Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கமலாக்கா கிட்ட வந்திட்டா..

தகவலுக்கு நன்றி அல்வாய்யன். 🙏

  • Replies 174
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷ

  • நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால

  • குமாரசாமி
    குமாரசாமி

    பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கமலாக்கா கிட்ட வந்திட்டா..

கமலா…. முன்னுக்கு வாற மாதிரி இருந்தால்…
டக்கெண்டு ட்ரம்ப்,   சுமந்திரனிடம் ஆலோசனை கேட்டு…
திருமதி ரவிராஜின் வாக்குகளை  திருடி, அவர் பின்கதவால் சுத்துமாத்து செய்து   பாராளுமன்றம் போன மாதிரியான ரெக்னிக்கை கேட்க சொல்லுங்கோ. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Presidential results
 
licensed-image?q=tbn:ANd9GcRTMpqqci5VyqC
214
248
licensed-image?q=tbn:ANd9GcRifo-ClOZnpj-
270 to win
பென்சிலவேனியாவும்  அலெஸ்காவும் வர டிரம்ப் தான் ஜனாதிபதி !!👍
  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7439.jpeg.44570df92a59272fbd9b

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

ரம்ப. வெற்றி தான்   இது அமெரிக்கர்கள் முடிவு    ஆனால் உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்கபோவதில்லை   வரும்   

நாலு வருடங்களையுமிருந்து பார்ப்போம்   🙏

சரி...சரி ஓரமாக உட்காரவும்  😎 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. 

ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை.

அவர் ஒரு இனவாதி 

மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு  போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி ஓரமாக உட்காரவும்  😎 🤣

இவ்வளவு காலமும் ஓரமாக தான் உட்கார்ந்து இருந்தேன்   

இன்றிலிருந்து  அது முடியாத காரியம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. 

ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை.

அவர் ஒரு இனவாதி 

மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு  போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.

இவர் ஒரு சுயநலவாதி.  ...தான் உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும்  ஆனால் மற்றைய நாடுகள் அமெரிக்காவில் வியாபாரம் செய்ய கூடாது என்ற கொள்கை உடையவர்   வரியை கூட்டி. விடுவார்   இவர் மட்டும் அமெரிக்கா திறைசேரிக்கு  1800 மில்லியன் அமெரிக்கா டொலர்   வரி செலுத்தவில்லை  

வடகொரியா அதிபரை சந்திப்பார்.    அதனால் எந்தவொரு பிரயோஜனம் இருக்காது 

 புட்டினை சந்திதது   தலை ஆட்டி விட்டு வருவார் 

 நோட்டோ இல் இருந்து வெளியேறுவார். 

மனித உரிமை சபையிலிருந்து வெளியேறுவார 

உலக பொது கட்டமைப்பைகள். எதுக்கும். நிதி செலுத்தப்போவதில்லை 

ஜேர்மனியில் யார் ஆண்டாளும். இவருடன். ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்

1. அமெரிக்காவால் செலன்ஸ்கியும் உக்ரேனும் கை கழுவப்படுவார்கள்.

2. ரஸ்யாவால் ஈரான்/பலஸ்தீனர்கள் கைககழுவி விடப்படுவார்கள்.

3. இஸ்ரேலுலுக்கு இப்போ இருப்பதை விட கண்மூடித்தனமான ஆதரவு கிடைக்கும்.

4. காங்கிரசும், செனேட்டும் ரிபப்லிகன் வசம் போகும் போல உள்ளது. 5.  

அப்படியாயின் நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகுவது கொஞ்சம் இலகுவாகும்.

அமெரிக்கா விலகினால்,

பால்டிக் தேசங்களை, பின்லாந்தை ரஸ்யா விழுங்கப்பார்க்கும்.

5. ஜேர்மனியும் பிரான்சும் வழமைபோல கையை பிசையும்.

6. பெ.பி மட்டும் வழமை போல தனியே நிண்டு எதிர்த்து அடிவாங்கும். 

7.  சீனாவுடன் டிரம்ப் பொருளாதார யுத்தம் நடத்துவார். இதனால் மஸ்க் உட்பட அவரை ஆதரித்தோர் இன்னும் பணக்காரர் ஆவார்.

8. இப்படி மேற்கிற்கு, அதன் வழி வாழும் நமக்கு பல ஆப்புகள் இருந்தாலும்.

