Jump to content

தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் : தென்னிலங்கையிலிருந்து வருவதில்லை; தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

image

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம்.

என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 

15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.

e8df527c-c953-42f5-b1ca-7463c9530cc8.jpg

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 

மேலும், மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும்.

திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/196626

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே

புலவர்

திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான த

nochchi

தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின்.... தமிழ் அரசியல் கட்சிகள் விட்ட பிழைகளால் தானே...
மக்கள் தென்னிலங்கை அரசியலை நாட வேண்டி வந்தது.

மக்கள் அதனை விரும்பி  ஏற்கவில்லை, மாறாக….  
தென்னிலங்கை அரசியலை நோக்கி தள்ளப் பட்டார்கள் என்பதே உண்மை.

நிலைமை கட்டுமீறி போனபின்பும்... தம்மை சுய பரிசோதனை செய்யத் தயார் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளை  என்ன வென்று சொல்வது. தாமாக திருந்த மாட்டார்கள் எனும் போது... முதலில் பதவி ஆசை, கதிரை ஆசை பிடித்த சுயநல கும்பல்களை துடைத்து எறிய வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட...

திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல், தேவையின் அடிப்படையில் + யதார்த்தத்தின் அடிப்படையில் எமது தெரிவுகள்,  முடிவுகள் அமைய வேண்டும். 

பஸ் போனபின்னர் கைகாட்டி என்ன பயன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தங்களின் அன்றாடம் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்ததுவைக்க கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.  அது எந்த கட்சி என்றலும  பரவாயில்லை. 

அதுவே  இன்றைய தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு பின்னரான மீழ் கட்டமைப்பு, நிர்வாக நெருக்கடி, மீழ் குடியேற்றம், ஆக்கிரமிப்பு நிலங்கள் விடுவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிற்கான புனர்வாழ்வு, பாதுகாப்பு என்பன இன்னமும் உருப்படியாக நிறைவேற்றாத நிலையிலேயே தொடர்ந்தும் இப்பாதிக்கப்பட்ட மக்களை வைத்திருக்க இலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் விருபுகின்ற இந்த நிலையிலே, சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலேயே தற்போது வரை இந்த வட கிழக்கு மக்கள் வாழ்கை நிலவுகிறது.

பொதுவாக ஏனைய நாடுகளில் இவ்வாறான பாதிப்புள்ளாகும் நாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் மேம்படுத்த முயல்வார்கள் ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனத்தினை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் திட்ட மிட்டே இந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து வருகின்ற நிலையிலே பிராந்திய கட்சிகள் செல்வாக்கினை இழக்கும் போது இப்பிராந்திய மக்கள் மேலும் நலிவுறும் நிலை உருவாகும்.

இது நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பொருளாதார  ரீதியில் நலிவுற செய்யும்.

இதனை புரிந்து கொள்ளவோ அல்லது ஒரு தொலைநோக்கு பார்வையோ மக்களிடம் இருக்காது, இதனை மக்களிடம் எடுத்து செல்ல படித்த இளைஞ்சர்கள் முன்வர வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

மக்கள் தங்களின் அன்றாடம் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்ததுவைக்க கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.  அது எந்த கட்சி என்றலும  பரவாயில்லை. 

அதுவே  இன்றைய தேவை. 

மக்களின் அன்றாட பிரச்சனை என எதை சொல்கின்றீர்கள் ...பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி அதை தீர்க்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2024 at 18:17, புலவர் said:

திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.

தமிழ் தேசியம் பேசும் எந்த கட்சிக்கும் வாக்கு போடலாம் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்த அடுத்த தலைமுறை வரவேண்டும் செயலாற்ற வேண்டும் என்று இங்கே நடிப்பவர்கள் இத்தால் இனம் காணப்படுவார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, vasee said:

போருக்கு பின்னரான மீழ் கட்டமைப்பு, நிர்வாக நெருக்கடி, மீழ் குடியேற்றம், ஆக்கிரமிப்பு நிலங்கள் விடுவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிற்கான புனர்வாழ்வு, பாதுகாப்பு என்பன இன்னமும் உருப்படியாக நிறைவேற்றாத நிலையிலேயே தொடர்ந்தும் இப்பாதிக்கப்பட்ட மக்களை வைத்திருக்க இலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் விருபுகின்ற இந்த நிலையிலே, சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலேயே தற்போது வரை இந்த வட கிழக்கு மக்கள் வாழ்கை நிலவுகிறது.

