Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, இணையவன் said:

நானும் நாதக 8 வீத வாக்குகளைப் பெற்றது பற்றித் தேடிக் கண்டுபிடிக்க முடியவிலை. யாராவது இணைப்பு இருந்தால் தாருங்கள். நன்றி.

தமிழ்நாட்டில் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

39 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 8.19 % வாக்குகளை பெற்றுள்ளது

2021 சட்டசபை தேர்தலில் 6.5% வாக்குகளை பெற்றிருந்தது நாதக

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெற உள்ளது நாம் தமிழர் கட்சி

https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-lok-sabha-election-results-2024-vote-counting-live-news-updates-and-highlights-in-tamil-611015.html

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

skynews-narendra-modi-india_6573269.jpg?

மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி!

மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது.

எனினும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை பா.ஜ.க பெற்றிருக்கின்றது.

இதேவேளை எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று, முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கின்றது.

இந்தியாவிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளார்.

ஆனால், கடந்த முறை 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்து பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார்.

மறுபக்கம், அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தோற்கடித்த பா.ஜ.க வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னௌவில் ராஜ்நாத் சிங் மற்றும் கன்னௌஜில் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதியாகியுள்ளதுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கின்றார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இம்முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும், குஜராத்தில் மொத்தமுள்ள 26-இல் 25 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளதுடன், பிகாரில் பாஜக 12 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.

மேலும், ராஜஸ்தானில் கடந்த முறை 25 இடங்களிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க, இந்த முறை 14 இடங்களிலும், ஹரியாணாவில் கடந்த முறை மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க 9 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 7 இடங்களை கைப்பற்றியுள்ளதுடன், காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) 9 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களிலும் வெற்றி உறுதி செய்துள்ளதால் பா.ஜ.கவுக்கு அங்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

எனினும், ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ல் பா.ஜ.க சிறப்பான வெற்றி பெற்றுள்ளதுடன், காங்கிரஸ் ஒரு தொகுதியை மாத்திரம் கைப்பற்றியுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த முறை 25 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க இம்முறை 17 தொகுதிகளிலும், கடந்த முறை ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற ஆளும் காங்கிரஸ், இம்முறை 9 இடங்களிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

கேரளத்தில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றிபெற்றுள்ளதுடன், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளிலும், ஆளும் மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்கி ஜூன் 1-ஆம் திகதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணும் பணிகள் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், பின்னர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருந்தது.

மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில், பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 292 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

எனினும், கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், அதன் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்து 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 300 இடங்களைக்கூட பெற முடியவில்லை.

https://athavannews.com/2024/1386139

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கந்தப்பு said:

இதே போல 2 மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று 5 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றதினால்விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, தமிழ் சிறி said:

நீங்க‌ள் இர‌ண்டு மாச‌த்துக்கு முத‌ல் போனில் சொன்ன‌ மாதிரி ந‌ட‌ந்து விட்ட‌து த‌மிழ் சிறி அண்ணா

வ‌ட‌ நாட்டில் அதுவும் Bihar மானில‌த்தில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ள் ஒரு இட‌த்தில் கூட‌ யெயிக்க‌ வில்லை பீஜேப்பி  33 தொகுதியில் வென்று இருக்கின‌ம் 

இந்த‌ மானில‌த்தில் அகோர‌ அடி காங்கிர‌ஸ்சுக்கு..............................இப்ப‌டியே அழிந்து போக‌ட்டும் காங்கிர‌ஸ்

ஆம் ஆத்மி கட்சி காங்கிர‌ஸ்சின் இட‌த்தை பிடிக்க‌னும்

காங்கிர‌ஸ்ச‌ பாடேல‌ ஏற்றியாச்சு

இந்த‌ தேர்த‌ல் ஓட‌ மோடி ஓய்வு பெற‌க் கூடும் 2029க‌ளில் தேர்த‌ல்க‌ளில் நிக்க‌ மாட்டார் வ‌ய‌தை கார‌ண‌ம் காட்டி

2029க‌ளில் பீஜேப்பி பிர‌த‌வ‌ர் வேட்பாள‌ரா யோகி ஆதித்யநாத்

இவ‌ர் போட்டியிடுவார்

இவ‌ர் மோடிய‌ விட‌ ஆவ‌த்தான‌வ‌ர் என்று வாசித்த‌தில் தெரிந்து கொண்டேன்............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.vikatan.com/government-and-politics/governance/356-lakh-votes-ntk-turns-recognized-state-party?pfrom=home-main-rowநாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2019 பாராளுமன்ற தேர்தல்

large.IMG_6057.jpeg.a3ddbb833e96e0b7bcedd72669cce7fb.jpeg

2024 பாராளுமன்ற தேர்தல்

large.IMG_6058.jpeg.5772f82b052dbf3fb8487aae413fa2f7.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

வ‌ட‌ நாட்டில் அதுவும் Bihar மானில‌த்தில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ள் ஒரு இட‌த்தில் கூட‌ யெயிக்க‌ வில்லை பீஜேப்பி  33 தொகுதியில் வென்று இருக்கின‌ம் 

இந்த‌ மானில‌த்தில் அகோர‌ அடி காங்கிர‌ஸ்சுக்கு.............................

