மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு
61 members have voted
-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஒம் ஒம். அதேவேளை அனுர தேசியக்கட்சி ஆனால் சைக்கிள் மாநிலக்கட்சி அனுரவுக்கு கிடைக்கும் வாக்குகள். தேசிய மட்டத்தில். மேலதிக சீட்டுகளைப்பெற உதவும் சைக்கிள் தேசியமட்டத்தில். 5% க்கு குறைய. வரலாம். வாக்குகள் கூடவும் வாய்ப்புகள் இல்லை இது வடக்கு கிழக்கு இரண்டும் சேர்ந்த போட்டி அல்லவா??
-
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1978 இல் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை ஆகும். இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறுகின்றது. இலங்கையில், நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம் முறைப்படியே நடைபெறுகின்றன. தொடக்கத்தில் இலங்கையில் இது ஒரு மூடிய கட்சிப் பட்டியல் முறையாகவே அறிமுகப்படுத்தபட்டது எனினும், பின்னர் தேர்தல்கள் எதுவும் நடைபெற முன்னரே உடனடியாக இது ஒரு திறந்த கட்சிப் பட்டியல் முறையாக மாற்றப்பட்டது. தேர்தல் மாவட்டங்கள் [தொகு] இலங்கையில் தேர்தல்கள் தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைப் பெறுகின்றன. நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 20 தேர்தல் மாவட்டங்கள் நாட்டின் நிர்வாக மாவட்ட எல்லைகளையே தங்கள் எல்லைகளாகவும் கொண்டுள்ளன. ஏனைய இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னித் தேர்தல் மாவட்டம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் தம்முள் அடக்கியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபைகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒரே அலகாகக் கொள்ளப்படுகின்றது. வேட்பாளர்கள் இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேச்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் தாங்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களுடன் தங்கள் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும். வாக்களிப்பு முறைமை இலங்கையில் வாக்களிப்பு திறந்த கட்சிப் பட்டியல் முறையில் நடைபெறுவதால், கட்சியிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் ஒழுங்குவரிசையைக் கட்சிகள் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு வாக்காளரும், தாங்கள் விரும்பிய கட்சி அல்லது குழுவுக்கும், அக் கட்சி அல்லது குழுவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். இவ்வாறு தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களினதும் ஒழுங்கு வரிசை தீர்மானிக்கப்படுகின்றது. கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளைத் தீர்மானித்தல் முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார். உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும். அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக் குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் ஈவு, ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள். முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற் சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும். உறுப்பினர் தெரிவு ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு கட்சி அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அக்கட்சி அல்லது குழுவில் கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன. தேர்தல் மாவட்டம்-X உறுப்பினர் தொகை - 7 அளிக்கப்பட்ட வாக்குகள் - 288,705 கட்சி பெற்ற வாக்குகள் வீதம் கட்சி-A 111747 38.71% கட்சி-B 76563 26,52% கட்சி-C 55533 19.24% கட்சி-D 42121 14.59% சுயேச்சை-1 1611 0.56% சுயேச்சை-2 1130 0.39% மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A கூடிய வாக்குகள் பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய போனஸ் இடம் கட்சி-A க்கு வழங்கப்படும். இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன. அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும். 288,705 - 1,611 - 1,130 = 285,964 வாக்குகள் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7, ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மிகுதி = 6. எனவே: ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகள் = 285,964 / 6 = 47,661 கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க: கட்சி - ஈவு மிச்சம் கட்சி-A 111,747 / 47,661 2 16,425 கட்சி-B 76,563 / 47,661 1 28,902 கட்சி-C 55,533 / 47,661 1 7,872 கட்சி-D 42,121 / 47,661 0 42,121 இப்பொழுது கட்சி நிலைவரம்: கட்சி போனஸ் சுற்று மொத்தம் 1 2 கட்சி-A 1 2 - 3 கட்சி-B 0 1 - 1 கட்சி-C 0 0 - 1 கட்சி-D 0 0 - 0 மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும், கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன. இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும். முடிவில் கட்சி நிலைவரம்: கட்சி போனஸ் சுற்று மொத்தம் 1 2 கட்சி-A 1 2 0 3 கட்சி-B 0 1 1 2 கட்சி-C 0 1 0 1 கட்சி-D 0 0 1 1 https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_விகிதாசாரப்_பிரதிநிதித்துவத்_தேர்தல்_முறை
-
5% விதத்துக்கு குறைவான வாக்குகளை நீக்கியபின்பு வரும் 490,000 வாக்குகளை 5 இனால் பிரிக்கும் போது ( யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் போனஸ் தொகுதி போக மீதி 5 இடங்கள்) ஒரு வேட்பாளருக்கு தேவையான வாக்குகள் 98,000 . இவ்வாக்குகளுக்கு குறைவான கட்சிகள் நீக்கப்படும் என்று ஒரு இணையத்தில் பார்த்தேன் ( அர்ஜீனாவின் கட்சி) . ஆனால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவாக்குகளுக்கு குறைவான கட்சிகளை நீக்கவில்லை. அத்தேர்தலில் டக்ளஸின் கட்சி குறைவான வாக்குகளை பெற்று 1 இடம் பெற்றது. 1) குறைவான வாக்குகளை நீக்கினால் இப்பொழுது சைக்கிள் போனஸ் + 98000 = 2 இடங்கள் அனுரா 1 இடம் வீடு 1 இடம். மிகுதியாகஇருக்கும் வாக்குகள் சைக்கிள் 150000 - 98000= 52000 அனுரா 42000 வீடு 32000 மிகுதி வாக்குகளில் மேலே குறிப்பிட்ட 3 கட்சிகளும் 98000க்கு குறைவாகவே இருப்பதினால் மிகுதியான இரண்டு இடங்களுக்கு சைக்கிள் ,அனுரா கட்சி ஒவ்வொரு இடங்களை பிடிக்கும். சைக்கிள் 3,இடங்கள் அனுரா 2 இடங்கள் வீடு 1 இடம் 2) குறைவான வாக்குகளை நீக்காவிட்டால் (2004 தேர்தல் போல) சைக்கிள் 3 இடம் அனுரா 1 இடம் வீடு 1 இடம் ஊசி 1 இடம்
-
By விளங்க நினைப்பவன் · Posted
இந்திய எல்லையில் நாம் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கே வந்த இலங்கை கடற்படை எம்மை தாக்கி... இலங்கை கடற் கொள்ளையர் எம்மை தாக்கி...🤣 அங்கே சீமான் கட்சி, திமுக, அதிமுக, மோடி கட்சி எல்லாமே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கடற்கொள்ளை செய்வதற்கே தீவிர ஆதரவு. இலங்கை தமிழ் மீனவர்கள் பாவங்கள் என்றோ குறைந்தது எல்லை தாண்டி போகாதீர்கள் அது குற்றம் என்றோ ஒரு போதுமே சொல்வது இல்லை
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts