Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

நிலம் இல்லாத நீங்கள் அதாவது வடக்கு கிழக்கு உங்களுக்கு இல்லை அங்கே நீங்கள் சுயாட்சி நிறுவ முடியாது என்றால் 

எப்படி கடலில் உரிமை கோர முடியும்??  இந்த கடலை இலங்கை அரசு இந்தியா அல்லது சீனா  இல்லை இது போன்ற வேறு நாடுகளுக்கு 100. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியும்  உங்களால் தடை செய்ய முடியுமா??  இல்லையல்லவா??  எனவே அந்த கடலில்  எவர் மீன்கள் பிடித்தால் தான் உஙகளுக்கு என்ன?? 🙏

வடக்கு கிழக்கில் எங்களின் சுயாட்சி இல்லை, அதனால் எங்கள்:

  •  கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன
  • வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன
  • மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன
  • இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன

என்று அடுத்தடுத்து வரிசையாகச் சொல்லப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கின்றது.........🤣.

கந்தையா அண்ணை, எங்களின் கரையோர மக்கள் பாவம், என்ன பாவம் செய்தார்களோ என்றுமே தீராத நெருக்கடி அவர்களின் வாழ்க்கைகள்...........  

  • Like 1
  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க

putthan

ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்ப

நிழலி

ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிரு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

 கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன

இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏

12 minutes ago, ரசோதரன் said:
  • வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன
  • மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன
  • இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன

இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்   

2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை   ஒற்றை ஆட்சியை நடைமுறையில்  ஏற்றுக்கொண்டார்கள்  

ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும். 

குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான்   ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, Kandiah57 said:

இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏

இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்   

ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும். 

ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣.

இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது.

கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை.

தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.

ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.

Edited by ரசோதரன்
  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை

உண்மை தான் எற்றுகொள்கிறேன். இதை தான் கூடாது என்கிறேன்     தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறிவிட்டது  மாற்றி விட்டீர்கள் 1983 யூன் இனியும் வரத் தான் போகுது   எங்கே போகலாம்” [உடுத்த உடுப்புடன்    எங்களுக்கு துன்பம் வரும் போது தொப்புள்கொடி உறவுகள்    ] 1983 இல் தமிழ்நாட்டின் ஆதரவு இருந்தது 2024 இல்  நாங்களே’ இல்லாமல் செய்து விட்டோம்    

இன்று ஒரு இனக்கலவரம்   வந்து  தமிழ்நாட்டுக்கு   லட்சக்கணக்கானவர்கள் போனால்   வரவேற்பு எப்படி இருக்கும்??   திருப்பி அனுப்பமாட்டார்களா.?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Kandiah57 said:

இன்று ஒரு இனக்கலவரம்   வந்து  தமிழ்நாட்டுக்கு   லட்சக்கணக்கானவர்கள் போனால்   வரவேற்பு எப்படி இருக்கும்??   திருப்பி அனுப்பமாட்டார்களா.?? 

அண்ணை இனி ஒருவரும் தப்பி ஓடமுடியாது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ஏராளன் said:

அண்ணை இனி ஒருவரும் தப்பி ஓடமுடியாது!

அப்படி ஓடினாலும். பிடித்து கப்பலில் ஏற்றி இலங்கை கடல்ப்படையிடம். ஒப்படைக்கப்படுவார்கள்.   அவர்களின் கதி அதேகதி தான்   

ஜேஆருக்கு தெரியும்  இலங்கைக்கும் இந்தியாவுகும்.  போர் நடந்தால் தமிழ் ஈழம் அமையும் என்று  எனவே புலிகளுடன். போர் புரிய வைத்தார்   இது ஒரு சிறந்த இராதந்திரம். 

இன்றும்  கடலை வைத்து தமிழ்நாட்டு மக்களையும்  இலங்கை தமிழர்களுயும். மோத வைக்கிறார்கள் இதுவும் ஒரு சிறந்த இராதந்திரம் தான்   நாங்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்திப்பதில்லையே 

மேலே யாழ் கள உறவு புத்தன் வெளிநாடுகளில் எங்கள் சந்ததிகள். வெளிநாட்டவரின். வாழ்வு’ ஆதாரத்தை. எப்படி பறிக்கிறார்கள் என்று   அது 25    30 வருடங்களில் பெரிய பிரச்சனையாக மாறும்   🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

