Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு 61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

Poll closed on 11/14/24 at 11:59

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

மனது வைத்து எந்த தேர்தல் கட்சிகளிலும் துளிகூட நாட்டமில்லை.

தமிழ்சிறியின்  அழைப்புக்காகவும் கோஷானின் கருத்துக்கணிப்புக்காகவும் மதிப்பு கொடுத்து ஒரு வாக்கை தட்டிவிடலாம் என்றிருக்கிறேன்.

இந்த வாக்களிப்பு தெரிவில் தேர்தலை புறக்கணிக்கிறோம் அல்லது இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை  என்றொரு தெரிவை ஏன் நீங்கள் வைக்கவில்லை கோஷான்? ஏனெனில் எந்த தேர்தலிலும் அந்த முடிவை எடுக்கும் கணிசமான பிரிவினர் உண்டு.

ஓம் வைத்திருக்க வேண்டும். அவசர கதியில் அள்ளி தெளித்த கோலம். மறந்து விட்டேன்🤯

  • Replies 223
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

  • ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

  • ரசோதரன்
    ரசோதரன்

    என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிட்டத்தட்ட 9 மணித்தியாலத்துக்கு முதல் வாக்களித்து விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

தகவலுக்கு நன்றி. ஒரு கட்சியை தெரிவு செய்துவிட்டு விரும்பினால் வேறு வேறு கட்சிகளில் 3 பேருக்கு வாக்களிக்லாம் என்று தவறாக நினைத்து விட்டேன்..அர்ச்சுனா கட்சியில் அர்ச்சுனாவுக்கு   இல்லை வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதால், பல கட்சிகளை/குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு புள்ளடி போடுவது நிராகரிக்கப்பட்ட வாக்குகளை அதிகரிக்கச் செய்யும்!

@goshan_che, மாம்பழக் கட்சி தெரிவில் உள்ளதா? எனது இரகசிய வாக்கு அவர்களுக்குத்தான்😆

 

  • கருத்துக்கள உறவுகள்

அரச பக்கமும் இல்லாமல்,. தமிழர் பாரம்பரிய கட்சிகளும் இல்லாமல் சுயேட்சை பக்கம் சார்ந்து மருத்துவர் அர்ச்சுனாவுக்கு வாக்களித்துள்ளேன், இது விரும்பி போட்டதல்ல வேறு தெரிவுகள் இல்லாமல் போட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதால், பல கட்சிகளை/குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு புள்ளடி போடுவது நிராகரிக்கப்பட்ட வாக்குகளை அதிகரிக்கச் செய்யும்!

@goshan_che, மாம்பழக் கட்சி தெரிவில் உள்ளதா? எனது இரகசிய வாக்கு அவர்களுக்குத்தான்😆

 

ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே…..

தவராசா, தவறாக நினைக்கப்போறார்.

மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும்.

விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன்.

இப்போதைக்கு 

மாம்பழம் 1 (கிருபன் ஜி)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதுவித தளம்பலும் இல்லாமல் ஒரு ஆண்மகனுக்கு வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன் . .......யாருக்கும் சொல்ல மாட்டேன் ......போய் ஒரு அருச்சனை செய்யவேண்டும் . ......!  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனாவின் கட்சிக்கு - அருச்சுனாவுக்கு அல்ல, வாக்களித்துள்ளேன்.

இதுவரை எந்த இலங்கை தேர்தலிலும் நான் வாக்களித்தில்லை.

இடாப்பில் பெயர் பதியும் வயது வந்துவிட்டிருந்தாலும், பதிய முன்னமே நாட்டை விட்டு கிளம்பியாகிவிட்டது.

ஆகவே மானசீக தேர்தல் எனிலும் இலங்கைக்கு இது என் முதல் தேர்தல்😎.

