Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சார கூட்டம்

மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை | Sarath Fonseka Election Meeting Not Even 5 People

அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.

பொன்சேகாவுக்கு ஏமாற்றம்

இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை | Sarath Fonseka Election Meeting Not Even 5 People

அந்தத் தேர்தலில் 4,173,185 வாக்குகளை பொன்சேகா பெற்றார். அது மொத்த வாக்குகளில் 40.15 வீதமாகும்.

எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://tamilwin.com/article/sarath-fonseka-election-meeting-not-even-5-people-1724206210

  • கருத்துக்கள உறவுகள்

பீல்ட் மார்சலின் பீல்ட் வெட்டையாக உள்ளதே. மோட்டார் சைக்கிளில் செல்பவர் ஒரு மரியாதைக்குதானும் மேடைப்பக்கம் திரும்பி பார்க்க இல்லையோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைகளுடன் பேசிய பொன்சேகா; முதலாவது கூட்டத்திலேயே ஏமாற்றம்

முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை.

அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.

இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார்.

எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/308146

  • கருத்துக்கள உறவுகள்

அவரது குடும்பத்தில் இருந்து கூட ஐந்துபேர்  வரவில்லையா .......... வந்திருந்தால் பழமொழிக்கு சரியாக இருந்திருக்கும் . ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைவிட சிங்களவர்கள் தெளிவாக உள்ளனர். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

image_3f57894da1.jpg

பொன்ஸ்... கொண்டு வந்த காரை பார்த்திட்டு... 
சனம் பயத்திலை கூட்டத்திற்கு  வரவில்லையோ...
சொந்த செலவிலை... சூனியம் வைத்த கதையாய்  போய் விட்டது. 😂

6 hours ago, நியாயம் said:

பீல்ட் மார்சலின் பீல்ட் வெட்டையாக உள்ளதே. மோட்டார் சைக்கிளில் செல்பவர் ஒரு மரியாதைக்குதானும் மேடைப்பக்கம் திரும்பி பார்க்க இல்லையோ. 😁

துஷ்டரை கண்டால் தூர விலகு என்ற பழமொழியை அவருக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

image_3f57894da1.jpg

cats.jpg

தாக்குதல் நடந்தபோது இருந்த காருக்கும், இப்போ பொன்சேகா பார்வைக்கு வைச்சிருக்குற காரின் ஓட்டைகளுக்கும் உள்ள வித்தியாசம்.

நம்மில் பலர் குண்டுகளோடு குண்டுகளாய் வாழ்ந்துவிட்டும் பல குண்டுவெடிப்புகளை பார்த்துஇட்டும்  வந்தவர்கள் .

எந்த ஊரில் குண்டு வெடிச்சா இப்படி சமச்சீராக பொட்டு வைச்சமாதிரி ஒரே அளவிலிருக்கும்?

அனுதாபம் தேடுவதற்காக ஒடிஜினல் ஓட்டைகளோடு  கராஜ்சுக்கு கொண்டுபோய் எக்ஸ்ட்ராவா ஓட்டைபோட்டு கொண்டு வந்திருக்காரு போலும்.

இது ஸ்மார்ட் போன் காலம் வெறும் உணர்ச்சி பேச்சுக்கள் உசுப்பேத்தல்களை வைச்சு ஆட்சியை பிடிப்பதும் ஆக்களை ஆக்கள் ஏமாற்றுவதும்  இயலாத காரியம் என்பதை மஹிந்த குடும்பம் ஆட்சியை பறிகொடுத்து ஓட்டமெடுத்தபோதே பொன்சேகா உணர்ந்திருக்கணும்.

ரணிலுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, சஜித்திற்கு விழும் வாக்குகளை குறைக்க, ரணிலின் ஆசீர்வாதத்துடன் களம் இறங்கியவர் இவர். ஆனால், இந்தளவுக்கு மோசமாக சனம் இவரது கூட்டத்தை புறக்கணிக்கும் என இவரும் ரணிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அப்பம் ஒன்றை குரங்குகள் பிரித்த கதையாக சஜித்தினதும், ரணிலினதும் வாக்குகளை பிரிக்க பலர் முண்டியடிக்கும் போது, அனுரவின் வாக்குகளைப் பிரிக்கத் தான் எவரும் இல்லை. இதனால் பலனடையப் போவது, ஜேவிபி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னருக்கு..ஆழ்ந்த அனுதாபங்கள்...யாழ்ப்பாணம் போய் மீட்டிங் வையுங்கோ...புதினம் பார்க்க பொடி பெட்டயள்  கராவும் கையுமா வருங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைப் பாத்திரம் ஏந்தியும் பொன்ஸ்சுக்கு ஒருதரும் பிச்சை போடலையே.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பின்னால் ஒரு புத்திஜீவிகள் கூட்டம் இருக்கின்றது என்றார்கள். அவர்களாவது மேடைக்கு முன்னால் வந்து கதிரைகளில் இருந்திருக்கலாம்..................

spacer.png

1 hour ago, alvayan said:

பொன்னருக்கு..ஆழ்ந்த அனுதாபங்கள்...யாழ்ப்பாணம் போய் மீட்டிங் வையுங்கோ...புதினம் பார்க்க பொடி பெட்டயள்  கராவும் கையுமா வருங்கள்....

