Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

29 minutes ago, விசுகு said:

நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர 

அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே. 

எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது????

நீங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ள என் கருத்துக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. 

நான் ஒரு முயற்சி, அது வென்றால் பயனில்லை அதே நேரத்தில் அது தோற்றால் தீங்கை விளைவிக்கும் என்று குறிப்பிட்டு, அதற்காக மக்களை அணி திரட்டுவது மோசமான அரசியல் என்று எழுதுகின்றேன், ஆனால் நீங்கள் சம்பந்தமில்லாமல் எழுதியுள்ளீர்கள்.

  • Replies 165
  • Views 10.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை.  இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இரு

  • சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள்.  மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்க

  • நிழலி
    நிழலி

    சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா.
பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள்.

இங்கேதானே பிரச்சினையே. அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். மக்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்வார்கள். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் தலமையும் பாராளுமன்றம் போவார்கள். மக்கள் வழமைபோல்  தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். திரும்ப தேர்தல் வரும் புதிதாக ஏதாவது கொண்டு வருவார்கள். 

சிங்கள அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம்.  இவர்களைப் பற்றி? தமிழினத்தை அரிக்கும் கறையான்கள்.

38 minutes ago, ஏராளன் said:

2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை?
வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே?

2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது. 

பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.

2005 இற்கு முன்னர், புலிகள் இருந்த காலத்தில், ஒவ்வொரு சனாதிபதி / பாராளுமன்ற தேர்தலில்களிலும் புலிகள் நேரிடையாக இல்லாமல், தம் ஆதரவு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் இன்னாருக்கு வாக்களித்தால் நல்லம் என்று சமிக்ஞைகளை வெளியிடுவார்கள்.

பிரேமதாசா சனாதிபதித் தேர்தலில் நின்ற போது, சந்திரிகா முதலில் நின்ற போது, ரணில் பிரதமர் வேட்பாளராக நின்ற போது இவ்வாறான சமிக்ஞைகளை வெளியிட, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கே வாக்களித்தனர்.

இவ்வாறு புலிகள் செய்தமை, வெல்கின்றவர்கள் தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. சில குறுகிய கால நன்மைகளை பெற்று அதன் மூலம் அடுத்த கட்டங்களை அடைவதற்கு. சிங்களம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை தரப் போவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருந்தார்கள். ஆயினும் கூட, குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய விடயங்களை எதிர்பார்த்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றார்கள் (இந்திய இராணுவ வெளியேற்றம், சந்திரிகா காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் வளங்களை பெருக்கியமை ).

அதே போன்று 2005 உம் அதன் பின் வந்த சனாதிபதி / பிரதமர்களும். இவர்கள் ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை. அதுவும் புலிகள் இராணுவ பலத்துடன் இருக்கும் போதே தீர்வைத் தராத சிங்களம் இனி ஒரு போதும் தராது. அப்படி தரும் என்று நம்புவது மடத்தனமாகவே அமையும். ஆனால் வரப் போகின்றவர்களைக் கொண்டு குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய நன்மைகளை அடைய தமிழ் சமூகம் முயல வேண்டும். ஆகக் குறைந்தது பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் நிலையை விட ஒரு சில அடிகளாவது முன்னோக்கி போக முடிகின்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த சனாதிபதித் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சிந்திக்கும் நிலையில் அங்கு எவரும் இல்லை என்பதால், தமிழ் மக்களை தம் விருப்புப் படி வாக்களியுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

இவற்றுக்கு பதிலாக நன்மை தராத, எதிர்பார்த்தது நடக்காவிடின் தீமையை தரப் போகின்ற ஒன்றை முன்வைத்துள்ளனர்.

