Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, alvayan said:

கோவிகாதையுங்கோ...அங்கை என்ன டிஸ்பென்சரி போடவோ..

நான் ஏன்னண்ணை கோவிக்கப் போறன்! தற்போது அருச்சுனா ஒரு கோமாளிபோல தெரியலாம். ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்க்கலாம். அதோட அந்தப் பிள்ளை கவுசல்யாவும் ஆள் ஓக்கே.

4 minutes ago, alvayan said:

அப்ப உங்கடை முதல் குண்டு வெடிச்சிட்டுதா வாலி சார்..

இன்னும் வெடிக்கேல்லை. சுமந்திரன் எம்பியா பதவியேற்கும்போது பிறகு கள்ளா கள்ளா எண்டு கத்தக்கூடாது!😂

  • Replies 540
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

வாத்தியார்

இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில்,  அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, கந்தப்பு said:

வன்னி மாவட்டத்தில் அனுரா கட்சி2 இடம் , சஜித் 1, வீடு 1, சங்கு 1, கங்காரு 1 இடங்கள் கிடைத்திருக்கிறது

சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, வாலி said:

 

இன்னும் வெடிக்கேல்லை. சுமந்திரன் எம்பியா பதவியேற்கும்போது பிறகு கள்ளா கள்ளா எண்டு கத்தக்கூடாது!😂

அங்கை எல்லா யூடியூப்பரும் சுமந்திரன் வெளியில் என்று கத்துகினம் நீங்க என்னடாவென்றால் ..வேறுமாதிரி ..

5 minutes ago, கந்தப்பு said:

சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது

அய்யா...சனம் நம்ம அரசியல்வாதிகளில் வெறுப்பில் இருக்கினம் ...இந்த கட்சிகளின் பெயரில் எந்த மாடு வந்தாலும் அடிதான் விழும்...நம்மை நம்பி உயிரிழந்தோரினை மனதிடையிருத்தி மீதி காலத்தைக் கழிப்போம்

Edited by alvayan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்திய...ஜெயசங்கர் பெட்டி கட்டுறாராம்...அனுரவிடம் வாறதுக்கு

அனுராவை கெதியிலை தீர்வை தரச் சொல்லுங்கோ...இங்கை கனடாவிலயும் நமக்கு பிரச்சினை வரும்போலை கிடக்கு..

கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, alvayan said:

இந்திய...ஜெயசங்கர் பெட்டி கட்டுறாராம்...அனுரவிடம் வாறதுக்கு

விமானத்தை இறங்க விடாமல் செய்தாலும் செய்வார் தோழர் அனுரா...
இந்திவின் துணை தூதரகத்தை வெளியேற்றினாலும்  ஆச்சரியப்பட தேவையில்லை,,,,அனுராவின் யாழ் மாவட்ட தோழர்கள் இதற்காக உழைப்பார்கள்😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, putthan said:

விமானத்தை இறங்க விடாமல் செய்தாலும் செய்வார் தோழர் அனுரா...
இந்திவின் துணை தூதரகத்தை வெளியேற்றினாலும்  ஆச்சரியப்பட தேவையில்லை,,,,அனுராவின் யாழ் மாவட்ட தோழர்கள் இதற்காக உழைப்பார்கள்😅

என்ன புத்தரே நீங்களே தோழர் போட்டால்...நாம் எங்கைபோய் தலையை இடிப்பது..கனடாவிலும் வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்று மற்ற இந்தியன் சத்தம் போடுறான்..😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை
  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,842,223 (106 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,966,875 (28 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 493,359 (2 ஆசனம்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,287 (2 ஆசனம்)
  • இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) – 252,548 (3 ஆசனம்)
  • சர்வஜன அதிகாரம் (SB) - 177,954 - (0 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் - 917,989 (5 ஆசனம்)
 

தொகுதி ரீதியாக முதலில் அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள், பின்னர் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 15), மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது.

எனினும், மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார்.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு, வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம் என்கிறார் சிவராஜா.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,R.SIVARAJA

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய, “இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது, தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக, அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.

குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா.

சஜித், ரணில் கட்சிகள் பாரிய பின்னடைவு

நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தேசிய கட்சி ஒன்று முன்னிலை வகிக்கிறது.

அத்துடன், தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

 

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும்?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.

தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள்தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன.

குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.

இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, கந்தப்பு said:

சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது

large.IMG_7517.jpeg.bb76cd4b17fc2affcf54

  • Sad 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

இது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை!

 

நண்பனின் பதிவு ..

அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன். 😂

இதுதான் தற்போதய ட்ரென்ட் ஆக இருக்குமோ? கமலா காரிஸின் cloud storage விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, alvayan said:

என்ன புத்தரே நீங்களே தோழர் போட்டால்...நாம் எங்கைபோய் தலையை இடிப்பது..கனடாவிலும் வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்று மற்ற இந்தியன் சத்தம் போடுறான்..😁

அடுத்த வருடம் நாட்டுக்கு போக வேண்டி வரும் அதுதான்  இப்ப்வே தோழர் என ஐஸ் வைக்கிறேன்.😅... தமிழ் தேசிய கட்சிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழ் தேசியம் பேசாது ...ஒற்றுமையாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் ...என்.பி.பி யின் தமிழ் பா.உ க்கள் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது மக்களுக்கு ...காரணம் சிங்கள பா,உ க்களுக்கே பணம் இருக்குமோ தெரியவில்லை கிராமங்களை அபிவிருத்தி செய்ய ...கடந்த தேர்தலில் வன்னியிலிருந்து ஈ.பி.டி.பி பா,உ சென்றிருந்தார் அல்லவோ அதே போல இவர்களும் போய் அரசஇன் வரவுசெலவு திட்டத்துக்கு கை உயர்த்திவிட்டு ஆமா போட வேண்டியது தான் ...

டக்கிளஸ் 30 வ்ருடம் தாக்கு பிடித்தார் இந்த என்.பி.பி  பா.உ. கள் எவ்வளவு காலத்துக்கு என பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, alvayan said:

அங்கை எல்லா யூடியூப்பரும் சுமந்திரன் வெளியில் என்று கத்துகினம் நீங்க என்னடாவென்றால் ..வேறுமாதிரி ..

அய்யா...சனம் நம்ம அரசியல்வாதிகளில் வெறுப்பில் இருக்கினம் ...இந்த கட்சிகளின் பெயரில் எந்த மாடு வந்தாலும் அடிதான் விழும்...நம்மை நம்பி உயிரிழந்தோரினை மனதிடையிருத்தி மீதி காலத்தைக் கழிப்போம்

நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.  அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் .  அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை  

 

இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை .  வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம்.  

இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள்; தமிழரசு கட்சிக்கு 1 ஆசனம்

யாழ்.மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,

தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 63,327 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 27,986 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

சுயேட்சைக் குழு 17 -27,855 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

https://thinakkural.lk/article/312151

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கந்தப்பு said:

நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.  அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் .  அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை  

 

இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை .  வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம்.  

இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?

 

நன்றி தெளிவான விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, putthan said:

அடுத்த வருடம் நாட்டுக்கு போக வேண்டி வரும் அதுதான்  இப்ப்வே தோழர் என ஐஸ் வைக்கிறேன்.😅... தமிழ் தேசிய கட்சிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழ் தேசியம் பேசாது ...ஒற்றுமையாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் ...என்.பி.பி யின் தமிழ் பா.உ க்கள் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது மக்களுக்கு ...காரணம் சிங்கள பா,உ க்களுக்கே பணம் இருக்குமோ தெரியவில்லை கிராமங்களை அபிவிருத்தி செய்ய ...கடந்த தேர்தலில் வன்னியிலிருந்து ஈ.பி.டி.பி பா,உ சென்றிருந்தார் அல்லவோ அதே போல இவர்களும் போய் அரசஇன் வரவுசெலவு திட்டத்துக்கு கை உயர்த்திவிட்டு ஆமா போட வேண்டியது தான் ...

டக்கிளஸ் 30 வ்ருடம் தாக்கு பிடித்தார் இந்த என்.பி.பி  பா.உ. கள் எவ்வளவு காலத்துக்கு என பார்ப்போம் 

சொல்வது சரி...நான் தோழர் போட மாட்டேன்..எனென்றால் ஒருமாதம்தான் போய் வந்து ...மிக அவசர குடும்ப விசிட்டாக போய் வந்தேன்...இங்கு வந்தவுடன் கிடைத்தது இரண்டு  சோக முடிவுகள்...தேற்றிக்கொண்டோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பில் தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்கள்; தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய,

இலங்கை தமிழரசு கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

https://thinakkural.lk/article/312153

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கந்தப்பு said:

நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன்.  அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் .  அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை  

 

இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை .  வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம்.  

இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?

 

இங்கு யாழிலும் அனுர அலை சுனாமியாக அடிக்குது....உங்கள் விளக்கம்  தெளிவை ஏற்படுத்தியது...நன்றி...யாழில் சீசன் சுனாமி..அமைதியாய் நகர்வோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

latest-result.jpg

தற்போதைய தேர்தல் நிலை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏராளன் சார்..முக்கியம் வென்றவர்களின் பெயர்தான்...யாழ் /கிழக்கில்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, vasee said:

நன்றி தெளிவான விளக்கம்.

சுமந்திரன் மேல் கோபத்தில் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, alvayan said:

ஏராளன் சார்..முக்கியம் வென்றவர்களின் பெயர்தான்...யாழ் /கிழக்கில்...

உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்

15 NOV, 2024 | 09:55 AM
image
 

மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் 

இலங்கை தமிழரசுக் கட்சி 96,975  (3 ஆசனங்கள்)

தேசிய மக்கள் சக்தி 55,498 (1 ஆசனங்கள்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139  (1 ஆசனம்)

30.JPG

https://www.virakesari.lk/article/198850

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உத்தேச  இறுதி எண்ணிக்கை 

தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 158
ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 41
தமிழரசு கட்சி 8
புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 6
இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 3
மற்றவை 9

https://manthri.lk/en/BattleforBallotsGE2024

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, ஏராளன் said:

உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.

டாக்டரும் அவுட்டாகீ ..யாரோ மயூரன் உள்ளாமே அப்படியா

 

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:

உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.

இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை   ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால்.  உடனாடியாக.  அக்கட்சியின். தலைவர்  தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு  பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல்    இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை   ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால்.  உடனாடியாக.  அக்கட்சியின். தலைவர்  தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு  பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல்    இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை 

தலைவரே இல்லாத கட்சியிலையிருந்து யார் பதவி விலகிறது 

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாராளுமன்றத்திற்குத் தெரிவான  ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் இன்று காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார்.   https://thinakkural.lk/article/312161
    • மாற்றம் ஒன்றே மாறாதது. மக்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன். இலங்கை முழுவதும் ஒரே சிந்தனையாக ஊழல் ஒழிப்பு மற்றும் பழையவர்கள் அகற்றல் நடந்தேறி இருக்கிறது.  அநுராவிடம் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டதற்கும் மேலான பலத்துடன் பந்து கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொறுப்பு. இனி அவரது ஆட்டம். 
    • மட்டக்களப்பு மக்களின் மாறாத தமிழ்த் தேசியமும் அரசியல் அறிவும். கொலைகாரன் பிள்ளையான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றான். அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். திருகோணமலையில் இம்முறை தமிழ் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது. ஆனால் ஒருவர் வெற்றி பெற்றிருக்கின்றார். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் தமிழ் கட்சிகள்.
    • பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு ஆறுமுகன் புவியரசன் பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. இதன்படி  தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட  சமந்த வித்தியாரத்ன - 208,547 ,  கிட்ணன் செல்வராஜ்- 60,041, அம்பிகா சாமுவேல்- 58,201, ரவிந்து அருண பண்டார - 50,822, சுதத் பலகல்ல- 47,980, தினிது சமன்குமார- 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட நயன பிரியங்கர வாசலதிலக்க- 35518, சமிந்த விஜயசிறி - 29791 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.  புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சாமர சம்பத் தசாநாயக்க -19359 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் , அம்பிகா சாமுவேல் ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக  தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.    https://www.tamilmirror.lk/மலையகம்/பதுளையில்-இரண்டு-தமிழர்கள்-தெரிவு/76-347254
    • மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள் ரீ.எல்.ஜவ்பர்கான்    நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு  அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத்  தழுவியுள்ளனர்  இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்  ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/மட்டக்களப்பில்-வெற்றி-தோல்வியடைந்த-புள்ளிகள்/175-347252
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.