அப்படி ஓடினாலும். பிடித்து கப்பலில் ஏற்றி இலங்கை கடல்ப்படையிடம். ஒப்படைக்கப்படுவார்கள்.   அவர்களின் கதி அதேகதி தான்   

யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Eppothum Thamizhan said:

யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏

எனக்கு தெரியும்   நான் என்ன செய்ய முடியும்?? எனது வாதம்  இந்தியாவை திட்டிக்கொண்டு   பகைத்துக்கொண்டு   சுயாட்சி   தமிழ் ஈழம்  பெற முடியாது என்பது தான்  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்  

இலங்கை தமிழருக்கு சுயாட்சி அல்லது தமிழ் ஈழம் கிடைக்கும்   ஆனால் அவர்கள் போர் புரிய மாட்டார்கள் சிங்களவரகள் நிலைமைக்கு ஏற்ப வளைத்து கொடுப்பார்கள்  இதனை நான் 1975 முதல் அவதானித்து வருகிறேன் 

குறிப்பு,..இலங்கையில் பெற்றோர் சகோதரங்கள். சக மனிதர்கள்  எப்படி நடத்தப்படுகிறார்கள்?? 

நன்றி வணக்கம்…   இதுவரை நான் விளக்கமாக எழுதியதை. பிழை என்று எவருமே கருத்துகள் முன் வைக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Eppothum Thamizhan said:

யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏

'முடியல்லடா சாமி............' என்று உடனேயே ஓடமுடியாது........ கந்தையா அண்ணையுடன் ஒரு இரண்டு பதிவுகளாவது நின்று பிடித்து விட்டே அப்படிச் சொல்லிக்கொண்டு ஓடவேண்டும்................🤣.

  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சற்றே புரிதலுக்காக,.. 👇
WHY SOME INMATES HAVE TO SHAVE THEIR HEADS BEFORE ENTERING 
There are a few reasons why people's heads are shaved before they enter prison in some areas.

1) First of all, for hygiene considerations, but also, to help prepare them for the,.

2) psychological and emotional reality of their life behind bars....   

3) In many areas having a convicted person's head shaved during prison intake is required by law..... 

4) Hair is an important symbol, with religious significance ...........in some cultures, and for this reason, the requirement that people in prison have their heads shaved has become controversial among certain incarcerated populations in some states (via NBC News). 

https://www.prisonlegalnews.org/in-the-news/2023/why-some-inmates-have-shave-their-heads-entering-prison-read-more-httpswwwgrungecom1221963why-some-inmates-have-shave-their-heads-entering-prison/

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். 
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது.  நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும்.   இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nochchi said:

நன்றிகள் பல.  மிகவும் அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் நல்ல பயனுள்ள கருத்துக்கள் நொச்சி .........நாம் உள்ளத்தையும் இழந்து நிற்கும் இனமாக இருக்கின்றோம் . ......... சும்மா உணர்ச்சி வசப்பட்டு பகையை வளர்ப்பது மென்மேலும் இன அழிவுக்குத்தான் வழிவகுக்கும் . ......!  

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றுவரை தமிழக  ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ  தமிழக அரசோ தமிழக மீனவர்கள்  எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது  கைது செய்யப்பட்டார்கள் என்றோ அ;ல்லது மீன் பிடித்தார்கள் என்றோ ஒத்துக்கொள்வதும் இல்லை ஒருவரி செய்தி எழுதுவதும்  இல்லை.

எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் ..

இலங்கை கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது,

கச்சதீவுக்கு அருகிலே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது..இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டார்கள் என்பதும்,

அல்லது இந்திய கடற்பரப்பில் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் என்றும் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பின்பு அதே வாயால் இலங்கை தமிழர்கள் உரிமையை, அவர்கள் வாழ்வு மேம்பாட்டை  வலியுறுத்துகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்.

மூன்று தசாப்த காலமாக உயிர் உடமை இழந்து போருக்குள் வாழ்ந்த ஈழ தமிழர்கள் இப்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறார்கள்அவர்கள்  வயிற்றில் அடிக்காதீர்கள் அது தவறென்று எந்த தரப்புமே தமது மீனவர்களுக்கு சொன்னதும் இல்லை தவறை சுட்டிக்காட்டியதும் இல்லை

காலம் காலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆரை தவிர்த்து ஏனைய தமிழக கட்சிகளும் ஊடகங்களும் செய்வது வெறும் அரசியல் வியாபாரமும் ஊடக வியாபாரமும் மட்டுமே.

