Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன.

எதுவாக இருந்தாலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனத்தை முழுமையாக கொடுக்கலாம் என இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு வந்த நிலையில், அதன் நிறை மற்றும் குறைகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியானது

இந்தியன் 2 கதை: 'பார்க்கிங் டாக்ஸ்' எனும் யூடியூப் சேனலை சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் உள்ளிட்டோருடன் நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்கின்றனர். ஆனால், அதன்மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்றதும், இந்தியன் தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்குகின்றனர். அதை தாய்பெய் நாட்டில் உள்ள காளிதாஸ் ஜெயராம் பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்கிறார். அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தாவை நெடுமுடி வேணுவின் மகனான பாபி சிம்ஹா கைது செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ளும் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: கதை ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் நிச்சயம் இந்திய மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் இந்தியன் 2. இயக்குநர் ஷங்கர் அதற்காக மெனக்கெட்டு கதையையும் இந்தியன் தாத்தா மட்டுமே இந்த நாட்டை திருத்த முடியாது இளைஞர்கள் உங்கள் வீட்டில் உள்ள களைகளை பிடுங்க முயற்சியுங்கள் என்கிற இரு வழி பாதை கதைக்கு நல்ல வலு சேர்த்துள்ளது. ஷங்கரின் புத்திசாலித்தனமும் அங்கே விளையாடி இருக்கிறது. ஆனால், அதை படமாக்கிய விதத்தில் ஷங்கரின் புத்திசாலித்தனம் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறியுள்ளது. இந்தியன் தாத்தாவையும் அந்நியனையும் மிக்ஸ் செய்து விட்டாரே ஷங்கர் என்று தான் பல இடங்களில் தோன்றுகிறது. விவேக்கின் ஒரு சில காமெடிகள் வொர்க்கவுட் ஆகிறது. ஆனால், பாபி சிம்ஹா காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. வர்மக் கலையை லேசாக இந்தியன் படத்தில் தொட்டுக் கொண்ட ஷங்கர் இந்த படத்தையே அதை மட்டுமே நம்பி எடுத்திருப்பது ஆடியன்ஸை திருப்திப்படுத்தவில்லை. அதிலும், வர்மக் கலை மூலமாக தொங்கியிருக்கும் வயதான உடம்பை ஒரு நொடியில் சிக்ஸ்பேக் உடம்பாக மாற்றும் காட்சிகளை ஷங்கர் எதை நம்பி வைத்தார் என தெரியவில்லை.

பாசிட்டிவ்: இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் அடிக்கடி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல கமல்ஹாசன் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளை செய்திருப்பதும், அந்த மெட்ரோ டிரெயின் ஃபைட் சீனும் மாஸ். விஜய் மல்லையாவை இந்த படத்திலும் போட்டு பொளந்துள்ளனர். கேலண்டர் சாங் குறியீடு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோடீஸ்வரர் என அவரை காட்டியதும், பெரிய திருமணத்தை குஜராத்தை சேர்ந்த நபர் நடத்துவதும், அவரது வீட்டில் தங்க டாய்லெட் உள்ளதாக காட்டும் காட்சிகள் எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது. மார்ஸ் கிரகத்துக்கு செல்வதாக இன்னொரு கோடீஸ்வரர் ஜீரோ கிராவிட்டியில் பயிற்சி செய்யும் இடத்திற்கே சென்று கமல்ஹாசன் அவரும் பறந்துக் கொண்டே சண்டை போட்டு அவரை வர்மக் கலை மூலமாக போட்டுத் தள்ளுவதும் சிறப்பு. இரண்டாம் பாதியில் சித்தார்த் உள்ளிட்ட அவரது யூடியூப் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதனால் அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளும் படத்திற்கு எமோஷனல் கனெக்ட்டை நன்றாகவே கடத்துகின்றன. கமல்ஹாசனை தாண்டி சமுத்திரகனியின் நடிப்பு சூப்பர். சித்தார்த் முடிந்த வரை நடிக்க முயற்சித்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தியன் பட பின்னணி இசை பலம் சேர்க்கிறது.

நெகட்டிவ்: இந்தியன் தாத்தாவை காட்டுவதற்கு முன்பாக சித்தார்த் மற்றும் அவரது டீம் யூடியூப் மூலம் செய்யும் காட்சிகள் தொடங்கி கடைசியில் கிளைமேக்ஸில் வரும் டாம் அண்ட் ஜெர்ரி கேம் வரை சொதப்பலான திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை தியேட்டரில் சோதித்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புள்ளியான சகலகலா வல்லவன் என்கிற பெயரில் வரும் எஸ்.ஜே. சூர்யாவை விட்டு விட்டு மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை கமல்ஹாசன் போட்டுத் தள்ளுவது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. அடுத்த பாகத்தில் தான் அவருடன் மோத போகிறார் என தெரிகிறது. கம்பேக் இந்தியனில் தொடங்கும் படம் கோபேக் இந்தியனாக முடிவடைவதை போலவே இந்தியன் படத்தை பார்த்த உணர்வு இந்தியன் 2வில் குறைந்து விடுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே ரொம்பவே வீக்கான படமாக இந்தியன் 2 உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு இந்தியரும் இந்த படத்தை பார்த்து தங்கள் மனசாட்சி உறுத்தினாலே அதுதான் இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படும்.

https://tamil.filmibeat.com/reviews/kamal-haasans-indian-2-review-in-tamil-is-here-137447.html

w-in-tamil-is-here-137447.html

  • கருத்துக்கள உறவுகள்

“இந்தியன்… 2” …. சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்!! … முருகபூபதி.

MV5BZGU3ZWEzZTgtMDMxOC00MDAyLWE1ZmQtYmQw

திரைப்படம் விமர்சனம்! …… வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து, அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில் பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில்,

தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில்,

தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில், சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,

ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்து அதில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில்,

இந்திய தேசத்தில் நீடித்திருக்கும் ஊழலை, சொத்து சேகரிப்பை , கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து, கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது.

இந்த விமர்சனத்தை நான் எழுதும்போது, அது இன்னும் எத்தனை கோடியை தாண்டியிருக்கும் என்பது இங்கு அவசியமில்லை.

ஐநூறு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் உலகநாயகன் கமலின் சம்பளம் நூற்றி ஐம்பது கோடி ரூபா எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சங்கர் முன்னர் இயக்கிய ஜென்டில்மென் , முதல்வன் ( அக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்தவை ) இந்தியன் ( கமல் நடித்து 1996 இல் வெளியானது ) அந்நியன் ( விக்ரம் நடித்தது ) ஆகிய நான்கும் சமூகத்தில் அன்றாடம் நடக்கும் மோசடிகள், ஊழல்களுக்கு எதிராக பேசிய திரைப்படங்கள்.