அருச்சுனா குழுவை தமிழ் தேசிய வழி நிற்பார்கள், திம்பு அடிப்படையில், இப்போதைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை பகிர கோரும் அரசியலை வினைத்திறனுடன் முன்னெடுப்பார்கள் என நம்பி வாக்களிக்கிறேன்.

நீண்டகால நோக்கில் ஏனைய சகல தமிழ் தேசிய கட்சிகளிடம்பிருந்தும் இவர்கள் தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பார்கள் என்பதற்கு வாய்பிருப்பதாக நினைக்கிறேன்.

இதை செய்ய முடியாவிடினும், புதியவர்கள் மக்களுக்கான உடனடி தேவை அரசியலையாவது வினைதிறனுடன் மேற்கொள்ள வாய்புள்ளது.

என் கை என்பிபி க்கு மேலால் ஊசலாடியது உண்மை.

ஆனால் - ஏனோ முடியவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே…..

தவராசா, தவறாக நினைக்கப்போறார்.

மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும்.

விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன்.

இப்போதைக்கு 

மாம்பழம் 1 (கிருபன் ஜி)

TamilCNN  தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் Tamil National Green Organization

அப்ப.... ஏற்கெனவே வாக்காளித்தவர்கள்,
திரும்ப மாம்பழத்தை தெரிவு செய்தால்... இரண்டு வாக்கு போட்ட மாதிரியாகி விடுமே. 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலம்,பலம் தமிழர்களின் பலம் பொன்னம்பலம் 🦾 :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பலம்,பலம் தமிழர்களின் பலம் பொன்னம்பலம் 🦾 :cool:

அட.... இது, செமயான தேர்தல் கோஷமாக இருக்கே. 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அட.... இது, செமயான தேர்தல் கோஷமாக இருக்கே. 😂 🤣

கிருபன் ஜி சொல்றார்..

பழம்…பழம்… தமிழர்களின் முக்கனி மாம்பழமாம்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அட.... இது, செமயான தேர்தல் கோஷமாக இருக்கே. 😂 🤣

எனது பொன்னான வாக்கை மண்ணானவர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் பழம் பலத்திற்கு வாக்களித்துள்ளேன். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப.... ஏற்கெனவே வாக்காளித்தவர்கள்,
திரும்ப மாம்பழத்தை தெரிவு செய்தால்... இரண்டு வாக்கு போட்ட மாதிரியாகி விடுமே. 🙂

யாழ் உறுப்பினர்களின் தார்மீக வலு வை நம்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கிருபன் ஜி சொல்றார்..

பழம்…பழம்… தமிழர்களின் முக்கனி மாம்பழமாம்🤣

ம் 
ம் 
லகர, ழகர... நூலிழை வித்தியாசம். 😂
மற்றும்படி... இருவருக்கும் கொள்கை ஒன்றுதான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் குறிப்பிட்டு போடும் அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாது.அவர்களின் செயல்பாடுகள். பேச்சுவார்த்தைகளில் கூட அறவே உடன்பாடு கிடையாது..வெறும் ஊசி மட்டும் தெரிவு..💉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம்  
இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.

அட இதை கவனிக்காமல் நானும் வாக்களித்தவர் பெயரை சொல்லிவிட்டேன்,

ஆனால் ஒன்று புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்கணிப்பு  கூட்டு சேர்ந்து செயல்படுவதால் எந்தவிதத்திலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது அதனால் பொதுவெளியில் தெரிவிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் எமது தெரிவுகள் எந்த விதத்திலும் தாயக தேர்தலில் செல்வாக்கு செலுத்த போவதில்லை, இது உண்மையான தேர்தலில் வாக்களிக்காத  வெறும் தனிமனித அபிப்பிராயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

அட இதை கவனிக்காமல் நானும் வாக்களித்தவர் பெயரை சொல்லிவிட்டேன்,

ஆனால் ஒன்று புலம்பெயர்ந்தவர்களின் கருத்துக்கணிப்பு  கூட்டு சேர்ந்து செயல்படுவதால் எந்தவிதத்திலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது அதனால் பொதுவெளியில் தெரிவிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் எமது தெரிவுகள் எந்த விதத்திலும் தாயக தேர்தலில் செல்வாக்கு செலுத்த போவதில்லை, இது உண்மையான தேர்தலில் வாக்களிக்காத  வெறும் தனிமனித அபிப்பிராயங்கள்.