39 minutes ago, ஏராளன் said:

பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆழ மூழ்கின்றவனுக்கு உதவ வக்கில்லாத ஒரு கூட்டத்தால் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு பாறாங்கல். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வினைத்திறன் மிக்க, மக்களின் இன்றைய அரசியல் / பொருளாதார நிலையினை சற்றேனும் முன்னகர்த்தக்  கூடிய ஒரு விடையத்தை கையிலெடுத்து, அதனை மக்கள் முன் கொண்டு சென்று அதற்கான முழு உழைப்பையும் கொட்டி ஒன்று திரட்டினால், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும்.

ஆனால், 100 வீதம் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பினும் கூட, சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் முதலாம் அல்லது முதலாம் + இரண்டாம் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தெற்கில் இருந்து இலங்கையின் சனாதிபதியாகிய அடுத்த நாளில் இருந்து எல்லாம் தமிழ் மக்களுக்கு வழமை போல், எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல் வாழ்வும் நாட்களும் நகரக் கூடிய நிலையில், இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

நான் கணிப்பது போல் 30 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் பெறுவாராயின், முன்னை இருந்த நிலையை விட கீழான நிலைக்கே தாயகத்தில் தமிழ் தேசியம் அடையும். ஏற்கனவே தமிழ் தேசிய உணர்வுகளில் இருந்து விலகி இரண்டறக் கலந்தால் பலன் அதிகம் என நினைக்கும் அல்லது வெளி நாட்டுக்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கின்ற இளைய சமூகம் மேலும் மேலும் அவ்வாறான பாதையையே தெரிவு செய்யும்.

அத்துடன், வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும், கிழக்கு இனியும் வடக்குடன் இணையாது என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும் தான் இது கொடுக்கும்.

திட்டமிட்ட போன்று பலனளித்தால் அதனால் எந்த பயனும் இல்லாமல், அது தோற்றுப் போனால் தீங்கு வரக் கூடிய ஒரு முயற்சியை மக்கள் முன் கொண்டு செல்வது மக்களுக்கு செய்யும் துரோகம்.  அதைத் தான் இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்கின்றது.

நல்லது நிழலி

அப்போ யாருக்க வாக்கு போடலாம்?

ஏன் போடவேண்டும்?

59 minutes ago, Kavi arunasalam said:

இங்கேதானே பிரச்சினையே. அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். மக்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்வார்கள். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் தலமையும் பாராளுமன்றம் போவார்கள். மக்கள் வழமைபோல்  தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். திரும்ப தேர்தல் வரும் புதிதாக ஏதாவது கொண்டு வருவார்கள். 

சிங்கள அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம்.  இவர்களைப் பற்றி? தமிழினத்தை அரிக்கும் கறையான்கள்.

அதனாலே கறையான்களை ஆதரிக்காமல் பேரினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

2005 இற்கு முன்னர், புலிகள் இருந்த காலத்தில், ஒவ்வொரு சனாதிபதி / பாராளுமன்ற தேர்தலில்களிலும் புலிகள் நேரிடையாக இல்லாமல், தம் ஆதரவு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் இன்னாருக்கு வாக்களித்தால் நல்லம் என்று சமிக்ஞைகளை வெளியிடுவார்கள்.

பிரேமதாசா சனாதிபதித் தேர்தலில் நின்ற போது, சந்திரிகா முதலில் நின்ற போது, ரணில் பிரதமர் வேட்பாளராக நின்ற போது இவ்வாறான சமிக்ஞைகளை வெளியிட, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கே வாக்களித்தனர்.

இவ்வாறு புலிகள் செய்தமை, வெல்கின்றவர்கள் தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. சில குறுகிய கால நன்மைகளை பெற்று அதன் மூலம் அடுத்த கட்டங்களை அடைவதற்கு. சிங்களம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை தரப் போவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருந்தார்கள். ஆயினும் கூட, குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய விடயங்களை எதிர்பார்த்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றார்கள் (இந்திய இராணுவ வெளியேற்றம், சந்திரிகா காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் வளங்களை பெருக்கியமை ).

அதே போன்று 2005 உம் அதன் பின் வந்த சனாதிபதி / பிரதமர்களும். இவர்கள் ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை. அதுவும் புலிகள் இராணுவ பலத்துடன் இருக்கும் போதே தீர்வைத் தராத சிங்களம் இனி ஒரு போதும் தராது. அப்படி தரும் என்று நம்புவது மடத்தனமாகவே அமையும். ஆனால் வரப் போகின்றவர்களைக் கொண்டு குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய நன்மைகளை அடைய தமிழ் சமூகம் முயல வேண்டும். ஆகக் குறைந்தது பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் நிலையை விட ஒரு சில அடிகளாவது முன்னோக்கி போக முடிகின்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த சனாதிபதித் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சிந்திக்கும் நிலையில் அங்கு எவரும் இல்லை என்பதால், தமிழ் மக்களை தம் விருப்புப் படி வாக்களியுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

இவற்றுக்கு பதிலாக நன்மை தராத, எதிர்பார்த்தது நடக்காவிடின் தீமையை தரப் போகின்ற ஒன்றை முன்வைத்துள்ளனர்.

ஆழ மூழ்கின்றவனுக்கு உதவ வக்கில்லாத ஒரு கூட்டத்தால் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு பாறாங்கல். 

சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களை வைத்திருந்து அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் செல்வாக்குடன் தாங்கள் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்று முயற்சிக்கின்றார்கள்

33 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது நிழலி

அப்போ யாருக்க வாக்கு போடலாம்?

ஏன் போடவேண்டும்?

உங்களது கருத்துக்கு மேல் உள்ள,  நான் ஏராளனுக்கு எழுதிய பதிலில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..

நீங்கள. கூறியது 100 வீதம் உண்மை. 2015 ம் ஆண்டுக்கு முன்பு இரு முறை அங்கு சென்ற போது முழுமையான இராணுவ ஆதிக்கம் இருந்தது. வாய் திறக்கவே மக்கள் பயந்தார்கள். பாடசாலைகளில் ஒரு  விழா என்றால் கூட  அப்பகுதி இராணுவ அதிகாரியை கட்டாயம் அழைக்கவேண்டிய நிலை இருந்தது. நினைவேந்தல்கள் இல்லை. நிலாந்தன் போன்ற பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் இன்று போல் எழுதும் சூழ்நிலை இருக்கவில்லை.  இன்று வீரம  கதைக்கும் பலர் 2015 ம் ஆண்டுக்கு முன்பு வாயே திறக்கவில்லை. 

ஆனால்,  2016, 2018 ல் போன போது பாரிய இடைவெளியை உணரக்கூடியதாக இருந்தது. எனவே அன்று மைத்திரியை ஆதரித்தால் மக்கள் எதையும் இழந்துவிடவில்லை.  நன்மைகளையே பெற்றனர்.  2015 ல் மைத்திரியை ஆதரித்ததால் நாம் எதையும  பெறவில்லை என்று இன்று புலம்புபவர்கள் எவரும் 2015 ம் ஆண்டுக்கு என்ன செய்தனர்? 

அன்று செய்ததைப்போல்  மக்களின் நடைமுறை பிரச்சனைகளை நிறைவேற்க் கூடிய வேட்பாளர்களோடு நடைமுறை பிரச்சனைகள் தொடர்பில் பேசி அவர்களுக்கு வாக்களிப்பதே உகந்தது. அரியநேந்திரன்  போன்ற வெத்து  வேட்டு கோமாளிகளுக்கு  வாக்களிப்பதால் எதுவும் கிடைக்கபோவதில்லை. ஒரு bollot sheet waste. அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே. 

அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ  தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில்  தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ  தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில்  தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.

