Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kandiah57 said:

கால். வைக்கவில்லை என்றால்.       ..      என்ன நடக்கும் ??? நீங்கள் எதிர்பார்க்கும் அமைதி கிடைக்காது  நிச்சயமாக கிடையாது 

உலகில் 

ஈரான்.  நினைத்தது சட்டம் 

ஈராக் நினைத்தது சட்டம்  

பாகிஸ்தான் நினைத்தது சட்டம் 

ஆப்கானிஸ்தான் நினைத்தது சட்டம்   

சீனா நினைத்தது சட்டம்

இந்தியா நினைத்தது சட்டம் 

வடகொரியா நினைத்தது சட்டம் .....

...........இப்படியாகிடுச்சே 

அமெரிக்கா இருந்து இருக்கலாம் என்று   யோசிக்க வேண்டி வரலாம்” 

நோட்டோ உருவாக்கியது உலகப்போர்களை. தடுக்க தான்   

அது ஒரளவு வெற்றி பெற்று உள்ளது  நோட்டோ   அழிக்க    இன்னும் ஒன்று  மோசமாக வரத் தான்  செய்யும்    

🙏🤣😂

அந்த நாடுகள் தங்கள் இறையாண்மை தங்கள் சட்டம் தமக்குரிய சட்டங்களை நிர்ணயித்து வைத்திருக்கின்றார்கள்.அதற்குள் மேற்கு நாடுகள் ஏன் மூக்கை நுழைக்கின்றார்கள்?
மனித உரிமை என சொல்லி சீனாவிலும் அரபு நாடுகளிலும் மரணதண்டனைகளை கண்டிப்பார்கள். இதே மரணதண்டனைகள் அண்ணன் அமெரிக்காவில் நடந்தால்......

இது போன்ற நடவடிக்கைகள் தான் நான் முரண்பட காரணம். 😎

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டி

valavan

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்க

nunavilan

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Justin said:

தரவு (data) Statista  வில் இருந்து பெறப்பட்டதால்

தரவை குறித்து எந்த கருத்தும் என்னிடம்  இல்லை. அந்த தரவு உண்மை என்று எடுத்து, உங்களின் ஊகத்தை மட்டும். 

உக்கிரைன் இராணுவ தலைமை, உங்களில் ஊக முடிவை எடுத்து இருபதற்கான சாத்தியக்கூறுகள்.

4000 (நான் சொல்லவில்லை, மேலே சொல்லப்பட்டு இருப்பது ) சண்டை பிடிக்க  படையை நீங்கள் சொல்பவது போல சிங்க குகைக்குள் அனுப்புவது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் ஐரோப்பிய அரசியலையும் ஆசிய அரசியலையும் ஒன்றாக்கி விடை காணமுடியாமல் தவிக்கின்றீர்கள் போல் தெரிகின்றது.

எங்கள் அரசியலும் பிரச்சனைகளும் வேறு விதமான அரசியல்பிரச்சனைகளை கொண்டது. அயல்நாடுகளின் அரசியலில் ஈழ அரசியலும் சிக்கி தவிக்கின்றது. மேற்கத்திய அரசியல் எமக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை.

நான் எங்கள் வீடு என்று சொல்வது நாம் வாழும் நாடு. இதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால்....???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

நான் எங்கள் வீடு என்று சொல்வது நாம் வாழும் நாடு. இதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால்....???

அதாவது நீங்கள் ஒரு ஐரோப்பியன். 
அதை மூலமாக வைத்துத்தான் நீங்கள் கருத்தெழுதுகின்றீர்கள் என முடிவு செய்யலாமா?

ஆம் அல்லது இல்லை என்ற பதில் மட்டும் இருந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விசுகு said:

நான் எங்கள் வீடு என்று சொல்வது நாம் வாழும் நாடு. இதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால்....???

ஆகா   ஆ.    அப்படியென்றால்   இலங்கை    திண்ணையா.??அல்லது கோடியா ???😂🤣🤣😂.    நல்லது உங்கள் விருப்பம்   நானும் கூட   எனது நாடு என்பது ஜேர்மனியை தான்       ஆனால் ஒருவரும்.   நம்புகிறார்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்சியா - உக்ரைன் யுத்தத்தின் ஆரம்பத்தில் ரஷ்சியா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தது. இப்போது ரஷ்சியா மீதான ஊடுருவலுக்கு பாவிக்கப்பட்ட பகுதியும்.. உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தது.

பின்னர் துருக்கியினூடாக கெஞ்சிமன்றாடி.. ரஷ்சியாவுக்குள் நுழைந்து தாக்கவோ.. ரஷ்சியாவுக்குள் தாக்குதலை நடத்தவோ மாட்டம் என்ற பொய் வாக்குறுதியை வழங்கி தான்.. ரஷ்சியப் படைகளை ரஷ்சியா தானா வெளியேற்றிக் கொள்ள சம்மதிக்கப்பட்டது.

இப்போ அமெரிக்காவினதும்.. நேட்டோவினதும் தேவைக்காகவே இந்த ஊருடுவல் தாக்குதல். இதில் நேட்டோ படைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக செயற்படுவது தெரிந்ததே. மோல்டாவாவுக்கு ரஷ்சியா எச்சரிக்கை வழங்கி இருக்கிறது. 

இந்த ஊருடுவல் என்பது நேட்டோ வினது நேரடியான ரஷ்சிய ஆக்கிரமிப்புச் செயல். இதன் மூலம் உக்ரைனுக்கு எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. 

உக்ரைன் கோமாளி சனாதிபதி அமெரிக்காவினதும் ஈயுவினதும் நேட்டோவினதும் ஆட்டத்துக்கு ஆடம் பொம்மை.

நிச்சயம் ரஷ்சியா இந்த நேட்டோ ஆக்கிரமிப்புக்கு எதிராக நிச்சயம் பதில் அளிக்கும்.

