Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இரெண்டு வருடத்தில் ஒரே கூட்டணி என்றால் இப்பவே ஆளை ஆள் பாராட்ட ஆரம்பித்தால்தான் மெள்ள, மெள்ள நகர்ந்து, கைகோர்ர்கும் அளவுக்கு தம்பிகளையும், சங்கிகளையும் தயார் செய்ய முடியும் என்பது அண்ணாமலைக்கு புரிகிறது.

உங்க ஆசையை ஏன் கெடுப்பான்.

யாருடனாவது சேர்ந்து வெற்றகளைப் பெறட்டும்.

  • Replies 212
  • Views 14k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா? முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி. மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார். ஆனா

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இப்ப‌த்தை நில‌வ‌ர‌ம் அண்ணா.......................இதை பாருங்கோ புரியும் நீங்க‌ள் க‌ணித்த‌து ச‌ரி  நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்துக்கு மேல் பெற்று விட்டின‌ம்🙏🥰....................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

அமித்ஜி மீண்டும் உள்துறை அமைச்சரானால் சந்திரபாபுவுக்கு சங்குதாந். 2019 இல் என நினைக்கின்றேன் 7 தெலுங்கு தேசம்  எம்பிக்களை பாஜக கபளீகரம் செய்துகொண்டது.  தங்களுக்கு குடைச்சல் கொடுக்க மோடிஜியும் அமித்ஜியும் விரும்பமாட்டார்கள். அநேகமாக நிதிஷ்குமாரினதும் சந்திரபாபுவினதும் எம்பிக்களை பாஜகவுக்குள் இழுத்துவிடுவார்கள்.  

இதே போல நிதிஷிடமும் ஜூனியர் பார்னராக போய், சீனியர் பார்ட்னர் ஆக முயற்சித்தனர் பாஜக.

நிதீசுக்கும், நாய்டுவுக்கும் பாதுகாப்பான வழி இந்தியா கூட்டணியில் சேர்ந்து அதிகூடிய சலுகைகளை அடைவதே.

பிஜேபியோடு சேர்ந்தால் - பழம் இருக்க சுளை எடுத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

ஆரம்பத்தில் பிஜேபி பணிந்து போய், பின்னர் தேவையானவர்களை உள்ளே இழுத்து எடுக்கக்கூடும்.

அமித்ஷாவை மற்றவர்கள் வேண்டாம் என்றாலும், ஜே பி நட்டா, Manohar Parrikar என்று அவருக்கு ஈடானவர்கள் பிஜேபியில் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாலி said:

அமித்ஜி மீண்டும் உள்துறை அமைச்சரானால் சந்திரபாபுவுக்கு சங்குதாந். 2019 இல் என நினைக்கின்றேன் 7 தெலுங்கு தேசம்  எம்பிக்களை பாஜக கபளீகரம் செய்துகொண்டது.  தங்களுக்கு குடைச்சல் கொடுக்க மோடிஜியும் அமித்ஜியும் விரும்பமாட்டார்கள். அநேகமாக நிதிஷ்குமாரினதும் சந்திரபாபுவினதும் எம்பிக்களை பாஜகவுக்குள் இழுத்துவிடுவார்கள்.  

வாலி  நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள்,........🤣😂🤣  இந்தியா கூட்டணியிருந்து   இழுக்கும் வாய்ப்புகள் உண்டா??  குறிப்பாக  தமிழ்நாட்டிலிருந்து  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதே போல நிதிஷிடமும் ஜூனியர் பார்னராக போய், சீனியர் பார்ட்னர் ஆக முயற்சித்தனர் பாஜக.

நிதீசுக்கும், நாய்டுவுக்கும் பாதுகாப்பான வழி இந்தியா கூட்டணியில் சேர்ந்து அதிகூடிய சலுகைகளை அடைவதே.

பிஜேபியோடு சேர்ந்தால் - பழம் இருக்க சுளை எடுத்து விடுவார்கள்.

அமித்ஷா, மோடி பழைய பலத்துடன் இப்போது இல்லை, RSSம்  இவர்களை விரும்பவில்லை எனத்தெரிகிறது, அத்துடன் உள்ளுக்குள்ளேயே நிறையபேர் பொரிந்துக்கொண்டு இருப்பார்கள், தருனம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் இருவரும் அசுர பலத்துடன் இருந்தபோது உள்ளுக்குள்ளும் வெளியிலும் நிறையபேரை பகைத்துக்கொண்டு உள்ளார்கள். அத்வானி , ஜோஷி என்று பெருந்தலைகளை ஓரம்கட்டியுள்ளார்கள். யோகியுடனும் நல்லுறவு இல்லை. ஆட்சிக்கவிழ்ப்பு, குதிரை பேரம், கூட்டணி கட்சிகளை உடைத்தல் என்று இவர்கள்களது லிஸ்ட் பெரியது. கொஞ்ச நாட்களில் இவர்களை இறக்கி விடுவார்கள் என்று நினைக்கிறன், பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இரெண்டு முறையிலும் குறைபாடுகள் உள்ளன.

