Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, island said:

அதில் நான்கு பெண்கள் தமிழ் பெண்கள். வரட்டு தீவிர தமிழ் தேசியவாதிகளிடம்  இருந்து இவ்வாறான நல்ல  செயல்களை எதிர்பார்கக முடியாது. 

இரண்டு பெண்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்கள்.

முதல்முறையாக மலையகத்திலிருந்து பாராளுமன்றம் போகிறார்கள்.

மிகவும் சந்தோசமான விடயம்.
 
6 minutes ago, நந்தி said:
2 hours ago, goshan_che said:

கிடைக்கும் தேசிய பட்டியலை வன்னிக்கு கொடுக்க வேண்டும்

நல்ல கருத்து ஆனால் வன்னிக்கு ஏற்கனவே 4 தமிழர்கள் தெரிவு எனவே அம்பாறைக்கு கொடுப்பதே சிறப்பு, ஏனெனில் இந்தக் காகங்களால் அங்கு சரியான தொல்லை

இதற்கெல்லாம் சான்சே இல்லை.

மத்தியகுழு சுமந்திரனையே விரும்புகிறது.

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்கெல்லாம் சான்சே இல்லை.

மத்தியகுழு சுமந்திரனையே விரும்புகிறது.

இத்தனை வீராப்புக்கும் பிறகு மக்கள் நிராகரித்த பின் சும் வந்தால் அவர் ஈன, மான, ரோசம் இல்லாத ஒரு பிறவி என்பதை உறுதி செய்வது ஆகும்.

அதே போல் சிறியும் சும் வந்தால் தனக்கு ஏச்சு விழுவது குறையும் என அவரை உள்ளே எடுக்க கூடும்.

சாணக்ஸ்சும் சும் வருவதை விரும்பகூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஜேந்திர குமார் பொன்னம்பலம் யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகி உள்ளார். சட்ட அறிஞரான அவர் தெரிவு செய்யப்பட்டது நல்லது.  வாழ்ததுக்கள். 

அநுர அரசு அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்யும் போது அதில் தனது சட்ட புலமைசார் உதவிகளை வழங்கி உருவாகப்போகும் அந்த அரசியலமைப்பு இன மத பேதங்களற்ற முறையில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அமைய தனது சட்ட உதவிகளை, பங்களிப்புக்களை  வழங்க வேண்டும். அதை விடுத்து குதிரை கஜே,  சுகாஸ்  போன்ற களிமண் மண்டைகள்,  புலம் பெயர் தேசிக்காய் மாபியக்களின்  பேச்சை கேட்டு ஒரு சயிக்கிள் இரு சில்லு என்ற வரட்டு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளை வைத்து குழப்பியடித்து அரசியலமைப்பு உருவாக்கதில் இருந்து பகிஷகரித்து அரசியல் சுத்துமாத்து விடக்கூடாது. ஏனென்றால் நாம் விரும்புகிறோமோ இல்லையோ உருவாகப்போகும் அரசியலமைப்பு தமிழ் மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும்.  புலம் பெயர் மாபியாகளும் தேசியம் பேசி இதுவரை உழைத்தது போதும். உழைத்த பணத்தை ஜாலியாக உங்கள் குடும்பத்துடன் அனுபவியுங்கள்,  பரவாயில்லை.  ஆனால், இனியும் தாயகத்தில் குழப்பத்தை உருவாக்கி மேலும் உழைக்க முயற்சிக்காதீர்கள். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரதம மந்திரி கனவில் இருந்த சுமந்திரனுக்கு... 
மக்கள்  தம் வாக்குகளால்  
நல்ல செருப்படி கொடுத்துள்ளார்கள். 😂
இனியாவது.... ***

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

இத்தனை வீராப்புக்கும் பிறகு மக்கள் நிராகரித்த பின் சும் வந்தால் அவர் ஈன, மான, ரோசம் இல்லாத ஒரு பிறவி என்பதை உறுதி செய்வது ஆகும்.

அதே போல் சிறியும் சும் வந்தால் தனக்கு ஏச்சு விழுவது குறையும் என அவரை உள்ளே எடுக்க கூடும்.

சாணக்ஸ்சும் சும் வருவதை விரும்பகூடும்.

இன்றைய ஊடக சந்திப்பில் தான் தேசியப்பட்டியல் மூலம் வரமாட்டேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வாறு செய்வது தான் நல்லது.  தமிழரசுக்கட்சி இனி கிழக்கு dominant உடன் பயணிக்கட்டும். 

