Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்

41YXHNKXUNL-cc.jpg

“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். ஒரு இடதுசாாரியாக இருந்தவர். 1931ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய, யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை பரிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டது. காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் இலங்கை தீவுக்கு முழு சுயாட்சி வேண்டும் என்று கேட்டு அத் தேர்தலைப் புறக்கணித்தது.

அப்புறக்கணிப்பை  தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இக்குறிப்பு யாழ்ப்பாணம் யுத் காங்கிரசைப்பற்றி கலாநிதி சீலன் கதிர்காமர் எழுதிய நூலில் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசை பின்பற்றி தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்த தென்னிலங்கை இடதுசாரிகள் கடைசி நேரத்தில் குத்துக்கரணம் அடித்து தேர்தலில் பங்குபற்றினார்கள் என்பது வேறு கதை.

யாழ்.வாலிப காங்கிரசின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் பெருமளவுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் ஓரளவுக்கு வாக்களிப்பு நடந்தது. வாலிபக் காங்கிரஸ் அவ்வாறு தேர்தலை புறக்கணித்தது சரியா பிழையா என்ற விவாதத்தில் இப்பொழுது இறங்கத் தேவையில்லை. ஆனால் கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு இளைஞர் அமைப்பு “ப்ரோ ஆக்டிவாக”-செயல் முனைப்பாக ஒரு முடிவை எடுத்துப் புறக்கணித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. காலனித்துவ அரசாங்கம் நடாத்திய முதலாவது தேர்தலை தமிழ்த் தரப்பு எவ்வாறு செயல்முனைப்போடு அணுகியது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.

அங்கிருந்து தொடங்கி கடந்த சுமார் 83 ஆண்டுகால இடைவெளிக்குள் தமிழ்த் தரப்பு அவ்வாறு தேர்தல்களை செயல்முனைப்போடு கையாண்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் எதுவென்றால், அது 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலாகும்.

அப்பொழுது வன்னியில் ஒரு கருநிலை அரசை நிர்வகித்த விடுதலைப்புலிகள் இயக்கம் அந் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. அவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை தடுப்பதே அந்த பகிஷ்கரிப்பின் நோக்கமாகும். ஏனென்றால் அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கம் நோர்வையின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்து வந்தது. சமாதான முயற்சியை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தருமர் பொறியாகவே பார்த்தது. எனவே அதில் இருந்து வெளிவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் சிந்தித்தது. அதன் விளைவாக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்தது.

தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்திருந்தால் அவர்கள் தனக்கே வாக்களித்திருந்திருப்பார்கள் என்று ரணில் விக்ரமசிங்க இப்பொழுதும் நம்புகின்றார். தன்னுடைய வெற்றியைத் தடுத்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு ஏற்றியதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானத்தை முறிக்க விரும்பியது என்றும் அவர் நம்புகிறார்.

அத்தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு யாழ்ப்பான வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது. தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது.

அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்த பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்.

இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து அறிவிக்கப்படும் ஒரு தேர்தலை செயல்முனைப்போடு அணுகும் மூன்றாவது முயற்சிதான் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஆகும்.

கடந்த 83 ஆண்டுகளிலும் மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தரப்பு ஒரு தேர்தலை நிர்ணயகரமான விதங்களில் எதிர்கொள்ளும் ஒரு முடிவு இது. முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தரப்பு தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் இம்முறை தமிழ்த் தரப்பு தேர்தலில் பங்குபற்றுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ் மக்களை ஒரு திரண்ட அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதன்மூலம் தமிழ் மக்களுடைய பேரபலத்தை அதிகப்படுத்தி, இனப்பிரச்சினை தொடர்பான மேடைகளில் தமிழ் மக்களை ஒரு திரண்ட சக்தியாக நிறுத்துவது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தின் முதல் நிலை நோக்கமாகும். தமிழ் மக்களை அகப்பெரிய திரட்சியாக மாற்றினால் அது பேச்சுவார்த்தை மேசையிலும், நீதி கோரும் மேடைகளிலும் தமிழ்மக்களை பலமான சக்தியாக மாற்றும். அந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்றார்.

IMG-20240820-WA0056-c.jpg

அந்த முடிவு தென்னிலங்கை வேட்பாளர்களின் மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதற்கு ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தரப்பைப் பேச அழைத்ததில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் ஒரு பகுதி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். தென்னிலங்கையில் யாரெல்லாம் தமிழ் வாக்குகளை கவர விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள்.

