Jump to content

இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

கிருபன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

adminJune 25, 2024
dead-body.jpg

யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர்.

அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படை வீரர் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார்

அதனை அடுத்து மேலதிக கடற்படையினர் , மீனவர்களின் படகுக்கு சென்று , படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படை படகில் ஏற்றினர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும், அவர்களின் படகும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , காவல்துறையினருரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://globaltamilnews.net/2024/204643/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள்ள விட்டிட்டார்கள்! இனி என்னாகுமோ?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

011-1.jpg?resize=750,375&ssl=1

உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.

இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்திய இழுவைப் படகை கைது செய்ய முற்பட்டபோது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடற்படை வீரர் உயிரிழந்துள்ள நிலையில் எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை.

இந்திய மீனவர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் உங்கள் கடல் எல்லையைத்  தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம்.

அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காக கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1389598

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது இதனை கொஞ்சம் கவனிக்க வேண்டி வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி களவு எடுக்க வருகின்ற கள்ளர்கள் மீது இனி நடவடிக்கைகள் இறுகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

large.IMG_6796.jpeg.fcb64e1526c491283059

  • Haha 4
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6796.jpeg.fcb64e1526c491283059

தமிழக கட்சிகளின் பிரச்சார வீடியோக்கள் இணைப்புகள் யாழில் தடைசெய்யப்பட்டதுபோல் தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ஒரு கட்சியை பற்றியே வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி உண்டா..?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழக கட்சிகளின் பிரச்சார வீடியோக்கள் இணைப்புகள் யாழில் தடைசெய்யப்பட்டதுபோல் தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ஒரு கட்சியை பற்றியே வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி உண்டா..?

கருத்துப்படம் போட்டுவிட்டு அதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டும் என்றால், தொடர்ந்து வரும் கருத்தாடலுக்கு நான் பதில் கொடுக்க வேண்டி வரும். அது இன்னும் ஒரு ஆக்கத்தை  உருவாக்குவதற்கு எனக்கு சிரமத்தைத் தரலாம், நேர விரயத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் கூடுதலாக எனது கருத்துப்படங்களுக்கு நான் விளக்கம் அளிப்பதில்லை.

தமிழக அரசியலில் அதிக ஈடுபாடு எனக்கு இல்லை. நகைச்சுவைக்காக எப்போதாவது கிறுக்குவது உண்டு. ஆனால் சீமான் விடயம் வேறு. அவர் எங்களது பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் பார்க்கிறார். அதைக்கூட விட்டுவிட்டுப் போய்விடலாம். எங்களது கடல் விவகாரத்தில் மூக்கை நுளைக்கும் போது என்னால் பேசாமல் இருக்க முடியாது.

றோலர் மூலம்  மீன்களைப் பிடிக்கும் போது, மீன் வளங்களே அழிந்து போகின்றன. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள கடல் வளங்களை ஆழ்கடல் மீன்பிடி மூலம் அழித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் மீன் பிடிப்பதற்காக வேறு நாடுகளின் எல்லைக்குள் உள்ள கடல்களின்   புகுந்து, அந்தந்த நாட்டு மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிப்பது மட்டுமல்லாது அவர்களது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள்.

கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததால்தான் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிரம்மையை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வரும் இடங்களோ   நெடுந்தீவு, காங்கேசன்துறை, பருத்தித்துறைபோன்ற கடல் பகுதிகளாக இருக்கின்றன. தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், வீதிக்கு வந்து போராடுகிறார்கள், இந்திய, இலங்கை அரசுகளுக்கு அறிக்கை தருகிறார்கள்.

இங்கே சீமானின் பேச்சுக்கள், தமிழக மீனவர்களை உசுப்பேற்றி விடும் வகையில்தான் இருக்கின்றன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைக் காண்பித்து, “நான் இவரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவன். நெய்தல்படையை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன். ஆறு பேர் போகும் படகில் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்து ஏத்து. தொட்டால் தூக்கு…” என்றெல்லாம் பேசுகிறார்இங்கே பிரபாகரனைக் காட்டி ஈழத்தமிழர்களுக்கு சீமான் ஊறு செய்கிறார் என்பது வெளிச்சமாகவே தெரிகிறது.

