Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

olymbic.jpg?fit=595,389

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இழங்கைத்  தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர்  தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார்.

நேற்று மாலை 6.00 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் பரிஸ் நகரில் கடந்த வருடம்  இடம்பெற்ற பாண் தயாரிப்புப் போட்டியில்  முதலிடம் பெற்றிருந்தார்.

இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1392433

  • கருத்துக்கள உறவுகள்

தர்ஷன் செல்வராஜாவுக்கு பாராட்டுக்கள் .......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு முதன்முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிரான்ஸ் – பாரிஸ் நகரில் நேற்று (15) அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

ஒலிம்பிக் தீபத்தை 2.5 கிலோமீற்றர் தூரம் அவர் ஏந்திச் சென்றதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சுவையான பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sri Lanka-born celebrity baker Tharshan Selvarajah carries Olympic Torch -  Newswire

Sri Lanka-born celebrity baker Tharshan Selvarajah carries Olympic Torch -  Newswire

https://thinakkural.lk/article/306160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

451567227_1044151530407995_5875003118650

 

451417242_1044151637074651_5410128957055

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒலிம்பிக் தீபத்துடன் ஈழத்தமிழன் பாரீசில்....

 

  • கருத்துக்கள உறவுகள்

நேரமும் காலமும் உழைப்பும் கூடி வந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது இவர் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தர்சன். ஒரு சக தமிழனாக பெருமையாக இருக்கிறது. 

தமிழர்கள் எங்கிருந்தாலும் உயரணும். கதவுகளை தட்டி திறக்கும் நிலைக்கு வரணும். 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தர்சன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்றோர் இனமுண்டு (நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்)

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்

அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்

மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்

 
 
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் தர்சன்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் ஏதோ ஒரு வழியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை தவிர.....☹️

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

பாராட்டுக்கள் தர்சன்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் ஏதோ ஒரு வழியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை தவிர.....☹️

மாத‌ம் 1000ரூபாய்

உப்பு ச‌ப்பில்லா வீடுக‌ள்

 

ப‌க்க‌த்தில் க‌ழிவு நீர் ஓடும்

 

சில‌ அக‌தி முகாம் பார‌வாயில்லை . ஆனால் எம் உற‌வுக‌ள் த‌மிழ் நாட்டுக்கு போன‌திலும் பார்க்க‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் அவுஸ்ரேலியா . க‌ன‌டா போய் இருந்தால் எல்லா வ‌ச‌திக‌ளுட‌ன் ந‌ல்ல‌ வாழ்க்கை வாழ்ந்த்து இருப்பின‌ம்.................

 

 

இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு தாங்க‌ள் அடைக்க‌ல‌ம் கொடுத்து இருக்கிறோம் மாத‌ம் 1000ரூபாய் காசு கொடுக்கிறோம் ரேச‌ன் உண‌வு பொருட்க‌ள் கொடுக்கிறோம் என்று பெரிசா பீத்துகின‌ம் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்.......................ஜ‌ரோப்பிய‌ த‌மிழ‌ர்க‌ள் க‌டின‌மாய் உழைச்சு வீடுக‌ள் க‌ட்டி எப்ப‌டி ப‌ட்ட‌ வாழ்க்கை வாழுகின‌ம் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் எட்டி பார்த்தால் தெரியும்

 

இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் அக‌தி முகாமுக்குள் இருந்து இவ‌ள‌வ‌த்தை இழ‌ந்து விட்டின‌ம் என்று🫤......................

  • கருத்துக்கள உறவுகள்

உழைப்பால் உயர்ந்த தமிழனுக்கு பெருமை சேர்த்த பிரான்ஸ் மக்களுக்கும் தர்சனுக்கும் ஒலிம்பிக் பிரான்ஸ் ஒழுங்கமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.