இல்லை பீகாரில் பிஜேபிக்கு 12 சீட்தான்.

2019 இங்கே எடுத்த காங்கிரஸ் இப்போ 3 சீட் எடுத்துள்ளது.

large.IMG_7589.jpeg.dcd715c7beba86cc66ec6d9d6080db1a.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒவ்வொரு தேர்தலிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழக்கும் நாதக பாரம்பரியம் இந்த தேர்தலிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது.

கன்யாகுமரியில் கணிசமான வாக்குகள் நாதகவுக்கு வீழ்ந்துள்ளன.

சீமானை போலவே மலையாள கிறிஸ்தவ நாடார்கள் அதிகம் உள்ள பகுதி என நினைக்கிறேன்.

அதே போல் சீமானின் சொந்த மாவட்டமான சிவகங்கையிலும்.

2026 இல் கன்யாகுமரியின், அல்லது சிவகங்கையின் ஒரு சட்டமன்ற தொகுதியில் அண்ணன் போட்டியிடலாம் ?large.IMG_7588.jpeg.ab277fdbb1171c4643c27c8f2738e5fe.jpeg

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, goshan_che said:

சீமான் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரின் மனைவி தாய்வழி தெலுங்கு. அவரின் மகன் மலையாள, தெலுங்கு , தமிழ் கலப்பினம்

அப்படியாயின் சீமானின் தூய தமிழ் வாதம் சீமானுக்கே ஆப்பு அடிப்பதாக உள்ளதே! 😂 இனிமேலாவது சீமான் திருந்த வேண்டும். 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, புலவர் said:

பிஜேபி கூட்டணி என்று சொல்லுங்கள். பாமக இல்லாவிட்டால் பிஜேபியின் நிலை படுமோசமாகி இருக்கும். அத்துடன் தென்தமிழகத்தில் தினகரன்>ஓபிஸ்  அகியோரின் ஆதவும் பாஜக கூட்டணியின் வாக்கு சதவுPதத்தை உயர்த்தி இருக்கின்றன். 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில் களமிறங்கிய நாம் தமிழர் தனித்து நின்று சாதித்துக் காட்டியிருக்கிறது. இது 2026 தேர்தலில் பெரிய மாற்றததைக் கொண்டு வரும்.

இது இங்குள்ள சில அறிவுஜீவிகளுக்கு புரியுதேயில்லை புலவரே! என்ன செய்ய அவ்வளவுதான் விளக்கம் என்று கடந்து போக வேண்டியதுதான்!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நீர்வேலியான் said:

பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது  இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல்  வரப்போவதில்லை என்று நினைக்கிறன். 

Screenshot-20240605-112843-Chrome.jpg

அண்ணா இது இணைய‌த்தில் வ‌ந்த‌து உங்க‌ளுக்காக‌

கூட்ட‌னி ப‌ற்றி நான் நேற்று உங்க‌ளுக்கு த‌வ‌றான‌ விள‌க்க‌ம் த‌ந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.....................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Eppothum Thamizhan said:

இது இங்குள்ள சில அறிவுஜீவிகளுக்கு புரியுதேயில்லை புலவரே! என்ன செய்ய அவ்வளவுதான் விளக்கம் என்று கடந்து போக வேண்டியதுதான்!!

நிச்சியமாக  விளங்காது விடில். கடந்து போவது நல்லது   இது இந்தியா தேர்தல்  தமிழ்நாடு தேர்தல் இல்லை  பிஜேபி  தனித்து நின்று  இந்தியாவில் 240  இடங்களை பெற்றுள்ளது   வேறு எந்த கட்சி   தனித்து நின்று இத்தனை இடங்களை பெற்று உள்ளது    எதுவும் இல்லை   மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்க போகிறார்கள்  இந்தியா மக்களின் ஆதரவில்   தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் தனித்து நின்று வெல்ல முடியாது    நான் தனித்து போட்டி இட்டேன்    8% எடுத்தேன்   10% எடுத்தேன் 14% எடுத்தேன்  .. ...  ...என்று பெருமை படலாம்   ஆனால் எந்த கட்சியும். தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறமுடியாது     இது தான் யதார்த்தம்  இதில் உபதேசம் உனக்கு இல்லையாடி   ஊருக்கு   என்கின்ற. சீமான்  எம்மாத்திரம். விதிவிலக்கானவர்??  பிஜேபி. உடன் தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சியையும் ஒப்பிட முடியாது  கூடாது  அது இந்தியாவை மூன்றாவது தடவையாக ஆளும் மிகப்பெரிய கட்சி    தமிழ்நாட்டில் வென்றவர்கள்   நாட்டை ஆளப்போவதில்லை  தமிழ்நாட்டில் தோற்றவர்களின். ஆட்சியில் கீழ் தான் இருக்க வேண்டும் போகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kandiah57 said:

