Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240604-210947-Chrome.jpg

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்   6 கோடி இல்லையா??  அல்லது  எவ்வளவு??

  • Replies 212
  • Views 14k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா? முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி. மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார். ஆனா

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இப்ப‌த்தை நில‌வ‌ர‌ம் அண்ணா.......................இதை பாருங்கோ புரியும் நீங்க‌ள் க‌ணித்த‌து ச‌ரி  நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்துக்கு மேல் பெற்று விட்டின‌ம்🙏🥰....................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

பீஜேப்பி கூட்ட‌னி எத்த‌னை

திமுக்கா கூட்ட‌னி எத்த‌னை

ஆதிமுக்கா கூட்ட‌னி எத்த‌னை

இந்த‌ மூன்று க‌ட்சியும் ப‌ண‌த்தை கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திச்ச‌வை

த‌ன்மான‌ த‌மிழ‌ர்க‌ள் நாங்க‌ள் இருக்கிறோம் என்று 35ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்

உங்க‌ளோட‌ விவாதிக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை பெரிய‌வ‌ரே😉....................................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அப்படி சொல்ல கூடாது தம்பி   .....பிஜேபி   12 % வாக்கு பெற்று இருக்கிறது  இது வளர்ச்சி ஆகும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

அப்படி சொல்ல கூடாது தம்பி   .....பிஜேபி   12 % வாக்கு பெற்று இருக்கிறது  இது வளர்ச்சி ஆகும்   

பீஜேப்பி த‌ணித்து நின்று இருந்தால் தெரிந்து இருக்கும்

விவ‌சாயி சின்ன‌த்துக்கு ம‌க்க‌ள் போட்ட‌ வாக்கும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்க‌ வேண்டிய‌து

இப்ப‌வும் சீமானின் சின்ன‌ம் விவ‌சாயி என்று வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் சொல்லுகின‌ம்...............................சின்னம் ப‌றி போய் இருக்காட்டி கூடுத‌லா மூன்று ச‌த‌வீத‌ வாக்கு கூட‌ கிடைச்சு இருக்கும்

இது பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் தானே என்று பீஜேப்பிக்கு போட்டு இருப்பின‌ம்............................

நாம் த‌மிழ‌ர் 14வ‌ருட‌ க‌ட்சி

ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுட‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ஒப்பிடுவ‌து த‌வ‌று 

மற்ற‌ க‌ட்சிக‌ள் 50வ‌ருட‌ ப‌ழைய‌ க‌ட்சிக‌ள்.........................................

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

👍...........

உங்களை காணவில்லையே என்று இங்கே எல்லோரும் தேடினவை......நீங்கள் எல்லோருக்கும் ஒளித்து கணக்கு ரியூசனுக்கு போயிருக்கிறீர்கள்........🤣

2 hours ago, நியாயம் said:

IMG-7916.jpg

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுட‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ஒப்பிடுவ‌து த‌வ‌று 

மற்ற‌ க‌ட்சிக‌ள் 50வ‌ருட‌ ப‌ழைய‌ க‌ட்சிக‌ள்.........................................

ஆமாம் எற்றுக்கொள்கிறேன் ...ஆனால்  பஞ்சாப் மாநிலத்தில்  இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ....அதில் ஒருவர்  தனிநாடு கோருபவர். சிறையினுள்ளே. இருந்த படி  வென்று இருக்கிறார் மற்றவர்.  இந்திராகாந்தியை சுட்டவரின் மகன். அவரும் வெற்றி பெற்றுள்ளார்.   இவர்களுக்கு சின்ன பிரச்சனை இல்லையா ?? நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை வாக்கு கூட விழுந்து உள்ளது  ஒரு தமிழன்  தமிழ்நாட்டில்  பெறும் வாக்கு  என்ற அடிப்படையில் இது மிகவும் குறைவு   மகிழ்ச்சி அடையக்கூடிய விடயமுமில்லை     இது எனது கருத்துகள்  நீங்கள்  நாம் தமிழர் கட்சிக்கு உழையுங்கள்.   வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