அவர்களுடைய தமிழ் முகவர்கள் எஜமானர்களை விட அதிகமாக பதறுகிறார்கள். தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் திருப்தியூட்டும் வெற்றிகளைப் பெறத் தவறி விடுவார்கள் என்று அவர்களுக்கு பதட்டம். ஆனால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தருவார்கள் என்பதனை அவர்களால் இன்று வரை தெளிவாகக் கூற முடியவில்லை.

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, அவர்களில் யாருமே சமஸ்டியைத் தரப்போவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தரக்கூடிய சமஸ்டிக்கு குறைவான வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை தந்து விட்டு அவற்றை மீறிய, அல்லது உடன்படிக்கைகளை எழுதி விட்டு அவற்றை தாமாக முறித்துக் கொண்ட ஒரு தரப்பு இப்பொழுதும் வாக்குறுதியைத் தரும் என்று காத்திருப்பதை எப்படிப் பார்ப்பது? அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.” இவ்வாறு வரலாற்றுக் குருடர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் தரப்பைப் பார்த்து முட்டாள்கள் என்கிறார்கள். அது ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள். அது ஒரு விஷப்பரீட்சை என்கிறார்கள்.

ஆனால் அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் யாருமே இதுவரையிலும் எந்த தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொன்னால் தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளர் சரி என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொல்பவர்கள் யாருமே இதுவரையிலும் எந்தத் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவை மக்களுக்கு கூறவில்லை.

ஏன் கூறவில்லை ? ஏனென்றால் தென் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச வாக்குறுதியைக்கூட தருவதற்குத் தயாராக இல்லை. இப்பொழுது தராத வாக்குறுதியை அவர்கள் பிறகெப்பொழுதும் தரப்போவதில்லை.

எனவே இந்த இடத்தில் தமிழ் மக்கள் தெளிவாக செயல்முனைப்போடு இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்கலாம். ஒன்று பகிஸ்கரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது. தமிழ்ப் பொது வேட்பாளருக்குள் பகிஸ்கரிப்பும் உண்டு. அதாவது தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ் வேட்பாளர் முன்னிறுத்தப்படுகிறார்.

கடந்த 84 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்கள் எடுத்த நிர்ணயகரமான ஒரு முடிவாக அதை மாற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். 83 ஆண்டுகளுக்கு முன் பிலிப் குணவர்த்தன “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று சொன்னார். இப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இம்முறை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும் வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையான செய்திகளைக் கொடுக்கும். தமிழ் ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும். எனவே இப்பொழுது தமிழ்மக்கள் முன்னாள் உள்ள தெரிவு இரண்டுதான். ஒன்று, தென்னிலங்கை வேட்பாளர்களுக்காக காத்திருந்து மேலும் சிதறிப் போவது. இன்னொன்று தமிழ்ப்பொது வேட்பாளரை பலப்படுத்துவதன்மூலம் முழு இலங்கைக்கும் வழிகாட்டுவது.
 
https://www.nillanthan.com/6872/

  • Replies 50
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ‘யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்த

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது. நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எப்பூடி....? ஆயுதப்போராட்டத்திற்கு பின் சுடச்சுட பொன்சிக்கு குத்தி புளங்காகிதமடைந்து சொன்ன செய்தி போலவா ....?   அப்பூடியா...? பேரம்பேசும் பலத்தை வைத்து என்ன புடுங்கினார் முக்கியமாக உங்க ஆள

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.”

இந்த கூற்றை நிலாந்தனும் விளங்கியிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆழமான பார்வை நன்றி கட்டுரைக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும்வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையானசெய்திகளைக் கொடுக்கும். "

ஆயுதப்  போராட்டமும் அதன் பின்னரான காலத்தில் கொடுக்கப்படாத செய்தியையா இந்தத் தேர்தல் உலகுக்கும் தென்னிலங்கைக்கும்  கொடுக்கப்போகிறது? 

அரியநேந்திரனின் போட்டி என்பது தமிழர்களின் வாக்கைச் சிதறடித்து அவர்களின் பேரம்பேசும் பலத்தை இல்லாதொழிக்கும் என்பது நிலாந்தனுக்குத் தெரியாதா? 

