Jump to content

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24-66cd64a68195b.webp

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி 

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்....இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு! | Amali Thumali At The Canada Tamil Street Festival

தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர்.

 

 

இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள  அதேவேளை  நிகழ்வுக்கு வந்திருந்த சிலர்  அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.   

https://canadamirror.com/article/amali-thumali-at-the-canada-tamil-street-festival-1724736677

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அற

ரசோதரன்

👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள்

ஈழப்பிரியன்

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர் பேரவையால் நடாத்தப் பட்ட தெரு திருவிழா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx


 'தமிழர் தெரு விழா' என்றொரு நிகழ்ச்சி 21./22.´ம் திகதி  (சனி, ஞாயிறு) கனடாவிலுள்ள மார்கம் நாரில் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக கனடியத் தமிழர் பேரவையால் (Canadian Tamil Congress - CTC) நடத்தப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்த விடயம். ஆனால், இம்முறை நடைபெறும் இந்நிகழ்வானது, கனடாவிலுள்ள தமிழர்களை கொதிநிலைக்கு இட்டுச்சென்று மேற்படி நிகழ்ச்சிக்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்க வைத்துள்ளது.
 
இதற்கான காரணங்களை அறிந்துகொள்வதற்கு நாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றினை மேலோட்டமாகப் பார்ப்பது தகுந்தது.
 
2008ஆம் ஆண்டுக் காலப் பகுதிக்கு முன்னராக, கனடாவில் 'உலகத் தமிழர் அமைப்பு' (World Tamil Movement - WTM) செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், கனடாவிலுள்ள ஈழத் தமிழர்களுக்காக, உலகத் தமிழர் அமைப்பினால் தமிழீழ விடுதைப் புலிகளின் ஆலோசனைக்கிணங்க ஈழத் தமிழர்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தேவையின்பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்தக் 'கனடியத் தமிழ்க் காங்கிரஸ்' எனும் கனடித் தமிழர் பேரவையாகும்.
 
வன்னித் தலைமையின் கட்டளைக்கமைய செயற்பட்டுவந்த இவ்வமைப்பானது, 2009 ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர், அதனை அப்போது பொறுப்பேற்று நடத்திவந்த நபர்களின் தன்னதிகார தலைமையின் கீழான நிர்வாகத்தில் இயங்க ஆரம்பித்தது. எனினும், இம்மாறுதலுக்குப் பின்னரான இவ்வமைப்பின் அவ்வப்போதான செயற்பாடுகள், கனடியத் தமிழர் பேரவையை தலைமை தாங்கும் குறிப்பிட்ட நபர்கள் தன்னதிகார நிர்வாக நிலைமையிலிருந்து, அதனை அவர்களின் தன்னிச்சையான நிர்வாக நிலைக்கு நகர்த்திச் செல்கின்றனரா என்னும் கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருந்தது; காரணம், ஏனைய உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அல்லது அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படாமல் பல முடிவுகள் அவ்வமைப்பில் தன்னிச்சையாக எடுக்கப்படுட்டமை மற்றும் கூட்டங்களில் உறுப்பினர்களுக்கு கேள்வியெழுப்பும் உரிமைகள் முக்கப்பட்டமை போன்றன பொதுமக்களால் மட்டுமன்றி அமைப்பு உறுப்பினர்களாலேயே விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தன.
 
இதனையும் தாண்டி இவ்வமைப்பின் அண்மைக் கால செயற்பாடுகள் இவ்வமைப்பின் கட்டுப்பாடும் அதன் தலைமைத்துவமும் தமிழர் விரோத இயக்குசக்திகளின் ஆளுமைக்குள் சென்றுவிட்டதா என்னும் வலுவான ஐயப்பாட்டை எழுப்பி நிற்கின்றது. நடைபெற்றுவரும் நிகழ்வுகளும் அதையே நிரூபிக்கின்றன.
 