மேலும் நேட்டோ ரஷ்சியாவுக்குள் ஊருடுவுவது இது முதல் தடவை அல்ல. ஏலவே சி ஐ ஏ ஊடாக வாக்னர் ரஷ்சிய கூலிப்படையை விலைக்கு வாங்கியும் அதன் பின்னர் ரஷ்சியாவுக்கு எதிரான அமைப்புக்கள் என்ற பெயரிலும் ஏலவே பல தடவைகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் ஊருடுவல் தாக்குதலை செய்துள்ளன.

என்ன வாக்னர் குழுவைப் போல சட சட என்று மொஸ்கோ நோக்கி நகரலாம் என்ற கனவு பலிக்கவில்லை. 

டான்பாஸ் உட்பட்ட கிழக்குப் பகுதி இராணுவ நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தமை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகளுக்கு உக்ரைன் அவமானத்தையே தேடிக் கொடுத்திருந்தது. அதனால் தான் இந்த ஊடுருவலை கொஞ்சம் அகலப்படுத்தி வெற்றி விளம்பரமாக்கிக் கொண்டிருக்கிறது உக்ரைனின் கோமாளி சனாதிபதியும் அதன் கூட்டமும். 

ஏலவே டான்பாஸ் முழுவதுமாக ரஷ்சியாவிடம் இழக்கப்படும் நிலை தோன்றிவிட்ட நிலையில்.. அதன் கவனத்தை திருப்பமும் நேட்டோ அமெரிக்காவை ஆசுவாசப்படுத்தவும் அவர்களின் இராணுவ வெற்றி வெறித்தனத்தை இனங்காட்டவுமே இந்த தாக்குதல். இதில் இழக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி ரஷ்சிய உயிருக்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இதனை ஏலவே பிரிட்டனை சேர்ந்த உயர் ராணுவ அதிகாரியே சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார். இந்த ஊருவலால்.. ரஷ்சிய இராணுவத்தின் தாக்குதல் திறனை குறைக்க முடியுமோ தெரியவில்லை.. ஆனால் ரஷ்சியாவை அதி கோபப்படுத்தி உக்ரைனை நாசமாக்கப் போகிறார்கள் என்று எச்சரித்திருக்கிறார் அந்த அதிகாரி.

ஆனால் அமெரிக்காவோ.. கமோன்.. கிமோன் என்று உசுப்பேத்திவிட்டு இப்போ தமக்கும் இந்த ஊடுருவலுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. அண்மையில் தான் ரஷ்சியாவுக்குள் தாக்குதல் நடத்த பைடன் நிர்வாகம் சம்மதி அளித்ததாகச் சொல்லப்பட்டாலும்.. உக்ரைன் ஏற்கனவே பல ஊடுருவல் தாக்குதலை தானாகவும் புரொக்சியாகவும் செய்தே வந்துள்ளது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அதாவது நீங்கள் ஒரு ஐரோப்பியன். 
அதை மூலமாக வைத்துத்தான் நீங்கள் கருத்தெழுதுகின்றீர்கள் என முடிவு செய்யலாமா?

ஆம் அல்லது இல்லை என்ற பதில் மட்டும் இருந்தால் நல்லது.

ஆம் 

பிறந்த மண்ணில் இருந்து கலைக்கப்பட்டாச்சு

இருக்கும் இடத்தையாவது பகைவர்களிடமிருந்து காக்கணும். இது சுயநலம் என்றால் அதில் பொதுநலனும் சேர்ந்தே இருக்கிறது. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெல்கொரொட் எல்லையில் அவசரநிலையை பிரகடனம் செய்தது ரஸ்யா - உள்ளே ஊருடுவிய உக்ரைன் படையினர் தொடர்ந்தும் தாக்குதல்

Published By: RAJEEBAN   14 AUG, 2024 | 11:28 AM

image
 

உக்ரைனிய படையினரின் புதிய தாக்குதல்களை தொடர்ந்து ரஸ்யா தனது பெல்கொரொட் எல்லை பிராந்தியத்தில் அவசரகால நிலைமையை அறிவித்துள்ளது.

ரஸ்யாவிற்குள் ஊருடுவியுள்ள உக்ரைனிய படையினர் பல சதுர கிலோமீற்றரினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே பெல்கொரொட் எல்லையில் ரஸ்யா அவசரநிலைமையை  பிரகடனம் செய்துள்ளது.

ukraine_tanksss.jpg

பெல்கொரொட் பிராந்தியத்தில் நிலைமை  தொடர்ந்தும் கடினமானதாக பதற்றமானதாக காணப்படுகின்றது என பெல்கொரொட் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய படையினர் முன்னேறத் தொடங்கியதை தொடர்ந்து பெல்கிரொட்டின் எல்லைப்பகுதிகளில் இருந்து  பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பாரத விதத்தில் தனது தந்திரோபாயங்களில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள உக்ரைன் ரஸ்யாவிற்குள் ஊருடுவியுள்ளது.

ukrane_armyyyyyyyyyyyyy.jpg

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ரஸ்யாவிற்குள் வேறுநாட்டு படையொன்றை நுழைந்துள்ளமை இதுவே முதல் தடவை.

https://www.virakesari.lk/article/191061

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க இராணுவ அனுசரணையுடன் ரான்ட் அமைப்பின் இரஸ்சியா தொடர்பான ஆய்வு உக்கிரேன் இரஸ்சியா போரிற்கு முன்னரான அறிக்கை (2019).

https://www.rand.org/pubs/research_reports/RR3063.html

இந்த தளத்தில் பி டி எப் தரவிறக்கம் மூலம் முழு அறிக்கையினையும் தரவிறக்கிக்கொள்ளலாம்.

இவ்வாறான அறிக்கைகள் ஒரு தெளிவான புரிதலை எம்மவர்களிடையே ஏற்படுத்தலாம் என கருதுகிறேன்.