  கந்தையா அண்ணை
பா ஜ க கடந்த மூன்று தேர்தலிலும் கூட்டணி தான்.
ஆனாலும் அவர்கள் அந்தக் கூட்டணிக்குள்ளே இருக்கும் மற்றய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டியிட்டதால் (காரணம் தேசியக் கட்சி)    அதிக இடங்களில் வென்றார்கள்
அவர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அவர்களுக்கு விழுந்திருக்கும்

அவர்களது வாக்கு வாங்கி என ஒன்று உள்ளது
அது அவர்களது ஆட்சியைப் பொறுத்துக்க கூடும் குறையும்
ஆனாலும் பெரிதான வித்தியாசம் இருக்காது
இங்கே சிலர் வாக்கு வங்கியையும் வாக்கு வீதத்தையும் ( கூட்டணியின் போது ).விளங்கிக் கொள்ளவில்லை போல இருக்கின்றது

கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் போது விழும் வாக்குகளை அந்தத் தொகுதியில் போட்டியிடும்  கட்சிக்காக வீழ்ந்த வாக்குகளாகவே தேர்தல் ஆணையம் வெளியிடும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பா ஜ  க கூட்டணிக் கட்சிகள் எவை

பாஜக -
தெலுங்கு தேசம் கட்சி - 

ஐக்கிய ஜனதா தளம் -
சிவசேனா -
பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு -
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பீகார் - 

தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா - 

பாரத தர்ம ஜன சேனா கேரளா - 

மதசார்பற்ற ஜனதா தளம் - 

அசோம் கண பரிஷத் அசாம் - 

ஜன சேனா கட்சி ஆந்திரா - 

தேசிய மக்கள் கட்சி மேகாலயா - 

ராஷ்டிரிய லோக் தளம் உத்தரப் பிரதேசம் - 

அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஜார்கண்ட் - 

ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா பீகார் -

நாகா மக்கள் முன்னணி மணிப்பூர் - 

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து - 

ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பீகார் - 

ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா மகாராஷ்டிரா - 

சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் - 

ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் அசாம் -

இத்தூண்டு கட்சிகளுடன் அமைத்தது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அலியாஸ் பா ஜ க கூட்டணி

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரதமர் பதவியிலிருந்து மோடி ராஜினாமா: 3-வது முறையாக ஜூன் 8-ல் பதவியேற்பு!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 😎 பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதற்காக இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது அக்கட்சி.

இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது.

17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

சனிக்கிழமை பதவியேற்பு: இதற்கிடையே, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 😎 மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://thinakkural.lk/article/303197

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இதுதான் சந்திரபாபு நாயுடு.. "சபாநாயகர்"பதவியை எங்களுக்கு தரணும்!பாஜகவுக்கு போட்ட முக்கியமான கண்டிஷன் By Vigneshkumar Updated: Wednesday, June 5, 2024, 12:20 [IST] Google Oneindia Tamil News
 
விஜயவாடா:
 
தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கத் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் கடந்த இரு தேர்தல்களைப் போல இல்லாமல் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் பாஜக ஆட்சியை அமைக்க என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாகத் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 இடங்கள் இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இப்படி லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.
இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது தான் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாகவும் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
கிங் மேக்கர்:
அதேநேரம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2014இல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், அதையும் தாண்டியே தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
 
நிபந்தனை 1:
 
இதனால் ஆந்திராவின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே இதற்குச் செவிசாய்க்கவில்லை.
 
இதற்கிடையே இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால் ஆந்திராவுக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்..
 
அடித்து சொன்ன என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன "கிங் மேக்கர்" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக
 
நிபந்தனை 2:
 
அது மட்டுமின்றி சபாநாயகர் பதவியை விட்டுதர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக லோக்சபாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இதுபோன்ற சூழல் ஏற்படும் போது சபாநாயகர் பதவி முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அவையில் முக்கிய முடிவுகள் எல்லாம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும்.
 
