Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

german-flag-4.gif  Schweiz_240-animierte-flagge-gifs.gif

ஜேர்மனி - சுவிஸ் விளையாட்டு ஆரம்பம்.

  • Replies 123
  • Views 7.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜேர்மன் 05 ........ ஸ்கொட் 01.......! ஸ்கொட்லாந்தின் 01 கோலும் கூட தவறுதலாக ஜெர்மன் வீரரின் தலையில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது....... ஜெர்மனியின் 5 வது கோல் மேலதிகமான 3 நிமிடத்துக்குள் அதாவது 9

  • nunavilan
    nunavilan

    இன்றைய போட்டி முடிவுகள் போலந்து 1  நெதர்லாந்து 2 ------------------ ஸ்லொவேனியா 1 டென்மார்க் 1 ----------------------- சேர்

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி வெற்றி மேல் வெற்றி   2014உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு அந்த‌ அணிக்கு என்ன‌ ஆச்சு என்று தெரிய‌ வில்லை தொட‌ர் தோல்விக‌ளை ச‌ந்திக்கின‌ம

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-fussball-bild-0102.gif

ஜேர்மனி - 0 சுவிஸ் - 1 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவீஸ் நல்லாய் விளையாடுது
ஜேர்மனி பின்னாலையும் முன்னாலையும் ஓடி மல்லுக்கட்டுது
எண்டாலும் ஜேர்மனியை ஆராலையும் அசைச்சுக்கூட பாக்கேலாது.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா....ஜேர்மன் ஒண்டு அடிச்சிட்டுது....இப்பதான் நிம்மதி...வாவ் 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-deutschland-fahne-flagge-bild  90வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு கோல் அடித்தது.animiertes-deutschland-fahne-flagge-bild
ஜேர்மனி - 1 : சுவிஸ் - 1 

  • கருத்துக்கள உறவுகள்

 தொலை காட்சியில் பார்த்தேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரேன் யூரோ போட்டியில் பங்குபற்றுவது மகிழ்ச்சி. சிலோவாக்கியாவுடன்  2 -1  வெற்றியும் பெற்றுள்ளது. 👍 ரஷ்யாவின்  போர் காரணமாக அங்கே தங்கியுள்ள உக்ரேனியர்கள்  "நன்றி யேர்மனி "  என்ற கோஷமிட்டுக் கொண்டு மைதானத்தில் நின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இது உதைபந்தாட்ட திரி என்டு.சுவிசுக்கு இந்த மட்ச் கோப்பை வென்டதுக்குச் சமன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் இது உதைபந்தாட்ட திரி என்டு.சுவிசுக்கு இந்த மட்ச் கோப்பை வென்டதுக்குச் சமன்.

ஆனால் வெல்ல மாட்டாது 

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

 தொலை காட்சியில் பார்த்தேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரேன் யூரோ போட்டியில் பங்குபற்றுவது மகிழ்ச்சி. சிலோவாக்கியாவுடன்  2 -1  வெற்றியும் பெற்றுள்ளது. 👍 ரஷ்யாவின்  போர் காரணமாக அங்கே தங்கியுள்ள உக்ரேனியர்கள்  "நன்றி யேர்மனி "  என்ற கோஷமிட்டுக் கொண்டு மைதானத்தில் நின்றனர்.

பரிதாபத்தில் உக்ரெயின் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ரஷ்யா கிறிமியை ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்தே உக்ரெயின் யூரோ கிண்ணத்தில் விளையாடுகிறது. 1993 இன் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. 1994 இல் ஐரோப்பாவுடனான பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தது. அது மட்டுமின்றி புவியியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் நெருங்கி இருப்பதால் அனுமதிக்கப்பட்டு வந்தது. 
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுளைய முயன்று தோல்வியுற்ற துருக்கியும் விளையாடுவதைக் கவனியுங்கள். இன்று முதல் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான வழிமுறைகுள் 27 நாடுகளின் ஒப்புதலுடன் நுளைவதால் துருக்கி போலவே உக்ரெயினுக்கும் யூரோ கிண்ணத்தில் விளையாட உரிமையுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

 தொலை காட்சியில் பார்த்தேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரேன் யூரோ போட்டியில் பங்குபற்றுவது மகிழ்ச்சி. சிலோவாக்கியாவுடன்  2 -1  வெற்றியும் பெற்றுள்ளது. 👍 ரஷ்யாவின்  போர் காரணமாக அங்கே தங்கியுள்ள உக்ரேனியர்கள்  "நன்றி யேர்மனி "  என்ற கோஷமிட்டுக் கொண்டு மைதானத்தில் நின்றனர்.