பொதுவாக ஏனைய நாடுகளில் இவ்வாறான பாதிப்புள்ளாகும் நாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் மேம்படுத்த முயல்வார்கள் ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனத்தினை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் திட்ட மிட்டே இந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து வருகின்ற நிலையிலே பிராந்திய கட்சிகள் செல்வாக்கினை இழக்கும் போது இப்பிராந்திய மக்கள் மேலும் நலிவுறும் நிலை உருவாகும்.

இது நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பொருளாதார  ரீதியில் நலிவுற செய்யும்.

இதனை புரிந்து கொள்ளவோ அல்லது ஒரு தொலைநோக்கு பார்வையோ மக்களிடம் இருக்காது, இதனை மக்களிடம் எடுத்து செல்ல படித்த இளைஞ்சர்கள் முன்வர வேண்டும்.

நூறு வீதம் உண்மை ... தமிழ் தேசிய கட்சிகள் நிலைத்து நிற்க வேண்டும் ...

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

தமிழ் தேசியம் பேசும் எந்த கட்சிக்கும் வாக்கு போடலாம் .

இல்லை 

இவர்களில் ஊழல் லஞ்ச பெறாத,  ஊக்குவிக்காத மற்றும் சொத்து மதிப்பை தரும் தமிழர்களுக்கு வாக்களிக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இல்லை 

இவர்களில் ஊழல் லஞ்ச பெறாத,  ஊக்குவிக்காத மற்றும் சொத்து மதிப்பை தரும் தமிழர்களுக்கு வாக்களிக்கலாம்.

ஊழல் ,லஞ்சம் பெறாத நபர்கள் நல்லது ஆனால் இந்த தேர்தல் ஒர் ஆபத்தான் தேர்தல் ...தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என கூறி சிங்கள கட்சிகள் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வருகின்றனர்...ஆகவே நாம் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்...
அரசாங்கம் அரச அதிகாரிகள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் அதை விடுத்து அரசியல்வாதிகளின் ஊழலை பேசிக்கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான  விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள். 

"தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள்.

இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம்  வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். 

 போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும்  ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான். 

சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் செய்யவேண்டியது இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான். 

தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.

Edited by ரஞ்சித்
செய்யவேண்டியது
  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

ஊழல் ,லஞ்சம் பெறாத நபர்கள் நல்லது ஆனால் இந்த தேர்தல் ஒர் ஆபத்தான் தேர்தல் ...தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என கூறி சிங்கள கட்சிகள் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வருகின்றனர்...ஆகவே நாம் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்...
அரசாங்கம் அரச அதிகாரிகள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் அதை விடுத்து அரசியல்வாதிகளின் ஊழலை பேசிக்கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்....

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இது ஆபத்தான செயல். பாராளுமன்ற உறுப்பினரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது என்று தெரிந்ததே. எமக்கான தெரிவு என்பது நம்ம வீட்டு பூனைக்குட்டியை அனுப்பினாலும் அது எம்முடன் வாழும் மற்றும் சுத்தமானதாக இருக்கணும். அது மற்றவர்களுக்கு உறைக்கணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? 
 
r/srilanka - 1983, did this man or his family ever got justice?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான  விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள். 

"தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள்.

இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம்  வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். 

 போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும்  ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான். 

சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான். 

தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.

தமிழ் மக்கள் அன்று தொட்டு சிறிலங்கா தேசியகட்சிகளை புறக்கணித்தே வந்துள்ளனர்...சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்த 70 ஆம் ஆண்டு செல்லையா குமாரசாமியை அமைச்சராக நியமித்தன்ர்...பிறகு 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேவநாயகத்தை அமைச்சர் ஆக்கினார்கள் ...அதன் பின் டக்கிளஸ்....அதாவது தமிழ் மக்களின் அமோக வாக்குகளை பெற்ற பிரதிநிதிகளை அரவணைத்து ஆட்சி நடத்த எந்த சிங்கள இனவாத அரசுகளும் முன் வரவில்லை...
 இனபிரச்சனை தான் நாட்டின் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் .. ..இந்த தேர்தலிலும் தமிழ் தேசியத்தை தமிழர் பகுதியில் நிலை நிறுத்த வேண்டும்...