விகிதாசார பிரதிநிதிதுவம், கலப்பு பிரதிநிதிதுவம் என மாறி மாறி அமல்படுத்திய இத்தாலியில் நடக்கும் ஊழல் கூத்துக்களை, நிலையற்ற தன்மையை பார்க்கிறோம்தானே.

பிரிட்டனில் இப்போ உள்ள சிஸ்டமா, விகிதாரசாரமா என 2012 அளவில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, படு தோல்வியடடைந்தது.

இந்தியாவும் இதே நிலைதான் என எண்ணுகிறேன்.

இந்தியா மட்டும் அல்ல அமேரிக்காவும் கூட.

சில நாடுகளுக்கு பொருந்துவது ஏனைய நாடுகளுக்கு பொருந்தாது.

கலாச்சாரம் போல அரசியல் கலாச்சாரமும் நாட்டுக்கு நாடு வேறுபடும்.

விகிதாச்சார தேர்தல் முறை  தமிழ்நாட்டில் அமுல் செய்தால்  திமுக,.அதிமுக அடங்கி வாசிப்பார்கள்.    சிறிய கட்சிகள் மதிக்கப்படும்    ஒவ்வொரு கட்சியும். தனித்து போட்டி இடலாம்.  சீமானிக்கு கூட  17. சட்ட மன்ற உறுப்பினர்கள் கிடைக்கும்   ஆட்சி அமைக்க அவரது உதவியும் தேவைப்படும்     5% கீழே வாக்கு பெறும் கட்சிகள் இல்லாமல் போய் விடும் கொள்ளை அடிப்பது  ஊழல் செய்வது   குறையும்   படிப்படியாக பரம்பரை ஆட்சி இல்லாமல் போகும்   கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் வைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

விகிதாசார பிரதிநிதித்துவம் அமுல் செய்யப்பட்டால் பா.ஜ.க போன்ற பாஸிச கட்சிகளும் தமது சர்வாதிகாரத்தை காட்ட முடியாது. மோடி போன்ற கேவலமான பிரதமர் இந்தியாவை ஆண்டு இருக்க மாட்டார்.  இந்தியா முழுவதிலும் உள்ள சிறுபான்மை, பட்டியல் இன மக்கள் நன்மையடைவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

3 minutes ago, island said:

விகிதாசார பிரதிநிதித்துவம் அமுல் செய்யப்பட்டால் பா.ஜ.க போன்ற பாஸிச கட்சிகளும் தமது சர்வாதிகாரத்தை காட்ட முடியாது. மோடி போன்ற கேவலமான பிரதமர் இந்தியாவை ஆண்டு இருக்க மாட்டார்.  இந்தியா முழுவதிலும் உள்ள சிறுபான்மை, பட்டியல் இன மக்கள் நன்மையடைவர்.  

விகிதாசார தேர்தல் முறையில் நாஜிகள், முழுக்க முழுக்க அடிப்படை வாதிகளாக இருப்போர் கை ஓங்கும்.

அவர்கள் தயவில் ஆட்சி எனும் போது அவர்கள் கேட்க்கும் இனதுவேச சட்டங்களுக்கு பெரிய கட்சிகள் அடி பணிய வேண்டி வரும்.

உதாரணமாக யூகேயில் பின் என் பி, நேஷனல் புரொண்ட் போன்றோருக்கு 10% வரைக்கும் ஆதரவு இருந்தாலும் அவர்களால் அந்த அடிப்படை வாத கருத்துகளின் அடிப்படையில் எம்பி ஆக முடியாது.

ஆகவேதான், யூகிப், ரிபோர்ம் என கொஞ்சம் மிதவாத முகமூடியை போட்டு கொண்டு முயல்கிறார்கள்.

ஜேர்மனியில் AfD யின் வளர்ச்சியும், ஏறுமுகமும் மிக ஆபத்தானது. ஒரு காலத்தில் அரசில் இந்த கட்சி வரவும் வாய்புள்ளது.

பிரித்தானிய தேர்தல் முறையை ஜேர்மனி பின்பற்றினால் இந்த கட்சி இந்தளவுக்கு வளர வாய்ப்புகள் மிக குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

விகிதாசார முறைப்படி மாற்றினால் இலகுவாக காங்கிரஸ்,  பா ஜ போன்றவர்களும் தமிழ் நாட்டில் உறுப்பினர்களை பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது.

