Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழரசு கட்சியும் வேண்டாம் தமிழர்கள் கட்சிகளும் தமிழர் பிரதேசங்களில் வேண்டாம் என்ற தமிழர்கள்,   சிங்கள கட்சிகளும் வேண்டாம் என்றால் எப்படி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு பொலிஸ் காணி அதிகாரங்கள் கிடையாது 13ம் இல்லை  என்கின்ற ஜேவிபியை தற்போது கோத்தபாயாவின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள சிங்கல கட்சியான ஜேவிபியை ஆதரிப்பார்கள் என்பதினால் வந்த குழப்பம் தான்

தெளிவான குழப்பம்தான்.

என்பிபி க்கு போடும் தமிழர், மாகாணசபை இப்போ இருப்பதே போதும் அல்லது இதுவும் வேண்டாம், மேற்கு நாடுகள் போல் இனவாதம் குறைவான ஒரு ஒற்றையாட்சி இலங்கையே போதும் என நினைத்தே என்பிபி க்கு போடுகிறார்கள்.

அதாவது அடைய/கிடைக்க/தரமாட்டாத தீர்வை கேட்பதை விட, மும்மொழி கொள்கை செவ்வனே அமல்படும், இனவாதம் களையப்பட்ட, புதிய இலங்கையை நாமும் பங்காளிகாகி கட்டி எழும்புவோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

பட்டறிவு இது நடவாத காரியம் என எமக்கு உணர்தினாலும், அவர்கள் இதை முயற்சித்துத்தான் பார்ப்போமே என நினைக்கிறார்கள்.

  • Thanks 1
  • Replies 72
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போ

valavan

அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ்,  இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்க

goshan_che

நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

இந்த இருவரும் மீண்டும் வரத்தான் போகிறார்கள்.

நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?

சுமந்திரன், சிறிதரன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

எப்படி கழுவி ஊத்தியும் என்ன, இந்த இருவரும் மீண்டும் வரத்தான் போகிறார்கள்.

அங்கால கஜன்ஸ், சுரேஷ், சித்தர் எல்லாரும் இவர்களை ஒத்தவர்கள்தான்.

இவர்கள் கையில் தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரை தேர்தலுக்கு தேர்தல் அது சிறுத்து, சிறுத்து போகும் என்றே நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய அரசியலை அரங்கில் இருந்து அகற்றும் வரை இவர்களும் அகல போவதில்லை.

சரியாக  சொன்னீர்கள். இவர்கள் அனைவரும்... மக்களை சிங்களக் கட்சிகளை  நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கும் பணியைத்தான்  செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

மேற்கு நாடுகளில் பெரும்பாலானோர் அரசியலுக்குள்   நுழைய முன்... 
அரசியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பார்கள்.

எனக்குத் தெரிந்து சில  தமிழ்ப் பிள்ளைகள்,  அரசியல் படித்து இங்குள்ள பிரபல கட்சிகளில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் பலன் இன்னும் 5-10 வருடங்களில் தெரிய வரும்.

தாயகத்திலும் இதே வழியை பின்பற்ற... இளைய சமுதாயம் முன் வரவேண்டும் இதற்கு உரிய ஊக்கத்தை பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வர வேண்டும்.

சுத்துமாத்து  "லோயர்" மார் எல்லாரும் எம்.பி. என்ற மிதப்பில் திரிவதை தடுத்து  நிறுத்த வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

