Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் முடிவு – தேர்தல் களத்தில் மாற்றம்: அரியநேத்திரன் வெற்றிபெற முடியாது என்கிறார் சுமந்திரன்

sumanthiran-sritharan-ariyam.jpg

பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த முடிவை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் இயக்கம் கணிசமான அளவில் மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு நாங்கள் முடிவு செய்தமையால், வடக்கி – கிழக்கின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்குத்தான் கிடைக்கும்..

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரே முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

“நாங்கள் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனையை சுமந்திரன் நிராகரித்தார், அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் இது தவறான உத்தி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.அரியநேத்திரன் தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2019 தேர்தலில் நாங்கள் சஜித்தை ஆதரித்தோம், 2024ஆம் ஆண்டிலும் அவருக்கு ஆதரவளிப்போம் என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக சஜித், அனுர மற்றும் ரணில் விக்கிரமசிங்க மத்தியில் வாக்குகள் பிளவுபட்டிருந்த நிலையில், சஜித்துக்கு அதரவளிக்க தமிழரசு கட்சி எடுத்த முடிவினார் இப்போது தேர்தல் களம் மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சஜித்துடன் முறையான உடன்பாடு இல்லை என தெரிவித்த அவர், “எங்களுக்கு அனுரவை நன்றாகத் தெரியாது எனவும் ரணிலையும் நாங்கள் நன்கு அறிந்துள்ளதால் அவரை நிராகரித்தோம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களித்ததால் ரணில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றார்.

ஆனால் தற்போது அவர் ராஜபக்ச அணியுடன் இணைந்திருப்பதால், ரணில்-ராஜபக்ஷ கூட்டணிக்கு எங்கள் மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என மேலும் கூறியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=290547

  • Replies 165
  • Views 10.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை.  இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இரு

  • சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள்.  மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்க

  • நிழலி
    நிழலி

    சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2024 at 12:20, விசுகு said:

இனி ஆதரவு எல்லாம் வெண்டாப் பெண்டாட்டி கதை தான்.  எப்படியும் தனிய தான் படுக்க வேண்டும்..

அணைச்சு கொண்டு படு என்று சொல்வது சுலபம். ஆனால்.....???

அப்பிடியில்லை விசுகர், நாங்கள் வேண்டாப்பெண்டாட்டி என்றாலும் அணைத்துக்கொண்டுதான் படுப்பம், மேலேயுள்ளவன் பார்த்துக்கொள்வானேன்றுவிட்டு நிரைக்கு பெத்துப்போடுவம்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனையை சுமந்திரன் நிராகரித்தார், அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வாய்ப்பில்லை

சுத்துமாத்து சுமந்திரன் என்றுதான் எண்ணியிருந்தோம், ஜனாதிபதியாக வெற்றிபெற அவர் போட்டியிடவில்லை என்று எல்லோரும் காட்டுக்கத்தல் கத்ததினாலும் அந்தாளுக்கு காதும் கேளாது என்று இப்போதுதான் தெரிகிறது.🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசின் தீர்மானம் இறுதியானது

adminSeptember 6, 2024
IMG-20240906-WA0095-1170x878.jpg

சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக மீண்டும் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவை இல்லை. கூட்டம் நடைபெற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியில் அவர் இவர் என பார்த்துக்கொண்டு இருந்தால் கூட்டத்தை நடத்த முடியாது. வந்த உறுப்பினர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அவர்கள் எடுத்த தீர்மானம் சரி.

எடுத்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதனை சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதனை அவர்கள் சொல்லலாம். ஆனால் கட்சி தீர்மானம் , உரிய கோரத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவே அந்த தீர்மானம் வலுவான தீர்மானம் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2024/206506/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

பெட்டிக்காக ஓடித்திரியிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

பெட்டிக்காக ஓடித்திரியிறாரோ?