நீங்கள் சொல்வது சரி வளவன்.
புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க  இந்தக்  கணிப்பு உதவும் என்பது உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

என் கை என்பிபி க்கு மேலால் ஊசலாடியது உண்மை.

ஆனால் - ஏனோ முடியவில்லை.

 

45 minutes ago, குமாரசாமி said:

எனது பொன்னான வாக்கை மண்ணானவர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் பழம் பலத்திற்கு வாக்களித்துள்ளேன். 🙂

எனது கையும்... அனுர கட்சிக்கு வாக்களிக்க ஊசலாடினாலும்.
கடைசி நேரத்தில் பொன்னம்பலத்திற்கு வாக்களித்தேன்.

என்ன இருந்தாலும்... ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால், 
முதலில் வந்து, மக்களுடன்  நிற்பது கஜேந்திரன்களே...

ஆனால்... இம்முறை பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து,  
அனுர கட்சி சார்பில் தமிழர்கள் இருவராவது செல்ல வேண்டும் என்பது எனது உள்ளூர விருப்பம்.

அந்த விதத்தில்  சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க மனம் விரும்பவில்லை.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கக் கூடாதே...

ஊரில் இருந்த காலத்தில்... தமிழரசுக் கட்சிக்கு பிரச்சாரம், கூட்ட ஒழுங்குகள் என்று... 
தீயாய் வேலை செய்து இருக்கின்றேன். 
என்று... அந்தக் கட்சி சம்பந்தன், சுமந்திரன் என்று கைமாறியதோ... 
அதற்குப் பின் தமிழரசுக் கட்சியை கண்ணிலும் காட்டக் கூடாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க  இந்தக்  கணிப்பு உதவும் என்பது உண்மை. 

யாழ்கள உறுப்பினர் பெரும்பான்மை எண்ணவோட்டம் = பும்பெயர் மக்கள் எண்ணவோட்டம் என்ற நிலை முன்னர் இருந்தது

ஆனால் இப்போ புலம்பெயர் முதல் சந்ததி கூட பலர் தேர்தல் தேதி கூட தெரியாத அளவுக்கு ஊர் விடயங்களில் தொடர்பிழந்து போய்விட்னர்.

ஆனா வாக்குப்போடுங்கள் என கேட்டால் சைக்கில் அல்லது வீட்டுக்கு போடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பற்றித் தெரியும்தானே!  நாங்கள் பரம்பரை பரம்பரை தமிழரசுக்காரர்!

“புலி பசித்தாலும் பகரவீ அருந்தாது!” 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன்.

இப்போதைக்கு 

மாம்பழம் 1 (கிருபன் ஜி)

எனது வாக்கு மணிக்கு!

எந்த மணி என்று கேட்கக்கூடாது🤪

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியடிக்கப் போன 4 பேர் இன்னும் பாருக்குள்ளேயே இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, தமிழ் சிறி said:

 

வாக்களிக்க முன் எவருக்கும் முடிவு தெரியாது புலவர்.
வாக்களித்த பின்பே முடிவை காட்டும்.

ஆனால்... மேலே ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம்  
இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.

இதை ஆமோதிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தண்ணியடிக்கப் போன 4 பேர் இன்னும் பாருக்குள்ளேயே இருக்கினம்.

May be an image of 1 person and text

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையன் அல்ல.

இருந்தாலும், இதிலாவது 'தமிழர்கள் நல்லா இருக்கட்டுமே..!' என்ற ஆர்வத்தில் வாக்களித்துள்ளேன்.😌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.