இதன் காரணமாகவே சபாநாயகர் பதவி தங்களுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
 
பாஜக இந்த இரு நிபந்தனைகளுக்கும் செவி சாய்க்குமா இல்லை அமைச்சரவையில் கூடுதல் சீட்களை கொடுத்துவிட்டு சபாநாயகர் பதவியை தங்களிடமே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/what-are-the-conditions-for-bjp-by-chandrababu-naidu-611525.html
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகிலேஷ்: உ.பி.யில் பாஜகவின் ராமர் கோவில் உத்தியை உடைத்த சமாஜ்வாதியின் வியூகம்

உபி வீழ்ச்சி : டெல்லியில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்த அமித்ஷா - வியூகம் வகுத்த அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அகிலேஷ் யாதவின் வியூகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
  • பதவி, பிபிசி நிருபர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிராக வந்துள்ளன.

ஃபைசாபாத் தொகுதியில் இருக்கும் அயோத்தி நகரில் ராமர் கோவிலை முன் வைத்து பாஜக அதிக அளவில் விளம்பரம் செய்தது. ஆனால், அந்த தொகுதியில் மூன்று முறை எம்பியாக இருந்த பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் தோற்கடித்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 70 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், `உத்தரப் பிரதேசம்’ வேறு ஒரு கதையை சொல்லத் தொடங்கியது.

`400-ஐ தாண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோதி சவால்விட்டு பரப்புரை செய்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் ஆசையாக இருந்தது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் தேர்தல் முடிவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்திவிட்டது.

பாஜக 33 தொகுகளிலும், இந்தியா கூட்டணி 43 தொகுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்எல்டி இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதன் விளைவாக பாஜகவால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கு பாஜக 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த முறை உத்தரப் பிரதேசம் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை.

இம்முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

2019 பொதுத் தேர்தலில் உ.பி.யில் பாஜக 63 தொகுதிகளைப் பெற்றிருந்தது. பிஎஸ்பி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும், அப்னா தளம் (சோனேலால்) 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த முறை சாத்தியமாக்க முடியவில்லை. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினார். இந்த முறை, காந்தி-நேரு குடும்பத்தின் விசுவாசியான கிஷோரி லால் சர்மா அத்தொகுதியில் போட்டியிட்டதால், ஸ்மிருதி இரானியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.

உபி வீழ்ச்சி : டெல்லியில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்த அமித்ஷா - வியூகம் வகுத்த அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த முடிவுகள்

2019 தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியைத் தோற்கடித்தபோது, 'நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசை ஒரு சாதரண பாஜக தலைவர் அவரது கோட்டையிலேயே தோற்கடித்துவிட்டார்’ என்ற பேச்சுகள் எழுந்தது.

இந்த முறை ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை, மாறாக ஒரு சாதாரண வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் பிரதமர் மோதியும் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்த போதிலும், பின்னர் முன்னிலை பெற்றார். ஆனால், இம்முறை வாரணாசியில் மோதி எவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இந்த தேர்தலில் மோதிக்கு வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1,52,513 வாக்குகள் கூடுதலாக பெற்று தொகுதியை கைப்பற்றியிருக்கிறார். இருப்பினும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறார் மோதி.

2019 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோதி வாரணாசியில் சுமார் 4,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முறை பிரதமர் மோதிக்கு அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

2014 இல், மோதி வாரணாசியில் மொத்தம் 5,81,022 வாக்குகளைப் பெற்றார், இது அங்கு மொத்த வாக்குகளில் 56 சதவீதமாக இருந்தது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2,09,238 வாக்குகள் கிடைத்தது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் களத்தில் இருந்தனர். பிரதமர் மோதி வாரணாசி தொகுதியிலும், ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டனர். ராஜ்நாத் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் களத்தில் இருந்தனர். அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் மெயின்புரியில் போட்டியிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி, விவசாயம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்துதல் போன்ற பிரச்னைகளை சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் கடுமையாக விமர்சித்தன. இடஒதுக்கீடு பிரச்னையை பற்றி இரு கட்சிகளும் மக்களிடையே பேசியது.

இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டின. இதனுடன், இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிவீர் திட்டம் குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அக்னிவீர் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் எழுந்த கோபம் போராட்டங்களில் பலமுறை பிரதிபலித்தது.

உபி வீழ்ச்சி : டெல்லியில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்த அமித்ஷா - வியூகம் வகுத்த அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது யோகிக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?

உ.பி.யில் தொகுதிகளை பாஜக இழந்திருப்பது, பிரதமர் மோதிக்கு மட்டுமின்றி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கெட்ட செய்தி என, உத்தரப் பிரதேச மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான் தெரிவித்துள்ளார்.

ஷரத் பிரதான் கூறுகையில், “பாஜகவுக்கு 50 இடங்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்பார்க்காத வண்ணம் 33 இடங்கள் தான் கிடைத்துள்ளது. இது பிரதமர் மோதி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தை மக்கள் நிராகரித்ததை காட்டுகிறது. மோதி பலம் அதிகரித்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சாமானியர்களை எதிர்க்கட்சிகள் நம்ப வைத்தன. இதுவே உபியில் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது.