தெரிந்தும் இவ்வாறான ஒரு முடிவுக்கு அவர் ஆதரவாக எழுதுவது அவர் மீதான சந்தேகத்தை மேலும்  பலப்படுத்துமே தவிர வேறு எந்த கவைக்கும் உதவாது. 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

அரியநேந்திரனின் போட்டி என்பது தமிழர்களின் வாக்கைச் சிதறடித்து அவர்களின் பேரம்பேசும் பலத்தை இல்லாதொழிக்கும் என்பது நிலாந்தனுக்குத் தெரியாதா? 

அப்ப யாருக்கு குத்தினால் நல்லது ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அப்ப யாருக்கு குத்தினால் நல்லது ?

யார் அதிகம் பிச்சையிடுகிறார்களோ அவர்களுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

அப்ப யாருக்கு குத்தினால் நல்லது ?

அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது.

நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அரியநேந்திரனின் போட்டி என்பது தமிழர்களின் வாக்கைச் சிதறடித்து அவர்களின் பேரம்பேசும் பலத்தை இல்லாதொழிக்கும் என்பது நிலாந்தனுக்குத் தெரியாதா? 

யாருடன் பேரம் பேசுவது? பேரம் பேுசி பெறக் கூடிய ஆகக் கூடிய தீர்வுதான் என்ன? குறைந்த பட்சம் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக எந்த வேட்பாளர் சர்வதேச நாடுகளின் துதுவர்கள் சாட்சியாக கஎழுத்து மூல வாக்குறுதி வழங்கத்தயராக உள்ளார். குறைந்த பட்சம் அந்த ஒப்பந்தத்துடன தொடர்புடைய இந்தியத்துதுவராவது நாட்சியாக முன்வருவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் அரசியல் சாணக்கியரான நிலாந்தன் மாஸ்டர், வன்னியில் வாழ்ந்த காலத்தில் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் புலிகளின் அழிவைத் தடுத்திருக்கலாம்!

மீண்டும் நிலாந்தன் மாஸ்டருக்காக

Quote

வரலாற்றில்இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

மாபெரும் அரசியல் சாணக்கியரான நிலாந்தன் மாஸ்டர், வன்னியில் வாழ்ந்த காலத்தில் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் புலிகளின் அழிவைத் தடுத்திருக்கலாம்!

மீண்டும் நிலாந்தன் மாஸ்டருக்காக

இதே கருத்தை நான் எழுத நினைத்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள். சமாதான காலத்தில் வன்னியில் புலிகளுடன் வாழ்ந்த நிலாந்தன் வெறும் போர்பரணி பத்திகளையே எழுதினார். 

முள்ளிவாய்கால் அழிவிற்கு இவரும் பொறுப்பு கூறவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

யாருடன் பேரம் பேசுவது? பேரம் பேுசி பெறக் கூடிய ஆகக் கூடிய தீர்வுதான் என்ன? குறைந்த பட்சம் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக எந்த வேட்பாளர் சர்வதேச நாடுகளின் துதுவர்கள் சாட்சியாக கஎழுத்து மூல வாக்குறுதி வழங்கத்தயராக உள்ளார். குறைந்த பட்சம் அந்த ஒப்பந்தத்துடன தொடர்புடைய இந்தியத்துதுவராவது நாட்சியாக முன்வருவாரா?

நேர்ந்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது.

நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.

அண்ணா 

இங்கே எழுதப்படுவை பொருத்தமே அற்ற உளறல்கள் மட்டுமே.

உதாரணமாக 

எமது வாக்களிப்பை சர்வதேசத்திற்கு காட்டி இதுவரை எதை சர்வதேசம் கிழித்தது எமக்கு என்று சொல்லும் அதே வாய்கள் தான் தமிழர்கள் தமிழருக்கு வாக்களிக்கவில்லை என்பதை உலகுக்கு காட்டிவிடப்போகிறோம் என்றும் எழுதுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அப்ப யாருக்கு குத்தினால் நல்லது ?

3 hours ago, ஈழப்பிரியன் said:

அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது.

457023739_985958300208580_52353031510864

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் மக்கள் எதுவும் தெரியாத மந்தைகள் கூட்டம் என்ற அரசியல்வாதிகளின்  நிலை மாற வேண்டும். ஆயுதப் போராட்ட நேரத்திலும் அதற்கு முன்னரும் ஏன் இப்பொழுதும் அல்லல் பட்டுக் கொண்டிருப்பது அவர்கள்தான். அரசியல்வாதிகள் எப்படியோ தங்களது சொகுசான வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள்.

