Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தீர்வே தரமாட்டம் என சொல்லும் கட்சிக்கு கொடுத்தால் -

மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தீர்வு  தாறோம் என்று சொன்னார்களா? இல்லை சொன்னதை செய்தார்களா? அவர்கள் மேலெல்லாம் வராத வெறுப்பு ஏன் இவர் மீது மட்டும் கொட்டுகிறது?

ஒரு கட்சியாக ஆரம்பித்து இன்று பல கட்சிகளாக பிரிந்து தென்னிலங்கை கட்சிகளையும் நுழைய வைத்திருக்கிறார்கள், மக்கள் மட்டும் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமோ? மக்களின் வாக்குகளை இவர்கள் கொண்டுபோய் தென்னிலங்கை கட்சிகளிடம் கொடுத்து தங்கள் சுயலாபம் தேடுகிறார்கள், அதை இப்போ மக்கள் தங்கள் வாங்குகளை தாங்களே கொடுத்து பேரம் பேசுகிறார்கள். அதை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் குறைகளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்து வைப்பேன் என்று அநுர கூறியிருக்கிறார். இதற்கு பூசாரி, தரகர் எல்லாம் எதற்கு?

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் - கிழக்குமையவாத அரசியல் என்ற குறுகிய வட்டத்தை - கிழக்கில் மையம் கொள்ளும் தமிழ் தேசிய அரசியல் - என பெருபித்தவர் சாணாக்கியனே.

இவரது அரசியல் ஸ்டண்ட்களை பார்த்து நீங்கள் வேண்டுமானால் உச்சிகுளிரலாம் 
நான் மட்டக்களப்பான் எல்லோரையும் சந்தேகத்துடன் தான் பார்ப்பேன்  இவரது தேசியத்தின் கனதி  ராஜபக்சவுடன் நின்று போட்டிபோட்ட பொழுதே தெரியும். இனித்தான் இருக்கு மாரித்தவக்கைக்கு சோதனைக்களம், தொடர்ந்து வயிறுப்புடைக்க கத்தும் அரசியல் எடுபடாது.  NPP கிடைக்கும் கப்பில் எல்லாம் ஸ்கொர் பண்ணினால் எதிர்காலத்தில்  சான்ஸுக்கும் கல்தா கொடுக்கப்படும்.    

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பார்க்கலாம்..

ராஜபக்சவோடு சாணக்ஸ் மேடை ஏறியதை, வாக்கு கேட்டதை சுட்டும் நீங்கள், கருணாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர்.

எனவே உங்களை போலவே அவரும் ஒரு ரகசிய தமிழ் தேசிய ஆர்வலராக இருக்கலாம்தானே🤣.

பார்ப்போம் என்ன செய்கிறார் என.

13 minutes ago, satan said:

மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தீர்வு  தாறோம் என்று சொன்னார்களா? இல்லை சொன்னதை செய்தார்களா? அவர்கள் மேலெல்லாம் வராத வெறுப்பு ஏன் இவர் மீது மட்டும் கொட்டுகிறது?

ஒரு கட்சியாக ஆரம்பித்து இன்று பல கட்சிகளாக பிரிந்து தென்னிலங்கை கட்சிகளையும் நுழைய வைத்திருக்கிறார்கள், மக்கள் மட்டும் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமோ? மக்களின் வாக்குகளை இவர்கள் கொண்டுபோய் தென்னிலங்கை கட்சிகளிடம் கொடுத்து தங்கள் சுயலாபம் தேடுகிறார்கள், அதை இப்போ மக்கள் தங்கள் வாங்குகளை தாங்களே கொடுத்து பேரம் பேசுகிறார்கள். அதை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் குறைகளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்து வைப்பேன் என்று அநுர கூறியிருக்கிறார். இதற்கு பூசாரி, தரகர் எல்லாம் எதற்கு?

அப்போ அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் அடகு வைக்கிறார்கள் என மக்கள் தாமே நேரடியாக அடகு வைத்த்தது சரியா?

என் பி பிக்கு யாழில் போட்டவர்கள் சுயநலமிகள்தான்.

மேலே சொன்னபடி அருச்சுனாவுக்கு போட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அப்போ அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் அடகு வைக்கிறார்கள் என மக்கள் தாமே நேரடியாக அடகு வைத்த்தது சரியா?

என் பி பிக்கு யாழில் போட்டவர்கள் சுயநலமிகள்தான்.

மேலே சொன்னபடி அருச்சுனாவுக்கு போட்டிருக்கலாம்.