அந்த வரிசையில் 1996 இல் வெளியான இந்தியனின் இரண்டாம் பாகம் எனச்சொல்லிக்கொண்டு 28 வருடங்களின் பின்னர் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

நான் வதியும் மெல்பனில் புறநகரமான மோர்வல் நகரத்தில் கடந்த 15 ஆம் திகதி இரவுக் காட்சிக்கு எனது மனைவியுடன் சென்றிருந்தேன்.

எனக்கு கடந்த 13 ஆம் திகதி பிறந்த தினம். அதனை முன்னிட்டு எனது இரண்டாவது மகள் பிரியாதேவி ஏற்பாடு செய்து தந்த பரிசுதான் இந்தியன் 2 இற்கான அனுமதிச்சீட்டு.

அன்று மோர்வல் திரையரங்கில் அந்தக்காட்சியை பார்த்தவர்கள் எங்களுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர்தான்!

28 வருடங்களுக்கு முன்னர் பார்த்த இந்தியன் திரைப்படம் தந்த திருப்தியை, இரண்டாவது இந்தியன் தரவில்லை, பலத்த ஏமாற்றத்தையே தந்தது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகின்றேன்.

சங்கரின் திரைப்படம் என்றாலே பிரமாண்டம் என்பதுதான் அடையாளம். ஆனால், அதனை அவர் கதையில் காண்பிக்காமல் காட்சிகளில் சித்திரிக்க முயன்றிருக்கிறார்.

இந்தியன் முதல் திரைப்படம் ஒரே குடும்பத்திற்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலிருந்த முரண்பாட்டை சித்திரித்தது . கமல் இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார்.

தந்தை சேனாதிபதியாக இந்தியன் தாத்தா வேடம் ஏற்று நடித்த அவருக்கு அப்போது தேசிய விருதும் கிடைத்தது.

இந்தியன் 2 , நான்கு குடும்பங்களுக்குள் நடக்கும் கதையை சொல்லியிருக்கிறது.

புதிய இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா ( கமல் ) – முதல் காட்சியிலேயே தான் 40 வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருப்பதாக சொல்கிறார்.

அடுத்துவரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியன் 3 வெளியாகவிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இதில் வரப்போகும் இந்தியன் தாத்தா, இருபது வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருக்கின்றேன் எனச்சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை ? !

தேசத்தை சுத்தப்படுத்துவதற்கு முன்னர் வீட்டை சுத்தப்படுத்தவேண்டும் என்ற தொனியில் பேசத்தொடங்கும் திரைக் கதைதான் இந்தியன் 2.

அதற்காக இந்தத்திரைப்படத்தில் நான்கு குடும்பங்களும் அங்கிருந்து போராடத் தொடங்கும் நான்கு இளம் தலைமுறையினரும் வருகிறார்கள்.

இந்நால்வரில் ஒரு இளம் யுவதியும், மூன்று இளைஞர்களும் இடம்பெறுகிறார்கள்.

இவர்களின் கதை தனியாகவும் தாய்வானில் தைப்பேயிலிருந்து வரும் இந்தியன் தாத்தா சேனாபதியின் கதை தனியாகவும் வந்து இணைகின்றது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த விமானம் தாய்வானில்தான் விபத்துக்குள்ளாகி அவரது உடல் காணாமல் போனது.

1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம், நாயகன் சேனாபதி ( தந்தை கமல் ) தனது மகன் சந்துருவை ( மகன் கமல் ) விமான நிலைய ஓடுபாதையில் தனது வர்மக்கலையினால் கொலைசெய்துவிட்டு தப்பிச் செல்வதாக முடிகிறது.

இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா சேனாபதி எங்கே இருக்கிறார்? என்பது தெரியாமல், இந்தியாவில் நிலவும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அந்த நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் சமூக வலைத்தள ஊடகம் ஊடாக (You tube Chenal ) தேடுகிறார்கள்.

இந்தியன் தாத்தா முற்றிலும் வித்தியாசமான தோற்றத்துடன் தாய்வான் தைப்பேயிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார்.

இதன் மூலம் அவரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறு அவதாரம் என காட்ட முனைகிறார்களா..? என்பது தெரியவில்லை!?

அவரை மீண்டும் கைதுசெய்வதற்காக 96 இல் அவரை கைதுசெய்ய முயன்று அவரின் வர்மக்கலை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியின் மகனாக ( பாபி சிம்கா ) பாதுகாப்புத்துறை அதிகாரியாக காத்திருக்கிறார்.

விமான நிலையத்தில் காத்திருக்கும் இவரது பார்வையில் மண்ணைத் தூவி விட்டு தப்பிவிடும் இந்தியன் தாத்தா, தனது வர்மக்கலை தாக்குதலின் மூலம் மேலும் சில ஊழல்வாதிகளையும் நிதிமோசடிகள் மூலம் முறைகேடாக சொத்து சேர்த்தவர்களையும் அதே வர்மக்கலை தாக்குதல் மூலம் சித்தப்பிரமை பிடிக்க வைத்து வாயில் நுரை கக்க பாட வைக்கிறார். தெருவிலே ஓட வைக்கிறார்.

அதில் ஒருவர் தங்க மாளிகையில் வாழ்ந்து தங்கத்தால் அமைக்கப்பட்ட மலகூடத்தை தனது பாவனைக்கு வைத்திருப்பவர்.

இந்திய மாநிலங்கள் அனைத்திலும் நடக்கும் ஊழல் மோசடிகளை, சொத்து சேகரிப்பை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட துப்பாக்கியோ, ஏ. கே. 47 இயந்திரத் துப்பாக்கியோ இந்தியன் தாத்தாவுக்கு தேவைப்படவில்லை.

கைவிரல்களே அவருக்குப்போதும்.

அவரிடம் இருக்கும் ஆயுதம் அது மாத்திரம்தான்.

அதற்காக இத்தனை பொருட் செலவில் பிரமாண்டமான ஒரு திரைப்படமா..?

நாட்டில் ஊழல் மோசடிகளை கண்டுபிடித்து ஒழிக்க முன்வரும், நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் தாய், தந்தை, மற்றும் உறவினர்கள் அந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டு, அரசுக்கு காட்டிக்கொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கும்போது அதில் ஒரு தாய் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள்.

அத்தோடு திரைக்கதையும், சென்ற திசையிலிருந்து முற்றாக மாறிவிடுகிறது.

அந்த ஒரு மரணமே அந்த இளம் தலைமுறையினரையும் அவர்களின் பின்னால் திரண்டு வந்த மக்களையும் நேர்மையை விரும்பிய இந்தியன் தாத்தாவுக்கு எதிராக மாறித் திருப்பிவிடுகிறது.

தற்கொலை செய்துகொண்ட தாயின் பூதவுடலுக்கும் கொள்ளி வைக்கும் உரிமை அந்த நேர்மையான மகனுக்கு இல்லாமல் செய்யப்படுகிறது.