முன்பும் ஒரு தடவை கருத்தொன்றுக்கு எழுதியிருந்தேன். மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். தமிழக அரசியலில் சீமான் என்ன செய்கிறார் என்பதோ மேடையில் தனக்கு வேண்டாதவர்களை ஏக வசனத்தில் அவர் பேசுவதோ, அவரது கடந்து வந்த அரசியல் பாதைகளோ எனக்குத் தேவையில்லாதது. ஈழத்து மக்களின் பிரச்சனைகளை வைத்து, அவர்களின் போராட்ட எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் பயன் படுத்தி அரசியல் நடாத்துவதும், ஈழத்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதும் தொடருமாயின் என்னால் முடிந்த சிறிய வேலையான சீமானுக்கு எதிரான கருத்துப்படங்கள் வரும். அது சிலருக்கு கசப்பாகவும் என்மேல் வெறுப்பையும் தரலாம். 

சீமானின் கட்சியைப்பற்றி என்னிடம் கருத்துக்கள் இல்லை. அவர் தனித்தோ அல்லது தம்பி தளபதி விஜய்யோடு சேர்ந்தோ ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானாலும் எனக்கு எந்தவித உணர்வுகளும் இருக்கப் போவதில்லை. தமிழகத் தலைவர்களாலும், முதலமைச்சர்களாலும் ஈழத்தமிழர்களது பிரச்சனைகளை முடித்து வைக்க முடியாது என்பதை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நிறைய ப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை வைத்து அவர்கள் தங்களது அரசியலைச் செய்யட்டும். எங்கள் ஈழ மீனவர்களுக்கு அவர்கள் துன்பம் செய்யாமல் இருக்கட்டும்.

  • Like 11
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

அருமை, அருமை, அருமை!

நீங்கள் சொல்வது மிகச் சரி ஐயா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

றோலர் மூலம்  மீன்களைப் பிடிக்கும் போது, மீன் வளங்களே அழிந்து போகின்றன. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள கடல் வளங்களை ஆழ்கடல் மீன்பிடி மூலம் அழித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் மீன் பிடிப்பதற்காக வேறு நாடுகளின் எல்லைக்குள் உள்ள கடல்களின்   புகுந்து, அந்தந்த நாட்டு மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிப்பது மட்டுமல்லாது அவர்களது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள்.

றோலர் மூலமான மீன்பிடிக்கு தடை செய்யப்பட்ட லைலா வலை என்ற வலையை பயன்படுத்தி ஆழங்குறைந்த பாக்குநீரிணைக் கடலின் அடி மடி வரை வழித்துத் துடைப்பதால் மீன் குஞ்சுகளில் இருந்து பவளப்பாறைகள் வரை அழிக்கப்படுகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழக கட்சிகளின் பிரச்சார வீடியோக்கள் இணைப்புகள் யாழில் தடைசெய்யப்பட்டதுபோல் தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ஒரு கட்சியை பற்றியே வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி உண்டா..?

இந்த விசைப்படகுகளெல்லாம் ஆளும் கட்சி பிரமுகர்களின் பினாமிகளுடையது என்று எல்லோருக்குமே தெரியும்போது இங்கு ஓரிருவருக்கு மாத்திரம்தான் கபித்தான் சொன்னமாதிரி ஒரே கால் உயருது!! என்ன செய்யிறது யாழ் களம் சிலருக்கு அறிவாளிகளென்று கொம்பு சீவி விட்டிருக்கிறது!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

கருத்துப்படம் போட்டுவிட்டு அதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டும் என்றால், தொடர்ந்து வரும் கருத்தாடலுக்கு நான் பதில் கொடுக்க வேண்டி வரும்.

உங்களிடம் நான் விளக்கம் கேட்கவில்லை.. நான் யாழை நோக்கித்தான் அந்த கேள்வியை முன்வைத்திருக்கிறேன்..

14 hours ago, Kavi arunasalam said:

தமிழக அரசியலில் அதிக ஈடுபாடு எனக்கு இல்லை. நகைச்சுவைக்காக எப்போதாவது கிறுக்குவது உண்டு. ஆனால் சீமான் விடயம் வேறு. அவர் எங்களது பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் பார்க்கிறார்.

சீமான் மட்டும்தான் எங்களது பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறாரா?சீமான் பேசினால் மட்டும்தான் உங்களுக்கு அரசியல் லாபமா..? சீமானுக்கு முன்னாடியே பலவருடங்களில் இருந்து இன்றுவரை வைகோ, தொல்திருமாவளவன், திமுக, அதிமுக, ராமதாஸ்,வேல்முருகன்,ect.. செய்வதெல்லாம்  தக்காளி தொக்கா..? சீமானுக்கு மட்டும்தான் யாழில் நக்கல் நையாண்டி கருத்துக்கள் கருத்துபடங்கள் வரும் அனுமதிக்கப்படுமா..? சீமான் என்று வந்தால் இங்கு பலருக்கு தமிழக அரசியலில் ஈடுபாடு வந்துவிடும் மற்றும்படி தமிழக அரசியலில் அவர்கள் நவதுவார்ங்களையும் பொத்திக்கொண்டு தீக்கோழிபோல் தலையை மண்ணில் புதைத்துவிடுவார்கள்..