உக்ரேனியர்கள் வேறு எதைக் கூற முடியும்? 

அவர்கள் நன்றி கூறுவது ரஸ்ய அணியை  தடை செய்ததற்காக இருக்கும்,.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய அணிக்கு ஏற்கெனவே ஐரோப்பிய யுனியன் கால்பந்து கூட்டமைப்பு உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக தடைவிதித்துள்ளது. அடுத்த வருடம் சுவிஸ்சில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி 2025 ல் தகுதி பெறுகின்ற வாய்ப்பை ரஷ்யா இழந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்ய அணிக்கு ஏற்கெனவே ஐரோப்பிய யுனியன் கால்பந்து கூட்டமைப்பு உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக தடைவிதித்துள்ளது. அடுத்த வருடம் சுவிஸ்சில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி 2025 ல் தகுதி பெறுகின்ற வாய்ப்பை ரஷ்யா இழந்துவிட்டது.

ரஷ்யா ஒரு சிறுபகுதிதான் ஜரோப்பாவில் உள்ளது மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் உள்ளது.. பல ஆசிய பூர்வீக இனங்களை விழுங்கி உருவானதுதான் ரஷ்யா.. ரஷ்யா என்றதும் எங்களுக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ரஷ்யர்கள்தான்.. ஆனால் அதுவல்ல நிஜம்.. ரஷ்யா பல ஆசிய மக்களின் முகங்களை விழுங்கி உருவாகி உள்ளது( நான் சொல்வது சப்பட்டை என்று நம்மாளுகள் சொல்லும் தென்கிழக்காசிய மக்கள்).(தமிழர்களை முழுங்கி உருவான சிறீலங்கா போல்) ஆக உண்மையில் ரஷ்யா ஜரோப்பாவா ஆசியாவா,,?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சொன்ன மாதிரி தான் துருக்கியும். சிறுபகுதிதான் ஜரோப்பாவில் மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் அந்த சிறுபகுதியை சாட்டாக வைத்து நானும் யுரோப் தான் என்று துருக்கி😄

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  உக்ரேன் பெல்ஜியத்துடன் விளையாடுகின்றது.
மற்றும்
சிலோவாக்கியா - ருமேனியா
டென்மார்க் - செர்பியா
இங்கிலாந்து  -  லோவேனியாவும் இன்று விளையாடுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இங்கிலாந்து  -  லோவேனியாவும் இன்று விளையாடுகின்றன

0 ——0 

நேற்றே விளையாட்டு முடிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

நேற்றே விளையாட்டு முடிந்து விட்டது.

நான் பிரபா தந்த அட்டவணையை பின்பற்றி விட்டேன்.😄

- June 26, 2024: Denmark vs Serbia, Munich [12:30 AM IST]  
- June 26, 2024: England vs Slovenia, Cologne [12:30 AM IST]

இன்று விளையாடுபவை
சிலோவாக்கியா 1 - 1 ருமேனியா
உக்ரேன் 0 - 0 பெல்ஜியம்
யோர்ஜியா  2 -  0 போத்துக்கல்
செக்கியா  1  - 2  துருக்கி

On 15/6/2024 at 01:10, பிரபா said:

- June 26, 2024: Slovakia vs Romania, Frankfurt [9:30 PM IST]
- June 26, 2024: Ukraine vs Belgium, Stuttgart [9:30 PM IST]

 - June 26, 2024: Denmark vs Serbia, Munich [12:30 AM IST]  
- June 26, 2024: England vs Slovenia, Cologne [12:30 AM IST]

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/6/2024 at 15:37, இணையவன் said:

பரிதாபத்தில் உக்ரெயின் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ரஷ்யா கிறிமியை ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்தே உக்ரெயின் யூரோ கிண்ணத்தில் விளையாடுகிறது. 1993 இன் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. 1994 இல் ஐரோப்பாவுடனான பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தது. அது மட்டுமின்றி புவியியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் நெருங்கி இருப்பதால் அனுமதிக்கப்பட்டு வந்தது. 

