Jump to content

கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி  

இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

https://tamilwin.com/article/tamil-iyyar-fell-off-in-toronto-in-tamil-event-1731068969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள்... முகம் நிலத்தில் பட, மிகப்  பலமாக  விழுந்துள்ளார்.
விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏
மேலே... உள்ள காணொளியில், குருக்கள் விழுந்தது  கடினமான  கான்கிரீட்  தரை போலுள்ளது. 

சில வருடங்களுக்கு முன், இங்கு ஒரு கோவில்... தேர்த் திருவிழாவில், 
தூக்குக் காவடி எடுத்த போது... அளவுக்கு மீறிய  ஆட்டத்தால்,
தூக்குக் காவடி முறிந்து... விபத்துக்குள்ளானது.
அதன் பின்...  தூக்குக் காவடிக்கு, காவல்துறையினர் தடை விதித்து விட்டார்கள்.

நம்மவர்கள்.... ஆர்வக் கோளாறில் எல்லா இடமும்,  எல்லாம் செய்ய வெளிக்கிடுவார்கள்.
ஆனால்... பாதுகாப்பைப் பற்றி அறவே சித்திக்காமல், சொதப்பி விடுவார்கள்.
யாராவது புத்தி சொல்லப் போனாலும், காது கொடுத்து கேட்கும் குணம் அறவே இல்லை.
எல்லாம்... தமக்குத் தெரியும் என்ற மாதிரி நடந்து கொள்ளும் கூடாத பழக்கம் பலரிடம்  உள்ளது.

Edited by தமிழ் சிறி
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

குருக்கள்... முகம் நிலத்தில் பட, மிகப்  பலமாக நிலத்தில் விழுந்துள்ளார்.
விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.
மேலே... உள்ள காணொளியில், குருக்கள் விழுந்தது  கடினமான  கான்கிரீட்  தரை போலுள்ளது. 

சில வருடங்களுக்கு முன் தேர்த்திருவிழாவின் போது  இங்கு ஒரு கோவிலில்,
தூக்குக் காவடி எடுத்த போது... அளவுக்கு மீறிய ஆட்டத்தால்,
தூக்குக் காவடி முறிந்து விபத்துக்குள்ளானது.
அதன் பின்...  தூக்குக் காவடிக்கு தடை விதித்து விட்டார்கள்.

நம்மவர்கள்.... ஆர்வக் கோளாறில் எல்லா இடமும்,  எல்லாம் செய்ய வெளிக்கிடுவார்கள்.
ஆனால்... பாதுகாப்பைப் பற்றி அறவே சித்திக்காமல், சொதப்பி விடுவார்கள்.
யாராவது புத்தி சொல்லப் போனாலும், காது கொடுத்து கேட்கும் குணம் அறவே இல்லை.
எல்லாம்... தமக்குத் தெரியும் என்ற மாதிரி நடந்து கொள்ளும் கூடாத பழக்கம் பலரிடம்  உள்ளது.

இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன? 

கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா? 

இருந்தால் அது என்ன? 

அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார். 

மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன. 

Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

மேலாடையுடன் பல்லக்கு தூக்க விட மாட்டார்கள்.
அது ஒரு சமய சம்பிரதாயம். அதற்கான காரணத்தை எனக்கு சொல்லத்  தெரியவில்லை.
களத்தில்  வேறு யாருக்காவது தெரிந்திருக்கலாம்.

ஆனால்.... ஒரு சிலரின் சமயச் சடங்கு நிகழ்வை.. 
அரை நிர்வாணம் என்று கொச்சைப் படுத்துவது ஏற்புடையது அல்ல. 

அப்புறம்... நானும், உங்களுடைய பாதிரியார்.. ஏன் பாவாடையுடன் நின்று பூசை செய்கிறார் என்றும், இயேசுநாதர் ஏன்... முக்கால் நிர்வாணமாய் சிலுவையில் தொங்குகிறார் என்றும்  கேட்க வேண்டி வரும். 😂
"கண்ணாடி வீட்டில் இருந்து, கல்லு எறியக் கூடாது" கபிதன்.   🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அவசர பதட்டத்தில் முருகன் இவரைச் சூரன் எனத் தவறுதலாக நினைத்து  ஆள்மாறாட்டத்தில் தாக்கிவிட்டார் போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிருக்கு உட்புறத்தில் நடைபெற்ற சூரன்போருக்கு..கலர்புகைஅள்வுக்கு அதிகமாகவும் பாவித்தார்கள்...கட்டுப்பாடற்ற கோவில்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன? 

கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா? 

இருந்தால் அது என்ன? 

இந்த கேள்வி விடை தெரியாது, ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்காலத்தில் ஆதிக்க சாதியினர் அடக்குமுறைக்காளாகும் சாதி பெண்கள் மேற்சட்டை அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் (உண்மைத்தன்மை தெரியாது) அது போல ஏதாவது காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேலாடையுடன் பல்லக்கு தூக்க விட மாட்டார்கள்.
அது ஒரு சமய சம்பிரதாயம். அதற்கான காரணத்தை எனக்கு சொல்லத்  தெரியவில்லை.
களத்தில்  வேறு யாருக்காவது தெரிந்திருக்கலாம்.

ஆனால்.... ஒரு சிலரின் சமயச் சடங்கு நிகழ்வை.. 
அரை நிர்வாணம் என்று கொச்சைப் படுத்துவது ஏற்புடையது அல்ல. 