14 hours ago, Kavi arunasalam said:

, ஈழத்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதும்

லங்காபுவத்துபோல் பொய்யை மூலதனமாக்கி உங்கள் வெறுப்பை போகிறபோக்கில் அடித்து விட்டிருக்கிறீர்கள்.. யாழில் எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் பேபிகள் அல்ல.. 

14 hours ago, Kavi arunasalam said:

சீமானின் கட்சியைப்பற்றி என்னிடம் கருத்துக்கள் இல்லை. அவர் தனித்தோ அல்லது தம்பி தளபதி விஜய்யோடு சேர்ந்தோ ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானாலும் எனக்கு எந்தவித உணர்வுகளும் இருக்கப் போவதில்லை. தமிழகத் தலைவர்களாலும், முதலமைச்சர்களாலும் ஈழத்தமிழர்களது பிரச்சனைகளை முடித்து வைக்க முடியாது என்பதை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கருத்துக்கள் இல்லாமல் தான் திரிக்கு திரி சீமானுக்கு படங்கள் வரைகிறீர்கள்.. நம்புகிறோம்.. 

14 hours ago, Kavi arunasalam said:

.

றோலர் மூலம்  மீன்களைப் பிடிக்கும் போது, மீன் வளங்களே அழிந்து போகின்றன. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள கடல் வளங்களை ஆழ்கடல் மீன்பிடி மூலம் அழித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் மீன் பிடிப்பதற்காக வேறு நாடுகளின் எல்லைக்குள் உள்ள கடல்களின்   புகுந்து, அந்தந்த நாட்டு மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிப்பது மட்டுமல்லாது அவர்களது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள்.

கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததால்தான் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிரம்மையை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வரும் இடங்களோ   நெடுந்தீவு, காங்கேசன்துறை, பருத்தித்துறைபோன்ற கடல் பகுதிகளாக இருக்கின்றன. தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், வீதிக்கு வந்து போராடுகிறார்கள், இந்திய, இலங்கை அரசுகளுக்கு அறிக்கை தருகிறார்கள்.

இதுக்கு ஸ்டாலினுக்கு மோடிக்கு கருணாநிதிக்கு ஜெயலிதாக்கு வைகோவுக்கு, ராமதாசுக்கு, திருமாக்கு என்று தலா ஒவ்வொரு கருத்துப்படம் போட்டுவிடுங்கோ.. சீமானுக்கு அல்ல.. ஆட்சியில் இருந்தவர்கள் இருப்பவர்கள், பங்கெடுத்தவர்கள் பங்கெடுப்பவர்கள் இவர்களே..

14 hours ago, Kavi arunasalam said:

.

இங்கே சீமானின் பேச்சுக்கள், தமிழக மீனவர்களை உசுப்பேற்றி விடும் வகையில்தான் இருக்கின்றன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைக் காண்பித்து, “நான் இவரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவன். நெய்தல்படையை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன். ஆறு பேர் போகும் படகில் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்து ஏத்து. தொட்டால் தூக்கு…” என்றெல்லாம் பேசுகிறார்இங்கே பிரபாகரனைக் காட்டி ஈழத்தமிழர்களுக்கு சீமான் ஊறு செய்கிறார் என்பது வெளிச்சமாகவே தெரிகிறது.

தமிழ்நாட்டில் நிறைய ப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை வைத்து அவர்கள் தங்களது அரசியலைச் செய்யட்டும். எங்கள் ஈழ மீனவர்களுக்கு அவர்கள் துன்பம் செய்யாமல் இருக்கட்டும்.

ஆமியை அடித்த மீனவன் சீமான் உசுப்பேத்திதான் நான் அடிச்சேன் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா? அவனுக்கும் அந்த ஆமிக்காரனுக்கும் என்ன தள்ளுமுள்ளோ..? யாருக்கும் ஏன் என்று தெரியாது ஊரில் முன்பு இயக்கம் றோட்டில் ஆமிக்கு குண்டெறியும்போது கண்டபாட்டுக்கு சுட்டுவிட்டு செத்த அப்பாவி மக்களை குண்டெறிந்த புலிகள் என்று சொல்வதுபோல் இருக்கு உங்கள் உருட்டும் பிரட்டும்.. எதோட எதை கோத்து விடுறியள் உங்கள் வெறுப்பை நியாயப்படுத்த..