இரஸ்சியாவிற்குள் ஊடுருவியதன் மூலம் எவ்வாறான இராணுவ, அரசியல் ரீதியான இலாபத்தினை உக்கிரேன் பெறுகிறது?

இதில் சாதகம் என எதுவும் தெரியவில்லை ஆனால் பாதகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

 

இவ்வாறான அறிக்கைகள் ஒரு தெளிவான புரிதலை எம்மவர்களிடையே ஏற்படுத்தலாம் என கருதுகிறேன்.

இரஸ்சியாவிற்குள் ஊடுருவியதன் மூலம் எவ்வாறான இராணுவ, அரசியல் ரீதியான இலாபத்தினை உக்கிரேன் பெறுகிறது?

இதில் சாதகம் என எதுவும் தெரியவில்லை ஆனால் பாதகம் உள்ளது.

அவை எவை என்று எழுதினால் நாங்களும் ஆராயலாம். 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முதலாக இன்னொரு நாட்டின் இராணுவம் ரசியாவுக்குள் வந்திருக்கிறது என்பதை விட வரும் தைரியத்தை பெற்றிருக்கிறது. இன்னொரு நாட்டின் இராணுவத்திற்கு பயந்து மக்களை வெளியேற்றி அவசரகால நிலையை கொண்டு வரும் அளவுக்கு ரசியா பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை புட்டின் உணர்ந்து கொண்டால் பாரிய மாற்றங்கள் உலக ஒழுங்கில் நடக்கும். உணராவிட்டாலும் நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அவை எவை என்று எழுதினால் நாங்களும் ஆராயலாம். 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முதலாக இன்னொரு நாட்டின் இராணுவம் ரசியாவுக்குள் வந்திருக்கிறது என்பதை விட வரும் தைரியத்தை பெற்றிருக்கிறது. இன்னொரு நாட்டின் இராணுவத்திற்கு பயந்து மக்களை வெளியேற்றி அவசரகால நிலையை கொண்டு வரும் அளவுக்கு ரசியா பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை புட்டின் உணர்ந்து கொண்டால் பாரிய மாற்றங்கள் உலக ஒழுங்கில் நடக்கும். உணராவிட்டாலும் நடக்கும். 

விசுகர், 

உக்ரேனியர்கள் மீதான தனது  பழைய வஞ்சத்தை தீர்த்துக்கொள்வதாகத் தோன்றுகிறது.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ரஸ்யாவிற்குள் வேறுநாட்டு படையொன்றை நுழைந்துள்ளமை இதுவே முதல் தடவை.

உக்கிரேன்.  ஒரு தனி நாடு  என்று மேற்படி செய்தி உறுதிப்படுத்துகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேட்டோ ரஷ்யாவுக்குள் புகுந்து அடித்தது என்ற கதைகளை எங்களுடனே வைத்து கொள்வோம் 😄

2 hours ago, விசுகு said:

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முதலாக இன்னொரு நாட்டின் இராணுவம் ரசியாவுக்குள் வந்திருக்கிறது என்பதை விட வரும் தைரியத்தை பெற்றிருக்கிறது. இன்னொரு நாட்டின் இராணுவத்திற்கு பயந்து மக்களை வெளியேற்றி அவசரகால நிலையை கொண்டு வரும் அளவுக்கு ரசியா பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை புட்டின் உணர்ந்து கொண்டால் பாரிய மாற்றங்கள் உலக ஒழுங்கில் நடக்கும். உணராவிட்டாலும் நடக்கும். 

இது கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளி 🖕

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷ்யாவில் ஆக்கிரமிப்பு-யுக்ரேனிய படை செய்தது என்ன? எச்சரிக்கும் புதின்

ரஷ்ய எல்லையில் ஊடுருவிய யுக்ரேனிய படை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ரஷ்ய எல்லைப் பகுதியில் இருந்து ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை தற்போது ஆக்கிரமித்துள்ளது யுக்ரேனிய படை கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், சுமி பிராந்தியம்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆங்கில எழுத்து Z யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை குறிப்பிடும் முத்திரையாக பார்க்கப்படலாம். அதே வேளையில், முக்கோண வடிவம் யுக்ரேனின் மிக துணிச்சலான பதிலடியை பிரதிபலிக்கிறது.

சுமி பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய எல்லைப் பகுதியை நோக்கி செல்லும் ஒவ்வொரு சரக்கு வாகனம், ராணுவ சண்டை வாகனம்(டேங்க்) அல்லது தனிநபர் வாகனங்களின் இரு பக்கங்களிலும் முக்கோணங்களை வரைந்தோ அல்லது ஒட்டியோ வைத்துள்ளனர் யுக்ரேனியர்கள்.

குர்ஸ்க் எல்லைப் பிராந்தியத்தின் ரஷ்ய பொறுப்பு அதிகாரி, அந்த பிராந்தியத்தில் உள்ள 28 பகுதிகள் யுக்ரேனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 2 லட்சம் ரஷ்யர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய படையெடுப்பு பணியில் இருந்து திரும்பி வந்த தோமாஷ், இந்த படையெடுப்பு பரபரப்பற்றதாக இருந்தது என கூறுகிறார்.

அவர்களின் டிரோன் பிரிவு, இரண்டு நாட்கள் செலவழித்து, இந்த எல்லை தாண்டிய ஊடுருவலுக்கு வழி வகுத்து.

"நாங்கள் இங்கே வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதற்காக என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை," என்று கூறுகிறார் தோமாஷ். காபி குடிப்பதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் நின்ற தோமாஷுக்கு இந்த உத்தரவு வந்துள்ளது.

நாங்கள் எதிரிகளின் (ரஷ்யர்களின்) அனைத்துவிதமான தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முறியடித்து இந்த படையெடுப்புக்கு அனைத்தையும் சரி செய்து கொடுத்தோம் என்கிறார் தோமாஷ்.