9. கிரிப்டோவில் முதலிட்டவர்க்கு இனி நல்ல காலம்🎉🥳🎊🎁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

Uk இப்பவே யூரோப்பில் மறுபடி சேர துண்டைப்போடுது..😂😂

  • கருத்துக்கள உறவுகள்

What a Trump presidency would mean for global wars and European security |  World News | Sky News

ட்ரம்ப் ஐயா அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்ற உடன்...
வெள்ளை மாளிகையில்  முதல் சந்திப்பு...  புட்டினுடன் இருக்க வேண்டும்.
அந்தப் படத்தை பார்த்து... செலன்ஸ்கிக்கு வயிறு  பத்தி எரிய வேணும். 💪

😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

What a Trump presidency would mean for global wars and European security |  World News | Sky News

ட்ரம்ப் ஐயா அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்ற உடன்...
வெள்ளை மாளிகையில்  முதல் சந்திப்பு...  புட்டினுடன் இருக்க வேண்டும்.
அந்தப் படத்தை பார்த்து... செலன்ஸ்கிக்கு வயிறு  பத்தி எரிய வேணும். 💪

😂

கூ முட்டைக‌ள்
ஜ‌ரோப்பிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்...............
அண்ட‌ல் புளுக‌ன்  ஆகாச‌ புளுக‌ன் செல‌ன்சிக்கு உத‌வின‌ தெல்லாம் வீனாக‌ போய் விட்ட‌தே.......................யாழில் உக்கிரேனுக்கு கூ முட்டை செல‌ன்ஸ்சிக்கு  ஆத‌ர‌வாய் எழுதின‌ ஆள் இப்ப‌ தோசைய‌  பிர‌ட்டி ம‌று ப‌க்க‌ம் போடுகிறார் ஹா ஹா😁

அறிவிஜீவிக‌ள் முக‌த்தை எங்கை கொண்டு போய் வைக்க‌ போகின‌ம்

என்ன‌ முர‌ட்டு முட்டு
மான்புமிகு புட்டின் என்று எழுதினால் எங்கையோ ஒருத‌ருக்கு ந‌ல்லா சுட்டு போச்சு 
இனி யாழில் என்ன‌த்தை கிறுக்க‌ போகிறார் என்று தெரிய‌ வில்லை ஹா ஹா 

ப‌ழ‌சை சுட்டி காட்ட‌னும் த‌மிழ் சிறி அண்ணா

ர‌ம் புட்டின் ச‌ந்திப்பு ர‌ஸ்சியாவில் ந‌ட‌க்க‌ கூடும் அல்ல‌து அமெரிக்காவில் ந‌ட‌க்க‌ கூடும்
கால‌ம் இருக்கு இதுக‌ளை க‌ண்ணால் காண‌ ஹா ஹா..........................

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு அப்ப‌டி எழுதினால் சில‌ர் ம‌ன‌ம் புன் ப‌டும் ஆன‌ ப‌டியால் எழுதுவ‌தை த‌விர்க்கிறேன்😁...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

1. அமெரிக்காவால் செலன்ஸ்கியும் உக்ரேனும் கை கழுவப்படுவார்கள்.

2. ரஸ்யாவால் ஈரான்/பலஸ்தீனர்கள் கைககழுவி விடப்படுவார்கள்.

இது இப்ப நடக்க வாய்ப்பில்லை. செத்தகிளிக்கு உக்ரேனைவிட்டு வெளியேறுமாறு கடும் செய்திசொல்லப்படும். இப்ப ட்றம்புக்குத் தெரியும் செத்தகிளி ஒரு பல்லில்லாத பாம்பு எண்டு. அடுத்தது பயங்கரவாத நாடுகளான இரானினதும் துருக்கியினதும் கனவு ஜெருசலேமை கைப்பற்றுவதுதான். அதற்கு பாலஸ்தீனர் மீதான அக்கறை என்று தங்க முலாமிட்டுள்ளனர். பிராந்தியத்தில் இவ்விரு பயங்கரவாத நாடுகளினதும் முக்கிய பயங்கரவாதக் கூட்டாளிதான் செத்தகிளி.  

இந்தமுறை நாங்கள் செத்தகிளிக்கெதிரா அடித்து ஆடுறம். கனபேர் வாய்பாத்துக்கொண்டு நிக்கப்போயினம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியானார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார்.

சர்வதேசத்தின் சக்தி மிகுந்த நாடான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர்.

தொடக்கம் முதலே இருவரும் கடுமையான பிரசார யுக்திகளை கையாண்டனா்.அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் கமலா ஹரிஸுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் டிரம்ப் தனது பிரச்சார முறையை மாற்றினார். டிரம்ப்பிற்கு ஆதரவாக உலக பணக்காரரான எலான் மஸ்க் களம் இறங்கி கடுமையாக பிரசாரம் செய்தார். இருவருக்கும் இடையே கடுமையான பிரசார போட்டி நிலவியது.