அதனால்தான் தலித் வாக்காளர்களும் மாயாவதி கட்சியை விட்டு வெளியேறி இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். பாஜக ஆட்சியில் இருந்தால் இடஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்யும் என்ற இந்தச் செய்தி தலித்துகள் மத்தியில் ஆழமாகப் போய் சேர்ந்தது. மாயாவதி ஜாதவ் பிரிவை சேர்ந்தவர். ஆனால், ஜாதவ் இன மக்கள் கூட அவருக்கு வாக்களிக்காமல் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர்.” என்றார்.

ஷரத் பிரதான் மேலும் கூறுகையில், “உ.பி.யில் பாஜக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்திருப்பது யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்கும். அமித் ஷாவும், நரேந்திர மோதியும் இந்தத் தோல்விக்கு யோகி மீது குற்றம் சாட்டி, அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்க வாய்ப்புகள் உள்ளன. நரேந்திர மோதி உ.பி.யில் தான் அடைந்த உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்கியுள்ளார்.

பிரதான் கூறுகையில், "உ.பி.யில் தன்னை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும், இந்துத்துவா முன் யாரும் நிற்க முடியாது என்றும் யோகி நினைத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரின் எண்ணம் தவறு என்பதை நிரூபித்துள்ளது. இந்திய மக்கள் சர்வாதிகாரத்தை விரும்புவதில்லை. ஸ்மிருதி இரானியின் தோல்வி மோதியின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மோதியின் பாணியிலேயே சென்று ஸ்மிருதி இரானியை சரியாக தோற்கடித்துள்ளார் ராகுல் காந்தி. ஸ்மிருதியை தோற்கடிப்பது ராகுலின் நல்ல உத்தி, அதுவும் ஒரு சாதாரண வேட்பாளரை முன்னிறுத்தி!

உபி வீழ்ச்சி : டெல்லியில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்த அமித்ஷா - வியூகம் வகுத்த அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உபி தோல்விக்கு என்ன காரணம்?

ஷரத் பிரதான் கூறுகையில், "இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம் நமக்கு இரண்டு முக்கிய விஷயங்களை கூறுகிறது. முதல் செய்தி, தலித்துகள் தனது அடிமைகள் அல்லர் என்பது மாயாவதிக்கு தெரிந்திருக்கும். இரண்டாவது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு புரிந்திருக்கும்" என்றார்.

அலஹாபாத் தொகுதியில் இருந்து எம்.பி., ஆன ரீட்டா பகுகுணா ஜோஷி யோகியின் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர். இந்த முறை அவருக்கு பாஜக தொகுதி கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக, பாஜக மூத்த தலைவர் கேசரிநாத் திரிபாதியின் மகன் நீரஜ் திரிபாதிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்த முறை உ.பி.யில் பாஜகவுக்கு 33 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருப்பது ஏன் என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ரீட்டா பகுகுணா ஜோஷி கூறுகையில், "நாங்கள் ஆட்சி அமைப்போம், ஆனால் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் கிடைத்த வெற்றியை இம்முறை பெறப் போவதில்லை. நாங்கள் உ.பி.யில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டோம், ஆனால் வேலைவாய்ப்பு பற்றிய கேள்வியும் விமர்சனமும் எங்கள் முன் வைக்கப்பட்டது. அயோத்தியிலும் கூட நாங்கள் பின்தங்கியுள்ளோம். இந்த முறை ஏன் இப்படி நடந்தது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.” என்றார்.

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்குமா என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஜோஷி பதிலளிக்கையில், "எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது, எந்த பாதிப்பும் ஏற்படாது." என்றார்.

உபி வீழ்ச்சி : டெல்லியில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்த அமித்ஷா - வியூகம் வகுத்த அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அகிலேஷ் யாதவின் வியூகம் என்ன?

இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தெளிவான வியூகத்தை பல அரசியல் ஆய்வாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

இம்முறை, அகிலேஷ் யாதவ், யாதவ் அல்லாத சாதியினருக்கு கூடுதல் கவனம் செலுத்தி தொகுதிகள் ஒதுக்கினார்.

முஸ்லிம்கள் மற்றும் யாதவர்கள் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த முறை அகிலேஷ் யாதவ் 62 பேரில் ஐந்து யாதவ் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தினார், அவர்கள் அனைவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

2019 இல், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது சமாஜ்வாதி கட்சி 37 தொகுகளில் போட்டியிட்டு 10 யாதவ் வேட்பாளர்களை நிறுத்தியது. 2014 ஆம் ஆண்டில், உ.பி.யில் 78 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது, இதில் மொத்தம் 12 பேர் யாதவ் வேட்பாளர்கள் மற்றும் நான்கு பேர் முலாயம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியர் பங்கஜ் குமார், தொகுதி ஒதுக்கீட்டு வியூகத்திற்காக அகிலேஷ் யாதவை பாராட்டியுள்ளார்.

பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், “சமாஜ்வாதி கட்சி தொகுதி ஒதுக்கீட்டை மிகச் சிறப்பாக செய்துள்ளது. அயோத்தியில் தலித் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கியது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு. அங்கு போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் மூத்த சமாஜ்வாதி உறுப்பினர் ஆவார். அதே போல் பல்லியா தொகுதியில் சனாதன் பாண்டேவுக்கு தொகுதி ஒதுக்கியதும் புத்திசாலித்தனமான முடிவு.”

“அகிலேஷ் யாதவ் பிடிஏ ('PDA' or 'Pichde -backward classes or OBCs) என்னும் திட்டத்தை முன்வைத்து அனைத்து சாதியினரும் அதில் சேர்க்கப்பட்டனர், மறுபுறம், பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்களைச் செய்தது. பாஜக தொகுதி ஒதுக்கீட்டையும் மிக மோசமான முறையில் செய்தது. தொகுதி ஒதுக்கீடு பற்றி யோகியிடம் ஆலோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். கௌஷாம்பி தொகுதியில், ராஜா பையா தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு தொகுதி ஒதுக்கச் சொன்னார் ஆனால் அமித் ஷா ஒப்புக்கொள்ளவில்லை. அலஹாபாத்தில் நீரஜ் திரிபாதி நிறுத்தப்பட்டார். ஆனால் அவரது தோல்வி தற்போது உறுதியாகி விட்டது. அமித் ஷா டெல்லியில் இருந்து கொண்டு தொகுதி ஒதுக்கீடு செய்து கொண்டிருந்தது தான் இதற்கு காரணம்” என்று விளக்கினார்.

உபி வீழ்ச்சி : டெல்லியில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்த அமித்ஷா - வியூகம் வகுத்த அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாநில அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும்

பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், "யோகியின் ஆலோசனைப்படி தொகுதிகள் வழங்கப்படவில்லை, ஆனால் யோகி மீதும் தவறு உள்ளது. யோகி தொண்டர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை."

"அவர்கள் குஜராத் பாணியில் ஆட்சியை நடத்த விரும்புகிறார்கள். அதிகார வர்க்கத்தின் பலத்தில் அவர்களின் அரசாங்கம் இயங்குகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை விட காவல்துறையைத்தான் அதிகம் நம்புகிறார்கள். இந்தத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்ஸும் பாஜக சார்பில் இல்லை என்று நினைக்கிறேன். மோதி மிகவும் பலம் மிக்கவர் ஆகி வருகிறார் என்றும் இது தங்களுக்கு நல்லதல்ல என்றும் ஆர்எஸ்எஸ் உணரத் தொடங்கியது.” என்றார்.

இந்தத் தேர்தலில் மாயாவதி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும், இனி அவர் பழைய இடத்தை அடைவது கடினம் என்றும் பேராசிரியர் பங்கஜ் நம்புகிறார். "மாயாவதி இடத்தை சந்திரசேகர் நிரப்பலாம்" என்கிறார் பேராசிரியர் பங்கஜ் குமார். நாகினா தொகுதியில் இருந்து அவர் பெற்ற வெற்றியும் இதையே காட்டுகிறது. தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெறுவதுதான் முக்கியம்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் மோசமான செயல்பாடு, நரேந்திர மோதியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை கெடுக்கக்கூடும். மற்றொரு புறம் வட இந்தியாவில் மாநிலக் கட்சிகள் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார். அமேதி மற்றும் ரேபரேலியிலும் காங்கிரஸ் வலுவாக உருவெடுத்துள்ளது. இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் விருப்பத்திற்கு மாறானது!

https://www.bbc.com/tamil/articles/cz77re7lrkpo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் நாட்டில் நா.த.க தவிர மிகுதி அனைத்து கட்சிகளும் கூட்டணி. இதன் அர்த்தம் என்ன?

1. திமுக உட்பட எந்த பெரிய கட்சியும் 39 சீட்டிலும் போட்டி போடவில்லை.

உதாரணமாக திமுக தனியே 39 தொகுதியிலும் போட்டி இட்டிருந்தால் வாக்கு சதவீதம் இப்போ இருப்பதை விட கூடி இருக்கலாம், ஆனால் சீட் எண்ணிக்கை நிச்சயமாக குறைந்து இருக்கும்.

2. அதே போல் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் அவர்கள் கட்சி வாக்குகளும் அல்ல.

உதாரணமாக கனிமொழிக்கு விழுந்த வாக்குகளில், அந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆதரவுவாக்குகளும் அடக்கம்.