அதற்கெல்லாம் இந்தியன் தாத்தாதான் காரணம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை தாக்குகின்றனர்.

“ சமூகம் இப்படித்தான் எதிர்மறையாகச் சிந்திக்கும். ஆனால், அது எவ்வாறு நேர்மறையாகச் சிந்திக்கவேண்டும் “ என்று சொல்ல வேண்டியவர்தான் திரைக்கதை எழுத்தாளர்.

இந்தியன் தாத்தா இறுதியில் கைதாகிறார். கைதுசெய்த அதிகாரியையும் அவர் தனது வர்மக்கலை தாக்குதலினால் உடல் ஊனமடையச் செய்துவிடுகிறார்.

அவரை குணப்படுத்தவேண்டுமானால், இந்தியன் தாத்தாவின் கைகளில் மாட்டப்பட்ட விலங்குகள் கழற்றப்பட வேண்டுமாம். அவரால் மட்டும்தான் அந்த இளம் அதிகாரியை குணப்படுத்த முடியுமாம்.

இந்தியன் தாத்தா, அந்த இளம் அதிகாரியை ஒரு அம்பூலன்ஸில் எடுத்துக்கொண்டு தப்பிச்செல்கிறார்.

இந்தியன் முதல் படத்தில் வந்த மூத்த அதிகாரி இந்தப்படத்திலும் வந்து ( நெடுமுடி வேணு ) சொல்கிறார்:

“ மீண்டும் திமிங்கிலம் கடலுக்குச் சென்றுவிட்டது “

திமிங்கிலம் கரைக்கு வந்தால், என்னவாகும் ? என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.

இந்த இலட்சணத்தில், இந்தியன் என்ற திமிங்கிலம் 28 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் கரைக்கு வந்துவிட்டு, திரும்பவும் கடலுக்குள் தப்பிச்சென்றுவிட்டிருக்கிறது.

மீண்டும் 2025 இல் திரும்பி வரும்போது பார்த்துக்கொள்வோம்.

அதற்கிடையில் இந்த பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட செய்திகள் மீண்டும் இந்தியாவில் நடந்துகொண்டுதானிருக்கும்.

ஒரு தேசத்தில் கல்வி, உணவு, உறைவிடம் ( நிலம் – வீடு ) மருத்துவம் பிரதானமானவை. இவற்றில் நடக்கும் ஊழல் மோசடிகளை இரண்டு விரல்களின் உதவிகொண்டு வர்மக்கலை தாக்குதல் மூலம் முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று இதுபோன்ற திரைக்கதை எழுதுபவர்களும் இயக்குநரும் நினைக்கிறார்கள்.

இதன் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், சென்னையில் அதன் படப்பிடிப்பு தளத்தில் இராட்சத கிரேன் விழுந்து மூன்று தொழில் நுட்ப உதவியாளர்கள் கொல்லப்பட்டதையும் சிலர் படுகாயமடைந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.

அவர்களை மறக்காமல் இந்தியன் 2 தொடக்கத்தில் நினைவுபடுத்தியுள்ளனர். அத்துடன் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் விவேக், மற்றும் மனோபாலாவும் கேரள நடிகர் நெடுமுடி வேணுவும் தற்போது உயிரோடு இல்லை.

ஊழலும் மோசடியும் நிறைந்த தேசத்தை – சமூகத்தை வர்மக்கலை தாக்குதல் மூலம் திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபத்தைத்தான் காணமுடிந்திருக்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களில் தோன்றும் உலகநாயகன் நாட்டைத் திருத்துவதற்காக தானும் ஒரு அரசியல் கட்சி நடத்துகிறார். அதன் கொள்கைப் பிரகடனத்தில் வர்மக்கலை தாக்குதல் பற்றிய விளக்கமும் இருக்கிறதா..?

https://akkinikkunchu.com/?p=284167

சங்கருக்கு சரக்கு தீர்ந்து போயிட்டுது. எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் பின், அவர் எடுத்த படங்கள் எல்லாம் குப்பை.

சிவாஜியில் தொடங்கிய சறுக்கல், எந்திரன் 1, ஐ (கொடுமையான படம்), எந்திரன் 2 என்று நீண்டு இன்று இந்தியன் 2 இல் முழுமையாக சறுக்கி விட்டார் என்று தெரிகின்றது. 

இடையில் நண்பன் படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் (அது இந்திப் படம் 3 idiots  இன் remake என்பதால்)

கமல் என்னும் நல்ல கலைஞன், அரசியல் கோமாளி ஆகிய பின், இன்னும் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார் என நினைக்கின்றேன். 

சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்தப் படத்தை கழுவி கழுவி ஊற்றுகின்றார்கள். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இப்படி சினிமாவை, அரசியலை விமர்சிக்கின்றவர்களை, கக்கூஸில் முன்னர் கிறுக்கியவர்கள் என சங்கர் வசனங்கள் வைத்தமையால் சலங்கை கட்டி ஆடுகின்றார்கள்.

நான் இன்னும் இந்தியன் 2 இனைப் பார்க்கவில்லை. OTT இல் வந்தால் கூட அநேகமாக பார்க்க மாட்டேன் என நினைக்கின்றேன்
 
கதையை நம்பாமல் பிரமாண்டம் என்ற பெயரில் பெரும் செலவில் எடுக்கப்படும் இப்படியான சினிமாக்கள் தோற்று, குறைந்த செலவில் கதையை மட்டும் நம்பி எடுக்கப்படும் கருடன், மஹாராஜா போன்ற படங்கள் வெல்லும் காலம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

“இந்தியன்… 2” …. சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்!! … முருகபூபதி.

MV5BZGU3ZWEzZTgtMDMxOC00MDAyLWE1ZmQtYmQw

திரைப்படம் விமர்சனம்! …… வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து, அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில் பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில்,

தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில்,

தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில், சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,

ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்து அதில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில்,

இந்திய தேசத்தில் நீடித்திருக்கும் ஊழலை, சொத்து சேகரிப்பை , கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து, கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது.

இந்த விமர்சனத்தை நான் எழுதும்போது, அது இன்னும் எத்தனை கோடியை தாண்டியிருக்கும் என்பது இங்கு அவசியமில்லை.

ஐநூறு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் உலகநாயகன் கமலின் சம்பளம் நூற்றி ஐம்பது கோடி ரூபா எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சங்கர் முன்னர் இயக்கிய ஜென்டில்மென் , முதல்வன் ( அக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்தவை ) இந்தியன் ( கமல் நடித்து 1996 இல் வெளியானது ) அந்நியன் ( விக்ரம் நடித்தது ) ஆகிய நான்கும் சமூகத்தில் அன்றாடம் நடக்கும் மோசடிகள், ஊழல்களுக்கு எதிராக பேசிய திரைப்படங்கள்.