வேட்பாள‌ர்க‌ள் பெற்ற‌ வாக்கை வைச்சு தான் ச‌த‌வீத‌த்தை வெளியிடுகின‌ம் 36 ல‌ச்ச‌ம் வாக்குக‌ளோடு தொட‌ர்ந்து க‌ள‌த்தில் 

விருதுந‌க‌ர் ம‌ற்றும் தென்சென்னை முடிவுக‌ள் அறிவிக்க‌ப்ப‌ட‌ல‌

நாளை தெரியும் முழு விப‌ர‌மும் அண்ணா.....................................

இப்ப‌வே 8,14 ச‌த‌வீத‌ம்

நாளை கூடும்🙏...........................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அண்ணாம‌லை ஹா ஹா

நான் நினைக்கிறேன் இந்த‌ தேர்த‌ல் ஓட‌ இவ‌ரை இட‌ம் மாற்ற‌ கூடும் அல்ல‌து 2026ம‌ட்டும் வைத்து இருப்பின‌ம்...........................பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சிக்கு பீஜேப்பியாள் தான் சொந்த‌ தொகுதியில் தோத்த‌வை

அதுக‌ளுக்கு எங்கை கொள்கை கோட்பாடு தேர்த‌லுக்கு தேர்த‌ல் சூக்கேஸ்சில் ப‌ண‌ம் போனால் உட‌ன‌ வேறு கூட்ட‌னி வைப்பின‌ம்....................................................

1 hour ago, Kandiah57 said:

புரியவில்லை,..

திமுக   பெற்ற வாக்கு 27%   கிட்டத்தட்ட 

அதிமுக  பெற்ற வாக்கு   21% கிட்டத்தட்ட 

பிஜேபி பெற்ற வாக்கு  12 % கிட்டத்தட்ட   இது ஒரு பெரிய வளர்ச்சி  வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும்  27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும்  ??  இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை   

100-27=73.       இந்த 73%.  வாக்களாருக்கு   ஒரு பிரதிநிதி கூட. இல்லையா??  மோடி அவர்களே !!!!மாற்றுங்கள்.  தேர்தல் முறையை   🤣🤪😂

பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது  இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல்  வரப்போவதில்லை என்று நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

இதை கண்டறிய வழி உள்ளது. நேரம் மினக்கட்ட வேலை சில தொகுதிகள் முடிவு தருகின்றேன்.

முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி எண்ணிக்கை இலக்கம் உள்ள இணைப்பை அழுத்தி நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்துள்ளன, எத்தனை வாக்குகளினால் தோற்றார்கள் என பார்க்கலாம்.

கீழுள்ள டேபிளை தொடருங்கள். சகலதையும் கூட்டி எத்தனை வீதம் கிடைத்துள்ளது என பார்க்கலாம்.

Party Wise Results
Party Won Leading Total
Total 39 0 39
Dravida Munnetra Kazhagam - DMK 22 0 22
Indian National Congress - INC 9 0 9
Viduthalai Chiruthaigal Katchi - VCK 2 0 2
Communist Party of India - CPI 2 0 2
Communist Party of India (Marxist) - CPI(M) 2 0 2
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK 1 0 1
Indian Union Muslim League - IUML 1 0 1

35 - RAMANATHAPURAM (Tamil Nadu)

DRCHA-2024-20240331080926.jpg
Lost
97672 ( -411992)
DR CHANDRA PRABHA JEYAPAL
Naam Tamilar Katchi

22 - DINDIGUL (Tamil Nadu)

KAILA-2024-20240326070904.jpg
Lost
97845 ( -572304)
KAILAI RAJAN D
Naam Tamilar Katchi

32 - MADURAI (Tamil Nadu)

TSATY-2024-825.jpg
Lost
92879 ( -337444)
SATHYADEVI T
Naam Tamilar Katchi

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

Screenshot-20240604-224420-Chrome.jpg

இப்ப‌த்தை நில‌வ‌ர‌ம் அண்ணா.......................இதை பாருங்கோ புரியும்

நீங்க‌ள் க‌ணித்த‌து ச‌ரி 

நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்துக்கு மேல் பெற்று விட்டின‌ம்🙏🥰......................................................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது  இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல்  வரப்போவதில்லை என்று நினைக்கிறன். 