மாவை… சும்மாவே அங்கும், இங்கும் பாய்வார்.
இனி… சொல்லி வேலை இல்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு தமிழர்களுக்கு இழைத்துள்ள துரோகம் - அங்கஜன் இராமநாதன்

Published By: DIGITAL DESK 7   08 SEP, 2024 | 09:25 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகமல்லவா, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் அகப்பட கூடாது. செய்நன்றி மறவாமல், ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (07)  இடம்பெற்ற சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் 'இயலும் ஸ்ரீ லங்கா' தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல, ஜனாதிபதிக்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. நன்றிக்கான கூட்டம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்வதற்கு நம்பிக்கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கான கூட்டமாகவே இதனை கருத வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை மென்மேலும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற வேண்டும். இல்லையேல் நாடு மீண்டும் பின்னடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலதடவைகள் ஆதரவளித்துள்ளார்கள்.  ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முதல் மேடை இதுவென்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் தலைவர்கள் இருந்த போது மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு வருடங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். நாங்கள் சந்தர்ப்பவாதிகளல்ல, நன்றியுள்ளவர்கள்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் இருந்திருந்தால் இலங்கை சோமாலியாவை போன்று மாறியிருக்கும். பொருளாதார மீட்சிக்கு சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எழுச்சிப் பெறுவதா?  அல்லது வீழ்ச்சியடைவதா ?  என்பதை செப்டெம்பர் 21 திகதி தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரைவாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை எழுத்துமூலமாக அவரிடம் வழங்கினேன். இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னரே நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்,

தமிழ் மக்களின் வாக்குகள் எம்மிடம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு செயற்படும் இவர்கள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தமிழர்கள் இந்த சூழ்ச்சியில் அகப்பட மாட்டார்கள். யார் உண்மையானவர்கள் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதியை இனவாதி என்று குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சியில் அவர் தமிழர்களுக்கு செய்த அபிவிருத்திகளை மக்கள் நன்கு அறிவார்கள்.வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடர்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/193105

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு யாருக்கு என இறுதி முடிவெடுக்க இலங்கை தமிழரசு கட்சியின் சிறப்பு குழு நாளை கூடுகிறது

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு நாளை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடவுள்ளதுடன் இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இந்த சந்திப்பு தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் கூடவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கை வெளியிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழு நாளை கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/309157

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி முடிவெடுப்பது தமிழ் மக்களே.மற்ற எவரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு நாளை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடவுள்ளதுடன் இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர்.

இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு

நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு

நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.

இவர்கள் எடுக்கும் முடிவை நாளை இவர்களால் நியமிக்கப்பட்ட மிக மிக சிறப்பு குழு கூடி ஆராய்ந்து அறிக்கை தரும். 

தமிழன் தலையில் எப்படி அமைத்தாலும் கேட்க நாதியில்லை தானே?

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆதரவு யாருக்கு என இறுதி முடிவெடுக்க இலங்கை தமிழரசு கட்சியின் சிறப்பு குழு நாளை கூடுகிறது

1 hour ago, ஈழப்பிரியன் said:

இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு

நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.

38 minutes ago, விசுகு said:

இவர்கள் எடுக்கும் முடிவை நாளை இவர்களால் நியமிக்கப்பட்ட மிக மிக சிறப்பு குழு கூடி ஆராய்ந்து அறிக்கை தரும். 

தமிழன் தலையில் எப்படி அமைத்தாலும் கேட்க நாதியில்லை தானே?

நாளையுடன்... தமிழரசு  கட்சி,  இரண்டாக பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

17 minutes ago, தமிழ் சிறி said:

நாளையுடன்... தமிழரசு  கட்சி,  இரண்டாக பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

தமிழ் கட்சிகளின் இந்த கூத்துகளால், அங்குள்ள தமிழ் இளைய சமூகம் தேசியக் கட்சிகளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கவரப்பட்டு, தமிழ் தேசிய அரசியலில் இருந்து முற்றாக அன்னியப்பட்டு போகப் போகின்றனர்.

தமிழ் பொதுவேட்பாளர் நியமனம் என்பது, தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கி சொல்லப் போகின்றது என்று முதல் நாளில் இருந்தே நான் அச்சப்பட்டு சொல்லி வருவது ஈற்றில் உண்மையாக நிகழ்ப் போகின்றது.