அந்த வரிசையில் 1996 இல் வெளியான இந்தியனின் இரண்டாம் பாகம் எனச்சொல்லிக்கொண்டு 28 வருடங்களின் பின்னர் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

நான் வதியும் மெல்பனில் புறநகரமான மோர்வல் நகரத்தில் கடந்த 15 ஆம் திகதி இரவுக் காட்சிக்கு எனது மனைவியுடன் சென்றிருந்தேன்.

எனக்கு கடந்த 13 ஆம் திகதி பிறந்த தினம். அதனை முன்னிட்டு எனது இரண்டாவது மகள் பிரியாதேவி ஏற்பாடு செய்து தந்த பரிசுதான் இந்தியன் 2 இற்கான அனுமதிச்சீட்டு.

அன்று மோர்வல் திரையரங்கில் அந்தக்காட்சியை பார்த்தவர்கள் எங்களுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர்தான்!

28 வருடங்களுக்கு முன்னர் பார்த்த இந்தியன் திரைப்படம் தந்த திருப்தியை, இரண்டாவது இந்தியன் தரவில்லை, பலத்த ஏமாற்றத்தையே தந்தது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகின்றேன்.

சங்கரின் திரைப்படம் என்றாலே பிரமாண்டம் என்பதுதான் அடையாளம். ஆனால், அதனை அவர் கதையில் காண்பிக்காமல் காட்சிகளில் சித்திரிக்க முயன்றிருக்கிறார்.

இந்தியன் முதல் திரைப்படம் ஒரே குடும்பத்திற்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலிருந்த முரண்பாட்டை சித்திரித்தது . கமல் இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார்.

தந்தை சேனாதிபதியாக இந்தியன் தாத்தா வேடம் ஏற்று நடித்த அவருக்கு அப்போது தேசிய விருதும் கிடைத்தது.

இந்தியன் 2 , நான்கு குடும்பங்களுக்குள் நடக்கும் கதையை சொல்லியிருக்கிறது.

புதிய இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா ( கமல் ) – முதல் காட்சியிலேயே தான் 40 வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருப்பதாக சொல்கிறார்.

அடுத்துவரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியன் 3 வெளியாகவிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இதில் வரப்போகும் இந்தியன் தாத்தா, இருபது வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருக்கின்றேன் எனச்சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை ? !

தேசத்தை சுத்தப்படுத்துவதற்கு முன்னர் வீட்டை சுத்தப்படுத்தவேண்டும் என்ற தொனியில் பேசத்தொடங்கும் திரைக் கதைதான் இந்தியன் 2.

அதற்காக இந்தத்திரைப்படத்தில் நான்கு குடும்பங்களும் அங்கிருந்து போராடத் தொடங்கும் நான்கு இளம் தலைமுறையினரும் வருகிறார்கள்.

இந்நால்வரில் ஒரு இளம் யுவதியும், மூன்று இளைஞர்களும் இடம்பெறுகிறார்கள்.

இவர்களின் கதை தனியாகவும் தாய்வானில் தைப்பேயிலிருந்து வரும் இந்தியன் தாத்தா சேனாபதியின் கதை தனியாகவும் வந்து இணைகின்றது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த விமானம் தாய்வானில்தான் விபத்துக்குள்ளாகி அவரது உடல் காணாமல் போனது.

1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம், நாயகன் சேனாபதி ( தந்தை கமல் ) தனது மகன் சந்துருவை ( மகன் கமல் ) விமான நிலைய ஓடுபாதையில் தனது வர்மக்கலையினால் கொலைசெய்துவிட்டு தப்பிச் செல்வதாக முடிகிறது.

இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா சேனாபதி எங்கே இருக்கிறார்? என்பது தெரியாமல், இந்தியாவில் நிலவும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அந்த நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் சமூக வலைத்தள ஊடகம் ஊடாக (You tube Chenal ) தேடுகிறார்கள்.

இந்தியன் தாத்தா முற்றிலும் வித்தியாசமான தோற்றத்துடன் தாய்வான் தைப்பேயிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார்.

இதன் மூலம் அவரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறு அவதாரம் என காட்ட முனைகிறார்களா..? என்பது தெரியவில்லை!?

அவரை மீண்டும் கைதுசெய்வதற்காக 96 இல் அவரை கைதுசெய்ய முயன்று அவரின் வர்மக்கலை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியின் மகனாக ( பாபி சிம்கா ) பாதுகாப்புத்துறை அதிகாரியாக காத்திருக்கிறார்.

விமான நிலையத்தில் காத்திருக்கும் இவரது பார்வையில் மண்ணைத் தூவி விட்டு தப்பிவிடும் இந்தியன் தாத்தா, தனது வர்மக்கலை தாக்குதலின் மூலம் மேலும் சில ஊழல்வாதிகளையும் நிதிமோசடிகள் மூலம் முறைகேடாக சொத்து சேர்த்தவர்களையும் அதே வர்மக்கலை தாக்குதல் மூலம் சித்தப்பிரமை பிடிக்க வைத்து வாயில் நுரை கக்க பாட வைக்கிறார். தெருவிலே ஓட வைக்கிறார்.

அதில் ஒருவர் தங்க மாளிகையில் வாழ்ந்து தங்கத்தால் அமைக்கப்பட்ட மலகூடத்தை தனது பாவனைக்கு வைத்திருப்பவர்.

இந்திய மாநிலங்கள் அனைத்திலும் நடக்கும் ஊழல் மோசடிகளை, சொத்து சேகரிப்பை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட துப்பாக்கியோ, ஏ. கே. 47 இயந்திரத் துப்பாக்கியோ இந்தியன் தாத்தாவுக்கு தேவைப்படவில்லை.

கைவிரல்களே அவருக்குப்போதும்.

அவரிடம் இருக்கும் ஆயுதம் அது மாத்திரம்தான்.

அதற்காக இத்தனை பொருட் செலவில் பிரமாண்டமான ஒரு திரைப்படமா..?

நாட்டில் ஊழல் மோசடிகளை கண்டுபிடித்து ஒழிக்க முன்வரும், நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் தாய், தந்தை, மற்றும் உறவினர்கள் அந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டு, அரசுக்கு காட்டிக்கொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கும்போது அதில் ஒரு தாய் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள்.

அத்தோடு திரைக்கதையும், சென்ற திசையிலிருந்து முற்றாக மாறிவிடுகிறது.

அந்த ஒரு மரணமே அந்த இளம் தலைமுறையினரையும் அவர்களின் பின்னால் திரண்டு வந்த மக்களையும் நேர்மையை விரும்பிய இந்தியன் தாத்தாவுக்கு எதிராக மாறித் திருப்பிவிடுகிறது.

தற்கொலை செய்துகொண்ட தாயின் பூதவுடலுக்கும் கொள்ளி வைக்கும் உரிமை அந்த நேர்மையான மகனுக்கு இல்லாமல் செய்யப்படுகிறது.

