக‌ப்ட‌ர‌ க‌ட்டுபாட்டுக்குள் வைத்து இருக்க‌ முடிய‌ வில்லை  மொத்த‌மாய் அந்த‌ கெலிக‌ப்ட‌ரில்  7 பேர் ப‌ய‌ணித்த‌வை

ந‌டு வானில் இருந்து கெலிக‌ப்ட‌ர் கீழ‌ விழுந்து நொறுங்கி அதில் ப‌ய‌ணித்த‌ அத்த‌னை பேரும் எரிந்து ப‌லி ஆனார்க‌ள்

உட‌ல்க‌ள் கூட‌ மிஞ்ச‌ வில்லை

அவ‌ர் ப‌ய‌ணித்த‌ கெலிக‌ப்ட‌ர் அதிக‌ பெறும‌தி வாய்ந்த‌ கெலிக‌ப்ட‌ர்.......................

 

இப்ப‌ கூட‌ Kobe Bryant இழ‌ப்பை என்னால் தாங்க‌ முடிய‌ வில்லை 2020ம் ஆண்டு இந்த‌ செய்தி கேள்வி ப‌ட்ட‌தும் க‌ண்ணீர் அதிக‌ம் வ‌ந்திச்சு....................2012க‌ளில் இருந்து இவ‌ரின் விளையாட்டை பார்த்து ர‌சித்து இருக்கிறேன்

இப்ப‌டியான‌ விவ‌த்து யாருக்கும் நேர‌க் கூடாது.................................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, வாலி said:

தட்டித் தூக்கினவங்களுக்கு உண்மை தெரியும் தானே. 😂

இது தெரியாமல் தான் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊத்திக்கொண்டிருக்கின்றோம்.

23 minutes ago, வீரப் பையன்26 said:

2020 தை மாச‌ம் த‌ன‌து ம‌க‌ளுட‌ன் க‌லிபோனியாவில் இருந்து வேறு இட‌த்துக்கு ப‌ய‌ண‌ம் செய்தார்........................அந்த‌ அன்று ந‌டு வானில் இய‌ற்கை மிக‌வும் மோச‌மாக‌ இருந்த‌து

வானுர்த்தி ஓட்டுன‌ரால் கெலிக‌ப்ட‌ர‌ க‌ட்டுபாட்டுக்குள் வைத்து இருக்க‌ முடிய‌ வில்லை  மொத்த‌மாய் அந்த‌ கெலிக‌ப்ட‌ரில்  7 பேர் ப‌ய‌ணித்த‌வை

அப்பன்! இது  பழைய தகர டப்பா லிஸ்ரில் வராது. ஏனெண்டால் சங்கர் படம் மாதிரி மேற்குலக பிரமாண்டத்தில் அவர்கள் வாழ்கின்றர்கள். 

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

President உம் foreign minister உம் விபத்தில் காலமானதாக நம்பப்படுவதாக bbc சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில நம்மட (சில) தமிழ் ஆட்கள் மகள்மாரிண்ட மஞ்சள் நீராட்டு விழாவுக்கே இதை விட மாடர்ன் ஆனா ஹெலிகாப்டரை தான் பிடித்து ஏற்றி இறக்கி விழா செய்கிறார்கள் கண்டியலே 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய ஜனாதிபதியும், அவரின் வெளிநாட்டமைச்சரும் பயணித்த உலங்குவானூர்தியின் சிதைந்த பகுதிகளை மீட்புப்பணியாளர்கள் அடைந்திருக்கின்றனர். முற்றாக எரிந்தநிலையில் உலங்குவானூர்தி காணப்படுகிறது. அவர்கள் உயிர்தப்பியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவானவையே என்று ஈரானிய மீட்புப்பணியாளரின் அமைப்பு கூறுகிறது.

 

https://www.iranintl.com/en/liveblog/iran president chopper incident

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

பெல் - 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றில்த்தான் ஈரானிய ஜனாதிபதியும் ஏனையவர்களும் பயணித்திருக்கிறார்கள். இந்த உலங்கு வானூர்தி 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அமெரிக்க இராணுவத்தின் பாவனையில் சுமார் 15 வருடகால சேவைக்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக்குச் சற்று முன்னர் அப்போதைய ஈரானிய அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால், இஸ்லாமியப் புரட்சியின் பின்னர் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே ஏற்பட்ட முறுகலினால் ஈரானிற்கான ஆயுத தளபாட ஏற்றுமதியை அமெரிக்கா முற்றாக நிறுத்திவிட்டது. அந்த நிலையில் இந்த உலங்கு வானூர்திக்கான உதிரிப்பாகங்களை ஈரான்  பெறமுடியாத நிலையிலேயே இவற்றினைப் பராமரித்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமையான இந்த உலங்குவானூர்தியில் நாட்டின் மிகவும் முக்கியமான மனிதரை அழைத்துச் செல்லுமளவிற்கு ஈரானிய அரசு இருந்திருக்கிறது.

ஈரானிற்குச் சார்பான ரஸ்ஸியா சீனா ஆகிய நாடுகள் மிகப்பலமான உலங்குவானூர்திகளை தற்போது தயாரித்து வருகின்றன. தனது அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் ரஸ்ஸியாவிலும், சீனாவிலும் தங்கியிருக்கும் ஈரான், தனது ஜனாதிப‌தியின் பாதுகாப்பான பயணத்திற்கு இன்னமும் 60 வருடப் பழமையான அமெரிக்க உலங்குவானூர்தியைப் பாவித்தது ஏன்? 
 

A helicopter carrying Iran's President Ebrahim Raisi takes off, near the Iran-Azerbaijan border, on May 19.

Red Crescent via FARS News Agency

A helicopter carrying Iran's President Ebrahim Raisi takes off near the Iran-Azerbaijan border on May 19. This third-party photo was provided by the Islamic Republic News Agency and West Asia News Agency.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.