Edited by நிழலி
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாளையுடன்... தமிழரசு  கட்சி,  இரண்டாக பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இனி உடைய என்னதான் இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலம்பெயர் புண்ணியவான்கள் தாயக அரசியலில் இருந்து ஒதுங்கி புலம்பெயர் தேசங்களில் தமது வளங்களைப் பெருக்கிக்கொண்டு இருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும்.  

தமது பொழுதுபோக்கிற்காக சில பந்தயக் குதிரைகளை இறக்கிவிளையாடினதுதான் பிரச்சினையே!

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

தமிழ் பொதுவேட்பாளர் நியமனம் என்பது, தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கி சொல்லப் போகின்றது என்று முதல் நாளில் இருந்தே நான் அச்சப்பட்டு சொல்லி வருவது ஈற்றில் உண்மையாக நிகழ்ப் போகின்றது.

தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா.
பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் ஒற்றுமையின்மை வெளிப்பட்டால் அதுவும் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும், இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா.
பொதுவேட்பாளருக்கு

1 - தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள். நீங்கள் கூறுவது போல்

2 -ஒற்றுமையின்மை வெளிப்பட்டால் அதுவும் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும், இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

1 - முயன்று பார்க்கிறார்கள்

2 - இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

அதே

நன்றி  சகோ...

1 hour ago, ஏராளன் said:

தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா.
பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் ஒற்றுமையின்மை வெளிப்பட்டால் அதுவும் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும், இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

வினைத்திறன் மிக்க, மக்களின் இன்றைய அரசியல் / பொருளாதார நிலையினை சற்றேனும் முன்னகர்த்தக்  கூடிய ஒரு விடையத்தை கையிலெடுத்து, அதனை மக்கள் முன் கொண்டு சென்று அதற்கான முழு உழைப்பையும் கொட்டி ஒன்று திரட்டினால், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும்.

ஆனால், 100 வீதம் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பினும் கூட, சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் முதலாம் அல்லது முதலாம் + இரண்டாம் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தெற்கில் இருந்து இலங்கையின் சனாதிபதியாகிய அடுத்த நாளில் இருந்து எல்லாம் தமிழ் மக்களுக்கு வழமை போல், எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல் வாழ்வும் நாட்களும் நகரக் கூடிய நிலையில், இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

நான் கணிப்பது போல் 30 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் பெறுவாராயின், முன்னை இருந்த நிலையை விட கீழான நிலைக்கே தாயகத்தில் தமிழ் தேசியம் அடையும். ஏற்கனவே தமிழ் தேசிய உணர்வுகளில் இருந்து விலகி இரண்டறக் கலந்தால் பலன் அதிகம் என நினைக்கும் அல்லது வெளி நாட்டுக்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கின்ற இளைய சமூகம் மேலும் மேலும் அவ்வாறான பாதையையே தெரிவு செய்யும்.

அத்துடன், வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும், கிழக்கு இனியும் வடக்குடன் இணையாது என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும் தான் இது கொடுக்கும்.

திட்டமிட்ட போன்று பலனளித்தால் அதனால் எந்த பயனும் இல்லாமல், அது தோற்றுப் போனால் தீங்கு வரக் கூடிய ஒரு முயற்சியை மக்கள் முன் கொண்டு செல்வது மக்களுக்கு செய்யும் துரோகம்.  அதைத் தான் இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழரின் ஒற்றுமை கடந்த பொது தேர்தலில் நிரூபிக்கப்பட்டது.
அங்கஜன், டக்ளஸ் , பிள்ளையான் இன்னும் பலர் கூட்டமைப்பின் ஆசனங்களை கைப்பற்றி தங்களின் ஒற்றுமையின்மையை காட்டியுள்ளார்கள். மீண்டும் நிரூபிக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் சாணக்கியனும்  சகித்துக்கு ஆதரவு தேடி எப்படி தமிழரின் ஒற்றுமையை உறுதியாக்குவார்கள் என அறிய ஆவல்.
சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது போல் கிழக்கில் இருந்து ஒரு தமிழர்  ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுகிறார். இதில் வெளிநாடு எப்படி சிந்திக்கும் என்று நாம் கவலைப்படுவது ஏன் என்று புரியவில்லை. நாம் தமிழீழம் கேட்டு பொதுவாக்கெடுப்பு நடாத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