ஒரு சிங்கள ஆமி செத்ததுக்கு எவ்வளவு ரத்தம் துடிக்குது உங்களுக்கு.. ஒரு சகதமிழனுக்கு நக்கல் நையாண்டி.. ம்ம்ம்… காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.. எப்பவுமே பல்வீனமானவர்களைத்தான் எல்லோரும் நக்கலடிப்பார்கள்.. ஒரு வகுப்பில் கூட ஏழைமாணவன் அல்லது படிப்பு கொஞ்சம் குறைவான மாணவனைத்தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.. இதுவே அவனிடம் பணம் இருந்தால் அல்லது ஆஜானபாகுவாக இருந்தால் மூச்சும் காட்டமாட்டார்கள்..இது மனித இனத்தின் உளவியல்.. இங்கு யாழிலும் பலர் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சிகளை விட்டு விட்டு சீமானை பிடித்து தொங்கும் காரணமும் அதுதான்..

காலம் மாறும் அப்போ சந்திப்போம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
தவறான செய்தியான ஒரு வரிநீக்க..
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களிடம் நான் விளக்கம் கேட்கவில்லை.. நான் யாழை நோக்கித்தான் அந்த கேள்வியை முன்வைத்திருக்கிறேன்..

சீமான் மட்டும்தான் எங்களது பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறாரா?சீமான் பேசினால் மட்டும்தான் உங்களுக்கு அரசியல் லாபமா..? சீமானுக்கு முன்னாடியே பலவருடங்களில் இருந்து இன்றுவரை வைகோ, தொல்திருமாவளவன், திமுக, அதிமுக, ராமதாஸ்,வேல்முருகன்,ect.. செய்வதெல்லாம்  தக்காளி தொக்கா..? சீமானுக்கு மட்டும்தான் யாழில் நக்கல் நையாண்டி கருத்துக்கள் கருத்துபடங்கள் வரும் அனுமதிக்கப்படுமா..? சீமான் என்று வந்தால் இங்கு பலருக்கு தமிழக அரசியலில் ஈடுபாடு வந்துவிடும் மற்றும்படி தமிழக அரசியலில் அவர்கள் நவதுவார்ங்களையும் பொத்திக்கொண்டு தீக்கோழிபோல் தலையை மண்ணில் புதைத்துவிடுவார்கள்..

லங்காபுவத்துபோல் பொய்யை மூலதனமாக்கி உங்கள் வெறுப்பை போகிறபோக்கில் அடித்து விட்டிருக்கிறீர்கள்.. யாழில் எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் பேபிகள் அல்ல.. 

கருத்துக்கள் இல்லாமல் தான் திரிக்கு திரி சீமானுக்கு படங்கள் வரைகிறீர்கள்.. நம்புகிறோம்.. 

இதுக்கு ஸ்டாலினுக்கு மோடிக்கு கருணாநிதிக்கு ஜெயலிதாக்கு வைகோவுக்கு, ராமதாசுக்கு, திருமாக்கு என்று தலா ஒவ்வொரு கருத்துப்படம் போட்டுவிடுங்கோ.. சீமானுக்கு அல்ல.. ஆட்சியில் இருந்தவர்கள் இருப்பவர்கள், பங்கெடுத்தவர்கள் பங்கெடுப்பவர்கள் இவர்களே..

ஆமியை அடித்த மீனவன் சீமான் உசுப்பேத்திதான் நான் அடிச்சேன் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா? அவனுக்கும் அந்த ஆமிக்காரனுக்கும் என்ன தள்ளுமுள்ளோ..? இத்தனைக்கும் இது கடலில் நடக்கவில்லை.. கைது செய்துவைக்கப்பட்ட இடத்தில் நடந்திருக்கு.. அங்கு சாப்பாட்டு பிரச்சினை இருந்திருக்கலாம்,டாய்லட் பிரச்சினையில் அடிபட்டிருக்கலாம்.. யாருக்கும் ஏன் என்று தெரியாது ஊரில் முன்பு இயக்கம் றோட்டில் ஆமிக்கு குண்டெறியும்போது கண்டபாட்டுக்கு சுட்டுவிட்டு செத்த அப்பாவி மக்களை குண்டெறிந்த புலிகள் என்று சொல்வதுபோல் இருக்கு உங்கள் உருட்டும் பிரட்டும்.. எதோட எதை கோத்து விடுறியள் உங்கள் வெறுப்பை நியாயப்படுத்த..