மகிந்தா (தமிழ் பயங்கரவாதம் என் கூறி)தமிழர்களை இனபடுகொலை செய்து வெற்றி பெற்றார்
கோத்தா தேவாலயத்துக்கு குண்டு வைத்து (முஸ்லீம் பயங்கரவாதம்) என வெற்றி பெற்றார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, putthan said:

மக்களின் அன்றாட பிரச்சனை என எதை சொல்கின்றீர்கள் ...பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி அதை தீர்க்கலாம்...

மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை  பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர்,  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.   அவை தீர்க்கப்பட்டதா என்பதை,  அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். 

அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். 

மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இது ஆபத்தான செயல். பாராளுமன்ற உறுப்பினரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது என்று தெரிந்ததே. எமக்கான தெரிவு என்பது நம்ம வீட்டு பூனைக்குட்டியை அனுப்பினாலும் அது எம்முடன் வாழும் மற்றும் சுத்தமானதாக இருக்கணும். அது மற்றவர்களுக்கு உறைக்கணும். 

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பினால் தமிழ தேசிய கட்சிகளில் சில இளம் உறுப்பினர்கள் இண‌ந்துள்ளனர் ..அவர்களுக்கு வாக்கு போட்டு பழசுகளை(கிழவர்கள்) சிந்திக்க வைக்கலாம்....
வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பல சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஒர் ஆய்வாளர் கூறுகின்றார்...

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பல சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஒர் ஆய்வாளர் கூறுகின்றார்...

மக்கள் விடுதலை முன்னணியின்(JVP ) புதிய பெயர் கொண்டு கட்சியான தேசிய மக்கள் சக்தி(NPP) பல முகவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவே இவற்றை ஆழமாக உற்றுநோக்கும் சிலரது கருத்தும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இதுவரை இல்லாத பெரும் கவனத்தோடு வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும். தமிழின அழிப்புக்கான போரும், அதன் தொடர்ச்சியாக ஊதிப்பெருத்து நிற்கும் படைபல, ஆளணிப் பெருக்கத்தாலும் நாடு பெரும் பொருண்மிய வீழ்ச்சியைக் கண்டதை ஊழலால் நாடு பின்னோக்கிப்போனதாகக் காட்டிப் பெரும் எடுப்பிலே பரப்புரைசெய்து ஜ.வி.பெ(JVP) என்ற தே.ம.ச.(NPP) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு தமிழருக்குப் பொருண்மியப் பிரச்சினை மட்டுமே உள்ளது என்று கூறியவாறு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவாறு ஆளமுனையும் போலி மாக்ஸிட்களையும் தமிழ் மக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும்.  
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2024 at 02:18, ஏராளன் said:

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும்

அரசியல் போராட்டகாலத்திலும் ஆயுத போராட்ட காலத்திலும் பின்னி பிணைந்தும் பின்புலத்தில் நின்றதும் யாழ்பல்கலைகழக சமூகமே.

அவ்வாறான எம் அறிவார்ந்த போர்கூடம் கடந்தகால எம் சுத்துமாத்து தமிழ்கட்சிகளை இனம் காணவும் துடைத்தெறியவும்  புதியவர்களை எம் மண்ணுக்காக மாற்றீடான தலைமைகளாக இனம் காட்ட வேண்டியதும் அவர்களை தேர்தலின்போது ஒன்றிணைப்பதும் எம் இனத்திற்கான  தமது வரலாற்று கடமையாக கொள்ளவேண்டும்.