100%👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

சுமந்திரன், சிறிதரன்

இவர்கள், முந்தைய அரசுகளில் அனுபவித்த சுகபோகங்களை எண்ணி மீண்டும் அடிச்சு பிடிச்சு போட்டியிடுகிறார்கள். மிக கஸ்ரப்படப்போகிறார்கள். இவர்கள் இந்தப் பதவியை மக்களால் பெற்று மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. மாறாக சும்மா இருந்து  வசதிகளை பெற்றுக்கொண்டனர், ஆகவே மக்களின் கோரிக்கைகளை ஆளுநர் பாத்துக்கொள்வார், இவர்கள் உத்தியோகஸ்தர்களாக வேலை செய்ய வேண்டும். லஞ்சம் எல்லாம் பெற முடியாது, வசதிகள் குறைக்கப்படும், கன்ரீன் என்று பேசுபவர்களெல்லாம் அதற்குரிய பணம் செலுத்தியே வேண்டியவற்றை கொள்வனவு செய்யலாம், எல்லாம் இறுக்கப்போகிறது. பாப்போம் என்ன நடக்கிறதென்று. நாடாளுமன்ற உறுப்பினர் என்று நாட்டாமை காட்டியதெல்லாம் மறைந்து, அதை சொல்லவே பயப்பட வேண்டி வரும் போலிருக்கிறது. பயங்கரவாத சட்டம் கூட இப்போதைக்கு எடுக்காமல் இருப்பது நல்லதென்றே நான் நினைக்கிறன். இந்த சட்டத்தை பயன்படுத்தியே எதிரிகளை, கேள்வி கேட்டவர்களை நசுக்கினர் இதை உருவாக்கி. அதன் ஆபத்து என்ன என்பதை உருவாக்கியவர்கள் அனுபவித்து பார்க்க வேண்டாமோ? இதை அவசரப்பட்டு எடுத்தால் மீண்டும் வன்முறைகளை ஏவுவார்கள், ஏதாவது தமிழரின் நீதியான கோரிக்கைகைகளை நிறைவேற்ற நினைத்தால் பிக்குகள், இனவாதிகள், ஊழல் பெருச்சாளிகள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்கள் செய்யும்போது பாத்துக்கொண்டு இருந்தோம், அவர்களும் கொஞ்சம் அதன் தாக்கத்தை  அனுபவிக்கட்டும். இதை இப்போ அவசரப்பட்டு எடுத்தால் மஹிந்தா பட்டாளம் சும்மா இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? அதை அவர்கள் மீது ஏவும்போது அவர்களால் குறை கூற முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/11/2024 at 06:33, ஏராளன் said:

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி

large.IMG_7413.jpeg.08988a23eb20cd968cdc

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7413.jpeg.08988a23eb20cd968cdc

காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா?

பனம்பழம் விழுந்தா பிறகு காகம் இருக்குதா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, தமிழ் சிறி said:

சரியாக  சொன்னீர்கள். இவர்கள் அனைவரும்... மக்களை சிங்களக் கட்சிகளை  நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கும் பணியைத்தான்  செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

மேற்கு நாடுகளில் பெரும்பாலானோர் அரசியலுக்குள்   நுழைய முன்... 
அரசியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பார்கள்.

எனக்குத் தெரிந்து சில  தமிழ்ப் பிள்ளைகள்,  அரசியல் படித்து இங்குள்ள பிரபல கட்சிகளில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் பலன் இன்னும் 5-10 வருடங்களில் தெரிய வரும்.

தாயகத்திலும் இதே வழியை பின்பற்ற... இளைய சமுதாயம் முன் வரவேண்டும் இதற்கு உரிய ஊக்கத்தை பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வர வேண்டும்.

சுத்துமாத்து  "லோயர்" மார் எல்லாரும் எம்.பி. என்ற மிதப்பில் திரிவதை தடுத்து  நிறுத்த வேண்டும்.

1) அத்தோடு ஒருவர் 2 தடவைக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை தடைசெய்ய வேண்டும்.

2) குறிப்பிட்ட ஒரு வயதுக்கு மேல் போட்டியில் இறங்குவதை தடை செய்ய வேண்டும்.

3) தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துப்பத்து விபரங்களை தெரிவிக்க வேண்டுமென்று சட்டம் இருந்தும் சமர்ப்பிக்காத விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட வேண்டும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

1) அத்தோடு ஒருவர் 2 தடவைக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை தடைசெய்ய வேண்டும்.