யுக்ரேனிய படை எவ்வளவு தூரம் ரஷ்ய பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் ராணுவ தளபதி ஒலக்ஸாண்டர் சிர்ஸ்கி, கிட்டத்தட்ட ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு தற்போது யுக்ரேனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேற்கொண்டு யுக்ரேனிய படைகள் ரஷ்யாவுக்குள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக செவ்வாய்கிழமையன்று ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்தது. ஆனால் அவர்கள் கூறுவது தவறு என்று முன்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவோ, யுக்ரேன் இந்த ராணுவ முயற்சியில் உறுதியாக உள்ளது.

 

2022ம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, சுமி பிராந்தியத்தின் அண்டை பகுதியில் நான் பார்த்திராத பல நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இது வரவேற்கதக்க ஒன்று. ஆனால் இது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை முன்கூட்டியே கூறிவிட இயலாது.

இந்த ராணுவ தாக்குதலின் இலக்கு என்னவென்று இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா எங்கிருந்தெல்லாம் தாக்குதல் நடத்துமோ அந்த பகுதியை இலக்காக கொண்டு முன்னேறுவது, ''அமைதிக்கு'' அருகில் இட்டுச்செல்லும் என கூறினார்.

யுக்ரேன் தன்னுடைய தலைசிறந்த ராணுவ துருப்புகளை இந்த பணிக்காக களம் இறக்கியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

 
ரஷ்ய எல்லையில் ஊடுருவிய யுக்ரேனிய படை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,பீரங்கி வண்டி மீது அமர்ந்திருக்கும் யுக்ரேனிய வீரர்கள்

முன்னேறும் யுக்ரேனிய படையினர்

உடற்பயிற்சி செய்து நன்றாக தோற்றமளிக்கும் வீரர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களில் வலம் வருகின்றனர். சிலர் ஊடகங்களிடம் பேச மறுக்கின்றனர். சிலர் மிகவும் சோர்வுற்று இருக்கின்றனர்.

டெலிகிராம் செயலி மூலம், ரஷ்யாவில் இருக்கும் யுக்ரேன் வீரர் பேசிய போது, யுக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய துருப்புகளை வெளியேற்ற அந்நாட்டை கட்டாயப்படுத்த மாதக் கணக்கில் திட்டமிடப்பட்டதைப் பற்றி தெரிவிக்கிறார்.

"ஆச்சரியமாக இது நிறைவேறிவிட்டது. குறைவான எதிர்ப்புகளுடன் நாங்கள் ரஷ்யாவுக்குள் நுழைந்தோம். ஆகஸ்ட் 6ம் தேதி இரவு, முதல் குழுக்கள் பல்வேறு இடங்களில் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்தன," என்று கூறினார் அவர்.

"அவர்கள் உள்ளே நுழைந்ததும், சுத்ஸா நகரின் மேற்கு புற நகர் பகுதியை அடைந்தனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய எல்லையில் ஊடுருவிய யுக்ரேனிய படை  - பதிலடி தர இருப்பதாக அறிவித்த ரஷ்யா
படக்குறிப்பு,ரஷ்ய எல்லையில் ஊடுருவிய யுக்ரேனிய படை

ரஷ்யா கூறுவது என்ன?

இது போன்ற நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ரகசியத்தை பாதுகாக்கின்றனர். ஆனால் பொதுமக்களும் அப்படி இருப்பார்கள் என்று கூறிவிட இயலாது.

வான்வழி தாக்குதல் மற்றும் போர் மூண்ட பிறகு, எல்லையின் இரண்டு பகுதிகளிலும் ஆயிரக் கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

"நாங்கள் பார்க்கும் ரஷ்ய மக்கள் எங்களை எதிர்ப்பதில்லை," என்று தெரிவிக்கும் யுக்ரேனிய வீரர், "நாங்கள் அவர்களை தாக்குவதில்லை. ஆனால் அவர்கள் எங்களை எதிர்மறையாக அணுகுகின்றனர் அல்லது கோபத்துடன் நடத்துகின்றனர். அல்லது எதுவும் சொல்லாமல் கடந்துவிடுகின்றனர்," என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய துருப்புகள் தொடர்பாக அவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கார்கிவ், போக்ரோவ்ஸ்க் மற்றும் தொரேத்ஸ்க் போன்ற கிழக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் சில யுக்ரேனிய வீரர்களிடம் பேசினோம்.

ஆனால் ரஷ்ய படை மெதுவாக முன்னேறி வருவது குறித்து அவர்கள் எதுவும் நம்மிடம் தெரிவிக்கவில்லை.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ரஷ்யாவில் நடைபெற்றிருக்கும் முதல் ஆக்கிரமிப்புக்கு 'சரியான பதிலடி' தரப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் இரண்டு எல்லைப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,எல்லைப் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷ்ய மக்கள்

எல்லையோர பகுதிகளில் வசிக்கும் யுக்ரேனியர்கள் கருதுவது என்ன?

அச்சுறுத்தலை ஏற்படுத்த கூறப்பட்ட அவரின் வார்த்தைகள், தொடர்ச்சியாக ரஷ்ய ராணுவப்படைகளின் தாக்குதலுக்கு ஆளான, எல்லையோர பகுதிகளை இன்னும் சென்று சேரவில்லை.

ஸ்தெத்ஸ்கிவ்கா என்ற கிராமத்தில், மிஷாவும் அவருடைய நண்பர் வலேராவும் எங்களை தாண்டி அவர்களின் ஆரஞ்ச் நிற காரில் சென்றனர்

"அவர்கள் இதனை (குர்ஸ்க் பிராந்தியத்தை) எடுத்துக் கொண்டு இப்படி செய்யட்டும்," என்று கைகளை முறுக்கிறார் மிஷா.

"அவர்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். மாஸ்கோவையும் கூட எடுத்துக் கொள்ளட்டும்," என்கிறார் அவர்.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், ரஷ்யாவின் முழு அளவு படையெடுப்பால் தொடர்ச்சியாக இன்னலுக்கு ஆளாகி வருவதால் ஏற்பட்ட கோபம் மக்களிடம் நங்கூரமிட்டுள்ளது.

ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய யுக்ரேனிய படை
படக்குறிப்பு,மிஷாவைப் போன்ற பல யுக்ரேனியர்களும், தங்களின் படை குர்ஸ்க் பிராந்தியத்தை தாண்டியும் ரஷ்யாவுக்குள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்

"ரஷ்யா தான் முதலில் தாக்கியது. நாங்கள் இல்லை," என்கிறார் வலேரா. "தற்போது எங்களின் ராணுவத்தினர் அதற்கு பதலடி கொடுத்து அவர்களால் என்ன முடியும் என்பதை காட்டியுள்ளனர். எங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்திருந்தால் நாங்கள் இப்பகுதியை முன்கூட்டியே ஆக்கிரமித்திருப்போம்," என்று தெரிவித்தார் அவர்.

எல்லை தாண்டிய தாக்குதலுக்காக காத்துக் கொண்டிருந்த யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் பச்சைக் கொடி காட்டியிருப்பது போல் தெரிகிறது.

சுமியின் புறநகர் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை பார்த்தால் அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன.

கடந்த வாரம் வரை, ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாவதற்கான அச்சம் யுக்ரேனின் வடக்கு பகுதியில் நிலவி வந்தது. தற்போது யுக்ரேனின் இந்த படையெடுப்பு தோல்வி அடைந்தால், அந்த அச்சம் உடனே உறுதியாகிவிடும்.

யுக்ரேன் படை வீரர்களின் எண்ணிக்கை முன்பும் இப்போதும் ரஷ்ய படைவீரர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

இந்த பதில் தாக்குதலின் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தையில் தன்னுடைய இடத்தை யுக்ரேன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று யுக்ரேனியர்கள் பலர் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தையை மேலும் தாமதமாக்கவும் செய்யலாம்.

கூடுதல் செய்திகளுக்கா ஹன்னா க்ரோனஸ், சோஃபி வில்லியம்ஸ் மற்றும் அனஸ்தாசியா லெவ்சென்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

ஆம் 

பிறந்த மண்ணில் இருந்து கலைக்கப்பட்டாச்சு

இருக்கும் இடத்தையாவது பகைவர்களிடமிருந்து காக்கணும். இது சுயநலம் என்றால் அதில் பொதுநலனும் சேர்ந்தே இருக்கிறது. 

என்ன விசுகர்! ஏன் விசுகர்? 😄
பிரான்ஸ் ஜேர்மனி எல்லாம் எங்கடை நாடுகள் இல்லை. இஞ்சை நாங்கள் வாழவந்தவர்கள் மட்டுமே.நாங்கள் இவர்களின் அரசியல் சட்டங்களுக்கு அமைய வாழ்கின்றோம் அவ்வளவே. மற்றும்படி அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் விசர்த்தனமான முடிவுகளுக்கெல்லாம் நாங்கள் ஆதரவளிக்க தேவையில்லை.இன்று சண்டை பிடிக்கும் அரசியல்வாதிகள் நாளை தோழர்கள் ஆகிவிடுவார்கள்.
நான் ஜேர்மனிய சட்டங்களை மதித்து நடக்கின்றேன். ஆனால் இது எனது நாடு என நினைத்ததில்லை.இவர்கள் செய்யும் அரசியலில் நாம் கருத்து சொல்லலாமே தவிர வேறேதும் எடுபடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Kapithan said:

ரஸ்யப் பிராந்தியத்திற்குள் புகுந்தது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரஸ்ய படைகளின் கவனத்தை இங்கே திருப்பிவிட்டு இன்னொரு முனையில் Offensive operation ஒன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. 

இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் அழிப்பை இந்தியாவும்,சர்வதேசமும் சேர்ந்து  செய்தன என்று கூறுபவர்கள் தான் உக்ரேன் தனியாக நின்று போரிடுகின்றது என வாதாடுகின்றனர்.😎


அதுசரி உக்ரேனின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரஷ்ய பொதுமக்களையும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேன் அகதிகளை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றது போல் அவர்களுக்கும் அகதி தஞ்சம் கொடுப்பார்களா? 🤣

HTTP Vadivelu Status Codes

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, குமாரசாமி said:

என்ன விசுகர்! ஏன் விசுகர்? 😄
பிரான்ஸ் ஜேர்மனி எல்லாம் எங்கடை நாடுகள் இல்லை. இஞ்சை நாங்கள் வாழவந்தவர்கள் மட்டுமே.நாங்கள் இவர்களின் அரசியல் சட்டங்களுக்கு அமைய வாழ்கின்றோம் அவ்வளவே. மற்றும்படி அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் விசர்த்தனமான முடிவுகளுக்கெல்லாம் நாங்கள் ஆதரவளிக்க தேவையில்லை.இன்று சண்டை பிடிக்கும் அரசியல்வாதிகள் நாளை தோழர்கள் ஆகிவிடுவார்கள்.
நான் ஜேர்மனிய சட்டங்களை மதித்து நடக்கின்றேன். ஆனால் இது எனது நாடு என நினைத்ததில்லை.இவர்கள் செய்யும் அரசியலில் நாம் கருத்து சொல்லலாமே தவிர வேறேதும் எடுபடாது. 

நிச்சயமாக உங்கள் கருத்துடன் உடன்படமாட்டேன். அரவணைத்து உயிர் தந்தவரை உயிர் உள்ளவரை மறவேன். நான் எனது சந்ததி வாழப்போகும் நாடுகள் இவை தான்..

Edited by விசுகு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, vasee said:

இரஸ்சியாவிற்குள் ஊடுருவியதன் மூலம் எவ்வாறான இராணுவ, அரசியல் ரீதியான இலாபத்தினை உக்கிரேன் பெறுகிறது?