தேர்தல் முறையை மாற்றினாலும்  தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்க முடியாது என்றில்லையே .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

விகிதாசார முறைப்படி மாற்றினால் இலகுவாக காங்கிரஸ்,  பா ஜ போன்றவர்களும் தமிழ் நாட்டில் உறுப்பினர்களை பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது.

தேர்தல் முறையை மாற்றினாலும்  தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்க முடியாது என்றில்லையே .

ஆமாம் வாத்தியார்    ஆனால் 5% மேல் வாக்கு பலம்  உள்ள கட்சிகள்   கூட்டணி அமைக்க விரும்பமாட்டார்கள்.    

5% கீழே வாக்குப்பலம். உடைய கட்சிகள்   கூட்டணி அமைக்கலாம்     ஆனால் பெரிய கட்சிகள் விரும்பது   

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

விகிதாசார தேர்தல் முறையில் நாஜிகள், முழுக்க முழுக்க அடிப்படை வாதிகளாக இருப்போர் கை ஓங்கும்.

அவர்கள் தயவில் ஆட்சி எனும் போது அவர்கள் கேட்க்கும் இனதுவேச சட்டங்களுக்கு பெரிய கட்சிகள் அடி பணிய வேண்டி வரும்.

உதாரணமாக யூகேயில் பின் என் பி, நேஷனல் புரொண்ட் போன்றோருக்கு 10% வரைக்கும் ஆதரவு இருந்தாலும் அவர்களால் அந்த அடிப்படை வாத கருத்துகளின் அடிப்படையில் எம்பி ஆக முடியாது.

ஆகவேதான், யூகிப், ரிபோர்ம் என கொஞ்சம் மிதவாத முகமூடியை போட்டு கொண்டு முயல்கிறார்கள்.

ஜேர்மனியில் AfD யின் வளர்ச்சியும், ஏறுமுகமும் மிக ஆபத்தானது. ஒரு காலத்தில் அரசில் இந்த கட்சி வரவும் வாய்புள்ளது.

பிரித்தானிய தேர்தல் முறையை ஜேர்மனி பின்பற்றினால் இந்த கட்சி இந்தளவுக்கு வளர வாய்ப்புகள் மிக குறைவு.

தகவல்களுக்கு நன்றி. இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, island said:

விகிதாசார பிரதிநிதித்துவம் அமுல் செய்யப்பட்டால் பா.ஜ.க போன்ற பாஸிச கட்சிகளும் தமது சர்வாதிகாரத்தை காட்ட முடியாது. மோடி போன்ற கேவலமான பிரதமர் இந்தியாவை ஆண்டு இருக்க மாட்டார்.  இந்தியா முழுவதிலும் உள்ள சிறுபான்மை, பட்டியல் இன மக்கள் நன்மையடைவர்.  

ஆமாம் உண்மை தான் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நியாயம் said:

இந்திய அரசியல் பற்றி அதிகம் அறியாததால் அதிகம் ஆராய்ந்து  பார்க்க முயற்சி செய்யவில்லை.

எனக்கும் இந்திய அரசியல் பற்றி அதிகம் தெரியாது ஆர்வமும் அதிகம் இல்லை.

19 hours ago, நியாயம் said:

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவன் பாரிய வெற்றி பெற்றுள்ளார். இவரின் இலங்கை தமிழர் பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?

இவர்கள் நிலைபாடுகள் எப்படி இருந்தூலும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்க போவது இல்லை. கந்தையா அண்ணா மற்ற திரியில் சொன்ன மாதிரி இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோ விருப்பமோ அறவே இல்லாதவை".   இந்தியாவில் உள்ள தங்களது மக்களுக்கு நல்லது செய்யட்டும்.இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களுக்கும்  நல்லது செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

ஆசிய மக்களுக்கு உரித்தான ஈகோ மனப்பான்மை, சுயநலம் என்பவை  அந்த மக்களிடம் இருந்து வந்த அரசியல்வாதிகளுக்கும் உண்டு.

நூறு வீதம் உண்மை.சீர்கேடுகளுக்கு காரணங்களும் அது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

ஜேர்மனியில் AfD யின் வளர்ச்சியும், ஏறுமுகமும் மிக ஆபத்தானது. ஒரு காலத்தில் அரசில் இந்த கட்சி வரவும் வாய்புள்ளது.