இங்குதான் இவ்வமைப்பு நடத்தும் நிகழ்வுக்கெதிரான பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
 
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இயங்கும் ஒருசில அமைப்புகள் சிறிலங்காவின் சிங்கள பெளத்த பிக்குகளின் தலைமையின் கீழ் 'இமயமலைப் பிரகடனம்' என்ற செயற்பாட்டு வரைவில் கைச்சாத்திட்டிருந்தன. இத்திடமானது சிறிலங்கா அரச, மற்றும் இந்திய கொள்கைவகுப்புத் தரப்பினரின் மறைமுக அனுசரணையுடன், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையான சிறிலங்கா அரசை இன அழிப்புக் குற்றங்களுக்காக பொறுப்புக்கூற வைப்பதற்கான நீதி கோரும் செயற்பாடுகளை முடக்குவதற்கும், தமிழீழ விடுதலைக்கான வீரியத்தை நீர்த்துப்போக வைப்பதற்குமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே தமிழர்களால் பார்க்கப்பட்டது. இதில் கனடியத் தமிழர் பேரவை தன்னிச்சையாக எடுத்த அதன் முடிவும், 'இமாலயப் பிரகடனத்தில்' அதன் வகிபாகமும் கனடியத் தமிழர்களால் மட்டுமன்றி உலகெங்குமுள்ள தமிழர்களாலும் பரவலாக கண்டனத்துக்குள்ளாகியிருந்தன. தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கனடியத் தமிழர் பேரவையை விளக்கம் கோரியிருந்த போதிலும், கனடியத் தமிழர் பேரவையானது தக்க விளக்கமளிக்காது மழுப்பலாக பதில்களையே கூறி வந்ததுடன், தமது அமைப்புக்கும் 'இமாலயப் பிரகடனத்துக்கும்' எவ்வித நேரடியான சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்து வந்தது.
 
இது இப்படியிருக்க, கனடாவிலுள்ள சிறிலங்காவின் தூதர் துஷர றொட்றிக்கோவினால், மே 03, 2024 அன்று தேதியிடப்பட்டு, பிரம்டன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதமொன்று அண்மையில் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அக்கடிதத்தில், பிரம்டன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் அவர்களால் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் அடிக்கல் நாட்டப்படவிருந்த தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவை நிறுத்தும்படியும், இந்நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டால், அது இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் 'இமாலயப் பிரகடனத்தின்' அடிப்படையிலான இன நல்லிணக்கத்தினைச் சீர்குலைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அது மட்டுமல்லாது, 'இமாலயப் பிரகடனத்தில்' சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் தலைமையில் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து செயற்பட்டு வருவதால், இன நல்லிணக்க முயற்சிகளுக்கான கனடாத் தமிழர்களின் ஆதரவை இழக்க இது வழிகோலும் எனவும் சிறிலங்காவின் தூதரால் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காத் தூதரின் இந்த உத்தியோகபூர்வ ஒப்புதல் வாக்குமூலமானது, கனடியத் தமிழர் பேரவையின் போலிமுகத்தையும், அது வெளியே தமிழ் மக்களுக்கு ஒன்றைக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் சிறிலங்கா அரசுடன் அது திரைமறைவில் இணைந்து செயற்பட்டு வருவதை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் கனடிய உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்குக் கனடியத் தமிழர் பேரவையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்ற உண்மையையும் வெளிக்காட்டியிருந்தது.
மேற்படிக் காரணிகளே கனடியத் தமிழ் மக்கள் கனடியத் தமிழர் பேரவை மீது கொதித்தெழுவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
 
இதைவிட, நேற்றைய தினம் (சனிக்கிழமை) மக்களின் கவனத்தினைத் திசைதிருப்ப கனடியத் தமிழர் பேரவை அதன் மேடை நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தியிருந்த பாடல் நிகழச்சியானது, மக்களைக் கடுங்கோபமுறச் செய்ததுடன், கனடியத் தமிழர் பேரவையை தலைமை தாங்கி நடத்துபவர்கள் தங்களின் அரசியலுக்காக எவ்வித கீழான இழிநிலைக்கும் இறங்கத் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டியது.
 
