Jump to content

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட் - விஜய் சொல்ல வருவது என்ன?

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம்,TVK IT WING/X

படக்குறிப்பு, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட் விவாதங்களை எழுப்பியுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 அக்டோபர் 2024, 02:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கட்சி தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களின் கட்-அவுட்கள் இடம் பெற்றிருப்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இந்த கட்-அவுட்கள் விஜயின் கொள்கைகளை ஓரளவு தெளிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இன்னும் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு கட்-அவுட்டுக்கும் நோக்கம் இருக்கிறது, அதைத் தங்கள் கட்சியின் தலைவர் கூறினால்தான் அந்நோக்கம் நிறைவேறும் என்கின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்-அவுட்கள் குறித்துப் பரவலாக பேசப்படுவது ஏன்?

 

விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை.

எனினும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை, விமானப் படை சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் போன்ற பிரச்னைகள் குறித்த தனது கருத்தை அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு தமிழக அரசியல் தளத்தில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. கட்சி தொடங்கி, இத்தனை மாதங்கள் கழித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளாரா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கட்சியின் சார்பாக செய்யப்பட்டுள்ளன.

மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்-அவுட்கள் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் அரங்கிலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஒருபுறம் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்-அவுட்களை வைத்திருப்பதன் மூலம் விஜய் சொல்ல வருவது என்ன? அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளாரா என்பதை அறிய அரசியல் நோக்கர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

 
பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கனவே பேசியுள்ளார் விஜய்

பட மூலாதாரம்,X/ACTORVIJAY

படக்குறிப்பு, பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார் விஜய் (கோப்புப்படம்)

“இதுதான் என் கொள்கை என்பதை அவர் முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. கட்-அவுட்கள் வாயிலாக தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் மூன்றையும் அவர் முழுமையாக, தெளிவாக முன்னிறுத்தவில்லை. அவர் ஒருவேளை திராவிடம்தான் தனது கொள்கை என்று நினைத்திருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எழுந்தபோது ஆளுநரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் பெரியார், சமூக நீதிக்காக அம்பேத்கர், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காமராஜர் கட்-அவுட்களை வைத்திருக்கலாம் என ப்ரியன் கருதுகிறார்.

ஆனால், “பெரியார் கட்-அவுட் வைத்திருப்பதால் கடவுள்-மறுப்பு கொள்கையில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை” என்கிறார் ப்ரியன்.

“எனினும், புதிதாக கட்சி தொடங்குபவர்கள், இன்றைய சூழலில் பெரியாரை முன்னெடுப்பதற்குப் பெரிதும் தயங்குவர். ஆனால், அவரை தைரியமாக முன்னெடுத்ததற்குப் பாராட்ட வேண்டும்.”

கடந்த இரண்டு ஆண்டுகளாக, விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அப்படி நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில், ‘பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள்’ என்று ஏற்கெனவே கூறியிருந்தார். பெரியாரின் பிறந்த நாளன்று பெரியார் திடலுக்குச் சென்று அவருடைய சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

 
சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

பட மூலாதாரம்,LOYOLAMANI/X

படக்குறிப்பு, சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைத்திருப்பதன் ‘அரசியல் கணக்கு’ குறித்து விளக்கினார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.

“கட்-அவுட்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். தான் குறிவைக்கும் வாக்கு வங்கியை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் மூலம் தலித் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பெரியார் மூலம் சமூக நீதியை முன்னிறுத்துகிறார். காமராஜரை முன்னிறுத்துவதன் வாயிலாக, காங்கிரஸ் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை குறிவைக்கிறார். வேலுநாச்சியார் மூலமும் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி குறிவைக்கப்படுகிறது,” என்கிறார் அவர்.

எம்ஜிஆர், அண்ணா இடம்பெறாதது ஏன்?

மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கூறி வரும் விஜய், அவர்களுக்கு கட்-அவுட் வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அவ்விரு தலைவர்களுக்கும் கட்-அவுட் வைத்தால் விஜய் தனது தனித்தன்மையை நிரூபிக்க முடியாது என்கிறார் ப்ரியன்.

ஏற்கெனவே, விஜய் திரைப்படங்களில் எம்ஜிஆர் பாடல்கள், அவர் குறித்த குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தவெக கொடி பாடலில், எம்ஜிஆர், அண்ணாவின் படங்கள் பின்னணியில் இடம் பெற்றிருந்தன. மேலும், செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், “அண்ணா, எம்ஜிஆருக்கு கட்-அவுட் வைப்பது நியாயமும் இல்லை. அண்ணா ஆரம்பித்த கட்சியும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. இவர்களை முன்னிறுத்தி வாக்கு கேட்பதாக அக்கட்சியினர் சொல்லிவிடக்கூடாது என்பதால் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் ப்ரியன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் கட்-அவுட்களை வைத்திருப்பதாக ப்ரியன் கூறுகிறார்.