2) குறிப்பிட்ட ஒரு வயதுக்கு மேல் போட்டியில் இறங்குவதை தடை செய்ய வேண்டும்.

3) தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துப்பத்து விபரங்களை தெரிவிக்க வேண்டுமென்று சட்டம் இருந்தும் சமர்ப்பிக்காத விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட வேண்டும்.

4) முக்கியமாக...  மக்களால் தெரிவு செய்யப் படாதவர் பாராளுமன்ற தேர்தலில் தோற்றால்,
பின்கதவால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதை அறவே ஒழிக்க வேண்டும்.
சுத்துமாத்து எம்பிக்களுக்கு... அடிக்க வேண்டும் ஆப்பு.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 1/11/2024 at 06:55, valavan said:

2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல,

இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.

On 1/11/2024 at 09:19, புலவர் said:

வீதியைத் திறக்க வேண்டியது அரசின் கடமை. அதைத் தேர்தல் நேரத்தில் திறந்ததது வாக்கு வேட்டைக்காக என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.இது போன்று மேலும் தேர்தல்கள் வரும். தமழிமக்கள மீது போடப்பட்டுள்ள அழுத்தங்களை அவை குறைக்கும். இதில் அரசியல்வாதிகள் குளிர்காய நினைப்பதை என்னவென்பது?

On 1/11/2024 at 08:59, satan said:

முப்பத்து நான்கு வருடங்களாக பூட்டப்பட்டிருந்த வீதியைப்பற்றி மாறி மாறி முண்டுகொடுத்த அரசுகளுடன் வாயே திறக்காதவர், திடீரென கரிசனை வந்தது எப்படி? மக்களிடம் வாக்கு கேட்க ஒரு துருப்பு கிடைத்துவிட்டது. வாக்கு விழுந்தால் அதோடு பாராளுமன்றம் போகலாம் அல்லது ஜனாதிபதிக்கு ஒரு நன்றி, பாராட்டு அனுப்பி இணைந்துகொள்ளலாம்.    

On 1/11/2024 at 11:20, வாதவூரான் said:

இது ஜனாதிபதித்தேர்தலுக்கு முதலே தீர்மானிக்கப்பட்டது. எங்கடை சுமந்து இது தெரிந்து தான் அறிக்கை விட்டவர்

IMG-2822.jpg

AVvXsEgyVCDJDkIuQXYOMXEd1IIVabcaVIXAZJMZ  AVvXsEjzvnvt5iJAH4RoCHA0PDmOZzajIJTiedOH

சென்ற 27.09.2024 அன்று,  ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த வீதிகள்... பல ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மூடப் பட்டிருந்த நிலையில்... ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க,  மக்களின் பாவனைக்ககாக திறந்து வைக்கப் பட்டது.

இதனை எந்த சிங்கள கட்சிகளோ, சிங்கள அமைப்புகளையோ, புத்த பிக்குகளோ தமது வேண்டுகோளை ஏற்றுத்தான்,  அந்த வீதி திறக்கப் பட்டது என்று... எவரும் உரிமை கோரவும் இல்லை, திறக்கப் பட்ட வீதிக்கு முன் நின்று படம் எடுத்து... நாலாந்தர  "ஈன அரசியல்" செய்யவும் இல்லை.

ஆனால்... நேற்று  திறந்த அச்சுவேலி  வீதிக்கு முன் நின்று ஒருக்கால் மஞ்சள்  சட்டையுடனும், பிறகு வெள்ளைச் சட்டையுடனும் நின்று  படம் காட்டிக் கொண்டு நிற்கிறார் சுத்துமாத்து  சுமந்திரன். 

படம் எடுப்பதற்காக  உழுத வயலை, உழுத... பச்சோந்தியிடம், வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். 

மக்களை முட்டாள் ஆக்குவதாக நினைத்துக் கொண்டு... 
தான், முழு முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்குது இந்த சுத்துமாத்து. 😂

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

மக்களை முட்டாள் ஆக்குவதாக நினைத்துக் கொண்டு... 