அதற்கெல்லாம் இந்தியன் தாத்தாதான் காரணம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை தாக்குகின்றனர்.

“ சமூகம் இப்படித்தான் எதிர்மறையாகச் சிந்திக்கும். ஆனால், அது எவ்வாறு நேர்மறையாகச் சிந்திக்கவேண்டும் “ என்று சொல்ல வேண்டியவர்தான் திரைக்கதை எழுத்தாளர்.

இந்தியன் தாத்தா இறுதியில் கைதாகிறார். கைதுசெய்த அதிகாரியையும் அவர் தனது வர்மக்கலை தாக்குதலினால் உடல் ஊனமடையச் செய்துவிடுகிறார்.

அவரை குணப்படுத்தவேண்டுமானால், இந்தியன் தாத்தாவின் கைகளில் மாட்டப்பட்ட விலங்குகள் கழற்றப்பட வேண்டுமாம். அவரால் மட்டும்தான் அந்த இளம் அதிகாரியை குணப்படுத்த முடியுமாம்.

இந்தியன் தாத்தா, அந்த இளம் அதிகாரியை ஒரு அம்பூலன்ஸில் எடுத்துக்கொண்டு தப்பிச்செல்கிறார்.

இந்தியன் முதல் படத்தில் வந்த மூத்த அதிகாரி இந்தப்படத்திலும் வந்து ( நெடுமுடி வேணு ) சொல்கிறார்:

“ மீண்டும் திமிங்கிலம் கடலுக்குச் சென்றுவிட்டது “

திமிங்கிலம் கரைக்கு வந்தால், என்னவாகும் ? என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.

இந்த இலட்சணத்தில், இந்தியன் என்ற திமிங்கிலம் 28 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் கரைக்கு வந்துவிட்டு, திரும்பவும் கடலுக்குள் தப்பிச்சென்றுவிட்டிருக்கிறது.

மீண்டும் 2025 இல் திரும்பி வரும்போது பார்த்துக்கொள்வோம்.

அதற்கிடையில் இந்த பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட செய்திகள் மீண்டும் இந்தியாவில் நடந்துகொண்டுதானிருக்கும்.

ஒரு தேசத்தில் கல்வி, உணவு, உறைவிடம் ( நிலம் – வீடு ) மருத்துவம் பிரதானமானவை. இவற்றில் நடக்கும் ஊழல் மோசடிகளை இரண்டு விரல்களின் உதவிகொண்டு வர்மக்கலை தாக்குதல் மூலம் முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று இதுபோன்ற திரைக்கதை எழுதுபவர்களும் இயக்குநரும் நினைக்கிறார்கள்.

இதன் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், சென்னையில் அதன் படப்பிடிப்பு தளத்தில் இராட்சத கிரேன் விழுந்து மூன்று தொழில் நுட்ப உதவியாளர்கள் கொல்லப்பட்டதையும் சிலர் படுகாயமடைந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.

அவர்களை மறக்காமல் இந்தியன் 2 தொடக்கத்தில் நினைவுபடுத்தியுள்ளனர். அத்துடன் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் விவேக், மற்றும் மனோபாலாவும் கேரள நடிகர் நெடுமுடி வேணுவும் தற்போது உயிரோடு இல்லை.

ஊழலும் மோசடியும் நிறைந்த தேசத்தை – சமூகத்தை வர்மக்கலை தாக்குதல் மூலம் திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபத்தைத்தான் காணமுடிந்திருக்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களில் தோன்றும் உலகநாயகன் நாட்டைத் திருத்துவதற்காக தானும் ஒரு அரசியல் கட்சி நடத்துகிறார். அதன் கொள்கைப் பிரகடனத்தில் வர்மக்கலை தாக்குதல் பற்றிய விளக்கமும் இருக்கிறதா..?

https://akkinikkunchu.com/?p=284167

யார் இந்த கைப்புள்ள😂? படத்தை அப்படியே தொடக்கம் முதல் முடிவு வரை விமர்சனம் என்ற பெயரில் சொல்லியிருக்கிறார்? Spoiler alert  தெரியாமல் இருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது புகழ் இருக்கும் போதே ஒதுங்கிடனும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

யார் இந்த கைப்புள்ள😂? படத்தை அப்படியே தொடக்கம் முதல் முடிவு வரை விமர்சனம் என்ற பெயரில் சொல்லியிருக்கிறார்? Spoiler alert  தெரியாமல் இருக்கிறாரா?

அவர் பொதுவாக இலக்கிய விமர்சனம் செய்பவர்! யாரோ இந்தியன்-2 படம்பார்க்க அனுப்பிவிட்டார்கள்!

நானும் திரையில் பார்த்தேன்! இடையில் நல்ல நித்திரை வந்தது.. ஆனாலும் கண்களை இறுக்கித் திறந்தே வைத்திருந்தேன்.. அடுத்த பாகம் அடுத்த வருஷம் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஆனாலும் கண்களை இறுக்கித் திறந்தே வைத்திருந்தேன்..

இறுக்கி மூடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிருபன் என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்?

19 minutes ago, Kavi arunasalam said:

இறுக்கி மூடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிருபன் என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்?

அவர் ஏதோ ஒரு கிறக்கத்தில் எழுதியிருக்கின்றார் 😃

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kavi arunasalam said:

இறுக்கி மூடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிருபன் என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்?

கொட்டக் கொட்ட முழித்துப் பார்த்தேன்! 

35 minutes ago, நிழலி said:

அவர் ஏதோ ஒரு கிறக்கத்தில் எழுதியிருக்கின்றார் 😃

படத்தில் மனிஷா கொய்ராலா அளவுக்கு கிறக்கம் தர ஒருவரும் இல்லை!🤪

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

படத்தில் மனிஷா கொய்ராலா அளவுக்கு கிறக்கம் தர ஒருவரும் இல்லை!🤪

நான்தான் பிழையாக விளங்கி விட்டேன். Gunஐ கண் என்று நினைத்துவிட்டேன். கண்கள் என்று பன்மையில் வந்ததால் வந்த குழப்பம் அது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு  திரைப்படத்தில்  இசையும் பாடலும் சறுக்கினால் மிகுதியை சொல்லத் தேவையில்லை. எல்லாமே சறுக்கி விடும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கொட்டக் கொட்ட முழித்துப் பார்த்தேன்! 

படத்தில் மனிஷா கொய்ராலா அளவுக்கு கிறக்கம் தர ஒருவரும் இல்லை!🤪

சே.......மனிஷா கொய்ராலா இப்பவும் கிறக்கம் தருமளவு வசீகரமாய் இருக்கிறாரா ........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

சே.......மனிஷா கொய்ராலா இப்பவும் கிறக்கம் தருமளவு வசீகரமாய் இருக்கிறாரா ........!  😴

இந்தியன் 1 இல் தந்த கிறக்கத்தால் இரண்டு தரம் அகன்ற திரையில் படத்தைப் பார்த்தேன்😻

spacer.png

இந்தியன் 2 இல் நித்திரைதான் வந்தது!