 
தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி

பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X

படக்குறிப்பு, தமிழ் மன்னர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கிறார், பத்திரிகையாளர் மணி

இதுதவிர, தமிழ்த்தாய், சேர, சோழர், பாண்டிய மன்னர்களுக்கும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநாட்டு பந்தலின் நுழைவுவாயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, மன்னர் பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் உள்ளிட்டோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

“சேர, சோழ, பாண்டியர்களின் கட்-அவுட்களை வைத்திருப்பது, தமிழ் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விஷயமாக உள்ளது. கட்-அவுட்களில் இடம்பெற்றுள்ள சில தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்களை குறிப்பிட்ட சாதியினர் கொண்டாடுகின்றனர் என்பதற்காக அவர்களை சாதி ரீதியானவர்கள் என முத்திரை குத்துவது சரியில்லை.

தமிழ் மன்னர்களை முன்னெடுத்ததால் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த் தேசியம் என்று இதைச் சொல்ல முடியாது. ஏனெனில், சீமான் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார், ப்ரியன்.

சிந்தனையில் தெளிவின்மையா?

ஆனால், மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்திருப்பது குறித்த ப்ரியனின் இந்தக் கருத்துடன் முரண்படும் பத்திரிகையாளர் ஆர். மணி, அதைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

“மன்னர்களுக்கு கட்-அவுட் வைத்தது அபத்தமாக இருக்கிறது. ஜனநாயகத்தில் மன்னர்களுக்கு எந்த வேலையும் இல்லை. இது, சிந்தனையில் தெளிவின்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

“எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என நினைத்தால் அவரால் வெல்ல முடியாது. தெளிவான பாதை இருக்க வேண்டும். யார் மனதும் கோணக்கூடாது என நினைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால் அவர் படுதோல்வியைச் சந்திப்பார்," என்று விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி, ஒருவேளை அவருக்கு போகப் போக தெளிவு வரலாம் எனக் கருதுவதாகக் கூறுகிறார்.

 
விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது

பட மூலாதாரம்,TVK HQ

படக்குறிப்பு, விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியபோது

தமிழக வெற்றிக் கழகம் இந்த கட்-அவுட்கள் மூலம் உணர்த்த முயலும் செய்தி என்னவென்று பிபிசி தமிழிடம் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, "இவை அனைத்தையும் பற்றி விஜய் இன்று மாநாட்டில் பேசுவார்," என்று தெரிவித்தார்.

"பெரியார், அம்பேத்கர், காமராஜர் சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடியவர்கள். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். விஜய் இந்தத் தலைவர்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்” என்றார்.

மேற்கொண்டு பேசியவர், "பெண் விடுதலை இல்லை என்றால் சமூக விடுதலை இல்லை. பெண்கள் அதிகாரத்திற்கு வந்தால்தான் சமூக விடுதலை கிடைக்கும். பெண் தலைவர்கள், போராளிகளை அடையாளப்படுத்தி, பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக அவர்களின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

இந்த கட்-அவுட்கள் பிரதிபலிக்கும் செய்தியைப் பார்த்தால், அவை ஒரு "ஒட்டுமொத்த கலவையாக" இருப்பதாகவும், "அரசியலில் விஜயின் எண்ண ஓட்டம் என்னவென்பதைக் காட்டும் வகையில் இல்லாமல், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதாகவே காட்டுவதாகவும்" கூறுகிறார் ப்ரியன்.

ஆனால், "இது கலவையாக இல்லை, ஒரு கொள்கையாக இருக்கிறது" என்று கூறும் லயோலா மணி, ஒவ்வொரு தலைவர் குறித்தும் விஜய் கூறும்போது அதன் நோக்கம் சென்று சேரும் எனவும், மன்னர்களை முன்னிலைப்படுத்தியதன் நோக்கத்தையும் அவர் மாநாட்டில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு

பட மூலாதாரம்,TVK IT WING/X

மற்ற கட்சிகளுக்கு உணர்த்துவது என்ன?

மற்ற அரசியல் கட்சிகள் மீது மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

“திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மீது தவெக மாநாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அக்கட்சியின் கொள்கைகள்தான் தீர்மானிக்கும்” என்கிறார் ப்ரியன்.