ஒரு சிங்கள ஆமி செத்ததுக்கு எவ்வளவு ரத்தம் துடிக்குது உங்களுக்கு.. ஒரு சகதமிழனுக்கு நக்கல் நையாண்டி.. ம்ம்ம்… காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.. எப்பவுமே பல்வீனமானவர்களைத்தான் எல்லோரும் நக்கலடிப்பார்கள்.. ஒரு வகுப்பில் கூட ஏழைமாணவன் அல்லது படிப்பு கொஞ்சம் குறைவான மாணவனைத்தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.. இதுவே அவனிடம் பணம் இருந்தால் அல்லது ஆஜானபாகுவாக இருந்தால் மூச்சும் காட்டமாட்டார்கள்..இது மனித இனத்தின் உளவியல்.. இங்கு யாழிலும் பலர் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சிகளை விட்டு விட்டு சீமானை பிடித்து தொங்கும் காரணமும் அதுதான்..

காலம் மாறும் அப்போ சந்திப்போம்..

கவி அருணாசலத்தின் AI படங்களுக்கெல்லாம் இவ்வளவு பதில் எழுதி நேரத்தை விரயமாக்க  வேண்டுமா? 

யாழ் களத்தில் சீமான் மீதான விமர்சனம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக வருகிறது. குழந்தையால்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். 

தமிழக மீனவர்களின் அத்துமீறலை சீமானுக்கெதிரான விடயமாக மாற்றும்போது மட்டுறுத்தினர் அதனைக் கண்டும் காணாமல் விடுகிறார்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்

LAW-300x200.jpg

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியான போதும், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்திருந்தார். எவ்வாறாயினும் கைது நடவடிக்கையின்போது, உயிரிழப்பொன்று ஏற்பட்டதால் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்படி 10 இந்திய மீனவர்களும் நேற்று (25) மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

https://thinakkural.lk/article/304609

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

கவி அருணாசலத்தின் AI படங்களுக்கெல்லாம் இவ்வளவு பதில் எழுதி நேரத்தை விரயமாக்க  வேண்டுமா? 

யாழ் களத்தில் சீமான் மீதான விமர்சனம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக வருகிறது. குழந்தையால்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். 

தமிழக மீனவர்களின் அத்துமீறலை சீமானுக்கெதிரான விடயமாக மாற்றும்போது மட்டுறுத்தினர் அதனைக் கண்டும் காணாமல் விடுகிறார்கள். 

சரியாக சொன்னீர்கள் .. இந்த விடயத்தில் அருணாச்சலம் மீது குறைபட ஏதுமில்லை.. அவர் வெறும் அம்புதான்.. சீமான் என்று வரும்போது மட்டும் எதிர்ப்பு நிலை எடுக்கும் மற்றைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்று வரும்போது மட்டும் நடுநிலை எடுத்து நக்கல் நையாண்டி சீண்டல் கருத்துக்களை சரியாக செய்ற்பட்டு நீக்கும் யாழ்மீதுதான்(ஜ மீன் மட்டிறுத்தினர்கள்) எமது வருத்தமும் கோபமும் கண்டனமும்..

Link to comment
Share on other sites

On 25/6/2024 at 02:01, ஏராளன் said:

தமிழக மீனவர்கள் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள்ள விட்டிட்டார்கள்! இனி என்னாகுமோ?

ஒரு விதத்தில் எம்மீனவர்கள் நன்மை பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

15 வருடங்களில் காலம் எப்படி மாறி விட்டது!

எம் கடல்பரப்புகளில் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிர்களையும் பறிப்பதில் முன்னுக்கு நின்ற இலங்கை கடற்படை இன்று வாழ்வாதாரத்தை காக்கின்றவர்களாக எம் மீனவர்களால் போற்றப்படும் ஒரு காலத்தில் நாம் வந்து நிற்கின்றோம்.

15 ஆண்டுகளுக்கு முன் உடலில் குண்டைக் கட்டி தற்கொடை தாக்குதல் மூலம் நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்களை தமிழ் கடல் பரப்புகளில் இருந்து அகற்றிய அதே இனம் இன்று கடற்படை சிப்பாயின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவுக்கும் நிலையில் வந்து நிற்கின்றது.

சிங்களமும், இந்தியமும்,  இவர்களுக்கு எடுபிடிகளாக இருக்கும் டக்ளஸ் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் இந்த 'இந்திய மீனவக் கொள்ளையர்களின்' அத்துமீறல்களை கட்டுப்படுத்த காத்திரமான செயல்களை செய்யாமல், திரைமறைவில் ஊக்குவிப்பதும் இதே நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான்.

காலம் எவ்வளவு கொடுமையானது.