இந்த பொதுவேட்பாளர் கேம் என்பது தாயகத்தில் வாழும் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கு  அடுத்த பாராளுமறன்ற தேர்தலுக்கான ஒரு உசுப்பேற்றல் முதலீடு. ( பாராளுமன்றம் சென்று ஶ்ரீலங்கா ஒற்றையாட்சிக்கு விசுவாசபாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்வது வேறு)

புலம்  பெயர்  நாடுகளில் வெட்டி வீர தேசியம்  பேசுபவர்களுக்கு ஒரு time pass. மற்றும் உண்டியல் இதர வருமானம். etc

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

தமிழன் தலையில் எப்படி அமைத்தாலும் கேட்க நாதியில்லை தானே

ஆமாம்   அமைத்தால்.   .....கேட்கமாட்டார்கள் தான் 

ஆனால்  அரைத்தால்.  கண்டிப்பாக கேட்பார்கள் 😂🤣🤣🤪

குறிப்பு...   சும்மா பகிடிக்கு   ..   🤣

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்கிறேன். நன்றிகள்.

கருத்துக்கு கருத்து வைக்கவே இக் கருத்துக்களம். இனி இந்த திரி புலம்பெயர் தமிழர்கள் மேல் வசை பாடமட்டுமே தொடரப்போகிறது. 

எனது கருத்தை நான் இங்கே முழுமையாக சொல்லி விட்டேன். நன்றி வணக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது..

இதை தவிர்த்து மற்றைய கருத்துகள் சிறந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

உங்களது கருத்துக்கு மேல் உள்ள,  நான் ஏராளனுக்கு எழுதிய பதிலில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளது.

இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள்.

அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள்.

இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர்.

ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது?

பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா?

அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்?

நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை.

அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ  தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில்  தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.

காலாகாலமா எந்த வாளிக்குள் உங்கள் குப்பைகளைப் போடுகிறீர்கள்?

போட்டு அவர்களை அழகு பார்க்க

அவர்களோ குனியவிட்டு வெழுவெழென்று வெழுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வரிப்பணத்திலிருந்தே மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன, அந்த மக்களிடம் வாங்கும் பணத்தை மக்களுகு வழ்ங்குவதற்கு இடைத்தரகர்களாக உள்ள அரசியல்வாதிகள் அந்த பணத்தை ஆட்டையை போட்டு பெருச்சாளி ஆகுகிறார்கள், தமது பணத்தையே திரும்ப பெறுவதற்கு இந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிற நிலையில் இருக்கிறது, இந்த அரசியல்வஸ்துக்களுக்கு வாக்களிப்பதை விட்டு விட்டு வரி கட்டுவதை நிறுத்தினால் சில வேளை வழிக்கு வருவரக்கூடும்.

மக்கள் காசையும் குடுத்து அவர்களின் காலில் விழும் நிலைக்கு  இலங்கை அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துள்ளதா?

1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள்.

அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள்.

இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர்.

ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது?

பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா?

அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்?

நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை.

அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவும். நான் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எங்கும் எழுதவில்லை. ஏனெனில், இந்த பொது வேட்பாளர் முயற்சியே ஒரு பெரும் ஏமாற்று நாடகம்.  அரசியலில் அநாதைகளாக்கப்பட்டவர்கள் தம் இருப்பை பேணச் செய்யும் போலி தேசியம் இது.

தாயக மக்களை தம் விருப்புக்கு ஏற்ற மாதிரி வாக்களிக்க சொல்லி இருக்க வேண்டும் தமிழ் கட்சிகள். இல்லாவிடின் வேட்பாளர்களுடன் பொருளாதார நலன்கள், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பாக சில உறுதி மொழிகளைப் பெற்று,  அவற்றை நிறைவேற்றுவதன் அடிப்படையில் அடுத்த தேர்தல்களிலும் ஆதரவை தொடரலாம் என்று ஒரு பேரம் பேசலையாவது செய்து இருக்க வேண்டும். அப்படி செய்து, அதனடிப்படையில் இன்னாருக்கு தம் ஆதரவை வழங்கி இருக்க வேண்டும்.

இப்படி காத்திரமாக செய்யாமல் பொது வேட்பாளரை இறக்கியதும், சுமந்திரன் சாணக்கியன் வகையறா சஜித்தை ஆதரிப்பதும் மக்களை ஏமாற்றும் துரோகச் செயல்கள்.