வக்பு வாரியம், சாதிவாரி கணக்கெடுப்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல் உள்ளிட்ட சமகால பிரச்னைகள் குறித்து அவருடைய நிலைப்பாட்டை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

“தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என விஜய் கூறியிருப்பதால், திமுகவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால்தான், தன்னை நிலைநிறுத்த முடிகிறதோ இல்லையோ, ஓரளவுக்குத் தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியும்” என்கிறார் பத்திரிகையாளர் மணி.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • Replies 305
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

island

பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

பாலபத்ர ஓணாண்டி

கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறியிருக்கிறார் ........... சறுக்கி விழாமல் இருந்தால் சரிதான் . .........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

ஈழத்தின் மருமகன், தங்கத் தமிழன், வருங்கால முதல்வர்... விஜய் வாழ்க. 🙂

அவருடைய DNA யில் சாவகச்சேரி யின் அடி இருக்கிறதாம். மற்றையது, அவருடைய பூட்டனாருக்கு  மட்டுவில் கத்தரிக்காயும் கொட்டடிச் சந்தை வீச்சு மீனும் நல்லாப் பிடிக்குமாம். 

😉

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்னாடி சீமான் தான் அதை பேசுபொருளாக்கி இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறார்..

அதை தொடர்ந்து இன்று விஜை திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இருகண்கள் என்று சொல்லி இருக்கிறார்..

அவர் சொல்வது சரி பிழை வெல்வார் தோற்பார் என்பதற்கு அப்பால் ஒரு சினிமா பிரபலத்துடன் வந்திருப்பவர் ஓட்டு போடுரமோ இல்லையோ என்னதான் பேசுகிறார் என்று ஒட்டுமத்த தமிழ்மக்களும் உற்று பாத்துக்கொண்டிருக்ககூடிய ஒருவர் தமிழ்தேசியத்தை தனது வாயில் இருந்து உச்சரித்திருக்கிறார்.. தனது கொள்கைகள் இரண்டில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு மக்களையும் தமிழ்தேசியம் என்ற சொல் சென்று சேர்ந்திருக்கும்..

உலகம் எங்கும் பரந்து வாழும் என்போன்ற உண்மையிலேயே மனசார சாதிபேதமற்ற தமிழ் தேசியத்தை நேசிக்கும் (பைத்தியக்கார கடும்போக்கு ஈழத்தமிழ் சுயநல தமிழ்தேசிய அல்லது விளக்கமில்லா விசருகள் அல்லது சுயநலத்துக்கு கடும்தேசியம் பேசும் புலம்பெயர் கூட்டத்தை அல்ல) என் போன்ற பலர் ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் இது..

 

இந்த உழைப்பு முழுவதும் சீமானை சாரும்.. அவருக்கு முன் தமிழ்நாட்டில் குழுக்களாக இயங்கிய இயங்கும் தமிழ்தேசிய இயக்கங்களையும் சாரும் என்றாலும் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தியதில் சீமானைத்தான் சாரும்.. 

இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட‌ பூச்சாண்டி காட்டி ம‌க்க‌ளை ஏமாற்றி ம‌ன்ன‌ர் ஆட்சி ந‌ட‌த்தும் க‌ழிவிட‌ மாட‌ல‌ வீட்டுக்கு அனுப்பி

 

அர‌சிய‌லில் விஜேய் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கூத்தாடி, கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்' - விஜய் பேசியது என்ன? முழு விவரம்

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

27 அக்டோபர் 2024

தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது.

ஓர் அரசியல் தலைவராக தவெக கட்சி மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்?

‘அரசியல் ஒரு பாம்பு, ஆனால்…’

தவெக மாநாட்டில் பேச்சைத் துவங்கிய விஜய், ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பதுபோல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும், என்றார்.

"அதேபோல, அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன்,” என்றார் அவர்.

மேலும், “அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை,” என்றார்.

“அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, இது ஒரு போர்க்களம். சீரியஸாக, ஆனால் சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி. அரசியலில் கவனமாகக் களமாடவேண்டும். ஏனெனில், சினிமா பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து இது வித்தியாசமான மேடை,” என்றார்.

‘அரசியல் மாற வேண்டும்’

பேச்சைத் துவங்கி இவற்றைச் சொன்னபிறகு, தான் உணர்ச்சிவசமாக பேசப்படும் வழக்கமான மேடைபேச்சின் பாரம்பரியத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் கூறினார் விஜய். தனது கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘அவர்களே… அவர்களே…’ என்று அவர்களை அழைத்தவர், “வழக்கமான அரசியல் பேச்சுகளைப் போல அப்படி ஏன் பேசவேண்டும்? நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்றார்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய்.

இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார்.

 
தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

‘பெரியாரைப் பின்பற்றுவோம், ஆனால்…’

கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார்.

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார்.

“அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய்.

‘பெண்களை வழிகாட்டியாகக் கொண்ட முதல் கட்சி’

அதேபோல், காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம், என்றார் அவர்.

வீரமங்கை வேலுநாச்சியாரும், த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.க தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்," என்று விஜய் கூறினார்.

 
தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

'நமக்கு ஏன் அரசியல்?’