எம் அரசியல் நிலை அதை விடக் கொடுமையானது

Edited by நிழலி
ஒரு பந்தி சேர்க்க
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

15 ஆண்டுகளுக்கு முன் உடலில் குண்டைக் கட்டி தற்கொடை தாக்குதல் மூலம் நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்களை தமிழ் கடல் பரப்புகளில் இருந்து அகற்றிய அதே இனம் இன்று கடற்படை சிப்பாயின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவுக்கும் நிலையில் வந்து நிற்கின்றது.

தமிழர்பகுதியின் கடல்வள கொள்ளையை ஓரளவாவது தடுக்க வேறு என்னதான் வழி அவர்கள் வசம் இருக்கிறது?

காலத்தோடு ஓடுவதை தவிர அவர்கள் கைவசம் ஏதுமில்லை,

எம்மீது போர் தொடுத்த இனமென்று அவர்கள் தயவு தேவையில்லை என்று  வடதமிழீழ மீனவர்கள் புறக்கணித்தால், இலங்கை கடற்படையும் தமிழர்பகுதிதானே எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று அவர்கள் பாட்டில் இருந்தால்

பல ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் நெடுந்தீவு, மணற்காடு, பருத்திதுறை பொலிகண்டி,காங்கேசன்துறை, தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு  வலைகளை உலர்த்திவிட்டு சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி புறப்படுவார்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

15 minutes ago, valavan said:

வளவன்,

நான் இது தொடர்பாக தமிழ் மீனவர்களைக் குறை கூறியுள்ளேனா?

இலங்கை, இந்திய, மற்றும் தமிழக அரசுகள் இந்த பிரச்சனையை தீர்க்க காத்திரமான செயற்பாடு எதையும் செய்வதில்லை. அத்துடன் திரை மறைவில் இதனை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். 

இந்த நிலையை தோற்றுவிக்க காரணம் என்னவென்று பெரிதாக ஆராயக் கூடத் தேவையில்லை. எப்படியாவது தமிழக மீன் கொள்ளையர்களையும் எம் தாயக மீனவர்களையும் மோதல் நிலையிலேயே வைத்து இருப்பது அவர்களிற்கு தேவையானது. இதன் மூலம் தமிழகத்துடனான தாயக மக்களின் உறவில் சில ஆழமான கீறல்களை உருவாக்கி கொள்வது அவர்களுக்கு பல விதங்களில் அனுகூலமாக அமைகின்றது.

இந்த நிலையைத் தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்த நிலையைத் தான் நான் கொடுமையான கால மாற்றம் என்று எழுதியுள்ளேன்.

நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kavi arunasalam said:

கருத்துப்படம் போட்டுவிட்டு அதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டும் என்றால், தொடர்ந்து வரும் கருத்தாடலுக்கு நான் பதில் கொடுக்க வேண்டி வரும். அது இன்னும் ஒரு ஆக்கத்தை  உருவாக்குவதற்கு எனக்கு சிரமத்தைத் தரலாம், நேர விரயத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் கூடுதலாக எனது கருத்துப்படங்களுக்கு நான் விளக்கம் அளிப்பதில்லை.

தமிழக அரசியலில் அதிக ஈடுபாடு எனக்கு இல்லை. நகைச்சுவைக்காக எப்போதாவது கிறுக்குவது உண்டு. ஆனால் சீமான் விடயம் வேறு. அவர் எங்களது பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் பார்க்கிறார். அதைக்கூட விட்டுவிட்டுப் போய்விடலாம். எங்களது கடல் விவகாரத்தில் மூக்கை நுளைக்கும் போது என்னால் பேசாமல் இருக்க முடியாது.

றோலர் மூலம்  மீன்களைப் பிடிக்கும் போது, மீன் வளங்களே அழிந்து போகின்றன. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள கடல் வளங்களை ஆழ்கடல் மீன்பிடி மூலம் அழித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் மீன் பிடிப்பதற்காக வேறு நாடுகளின் எல்லைக்குள் உள்ள கடல்களின்   புகுந்து, அந்தந்த நாட்டு மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிப்பது மட்டுமல்லாது அவர்களது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள்.

கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததால்தான் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிரம்மையை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வரும் இடங்களோ   நெடுந்தீவு, காங்கேசன்துறை, பருத்தித்துறைபோன்ற கடல் பகுதிகளாக இருக்கின்றன. தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், வீதிக்கு வந்து போராடுகிறார்கள், இந்திய, இலங்கை அரசுகளுக்கு அறிக்கை தருகிறார்கள்.

