Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார

Published By: DIGITAL DESK 3

26 AUG, 2024 | 12:24 PM
image
 
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று திங்கட்கிழமை (26) கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக மாற்று முறைமையை செயற்படுத்தும்.  அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 -2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகளை முடிவுறுத்தி, அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமை மாற்றம் பெற வேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது.

பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும்  மின்சார கட்டணத்தையும் குறைப்போம் என அநுரகுமார திஸாநாக்க மேலும் தெரிவித்தார்.

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

anura.jpg?resize=600,375

அரச நிர்வாகத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் – அநுரகுமார!

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின்,
தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று இந்த கொள்கைப்பிரகடனம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் விடுதியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதிகள், மத தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த அநுரகுமார திஸாநாயக்க,

”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது அரசாங்கத்தில் நீக்கப்படும். அதற்கு மாற்றீடாக புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

குறிப்பாக புதிய சந்தனையில் அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம்.

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம்.

இதற்கு மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு மிகவும் அவசியமானது” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1397131

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின்,
தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் ஏற்கனவே சட்டத்தில்  இருக்கிறது.

ஆனால் அமுல்படுத்தத் தான் ஆள் இல்லை.

வடக்கு கிழக்கில் உயர்பதவிகளுக்கு ஏற்கனவே சிங்களவர்களை நியமித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் தரமுடியாது என்பதை சொல்லாமல் சொல்வது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

சிறிமாவின்ர திட்ட கொப்பி போல கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கை பிரித்தவர் இப்ப கதைக்கிறார் ...என்ன முகத்தோட வருகிறார் என்றுதான் தெரியவில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் வௌியீடு

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி நேரம் வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிப்பணத்தை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் (புலிகளுக்கு கிடைத்து விடுமாம்) வழக்கு போட்டவர்களும் இவர்கள் தானே. அப்போ விமல் வீரவன்ச இவர்களுடன் இருந்தார்.

வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உடந்தையாக இருந்தவர்களும் இவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...

  • கருத்துக்கள உறவுகள்

15 minutes ago, putthan said:

வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...

இந்த புண்ணியவான்களை வந்தால் மலை என்று நம்பும் யாழ்கள உறவுகளும் உள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2024 at 18:42, குமாரசாமி said:

சிறிமாவின்ர திட்ட கொப்பி போல கிடக்கு....

பாணுக்கு வரிசையில் நிற்பது தானே???

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2024 at 07:17, விளங்க நினைப்பவன் said:

இந்த புண்ணியவான்களை வந்தால் மலை என்று நம்பும் யாழ்கள உறவுகளும் உள்ளனர்

இந்த புண்ணியவான்களுக்கு 
திட்டமிட்டு கட்சி கூட்டம் அமைக்க தெரியும்
திட்டமிட்டு இனக்கலவரம் செய்ய தெரியும்
திட்டமிட்டு ஆட்சிகவிழ்ப்பு செய்ய தெரியும்

ஆனால் திட்டமிட்டு ஆட்சி அமைக்க தெரியாது அப்படி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவர்களின் சித்தாந்ததின் ஊடாக  ஆட்சியை தக்க வைக்க முடியாது ....என்பதும் யாழ்கள உறவுகள் அறிந்த விடயமே...
இரண்டு ஆயுத கிளர்ச்சி,பல ஜனநாயக தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனவாதிகளுக்கு வாக்கு போடாமல் தமிழ் வேட்பாளருக்கு போட வேண்டும் . அதுவே சிறந்தது.
பெரும்பாலும் ரணில் தான் வெல்வார் . 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

83 ஆம் ஆண்டு இனக்கலவரம் செய்தது ஜெவிபியா ? ஜே ஆரின் யு என் பியா? எனக்கு ஒரே கொன்பியூசன்

On 27/8/2024 at 18:22, nunavilan said:

சுனாமி நேரம் வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிப்பணத்தை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் (புலிகளுக்கு கிடைத்து விடுமாம்) வழக்கு போட்டவர்களும் இவர்கள் தானே. அப்போ விமல் வீரவன்ச இவர்களுடன் இருந்தார்.

வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உடந்தையாக இருந்தவர்களும் இவர்களே.

நுணா, அவர்கள் வழக்குப்போட அரச தரப்பிலிருந்து எந்த எதிர் வாதமும் வைக்கப்படவில்லை என்பதும் (மகிந்த தான் செய்யாமல் விமல் வீரவன்ச , சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் இனவாதத்தைப்பயன்படுத்தி மறைமுகமாக செய்விச்சது) குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழன்பன் said:

இந்த இனவாதிகளுக்கு வாக்கு போடாமல் தமிழ் வேட்பாளருக்கு போட வேண்டும் . அதுவே சிறந்தது.
பெரும்பாலும் ரணில் தான் வெல்வார் . 

தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு தான் போடவேணும். ஆனால் ரணில் வந்தாலும் ஒன்று தான். ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது. ரணிலும் இனவாதி தான் (இப்பநடக்கிற புத்தர் சிலை வைக்கிறது தொடக்கம் காணி பிடிக்கிறது வரை ரணில் தான் பின்புலம் அதை விட 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் போது ரணில் தான் உள்ளூராட்சி அமைச்சர் என்றுநினைக்கிறன். உள்ளூராட்சி அமைச்சு தான் காவல்த்துறைக்கு பொறுப்பு).

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாதவூரான் said:

83 ஆம் ஆண்டு இனக்கலவரம் செய்தது ஜெவிபியா ? ஜே ஆரின் யு என் பியா? எனக்கு ஒரே கொன்பியூசன்

இனவாத செயல்களை கட்சி பேதமின்றி சகலரும் செய்வார்கள் ...83 இனக்கலவரத்கின் பொழுது முக்கியமாக தமிழர்களின்,மற்றும் இந்திய நிறுவனங்களை திட்டமிட்டு அழித்தவர்கள் ஜெ.வி.பியினர் ..அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களின் மீது தான் இறுதியில் முடிவடைவது வழமை..

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2024 at 10:01, nochchi said:

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

அரச கட்டடங்களில் மாத்திரம் தமிழிலும் பெயர்ப்பலகை வைப்பதை;தானே சொல்கிறார். அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . சிங்களப்கபகுதிகளுக்கூடாப ப் பயணம் செய்யும் பொழுத அரச கட்டங்களின் பெயர்ப்பலகையைப் பார்த்த்துத்தான் அந்த இடங்களை அறிய முடிகிறது.

On 26/8/2024 at 12:23, தமிழ் சிறி said:

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

சுமத்திரனின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு அரசியலமைப்புக்கு ஆதரவு என்பதன் மூலம் சுமத்திரனதும் அவரது சொம்புகளினதும் வாக்குமட்டும்தான் கிடைக்கும். சுமத்திரனுக்கு  நல்ல பெட்டி ஒன்நறு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவருக்கு விழுந்த விருப்பு வாக்குகளை சிங்கள ஆமியின் உதவியுடன் தனக்கு மாற்றித்தான் இந்த சுத்துமாத்து திருட்டு தனமாக வெல்ல வைக்கப்பட்டார் , இந்த லச்சனத்தில் இவரின் கதையை கேட்டு மக்கள் வாக்கு போடுவார்கள் ....அப்ப சஜித்க்கு இப்பவே அல்வாதான் ....ரணிலின் தந்திரம் வேலை செய்கின்றது .
சிங்கள மக்களின் வாக்கினை கவரும் ரணிலின் காய் நகர்த்தல் ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/8/2024 at 10:35, வாதவூரான் said:

தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு தான் போடவேணும். ஆனால் ரணில் வந்தாலும் ஒன்று தான். ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது. ரணிலும் இனவாதி தான் (இப்பநடக்கிற புத்தர் சிலை வைக்கிறது தொடக்கம் காணி பிடிக்கிறது வரை ரணில் தான் பின்புலம் அதை விட 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் போது ரணில் தான் உள்ளூராட்சி அமைச்சர் என்றுநினைக்கிறன். உள்ளூராட்சி அமைச்சு தான் காவல்த்துறைக்கு பொறுப்பு).

இன்றைய இலங்கையில் பெரிய ஊழல்வாதிகள் என்றால் சீனா தானாக்கள் தான். இந்தியா இந்த விடயத்தில் தள்ளாடுகின்றது. ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூட உத்தியோகபூர்வமாக லஞ்சங்கள் கொடுத்து தமதாக்கி சாதிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2024 at 02:47, விளங்க நினைப்பவன் said:

இந்த புண்ணியவான்களை வந்தால் மலை என்று நம்பும் யாழ்கள உறவுகளும் உள்ளனர்

நான் சாமானிய சிங்கள பெருன்பான்மை இனத்தவர்களுடன் உரையாடி பார்த்த அளவில் இவருக்கே அதிக ஆதரவு உள்ளதுபோல் தெரிகின்றது. 

ஆனால், தில்லாலங்கடி வேலைகள் பார்த்து ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2024 at 09:40, தமிழன்பன் said:

இந்த இனவாதிகளுக்கு வாக்கு போடாமல் தமிழ் வேட்பாளருக்கு போட வேண்டும் . அதுவே சிறந்தது.
பெரும்பாலும் ரணில் தான் வெல்வார் . 

முன்னணியில் இருந்த ரணில் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளதாக சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயம் said:

நான் சாமானிய சிங்கள பெருன்பான்மை இனத்தவர்களுடன் உரையாடி பார்த்த அளவில் இவருக்கே அதிக ஆதரவு உள்ளதுபோல் தெரிகின்றது. 

இருக்கலாம் யாழ்கள உறவு Zuma  உம் ஜேவிபி தான் என்று சொன்னார்

தமிழ்வலைதள ஆய்வாளர்கள் தகவல்படி  ஜனாதிபதியாக வெற்றி பெற போவது தமிழ் பொது வேட்பாளரா ஜேவிபியா என்ற அளவில் கடுமையா விளம்பர போட்டி நடப்பாதாக அறிந்தேன் 😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.