மேலும் பேசிய விஜய், செயல்தான் முக்கியம் என்றும், சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை, ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை, என்றும் கூறினார்.

ஆரம்பத்தில் தானும் எல்லோரையும்போல, 'நமக்கு எதற்கு அரசியல்?’ என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அப்படி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். “என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,” என்றார்.

கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார்?

தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய்.

சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார்.

இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார்.

பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.

 
தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம்,TVK

‘டீசென்ட்டான அரசியல்’

எந்த அரசியல் தனைவரையும் பெயர் குறிப்பிட்டுப் பேசாதது ஏன் என்ற கேள்வி எழும் என்று பேசிய விஜய், தான் அப்படிப் பேசாதது பயத்தால் அல்ல, தான் ‘டீசென்ட்டான அரசியல் செய்ய வந்திருப்பதாகக் கூறினார்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பற்றி என்ன பேசினார்?

மேலும், தனது அரசியல் பயணத்தில் முக்கியப் பங்காற்றப் போவது பெண்கள், என்றார் விஜய்.

சினிமா நடிகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதாகக் கூறிய அவர், "சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது," என்றார். சினிமா தான் தமிழகத்தில் சமூக-அரசியல் புரட்சிக்கு உதவியது, என்றார். “திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமா தான்,” என்றார் விஜய்.

என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தான் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர்,” என்றார்.

அதேபோல், தான் சினிமாவுக்கு வந்தபோது தான் எதிர்கொண்ட உருவக்கேலிகளையும், அவமானங்களையும் பற்றிப்பேசினார் விஜய்.

“நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன்,” என்றார் விஜய்.

‘ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு’

மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.

தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று விஜய் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 

 

 

 

சில காணொளிக் காட்சிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையான எதிரிகளோடு மோதி வெல்வாரா விஜய்?

-சாவித்திரி கண்ணன்

 

00999.jpg

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரு பெரும் அதிகார மையங்களை தன் எதிரிகள் என பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ளார். ஆக எதிர் நீச்சல் போடத் துணிந்து விட்டார். இன்றைய த.வெ.க மாநாடு தரும் செய்திகள் என்ன..? ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் என்ன…? எனப் பார்ப்போம்;

இத்தனை வருடங்களாக விடுபடாத புதிராக தொடர்ந்த நடிகர் விஜய்யின் அரசியல் தற்போது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது! ஒரு நடிகனாக இருக்கும் வரை சினிமா வியாபார வெற்றி கருதி அவர் மனதில் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை சிறப்பாகவே வெளிப்படுத்திவிட்டார்.

விஜய்க்கு இருக்கும் இந்த தெளிவுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட விதை தான் அடிப்படையாக இருக்க முடியும். இடதுசாரி, திராவிட இயக்க சித்தாந்த சாயலில் அவர் படமெடுத்தவர். அந்த வகையிலும், ஒரு பெரும் திரைக் கலைஞன் என்ற வகையிலும் அரசியலைப் பற்றிய அடிப்படை புரிதல்களை விஜய் பெற்றுள்ளவர் தான் என்பது அவருடைய இன்றைய கன்னிப் பேச்சில் இருந்து நமக்கு தெரிய வருகிறது.

விஜய்யின் 50 நிமிட பேச்சில் தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. மிகைப்படுத்தப்பட்ட  பிம்பங்களையோ, வாக்குறுதிகளையோ அவர் தரவில்லை. அலங்காரச் சொல் பிரயோகங்கள் எதுமில்லை. பெரியாரையும், காமராஜரையும், அம்பேத்கரையும், வேலு நாச்சியாரையும், அஞ்சலை அம்மாளையும் தங்கள் முன்னோடியாக ஏன் கருதுகிறோம் என்பதற்கு அவர் தந்த விளக்கங்களையே அவரது கொள்கை அறிவிப்பாக நாம் கருதலாம். தன்னுடைய கொள்கைகள் யாரது எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும் பெற்றுத் தரும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.

sddefault.jpg

அனைவரும் சமம், அனைவருக்குமான வாய்ப்பு, மதச்சாரபற்ற  கொள்கை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் பண்பாடு என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.

அடுத்ததாக அவருடைய நெருங்கிய அரசியல் சகாக்களாக இன்று வெளிப்பட்டவர்கள் மிகப் பெரிய தொழில் அதிபர்களோ, புகழ் பெற்றவர்களோ, அறிவுத் தளத்தில் அறியப்பட்ட பிரபலங்களோ அல்ல, மிக சாதாரண நடுத்தர பிரிவினர், அசல் தமிழர்கள்! தலைவரைப் பற்றி மிகைப்பட புகழ்ந்து பேசுதல், மிகப் பெரிய பிம்பங்களை அவர்களைக் கொண்டு தன்னைக் குறித்து கட்டமைத்தல் ஆகியவற்றை விஜய் செய்யவில்லை. அந்த வகையிலும் இந்த மாநாடு கவனத்தை ஈர்த்துள்ளது.