இப்போது மனிஷா இப்படி இருக்கா!

spacer.png

4 hours ago, suvy said:

சே.......மனிஷா கொய்ராலா இப்பவும் கிறக்கம் தருமளவு வசீகரமாய் இருக்கிறாரா ........!  😴

45 minutes ago, கிருபன் said:

இப்போது மனிஷா இப்படி இருக்கா!

spacer.png

மனீஷா ஒரு நல்ல போராட்ட குணம் கொண்டவர். புற்றுநோய் வந்து, தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, அதற்கு எதிராக போராடி மீண்ட பெண்மணி.

இவர் புற்றுநோய் பீடிக்கப்பட்ட காலத்தில் வெளி வந்த புகைப்படங்களில் தலை மொட்டையாக, மிகவும் மெலிந்து காணப்பட்டார் (அதனையும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்த கூட்டம் ஒன்று இருந்தது)

அண்மையில் வெளிவந்த Heeramandi web Series இல் அட்டகாசமாக நடித்து இருந்தார். 
 
மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்!

1281840.jpg
 
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் மூலம் வெளிப்படும் சமூகப் பார்வை எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘2.0’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பின் ‘இந்தியன் 2’ வெளியாகியுள்ளது. தனது கடைசி 2 படங்களில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக ரோபோடிக் பற்றி பேசியிருந்தார் ஷங்கர். தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு முன்னோக்கி சிந்தி்க்கும் அவர் 2024-ம் ஆண்டிலும் சமூகம் குறித்த சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருப்பது அவரது ‘அப்டேட்’ ஆகாத தன்மையை மட்டுமல்லாமல் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது.

‘இந்தியன் 2’-வில் என்ன பிரச்சினை? - மொத்தப் படமுமே பிரச்சினை என்றாலும், ஷங்கரின் முந்தையப் படங்களில் இருக்கும் எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், திருநங்கைகள் மீதான அவரது மோசமான பார்வை இன்னும் மாறவேயில்லை என்பதை இப்படம் உறுதி செய்கிறது. படத்தில் ஆரம்பத்தில் தொழிலதிபர் ஒருவரை தனது வர்மக் கலையால் கொல்கிறார் கமல். கொல்லப்படுவதற்கு முன், வர்மத்தால் பாதிக்கப்படும் தொழிலதிபரின் உடல்மொழி ஒருவித நளினத்துடன் மாற்றம் பெறுகிறது. திருநங்கைகளை குறிப்பிடும் வகையில் கேலியாக சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சி அபத்தமானது.

அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கொல்லப்படும்போது, அவர்கள் மிருகங்கள் போன்ற உடல்மொழியால் பாதிப்புக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படுகினறனர். அப்படியென்றால் ஆண், பெண்ணைப் போன்ற நளினத்துடன் மாறுவது மிகப் பெரிய தண்டனையா? அவமானமா? இதைப் பார்க்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் மனநிலை குறித்த இயக்குநர் ஷங்கரின் பார்வை என்ன?

சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டு முன்னேற்றம் காண போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஷங்கர் மட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்? அவரது இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திலும் திருநங்கைகள் குறித்த இதே மனநிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தையும் காட்சியையும் அமைத்திருந்தார். மட்டுமின்றி நேரடியாக திருநங்கைகளை தாக்கும் வசனங்களையும் இடம்பெறச் செய்திருந்தார்.

இத்தனைக்கும் அப்படம் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வெளியானதல்ல. சமூக வலைதளங்கள் மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் வெளியானதுதான். ஊழலில் இருந்து மக்கள் விடுபடுவது இருக்கட்டும், முதலில் இப்படியான மனநிலையில் இருந்து இயக்குநர் ஷங்கர் விடுபட வேண்டும்.

அதேபோல, மற்றொரு காட்சியில் கமல் ஆன்லைனில் ஊழல் தொடர்பாக நீண்....ட வகுப்பெடுத்து கொண்டிருப்பார். அப்போது கலரிங் அடித்த தலைமுடியுடன் வட சென்னையைச் சேர்ந்த மக்களின் மொழி மற்றும் உடல் பாவனைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்கள் சிலர், கமலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கமென்ட் இடுவார்.

அதற்கு பதிலளிக்கும் கமல், ‘கழிப்பறை சுவர்ல எழுதிட்டு இருந்தவங்கல்லாம் ஃபேஸ்புக் சுவர்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?’ என கேட்பார். இதன் அர்த்தம் என்ன? எளிய மக்களின் சமூக வலைதள பயன்பாடு உங்களை ஏன் அசசுறுத்துகிறது? அதே எளிய மக்கள் தைரியமாக சமூக ஊடகங்களில் பேசுவதால்தான் பல சமூக பிரச்சினைகள் வெளியே தெரிகின்றன. ஆன்லைன் அப்யூசர்களாக அவர்களை மட்டும் குறிப்பிட்டு தனித்து காட்சிப்படுத்தி புளங்காகிதம் அடைவது ஏன்? ‘இவங்கள்ளாம் வந்துட்டாங்களே’ என்ற மொழிநடையின் மாற்று முகம்தானே மேற்கண்ட வசனம்?

ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஷங்கரின் வன்மம் புதிதல்ல. ‘முதல்வன்’ படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வரான அர்ஜுனிடம் ‘குப்பத்து பொறுக்கிப் பசங்க’ என்று சொல்வதைப் போல ஒரு வசனம் வைத்திருப்பார். குடிசைவாழ் மக்களை பொதுமைப்படுத்தி காழ்ப்புடன் வைக்கப்பட்ட வசனமாகவே இதைப் பார்க்கமுடிகிறது.

பார்க்கில் குடித்து விட்டு துங்குபவர், ரோட்டில் குப்பை போடுபவர், எச்சில் துப்புபவர் இவர்களெல்லாம் தான் ஷங்கரின் படங்களில் ஆகப் பெரும் தேச துரோகிகள். அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியலை ‘அந்நியன்’ போன்ற படங்கள் பேசின.

இந்தியன் 2-விலும் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, குப்பைகளை ஏற்றிச் செல்லும் தூய்மைப் பணியாளரைப் பார்த்து ஜெகன் நக்கலான தொனியுடன், ‘அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல’ என்று கேட்பார். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு காட்சியில் இலவச திட்டங்களால் பயனடையும் மக்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் வசனம் வைத்திருக்கிறார். மேடையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் சமூக நீதியை பேசும் கமல், இந்தக் காட்சிகளையும், வசனங்களையும் அனுமதித்ததுதான் ஆச்சர்யம்.

சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் உயர் வகுப்பைச் சேர்நத பாபி சிம்ஹா, சிபிஐ அதிகாரியாகவும், கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அனைவரும் பாடி பில்டர்கள், வர்மத்தை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத ரவுடிகளாகவும் சித்தரிக்கும் அதீத புரிதலும், மறைமுக ஒடுக்குதலும் போகிற போக்கில் ஏற்றும் விஷ ஊசிகள். மார்க்கெட்டில் மீன் விற்கும் ஒரு பெண் கூட மீனின் வயிற்றில் கோலி குண்டுகளை நிரப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். படம் பார்ப்பவர்களை முட்டாளாக நினைத்தால் மட்டுமே இப்படியான ஒரு காட்சியை வைப்பது சாத்தியம்.

மேலும், கிட்டத்தட்ட படத்தில் வரும் அரசு ஊழியர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குபவர்கள் தான்; மருந்துக்கு கூட ஒரே ஒரு ஊழியர் கூட நல்லவராக காட்டப்படவில்லை. பொதுமக்களோ, இயக்குநர்களோ, அரசியல்வாதிகளோ அனைவருமே ஒருகாலத்தில் புரிதல் இல்லாமல் தவறான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் வாசிப்பு, பரந்த பார்வை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்ட பின் அவற்றை மாற்றிக் கொள்வதே இயல்பு. ஷங்கரின் இனி வரக்கூடிய படங்களிலாவது ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் மீதான அவரது பார்வை மாறும் என்று நம்பலாம்.

மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! | question to director shankar on kamal haasan starrer indian 2 movie explained - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஷங்கரின் வன்மம் புதிதல்ல. ‘முதல்வன்’ படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வரான அர்ஜுனிடம் ‘குப்பத்து பொறுக்கிப் பசங்க’ என்று சொல்வதைப் போல ஒரு வசனம் வைத்திருப்பார். குடிசைவாழ் மக்களை பொதுமைப்படுத்தி காழ்ப்புடன் வைக்கப்பட்ட வசனமாகவே இதைப் பார்க்கமுடிகிறது.

பார்க்கில் குடித்து விட்டு துங்குபவர், ரோட்டில் குப்பை போடுபவர், எச்சில் துப்புபவர் இவர்களெல்லாம் தான் ஷங்கரின் படங்களில் ஆகப் பெரும் தேச துரோகிகள். அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியலை ‘அந்நியன்’ போன்ற படங்கள் பேசின.

இந்தியன் 2-விலும் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, குப்பைகளை ஏற்றிச் செல்லும் தூய்மைப் பணியாளரைப் பார்த்து ஜெகன் நக்கலான தொனியுடன், ‘அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல’ என்று கேட்பார். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு காட்சியில் இலவச திட்டங்களால் பயனடையும் மக்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் வசனம் வைத்திருக்கிறார். மேடையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் சமூக நீதியை பேசும் கமல், இந்தக் காட்சிகளையும், வசனங்களையும் அனுமதித்ததுதான் ஆச்சர்யம்.

சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் உயர் வகுப்பைச் சேர்நத பாபி சிம்ஹா, சிபிஐ அதிகாரியாகவும், கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அனைவரும் பாடி பில்டர்கள், வர்மத்தை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத ரவுடிகளாகவும் சித்தரிக்கும் அதீத புரிதலும், மறைமுக ஒடுக்குதலும் போகிற போக்கில் ஏற்றும் விஷ ஊசிகள். மார்க்கெட்டில் மீன் விற்கும் ஒரு பெண் கூட மீனின் வயிற்றில் கோலி குண்டுகளை நிரப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். படம் பார்ப்பவர்களை முட்டாளாக நினைத்தால் மட்டுமே இப்படியான ஒரு காட்சியை வைப்பது சாத்தியம்.

இந்து தமிழ் இதழே இப்படியான கட்டுரைகளையும் போட ஆரம்பித்திருப்பதே ஒரு மாற்றம் தான்........ பல வருடங்களின் முன்னேயே, எங்கே என்று மறந்து விட்டது, ஷங்கரின் பட/கதை நாயகர்களையும், கதையில் வரும் எதிரானவர்களையும் ஒரு கோடு கீறி பிரித்து ஒரு கட்டுரை வந்திருந்தது. விஷம் தான்........ 

இவரின் படங்கள் வேற ஒரே ஜிம்மிக் ஷோ, அதை எத்தனை தரம் தான் திரும்ப திரும்ப பார்ப்பது...... 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் 3 நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

இந்தியன் 3 நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள்!

'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்............' என்று இந்தியன் - 3 வெளியாவது பற்றி ஒரு பகிடி இந்த வாரம் சுற்றிக் கொண்டிருந்தது.

இங்கு முதல் நாளிலிருந்தே இந்தியன் - 2 க்கு டிக்கட் விலை ஐந்து டாலர்கள் தான். தெலுங்கு பதிப்பை முதல் நாளே தூக்கியும் விட்டார்கள். வழமையாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு 12 இலிருந்து 25 டாலர்கள் வரை இருக்கும் டிக்கட் விலை.   

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

இந்தியன் 3 நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள்!

இந்தியன் 3 நன்றாக இல்லாவிட்டாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. நல்ல படமோ  நன்றாக இல்லாத படமோ இந்திய தமிழ் பிரபலமான திரைபடங்கள் பிரபலமானவர்கள் நடித்தது வந்தால் அதை காட்டயம் பார்த்து ஆதரவு அளிப்பதை தங்கள் கடமையாக வெளிநாட்டு ஈழதமிழர்கள்  செய்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியன் 3 நன்றாக இல்லாவிட்டாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. நல்ல படமோ  நன்றாக இல்லாத படமோ இந்திய தமிழ் பிரபலமான திரைபடங்கள் பிரபலமானவர்கள் நடித்தது வந்தால் அதை காட்டயம் பார்த்து ஆதரவு அளிப்பதை தங்கள் கடமையாக வெளிநாட்டு ஈழதமிழர்கள்  செய்து வருகின்றனர்.

👍....

கமல் ரசிகர்கள் கமல் படத்திற்கு போவார்கள்......

ரஜனி ரசிகர்கள் ரஜனி படத்திற்கு போவார்கள்........

விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு போவார்கள்.........

........

படங்கள் மட்டும் என்று இல்லை...... உலகில் எல்லா விடயங்களும் இந்த மாதிரித் தான் போய்க் கொண்டிருக்கின்றன.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, ரசோதரன் said:

கமல் ரசிகர்கள் கமல் படத்திற்கு போவார்கள்......

ரஜனி ரசிகர்கள் ரஜனி படத்திற்கு போவார்கள்........

விஜய் ரசிகர்கள் விஜய் படத்திற்கு போவார்கள்........