அதே போல் செளமியாவுக்கும் விழுந்த வாக்கில் பிஜேபி வாக்கும் அடங்கும்.

ஆகவே கூட்டணியில் நின்ற கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்கை வைத்து அவை எல்லாமுமே அந்த கட்சிக்கான வாக்குகள் என கருத முடியாது.

யாழ்கள அறிவுஜீவிகளும், அதீத அறிவுஜீவிகளும் இதை புரிந்து கொண்டால் - 

கூட்டணியில் நின்ற கட்சி (பாஜக)வின் சதவீதத்தையும், தனியே நின்ற கட்சி (நா த க) சதவீதத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது விளங்கும்.

இது மிகவும் தவறான ஒப்பீட்டு முறை. ஆனால் தாம் விரும்பும் அல்லது வெறுக்கும் கட்சிக்கு ஆதரவாக எழுத இதை பதன்படுத்தி பரப்புரை செய்யலாம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, வாத்தியார் said:
இதுதான் சந்திரபாபு நாயுடு.. "சபாநாயகர்"பதவியை எங்களுக்கு தரணும்!பாஜகவுக்கு போட்ட முக்கியமான கண்டிஷன் By Vigneshkumar Updated: Wednesday, June 5, 2024, 12:20 [IST] Google Oneindia Tamil News
 
விஜயவாடா:
 
தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கத் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் கடந்த இரு தேர்தல்களைப் போல இல்லாமல் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் பாஜக ஆட்சியை அமைக்க என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாகத் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 இடங்கள் இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இப்படி லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.
இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது தான் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாகவும் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
கிங் மேக்கர்:
அதேநேரம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2014இல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், அதையும் தாண்டியே தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
 
நிபந்தனை 1:
 
இதனால் ஆந்திராவின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே இதற்குச் செவிசாய்க்கவில்லை.
 
இதற்கிடையே இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால் ஆந்திராவுக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்..
 
அடித்து சொன்ன என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன "கிங் மேக்கர்" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக
 
நிபந்தனை 2:
 
அது மட்டுமின்றி சபாநாயகர் பதவியை விட்டுதர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக லோக்சபாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இதுபோன்ற சூழல் ஏற்படும் போது சபாநாயகர் பதவி முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அவையில் முக்கிய முடிவுகள் எல்லாம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும்.
 
இதன் காரணமாகவே சபாநாயகர் பதவி தங்களுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
 
பாஜக இந்த இரு நிபந்தனைகளுக்கும் செவி சாய்க்குமா இல்லை அமைச்சரவையில் கூடுதல் சீட்களை கொடுத்துவிட்டு சபாநாயகர் பதவியை தங்களிடமே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/what-are-the-conditions-for-bjp-by-chandrababu-naidu-611525.html

இது உண்மையில் மாநில கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான்.

இதேபோல் தன்னை பிரதமர் வேட்பாளராக்க கேட்டு, முறுக்கி கொண்டு கடைசி நேரத்தில் பிஜேபி முகாம் போனவர் நித்தீஷ்குமார்.

நிச்சயம் அவரும் மிக பெரிய கோரிக்கையை மோடியிடம் வைப்பார் என நினைக்கிறேன்.

2014 முதல் தனி மெஜாரிட்டி திமிரில் ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் அடுத்த ஐந்து வருடம் மோடி அனுபவிக்க போகிறார்🤣.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, வாத்தியார் said:

கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் போது விழும் வாக்குகளை அந்தத் தொகுதியில் போட்டியிடும்  கட்சிக்காக வீழ்ந்த வாக்குகளாகவே தேர்தல் ஆணையம் வெளியிடும்

இதில் என்ன பிழை உண்டு”?? சரி என்று கருதுகிறேன்     கூட்டணி என்பது  எல்லா கட்சிகளும் எல்லா தொகுதியிலும் போட்டியிடுவதை தடை செய்கிறது     உதாரணமாக ஆறு கட்சிகள் கூட்டணி அமைத்தால்.  ஒவ்வொரு தொகுதிகளிலும் 5 கட்சிகள் போட்டி இடுவது தடை செய்யப்படும்   இந்த 5 கட்சிகளின் வாக்கும்  மற்ற கட்சிக்கு விழும் இது கூட்டணியிலுள்ள. ஒவ்வொரு கட்சிக்கும். பொதுவான விடயம் இல்லையா??  

கட்சிகள் பல்கிப் பெருகி விட்ட இந்தியாவுக்கு  விகிதாச்சார தேர்தல் முறை நல்லது  தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்காது   தேர்தலில் பின். கூட்டணி அமைக்க வேண்டும்    அதாவது வெற்றி பெற்ற கட்சிகளுடன். கூட்டணி   இது ஆட்சி அமைக்கும் கூட்டணி    தேர்தலில் வெல்லும் கூட்டணி இல்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, goshan_che said:

கூட்டணியில் நின்ற கட்சி (பாஜக)வின் சதவீதத்தையும், தனியே நின்ற கட்சி (நா த க) சதவீதத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது விளங்கும்.