அனைத்து பேச்சாளர்களும் கொள்கை சார்ந்தே பேசினர். அதுவும் மிக அளவானவர்களே பேசினர். அவர்களே, இவர்களே என்று பேசிச் செல்லும் புகழ்ச்சி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நேரடியாக மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளுக்கு வந்தது சிறப்பு தான்!

09999-1.jpg

பொன்னாடை அணிவிக்கும் பன்னாடை கலாச்சாரத்திற்கும் , தோள் தாங்க முடியாத பெரிய மலர் மாலைகளை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவ்வளவு மாவட்ட செயலாளர்களும் பொன்னாடைகளையும், மலர் மாலைகளையும் வாங்கி வந்து வரிசையில் நின்று போட்டு போட்டோவுக்கு போஸும் தந்திருப்பார்கள். அதற்கே ஒரு மணி நேரம் ஓடியிருக்கும்.

வெற்றிக் கழகம் என்ற பெயருக்கேற்ப வெள்ளியில் வீரவாள் பரிசளிக்கப்பட்டிருக்கலாமோ, என்னவோ. ஆயினும், இது ஆடம்பரம் மட்டுமல்ல, வாள் என்பது வன்முறையை நினைவூட்டத்தக்கது என்பதால், அதை தவிர்த்திருக்கலாம். நிழ்ச்சியை அதிகமாக வளர்த்துச் செல்லாமல் ஏழு மணிக்குள் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்துக் கொண்டது பல வகைகளிலும் நல்லது.

நிகழ்ச்சியை தொகுத்தளித்த பெண் தமிழை சரியாக உச்சரித்தார். உணர்ச்சி மேலோங்கப் பேசினார். சில நேரங்களில் சற்று மிகையாக பேசினார். மற்றும் ஒருவர் ‘தமிழ் நாட்டின் வருங்கால நிரந்தர முதல்வர்’ என விஜய்யை விதந்தோதினார்.இவை யாவும் வழக்கமான அரசியல் கலாச்சார மரபுகளில் இருந்து இவர்கள் இன்னும்  முற்றாக விடுபடவில்லை என்பதை சொல்லின.

இன்றைய தினம் பணம் கொடுக்காமல் வாகனங்களை ஏற்பாடு செய்து தராமல், பிரியாணி, குவார்ட்டர் கொடுக்காமல் இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூடியதற்கு காரணம், விஜய்யின் சினிமா புகழ் மட்டுமல்ல, ஒரு மாற்று அரசியலை விரும்பும் மக்களின் மழுங்கடிக்க முடியாத எதிர்பார்ப்புகளும் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மிகப் பெரிய அரசியல் மாநாட்டை  வசூல் வேட்டை நடத்தாமல் தான் சம்பாதித்த சொந்த பணத்தை கொண்டு மட்டுமே நடத்தியது. ‘சிறந்த கொள்கைகளை பேச்சளவில் மாத்திரமன்று, செயலிலும் காட்டுவேன்’ என்றது, ‘மதச்சார்பற்ற’ என்பதையும், ‘அனைவரும் சமம்’ என்பதை வலியுறுத்தியதால் ‘பாஜக தான் பிரதான எதிரி’ என்பதை புரிய வைத்தது, ‘ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்’ என்றதன் மூலம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடுத்த எதிரி என அடையாளம் காட்டியது, திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரண்டையும் ஏற்றது ஆகியவை அவரது அரசியல் பக்குவத்தை உணர்த்தின.

எல்லாவற்றுக்கும் மேலாக தனித்தே தங்கள் கட்சியால் அனைத்து தொகுதிகளிலும் நின்று வெல்ல முடியும் என்றாலும், தகுதியானவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கவும், அதிகார பகிர்வு கொள்ளவும் முன் வந்தது மற்றொரு சிறப்பாகும் என்றாலும், தனியாக களம் கண்டு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை இருந்தால், அவ்விதமே செயல்படட்டும். கறைப்பட்டுள்ள இன்றைய அரசியல் கட்சிகள் எதனுடனும் கைகோர்க்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

அடுத்ததாக ‘விஜய் பக்கம் காற்றடிக்கிறது’ என்றவுடன், மற்ற கட்சிகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் அணிவகுத்து வருவார்கள். அவர்களை தவிர்க்காமல் விட்டால் விஜய்யின் ‘நல்லாட்சி’ என்பது நிறைவேறாத கனவாகிவிடும். இதுவும் பத்தோடு பதினொன்று என்றாகிவிடும் ஜாக்கிரதை.