ஜேர்மனியில் உள்ள கட்சிகள்  AfD  உடனே கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க மாட்டார்கள்    AfD.  மிகப் பெரும்பான்மை  பெற்று தனித்து ஆட்சி  செய்யும் நிலை வந்தால் தான் பிரச்சனை   இந்த கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்க முடியும் ஆயின். மற்றைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி செய்வார்கள்   PDS.   என்ற கட்சியும்.  கிட்டத்தட்ட இதேமாதிரி தான்   கிழக்கு ஜேர்மனியில் நல்ல ஆதரவு உள்ள கட்சி  ஒருமுறை  2004 ஆக இருக்கும்  75 அல்லது 100  பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைத்தது   இலகுவாக அதனுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்திருக்கலாம்  ஆனால் செய்யவில்லை  மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி செய்தார்கள்   அதன் பின்னர் PDS. வீழ்ச்சி அடைந்து விட்டது   இதேபோன்று தான் AfD. க்கும். நடக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஆனால் போன சட்ட மன்ற தேர்தலில் எடுத்த அதே அளவை, அதாவது அண்ணளவாக 8% ஐ நாதக எடுத்துள்ளது. இது வளர்ச்சியும் இல்லை தேய்தலும் இல்லை.

நாதக தேக்க நிலையில், அசையாமல் நிற்கிறது என்பதையே இது காட்டு கிறது.

இதை நாதக வளர்ந்து விட்டது என தம்பிகள் இங்கும், சமூக ஊடகத்திலும் பரப்பி விடுவது -கம்பி கட்டும் கதைதான்.

போன தேர்தலில் 3 கட்சிகள் ஓடிய ரேசில் 3ஆவதாக வந்து விட்டு, தமிழ்நாட்டில் மூன்றாம் பெரிய கட்சி என தம்பிகள் உருட்டியது போல, இப்போ 7.9% இல் இருந்து 8.1% சதவீதம் ஆகியதை ஏதோ இமாலய சாதனை போல் உருட்டுகிறார்கள்🤣.

புதிய சின்னத்தில் 20 நாட்களுக்குள்  அதுவுமு; ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி அல்லது சிலரது கருத்துப்படி உள்ளுராட்சி சபையிலே பிரதிநிதிகள் இல்லாத கட்சி தனித்து நின்று  அதுவும் நாடாளுமன்றத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க முடியாத கட்சி தேர்தல் ஆணையம் முதல் அனைத்து ஊடகங்களாலும் புறக்கணிகப்பட்ட கட்சி இந்தக் கட்சி அரசியலில் வெல்லாது என்று மீண்டும் மீண்டும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற கட்சி தனித்து நின்று 8 வுPத்துக்கு மெல் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளது. அதுவும் பணம் கொடுக்காமல். அது வளர்ச்சியில்லை என்று கூறுவதும் பாஜக வின் பி ரீம் எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்ணி வைக்கும் என்று மூக்குச்சாத்திரம் கூறுவதும் அந்த கட்சியின் வளர்ச்சியில் வந்த காழ்ப்புணர்ச்சியைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியமு;. காங்கிரஸ்விசிக சில முஸ்லிம் கட்சிகளைத் தவிர பாஜகவுடன் கூட்டணிவைக்காத கட்சி எதுவும் இல்லை.  ஏற்கனவே பாஜகவுக்கு எம்எல் ஏ பெற்றுக் கொடுத்த திமுக மீண்டும் பாஜகவுடன் கூட்ணி வைக்காது என யாராவது கூற முடியுமா. இந்த நிலையில் இதுவரையில் யாருடனும் கூட்டணி வைக்காத கட்சியை எதற்காக கரித்துக் கொட்டுகிறீர்கள்.இது யதார்த்தை முடி மறைத்து நாதக வளரவில்லை வளராது. அதனுடைய வாக்கு சதவுPதத்துக்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்பவர்கள் விழுந்த மொத்த வாக்குகளையும் நாதக பெற்ற வாக்குகளையும் வைத்துக் கணித்துப்பார்த்தாலே  தெளிவாகப் புரிந்து விடும் . அப்கபடிகத் தெளிவாகக் கணிக்கக் கூடிய ஒரேகட்சி நாம்தமிழர்கட்சி மட்டும்தான். கூட்டணிக்கட்சிகளின் வாக்குசதவுPத்தை எப்படிக்கணித்தாலும் அது 100 சதவீதம் உண்மையான கணிப்பாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கும் இந்திய அரசியல் பற்றி அதிகம் தெரியாது ஆர்வமும் அதிகம் இல்லை.

இவர்கள் நிலைபாடுகள் எப்படி இருந்தூலும் இலங்கை தமிழர்களுக்கு நன்மை கிடைக்க போவது இல்லை. கந்தையா அண்ணா மற்ற திரியில் சொன்ன மாதிரி இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோ விருப்பமோ அறவே இல்லாதவை".   இந்தியாவில் உள்ள தங்களது மக்களுக்கு நல்லது செய்யட்டும்.இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களுக்கும்  நல்லது செய்யட்டும்.