இதற்கு இடையே நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹரிஸை விட அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

https://thinakkural.lk/article/311814

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதுக்குள்ள மினக்கெட நேரமில்லை. இந்தியனைக் கலைச்சு விட்டாச்சு, அவேலுக்கு வைட்கவுஸ் கேக்குதாம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் வெற்றிக்கு காரணமான மாகாணங்கள் எவை? முழு விவரம்

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டனை உள்ளடக்கிய கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் வெளியாகிவிட்டன.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுவிட்டார். எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதைப் பார்க்கலாம்.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் டிரம்ப் வென்ற மாகாணங்கள் என்னென்ன?

மான்டனா - 4

வட டகோட்டா - 3

தெற்கு டகோட்டா - 3

வியோமிங் - 3

உட்டா - 6

ஒக்லஹாமா - 7

டெக்சாஸ் - 40

அர்கான்சஸ் - 6

மிஸோரி - 10

லூசியானா - 8

மிஸிஸிப்பி - 6

அலபாமா - 9

புளோரிடா - 30

தெற்கு கரோலினா - 9

டென்னஸி - 11

கென்டக்கி - 8

இண்டியானா - 11

ஒஹையோ - 17

மேற்கு விர்ஜீனியா - 4

இடாஹோ - 4

அயோவா - 6

வடக்கு கரோலினா - 16

விஸ்கான்சின் - 10

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் என்னென்ன?

கலிபோர்னியா - 54

கொலராடோ - 10

இல்லினாய்ஸ் - 19

நியூயார்க் - 28

மாசசூசெட்ஸ் - 11

டெலவர் - 3

மேரிலேண்ட் - 10

கொலம்பியா மாவட்டம் (வாஷிங்டன் டி.சி) - 3

ரோட் ஐலேண்ட்- 4

வெர்மான்ட் - 3

ஒரேகான் - 8

வாஷிங்டன் - 12

ஹவாய் - 4

விர்ஜீனியா - 13

நியூஜெர்சி - 14

முடிவைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?

முடிவைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்களிலும் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் ஜார்ஜியாவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசோனா - 11

நெவேடா - 6

விஸ்கான்ஸின் - 10 - டிரம்ப்

மிச்சிகன் - 11

பென்சில்வேனியா - 19 - டிரம்ப்

ஜார்ஜியா - 16 - டிரம்ப்

வடக்கு கரோலினா - 16 - டிரம்ப்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ckgv30p42rno

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-4-8.jpg?resize=750,375&ssl=1

ட்ரம்பின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் ஜனாதிபதியின் அசாதாரண மறுபிரவேசமாக இது அமைந்துள்ளது.

இரண்டு படுகொலை முயற்சிகள் மற்றும் 34 குற்றச் செயல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த வெற்றி வந்துள்ளது.

விஸ்கான்சினில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி பதவிக்கு தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றார்.

அலாஸ்கா, விஸ்கான்சினின் அண்மைய மற்றும் முக்கியமான முடிவுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இப்போது 279 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.

ட்ரம்பின் வெற்றியானது அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் குடியேற்றத்தைச் சுற்றியுள்ள பொது மக்களின் விரக்திகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் (Grover Cleveland) பின்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் பதவி வகிக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆவார்.

க்ரோவர் க்ளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது ஜனாதிபதியாக 1885 முதல் 1889 வரையும் 24 ஆவது ஜனாதிபதியாக 1893 முதல் 1897 வரையும் இருந்தார்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் முறையாக 2016 முதல் 2020 க்கு இடையில் இருந்தார்.

எனினும், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெறத் தவறினார்.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் 78 வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் ட்ரம்ப் ஆவார்.

https://athavannews.com/2024/1407512

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

ஜோ பைட‌ன் உட‌ன் ஒப்பிடுகையில்  ர‌ம் ந‌ல்ல‌ ஆரோக்கிய‌மாக‌ இருக்கிறார்

பைட‌ன் ஆள் இல்லாத‌ இட‌த்தி காற்றுக்கு கை காட்டுவ‌து

கீழ‌ விழுவ‌து.....................பைட‌னின் காமெடிக‌ள் நிறைய‌ இருக்கு..............ர‌ம் சொன்ன‌து போல் உல‌க‌ம் அமைதிய‌ நோக்கி ப‌ய‌ணிக்க‌ட்டும்......................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.

ஒரு தமிழ் பெண்  அமெரிக்கா ஐனதிபதி  தேர்தலில்  223  இடங்களை கைப்பற்றியது பாராட்டுக்குரியவர் வாழ்த்துக்கள் 

எலான். மார்க் இல்லை என்றால்,.  கமலா வென்று இருப்பார்   அமெரிக்கர்களுக்கு   இரண்டு தெரிவு தான்   மூன்றாவதுக்கு வாய்ப்புகள் இல்லை இவர்கள் 

இலங்கை  ஜேர்மனி தேர்தல் முறைகளை படிக்க வேண்டும்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் வெற்றிக்கு காரணமான மாகாணங்கள் எவை? முழு விவரம்

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டனை உள்ளடக்கிய கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகள் வெளியாகிவிட்டன.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுவிட்டார். எந்த மாகாணத்தில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதைப் பார்க்கலாம்.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் டிரம்ப் வென்ற மாகாணங்கள் என்னென்ன?