மக்களை சிந்திக்க விடுங்கள். சேர்ந்திருப்பதோ, பிரிந்திருப்பதோ, பேசாமல் இருப்பதோ எது சரியென அவர்களுக்குத் தெரியும். தங்கள் அரசியல் இருப்புக்காக குட்டைகளைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதிகளைவிட விசமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kavi arunasalam said:

சிறப்பாக சொன்னீர்கள் .
யாருக்கு நீ வாக்கு போட வேண்டும் என்று சொல்வதே தமிழர்களை அவமானபடுத்துவதாகும்

இப்போது ஒரு இனவாத தந்திர பிரசாரத்தை கடைபிடிக்கின்றனராம்  தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது மானம் உள்ள தமிழனின் கடமை

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kavi arunasalam said:

யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் மக்கள் எதுவும் தெரியாத மந்தைகள் கூட்டம் என்ற அரசியல்வாதிகளின்  நிலை மாற வேண்டும். ஆயுதப் போராட்ட நேரத்திலும் அதற்கு முன்னரும் ஏன் இப்பொழுதும் அல்லல் பட்டுக் கொண்டிருப்பது அவர்கள்தான். அரசியல்வாதிகள் எப்படியோ தங்களது சொகுசான வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள்.

மக்களை சிந்திக்க விடுங்கள். சேர்ந்திருப்பதோ, பிரிந்திருப்பதோ, பேசாமல் இருப்பதோ எது சரியென அவர்களுக்குத் தெரியும். தங்கள் அரசியல் இருப்புக்காக குட்டைகளைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதிகளைவிட விசமானவர்கள்.

இங்கே யாரும் மக்களுக்கு அறிவுரையோ அல்லது அரசியலோ செய்யவில்லை. அதே மக்களின் ஒரு பகுதியினரின் ஒரு முடிவை அவர்களைப் போலவே செய்து பார்க்கலாம் என்று மட்டுமே எழுதுகிறோம். அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அண்ணா 

இங்கே எழுதப்படுவை பொருத்தமே அற்ற உளறல்கள் மட்டுமே.

உதாரணமாக 

எமது வாக்களிப்பை சர்வதேசத்திற்கு காட்டி இதுவரை எதை சர்வதேசம் கிழித்தது எமக்கு என்று சொல்லும் அதே வாய்கள் தான் தமிழர்கள் தமிழருக்கு வாக்களிக்கவில்லை என்பதை உலகுக்கு காட்டிவிடப்போகிறோம் என்றும் எழுதுகிறார்கள். 

பொறுமை,.பொறுமை,.விசுகர். 

நீங்களும் நானும் பிரச்சனையான காலப்பகுதியில் நாட்டைவிட்டு ஓடிவந்து, உங்கள் பிள்ளைகளும் எனது பிள்ளைகளும்  பாதுகாப்பாகவும் எதிர்காலம் தொடர்பான அச்சம் எதுவும் இன்றி இருக்கிறோம். 

பிரச்சனை அங்குள்ளவர்களுக்குத்தான். 

நிலத்திலுள்ளவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் ஆதரவளிக்கலாமே தவிர அவர்களை இதைத்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவோ முடியாது. 

7 minutes ago, விசுகு said:

இங்கே யாரும் மக்களுக்கு அறிவுரையோ அல்லது அரசியலோ செய்யவில்லை. அதே மக்களின் ஒரு பகுதியினரின் ஒரு முடிவை அவர்களைப் போலவே செய்து பார்க்கலாம் என்று மட்டுமே எழுதுகிறோம். அவ்வளவு தான். 

அடுத்துக்  கெடுக்கலாம் என்கிறீர்கள்? 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

பொறுமை,.பொறுமை,.விசுகர். 

நீங்களும் நானும் பிரச்சனையான காலப்பகுதியில் நாட்டைவிட்டு ஓடிவந்து, உங்கள் பிள்ளைகளும் எனது பிள்ளைகளும்  பாதுகாப்பாகவும் எதிர்காலம் தொடர்பான அச்சம் எதுவும் இன்றி இருக்கிறோம். 

பிரச்சனை அங்குள்ளவர்களுக்குத்தான். 