இங்கே சீமானின் பேச்சுக்கள், தமிழக மீனவர்களை உசுப்பேற்றி விடும் வகையில்தான் இருக்கின்றன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைக் காண்பித்து, “நான் இவரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவன். நெய்தல்படையை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன். ஆறு பேர் போகும் படகில் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்து ஏத்து. தொட்டால் தூக்கு…” என்றெல்லாம் பேசுகிறார்இங்கே பிரபாகரனைக் காட்டி ஈழத்தமிழர்களுக்கு சீமான் ஊறு செய்கிறார் என்பது வெளிச்சமாகவே தெரிகிறது.

முன்பும் ஒரு தடவை கருத்தொன்றுக்கு எழுதியிருந்தேன். மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். தமிழக அரசியலில் சீமான் என்ன செய்கிறார் என்பதோ மேடையில் தனக்கு வேண்டாதவர்களை ஏக வசனத்தில் அவர் பேசுவதோ, அவரது கடந்து வந்த அரசியல் பாதைகளோ எனக்குத் தேவையில்லாதது. ஈழத்து மக்களின் பிரச்சனைகளை வைத்து, அவர்களின் போராட்ட எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் பயன் படுத்தி அரசியல் நடாத்துவதும், ஈழத்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதும் தொடருமாயின் என்னால் முடிந்த சிறிய வேலையான சீமானுக்கு எதிரான கருத்துப்படங்கள் வரும். அது சிலருக்கு கசப்பாகவும் என்மேல் வெறுப்பையும் தரலாம். 

சீமானின் கட்சியைப்பற்றி என்னிடம் கருத்துக்கள் இல்லை. அவர் தனித்தோ அல்லது தம்பி தளபதி விஜய்யோடு சேர்ந்தோ ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானாலும் எனக்கு எந்தவித உணர்வுகளும் இருக்கப் போவதில்லை. தமிழகத் தலைவர்களாலும், முதலமைச்சர்களாலும் ஈழத்தமிழர்களது பிரச்சனைகளை முடித்து வைக்க முடியாது என்பதை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நிறைய ப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை வைத்து அவர்கள் தங்களது அரசியலைச் செய்யட்டும். எங்கள் ஈழ மீனவர்களுக்கு அவர்கள் துன்பம் செய்யாமல் இருக்கட்டும்.

யாழில் எங்கே வேண்டுமானாலும் எந்த திரியிலும் சீமானை நக்கல் நையாண்டி செய்து எழுதலாம் என்று பத்து பேர் ஆதரவு தந்து இருக்கிறார்கள் அதில் மோகனும் ஒருவர். ம்ம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரியாக சொன்னீர்கள் .. இந்த விடயத்தில் அருணாச்சலம் மீது குறைபட ஏதுமில்லை.. அவர் வெறும் அம்புதான்.. சீமான் என்று வரும்போது மட்டும் எதிர்ப்பு நிலை எடுக்கும் மற்றைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்று வரும்போது மட்டும் நடுநிலை எடுத்து நக்கல் நையாண்டி சீண்டல் கருத்துக்களை சரியாக செய்ற்பட்டு நீக்கும் யாழ்மீதுதான்(ஜ மீன் மட்டிறுத்தினர்கள்) எமது வருத்தமும் கோபமும் கண்டனமும்..

தமிழக அரசியலில் நாம் தலையிடக்கூடாது என்பது பொது விதி. 

அந்தப் பொது  விதி,  சீமான் அல்லது நாதக என்று வரும்போது செல்லாக்காசாகிவிடும். 
😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

15 வருடங்களில் காலம் எப்படி மாறி விட்டது!

எம் கடல்பரப்புகளில் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிர்களையும் பறிப்பதில் முன்னுக்கு நின்ற இலங்கை கடற்படை இன்று வாழ்வாதாரத்தை காக்கின்றவர்களாக எம் மீனவர்களால் போற்றப்படும் ஒரு காலத்தில் நாம் வந்து நிற்கின்றோம்.

15 ஆண்டுகளுக்கு முன் உடலில் குண்டைக் கட்டி தற்கொடை தாக்குதல் மூலம் நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்களை தமிழ் கடல் பரப்புகளில் இருந்து அகற்றிய அதே இனம் இன்று கடற்படை சிப்பாயின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவுக்கும் நிலையில் வந்து நிற்கின்றது.

சிங்களமும், இந்தியமும்,  இவர்களுக்கு எடுபிடிகளாக இருக்கும் டக்ளஸ் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் இந்த 'இந்திய மீனவக் கொள்ளையர்களின்' அத்துமீறல்களை கட்டுப்படுத்த காத்திரமான செயல்களை செய்யாமல், திரைமறைவில் ஊக்குவிப்பதும் இதே நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான்.

காலம் எவ்வளவு கொடுமையானது.