புலிகளாலே அசைக்கமுடியாதவராக நீண்டகாலம் வலம் வந்த டக்லஸை அநுர வீழ்ததியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, goshan_che said:

அது அனுரவை பொறுத்த வரை வரலாறு..அதை உங்களை தடையின்றி அனுஸ்டிக்க அனுமதிப்பார். 

ஆனால் திம்பு, கிம்பு என கிளம்பினால் தும்பு போக வெளுப்பார்.

அவனுகள நட்டாற்றில விட்டதும் இல்லாம நக்கல் வேற🤣

என‌து விருப்ப‌ம்  ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌னும் என்று

நேற்று இர‌வும் கூட‌ எழுதி இருந்தேன் இந்த‌ மாவீர‌ நாளுக்கு போகும் ம‌க்க‌ள்

பிள்ளைக‌ளுக்கு போராட்ட‌ சீர் உடை அணிந்து சிக்க‌ல்ல‌ மாட்ட‌ வேண்டாம் என‌

போன‌ வ‌ருட‌ம் நில‌மை தெரியாம‌ எல்லை மீறீ போய் மாட்டி கொண்ட‌வை 

2009க்கு முன் எங்க‌ட‌ விருப்ப‌த்துக்கு ஏற்ப்ப‌ ஈழ‌ ம‌ண்ணில் மாவீர‌ நாளை செய்தோம்..................இப்போது சிந்திச்சு செய்ய‌னும் சிக்க‌ல்ல‌ மாட்ட‌க் கூடாது....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்கு எண்ணத் தொடங்கயதிலிருந்து எத்தனை பதட்டம் எத்தனை நப்பாசைகள்.எல்லாம் முடிந்து விட்டது என்று நம்ப முடியாமல் நம்பிய பின் மக்களை திட்டத் தொடங்கியாச்சு.டக்கியும் அங்கஜனும் இனி தேவையில்லை அரசே இனி பாத்துக்கொள்ளும் என்று மக்கள் நம்புகிறார்கள் போலும்.ஆனால் அது நடக்குமா தெரியாது.

Posted
2 hours ago, ரஞ்சித் said:

அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. 

அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு வெறுமனே Youtubers தான் காரணம் என்று சொல்வது உண்மையான காரணங்களை மலினப்படுத்தி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற செயல்.

இதே யாழில் பெப்ரவரியில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளை நிராகரித்து சிங்கள தேசிய கட்சிகளை நோக்கி செல்லப் போகின்றனர் என்று தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளேன். காரணம் தமிழ் தேசிய கட்சிகளின் போலி வேசமும் அவர்களை இயக்கும் சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளும். அத்துடன் இன்றைய நிலையில் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு தமிழ் மக்கள் இம்மி அளவேனும் முன்னேறும் எந்த வழிமுறையையும் இவர்கள் செய்யவில்லை.

கோசான் யாழ் சென்ற வந்த பின் இவ் வருட தொடக்கத்தில் எழுதிய பயணக்கட்டுரையிலும் ஜேவிபி இற்கான ஆதரவு அங்கு பெருகின்றது என குறிப்பிட்டு இருந்தார்.

இனி என்ன, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியால் தமிழ் மக்களுக்கு நாசம் விளைய வேண்டும் என்று திட்டிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டியது தான். ஏனெனில் அவ்வாறு செய்தால் தான் அதன் விளைவாக தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியம் நோக்கி நகர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்....

ஆனால் அவ்வாறு நிகழாமல் தமிழ் சனம் எதை எதிர்பார்த்து வாக்களித்தனரோ அவை இனியாவது நிறைவேறட்டும் என உளமாற விரும்புகின்றேன்

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, பெருமாள் said:

தெரிந்த விடயம் தானே .

இனி சொரிந்த  புண்ணுக்கு மருந்து போட சிலர் வருவார்கள் 😄

13 hours ago, ஈழப்பிரியன் said:

Come on @தமிழ் சிறி இன்று நித்திரையால் எழும்'பும் போது காதுக்கினிய செய்தி.

இன்று காலை... சுமந்திரனின் தோல்வி என்ற  நல்ல செய்தியுடன் கண் விழித்தேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, island said:

கஜேந்திர குமார் பொன்னம்பலம் யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகி உள்ளார். சட்ட அறிஞரான அவர் தெரிவு செய்யப்பட்டது நல்லது.  வாழ்ததுக்கள்

சட்டம் படித்தாலே அறிஞர் தானா? இல்லாட்டில் அந்த துறையில் ஏதும் சாதித்திருக்க வேண்டுமா? ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்🤣.