அதாவது, வெளியில் மக்கள் நின்று போராட்டம் செய்துகொண்டிருந்த வேளையில், மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் வகையில், கரும்புலி வீரர்கள் தம் இலக்கை நோக்கிச் செல்லும்போது தாயகத்தின் எழிலை வர்ணித்து விடைபெற்றுப் பாடும் வகையில் அமைந்த பாடலான, 'பச்சை வயலே, பனங் கடல் வெளியே...' எனும் கரும்புலிகள் பாடல் உள்ளிட்ட பாடல்களை மேடைப் பாடகர்களைக்கொண்டு மேடையில் பாட வைத்திருந்தனர்.
 
கனடியத் தமிழர் பேரவையால் 'தமிழர் தெரு விழா' ஆரம்பித்த காலந்தொட்டு இற்றை வரைக்கும், அதன் மேடைகளில் தமிழீழத் தேசியப் பாடல்களையும் இணைத்துப் பாடும்படி பலராலும் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் அனைத்துமே அதன் தலைமைகளாலும், விழா அமைப்பாளர்களாலும் புறந்தள்ளப்பட்டு வந்தன.
ஆனால், நேற்றைய நாளில் மக்களை முட்டாள்களாக்க எண்ணி இவர்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு விலைமதிப்பற்ற விடுதலையின் உச்சங்களைக் கைள எத்தனித்தமையானது ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறது: இவர்கள் ஆட்டுவிக்கப்படும் வெறும் நிழற் கதாபாத்திரர்களே.
 
எனவே, அறியட்டும் இவர்கள் தாம் நிஜக் கதாநாயகர்களல்ல, வெறும் நாடகர்களே என்பதை மக்கள் அறிவரென்று.
 
https://www.facebook.com/share/p/F6A3VQcZWiQoJzrY/?mibextid=oFDknk

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

24-66cd64a68195b.webp

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி 

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்....இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு! | Amali Thumali At The Canada Tamil Street Festival

தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர்.

 

 

இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள  அதேவேளை  நிகழ்வுக்கு வந்திருந்த சிலர்  அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.   

https://canadamirror.com/article/amali-thumali-at-the-canada-tamil-street-festival-1724736677

அறிவு இல்லாத பைத்தியங்கள்  .....இது தான் ஒற்றுமையா  ?? சிங்களவனுடன்.  அடிபட்டு தோல்வியும் கண்டாச்சு  இனி   தமிழன் தமிழனுடன்.   அடிபாடு       இதில் தமிழன் வெற்றி பெறுவது உறு.தி.    😀🤣🤣🤣

இதுக்கு யாழ் கள.  உறுப்பினர் தான் தலைவரே,.......? கனடாவிலுள்ள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அறிவு இல்லாத பைத்தியங்கள்  .....இது தான் ஒற்றுமையா  ?? சிங்களவனுடன்.  அடிபட்டு தோல்வியும் கண்டாச்சு  இனி   தமிழன் தமிழனுடன்.   அடிபாடு       இதில் தமிழன் வெற்றி பெறுவது உறு.தி.    😀🤣🤣🤣

இதுக்கு யாழ் கள.  உறுப்பினர் தான் தலைவரே,.......? கனடாவிலுள்ள

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

உண்மை தான்   தமிழர்கள் இரண்டு பகுதியும்  நடந்த விதம் பிழை   எந்தவித பிரயோஜனம் அற்றது    சிங்களவர்கள். திறமைசாலிகள்……………… சும்மா இருந்து அலுவல்கள் பார்க்கிறார்கள்   

தமிழனைக்கொண்டு   தமிழனை அடிக்கிறார்கள்.  நாங்களே’ எங்களை பிரிக்கிறோம்     கவலையளிக்கிறது ஒரு போத்தலை உடைப்போம் 😂

குறிப்பு,......அண்ணை  நீங்களும் ஒன்றை உடையுங்கள்.  😂🙏

  • Like 3
Link to comment
Share on other sites

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அறிவித்து விட்டு, பின் இலங்கை சென்று, யுத்த குற்றங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் புத்த பிக்குகளை மாத்திரம் அல்ல, ரணில் அரசுடன் மட்டுமல்ல,  மகிந்தவுடனும் கைகுலுக்கி U turn அடித்தது.