********

எனக்கு இலங்கையில் 2007 வரைக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. விக்கிரமபாகு கருணாரத்ன விற்கு தவிர எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் செல்லுபடியாக்கி விட்டு வருவேன். இன்றும் நான் அங்கு இருப்பின் அதைத் தான் செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

தாயக மக்களை தம் விருப்புக்கு ஏற்ற மாதிரி வாக்களிக்க சொல்லி இருக்க வேண்டும் தமிழ் கட்சிகள். இல்லாவிடின் வேட்பாளர்களுடன் பொருளாதார நலன்கள், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பாக சில உறுதி மொழிகளைப் பெற்று,  அவற்றை நிறைவேற்றுவதன் அடிப்படையில் அடுத்த தேர்தல்களிலும் ஆதரவை தொடரலாம் என்று ஒரு பேரம் பேசலையாவது செய்து இருக்க வேண்டும். அப்படி செய்து, அதனடிப்படையில் இன்னாருக்கு தம் ஆதரவை வழங்கி இருக்க வேண்டும்.

மக்கள் தமது விருப்புக்குத் தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தான் கள நிலமை அண்ணா.
தபால் வாக்களித்த அண்ணர் ஒருவரிடம் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்ததாக கூறினார், ஏன் அரியத்தாருக்கு போடேல்ல என்ற தும்பு பறக்க பேசிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மக்கள் தமது விருப்புக்குத் தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தான் கள நிலமை அண்ணா.
தபால் வாக்களித்த அண்ணர் ஒருவரிடம் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்ததாக கூறினார், ஏன் அரியத்தாருக்கு போடேல்ல என்ற தும்பு பறக்க பேசிறார்!

ஏராளன், நீங்கள் கேட்ட  ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂
அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார்.
சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣

அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை உயீர்மூச்சாய் நேசிப்போம்  
சிவனுக்கு சங்கில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்கின்ற சங்காய் இருப்போம்
சங்கிற்கு வாக்களித்து மானம் காப்போம்]

வட்சப்பில் வந்தது இதை எழுதுவது வாக்குகளே இல்லாத புலம்பெயர்ந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன், நீங்கள் கேட்ட  ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂
அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார்.
சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣

அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂

எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம் 

அதே...  ஊரில் உள்ள அரச ஊழியர்  பலரும், 
சங்கிற்கு வாக்களித்துள்ளதாக சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன், நீங்கள் கேட்ட  ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂
அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார்.
சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣

அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂

அப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது தான் அண்ணை.

40 minutes ago, வாதவூரான் said:

எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம் 

அப்ப சங்கிற்கும் சஜித்திற்கும் தானோ?!
ஒரு தம்பி விருப்பு வாக்களிப்பதை பற்றிக் கேட்க 1, 2, 3 என யாருக்கு முதல் வாக்கோ 1 பிறகு விருப்பின் அடிப்படையில் போடச் சொன்னேன். அப்பா சொன்னார் ஒரே ஒரு புள்ளடி சங்கிற்கு மட்டும் போடச் சொல்லி!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வாக்கிருந்து வாக்குப் போட்டால் முதலாவது சங்கிற்கும் இரண்டாவதாக சயித்துக்குமே போட்டிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் வாக்கிருந்து வாக்குப் போட்டால் முதலாவது சங்கிற்கும் இரண்டாவதாக சயித்துக்குமே போட்டிருப்பேன்.

இந்த நேர்மை வேண்டும் காண்.

சிறிதரன், ஆனந்தி ஏன் சுமந்திரனிடம் கூட அந்த நேர்மை இருக்கிறது. ஆனால் இங்கே.....???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.

மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள்,பிரதேசக் கிளைகள் ,மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு அண்மையில் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என தீர்மானம் அறிவித்த நிலையில் பல்வேறு வகையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்துது இந்த நிலையில் கிளி நொச்சி மாவட்டகிளை கூடி பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரனுக்கே ஆதரவு அளிப்பது என்பதனை ஏகமனதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

IMG-20240909-WA0147.jpg

தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.