எல்லா ஐரோப்பிய  நாட்டு தேசிய அணிகள் ஒன்றுக்குள்  போட்டியிட்டு விளையாடி ஐரோப்பிய கிண்ண போட்டி நிரலுக்குள்  நுழையும் போது உக்ரேன் மட்டும் எந்த தகுதியில் உள்ளே மூக்கை நுழைத்து விளையாடுகின்றது?
பொஸ்னியா,கொசோவோ போன்ற நாடுகள் ஏன் இந்த நிரலுக்குள் வரவில்லை?

On 25/6/2024 at 15:37, இணையவன் said:

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுளைய முயன்று தோல்வியுற்ற துருக்கியும் விளையாடுவதைக் கவனியுங்கள். இன்று முதல் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான வழிமுறைகுள் 27 நாடுகளின் ஒப்புதலுடன் நுளைவதால் துருக்கி போலவே உக்ரெயினுக்கும் யூரோ கிண்ணத்தில் விளையாட உரிமையுள்ளது.

யாழ்களத்தின் முக்கிய பதவியில் இருந்து கொண்டு இனிமேலும் இப்படியான கருத்துக்களை எழுதாதீர்கள்.
வெட்கம் தரும் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இனி சுற்று 16 க்கு
29  யூன் 2024
சுவிஸ் - இத்தாலி
யேர்மனி  -  டென்மார்க்

30 யூன் 2024
இங்கிலாந்து  - சிலோவாக்கியா
ஸ்பெயின் - யோர்ஜியா

1 யூலாய் 2024
பிரான்ஸ் - பெல்ஜியம்
போத்துக்கல் - சிலோவேனியா

2 யூலாய் 2024
ருமேனியா - நெதர்லண்ட்
ஒஸ்றியா - துருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தத் தெரிவுகள் விளங்கவில்லை. குழுவில் முதலாவதாக வந்த ஜேர்மனி எதிர் குழுவில் 2வதாக வந்த டென்மார்க். ஆனால் இங்கிலாந்துக்கு குழுவில் 3வதாக வந்த குழுவிலிருந்து செலவாக்கியாவுடன் மோதுகின்றது.

8 hours ago, குமாரசாமி said:

 உக்ரேன் மட்டும் எந்த தகுதியில் உள்ளே மூக்கை நுழைத்து விளையாடுகின்றது?

நான் எழுதியதை வாசித்துவிட்டு விளங்காமல் கேட்கிறீர்களா அல்லது வாசிக்காமலே கேட்கிறீர்களா என்று புரியவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்கு நான் மேலே எழுதிய பதிலைத்தான் மறுபடி எழுத வேண்டும். ஏன் விளையாடுகிறது என்று புரியும்படிதானே எழுதியுள்ளேன்.

8 hours ago, குமாரசாமி said:

வெட்கம் தரும் கருத்து.

தனிநபர் தாக்குதலிலேயே குறியாக இருக்காமல் பொஸ்னியா, கொசோவோ ஏன் விளையாடவில்லை போன்ற மலினமான கேள்விகளுக்கு இணையத்தில் சாதாரண தேடலின் மூலமே பதில் கிடைக்குமே, பொது அறிவையும் வளர்க்கலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா கண்டத்திற்கும்    ஐரோப்பிய யூனியனுக்கு வித்தியாசங்கள்
உள்ளன.
ஐரோப்பிய கண்டத்தில்   இருக்கும் 27 நாடுகள் தற்சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இவை இன்னும் விரிவாக்கமடையும்.

அந்தக்காலத்து சோவியத் ஒன்றியத்தின் உதைபந்தாட்ட அணியில்  உக்கிரையின் வீரர்களும் இருந்தார்கள் . சோவியத் உடைந்த பின்னர்
1996  இலிருந்து உக்கிரையின் ஐரோப்பிய கிண்ணத்திற்கான விளையாட்டுக்களில் (தெரிவுப்போட்டிகள்) பங்குபற்றி வருகின்றது

2012  போலந்து மற்றும் உக்கிரையின் நாடுகளில் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான இறுதி விளையாட்டுக்கள் நடைபெற்றபோது முதல் சுற்றிலேயே வெளியேறியது

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புலவர் said:

எனக்கு இந்தத் தெரிவுகள் விளங்கவில்லை. குழுவில் முதலாவதாக வந்த ஜேர்மனி எதிர் குழுவில் 2வதாக வந்த டென்மார்க். ஆனால் இங்கிலாந்துக்கு குழுவில் 3வதாக வந்த குழுவிலிருந்து செலவாக்கியாவுடன் மோதுகின்றது.