இப்படி புலம்பெயர் அமைப்புகள் செய்வது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அப்படி செய்யாமல் விட்டால் தான் ஆச்சரியம்.

இந்த தமிழர் தி(தெ)ருவிழாவை CTC தான் நடாத்துவதால், சில தமிழ் அமைப்புகள் இதனை புறக்கணிக்க சொல்லிக் கேட்டு இருந்தன. முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார் (இவரது கட்சியான கொன்சர்வேட்டி தான் புலிகளை கனடாவில் தடை செய்தது என்பது வேறு விடயம்). 
வழக்கமாக இப்படியான தெருவிழாவுக்கு செல்லும் பல தமிழர்கள் இந்த நிகழ்வை இம்முறை புறக்கணித்தும் இருந்தனர்.

நான் இவ்வாறான கூத்துகளுக்கு செல்வதில்லை என்பதால் இதற்கு இம்முறையும் செல்லும் எண்ணத்தில் இருக்கவில்லை.

நிற்க, 

தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது?

ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)

  • Like 7
  • Thanks 5
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது?

ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)

🤣.........

சர்வதேசத்திற்கு ஒன்றாக, உரக்கச் சொல்லப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமால், உறைக்கத்தக்கதாக காட்டி விட்டோம்...........🫣.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக பார்த்து மகிழ்ந்த தமிழர்கள் விழாவையும் குழப்பிவிட்டார்கள் .குழப்பவாதிகளில் ஒருவர் சொன்னார் பொலிஸ் எமது பக்கம் மற்றய நாடுகளில் என்றால் இந்த தமிழர்விழாவை குழப்பியடிக்க பொலிஸ் அனுமதித்து இருக்காது என்கிறார்கள் இனி வேறுநாடுகளில் தான் தமிழர்கள் விழாவை பார்க்க வேண்டும்

4 hours ago, ரசோதரன் said:

சர்வதேசத்திற்கு ஒன்றாக, உரக்கச் சொல்லப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமால், உறைக்கத்தக்கதாக காட்டி விட்டோம்...........🫣.


தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர் வெற்றிபெற்று ஜனாதிபதியாகி தான்  சர்வதேசத்திற்கு உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இனி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுதந்திர நாட்டை நிர்வகிக்கும் எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை என்பதை  இயற்கை  உணர்த்தியதை புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்கின்றார்கள்.  இந்த தலைமுறையில் உள்ள இந்த கழிசடைகள் மரித்த பின்னர்,  புதிய தலைமுறை புதிய வார்ப்புகளாக வடிவம் பெறும் போதே தமிழருக்கு ஒரு விடியல் பிறக்கும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ஏதாவது ஒரு சம்பவத்துக்கு எதிர்ப்புக்காட்ட வன்முறைகளில் இறங்குவது அறவே தவிர்க்கப்படவேண்டும்.

நீங்கள் வீரபோராட்டம் நடத்திவிட்டு வீட்டுக்குபோய் சமைச்சு சாப்பிட்டு அடுத்த வாரமே எல்லாமே மறந்து போவீர்கள், ஆனால் அரசாங்கங்கள் இது சம்பந்தமான அமைப்புக்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கணனியில் போட்டு வைக்கும் அது உங்கள் சந்ததிகள் மாறியபின்னரும் அரசின் கண்காணிப்பில் இருக்கும். எங்கள் அமைப்புக்களின்  கோரிக்கைகளை பரிசீலிக்க அனுதாபத்துடன் நோக்க பல ஆயிரம் தடவை பல வருடங்கள் மீள மீள சரி பார்க்கும் 

தென்னிந்திய கலைஞர்களுக்கு  முட்டை வீசியது கேவலத்தின் உச்சம்,  நிகழ்வு ஏற்பாடு செய்தது யாரோ, இவர்கள் காசு வாங்கிட்டு பாட வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் தகராறு தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனைக்கும் இந்தியாவில்  ஸ்ரீனிவாஸ் எந்த நிகழ்விலும் புலம்பெயர் தமிழர்கள் பற்றி உயர்வாகவே பேசுவார். வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தி அனுப்புவதுபோல் இருக்கிறது இவர்கள் செயற்பாடு.