பாராளுமன்ற கதிரையை 20 வருடமாக சூடாக்கியது போல் தொடர்ந்தும் நல்ல வேலைகள் செய்வார் 🤣.

22 minutes ago, island said:

அநுர அரசு அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்யும் போது அதில் தனது சட்ட புலமைசார் உதவிகளை வழங்கி உருவாகப்போகும் அந்த அரசியலமைப்பு இன மத பேதங்களற்ற முறையில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அமைய தனது சட்ட உதவிகளை, பங்களிப்புக்களை  வழங்க வேண்டும். அதை விடுத்து குதிரை கஜே,  சுகாஸ்  போன்ற களிமண் மண்டைகள்,  புலம் பெயர் தேசிக்காய் மாபியக்களின்  பேச்சை கேட்டு ஒரு சயிக்கிள் இரு சில்லு என்ற வரட்டு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளை வைத்து குழப்பியடித்து அரசியலமைப்பு உருவாக்கதில் இருந்து பகிஷகரித்து அரசியல் சுத்துமாத்து விடக்கூடாது. ஏனென்றால் நாம் விரும்புகிறோமோ இல்லையோ உருவாகப்போகும் அரசியலமைப்பு தமிழ் மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும்.  புலம் பெயர் மாபியாகளும் தேசியம் பேசி இதுவரை உழைத்தது போதும். உழைத்த பணத்தை ஜாலியாக உங்கள் குடும்பத்துடன் அனுபவியுங்கள்,  பரவாயில்லை.  ஆனால், இனியும் தாயகத்தில் குழப்பத்தை உருவாக்கி மேலும் உழைக்க முயற்சிக்காதீர்கள். 

அரசியலமைப்பு விடயத்தில் என் பி பி  தமிழ் எம்பிகள்  உட்பட எவரையும் அனுரா பைல் தூக்கவும் விடுவாரா என்பது சந்தேகமே.

ஆனால் மாகாணசபையை விட மட்டமான ஒரு கடும் ஒற்றையாட்சி முறையை கொண்டு வந்து அதை தமிழரும் ஏற்கிறார்கள் என யாழின் 50% எம்பிகளை கொண்டு சாதிக்கப்பார்ப்பார்.

21 minutes ago, island said:

இன்றைய ஊடக சந்திப்பில் தான் தேசியப்பட்டியல் மூலம் வரமாட்டேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வாறு செய்வது தான் நல்லது.  தமிழரசுக்கட்சி இனி கிழக்கு dominant உடன் பயணிக்கட்டும். 

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, island said:

இன்றைய ஊடக சந்திப்பில் தான் தேசியப்பட்டியல் மூலம் வரமாட்டேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அவ்வாறு செய்வது தான் நல்லது.  தமிழரசுக்கட்சி இனி கிழக்கு dominant உடன் பயணிக்கட்டும். 

மத்தியகுழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் மீண்டும் வரலாம்.

9 minutes ago, தமிழ் சிறி said:

இன்று காலை... சுமந்திரனின் தோல்வி என்ற  நல்ல செய்தியுடன் கண் விழித்தேன்.

சுமந்திரனின் வலது கை @Kapithan  இன்னும் காணவில்லை.

சுமந்திரனின் தோல்வியைத் தாங்கமுடியாமல் தீக்குளிக்கப் போகிறார்.

எப்படியும் தேசியபட்டியல் மூலம் வந்திடுவார்.கவலை வேண்டாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

21-6162c99e0f007.webp

21-6162c896b9426.webp

21-6162c89626e0c.webp

21-6162c89690eaa.webp

sumanthiran.jpg

IMG-2822.jpg

465158739-10229835211836814-5538514553356697910-n.jpg

FhYO3tUagAIcwod.jpg

நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போய் விட்டதே... animiertes-traurig-smilies-bild-0017 
animiertes-traurig-smilies-bild-0041-சுமந்திரன்-  animiertes-traurig-smilies-bild-0043 animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் இருக்கும் தமிழ் தளங்களிலேயே ஓரளவு ஊர்மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளம்..

உதாரணத்துக்கு ஒண்டு- ஒருத்தர் ஒரு திரி திறந்து அநுராவை கெட்டவனாக காட்ட எழுதுனவர் அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிராகத்தான் பேசி இருந்தனர்.. ஓட ஓட அடித்திருந்தனர்..