மான்டனா - 4

வட டகோட்டா - 3

தெற்கு டகோட்டா - 3

வியோமிங் - 3

உட்டா - 6

ஒக்லஹாமா - 7

டெக்சாஸ் - 40

அர்கான்சஸ் - 6

மிஸோரி - 10

லூசியானா - 8

மிஸிஸிப்பி - 6

அலபாமா - 9

புளோரிடா - 30

தெற்கு கரோலினா - 9

டென்னஸி - 11

கென்டக்கி - 8

இண்டியானா - 11

ஒஹையோ - 17

மேற்கு விர்ஜீனியா - 4

இடாஹோ - 4

அயோவா - 6

வடக்கு கரோலினா - 16

விஸ்கான்சின் - 10

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் வென்ற மாகாணங்கள் என்னென்ன?

கலிபோர்னியா - 54

கொலராடோ - 10

இல்லினாய்ஸ் - 19

நியூயார்க் - 28

மாசசூசெட்ஸ் - 11

டெலவர் - 3

மேரிலேண்ட் - 10

கொலம்பியா மாவட்டம் (வாஷிங்டன் டி.சி) - 3

ரோட் ஐலேண்ட்- 4

வெர்மான்ட் - 3

ஒரேகான் - 8

வாஷிங்டன் - 12

ஹவாய் - 4

விர்ஜீனியா - 13

நியூஜெர்சி - 14

முடிவைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?

முடிவைத் தீர்மானிக்கும் 7 மாகாணங்களிலும் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் ஜார்ஜியாவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசோனா - 11

நெவேடா - 6

விஸ்கான்ஸின் - 10 - டிரம்ப்

மிச்சிகன் - 11

பென்சில்வேனியா - 19 - டிரம்ப்

ஜார்ஜியா - 16 - டிரம்ப்

வடக்கு கரோலினா - 16 - டிரம்ப்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ckgv30p42rno

அமெரிக்காவில் அதிக‌ ம‌க்க‌ள் வாழும் மானில‌ம் க‌லிபோனியா அங்கு க‌ம‌லா ஹ‌ரிஷ் வென்று இருக்கிறா வ‌வ்🫡👍....................................

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கணிப்பு ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?🙂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

கருத்து கணிப்பு ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?🙂

எல்லாம்.... பம்மாத்து. நேரம் மினைக்கெட்ட வேலை.
யாரோ ஒரு முதலாளியின் ஆசையை...  பத்திரிகை நிறுவனம், மக்கள் மேல் திணித்து மக்களை குழப்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

கருத்து கணிப்பு ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?🙂

எலான். மார்க் பற்றியும் அவர் மனைவி சீனா பெண்மணி ஒரு இந்தியா பெண் அமெரிக்கா ஐனதிபதி ஆவதை விரும்பி இருக்க மாட்டார் என்பதை கருத்தில் எடுக்கவில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள்.

கமலா கரீசின் தோல்விக்கு பைடனும் குடிவரவில் திடமான திட்டமில்லாததாலும் பெண்ணாக இருந்ததாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

மிகப்பெரிய வெற்றி செனட்சபையும் காங்கிரஸ்சபையும் ரம்பின் கைக்குள்.

அடுத்த 4 வருடங்களுக்கு ஐனநாயககட்சி பல்லு புடுங்கிய பாம்பு.

பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட ரம் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் சிச்சயம் உள்ளக்கு போயிருப்பார்.

கமலா வந்தால் ஒரு பழைய ஜனாதிபதியை சிறையில் போட விரும்பாமல் மன்னிப்புக் கொடுக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது.

அடுத்த 4 வருடத்துக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அது முடிய பிரச்சனை வரலாம்.

அதற்காக தனக்கு தானே மன்னிப்புக் கொடுக்க முடியுமா தெரியவில்லை?

அப்படி முடியாதென்றால் 4வது வருட கடைசியில் ராஜினாமா செய்து விட்டு உபதலைவர் ஜனாதிபதியாக வந்து அவர் மூலமாக மன்னிப்பு பெறலாம்.

இங்கு ரம்புக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த @வாலி@குமாரசாமி போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

43 minutes ago, nunavilan said:

கருத்து கணிப்பு ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தத் தடவை  Fox news தவிர மற்றைய ஊடகங்கள் கடைசிவரை சரியான கணிப்பை சொல்ல முடியாமலே இருந்தன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.