எம் அரசியல் நிலை அதை விடக் கொடுமையானது

எங்கள் பிழையான தெரிவுகள்,  சந்தர்ப்பங்களைச் சரியாகக் கையாளாமை போன்ற தவறுகளின் விளைவுதான் எங்கள் தற்போதைய நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழ் மீனவர் தலைவர்கள்  இலங்கை கடற்படை வீரரின்  இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவருடைய ஊருக்கு சென்றுள்ளனராம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 களில் புல்மோட்டை கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பல்கள் அங்குள்ள வளங்களை எடுப்பதற்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்கியதாக கேள்விப்பட்டுள்ளேன், தற்போது கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை உதவுகின்ற நிலை நல்லவிடயம், ஆனால் இந்த தமிழக மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள் இவர்களது முதலாளிகள் அரசியல்வாதிகள் என கூறுகிறார்கள்.

முதலாளிகளுக்கு பணத்தினை தவிர எந்த கொள்கையும் இல்லை ஆனால் மீனவர்களின் நிலை அப்படி இல்லை, ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த கடல் வள அழிப்பிற்கு துணை போகிறார்கள், கடல் வளம் அழிந்து மீன் வளம் குறைந்து நட்டம் ஏற்பட்டால் முதலாளிகள் வேறு தொழில் தொடங்கிவிடுவார்கள் ஆனால் அவர்களிற்கு உடந்தையாக உள்ள மீனவர்களின் நிலைதான் மோசமாகும்.

உலகின் பலவீனமானவர்களின் வழங்கள் சூறையாடப்படுவதொன்றும் புதில்லை கடல் வளம் அதிகமுள்ள சோமாலியாவில் உலக நாடுகள் அதன் வளங்களை சூறையாட காரணமாக 1991 இல் அதன் அரசு உடைவு காரணமாக இருந்தது, அதனை படுத்தி பலர் அவர்களது வழங்களை சுரண்டியதால் தோற்ற்ம பெற்றதே சோமாலியா கடற்கொள்ளையர் ஆனால் உலகம் அவர்களுக்கு இழைத்த அநீதியினை மறிஅத்து அவர்களை கடற்கொள்ளையர்களாகப்பார்க்கின்றது.

இன்று எம்து மக்களின் நிலமைக்கு காரணமானவர்களே இந்த கடற்படையினரும்தான், இதில் இலங்கை கடற்படையினர் தவிர்த்து இரண்டு நாட்டு மீனவர்களும் பேசி தீர்வுகாண்பதுதான் பொருத்தம், ஆனால் இரண்டு தரப்பிலும் சிந்தித்து செயற்பட யாரும் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம்.

இந்த ரோலர்களின் வருகையாலே மீன் வளம் அருகி சாதாரண மீன்வர்களால் ஆளம் குறைந்த பகுதிகளில் தமது வளங்களை கொண்டு தொழில் செய்ய முடியாமலே இந்த முதலாளிகளுக்கு வேலை செய்கிறார்கள், அவர்களுக்கும் குடும்பம் உள்ளது அவர்கள் வேலைக்கு சென்றால்தான் அவர்கள் குடும்பமும் வாழும், இரண்டு தரப்பும் பேசி தீர்வு காணவேண்டிய விடயம்.

எமது பிரச்சினையினை நாம்தான் தீர்க்க முடியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடி கொள்ளை.  நாங்கள் இலங்கைகக்கு மீன் கொள்ளையடிக்க இலங்கையின் தமிழர்களின் பிரதேசங்களுக்கு வருகின்ற போது  இலங்கையில் இருந்து எந்த ஒரு எதிர் நடவடிக்கையும் எடுக்ககூடாது என்று உறுதியாக தமிழ்நாட்டு மீனவர்களும் திமுக தொடங்கி சீமான் கட்சிவரை உறுதியாக செயல்படுகின்ற போது தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேசி தான் பிரச்சனை  தீர்க்க வேண்டும் என்று  பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பது  வளவன் சொன்னது போன்று  தமிழ்நாட்டு மீனவர்கள் நெடுந்தீவு மணற்காடு பருத்திதுறை பொலிகண்டிகாங்கேசன்துறை தொண்டைமானாறு கரைகளில் வந்து அலுப்பு நீங்க படுத்து சமைத்து சாப்பிட்டு பியரும் குடித்து  வலைகளை உலர்த்திவிட்டு புத்துணர்வு பெற்று  சாவகாசமாக மீண்டும் இந்தியா நோக்கி மகிழ்ச்சியாக புறப்படுவார்கள்..

அவர்கள் பேச்சு வார்த்தையில் சொன்னார்களாம் கொள்ளையடிக்க நாங்கள் வருகின்ற போது கண்டுகொள்ள கூடாது.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.