அதே ம‌ன‌ நிலை தான் என‌க்கும்

பீஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ர்வ‌து த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்து

அவ‌ர்க‌ள் கூட்ட‌னிக்கு போகாட்டி அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் 5 ,6 இம்ம‌ட்டும் தான்

காங்கிர‌ஸ் த‌னிய‌ நின்றால் அவைக்கும் பீஜேப்பி நிலை தான்..........................

பீஜேப்பி த‌ல‌மையில் இவ‌ள‌வு க‌ட்சிக‌ள் கூட்ட‌னி வைச்சும் அவ‌ர்க‌ளால் ஒரு தொகுதியில் கூட‌ வெல்ல‌ முடிய‌ வில்லை

த‌மிழ‌க‌ அள‌வில் பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ க‌ட்சிக‌ளின் ஓட்டும் பீஜேப்பிக்கு தான் போகும் உதார‌ன‌த்துக்கு ப‌மாகாவுக்கு த‌மிழ‌க‌ அள‌வில் வ‌ன்னிய‌ ம‌க்க‌ள் இருக்கின‌ம் பீஜேப்பி கூட‌ பாம‌கா கூட்ட‌னியில் இருப்ப‌தால்

பீஜேப்பி போட்டி போடும் தொகுதிக‌ளில் பாம‌கா ஆதர‌வாள‌ர்க‌ளின் ஓட்டும் பீஜேப்பிக்கு போடுவின‌ம்

பிஜேப்பி த‌ல‌மையில்

5 கூட்ட‌னி என்றால் பாருங்கோவேன்☹️.....................................................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240604-224420-Chrome.jpg

உறவே இதை நீங்கள்  முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அப்படி சொல்ல கூடாது தம்பி   .....பிஜேபி   12 % வாக்கு பெற்று இருக்கிறது  இது வளர்ச்சி ஆகும்   

பிஜேபி கூட்டணி என்று சொல்லுங்கள். பாமக இல்லாவிட்டால் பிஜேபியின் நிலை படுமோசமாகி இருக்கும். அத்துடன் தென்தமிழகத்தில் தினகரன்>ஓபிஸ்  அகியோரின் ஆதவும் பாஜக கூட்டணியின் வாக்கு சதவுPதத்தை உயர்த்தி இருக்கின்றன்.திமுக காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு இருந்தால் அவர்களின் நிலை படு மோசாமாக இருக்கும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி இருக்கும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுக இரண்டாக உடைந்தாலும் இரட்டை இலைக்கான  வாக்குகள் இன்னும் கணிசமான அளவு இலுக்கின்றன டஎன்பதையே இருபலமான மூட்டணிகளை எதிர்த்து கிட்டத்தட்ட தனியாகவே 9பலவீனமான கூட்டணி அமைத்தும்) அதிமுக குறிப்பிடத்தக்க அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்நறு இருக்கிறது;. 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில் களமிறங்கிய நாம் தமிழர் தனித்து நின்று சாதித்துக் காட்டியிருக்கிறது. இது 2024 தேர்தலில் பெரிய மாற்றததைக் கொண்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவே இதை நீங்கள்  முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.

நான் அவ‌ர்க‌ளுக்கு மேல் ஓட்ட‌மாய் விள‌ங்க‌ப் ப‌டுத்தினான் உற‌வே ஆனால் தேர்த‌ல் ஆணைய‌த்தின் இணைய‌த்தில் ம‌ற்ற‌வை என்று இருந்தால் சிறு குழ‌ப்ப‌ம்...................நாளை முழு விப‌ர‌த்தையும் இந்த‌ திரிக்குள் இணைக்கிறேன் உற‌வே🙏🥰...........................................