2009க்கு முத‌ல் நான் இந்தியா அர‌சிய‌லை எட்டியும் பார்த்த‌து கிடையாது உற‌வே 

2001ம் ஆண்டு க‌ருணாநிதி இர‌வோடு இர‌வாக‌ கைது செய்த போது இணைய‌த்தில் மேல் ஓட்ட‌மாய் செய்திய‌ வாசித்தேன் 

ம‌ற்ற‌ம் ப‌டி ஜ‌யா வைக்கோ எங்க‌ளுக்காக‌ ந‌ட‌த்தின‌ ஆர்பாட்ட‌ செய்திக‌ள் வாசித்து இருக்கிறேன்

இம்ம‌ட்டும் தான்

பிற‌க்கு அண்ண‌ன் சீமான் 2010 க‌ட்சி ஆர‌ம்பிச்சாலும் 2013 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தான் அவ‌ரின் அர‌சிய‌லை பின் தொட‌ர்ந்தேன்

இன்று வ‌ரை த‌மிழ‌க‌ அர‌சிய‌லில்  பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் ப‌ற்றி தெரிந்து கொள்வ‌து

ஆனால் ம‌ற்ற‌ நாட்டு அர‌சிய‌லுட‌ன் ஒப்பிடும் போது இந்தியா அர‌சிய‌ல் நிறைய‌ முறைகேடு ஜ‌ன‌நாய‌க‌ முறைப் ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது

ஓட்டுக்கு காசு 

நாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று தேர்த‌ல் அறிக்கையில் சொல்வ‌து ஆட்சிக்கு வந்த‌ பிற‌க்கு செய்வ‌து கிடையாது

ப‌க்க‌த்து நாடு சீன‌ன் நாட்டை எப்ப‌டி க‌ட்டி எழுப்பி இருக்கிறான் 

அமெரிக்காவை விட‌ த‌ன‌து நாட்டை ந‌ல்லா க‌ட்டி எழுப்பிட்டான்

இந்திய‌ன் அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் அது தான் அந்த‌ நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காண‌ வில்லை

காசு பூரா அர‌சிய‌ல் வாதிக‌ளின் வெளி நாட்டு வ‌ங்கியில் இருந்தா நாட்டை எப்ப‌டி டெவ‌ல‌ப் ப‌ண்ணுற‌து....................................

இப்ப‌டி சொல்ல‌ இன்னும் நிறைய‌ இருக்கு உற‌வே...............................................................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்குகளுக்கு பணம் கொடுக்காமலும்  ஊடக பலமில்லாமலும் கூட்டணி இல்லாமலும் கடைசி நேர சின்ன பறிப்பால் புதிய சின்னத்தில் போட்டியிட்டு  மாநில அளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக  நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளமை மாபெரும் வெற்றிதான்.

வாழ்த்துகள். ☘️

சீமான் தனது கொள்கைகளில் ஒரு சில திருத்தங்களை சீர் செய்வார் எனின்   விரைவில் பல வெற்றிகள் நிச்சயம்.💪

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

புதிய சின்னத்தில் 20 நாட்களுக்குள்  அதுவுமு; ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி அல்லது சிலரது கருத்துப்படி உள்ளுராட்சி சபையிலே பிரதிநிதிகள் இல்லாத கட்சி தனித்து நின்று  அதுவும் நாடாளுமன்றத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க முடியாத கட்சி தேர்தல் ஆணையம் முதல் அனைத்து ஊடகங்களாலும் புறக்கணிகப்பட்ட கட்சி இந்தக் கட்சி அரசியலில் வெல்லாது என்று மீண்டும் மீண்டும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற கட்சி தனித்து நின்று 8 வுPத்துக்கு மெல் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளது. அதுவும் பணம் கொடுக்காமல். அது வளர்ச்சியில்லை என்று கூறுவதும் பாஜக வின் பி ரீம் எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்ணி வைக்கும் என்று மூக்குச்சாத்திரம் கூறுவதும் அந்த கட்சியின் வளர்ச்சியில் வந்த காழ்ப்புணர்ச்சியைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியமு;. காங்கிரஸ்விசிக சில முஸ்லிம் கட்சிகளைத் தவிர பாஜகவுடன் கூட்டணிவைக்காத கட்சி எதுவும் இல்லை.  ஏற்கனவே பாஜகவுக்கு எம்எல் ஏ பெற்றுக் கொடுத்த திமுக மீண்டும் பாஜகவுடன் கூட்ணி வைக்காது என யாராவது கூற முடியுமா. இந்த நிலையில் இதுவரையில் யாருடனும் கூட்டணி வைக்காத கட்சியை எதற்காக கரித்துக் கொட்டுகிறீர்கள்.இது யதார்த்தை முடி மறைத்து நாதக வளரவில்லை வளராது. அதனுடைய வாக்கு சதவுPதத்துக்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்பவர்கள் விழுந்த மொத்த வாக்குகளையும் நாதக பெற்ற வாக்குகளையும் வைத்துக் கணித்துப்பார்த்தாலே  தெளிவாகப் புரிந்து விடும் . அப்கபடிகத் தெளிவாகக் கணிக்கக் கூடிய ஒரேகட்சி நாம்தமிழர்கட்சி மட்டும்தான். கூட்டணிக்கட்சிகளின் வாக்குசதவுPத்தை எப்படிக்கணித்தாலும் அது 100 சதவீதம் உண்மையான கணிப்பாக இருக்காது.