இதில் சாதகம் என எதுவும் தெரியவில்லை ஆனால் பாதகம் உள்ளது.

சாதகமோ, பாதகமோ உக்ரைன் தன் நலன்களுக்கு ஏற்புடையதைத் தான் செய்ய முடியும்.

"உக்ரைன் சுருண்டு விடாமல் ரஷ்யாவை எதிர்த்து போர் தொடங்கியதால், லண்டனில் நான் சலாட்டிற்குப் போடும் மரக்கறியின் விலை ஏறி விட்டது!" 😎என்று முறைப்பாடு செய்யும் உக்ரைனியர் அல்லாத நோக்கர்களின் நலன்களுக்காக உக்ரைன் முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை.

நான் ஊகிப்பது, உக்ரைன் குறுகிய காலப் போக்கில் கிழக்கில் இருக்கும் இராணுவ அழுத்தத்தை சிறிது தளர்த்த முயன்றிருக்கிறது. நீண்ட காலப் போக்கில் "தற்கால ரஷ்யா, 40 களில் இருந்த சோவியத் இராணுவ வல்லமையைக் கூட கொண்டிருக்கவில்லை" என்ற விம்பம் ஏற்பட்டிருக்கிறது.

இது ரஷ்ய ஆதரவாளர்களுக்கே உறைத்திருக்கும் போது, யாழ் களத்தில் இருக்கும் ஓரிரு "புரினின் புருஷன்மாருக்கு" (நீங்கள் அல்ல) உறைக்காமல் விடுமா😂?  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

நிச்சயமாக உங்கள் கருத்துடன் உடன்படமாட்டேன். அரவணைத்து உயிர் தந்தவரை உயிர் உள்ளவரை மறவேன். நான் எனது சந்ததி வாழப்போகும் நாடுகள் இவை தான்..

நீங்கள் பிறந்த, எழுத்தறிவித்த, இலவசக் கல்வி, மருத்துவம்  தந்த நாட்டிற்கு என்ன செய்வதாக உத்தேசம்? 

உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

உக்ரேன் யுத்தத்தை  ஆரம்பித்தது

உக்கிரேன். யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை ரஷ்யா தான் ஆரம்பித்தது,......சரியா??? 

13 minutes ago, Kapithan said:

நீங்கள் பிறந்த, எழுத்தறிவித்த, இலவசக் கல்வி, மருத்துவம்  தந்த நாட்டிற்கு என்ன செய்வதாக உத்தேசம்? 

உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவும். 

இப்ப காலம் மாறியுள்ளது,........பெற்றோர்களையோ    சொந்த பிள்ளைகள் பார்ப்பதில்லை..இதுக்கே இலவசமாக கல்வி மருத்துவம்,. .....அவர்களின் சொந்த பணத்தில்   உழைப்பில் தந்தாங்களே??? மக்களின் வரிப்பணத்தில். தான்  அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கும்  அந்த வரி பணத்தினால் தான் இலவசமாக கல்வி மருத்துவம் கிடைக்கிறது 

எங்கள் தலைகளில். குண்டுகள் போட்டவர்களுக்கு  எதுவும் செய்ய தேவையில்லை 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனின் ராணுவ உடைக்குள் நேட்டோ அணி புகுந்துள்ளதாக பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேனின் ராணுவ உடைக்குள் நேட்டோ அணி புகுந்துள்ளதாக பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பல வீடியோக்களில் உ துருப்புக்களின் சொந்த நாட்யு இலச்சினைகளை காணக்கூடியதாக உள்ளது. 

அணு மின்நிலையத்தைத்தான் கைப்பற்றுவது அவர்களின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனக்கூறப்படுகிறது. 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, Kapithan said:

நீங்கள் பிறந்த, எழுத்தறிவித்த, இலவசக் கல்வி, மருத்துவம்  தந்த நாட்டிற்கு என்ன செய்வதாக உத்தேசம்? 

உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவும். 

உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அவை யதார்த்தத்தை விடுத்து பழி வாங்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. 

என் இனத்திற்கு நான் என்றும் உணர்வாளனாக பணியாளனாக பங்களிப்பாளியாக நன்றி உள்ளவனாக இருந்து இருக்கிறேன் இருக்கிறேன்.

ஆனால் எம் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு அதிகாரத்தை எம் மீது திணிக்க எனக்கு போடப்பட்ட பிச்சைகளுக்கு அல்ல. அதை ஒரு போதும் நான் ஏற்கவில்லை. ஏற்கவும் மாட்டேன். வாழு வாழ விடு என்பதே என்றும் எனது நிலைப்பாடு. 

பிச்சைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்து ஆபிரிக்க மக்களை அதிகாரம் செய்தார்கள் என்று மேற்கை வசை பாடுவதும் அதையே செய்யும் சிங்களத்தை கனம் செய்யும் படி என்னை தூண்டுவதும் உங்கள் இரட்டை வேடத்தை இங்கே உரிந்து விட்டது. டொட். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா ரஷ்ய ராணுவம்? 5 கேள்விகளும் பதில்களும்

ரஷ்யாவில் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த தாக்குதலை ‘கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என்று குற்றம்சாட்டியுள்ளார். யுக்ரேன் படைகளை ரஷ்ய எல்லையில் இருந்து துரிதமாக விரட்டியடிக்க வேண்டும் என்று ரஷ்ய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் - ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நிலவி வருகிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்த யுக்ரேன் முடிவு செய்தது ஏன்?

யுக்ரேனின் எல்லைக் கடந்த இந்த நடவடிக்கை தொடர்பாக இதுபோன்ற 5 கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்குச் சொல்லவிருக்கிறோம்.

கர்ஸ்க் பகுதியில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் 6 ஆம் தேதி, யுக்ரேன் எல்லையோரம் உள்ள ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் யுக்ரைன் இராணுவ வீரர்கள் திடீரென தாக்குதலை துவங்கினர். இந்த தாக்குதல் எவ்வளவு பெரிது என்பது குறித்த துல்லியமான தகவல்களை சேகரிப்பது கடினம்.