உலகின் வலிமையான கடற்படையை கொண்டுள்ள இந்தியாவால் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பல ஆயிரம் படகுகள் நடுவே கஞ்சா தங்கம் ஆயுதம்   கடத்தும் ஒருசில படகுகளையே கண்டறியும் இந்திய கடற்படையால் நூற்றுக்கணக்கில் எல்லை தாண்டும்  மீன்பிடி படகுகளை  கண்காணிப்பது அத்தனை சிரமம் அல்ல, ஆனாலும் கண்டுக்காமல் இருப்பார்கள்,  

ஒருதடவை கடலுக்கு போய்வர இழுவை படகுகளுக்கு சில லட்சம் வாடகை  பணம் செலுத்தும்  அன்றாடங்காய்ச்சி மீனவர்கள் பணத்தை செலுத்துவதற்காகவே தமது பகுதியை வெறுமையாக்கிவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர்.

மத்திய மாநில அரசுகள் எல்லை தாண்டும் மீனவர்களுக்கெதிராய் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினால் கொஞ்சமாவது பயப்படுவார்கள், ஆனால் அரசுகளே அவர்கள் எல்லை தாண்டினார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லையே அப்புறம் எப்படி தண்டனைகள் சாத்தியம்?

ஒருதடவை எல்லைமீறும் மீனவர்களை விடுதலை செய்யுங்கள் அவர்கள் வரும் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு ஐடியா கொடுத்தார் , அதன்படி இலங்கையும் நடந்து கொண்டது,பறிமுதல் செய்யப்பட்ட வள்ளங்கள் கரையோரங்களின் நிறுத்தப்பட்டு உக்கிபோனது.

அப்போது ஓரளவு அத்துமீறுதல் கட்டுக்குள் வந்தது,  பின்பு இந்திய அரசின் பேச்சுவார்த்தையால் அது கைவிடப்பட்டது, எனக்கு தெரிந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கை தமிழருக்கு நன்மையாக செய்த ஒரேயொரு முதலும் கடைசியுமான காரியம் அதுதான்.

மீனவர்கள் கைது செய்யப்படும்போது இந்திய ஊடகங்களில் பின்னூட்டமிடும் இந்திய தமிழர் பலர் , ஈழத்து அகதிகளுக்கு நாங்கள் இங்கே குடியுரிமை கொடுக்க வலியுறுத்துகிறோம், வீடுகட்டி கொடுக்கிறோம், சோறு போடுகிறோம், ஆனால் அவர்கள் எமது மீனவர்களை தாக்குகிறார்கள் கைது செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

ஈழத்து அகதிகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை நன்றியுணர்வுடன் நோக்கத்தான் வேண்டும், அதற்காக இலங்கையில் உள்ள கரையோர மக்களை பட்டினி போடலாம் தப்பில்லை என்பதுபோல் அவர்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையை எந்த வழியில் புரிந்து கொள்வது?

வடபகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த  இலங்கை ஆயுதபடைகளின் உதவியை கேட்கும் அளவிற்கு நிலமை இன்றுள்ளது.அவர்களுக்கு வேறு வழியில்லை.

எந்த சிங்கள படைகளுக்கு எதிராக போரிட்டோமோ அதே சிங்கள படைகளுடன் ஈழ தமிழர்களை சேர்த்து வைக்கும் வேலையை தமிழகம் செய்கிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@valavan

கனவு காணாமல் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்கும் சிறந்த கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

@valavan

கனவு காணாமல் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்கும் சிறந்த கருத்துக்கள்.

உண்மை தான் யார் இல்லை என்றார்கள்??  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் நிறுத்தலாம்

சுவிட்சர்லாந்துக்கு ஜேர்மனியிலருந்து தரை வழியாக பயணித்த இலங்கை தமிழர்களை  எல்லைப்பகுதிகளில் சுவிற்சர்லாந்து பொலிஸாரினால் பிடித்து சணல் அடி வழங்கப்பட்டுள்ளன   பலரும் சொன்னார்கள் இலங்கை பொலிஸ் நன்று என்று 

இலங்கையில் ஒரு இனக்கலவரம்  வந்தால்  இலங்கை தமிழ் மக்கள் எல்லை தாண்ட முடியுமா??  தமிழ்நாட்டில் கால் வைக்கலாமா.  ?? 

1983 போல் ஒரு இனக்கலவரம். எற்ப்படுமாயின். 