அது என்ன தெரியுமா தமிழ்சிறி,

இவர்கள் என்னதான் படிச்சிருந்தாலும் இவர்கள் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மிக மிக பழமையான உத்திகள்.

அந்த உத்திகள் இந்த டிஜிட்டல் காலத்தில் பத்து வயசு பையனைகூட ஏமாற்ற பயன்படாது என்பது தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்..

1 hour ago, தமிழ் சிறி said:

படம் எடுப்பதற்காக  உழுத வயலை, உழுத...

அதற்கு உதாரணம் இது உழுத வயலை மட்டுமல்ல ஏற்கனவே முளைவிட்ட நிலத்தில் ஏரோட்டும் முதல் தமிழனும் இவர்தான்.

ஏர் கார ஐயா என்னமோ குனிஞ்சு பாக்குறமாதிரி தெரியுது , அவர் மைண்ட் வாய்ஸ் குறுக்காலபோனது படம் காட்டுறன் எண்டு நான் வைச்சிருந்த ஒரு ஏரையும் உடைச்சு போட்டுதே என்றொரு சுமந்துவ திட்டுற மாதிரி இருக்கு .

Screenshot-5.png

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, valavan said:

அது என்ன தெரியுமா தமிழ்சிறி,

இவர்கள் என்னதான் படிச்சிருந்தாலும் இவர்கள் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மிக மிக பழமையான உத்திகள்.

அந்த உத்திகள் இந்த டிஜிட்டல் காலத்தில் பத்து வயசு பையனைகூட ஏமாற்ற பயன்படாது என்பது தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்..

அதற்கு உதாரணம் இது உழுத வயலை மட்டுமல்ல ஏற்கனவே முளைவிட்ட நிலத்தில் ஏரோட்டும் முதல் தமிழனும் இவர்தான்.

ஏர் கார ஐயா என்னமோ குனிஞ்சு பாக்குறமாதிரி தெரியுது , அவர் மைண்ட் வாய்ஸ் குறுக்காலபோனது படம் காட்டுறன் எண்டு நான் வைச்சிருந்த ஒரு ஏரையும் உடைச்சு போட்டுதே என்றொரு சுமந்துவ திட்டுற மாதிரி இருக்கு .

Screenshot-5.png

மிக அருமையான கருத்துக்கள் வளவன். ✔️ 👍
வாய் விட்டு  சிரித்தேன். 😂
சுமந்துக்கு யாரோ... வெளி நாட்டில் தன்னை நினைக்கின்றார்கள் என்று மூக்கு உழைந்திருக்கும். 😂
நாளைக்கு... என்ன, கோமாளி கூத்து ஆடப் போகிறாரோ என்று எங்களுக்குத்தான் வயித்தை கலக்குது. 🤣  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

465433235_9316762265051204_5913486559315

"ஈழத்து மண் சோறு". அறிமுகப் படுத்தியவர்: ஆபிரகாம்  சுமந்திரன். 😃
சுத்துமாத்து சுமந்திரனின்... மற்ற ஒரு தேர்தல் "டிராமா". 😎

வெறும்  மண்ணில் இருந்து  சாப்பிட்டால்... சனம் பரிதாபப் பட்டு 
வாக்கு போடும் என நினைத்து விட்ட  கோமாளி. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

IMG-2822.jpg

AVvXsEgyVCDJDkIuQXYOMXEd1IIVabcaVIXAZJMZ  AVvXsEjzvnvt5iJAH4RoCHA0PDmOZzajIJTiedOH

சென்ற 27.09.2024 அன்று,  ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த வீதிகள்... பல ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மூடப் பட்டிருந்த நிலையில்... ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க,  மக்களின் பாவனைக்ககாக திறந்து வைக்கப் பட்டது.

இதனை எந்த சிங்கள கட்சிகளோ, சிங்கள அமைப்புகளையோ, புத்த பிக்குகளோ தமது வேண்டுகோளை ஏற்றுத்தான்,  அந்த வீதி திறக்கப் பட்டது என்று... எவரும் உரிமை கோரவும் இல்லை, திறக்கப் பட்ட வீதிக்கு முன் நின்று படம் எடுத்து... நாலாந்தர  "ஈன அரசியல்" செய்யவும் இல்லை.