அர்ச்சுனாவுக்கு ஓட்டுப்போட்டு அந்தாள பாராளுமன்றம் அனுப்பினதுக்கு சனத்தை முட்டாள் என்டு சொல்லுறத நான் என்ன மாதிரி பார்க்குறேன் என்டா… தமிழ்தேசியம் பேசி பேசி சனத்தை ஏமாத்தலாம் என்டு நினைச்ச அத்தனை தேசியவாதிகளுக்கும் செருப்ப மாட்டு சாணிலயும் - கிடைக்குற மற்ற சாணிலயும முக்கி இந்த தேசியவாதிகள் முகத்திலயும்- அடிமை ஆதரவாளர்கள் முகத்திலயும் அடிச்சிருக்கு சனம்..

உங்க எல்லாரையும் விட கொஞ்சம் கூட அரசியல் தெரியாத - பழக்க வழக்கம் தெரியாத அர்ச்சுனா எவ்வளவோ மேல் என்ட மக்கள்ட தீர்ப்பு  உங்கள மறந்தும் அரசியல் பக்கம் வரவேணாம்னு மக்கள் சொல்லுற கடைசி குரல்…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

21-6162c99e0f007.webp

21-6162c896b9426.webp

21-6162c89626e0c.webp

21-6162c89690eaa.webp

sumanthiran.jpg

IMG-2822.jpg

465158739-10229835211836814-5538514553356697910-n.jpg

FhYO3tUagAIcwod.jpg

நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போய் விட்டதே... animiertes-traurig-smilies-bild-0017 
animiertes-traurig-smilies-bild-0041-சுமந்திரன்-  animiertes-traurig-smilies-bild-0043 animiertes-gefuehl-smilies-bild-0090

ஈழ‌த்து மு.க ஸ்டாலின் விள‌ம்ப‌ர‌த்தில்😡😡😡😡😡😡😡😡.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

வன்னியில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்
1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
1. அப்துல் ரிஷாட்  பதியுதீன் - 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
1. துறைராசா ரவிகுமார் - 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்
1. செல்வம் அடைக்கலநாதன் - 5,695

செல்வம் 5695 வாக்குகள் மட்டும் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது நடந்துகொண்டிருப்பது எல்லாம் போலிகளை அப்புறப்படுத்தும் அரசியல்…

என்டைக்கு தனிப்பட்ட ஆசன அரசியலுக்காக வீட்ட விட்டு சைக்கிள், மான், சங்கு, மாம்பழம் என்டு பிரிவினைகள் கூறி ஓடினீங்களோ அன்டைக்கே நாம் இனமாக தோற்றுவிட்டோம்..

இந்த மக்கள் அப்பழுக்கற்ற மக்களுக்கான தலைவனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்… அப்படியான தலைவர்களை கண்டடையும் போது மக்கள் அவர் பின் திரள்வார்கள்... இனிமேல் சரி ஆத்மார்த்தமான மக்கள் அரசியல் செய்யும் தலைவர்கள் நம் தமிழ்தேசிய பரப்பில் வரவேண்டும் - அதற்கான வாய்ப்பை தமிழ்மக்களான நாம் வழங்க வேண்டும்…

போலித்தமிழ்தேசியவாதிகள் இப்பொழுது கூப்பாடு போடுவதுபோல் அல்ல.. தமிழ்தேசியத்திற்கு அழிவில்லை. போலிகளே அடிவாங்கியுள்ளார்கள்.. 

போலித்தமிழ்தேசியவாதிகள் நீங்கள் எல்லாம் ஒழிந்து தொலைந்தபின் யாராவது நல்லவர்கள் மூலம் மீண்டும் எழும்..

தமிழ்தேசியம் ஒரு போதும் வீழாது... ஒரு தேர்தலால் ஆயிரமாயிரம் ஆண்டு கால நம் உணர்வுகளை வீழ்த்த முடியாது…

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனை வருட கால அரசியல் அனுபவம் - சாணக்கியம் - அபிவிருத்தி - மக்கள் சட்டத்தரணி - மூத்த ஊடகவியலாளர் என்டு எல்லாம் சுத்திட்டு திரிஞ்ச சுமந்திரன், சரவணபவன், சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் , டக்ளஸ் தேவானந்தா, மான் மணிவண்ணன், மாம்பழம் குறூப், சுகாஸ் அன்ட் கோ,  சந்திரகுமார்  இவர்களால மன்னார்ல இருந்து வந்த சின்னப்புள்ளை தங்கம் கௌசல்யா எடுத்த 15,800 சொச்சம் ஓட்டுகளகூட எடுக்க முடியல..