  • கருத்துக்கள உறவுகள்

நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில்  போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து  வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றுவரை நாம் தமிழர் கட்சியை மறைத்த தினமலர் ஊடகம் இன்று  அந்தக்கட்சியின் வாக்குகளை விலாவாரியாக வெளியிட்டுள்ளது.வாக்குக்கு பணம் செலுத்தும் நாட்டில் சீமான் கட்சி அதி வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.

நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றேன். காரணம் அவர்களின் தமிழ்நாட்டு நலன் பற்றியதே தவிர வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில்  போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து  வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)

ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை

சோச‌ல் மீடியா மூல‌ம் இளைய‌ர்க‌ள்  குறுகிய‌ நாட்க‌ளில் மைக் சின்ன‌த்தை ம‌க்க‌ளிட‌ம்  சேர்த்தார்க‌ள்...........................ஒரு க‌ட்ட‌த்தில் ப‌ண‌மே இல்லை தேர்த‌ல் செல‌வுக்கு இருந்த‌தை வைச்சு தேர்த‌ல் செல‌வை ச‌மாளிச்சின‌ம்

ம‌த்திய‌ அர‌சு தேர்த‌ல் நேர‌ம் கொடுத்த‌ நெருக்க‌டி என் ஜ‌ ஏ சோத‌னை , க‌ட்சி சின்ன‌ம் ப‌றிப்பு 

இதை எல்லாம் தாண்டி ஆட்டோ சின்ன‌ம் கேட்க்க‌ அதை உட‌ன‌ வேறு க‌ட்சிக்கு தூக்கி கொடுத்த‌து

பீஜேப்பி கூட‌ கூட்டனி வைச்ச‌ வாச‌னுக்கு சைக்கில் சின்ன‌ம் கொடுத்த‌து இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் இதை எல்லாம் தாண்டி தான் 21 நாள் பிர‌ச்சார‌த்தின் பின் 36ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் பெற்று இருக்கின‌ம்

2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் பெற்ற‌ வாக்கு 17 ல‌ச்ச‌ம் , இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் கூடுத‌லா 19ல‌ச்ச‌ ஓட்டு பெற்று இருக்கின‌ம்.................................2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 31 ல‌ச்ச‌ வாக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 16ச‌த‌ வீத‌த்தை தொடும் புல‌வ‌ர் அண்ணா.....................................

க‌ந்தையா57 ஜ‌யாவுக்கு நாங்க‌ள் உண்மையை விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் அந்த‌ ம‌னுஷ‌ன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ந்தையா57 ஜ‌யாவுக்கு நாங்க‌ள் உண்மையை விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் அந்த‌ ம‌னுஷ‌ன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................

Edited 7 minutes ago by வீரப் பையன்26

தம்பி நான்  தமிழ்நாட்டிலுள்ள எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை எதிரியும். இல்லை  எனபதை உறுதிப்படுத்கிறேன்   இங்கே எழுதுவது கருத்துகள் மட்டுமே 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும்  தனித்து போட்டியிடுவது தான்  நல்லது  5 % குறைந்த வாக்கு பெற்ற கட்சிகளை  இரத்து செய்து விடவேண்டும்.    எந்த கட்சியும். எந்த காலத்திலும். தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வென்று ஆட்சி அமைக்க போவதில்லை முடியாது  

 ஜேர்மனியில் இதே நிலை தான்  இங்கே சிறந்த விகிதாச்சாரமுறையுண்டு    தேர்தலின். பின்பு தான்  வென்ற கட்சிகள்  பேச்சுவார்த்தை மூலம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவார்கள்.  தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது  சின்ன கட்சிகள் காணாமல் போய்விடும்” 😂

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதை செய்தார் சீமான் நடந்தது என்ன !