சுவிசில் ஏற்கனவே ஒரு புடுங்குபாடு நடந்து முடிய இப்போது கனடாவில்,

இந்த லட்சணத்தில் புலிகளின் தடையை சர்வதேசத்தில் நீக்கவேண்டுமென்று  நம்மவர்கள் கூப்பாடு.

இறுதி நிமிடம்வரை ஒரே தலைவன் கீழ் ஒரே லட்சியத்துக்காக ஒரே மக்களின் விசுவாசமிக்க இயக்கமாக வாழ்ந்து மறைந்த இயக்கம் , தடை மட்டும் எடுக்கப்படும் நிலை வந்தால் பல புலிகள் இயக்கமாக பல தலைவர்களாக பல கொள்கைகளாக பிளவுபட்டு புலிகள் இயக்கத்தின் புனிதத்தையே சாக்கடையாக்கும் நிலமையே நிலையே தோன்றும். 

முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர்  புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது  போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும்.

அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள்.

புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர்  புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது  போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும்.

அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள்.

புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.

இப்ப விளங்குது தலைவர் ஏன் சிலதை மண்டையில்  போட்டு அடித்து உட்காரவைத்தவர் என்று 
படித்தவனாக இருந்தால் சுமந்திரன் போல இருந்திருப்பான், படிக்காதவனாக இருந்தால் இந்த காவலிகள் போல இருந்திருப்பான் என்பது தலைவருக்கு முன்னமே தெரியும். இதில எத்தினை காவலிகள் யாழ்ப்பாணத்தில் தமனாவை காவாலாக்கிய கூட்டத்திற்கு அறிவுரை சொன்னார்களோ ...?. ஆனால் ஒன்றுமட்டும் தெரியுது இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அரபிக்குதிரையானாலும் பிறவிக்குணம் போகாது. இந்தக்கூட்டம் சிங்கையில் இருந்திருக்கவேணும், புட்டம் வீங்க செமையா கொடுத்து இலங்கைக்கு திரும்ப அனுப்பியிருப்பினம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழர் தெரு விழாவை  பகிஷ்கரிக்கக் கோரியவர்கள்... 
அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில், தென்னிந்திய  பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது  முட்டை   வீசியிருந்தால்.... மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டும். 

ஆனால்.. மேலே கூட்டத்திற்கு சென்றவர், அந்த நிகழ்வை மேடையின் முன் இருந்து பார்த்தவர்...  கூறும் கூற்றுப் படி எவருமே... முட்டை வீசியதை  காணவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றே கூறுகின்றார். மேலும்  பாதுகாப்பு அதிகாரிகள் பாடகர் சிறிநிவாசை  அழைத்துச் செல்லும் காணொளியில்... அவரின் உடை மீது முட்டை பட்ட அறிகுறியும் இல்லை. அப்படியிருக்க நடக்காத ஒரு  செயலுக்கு.. வன்மம் கக்குவது ஏற்புடையது அல்ல. 

மேடை நிகழ்வை  படம் பிடித்துக் கொண்டு எத்தனையோ "யூ - ரியூப்"காரரும், அங்கு சமூகமளித்திருந்த பலரும்...  கைத்தொலை பேசியுடன் படம் பிடித்துக் கொண்டு இருந்த நிலையில்,  முட்டை  வீச்சு பதியப் படாமல் இருக்கும் போது...  இல்லாத ஒன்றை நாம் ஏன் கற்பனையில் நினைத்து கருத்து எழுத  வேண்டும்.
 