ஆரம்பத்தில், இந்த நடவடிக்கை விளாடிமிர் புதினின் அரசாங்கத்தை எதிர்க்கும் ரஷ்ய குழுக்களின் ஊடுருவலாக தோன்றியது. இந்த குழுக்கள் யுக்ரேன் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் எதிரிகளுடன் கடும் சண்டை நடந்ததாக ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் (MIlitary Bloggers) தெரிவித்தனர்.

ரஷ்யாவின் சில கிராமங்கள் யுக்ரேன் வசம் பிடிப்பட்டதை அடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது யுக்ரேன் படைகள் தான் என்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டது என அதிபர் புதினிடம் கர்ஸ்க் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எல்லையில் பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தின் வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவெடுத்ததாக தெரிகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத யுக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், ‘நாங்கள் ஆக்ரோஷமாக உள்ளோம். எதிரி வீரர்களை முடிந்தவரை காயப்படுத்த முயற்சிக்கிறோம். ரஷ்யாவால் தனது சொந்த எல்லையை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் ரஷ்யாவை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற விரும்புகிறோம்.’ என்றார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் மீது தாக்குதல் யுக்ரைன் நடத்தியது ஏன்?

ஆரம்பத்தில் யுக்ரேன் இந்த தாக்குதல் குறித்து அமைதி காத்து வந்தது. பின்னர், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

'யுக்ரேன் தொடர்ந்து போரை ஆக்கிரமிப்பாளர்களின் எல்லைக்குள் எடுத்து செல்லும்’ என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று, சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் அளவிலான ரஷ்ய நிலப்பரப்பை கைப்பற்றியிருப்பதாக யுக்ரேன் அறிவித்தது.

யுக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவின் கவனத்தை திசை திருப்புவது இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

கடந்த பல மாதங்களாக தனது கிழக்கு எல்லை வழியே ரஷ்ய இராணுவம் ஊடுருவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறுகிறது யுக்ரைன்.

ரஷ்ய இராணுவ படைகள் கடந்த மாதம் புவியியல் ரீதியாக முக்கியமான நகரமான சாசிவ் யார் (Chasiv Yar) பகுதியைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றன. யுக்ரேனின் நிலைமை வட-கிழக்கு மற்றும் தெற்கில் கடினமாகவே உள்ளது.

தனது கிழக்கு பகுதிகளில் நிலைமையை இலகுவாக்குவதற்காக, ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதிக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவு செய்துள்ளது.

ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,யுக்ரேனின் துருப்புகளை திரும்பப் பெறுமாறு கோரும் ஆர்வலர்கள்

ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பிடுகையில் யுக்ரேன் ராணுவம் எண்ணிக்கையிலும், ஆயுத ரீதியாகவும் சிறியது. ஆனாலும், யுக்ரேனிய ராணுவ அதிகாரிகள் இந்த ‘சூதாட்டம்’ போன்ற தாக்குதலை நடத்தி ரஷ்ய துருப்புக்களை சிதறடித்தனர்.

பிபிசியிடம் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் மார்க் கலியோட்டி இதுகுறித்து பேசுகையில், "யுக்ரேன் கடந்த சில மாதங்களாக போர்க்களத்தில் சிக்கியுள்ளது. போர்க்களத்தில் மிகச்சிறிய அளவிலேயே இயங்கி வந்தது. இப்போது, தாக்குதலை மேற்கொள்ள துணிந்து செயல்பட வேண்டி இருக்கிறது." என்றார்.

ஒரு யுக்ரேனிய தளபதி, தி எகனாமிஸ்ட் பத்திரிகையிடம் பேசுகையில், இது ஒரு சூதாட்டம் என்று கூறினார்: "எங்கள் முன்கள படைகளை, அவர்களின் மிகவும் அபாயகரமான எல்லை பகுதிக்குள் அனுப்பியுள்ளோம்." என்றார்.

ஆனாலும், யுக்ரேன் எதிர்பார்த்த அளவுக்கு இந்த தாக்குதல் வேகமான பலனளிக்கவில்லை என்றார்.

‘ரஷ்ய தளபதி ஒன்றும் ஒரு முட்டாள் அல்ல. அவர்கள் தனது இராணுவத்தை முன்னோக்கி நகர்த்துகின்றனர். ஆனால் நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக இல்லை. எங்களால் ஆயுத தளவாடங்களை 80 அல்லது 100 கிமீ வரை நீட்டிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.’ என்று அவர் கூறினார்.

 

ரஷ்யாவின் பதிலடி என்ன?

யுக்ரேன் தாக்குதலால் கர்ஸ்க் பகுதியில் இருந்து 1,20,000 பேரையும், அண்டை மாகாணாமான பெல்கொரோட்டில் (Belgorod) இருந்து மேலும் 11,000 பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு நபருக்கு $115 வீதம் இழப்பீடு வழங்கியுள்ளது. அப்பகுதிகளில் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் புதின் தலைமையில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தில் ஜெனரல் ஜெரசிமோவ் கலந்து கொள்ளவில்லை.

புதினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான பெடரல் பாதுகாப்பு சேவையின் (FSB) தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சம்பவங்கள் குறித்த தனது சமீபத்திய அறிக்கையில், அமைதியான குடிமக்களை உக்ரைன் தாக்குவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். இதற்கு "தகுந்த பதிலடி" அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

யுக்ரேன் ரஷ்யாவிடம் இருந்து உண்மையான அச்சுறுத்தலை கடுமையான பதிலடி மூலம் எதிர்கொள்ள நேரிடும் என பேராசிரியர் கலியாட்டி (Galeotti) கூறியுள்ளார்.