நிலத்திலுள்ளவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் ஆதரவளிக்கலாமே தவிர அவர்களை இதைத்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவோ முடியாது. 

அடுத்துக்  கெடுக்கலாம் என்கிறீர்கள்? 

😏

லூசா நீங்க??

எங்கே செய்யவேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன்???

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மிகவும் எழுச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்த 1977 ம் ஆண்டு தேர்தலிலேயே தமிழீழம் என்ற கொள்கைக்கு கிடைத்த வாக்கு 52 வீதம் மட்டுமே என்ற நிலையில் இன்றைய நிலையில் 50 வீதம்  கிடைக்காது என்ற ஜதார்த்தத்தை புறக்கணித்து முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட தீர்மானமே பொது வேட்பாளர் என்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் மக்கள் எதுவும் தெரியாத மந்தைகள் கூட்டம் என்ற அரசியல்வாதிகளின்  நிலை மாற வேண்டும். ஆயுதப் போராட்ட நேரத்திலும் அதற்கு முன்னரும் ஏன் இப்பொழுதும் அல்லல் பட்டுக் கொண்டிருப்பது அவர்கள்தான். அரசியல்வாதிகள் எப்படியோ தங்களது சொகுசான வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள்.

மக்களை சிந்திக்க விடுங்கள். சேர்ந்திருப்பதோ, பிரிந்திருப்பதோ, பேசாமல் இருப்பதோ எது சரியென அவர்களுக்குத் தெரியும். தங்கள் அரசியல் இருப்புக்காக குட்டைகளைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதிகளைவிட விசமானவர்கள்.

உங்கள் கருத்துதான் நமதும் இன்னாருக்கு குத்த வேண்டாம் என்று சொல்பவர்களால் அதற்குரிய விளக்கம் சரியாக கொடுக்க முடியவில்லையே ?

7 hours ago, Kapithan said:

யார் அதிகம் பிச்சையிடுகிறார்களோ அவர்களுக்கு 

நேரடியாக பெட்டி என்று எழுதலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

1) உங்கள் கருத்துதான் நமதும் இன்னாருக்கு குத்த வேண்டாம் என்று சொல்பவர்களால் அதற்குரிய விளக்கம் சரியாக கொடுக்க முடியவில்லையே ?

2) நேரடியாக பெட்டி என்று எழுதலாமே ?

1) காணொளியை பார்க்கவும்”.

2) கற்பூரப் புத்தியையா உங்களுக்கு லபக்கெனப் பற்றிப்பிடித்துவிட்டீர்கள்.   🤣

46 minutes ago, விசுகு said:

லூசா நீங்க??

இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடமே நான்  கேட்பது. 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

லூசா நீங்க??

எங்கே செய்யவேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன்???

லூசு என்றாலும் இறுக்கிப் பூட்டிச் சரிப்படுத்தி விடலாம். 

மரவள்ளிக் கட்டையை நாட்டிவிட்டு… ஒவ்வொருநாளும் கிழங்கு வந்துவிட்டதா என்று புடுங்கிப் பார்ப்பவரை என்னென்று சொல்வது.?????🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

லூசு என்றாலும் இறுக்கிப் பூட்டிச் சரிப்படுத்தி விடலாம். 

மரவள்ளிக் கட்டையை நாட்டிவிட்டு… ஒவ்வொருநாளும் கிழங்கு வந்துவிட்டதா என்று புடுங்கிப் பார்ப்பவரை என்னென்று சொல்வது.?????🤔

உதுக்கும் ஏதாவது பெயர் இருக்குமே,.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உதுக்கும் ஏதாவது பெயர் இருக்குமே,.🤣

நீங்கள் விரும்பின்னால் உங்கள் பெயரையே நீங்கள் சூட்டி மகிழலாம். எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை.🙌😌

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

லூசு என்றாலும் இறுக்கிப் பூட்டிச் சரிப்படுத்தி விடலாம். 

மரவள்ளிக் கட்டையை நாட்டிவிட்டு… ஒவ்வொருநாளும் கிழங்கு வந்துவிட்டதா என்று புடுங்கிப் பார்ப்பவரை என்னென்று சொல்வது.?????🤔

ஒவ்வொரு நாளும் புடுங்கிப்பார்த்தா வேரே வராதே ஐயா பிறகெப்படியாம் மரவள்ளியிலை கிழங்குவரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.