புல‌வ‌ர் அண்ணா 

நீங்க‌ள் தொட்டு நான் தொட்டு ப‌ல‌ருக்கு ந‌ல்ல‌ விள‌க்க‌ம் கொடுத்து விட்டோம் ஆனால் அவைக்கு புரிந்தாலும் புரியாது போல் ந‌க்க‌ல் நையாண்டி செய்வ‌து

திருமாள‌வ‌னை ப‌ற்றி இங்கு யாரும் எழுதுவ‌தில்லை

2சீட்டுக்கு இன்று வ‌ரை எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ் ம‌ற்றும் திமுக்கா கூட‌ நிக்குது

திருமாள‌வ‌ன் எம்பி ஆகி விட்டார் எங்க‌ளுக்காக‌ டெல்லியில் குர‌ல் கொடுப்பாரா....................................

திருமா நாக்கு பிர‌ட்டி

திருமாக்கு பிர‌பாக‌ர‌ன் எத‌ற்காக‌ போராடினார் என்ப‌தை கூட‌ ம‌ற‌ந்து இருப்பான் . தேர்த‌ல் நேர‌ம் ப‌ல‌ கோடி காசு அதோட‌ 2சீட் ந‌க்கி பிழைச்சால் போதும் என்ர‌ நிலைக்கு திருமாள‌வ‌ன் வ‌ந்து விட்டார்................................ஏன் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் திருமாள‌வ‌ன் பெய‌ரை சொல்வ‌து கிடையாது

கார‌ண‌ம் திருமாள‌வ‌ன் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கையை ஈழ‌ த‌மிழர்க‌ளை விட்டு போய் விட்ட‌து

இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌.................................................................

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html

தமிழக அரசியலை மிரட்டும் சீமானின் நாம் தமிழர்! 2019-ல் 3.90%; 2024-ல் அடேங்கப்பா 8.10% வாக்குகள்! By Mathivanan Maran Published: Wednesday, June 5, 2024, 15:55 [IST] சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக பெரிய கட்சியா? நாம் தமிழர் பெரிய கட்சியா? என்பதுதான் முதன்மையான விவாதம். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் மத்தியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு, புதுவையைப் பொறுத்தவரை திமுக கூட்டணியே 40 இடங்களையும் கைப்பற்றிவிட்டது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. அதேநேரத்தில் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் தமிழகத்தில் புதிய அரசியல் பாதை உருவாகிறதா? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போட்டியிட்ட இடங்களும் வென்ற வாக்குகளும் திமுக (21) 26.93% Advertisement அதிமுக (32) 20.46% பாஜக (23) 11.24% காங்கிரஸ் (9) 10.67% நாம் தமிழர் (39) 8.10% பாமக (10) 4.2% இதர கட்சிகள் அனைத்தும் குறைவான வாக்கு சதவீதம்தான் பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது? திமுக (24) 32.76% அதிமுக (20) 25.53% பாஜக (5) 3.62% காங்கிரஸ் (9) 12.72% நாம் தமிழர் (37) 3.90% பாமக (7) 5.36% தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வென்றாலும் இடங்களையே கைப்பற்றாமல் இருந்தாலும் அதன் வாக்கு சதவீதம் நிலையானதாகவே இருந்து வருகிறது என்பதை 2 தேர்தல்களின் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி இம்முறை அனைத்து இடங்களிலும் வென்ற போது 2% வாக்குகளை இழந்திருப்பது அக்கட்சிக்கான எச்சரிக்கை அலாரம்தான். பாமகவைப் பொறுத்தவரையில் போன முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5.36% ஓட்டுகளைப் பெற்றது; இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4.2% ஓட்டுகளைத்தான் பெற்றிருப்பது அந்த கட்சிக்கும் 'எச்சரிக்கை' மணி அடிக்கப்படுகிறது என்பதுதான். 5 தொகுதிகளில் நாம் தமிழர் 3-ம் இடம்! 12 இடங்களில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள்- தொகுதி வாரியாக! இதற்கு அப்பால் பாஜக, நாம் தமிழர் கட்சிகளைப் பார்ப்போம். பாஜகவைப் பொறுத்தவரையில் 2019-ல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 4 மடங்கு அதிகமாக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படியானால் வாக்கு சதவீதம் 4 மடங்கு அதிகமாகத்தானே இருக்கும். ஆம் அப்படித்தான் 11.24% வாக்குகளைப் பாஜக பெற்றுள்ளது. நாம் தமிழர் வளர்ச்சி: அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளைத்தான் பெற்றது. இந்த முறை அதைப் போல இரு மடங்கு வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது 8.10% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் நிலைக்குமா? குறையுமா? என்பதற்கு அப்பால் இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சிதான் தமக்கான பெரும் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says "எதிர்க்கட்சிகள் நாங்க அதிக சீட்டு ஜெயிச்சுட்டோம்.. இனிமேல் உங்க ஆட்சிக்கு எவ்வளவு பிரச்சனை வரப்போகுதுன்னு பாரு... K mt என்ன பெரிய பிரச்சனை வந்துற போகுது.. பார்லிமென்ட் கேண்டின்ல 5 கிலோ பஜ்ஜி மாவு எக்ஸ்ட்ரா வாங்கணும்.. அவ்வளவுதான.. பாத்துக்கலாம் விடு!"