  • கருத்துக்கள உறவுகள்

🤣🤣🤣

நாதக

1. தேர்தலுக்கு முதலே நாம் தமிழர் 8% என நான் எழுதியபோது (போட்டி திரியிலும் இதையே பதிலாக கொடுத்தேன்), இல்லை,  இல்லை நாதக 5% கூட எடுக்காது என ஒரு சாரரரும், 15% தாண்டும் என தம்பிகளும் சொன்னார்கள்.

ஆனால் போன சட்ட மன்ற தேர்தலில் எடுத்த அதே அளவை, அதாவது அண்ணளவாக 8% ஐ நாதக எடுத்துள்ளது. இது வளர்ச்சியும் இல்லை தேய்தலும் இல்லை.

நாதக தேக்க நிலையில், அசையாமல் நிற்கிறது என்பதையே இது காட்டு கிறது.

இதை நாதக வளர்ந்து விட்டது என தம்பிகள் இங்கும், சமூக ஊடகத்திலும் பரப்பி விடுவது -கம்பி கட்டும் கதைதான்.

போன தேர்தலில் 3 கட்சிகள் ஓடிய ரேசில் 3ஆவதாக வந்து விட்டு, தமிழ்நாட்டில் மூன்றாம் பெரிய கட்சி என தம்பிகள் உருட்டியது போல, இப்போ 7.9% இல் இருந்து 8.1% சதவீதம் ஆகியதை ஏதோ இமாலய சாதனை போல் உருட்டுகிறார்கள்🤣.

நாதக 8% க்கு மேல் எடுத்தால் மாநில அந்தஸ்தை அடையும், நிரந்தர சின்னம் கிடைக்கும் என்பது - நாதக 8% வாக்கை பெறும் என எதிர்வு கூறிய போதே எதிர்பார்த்ததுதான். இதுவும் ஒரு வளர்ச்சி அல்ல. 15 வருடமாக அத்தனை தொகுதொயிலும் தனித்து நின்று இப்போதான் 8% எட்டி இருக்கிறார்கள், என்பதே அவர்களின் குறை வளர்சியையே காட்டு கிறது.

திமுக தொடங்கி 15 வருடத்தில் ஆட்சியை பிடித்து விட்டார்கள். அதிமுக தொடங்கி அடுத்த தேர்தலியேலே. ஜெ கூட அதிமுக வை கைப்பற்றி குறுகிய காலத்தில் ஆட்சி கட்டில் ஏறினார்.

இந்த சின்னமும் அடுத்த தேர்தல்களில் 8% எட்டாவிட்டால் மீளவும் பறிபோகும். மதிமுகவின் பம்பரத்துக்கு நடந்தது போல.

இது ஒன்றும் வளர்ச்சி இல்லை ஆனால் தம்பிகளுக்கு ஒரு ஆறுதல் பரிசு என்ற அளவில் சந்தோசப்பட்டு கொள்ளலாம்.

2. சீமான், அடுத்து 2026 இல் என்ன செய்வார் என்பதுதான் இனி நாதகவின் போக்கை தீர்மானிக்கும்.

மோடியே, நாயுடு, நிதீஷ் ஆதரவில்தான் அடுத்த ஐந்து ஆண்டு ஆளப்போகிறார். எனும் போது முன்னர் போல் பிஜேபிக்க்காக வாக்கை பிரிக்கும் அரசியல் அதிக பலனை தருமா என்பது சந்தேகமே.

அதேசமயம் 2026 இல் அதிமுக கூட்டணியில், பிஜேபி சமேத நாதக இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை. (தம்பிகள் முட்டு கொடுக்க தயாராகவும்).

விஜை முதுகில் ஏறி சீமான் பயணிக்க ஆசைபடுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் சீமானை முதல்வராக்கவோ அல்லது நாதகவை ஆட்சியில் அமர்த்தவோ தன் பலநூறு கோடி ரூபாய் தொழிலை விட்டு விட்டு விஜை வரவில்லை. அநேகமாக - 15% சீட்டுகள் என்ற அடிப்படையில் நாதக விஜையோடு சேரலாம்.