அடின்னா இது தான் அடி.. செருப்படி.. இது ஒன்றும் பெரு விருப்பில் கெளசல்யாக்கு கிடைத்த வாக்கல்ல.. உங்கள் எல்லோர் மீதும்.. விசேடமாக போலித்தமிழ்தேசியவாதிகள் மீதிருக்கும் பெரு வெறுப்பில் கெள்சல்யா மற்றும் அர்ச்சனாவுக்கு கிடைத்த வாக்குகள்..

திருந்துங்கடா தேத்தண்ணி வாங்கித்தாறன் முமெண்ட்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, நிழலி said:

அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு வெறுமனே Youtubers தான் காரணம் என்று சொல்வது உண்மையான காரணங்களை மலினப்படுத்தி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற செயல்.

இதே யாழில் பெப்ரவரியில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளை நிராகரித்து சிங்கள தேசிய கட்சிகளை நோக்கி செல்லப் போகின்றனர் என்று தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளேன். காரணம் தமிழ் தேசிய கட்சிகளின் போலி வேசமும் அவர்களை இயக்கும் சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளும். அத்துடன் இன்றைய நிலையில் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு தமிழ் மக்கள் இம்மி அளவேனும் முன்னேறும் எந்த வழிமுறையையும் இவர்கள் செய்யவில்லை.

கோசான் யாழ் சென்ற வந்த பின் இவ் வருட தொடக்கத்தில் எழுதிய பயணக்கட்டுரையிலும் ஜேவிபி இற்கான ஆதரவு அங்கு பெருகின்றது என குறிப்பிட்டு இருந்தார்.

இனி என்ன, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியால் தமிழ் மக்களுக்கு நாசம் விளைய வேண்டும் என்று திட்டிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டியது தான். ஏனெனில் அவ்வாறு செய்தால் தான் அதன் விளைவாக தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியம் நோக்கி நகர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்....

ஆனால் அவ்வாறு நிகழாமல் தமிழ் சனம் எதை எதிர்பார்த்து வாக்களித்தனரோ அவை இனியாவது நிறைவேறட்டும் என உளமாற விரும்புகின்றேன்

எல்லாத்தையும் விடுங்கோ

பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ.

1. காணாமல் போனோர் விடயம். 

2. போர் குற்ற விசாரணை

3. மாகாண சபைக்கு காணி அதிகாரம்

4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்

5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்).

6. தமிழர் நிலத்தில் புத்த கோவில்

இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்?

இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?

23 minutes ago, சுவைப்பிரியன் said:

வாக்கு எண்ணத் தொடங்கயதிலிருந்து எத்தனை பதட்டம் எத்தனை நப்பாசைகள்.எல்லாம் முடிந்து விட்டது என்று நம்ப முடியாமல் நம்பிய பின் மக்களை திட்டத் தொடங்கியாச்சு.டக்கியும் அங்கஜனும் இனி தேவையில்லை அரசே இனி பாத்துக்கொள்ளும் என்று மக்கள் நம்புகிறார்கள் போலும்.ஆனால் அது நடக்குமா தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ் இருக்கும் தமிழ் தளங்களிலேயே ஓரளவு ஊர்மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளம்..

உதாரணத்துக்கு ஒண்டு- ஒருத்தர் ஒரு திரி திறந்து அநுராவை கெட்டவனாக காட்ட எழுதுனவர் அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிராகத்தான் பேசி இருந்தனர்.. ஓட ஓட அடித்திருந்தனர்..

அர்ச்சுனாவுக்கு ஓட்டுப்போட்டு அந்தாள பாராளுமன்றம் அனுப்பினதுக்கு சனத்தை முட்டாள் என்டு சொல்லுறத நான் என்ன மாதிரி பார்க்குறேன் என்டா… தமிழ்தேசியம் பேசி பேசி சனத்தை ஏமாத்தலாம் என்டு நினைச்ச அத்தனை தேசியவாதிகளுக்கும் செருப்ப மாட்டு சாணிலயும் - கிடைக்குற மற்ற சாணிலயும முக்கி இந்த தேசியவாதிகள் முகத்திலயும்- அடிமை ஆதரவாளர்கள் முகத்திலயும் அடிச்சிருக்கு சனம்..