தெருவுக்கு தெரு எம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்திலேயே பொங்குதமிழ், மாவீரர் நினைவேந்தல் என்று நெஞ்சுறுதியுடன் சிங்களத்தை எதிர்கொண்டு சிங்கள படைகளின் நடுவில் வாழ்ந்த எம் மக்களை தேசிய நலனுக்காய் ஒன்றுதிரட்டிய எம்மின பொக்கிஷ பல்கலைகழக சமூகம்  இக்கால கட்டத்தில் பழைய தமிழ்கட்சிகள்போல் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்று கொள்வது ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

தன்னலமற்ற எம் புதிய அரசியல் தலைமை ஒன்றின் உருவாக்கத்திற்கும் அடையாளபடுத்துதலுக்கும்,ஒன்றிணைப்பதற்கும்  பழையனவற்றின் அகற்றலுக்கும்  நீங்கள் சாட்டை எடுத்து சுழற்றலாம் யாரும் தவறென்று சொல்ல போவதில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, island said:

மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை  பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர்,  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.   அவை தீர்க்கப்பட்டதா என்பதை,  அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். 

அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். 

மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம். 

ஊள்ளுராட்சி மன்றங்கள்,பிரதேச சபை ,மாநகரசபை போன்றவை மக்களின் அன்றாட பிரச்ச்னையைகளை தீர்க்க முடியும் அரச அதிகாரிகள் ஒழுங்காக செயல் பட்டால்,அவர்கள் (அரச அதிகாரிகள்) தான் 30/40 வருடங்கள் சேவையில் இருப்பவர்கள்.
மேலும் மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கினால் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசுக்கு சுமைகள் குறைவாக இருக்கும்...

பாராளுமன்றம் மன்றம் மக்களின் உரிமைகளை சொல்ல உதவ வேண்டும் ...நீண்ட நாட்களாக தமிழ் மக்களின் குரலாக இந்த பா.உ சொல்வதை கணக்கில் எடுக்காமல் சிறிலங்கா பாராளுமன்றம் செயல் ப்டுகிறது ...ஜனநாயகம் மரபு என்றால் இதை செவி மடுத்து ஆக்க பூர்வமான செயல்களில் இடுபட வேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை  பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர்,  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.   அவை தீர்க்கப்பட்டதா என்பதை,  அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். 

அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். 

மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம். 

உண்மை தான் 

ஆனால் கொழும்பில் இருந்து கொண்டு தாயகத்திலுள்ள ஒரு தொகுதிக்கு தெரிவாகும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் எவ்வாறு அந்த தொகுதி மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள முடியும்?? பூர்த்தி செய்ய முடியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

உண்மை தான் 

ஆனால் கொழும்பில் இருந்து கொண்டு தாயகத்திலுள்ள ஒரு தொகுதிக்கு தெரிவாகும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் எவ்வாறு அந்த தொகுதி மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள முடியும்?? பூர்த்தி செய்ய முடியும்???

வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ஸ் களால் இலங்கை வாழ் வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது  என்கிறீர்களா? 

2 hours ago, ரஞ்சித் said:

இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? 
 
r/srilanka - 1983, did this man or his family ever got justice?

வரலாற்றை கற்பனைகளால் அல்லது யூகங்களால்  எழுத முடியாது. 

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பினால் தமிழ தேசிய கட்சிகளில் சில இளம் உறுப்பினர்கள் இண‌ந்துள்ளனர் ..அவர்களுக்கு வாக்கு போட்டு பழசுகளை(கிழவர்கள்) சிந்திக்க வைக்கலாம்....

தனியாக விருப்பு வாக்குகளை அளித்து தூய்மையான அரசியல் செய்யும்
முறைமை ( தொகுதி ரீதியான ) ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்றுவிட்டன .

இப்போது விருப்பு வாக்குக்களை களவாடும் அரசியல்வாதிகளுக்கு சார்பான விகிதாசார முறைமை ....ஆகவே நீங்கள் அளிக்கும் விருப்பு வாக்குக்கள் அனைத்தும் ஊழலையும் லஞ்சத்தையும் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிக்கே கிடைக்கும் அல்லது அவர்கள் அதனைத் தங்களுக்கானதாக அபகரித்துக் கொள்வார்கள்.

அதற்காகவே புதியவர்கள் என்ற பெயரில் அவர்களது பினாமிகளைப் பல கடசிகளும் குழுக்களும் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள் .

தொகுதி ரீதியிலான தேர்தல்முறையில் ஊழல்வாதிகளை அடுத்த தேர்தலிலேயே அடித்து விரட்டி விடலாம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.