2016  சட்ட மன்றத் தேர்தலில் பா ஜ க
பாரி வேந்தருடைய இந்திய ஜனநாயக கட்சி  மற்றும்     
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்,    
கொங்கு ஜனநாயகக் கட்சி ஆகிய( தனி நபர் கட்சிகள்  எனக் கூடச் சொல்லலாம்)  கட்சிகளுடன்  கூட்டணி அமைத்துப்   பெற்ற வாக்குகள்   12  லட்சத்து 30  ஆயிரம் மட்டும் தான் ( 234  தொகுதிகள் 165  + 45  + 24   ). இது 2,9 வீதம்

இப்படியான கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் இன்னும் விகிதாசாரம் குறைந்தும் இருக்கலாம்

41 minutes ago, goshan_che said:

இது உண்மையில் மாநில கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான்.

இதேபோல் தன்னை பிரதமர் வேட்பாளராக்க கேட்டு, முறுக்கி கொண்டு கடைசி நேரத்தில் பிஜேபி முகாம் போனவர் நித்தீஷ்குமார்.

நிச்சயம் அவரும் மிக பெரிய கோரிக்கையை மோடியிடம் வைப்பார் என நினைக்கிறேன்.

2014 முதல் தனி மெஜாரிட்டி திமிரில் ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் அடுத்த ஐந்து வருடம் மோடி அனுபவிக்க போகிறார்🤣.

இப்படியான ஒரு அரசு இந்தியாவில் 2000 ( சரியாகத் தெரியவில்லை ) ஆண்டளவில் இருந்திருக்க வேண்டும் அப்போது சந்திர சேகர் என்பவர் பிரதமராக இருக்க காங்கிரஸ் கூட வெளியே இருந்து ஆதரவளித்தது.

நாயுடுவும் நித்திஷ் குமாரும்  மோடிக்கு ஆதரவு கொடுக்காமல் அமித்ஷா வை அல்லது இனினொருவரைக்   கூட பிரதமராக்க முயற்சிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, வாத்தியார் said:

2016  சட்ட மன்றத் தேர்தலில் பா ஜ க
பாரி வேந்தருடைய இந்திய ஜனநாயக கட்சி  மற்றும்     
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்,    
கொங்கு ஜனநாயகக் கட்சி ஆகிய( தனி நபர் கட்சிகள்  எனக் கூடச் சொல்லலாம்)  கட்சிகளுடன்  கூட்டணி அமைத்துப்   பெற்ற வாக்குகள்   12  லட்சத்து 30  ஆயிரம் மட்டும் தான் ( 234  தொகுதிகள் 165  + 45  + 24   ). இது 2,9 வீதம்

இப்படியான கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் இன்னும் விகிதாசாரம் குறைந்தும் இருக்கலாம்

இப்படியான ஒரு அரசு இந்தியாவில் 2000 ( சரியாகத் தெரியவில்லை ) ஆண்டளவில் இருந்திருக்க வேண்டும் அப்போது சந்திர சேகர் என்பவர் பிரதமராக இருக்க காங்கிரஸ் கூட வெளியே இருந்து ஆதரவளித்தது.

நாயுடுவும் நித்திஷ் குமாரும்  மோடிக்கு ஆதரவு கொடுக்காமல் அமித்ஷா வை அல்லது இனினொருவரைக்   கூட பிரதமராக்க முயற்சிக்கலாம்

வாத்தி நீங்க‌ள் அர‌சிய‌ல் ஆசான்🙏...................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை ப்பொறுத்தவரை, காங்கிரஸ் இல்லாத எந்த ஒரு கட்சி ஆட்சி பிடித்தாலும் பரவாயில்லை so long as Rahul ghandi is not PM. மேலும், மோடிதான் சிங்களவனுக்கு ஆப்பு வைக்க சரி. எங்களுக்கில்லாத இலங்கை சிங்களவனுக்கும் இருக்கக்கூடாது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1260105.jpg?resize=750,375&ssl=1

கூட்டணி ஆட்சியில் தங்கியுள்ள பாஜக – நிபந்தனை

இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது.

எனினும், இந்த தேர்தலில் பா.ஜ.க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க ஆட்சியமைப்பதில் கூட்டணிகளின் ஆதரவையே தங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க விற்கு கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மத்தியில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,

ஆந்திர மாநிலத்தின் சந்திரபாபு நாயுடுவின் சரத்பவார் தெலுங்குதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் நிபந்தனைகள் விதிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கையை, தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது.

இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

https://athavannews.com/2024/1386184

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.