அப்புறம்... நானும், உங்களுடைய பாதிரியார்.. ஏன் பாவாடையுடன் நின்று பூசை செய்கிறார் என்றும், இயேசுநாதர் ஏன்... முக்கால் நிர்வாணமாய் சிலுவையில் தொங்குகிறார் என்றும்  கேட்க வேண்டி வரும். 😂
"கண்ணாடி வீட்டில் இருந்து, கல்லு எறியக் கூடாது" கபிதன்.   🤣

மிகத் தெளிவான சிந்தனையுடன் எழுதினேன்.  (இழிவுபடுத்தும்  எண்ணமில்லை) ஊரில் மேலாடையின்றித் தோன்றுவதை ஒருவரும் பொருட்படுத்துவதில்லை. நானும் மேலாடையைக் கழற்றியபின்னரே  நல்லூர் கோவிலுக்குள் சென்றேன். 

அங்கே அது சம்பிரதாயம். மேற்கு நாடுகளில்,!(இந்தக் கால நிலையில் 🤨),  நிகழ்வுகளில் மேலாடையின்றித் தோன்றுவது அரை நிர்வாணம்தானே? 

மேலுடம்பை மறைக்க முடியாதா? 

உங்கள் வீட்டு நிகழ்வுகளில் ஐயரை அரை நிர்வாணமாக நிற்காமல்  மேலாடையுடன் பூசை செய்யும்படி கோர முடியாதா? 

(தாங்கள் தாராளமாகக் கல்லெறியலாம். இலங்கைக்   கிறீஸ்தவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. 😁)

3 hours ago, vasee said:

இந்த கேள்வி விடை தெரியாது, ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்காலத்தில் ஆதிக்க சாதியினர் அடக்குமுறைக்காளாகும் சாதி பெண்கள் மேற்சட்டை அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் (உண்மைத்தன்மை தெரியாது) அது போல ஏதாவது காரணமாக இருக்கலாம்.

குண்டி காட்டி மானியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ஏன் மேலாடை அணியக் கூடாதென்ற வழக்கத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. அவை எதுவுமே இன்றைய உலகத்திற்கு பொருந்துபவை அல்ல மற்றும் அறிவியல் காரணம் என்று கூறப்பட்டுள்ள ஒன்று மிகத் தவறான ஒரு வகை விஞ்ஞான விளக்கம்.

ஆனால், ஒருவர் இன்னொருவர் மீதோ அல்லது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர் மீதோ சேறடிப்பதற்காகவே இந்த விளக்கங்கள் பயன்படும் என்றால் அந்தக் காரணங்களை இங்கு எழுதாமல் விடுதலே நலம் என்று நினைக்கின்றேன்.

இதே போல உலகம் முழுவதும் நடைமுறைகள் உண்டு.  மொத்த மனித குலமுமே ஆராய்ந்து, அறிந்து கைவிட வேண்டிய வழக்கங்கள் இன்னும் நிறையவே எங்கும் உண்டு. இவை காலப்போக்கில் கைவிடப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

காரணங்களைக் கூறுங்கள். அதில் பிழையேதும் இல்லை. 

""பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினனானே""

பவணந்தி முனிவர் - நன்னூல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

மிகத் தெளிவான சிந்தனையுடன் எழுதினேன்.  (இழிவுபடுத்தும்  எண்ணமில்லை) ஊரில் மேலாடையின்றித் தோன்றுவதை ஒருவரும் பொருட்படுத்துவதில்லை. நானும் மேலாடையைக் கழற்றியபின்னரே  நல்லூர் கோவிலுக்குள் சென்றேன். 

அங்கே அது சம்பிரதாயம். மேற்கு நாடுகளில்,!(இந்தக் கால நிலையில் 🤨),  நிகழ்வுகளில் மேலாடையின்றித் தோன்றுவது அரை நிர்வாணம்தானே? 

மேலுடம்பை மறைக்க முடியாதா? 

உங்கள் வீட்டு நிகழ்வுகளில் ஐயரை அரை நிர்வாணமாக நிற்காமல்  மேலாடையுடன் பூசை செய்யும்படி கோர முடியாதா? 

(தாங்கள் தாராளமாகக் கல்லெறியலாம். இலங்கைக்   கிறீஸ்தவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. 😁)

குண்டி காட்டி மானியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

கேல்விப்படவில்லை! ஆனால் பெயரே ஒரு மாதிரியாக இருப்பதலால் தெரிந்து கொள்ளவிரும்வில்லை😁.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

கேல்விப்படவில்லை! ஆனால் பெயரே ஒரு மாதிரியாக இருப்பதலால் தெரிந்து கொள்ளவிரும்வில்லை😁.

இது வரலாறு. தென்னிந்தியாவில் இடம்பெற்றது. இதில் ஆபாசமாக எதுவும் இல்லை. துணிந்து தேடலாம். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/1497497990951668

இது சாவகச்சேரி சூரன்போர்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன? 

கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா? 

இருந்தால் அது என்ன? 

அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார். 

மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன. 

Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 

லுசுதனமாய் இங்கு யாழிலும் மத வேற்றுமைகளை புதைக்க வேண்டாம்  இதுதான் உங்களின் கடைசியான கருத்துக்கள் ஆக இருக்க நான் விரும்புகிறேன் .

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.