அத்துடன்... புலம் பெயர் தேசத்தில் தமிழர்களிடம்  குழப்பம் ஏற்படுத்த என்றே.. ஸ்ரீலங்கா, இந்திய தூதரகங்கள் தமது புலனாய்வுப் பிரிவை அதிக அளவில் பிரான்ஸ், சுவிஸ், கனடா போன்ற நாடுகளில்  ஊடுருவ விட்டுள்ளார்கள் என்பதை செய்தி ஊடகங்கள் வாயிலாகவும், சில சம்பவங்கள் மூலமும் கண்டு கொண்டோம்.   அதன் தொடார்ச்சியாகவும் இந்த அந்த அசம்பாவிதங்கள்  தோற்றுவிக்கப் பட்டு இருக்கலாம் என்பதும் சாத்தியமே. 

முட்டை  வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும்  போட்டு எழுதவும்.
அப்பதான்... நீங்கள் சொல்வதில்  அர்த்தம் இருக்கும். 

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஆதரவு உள்ள நிகழ்வை ஒரு பகுதி திட்டமிட்டு குழப்பி உள்ளதாக கருத வேண்டி உள்ளது. தமது புறக்கணிப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கேட்கவில்லை எனும் கோபத்தில் தமது இயலாமையின் வெளிப்பாடாக கீழ்த்தரமான வேலைகளில் சில பகுதி ஈடுபட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது. 

இந்த புறக்கணிப்பின் பின்னால் உள்ள வியாபார போட்டிகள், அரசியல், மற்றும் அமைப்பு ரீதியான போட்டிகளை யார் அறிவார்!

ஒரு பொழுது போக்கு, மனதுக்கு இனிமையை ஏற்படுத்தும் நிகழ்வு ரவுடி கூட்டத்தினால் குழப்பம் செய்யப்பட்டு உள்ளது. 

இனி இந்த ரவுடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க தேசியத்தை முதுகில் சுமந்து கொண்டு திரிபவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இதுவும் கடந்து போகும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயம் said:

மக்கள் ஆதரவு உள்ள நிகழ்வை ஒரு பகுதி திட்டமிட்டு குழப்பி உள்ளதாக கருத வேண்டி உள்ளது. தமது புறக்கணிப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கேட்கவில்லை எனும் கோபத்தில் தமது இயலாமையின் வெளிப்பாடாக கீழ்த்தரமான வேலைகளில் சில பகுதி ஈடுபட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது. 

இந்த புறக்கணிப்பின் பின்னால் உள்ள வியாபார போட்டிகள், அரசியல், மற்றும் அமைப்பு ரீதியான போட்டிகளை யார் அறிவார்!

ஒரு பொழுது போக்கு, மனதுக்கு இனிமையை ஏற்படுத்தும் நிகழ்வு ரவுடி கூட்டத்தினால் குழப்பம் செய்யப்பட்டு உள்ளது. 

இனி இந்த ரவுடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க தேசியத்தை முதுகில் சுமந்து கொண்டு திரிபவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இதுவும் கடந்து போகும். 

கனேடியத் தமிழர்களை இரண்டாகக் கூறுபோட்டாயிற்று. 

மாவீரர் தினத்தையே இரண்டாகக் கூறுபோட்டவர்கள் அல்லவா நாம்? 

☹️

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் ஊடகவியளாலர் ரமணனின் பேட்டி இது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மிக தெளிவாக ஆராய்ந்து, பக்கச்சார்பற்று இந்தப் பேட்டி அமைந்துள்ளது.

இது தொடர்பான அக்கறை உள்ளவர்கள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு பேட்டி இது.

ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும், எம் இரத்ததில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் கருத்தாடல்களும், உரையாடல்களும் நிறைந்து இருக்கும் தமிழ் சூழலில் இது போன்ற தெளிவான பேட்டிகளை காண்பது மனசுக்கு ஆறுதல் கொடுக்கின்றது.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஈகோ பிரச்சனை; இப்படி நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை; எங்களின் கையை மீறிப் போய்விட்டது....................🫣.

இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். 

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

முட்டை  வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும்  போட்டு எழுதவும்.
அப்பதான்... நீங்கள் சொல்வதில்  அர்த்தம் இருக்கும். 

இது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா  ??   படம் எங்கே  ??   