உங்க எல்லாரையும் விட கொஞ்சம் கூட அரசியல் தெரியாத - பழக்க வழக்கம் தெரியாத அர்ச்சுனா எவ்வளவோ மேல் என்ட மக்கள்ட தீர்ப்பு  உங்கள மறந்தும் அரசியல் பக்கம் வரவேணாம்னு மக்கள் சொல்லுற கடைசி குரல்…

உண்மைகளை உரத்து, தயக்கமின்றிச் சொல்லும் நேரம் இது. போலி டமில் தேசிய வியாதிகளையும் புலம்பெயர்ஸ்  போலித் டமில் வியாபாரிகளையும், முட்டையடி முட்டாள் கோஸ்ரிகளையும் அப்பட்டமாக வெளிக்காட்டப்பட வேண்டிய நேரம் இது. 

விட்டால் குடும்பி, தட்டினால் மொட்டை ரக அரசியல் தமிழருக்கு தந்தது என்ன என்று அலசி ஆராயும் நேரம் இது. 

இந்தியாவுக்காக எமது இரத்தம் சிந்தப்படுவதை இனியும் சகிக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இப்படி ஜனாதிபதி கட்சி வோட்டு போட்டுத்தான் காரியம் சாதிக்க வேணும் என்டா அதை 1977 இல் அதி உத்தமர் ஜேஆர், அல்லது 2010 இல் புனிதர் மகிந்தர், அல்லது 2019 இல் கோமான் கோட்டவுடன் சேர்ந்து செய்யச்சொல்லி ஏன் நீங்கள் மக்களை கேட்கவில்லை?

அனுர என்ன வானில் இருந்தது வந்த

மீட்பரா?

மிகவும் நியாயமான கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எத்தனை வருட கால அரசியல் அனுபவம் - சாணக்கியம் - அபிவிருத்தி - மக்கள் சட்டத்தரணி - மூத்த ஊடகவியலாளர் என்டு எல்லாம் சுத்திட்டு திரிஞ்ச சுமந்திரன், சரவணபவன், சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் , டக்ளஸ் தேவானந்தா, மான் மணிவண்ணன், மாம்பழம் குறூப், சுகாஸ் அன்ட் கோ,  சந்திரகுமார்  இவர்களால மன்னார்ல இருந்து வந்த சின்னப்புள்ளை தங்கம் கௌசல்யா எடுத்த 15,800 சொச்சம் ஓட்டுகளகூட எடுக்க முடியல..

அடின்னா இது தான் அடி.. செருப்படி.. இது ஒன்றும் பெரு விருப்பில் கெளசல்யாக்கு கிடைத்த வாக்கல்ல.. உங்கள் எல்லோர் மீதும்.. விசேடமாக போலித்தமிழ்தேசியவாதிகள் மீதிருக்கும் பெரு வெறுப்பில் கெள்சல்யா மற்றும் அர்ச்சனாவுக்கு கிடைத்த வாக்குகள்..

திருந்துங்கடா தேத்தண்ணி வாங்கித்தாறன் முமெண்ட்..

ப்ரோ,

இந்த அருச்சுனா குரூப்பை தேத்தண்ணியோ கோப்பியோ வாங்கி கொடுத்து ஒரு யதார்தமான, ஊழலற்ற, மக்கள் நலன் பேணும் grass roots தமிழ் தேசிய சக்தியாக யாழில் வளர்தெடுக்க முடியாதா?

யாழில் இப்போ தமிழ் தேசிய எம்பி எவருமில்லை.

சிறி, பொன்னா போன்ற போலிகளும், என் பி பி யும்தான்.

There is a gap in the market.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kapithan said:

தம்பியை கனகாலத்தின் பின் கண்டது சந்தோசம்.

10 minutes ago, goshan_che said:

எல்லாத்தையும் விடுங்கோ

பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ.

1. காணாமல் போனோர் விடயம். 

2. போர் குற்ற விசாரணை

3. மாகாண சபைக்கு காணி அதிகாரம்

4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்

5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்).

6. தமிழர் நிலத்தில் புத்த கோவில்

இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்?

இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?

மாகாணசபையே இல்லாமல்போகப்போறது போல

அப்புறம் எப்படித் தம்பி அதிகாரங்கள் வரும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, island said:

புலிகளாலே அசைக்கமுடியாதவராக நீண்டகாலம் வலம் வந்த டக்லஸை அநுர வீழ்ததியுள்ளார்

அனுரகுமார திசநாயக்க தான் அவர்களுக்கு எல்லாம் என்று நம்பி உள்ளனர்🙄

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.