போறது மட்டுமில்லை...
கமல் ரசிகர்கள் ரஜனியை நக்கல் அடிப்பினம்
ரஜனி ரசிகர்கள் கமலை வழிச்சு ஊத்துவினம்
விஜய் ரசிகர்கள் அஜித்த கன்னா பின்னா எண்டு திட்டுவினம்
அஜித் ரசிகர்கள் விஜய்க்கு மண்டையில தலமயிரே இல்லை எண்டுவினம்
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்...
ரஜனிக்கு கமல்காசனை மாதிரி டான்ஸ் ஆடவே தெரியாது எண்டுறன்... 😄
நீச்சல்தெரியாதவன் தண்ணீக்க நிண்டு தத்தளிக்கிற மாதிரி ஒரு டான்ஸ்! 🤣
தேவையா இது? 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

🤣...........

ரஜனி அம்பானி வீட்டு கல்யாணத்தில நிற்கும் போது தான், 'இந்தியன் -2' கன்ஃபார்மாக தோல்வி என்ற செய்தி அவருக்கு சொல்லப்பட்டதாம். மனுசன் அந்த சந்தோசத்தில தான் தத்து பித்தென்று இப்படி ஒரு ஆட்டம் போடுது...........🤣.

நீங்கள் சொன்னது மிகச் சரியே.......... 'ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை....' என்பது போல ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்றைய நடிகர்களை கழுவி ஊத்துவார்கள்.............  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2024 at 02:45, குமாரசாமி said:

ஒரு  திரைப்படத்தில்  இசையும் பாடலும் சறுக்கினால் மிகுதியை சொல்லத் தேவையில்லை. எல்லாமே சறுக்கி விடும்.
 
இந்திய‌ன் பாக‌ம் 2 ப‌ட‌த்துக்கு

இசை அனிருத் என்று சொன்ன‌ போதே யூடுப்பில் ப‌ல‌ர் ச‌ங்க‌ர‌ க‌ழுவி ஊத்த‌ தொட‌ங்கிட்டின‌ம்

அண்ண‌ன்AR  ர‌குமான் அவ‌ரிட‌மே இந்திய‌ன் 2 ப‌ட‌த்துக்கு இசை அமைக்க‌ கொடுத்து இருக்க‌னும்

உப்பு ச‌ப்பில்லா இசை அமைப்பாள‌ர் அனிருத் ர‌ஜ‌னியின் ம‌ரும‌க‌ன் என்ற‌த‌ற்காக‌ அனிருத்த‌ தூக்கி வைச்சு கொண்டாடுகின‌மோ என்று நினைப்ப‌து உண்டு........... ......

சின்ன‌னில் இந்திய‌ன் ப‌ட‌த்தை ப‌ல‌ வாட்டி பார்த்து இருக்கிறேன் 

19வ‌ருட‌மாய் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ன் ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ வில்லை சினிமா ஆர்வ‌ம் குறைந்து விட்ட‌து 

இந்திய‌ன் 2 ப‌ட‌த்தை எப்ப‌டியாவ‌து பார்க்கனும் என்று ஆசை ப‌ட்டேன் அந்த‌ ப‌ட‌த்தை பார்த்த‌வர்க‌ள் இணைய‌த்தில் க‌ழுவி ஊத்தும் போது இந்திய‌ன் 2 ப‌ட‌த்தை பார்க்காம‌லே விடுவோம் என்ர‌ முடிவுக்கு வ‌ந்துட்டேன்

அது ச‌ரி தாத்தா 1996க‌ளில் அண்ண‌ன் AR இசையில் வ‌ந்த‌ பாட‌ல்க‌ள் மிக‌ மிக‌ அருமையான‌ பாட‌ல்க‌ள் இப்ப‌வும் அந்த‌ பாட‌ல்க‌ள் நினைவில் இருக்கு ப‌ல கோடி பேர் விரும்பி கேட்ட‌ பாட‌ல்க‌ள் 

அண்ண‌ன் AR ர‌குமான் ந‌ல்ல‌ இசை அமைத்து இருந்தார் 

ப‌ட‌த்துக்கு கொடுத்த‌ பின்ன‌னி BGM இசை மிக‌ அருமை 

இந்திய‌ன் 1 ப‌ட‌த்தில் ஒரு குறையும் இல்லை அருமையான‌ வெற்றி ப‌ட‌ம்

 இப்ப‌ வ‌ந்த‌ இந்திய‌ன் ப‌ட‌த்தில் ஒரு பாட்டு இருக்கு தாத்தா தான் வாராரு க‌த‌ற‌ விட‌ போராரு

நீங்க‌ளும் எங்க‌ளுக்கு தாத்தா இந்திய‌ன் 2ப‌ட‌த்தை பார்த்து விட்டு யாழில் எங்க‌ளை க‌த‌ற‌ விட‌ வேண்டாம் என்று முன் கூட்டி கேட்டு கொள்ளுகிறேன் லொல்😁............................

  • கருத்துக்கள உறவுகள்

1996க‌ளில் இந்திய‌ன் ப‌ட‌ க‌தை என‌க்கு புரிய‌ வில்லை வ‌ய‌தும் சின்ன‌ன் தானே

2004க‌ளில் அந்த‌ ப‌ட‌த்தை திருப்ப‌ பார்த்த‌ பிற‌க்கு தான் ப‌ட‌த்தின் க‌தை புரிந்த‌து 

விறுவிறுப்பான‌ ப‌ட‌ம்....................

ரகுமான் இசைப் புய‌ல் அந்த‌ இசைப் புய‌லை த‌விர்த்து விட்டு அனிருத்திட‌ம் ப‌ட‌த்துக்கு இசை அமைக்க‌ கொடுத்த‌து ச‌ங்க‌ர் விட்ட‌ பிழை

இதிய‌ன் 2 ப‌ட‌ பாட‌ல் ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது.................ஒரே இர‌ச்ச‌ல் என்ன‌ பாடுகின‌ம் என்று காதில் கேட்க்குது இல்லை தாத்தா............................

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

அனிருத்திட‌ம் ப‌ட‌த்துக்கு இசை அமைக்க‌ கொடுத்த‌து ச‌ங்க‌ர் விட்ட‌ பிழை

இதிய‌ன் 2 ப‌ட‌ பாட‌ல் ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது.

உறவே அனிந் தான் இப்ப நல்ல மியுசிக் போடுவார் என்று நிழலி சொன்னதாக நினைவு

On 20/7/2024 at 01:12, ரசோதரன் said:

இந்தியன் -2' கன்ஃபார்மாக தோல்வி என்ற செய்தி அவருக்கு சொல்லப்பட்டதாம். மனுசன் அந்த சந்தோசத்தில தான் தத்து பித்தென்று இப்படி ஒரு ஆட்டம் போடுது...........🤣.

அதே வயதுடைய உலக ஜனாதிபதி வேட்பாளர் நடக்கவே கஷ்டபட்டவர்   இவர் நடனமே ஆடுகிறரே 😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.