ஆனால்... நேற்று  திறந்த அச்சுவேலி  வீதிக்கு முன் நின்று ஒருக்கால் மஞ்சள்  சட்டையுடனும், பிறகு வெள்ளைச் சட்டையுடனும் நின்று  படம் காட்டிக் கொண்டு நிற்கிறார் சுத்துமாத்து  சுமந்திரன். 

படம் எடுப்பதற்காக  உழுத வயலை, உழுத... பச்சோந்தியிடம், வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். 

மக்களை முட்டாள் ஆக்குவதாக நினைத்துக் கொண்டு... 
தான், முழு முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்குது இந்த சுத்துமாத்து. 😂

தமிழக மக்களை போல தாயக மக்களையும் மாற்ற வேணும் என தீயாக வேலை செய்கின்றார் போல

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ். பலாலி வீதி திறப்பும், சுமந்திரனின் சந்தர்ப்ப வாதமும். 

சுமந்திரனின் சுத்துமாத்தை அறிய... 
14´வது நிமிடத்தில் இருந்து காணொளியை கேட்கவும்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அண்மையில் ஓவியம் ஒன்றை பார்க்க நேர்ந்தது.

வடக்கு கிழக்கை தடை போட்டு பிரித்து விட்டு யாழில் ஒரு வீதியை திறந்து வாக்கை பெறும் அரசியல் செய்கிறது ஜேவிபி என்று. 

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

அண்மையில் ஓவியம் ஒன்றை பார்க்க நேர்ந்தது.

வடக்கு கிழக்கை தடை போட்டு பிரித்து விட்டு யாழில் ஒரு வீதியை திறந்து வாக்கை பெறும் அரசியல் செய்கிறது ஜேவிபி என்று. 

465071192_962243669273939_78353799946072

விசுகர், மேலுள்ள ஓவியத்தை குறிப்பிடுகின்கிறீர்கள் என நினைக்கின்றேன்.

தேர்தலுக்கு முன்... வடக்கு, கிழக்கு இணைப்பை பற்றி அனுரா கதைத்தால்...
ஒட்டு மொத்த சிங்கள வாக்குகளும், முஸ்லீம் வாக்குகளும் இல்லாமல் போய்விடும் 
என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

அதனால்... தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கப் போகின்றோம் என்று எந்த இடத்திலும் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகக் கூட குறிப்பிட்டு பேசவில்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பு... என்பது, இனி சாத்தியமற்ற விடயம் என்றே நான் நினைக்கின்றேன். அதுவரை... கிடைக்கும் வீதி விடுவிப்பு போன்ற சிறு  சலுகைகளை வந்த வரையில் லாபம் என்று அனுபவிக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, விசுகு said:

வடக்கு கிழக்கை தடை போட்டு பிரித்து விட்டு யாழில் ஒரு வீதியை திறந்து வாக்கை பெறும் அரசியல் செய்கிறது ஜேவிபி என்று. 

அதை தான் டிஜிட்டல் காலத்தின் அரசியல் என்று நம்பி கொண்டாடபடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, தமிழ் சிறி said:

465071192_962243669273939_78353799946072

விசுகர், மேலுள்ள ஓவியத்தை குறிப்பிடுகின்கிறீர்கள் என நினைக்கின்றேன்.

தேர்தலுக்கு முன்... வடக்கு, கிழக்கு இணைப்பை பற்றி அனுரா கதைத்தால்...
ஒட்டு மொத்த சிங்கள வாக்குகளும், முஸ்லீம் வாக்குகளும் இல்லாமல் போய்விடும் 
என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

அதனால்... தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கப் போகின்றோம் என்று எந்த இடத்திலும் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகக் கூட குறிப்பிட்டு பேசவில்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பு... என்பது, இனி சாத்தியமற்ற விடயம் என்றே நான் நினைக்கின்றேன். அதுவரை... கிடைக்கும் வீதி விடுவிப்பு போன்ற சிறு  சலுகைகளை வந்த வரையில் லாபம் என்று அனுபவிக்க வேண்டியதுதான்.