பாஜக

நாதகவை போல் பாஜவை அலட்சியம் செய்ய முடியாது. உண்மையில் அண்ணாமலையின் வாய் துடுக்கால் அதிமுக கூட்டணியை முறிக்காமல் 15 சீட்டுக்கு ஓம்பட்டிருந்தால் - இப்போ மத்தியில்ம்மெஜாரிட்டியை நெருங்கி இருக்கலாம்.  அடுத்த 2026 தேர்தலில் அதிமுக, விஜை, சீமான் - இதில் இருவரை, அல்லது, மூவரையும் சேர்த்து களம் கண்டால் - பிஜேபி தமிழ் நாட்டில் சில பத்து எம் எல் ஏக்க்களை இலகுவாக அடையலாம்.

அதிமுக

ஒரு சீட்டை பெறா விடினும் எடப்பாடி கட்சியை காப்பாற்றி உள்ளார். ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக பிஜேபி அதிமுகவை கபளீகரம் செய்வதை கூட்டணியை முறித்து எடப்பாடி தடுத்துள்ளார்.

உண்மையில் அதிமுக வாக்கு வங்கியை கூட அதிக சேதாரம் இல்லாமல் காப்பாற்றியுள்ளார்.

ஆனால் அதிமுகவை பிஜேபி நோண்டுவதும், கைப்பற்ற முனைவது தொடரும். தன் பதவியை, கட்சியை பிஜேபியிடம் இருந்து காக்க எடப்பாடி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

திமுக

சீட்டு எண்ணிக்கையில் வெற்றி என்றாலும் - பல இடங்களில் அதிமுக+பிஜேபி+பாமக கூட்டணி அமைந்திருந்தால் திமுக கதை கந்தல்தான்.

திமுக+ வாக்கு வங்கி அப்படியே தேங்கி இருப்பதாக படுகிறது.

அடுத்த மூன்று சட்ட சபை தேர்தலுக்கு ஸ்டாலினை அசைக்க முடியாது என்பது மாய விம்பம் என்பது மிக தெளிவாக தெரிகிறது.

மிக பலமான எதிர் கூட்டணி அமைந்தால் 2026 இலேயே திமுகவை அவுட் ஆக்கி விடலாம்.

வோட் மிசின்

வோட் மெசினில் களவு இல்லை என்பதை மீண்டும் இந்த தேர்தலும் நிறுவியுள்ளது.

வோட் மெசினில் களவு செய்ய முடியுமாயின் இப்படி ஒரு தொங்கு பாராளுமன்றை அமைய விடாமல், தனி மெஜோரிட்டி வரும் படி பிஜேபி களவு செய்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

உறவே இதை நீங்கள்  முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.

நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. இந்திய அரசியல் பற்றி அதிகம் அறியாததால் அதிகம் ஆராய்ந்து  பார்க்க முயற்சி செய்யவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவன் பாரிய வெற்றி பெற்றுள்ளார். இவரின் இலங்கை தமிழர் பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நியாயம் said:

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவன் பாரிய வெற்றி பெற்றுள்ளார். இவரின் இலங்கை தமிழர் பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?

அவர் வழமை போல நேரத்துக்கு ஏற்ப கருத்துக்களை அள்ளி வீசும் சராசரி அரசியல்வாதி தான்.

சாதிய கட்சி நடாத்துவதால் அவரின் சாதியினரின் வாக்கு வங்கி அவருக்கு (அவரது கட்சிக்கும்) உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. 

யாழ்களத்தில் சிலர் நாகத மீது வாந்தி எடுப்பதிலேதான் குறியாக இருக்கின்றனர். 

அதில் ஒருவர் கிளி ஜோசியராகிவிட்டார். 

🤣

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.