இன்றைய த.வெ.க மாநாடும், அதில் விஜய் பேச்சும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை விதைத்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம் தேர்தலுக்கு எஞ்சி இருக்கும் இன்னும் ஒன்றரை வருடங்களில்  விஜய் அரசியல் சார்ந்து மக்கள் பிரச்சினைகளில் என்னென்னெவெல்லாம் பேசுகிறார்..? எந்தெந்த பிரச்சினைகளுக்கு குரக் கொடுக்கிறார்..? எந்தெந்த விவகாரங்களில் களம் காண்கிறார். கட்சியின்  கிளை  அமைப்புகளை எவ்வாறு கட்டமைக்கிறார்..? என்பதைக் கொண்டே அவரது எதிர்காலம் இருக்கும்.

சாவித்திரி கண்ணன்
 

https://aramonline.in/19638/tvk-conference-vijay-speech/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புலவர் said:

திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.

ஒன்று தான் அல்லது திராவிட இயக்கம் பெற்ற பிள்ளை தான் தமிழ்த் தேசியம். சீமான் போன்றவர்கள் வெறுப்பு அரசியல் பேசுவாதால் இரண்டையும் பிரித்து விட முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகிடி said:

ஒன்று தான் அல்லது திராவிட இயக்கம் பெற்ற பிள்ளை தான் தமிழ்த் தேசியம். சீமான் போன்றவர்கள் வெறுப்பு அரசியல் பேசுவாதால் இரண்டையும் பிரித்து விட முடியாது. 

திராவிடம் மரபினம்.  தமிழ் தேசிய இனம்.  மரபினத்தில் இருந்து பிரிந்து தேசிய இனங்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை உள்ளன.  இவர்கள் பேசும் வெறுப்பு அரசியலானது,  மனிதன் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து உருவாகி உலகம் முழுவதும் பரவியது  என்ற உலகமே ஏற்றுக்கொண்ட  அறிவியல் உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ளாமல்    மூடத்தனங்களை பரப்புபவர்கள். 

விஜய் தனது அரசியலில் வெற்றி பெற வாழ்ததுக்கள். அவரது கொள்கைகள் சரியானவை. அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதில் தான் அவரது வெற்றி தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

திராவிடம் மரபினம்.  தமிழ் தேசிய இனம்.  மரபினத்தில் இருந்து பிரிந்து தேசிய இனங்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை உள்ளன.  இவர்கள் பேசும் வெறுப்பு அரசியலானது,  மனிதன் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து உருவாகி உலகம் முழுவதும் பரவியது  என்ற உலகமே ஏற்றுக்கொண்ட  அறிவியல் உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ளாமல்    மூடத்தனங்களை பரப்புபவர்கள். 

விஜய் தனது அரசியலில் வெற்றி பெற வாழ்ததுக்கள். அவரது கொள்கைகள் சரியானவை. அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதில் தான் அவரது வெற்றி தங்கியுள்ளது. 

 

1 hour ago, புலவர் said:

திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.

பிரிந்து பிரிந்து பலமிழந்து போக முடியாது. தமிழ்த் தேசியம் ஒரு தாயின் நிலையில், தகப்பனின் நிலையை எடுக்க வேண்டும், கையில் பிரம்புடன். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

பிரிந்து பிரிந்து பலமிழந்து போக முடியாது. தமிழ்த் தேசியம் ஒரு தாயின் நிலையில், தகப்பனின் நிலையை எடுக்க வேண்டும், கையில் பிரம்புடன்

இந்த பிரிவு என்பது இயல்பானது. இன்னும் 500 ஆண்டுகளின் பின்னர் இன்னும் பல மொழிகள் உருவாகலாம்.  இதை எவராலும்  தவிர்கக முடியாது.  

தமிழ் போராளி இயக்கங்கள் 80 களில் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு தீவிர பின் தள  ஆதரவை கொடுத்தவர்கள. திராவிட இயக்கத்தினரே.   சீமான் அடிக்கடி புகழும் தமிழ்  தேசியவாதியான மபொசி போராளிகளை ஏறெடுத்தும் பார்ககவில்லை.  இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து திரும்பியபோது  மபொசி வலிந்து  சென்னைத்துறைமுகம் சென்று அவர்களை வாஞ்சையுடன் வரவேற்றார். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

தமிழ் போராளி இயக்கங்கள் 80 களில் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு தீவிர பின் தள  ஆதரவை கொடுத்தவர்கள. திராவிட இயக்கத்தினரே.  

ஆந்திராவின் NTR உம் உதவினார். 

வைகோ போன்றவர்களை தெலுக்கன் என்று ஏசும் அதே கூட்டம் தான் இங்கே சுமத்திரனை தமிழின விரோதி என்கிறது. தனது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் தனக்கு நன்மை செய்ய விரும்புவனுக்கு எதிராக வாள் சுற்றும் கூட்டம் அது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, island said:

இந்த பிரிவு என்பது இயல்பானது. இன்னும் 500 ஆண்டுகளின் பின்னர் இன்னும் பல மொழிகள் உருவாகலாம்.  இதை எவராலும்  தவிர்கக முடியாது.  