தயவுசெய்து படத்தை இணைக்கவும். 😂😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இது ஒரு ஈகோ பிரச்சனை; இப்படி நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை; எங்களின் கையை மீறிப் போய்விட்டது....................🫣.

இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். 

முடியாது    ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும்   😂.  மற்றும்  திருமணம் போன்ற விழாக்கள்   எப்படி செய்வது??    இரண்டு பேருடன்.    ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

முடியாது    ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும்   😂.  மற்றும்  திருமணம் போன்ற விழாக்கள்   எப்படி செய்வது??    இரண்டு பேருடன்.    ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣

🤣..........

நீங்கள் சொல்வது புரிகின்றது........ ஆனால் நாங்கள் மூன்று பேர்கள் ஒன்றாய் நின்றாலே, இருவருக்கிடையில் ஈகோ பிரச்சனை வர, அந்தக் கலவரத்தில் மூன்றாதவர் கல்யாண மணவறையைக் கொளுத்திப் போடுவார் போலத் தெரியுதே...... 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

நாங்கள் மூன்று பேர்கள் ஒன்றாய் நின்றாலே, இருவருக்கிடையில் ஈகோ பிரச்சனை வர, அந்தக் கலவரத்தில் மூன்றாதவர் கல்யாண மணவறையைக் கொளுத்திப் போடுவார் போலத் தெரியுதே...... 

மணவறையை  கொளுத்திப் போட்டு நியாயமும் கதைப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் தீவிர தமிழ்த் தேசியவாதிகள். 

கொடி பிடிக்காதோர் துரோகிகள். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆயுதங்கள் 2009 இல் மெளனிக்கப்பட்ட பின் கொடி பிடிப்பவர்களின் இமாலய சாதனை என்ன? கனடா பிரம்டன் நகரில் நினைவு தூபி நிர்மாணிப்பதா?

 

On 27/8/2024 at 21:02, நிழலி said:

முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார்

 

தனது வெற்றி நிகழ்வில் துரோகிகள் பற்றி அவதானம் தேவை என கூறியதை ஊடகம் வாயிலாக பார்த்தேன். இவரது ரெசுமி எந்த வகை என்பது அப்போதே விளங்கிவிட்டது. 

Edited by நியாயம்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார்.  அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை.  ☹️
    • யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும் அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர்.  மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை. யுத்த நிறுத்த‌க் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது.  யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான  கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர்.  "எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்". "கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார். சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை  ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார். "நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார். கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார். "என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார்.  "கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார்.  ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார்.  பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார். தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார். மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது. இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர். பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும்  நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார்,  "எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார். போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.
    • என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..  
    • குற்றம் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டி அவசியம் எனக்கு இல்லை   நான் சிரிப்பு குறி  போட்டது  பயணச்சீட்டு கேட்டதற்கு தான்  மற்றும்படி   தந்தை மகளுடன். உடலுறவு கொண்டதற்க்கு இல்லை   சரியா??    உங்கள் வாதப்படி   பொலிஸ் அழைக்கவில்லை என்றால் பாலியல் வல்லுறவு  என்று மகள் சொல்லவில்லை  என்பது புலனகிறது   அப்படி என்றால் இருவரது சம்மதத்துடன். நடந்த உடலுறவா??   இங்கே பலரும் கருத்து எழுதி உள்ளார்கள்  எவருமே கண்டிக்கவில்லை     ஆனால் நான் இரு தடவையாக கண்டித்து உள்ளேன்     நான் இந்த உடலுறவை எங்கும் வரவேற்கவில்லை     ஆதரித்து கருத்துகள் பதியவில்லை     யாழ்ப்பாணத்தில். நடந்த உடலுறவுக்காக ஆப்கானிஸ்தான்க்கு பயணச்சீட்டு கேட்டதற்கு தான் சிரித்தேன்  இதை வாசித்து விளங்காதவர்கள். பற்றி என்ன சொல்ல??  நீங்கள் மகள்  தந்தை    என்ன சொன்னார்கள். என்பதை அறிந்து பதிவிடுங்கள் 🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.