இது அவர்கள் ஏற்கெனவே  சுற்று 16 க்கு என்று திட்டம் தாயாரித்து   வைத்ததுவிட்டனர்.                A   குறுப்பில் முதலாவதாக வருகின்ற அணிக்கும் C குறுப்பில் இரண்டாவதாக வருகின்ற அணிக்கும்  போட்டி
C  குறுப்பில் முதலாவதாக வருகின்ற அணிக்கும் E குறுப்பில் மூன்றாவதாக வருகின்ற அணிக்கும் போட்டி. நடைபெறும்.
இதுவரை நடந்த விளையாட்டின் அடிப்படையில் A  குறுப்பில் யேர்மனி முதலாவதாகவும்,           C குறுப்பில் இங்கிலாந்து முதலாவதாகவும் டென்மார்க் இரண்டாவதாகவும்,  E குறுப்பில்  சிலோவாக்கியா மூன்றானதாகவும் வந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கிலாந்துக்கு வரமா சாபமா? செலவாக்கியா இங்கிலாந்துக்கு சாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த உலக்கோப்பை வரையும் அவர்கள் ஓரளவு நல்வ அணியாக இருந்தார்கள். இந்த முறை பல புதியவர்களை மாற்றிய பின் அவர்களின் விளையாட்டு படு மோசம். முதல் மட்சில் ஒரு கோல் அடித்தவுடன் பத்திரிகைகள் அடுத்த ரொனால்டோ .மெசி என்று அடுத்த மட் வரைக்கும் எழுதினார்கள். இப்போது காரித்துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை ஜேர்மனிக்கு சான்ஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

ரொனோல்டோவின் போர்த்துகலுக்கு அதிர்ச்சியளித்த ஜோர்ஜியா நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது

Published By: DIGITAL DESK 7   28 JUN, 2024 | 03:33 PM

image
 
(ஆர்.சேதுராமன்)

யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியொன்றில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணியை ஜோர்ஜியா 2:0 கோல்கள் விகிதத்தில் வென்று அதிர்ச்சியளித்தது.

இவ்வெற்றி மூலம் நொக்அவுட் சுற்றுக்கும் போர்த்துகல் முன்னேறியது. ஜேர்மனியில் நடைபெறும் யூரோ 2024 கிண்ண சுற்றுப்போட்டியின் மிகப் பெரிய தலைகீழ் பெறுபேறாக இது கருதப்படுகிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை (26) நடைபெற்ற, குழு எவ் அணிகளுக்கு இடையலான இப்போட்டியின் 2 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜியா முதல் கோலை புகுத்தியது. க்விச்சா க்வாரட்ஸ்க்கேலியா முதல் கோலை புகுத்தினார்.  54 ஆவது நிமிடத்தில் ஜோர்ஜஸ் மிகுவாடாட்ஸ் ஜோர்ஜியாவின் இரண்டாவது கோலை புகுத்தினார். இதனால் இப் போட்டியில் 2:0 கோல் விகித்ததில் ஜோர்ஜியா வென்றது.

ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை இப்போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் பெனல்ட்டி வாய்ப்பை மத்தியஸ்தருக்கு எதிர்ப்பு வெளிப்படுத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த ஜோர்ஜியா, யூரோ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை. அந்நாடு பங்குபற்றும் முதலாவது முக்கிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் இதுவாகும்.

சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் போர்த்துகல் 6 ஆவது இடத்தில் உள்ளது. ஜோர்ஜியா 74 ஆவது இடத்தில் உள்ளது. யூரோ 2024 போட்டிகளில் பங்குபற்றும் அணிகளில் தரவரிசையில் கடைசி இடத்திலுள்ள அணி ஜோர்ஜியா ஆகும்.

இச்சுற்றுப்போட்டியில் போர்த்துகல் அணியை மாத்திரமே ஜோர்ஜியா வென்றது. துருக்கியிடம் 3:1 விகிதத்தில் தோல்வியுற்ற ஜோர்ஜியா, செக் குடியரசுடனான போட்டியை 1:1 விகித்தில் சமநிலையில் முடித்துக் கொண்டது. இதன் மூலம், போர்த்துகல், துருக்கி அணிகளுடன் 16 அணிகளின் சுற்றுக்கு ஜோர்ஜியா தகுதி பெற்றது.

16 அணிகளின் சுற்று நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஜோர்ஜியா அணி நாளை மறுதினம் ஸ்பெய்னுடன் மோதவுள்ளது. 

https://www.virakesari.lk/article/187179

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ்--- இத்தாலி    1------0 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.