பிரிந்து பிரிந்து எதிரிகளாக முடியாது. மொழிகள் பிரிந்து பிரிந்து வளரலாம். அதில் தப்பில்லை. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக முடியாது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.

என‌து விருப்ப‌ம்

க‌ருணாநிதி குடும்ப‌ ம‌ன்ன‌ர் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க‌னும் .................இந்த‌ 3 ஆண்டுக‌ளில் அவ‌ர்க‌ளின் அட்டூழிய‌ங்க‌ளை பொறுத்து கொள்ள‌ முடியாம‌ இருக்கு

ஊழ‌ல் , கொலை ,கொள்ளை , க‌ஞ்சா , க‌ள்ள‌ சாராய‌ம் . 

30 ஆயிர‌ம் கோடி ஊழ‌ல்

 

இப்ரான் என்ற‌ யூடுப்ப‌ர் இந்திய‌ ச‌ட்ட‌த்தை ம‌திக்காம‌ த‌ன‌து யூடுப்பில் காணொளி போடுவ‌து . அவ‌ரை உத‌ய‌நிதி ம‌றைமுக‌மாய் காப்பாற்றுவ‌து இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌ந்து கொண்டு தான் இருக்கு 

ப‌த‌வி திமிரில் ஆடுகின‌ம்..................எதிர் க‌ட்சி ஆதிமுக்கா வாயை மூடி மெள‌வுன‌மாக‌ இருக்குது

 

எதிர் க‌ட்சி கேக்க‌ வேண்டிய‌ கேள்விக‌ளை சீமானே கழிவிட‌ மாட‌ல் அர‌சை பார்த்து கேக்கிறார்...................சீமான் கேக்கும் கேள்விக்கு ப‌தில் இல்லை

200ரூமாய் இணைய‌ கைகூலிக‌ளை வைச்சு சீமான் மீது அவ‌தூறு ப‌ர‌ப்ப‌ வைப்ப‌து தான் இப்போது க‌ழிவிட‌ மாட‌ல் செய்யுது😡🫤

 

 

இனி திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் விஜேய் மீதும் கல் அதிக‌ம் எறிவார்க‌ள்😡.................விஜேன்ட‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கைய‌ கூட‌ இணைய‌த்தில் ப‌திவேற்ற‌ம் செய்யுங்க‌ள்................இது தான் பெரியாரிட‌ம் இருந்து திமுக்கா க‌ற்று இருக்கு......................த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி திமுக்கா

 

2009 எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌தில் இருந்து என‌க்கு திமுக்காவை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது..............10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌வை 2026 ஆட்சிய‌ இழ‌ந்தால் இவ‌ர்க‌ள் மீண்டும் இவ‌ர்க‌ள் ப‌டு தோல்வி அடைந்து க‌ட்சி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழிந்து  போக‌னும்...................

 

திருமாள‌வ‌ன் திமுக்கா கூட்ட‌னிய‌ விட்டு வெளிய‌ வ‌ந்தாலே போதும் திமுக்காவின் தோல்வி உறுதியாகிடும்🙏..............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪

பாலபத்ர ஓணாண்டியார் இப்படி பயமுறுத்தலாமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நால்வருக்கு  வயிறெரியும் ...

1) சீமான் 

2) உதயநிதி ஸ்ராலின்

3) அண்ணாமலை 

4) திருமா (🤣)

 

ஒருவருக்கு வயிற்றோட்டம்,....

1) ஸ்ராலின் 

🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

இந்த பிரிவு என்பது இயல்பானது. இன்னும் 500 ஆண்டுகளின் பின்னர் இன்னும் பல மொழிகள் உருவாகலாம்.  இதை எவராலும்  தவிர்கக முடியாது.  

எதை வைத்து மொழி உருவாக்கம் நடைபெரும்  என்று சொல்கிறீர்கள் ?

 

3 hours ago, island said:

தமிழ் போராளி இயக்கங்கள் 80 களில் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு தீவிர பின் தள  ஆதரவை கொடுத்தவர்கள. திராவிட இயக்கத்தினரே.  

ஒருத்தனை அழிக்கணும் என்றால் ஒன்றில் முகத்துக்கு நேரே சண்டை போடணும் அதைவிட இலகுவான வழி கூட இருந்து  குழி பறிக்கனும் அதே திராவிடம் கடைசி சண்டையில் என்ன செய்தது ?

மானாட மயிலாட ஆட்டி கொண்டு இருந்தது 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் இல்லாமல் தமிழாக வந்தால் சந்தோசம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் இல்லாமல் தமிழாக வந்தால் சந்தோசம்.