அதுக்கு அவர் தமனாவை அல்லவா கூட்டிக் கொண்டு போக வேண்டும் 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரசோதரன் said:

இவருக்கு பின்னால் ஒரு புத்திஜீவிகள் கூட்டம் இருக்கின்றது என்றார்கள். அவர்களாவது மேடைக்கு முன்னால் வந்து கதிரைகளில் இருந்திருக்கலாம்..

திரைமறைவில் இருக்கிறார்கள்.

காலநேரம் வரும்போது வெளியே வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சார கூட்டம்

மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை | Sarath Fonseka Election Meeting Not Even 5 People

அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.

பொன்சேகாவுக்கு ஏமாற்றம்

இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை | Sarath Fonseka Election Meeting Not Even 5 People

அந்தத் தேர்தலில் 4,173,185 வாக்குகளை பொன்சேகா பெற்றார். அது மொத்த வாக்குகளில் 40.15 வீதமாகும்.

எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://tamilwin.com/article/sarath-fonseka-election-meeting-not-even-5-people-1724206210

sarath-fonseka-in-jail-colombo-telegraph 

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை | Sarath Fonseka Election Meeting Not Even 5 People

இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்குப் பிடித்த செய்தி இதுதான். 😂
இந்தப்  படங்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது. 🤣

பொன்ஸ்சுக்கு.... இந்த இரண்டு கையையும் தூக்குற வியாதி, கனகாலமாக இருக்குது போலை. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

24-66c55e78b3d5b.webp

கூட்டம்  வராத  பிரச்சார மேடைக்கு முன்பு ஆகக் குறைந்தது... 
மைக் செட்டுக்காரன், கதிரை வாடைக்கு விட்டவன், மேடை கட்டியவன்  என்று ஒரு சிலராவது அங்கு நிற்பார்கள். சில இடங்களில்... தெருநாய், காகம்  கூட அங்கினை சுற்றி திரியும். 
இதிலை, ஒரு குருவியை கூட காண முடியவில்லையே... 😂
கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டிய கூட்டம் இது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவருக்கு கூட தமிழர்கள் வாக்கு கேட்கும் நிலை வந்தது.😭

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவருக்கு கூட தமிழர்கள் வாக்கு கேட்கும் நிலை வந்தது.😭

அந்த அளவிற்கு... இந்த அரசியல்வாதிகள் சுத்த ஞானசூனியங்களாக இருந்திருக்கின்றார்கள். அதுகளை கொண்டாடிய சனங்களை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியாவிலும் சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் மக்கள் இன்றி வெறிச்சோடியது

Published By: VISHNU   26 AUG, 2024 | 09:17 PM

image
 
நுவரெலியாவில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது இதிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைக்கப்பட்ட மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர் மேலும் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எதிர்பார்த்த அளவில் பொது மக்கள் வருகைத்தந்து அமரவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அதன் காட்சிகள் அடங்கிய  புகைப்படங்களும் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்து கூட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-08-26_at_19.11.32_98

WhatsApp_Image_2024-08-26_at_19.11.33_aa

WhatsApp_Image_2024-08-26_at_19.11.35_1b

WhatsApp_Image_2024-08-26_at_19.11.33_65

https://www.virakesari.lk/article/192075

  • கருத்துக்கள உறவுகள்

24-66c55e78b3d5b.webp

thumb_large_srathth.png

சரத் பொன்சேகாவின்... எல்லா கூட்டத்திற்கும் பிக்கு ஒருவர் தவறாமல் போகின்றார்.
யார் பெத்த பிள்ளையோ... பாவம். அவருக்கு என்ன வேண்டுதலோ.... 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் சாபங்கள் ஏதோ ஒரு வகையில் பலித்துக்கொண்டே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2024 at 19:21, தமிழ் சிறி said:

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை | Sarath Fonseka Election Meeting Not Even 5 People

 படத்தில் பொன்சேகாவை உற்றுப் பாருங்கள், சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர்போல் இருக்கிறார். ஏசுநாதர் இறந்து மூன்றுநாட்களின் பின்பு உயிர்த்து எழுந்தார். பொன்சேகா உயிரோடு இருந்து தேர்த்தலின் பின்பு இறந்து விழுவார்.😞

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் உலக நாடுகளும் ஒன்று கூடி யுத்தம் செய்து புலிகளை வெல்ல இந்த மாட்டின் அலப்பறை கொஞ்சமா. பால்றாஜ்டம் அடி  வாங்கிய பண்ணிக்கு இப்ப ஜானதிபதி கேட்குது ....

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழன்பன் said:

இந்தியாவும் உலக நாடுகளும் ஒன்று கூடி யுத்தம் செய்து புலிகளை வெல்ல இந்த மாட்டின் அலப்பறை கொஞ்சமா. பால்றாஜ்டம் அடி  வாங்கிய பண்ணிக்கு இப்ப ஜானதிபதி கேட்குது ....

பால்ராஜிடம்... சரத் பொன்சேகா அடி வாங்கினவரா. 
இதைப் பற்றிய மேலதிக  விபரங்களை அறிய ஆவலாக உள்ளோம்.
நீங்கள் அறிந்தவற்றை, எமக்கும் சொல்லுங்கள் தமிழன்பன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொன்னரைப்பார்க்கும்போது ஏற்படும் பரிதாப நிலை அரியத்தை பார்க்கும் போது ஏற்படுகிறது.. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.