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

புதிய சின்னத்தில் 20 நாட்களுக்குள்  அதுவுமு; ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி அல்லது சிலரது கருத்துப்படி உள்ளுராட்சி சபையிலே பிரதிநிதிகள் இல்லாத கட்சி தனித்து நின்று  அதுவும் நாடாளுமன்றத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க முடியாத கட்சி தேர்தல் ஆணையம் முதல் அனைத்து ஊடகங்களாலும் புறக்கணிகப்பட்ட கட்சி இந்தக் கட்சி அரசியலில் வெல்லாது என்று மீண்டும் மீண்டும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற கட்சி தனித்து நின்று 8 வுPத்துக்கு மெல் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளது. அதுவும் பணம் கொடுக்காமல். அது வளர்ச்சியில்லை என்று கூறுவதும் பாஜக வின் பி ரீம் எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்ணி வைக்கும் என்று மூக்குச்சாத்திரம் கூறுவதும் அந்த கட்சியின் வளர்ச்சியில் வந்த காழ்ப்புணர்ச்சியைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியமு;. காங்கிரஸ்விசிக சில முஸ்லிம் கட்சிகளைத் தவிர பாஜகவுடன் கூட்டணிவைக்காத கட்சி எதுவும் இல்லை.  ஏற்கனவே பாஜகவுக்கு எம்எல் ஏ பெற்றுக் கொடுத்த திமுக மீண்டும் பாஜகவுடன் கூட்ணி வைக்காது என யாராவது கூற முடியுமா. இந்த நிலையில் இதுவரையில் யாருடனும் கூட்டணி வைக்காத கட்சியை எதற்காக கரித்துக் கொட்டுகிறீர்கள்.இது யதார்த்தை முடி மறைத்து நாதக வளரவில்லை வளராது. அதனுடைய வாக்கு சதவுPதத்துக்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்பவர்கள் விழுந்த மொத்த வாக்குகளையும் நாதக பெற்ற வாக்குகளையும் வைத்துக் கணித்துப்பார்த்தாலே  தெளிவாகப் புரிந்து விடும் . அப்கபடிகத் தெளிவாகக் கணிக்கக் கூடிய ஒரேகட்சி நாம்தமிழர்கட்சி மட்டும்தான். கூட்டணிக்கட்சிகளின் வாக்குசதவுPத்தை எப்படிக்கணித்தாலும் அது 100 சதவீதம் உண்மையான கணிப்பாக இருக்காது.

1. நாதக 8% என்பதை நான் எங்கேயும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஒரு மாதம் முன்பே என் கணிப்பே 8% என்பதுதான்.

2. நாதகவுக்கு என ஒரு வாக்கு வட்டம் உள்ளது. உண்மையில் நீங்கள் சொல்லுவது போல் சின்னம் பார்த்து எல்லாம் இப்போ போடும் நிலை தமிழகத்தில் இல்லை. நாதக சின்னம் மைக் என்பதை பெரும்பாலானா வாக்களார், குறிப்பாக நாதக வாக்காளர் அறிந்தே வாக்களித்துள்ளனர். ஆகவே சின்னம் மாற்றம் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை.