விஜேய் கொள்கையை அடிக்க‌டி மாற்றுகிறார் தாத்தா....................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுத்தார் 

இப்போது திராவிட‌ சாய‌த்துக்குள் த‌மிழ் தேசிய‌த்தை புகுத்துகிறார்.....................2029 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் விஜேய் கூட‌ காங்கிர‌ஸ் கூட்ட‌னி வைக்கும்

திமுக்கா 200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ளை வைச்சு விஜேயின் க‌ட்சிக்கு க‌ல‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ முய‌ல்வின‌ம்.....................த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் உண்மைக‌ளை ம‌றைத்து க‌ழிவிட‌ மாட‌லுக்கு சிங் சாங் போட‌ தொட‌ங்கிட்டின‌ம்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

விஜேய் கொள்கையை அடிக்க‌டி மாற்றுகிறார் தாத்தா....................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுத்தார் 

இப்போது திராவிட‌ சாய‌த்துக்குள் த‌மிழ் தேசிய‌த்தை புகுத்துகிறார்.....................2029 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் விஜேய் கூட‌ காங்கிர‌ஸ் கூட்ட‌னி வைக்கும்

திமுக்கா 200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ளை வைச்சு விஜேயின் க‌ட்சிக்கு க‌ல‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ முய‌ல்வின‌ம்.....................த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் உண்மைக‌ளை ம‌றைத்து க‌ழிவிட‌ மாட‌லுக்கு சிங் சாங் போட‌ தொட‌ங்கிட்டின‌ம்......................

தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்தும் திராவிடர்களின் கைகளில் தான் பையா எந்த செய்தி நாளை வரனும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள் இலவச டிவி வரும்போதே விழித்து கொண்டு இருக்கனும் இனி தலைக்கு மேல் வெள்ளம் போயிட்டுது .

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நால்வருக்கு  வயிறெரியும் ...

1) சீமான் 

2) உதயநிதி ஸ்ராலின்

3) அண்ணாமலை 

4) திருமா (🤣)

 

ஒருவருக்கு வயிற்றோட்டம்,....

1) ஸ்ராலின் 

🤣

விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது

விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌ வில்லை....................சீமான் விஜேய் கூட்ட‌னி வைப்பினம் என்று ஆர‌ம்ப‌த்தில் இருந்த‌து பிற‌க்கு 
த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌ம் வைக்க‌ கூடாது பிர‌பாக‌ர‌ன் ப‌ற்றி பேச‌க் கூடாது க‌ட்ட‌ல‌ வ‌ர‌

சீமான் வெளிப்ப‌டையாய் சொல்லி விட்டார் இதெல்லாம் ச‌ரி வ‌ராது . த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் எங்க‌ளின் அடையால‌ம் அவ‌ரை த‌விர்த்து ஒரு போதும் என்னால் அர‌சிய‌ல் செய்ய‌ முடியாது என்று விஜேய்க்கு நேர‌டியாக‌ சொல்லி விட்டார்....................த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் திமுக்காவை விட்டு வில‌கி விஜேய் கூட‌ இணைவின‌ம்...........................

சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம்..............2026 தேர்த‌லில் என்ன‌வும் ந‌ட‌க்க‌லாம் பொறுத்து இருந்து பாப்போம்.....................த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை........................

Link to comment
Share on other sites

4 hours ago, பகிடி said:

ஆந்திராவின் NTR உம் உதவினார். 

வைகோ போன்றவர்களை தெலுக்கன் என்று ஏசும் அதே கூட்டம் தான் இங்கே சுமத்திரனை தமிழின விரோதி என்கிறது. தனது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் தனக்கு நன்மை செய்ய விரும்புவனுக்கு எதிராக வாள் சுற்றும் கூட்டம் அது. 

உண்மை தான். சிறிலங்காவில் எப்போ இனப்படுகொலை நடந்தது??

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

நால்வருக்கு  வயிறெரியும் ...

1) சீமான் 

2) உதயநிதி ஸ்ராலின்

3) அண்ணாமலை 

4) திருமா (🤣)

 

ஒருவருக்கு வயிற்றோட்டம்,....

1) ஸ்ராலின் 

🤣

அப்படியா?
ஸ்ராலினும் , உதயநிதியும் ஒரே கட்சினரும் தந்தையும்  மகனும். அவர்கள் காசால் தமிழக வாக்குகளை வாங்கி கொள்பவர்கள். 

அண்ணாமலை ஏற்கனவே ஒரு லூசர் .. அவரின் பேச்சுக்கே இடமில்லை.
சீமான்/ விஜய் இணைவு பலருக்கு (காற்று வாக்கில் கேட்டது) வயிற்றில் புளியை கரைக்கலாம்.
10 லட்சம் பேர் விஜயின் கூட்டத்தில் என்பது ஒரு அசாதாரணம். பார்க்கலாம் அவரின் வளர்ச்சியை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.