நன்றி சிறி இதே தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

வடக்கு, கிழக்கு இணைப்பு... என்பது, இனி சாத்தியமற்ற விடயம் என்றே நான் நினைக்கின்றேன். அதுவரை... கிடைக்கும் வீதி விடுவிப்பு போன்ற சிறு  சலுகைகளை வந்த வரையில் லாபம் என்று அனுபவிக்க வேண்டியதுதான்.

வரும் தேர்தல் முடிந்த பின்னரே பல சுயரூபங்கள் வெளிவரும். அதுவரை காத்திருப்போம். 🙂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

465071192_962243669273939_78353799946072

விசுகர், மேலுள்ள ஓவியத்தை குறிப்பிடுகின்கிறீர்கள் என நினைக்கின்றேன்.

தேர்தலுக்கு முன்... வடக்கு, கிழக்கு இணைப்பை பற்றி அனுரா கதைத்தால்...
ஒட்டு மொத்த சிங்கள வாக்குகளும், முஸ்லீம் வாக்குகளும் இல்லாமல் போய்விடும் 
என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

அதனால்... தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கப் போகின்றோம் என்று எந்த இடத்திலும் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகக் கூட குறிப்பிட்டு பேசவில்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பு... என்பது, இனி சாத்தியமற்ற விடயம் என்றே நான் நினைக்கின்றேன். அதுவரை... கிடைக்கும் வீதி விடுவிப்பு போன்ற சிறு  சலுகைகளை வந்த வரையில் லாபம் என்று அனுபவிக்க வேண்டியதுதான்.

உண்மை தான். ஆனால் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு குடுக்கேக்கை இதை செய்யேலை தானே.நான் அறிந்தவரையில் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டநீக்கம், பலாலி, காங்கேசந்துறை காணி விடுவிப்பு நூற்றுக்கு தொண்ணூறு வீதம்நடக்கும். எல்லாம் மாகாணசபைத்தேர்தலுக்கு முன்நடக்கும் (தேர்தல் காலத்தில் எல்லாம் செய்யமுடியாது தானே). கம்மன்பில தொடக்கம் ரணில்வரை இப்ப கூடக்கதைப்பதற்குக் காரணம் தேர்தல் காலத்தில் சிலது செய்யமுடியாது என்பதால் சும்மா வாயைப்புடுங்கி ஏதாவது லாபம் பாக்கலாம் என்று தான். வந்து ஒரு மாதத்திற்குள் எல்லாம் செய்யிறது என்டால் அதுகும் மூன்று அமைச்சர்களை வைத்துக்கொண்டு அது எவராலையும் முடியாது. இதை விட மாகாண சபைத்  தேர்தலில் வடமாகாணசபையில் என்பிபிக்கு பெரும்பான்மை வந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. இதை வைச்சுநான் என்பிபிக்கு ஆதரவு என்று இல்லை. கள யதார்த்தம் இது தான். எங்கடை தமிழ்க்கட்சியளுக்கு தான் அரசியல் செய்ய எதுவும் இருக்காது (குறிப்பு: வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை என்று தான் படுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியாக  சர்வசன வாக்கெடுப்புநடக்கும் போலைஇந்தியா அழுத்தம் குடுத்தால். கிழக்கில் முஸ்லிம் சிங்களம் சேர்ந்து 60 வீதம் எனவே இணைப்பு சாத்தியம் இல்லை).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வாதவூரான் said:

உண்மை தான். ஆனால் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு குடுக்கேக்கை இதை செய்யேலை தானே.

உண்மை தான் 

ஆனால் ரணில் நரி என்று இனம் காணப்பட்டவர். இவர்கள் இனவாதிகள் என்று மட்டுமே இனம் காணப்பட்டவர்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.