3. நாதக 8%  எடுக்கும் என நான் சொன்னது யூன் 4ம் திகதி மட்டும் மூக்கு சாத்திரம். அதன் பின்? அதே போலவே ஏனையவையும்.

4. நிச்சயம் சீமான் தொடர்ந்து 10% க்கு கீழ் வாக்கு எடுத்தபடி, அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தபடி காலத்தை ஓட்ட முடியாது. ஆகவே கூட்டணி வைப்பார் என்பது ஊகிக்க கூடியதே. 

5. ஏனையவர்கள் கள்ளர், கசை போக்கிரிகள் - ஆகவே பிஜேபியுடன் கூட்டி இருந்தார்கள். சீமானும் அப்படி செய்தால்——கவனிக்கவும்——செய்தால், அவரும் அதுவே.

ஆனால் “யாரோடு சேர்ந்தாவது வெல்லட்டும்” என்ற முட்டுக்கு இப்போதே @ஈழப்பிரியன் அண்ணா வந்து விட்டார்.

யாழ்களத்தில் இன்னும் எத்தனை பேர் இப்படி நிலைமாறுவார்கள் என்பதை காலம் விரைவில் காட்டும் என நம்புகிறேன்.

2 hours ago, குமாரசாமி said:

சீமான் தனது கொள்கைகளில் ஒரு சில திருத்தங்களை சீர் செய்வார் எனின்  .

இதைதான் பல வருடமாக இங்கே எழுதி வருகிறேன்.

ஆனால் இதை செய்யும் இதயசுத்தி அவரிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை எப்போதோ பொய்த்து விட்டது.

ஆனாலும் திருத்தி கொண்டால் வரவேற்க தயார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

1. நாதக 8% என்பதை நான் எங்கேயும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஒரு மாதம் முன்பே என் கணிப்பே 8% என்பதுதான்.

2. நாதகவுக்கு என ஒரு வாக்கு வட்டம் உள்ளது. உண்மையில் நீங்கள் சொல்லுவது போல் சின்னம் பார்த்து எல்லாம் இப்போ போடும் நிலை தமிழகத்தில் இல்லை. நாதக சின்னம் மைக் என்பதை பெரும்பாலானா வாக்களார், குறிப்பாக நாதக வாக்காளர் அறிந்தே வாக்களித்துள்ளனர். ஆகவே சின்னம் மாற்றம் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை.

3. நாதக 8%  எடுக்கும் என நான் சொன்னது யூன் 4ம் திகதி மட்டும் மூக்கு சாத்திரம். அதன் பின்? அதே போலவே ஏனையவையும்.

4. நிச்சயம் சீமான் தொடர்ந்து 10% க்கு கீழ் வாக்கு எடுத்தபடி, அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தபடி காலத்தை ஓட்ட முடியாது. ஆகவே கூட்டணி வைப்பார் என்பது ஊகிக்க கூடியதே. 

5. ஏனையவர்கள் கள்ளர், கசை போக்கிரிகள் - ஆகவே பிஜேபியுடன் கூட்டி இருந்தார்கள். சீமானும் அப்படி செய்தால்——கவனிக்கவும்——செய்தால், அவரும் அதுவே.

ஆனால் “யாரோடு சேர்ந்தாவது வெல்லட்டும்” என்ற முட்டுக்கு இப்போதே @ஈழப்பிரியன் அண்ணா வந்து விட்டார்.

யாழ்களத்தில் இன்னும் எத்தனை பேர் இப்படி நிலைமாறுவார்கள் என்பதை காலம் விரைவில் காட்டும் என நம்புகிறேன்.

இதைதான் பல வருடமாக இங்கே எழுதி வருகிறேன்.

ஆனால் இதை செய்யும் இதயசுத்தி அவரிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை எப்போதோ பொய்த்து விட்டது.

ஆனாலும் திருத்தி கொண்டால் வரவேற்க தயார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…  அதேவேளை உங்கள் கருத்துகளை நான்  அல்லது மற்றைய யாழ் கள உறுப்பினர்கள்  காட்டாயம்  எற்க வேண்டும் என்று நினைக்க கூடாது  🤣😂🤣 ஆனாலும் கருத்துகள் அருமை 

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு 8% வாக்குகள் கிடைத்தது  வரவேற்கத்தக்கது.   இரண்டு விடயங்களை செந்தமிழன் அண்ணா கருத்திற்கொள்ளவேண்டும்  முதலாவது கூட்டணி இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது அடுத்தது அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.