Jump to content

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)
28) வன்னி
29) மட்டக்களப்பு)
30)திருமலை
31)அம்பாறை
32)நுவரெலியா
33)அம்பாந்தோட்டை
34)கொழும்பு

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்
39) உடுப்பிட்டி
40) ஊர்காவற்றுறை
41) கிளிநொச்சி
42) மன்னர்
43) முல்லைத்தீவு
44) வவுனியா
45) மட்டக்களப்பு
46) பட்டிருப்பு 
47) திருகோணமலை
48) அம்பாறை

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி
54)தமிழரசு கட்சி
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

Edited by கந்தப்பு
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽

தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀

யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽
நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும்.
நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன்.
மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன்.
மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.