வினைத்திறன் மிக்க, மக்களின் இன்றைய அரசியல் / பொருளாதார நிலையினை சற்றேனும் முன்னகர்த்தக்  கூடிய ஒரு விடையத்தை கையிலெடுத்து, அதனை மக்கள் முன் கொண்டு சென்று அதற்கான முழு உழைப்பையும் கொட்டி ஒன்று திரட்டினால், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும்.

ஆனால், 100 வீதம் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பினும் கூட, சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் முதலாம் அல்லது முதலாம் + இரண்டாம் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தெற்கில் இருந்து இலங்கையின் சனாதிபதியாகிய அடுத்த நாளில் இருந்து எல்லாம் தமிழ் மக்களுக்கு வழமை போல், எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல் வாழ்வும் நாட்களும் நகரக் கூடிய நிலையில், இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

நான் கணிப்பது போல் 30 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் பெறுவாராயின், முன்னை இருந்த நிலையை விட கீழான நிலைக்கே தாயகத்தில் தமிழ் தேசியம் அடையும். ஏற்கனவே தமிழ் தேசிய உணர்வுகளில் இருந்து விலகி இரண்டறக் கலந்தால் பலன் அதிகம் என நினைக்கும் அல்லது வெளி நாட்டுக்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கின்ற இளைய சமூகம் மேலும் மேலும் அவ்வாறான பாதையையே தெரிவு செய்யும்.

அத்துடன், வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும், கிழக்கு இனியும் வடக்குடன் இணையாது என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும் தான் இது கொடுக்கும்.

திட்டமிட்ட போன்று பலனளித்தால் அதனால் எந்த பயனும் இல்லாமல், அது தோற்றுப் போனால் தீங்கு வரக் கூடிய ஒரு முயற்சியை மக்கள் முன் கொண்டு செல்வது மக்களுக்கு செய்யும் துரோகம்.  அதைத் தான் இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்கின்றது.

நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர 

அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே. 

எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது????

3 minutes ago, nunavilan said:

சுமந்திரனும் சாணக்கியனும்  சகித்துக்கு ஆதரவு தேடி எப்படி தமிழரின் ஒற்றுமையை உறுதியாக்குவார்கள் என அறிய ஆவல்.
சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது போல் கிழக்கில் இருந்து ஒரு தமிழர்  ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுகிறார். இதில் வெளிநாடு எப்படி சிந்திக்கும் என்று நாம் கவலைப்படுவது ஏன் என்று புரியவில்லை. நாம் தமிழீழம் கேட்டு பொதுவாக்கெடுப்பு நடாத்தவில்லை.

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.

மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர்

சிறீதரன் சிவஞானம் 

https://www.facebook.com/share/p/7hLfFwWsHpAMCRCa/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சுமந்திரனும் சாணக்கியனும்  சகித்துக்கு ஆதரவு தேடி எப்படி தமிழரின் ஒற்றுமையை உறுதியாக்குவார்கள் என அறிய ஆவல்.
சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது போல் கிழக்கில் இருந்து ஒரு தமிழர்  ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுகிறார். இதில் வெளிநாடு எப்படி சிந்திக்கும் என்று நாம் கவலைப்படுவது ஏன் என்று புரியவில்லை. நாம் தமிழீழம் கேட்டு பொதுவாக்கெடுப்பு நடாத்தவில்லை.

இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்!  

மற்றும்படி வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

100 வீதம் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பினும் கூட, சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் முதலாம் அல்லது முதலாம் + இரண்டாம் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தெற்கில் இருந்து இலங்கையின் சனாதிபதியாகிய அடுத்த நாளில் இருந்து எல்லாம் தமிழ் மக்களுக்கு வழமை போல், எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல் வாழ்வும் நாட்களும் நகரக் கூடிய நிலையில், இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை?
வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே?

2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது. 

பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.