"தனது வேண்டுகோள் மூலம் புதின் அவரது ஆயுதப் படையில் லட்சக்கணக்கான வீரர்களை சேர்க்க முடியும். மோதலை அதிகரிக்க ரஷ்யா வேறு வழிகளைக் கண்டறியும்" என்று அவர் கூறினார்.

சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் குண்டுவீச்சால் யுக்ரேனின் எரிசக்தி கட்டமைப்பின் பெரும்பகுதி அழிந்தது (அல்லது) சேதமடைந்தது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறக்கூடும்.

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரஷ்ய எல்லையில் யுக்ரேனிய துருப்புகள்

யுக்ரேன் போரின் போக்கையே மாற்றிவிட்டதா?

மார்க் கலியாட்டி, "ரஷ்யாவுக்கு யுக்ரேன் கைப்பற்றியுள்ள பகுதி சுமார் 50 மைல் நீளமும் 20 மைல் அகலமும் கொண்டதாகும். ரஷ்யாவின் ஒட்டுமொத்த பரப்புடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. ஆனாலும் இதன் அரசியல் தாக்கம் மிகவும் முக்கியமானது."என்று கூறினார்.

யுக்ரேன் தனது மேற்கத்திய நட்பு நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம், அதன் இராணுவத்தால் தொடர்ந்து சண்டையிட முடியும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

இது குறைந்தபட்சம் தற்காலிகமாக பேச்சுவார்த்தை நடத்தும் யுக்ரேனின் திறனை அதிகரித்துள்ளது.

யுக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லைக்குள் 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால், போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு பரிந்துரையையும் ரஷ்யா ஏற்பதற்கு சாத்தியமில்லை.

யுக்ரேனின் இந்த நடவடிக்கை, ரஷ்யர்களிடையே போர் குறித்த சொல்லாடலை மாற்றியதுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இனி "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று பெயரிடப்பட்ட முடியாத மோதலாக பார்க்கப்படும். ஏனெனில், யுக்ரேனின் நடவடிக்கை அவர்களை நேரடியாக பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

"ரஷ்யாவில் ஊடகக் கட்டுப்பாடு அமலில் உள்ள சூழலிலும், மக்கள் சிலர் கேள்விகளைக் கேட்க துவங்கியுள்ளனர் என்பது கர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து வரும் தகவல்களில் இருந்து தெளிவாகிறது." என்று பிபிசியின் கிழக்கு ஐரோப்பிய செயதியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் கூறுகிறார்

ரஷ்யா-யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரஷ்யா-யுக்ரேன் போரில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய தாக்குதல் (கோப்பு படம்)

ஜெலன்ஸ்கி மற்றும் புதின் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கம் வரும்?

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இதுவொரு ஒரு முக்கிய தருணம் ஆகும்.

விளாடிமிர் புதின், பெரும்பாலும் ஒரு சர்வாதிகார மற்றும் கடுமையான தலைவராகக் கருதப்படுகிறார். அவர் தனக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்பு சேவைகளை நம்பியிருக்கிறார்.

யுக்ரேனின் எதிர்பாராத தாக்குதல் அவர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைப்பது கடினமாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இடம்பெயர்ந்துள்ளதால், நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, அல்லது இது முழுமையான போர் அல்ல என்ற பிம்பத்தை கட்டமைப்பதும் இனி கடினமாகும்.

பல காரணங்களுக்காக, ரஷ்யாவிற்குள்ளான யுக்ரேனின் இந்த தாக்குதல் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-க்கும் சம அளவவில் பிரச்னையாக அமையலாம்.

யுக்ரேனில் போர் நடக்கும் மிக முக்கியமான இடங்களில் இருந்து ரஷ்யா தனது படைகளை பின்வாங்கினால் யுக்ரேனுக்கு அது சிறந்த பலனாக அமையும் என்று ஆய்வாளர் எமில் கஸ்தெல்மேயர் (Emil Kaszthelmeyer) கருதுகிறார்.

இது யுக்ரேனியர்களை சிறிது காலத்திற்கு உற்சாகமாக உணரவைக்கும் அதே வேளையில், அதன் கிழக்குப் பகுதியில் ரஷ்யா இன்னும் அதிகமான நிலங்களைக் கைப்பற்றுவதற்கு இது வழிவகுக்கக் கூடும்.

இங்கு இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது, இன்னும் உறுதி செய்யப்படாத போதிலும் சில ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் வெற்றிகள் குறித்து பேசுகின்றனர்.

போரில் தற்போது நிலவும் தேக்கநிலைக்கு தீர்வு காண்பதற்கு விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேராசிரியர் கலியோட்டி கூறுகிறார். இருப்பினும், கொந்தளிப்புகள் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்ய ராணுவம் யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா? 5 கேள்விகளும் பதில்களும் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

உக்ரேனின் ராணுவ உடைக்குள் நேட்டோ அணி புகுந்துள்ளதாக பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ரஷ்ய சார்பு ஆய்வாளர்கள் இப்படி சொல்லத்தானே வேண்டும்? இல்லாமல், "உக்ரைன் படைகளை எதிர்க்க இயலாமல் ரஷ்யா தடுமாறுகிறது" என்று அவர்கள் ஒப்புக் கொள்வார்களா😂?

ஆனால், ரஷ்யாவின் இராணுவ பலத்தை (அல்லது பலமில்லாமையை) தோலுரித்துக் காட்டிய 3 வது சந்தர்ப்பம் இது: 1. கியேவ் நோக்கி டீசல், தண்ணீர் எதுவும் கொண்டு வராமல் வந்து முன்னேற இயலாமல் திரும்பிப் போனது, 2. பிரிகொஷினின் கூலிப் படை மொஸ்கோ நோக்கி முன்னேறும் போது தடுக்காமல் றோட்டைக் கிண்டியது. இப்போது இது!

எனவே, இது தான் உக்ரைன் ஊடுருவலின் விளைவு: விம்ப உடைப்பு. 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.