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி   கொழும்பு காலி  அனுரதபுரம்.  அம்பாந்தோட்டை,   .   அடிப்பார்கள். வெட்டுவார்கள்.    ரயார். போட்டு கொழுத்துவார்கள். ஒரு இடமும் ஒட முடியாது  திட்டமிட்டவகையில் சுற்றி வளைத்து உள்ளார்கள்   இது முழுத் தமிழர்களையும். பாதிக்கும் செயல்   

நீங்கள் செய்வது இலங்கையில் தமிழர்களின் இருப்பை  இலகுவாக அழிக்கும் செயல்கள் 

பலமுறை  நடந்த இனக்கலவரங்களின் போதும்

ஆயத போராட்டங்களின் போதும் 

முள்ளிவாய்க்காலின் போதும்   இலங்கை தமிழர்கள் ஒடியய

ஒரே இடம் தமிழகம் தான்   

இது எல்லை தாண்டியது இல்லையா ??  ஏன். எல்லை தாண்டினீர்கள்??  

சிங்களப் பகுதிகளை நோக்கி ஒடியிருக்கலாம்.  ஏன். சிங்களப்பகுதிகளுக்கு போகவில்லை  ??   🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nochchi said:

 தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். 
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது.  நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும்.   இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
இது தான் ஜதார்த்தம்....
இதில் கடற்றொழில் அமைச்சர் பதவியை தமிழ்மகனுக்கு கொடுத்து அவர் ஊடாக இந்தியா,சிறிலங்கா அதிகார மையங்கள் ஆடும் ஆட்டம் .....வடக்கு கிழககு மாகாணங்களுக்கு அதிகாரம் கொடுப்பது உந்த அதிகார மையங்களுக்கு பெரிய விடயம் அல்ல ஆனால் அதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலையில் இந்தியாவும் இலங்கையும் இருக்கின்றது...

இறையாண்மை உள்ள சிறிலங்காவில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என தீர்மானிக்கும் சக்தியாக வெளிநாடுகள் இருக்கின்றன ....இந்த நிலை 40 வருடங்களுக்கு முன்பு இருக்கவில்லை....
சவுதி அரேபியா,ஈரான் போன்ற நாடுகளும் சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்திகளாக்  மாறிவருகின்றன ...இந்த இலட்சணத்தில சிங்களவ்ர்கள் வடக்கு கிழக்கு உரிமை கொடுக்க கூடாது பிரச்சாரம்....

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

1983 போல் ஒரு இனக்கலவரம். எற்ப்படுமாயின். 

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி   கொழும்பு காலி  அனுரதபுரம்.  அம்பாந்தோட்டை,   .   அடிப்பார்கள். வெட்டுவார்கள்.    ரயார். போட்டு கொழுத்துவார்கள். ஒரு இடமும் ஒட முடியாது  திட்டமிட்டவகையில் சுற்றி வளைத்து உள்ளார்கள்   இது முழுத் தமிழர்களையும். பாதிக்கும் செயல்   

சிங்களப் பகுதிகளை நோக்கி ஒடியிருக்கலாம்.  ஏன். சிங்களப்பகுதிகளுக்கு போகவில்லை  ??   🙏🙏

அடுத்த சிங்களத்தின் திட்டம் இதுவாக இருக்குமோ ?
வடக்குகிழக்கு பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள் அங்கிருந்து சிங்கள பகுதிக்கு அடித்து துரத்துவார்கள் "அப்பே ஒக்கம எக்க ஜாதிய,எக்கரட்ட மினுசு"என ஒருசில புத்திஜீவிகள்(இனவாத )சொல்லுவார்கள் நீங்கள் எமது பகுதியில் சிங்கள மக்களுடன் இரண்டர கலந்து வாழுங்கள் ...வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை (காடையர்கள்,இராணுவம்) குடியேற்றி அந்த நிலத்தை ,கடல் வளத்தையும் இந்தியாவிடமிருந்து பாதுகாப்போம் எண்டு...
அதை சிறந்த தீர்ப்பு என நம்ம அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ... 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, putthan said:

சிந்திக்க வேண்டிய விடயம்.

சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, nochchi said:

சிந்திக்க வேண்டிய விடயம்.

சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 
உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம்.

வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம்.

இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம்.

பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது.

இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள்.

எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும்.

பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,

  • Like 2

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.  புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.  அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.  இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.  சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.  இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.  ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.