அர்ச்சுனாவின் திறமையை இனிமேற்தான் பாராட்ட வேண்டும். அதற்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு வேண்டியதை நேரடியாகவே கேட்கமுடியும். அரசியல்வாதிகள் கேட்பதேயில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்
1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
1. அப்துல் ரிஷாட்  பதியுதீன் - 21,018

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
1. துறைராசா ரவிகுமார் - 11,215

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்
1. செல்வம் அடைக்கலநாதன் - 5,695

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 1 ஆசனம்
1. காதர் மஸ்தான் - 13,511
 
https://tamil.adaderana.lk/news.php?nid=195947

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டிலும் அருச்சுணாவிற்கே வாக்களித்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கின்ற காலம் விரைவில் வரும்.

அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தில் வென்றவர்கள் யார்?

யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய; தேசிய மக்கள் சக்தி சார்பாக
கருணநாதன் இளங்குமரன் – 32,102
ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430
ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசு கட்சி சார்பாக
சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135

சுயேட்சைக் குழு 17 சார்பாக
இராமநாதன் அர்ஜுனா – 20, 487 ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

https://thinakkural.lk/article/312164

1 minute ago, ரஞ்சித் said:

அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. 

இது மட்டுமே காரணம் இல்லையண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி முடிவுகள் தொகுப்புப் படங்கள்

distribution.jpg

district.jpg

final-result.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள்.

1. சிவஞானம் சிறீதரன் - 32,833

2. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் - 15,039

3. கேசவன் சஜந்தன் - 10,527

4. சந்திரலிங்கம் சுகிர்தன் - 9,013

5. தியாகராஜா பிரகாஷ் - 5,117

6. இம்மனுவல் ஆனல்ட் - 4,985

7. சந்திரஹாசன் இளங்கோவன் - 4,553

8. சுரேகா சசீந்திரன் - 2,670

அண்ணை சிறீதரன் டொக்ரரின் மனைவி பெயரைக் காணோம்?!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டிலும் அருச்சுணாவிற்கே வாக்களித்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கின்ற காலம் விரைவில் வரும்.

அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. 

இல‌ங்கை ப‌ல‌ யூடுப்ப‌ர்க‌ளுக்கு அனுராவின் ஆட்க‌ள் காசுக‌ள் கொடுத்து ஓவ‌ர் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் செய்து அத‌ன் மூல‌மும் சாதிச்சு விட்டின‌ம்

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ந‌ட‌க்க‌ போகும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் என்ன‌ மாதிரி இருக்கும் என்று தெரியாது

அனுரா தேர்த‌ல் நேர‌ம் பார்த்து ஆனையிற‌வில் இருந்த‌ சாலை சோத‌னைய‌   நீக்கி..............யாழ்ப்பாண‌த்திலும் சால‌ய‌ திற‌ந்து விட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை மாற்றீ விட்டார்

ஆனால் எங்க‌டைய‌ல் .

ச‌ங்கில‌  த‌னிய‌...........சைக்கில்ல‌ த‌னிய‌ . க‌ள்ள‌ன் சும‌த்திர‌ன் கூட‌ சிறித‌ர‌ன் ஒரு கூட்ட‌ம்.....................இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ம‌க்க‌ளுக்கு உண்மையும் நேர்மையுமாய் இருந்து இருந்தால் பாராள‌ம‌ன்ற‌ம் சென்று இருப்பின‌ம்

இவ‌ர்க‌ள் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் உருப்ப‌டியா த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ ந‌ன்மை ஒன்றை த‌ன்னும் சொல்ல‌ முடியுமா ர‌ஞ்சித் அண்ணா

இவ‌ங்க‌ட‌ குள்ள‌ ந‌ரி குன‌ம் தெரிந்து தான் த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இவ‌ங்க‌ட‌ அர‌சிய‌லை எட்டியும் பார்த்த‌தில்லை...................

மாவீர‌ர் நாள் வ‌ருது தானே அதில் தெரியும் அனுராவின் உண்மையான‌ முக‌ம்.................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:
தேர்தல் கணக்கு
2020 ம் ஆண்டு,
டக்லஸ் 45927
அங்கஜன் 49373
விஜயகலா 6522
மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344.
 
இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள்.
இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே.
இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000.
 
யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள்.
 
இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.

வாக்களிக்காமல் விட்ட 40 வீத மக்களையும் என்னவென்று சொல்வது.

May be an image of 10 people and people studyingஇந்த நன்றி கெட்ட மக்களுக்கு போரட்டம் நடத்தினால் என்ன? நடத்தாமல் விட்டால்தான் என்ன. வாக்குப் போடப் போகாதவர்கள் போராட்டத்துக்குப் போவார்களா? அவர்களுக்கு வெளிநாட்டுக்காசு வந்தால் போதும் குடித்து சாப்பிட்டு விட்டு குப்புறப் படுப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேர்தல் கணக்கு- O/L இல் சோதனையில் வரவில்லை!

யாழ்ப்பாணம் 
325312 செல்லுபடியான வாக்குகள். 

தேசிய மக்கள் சக்தி. 80830 
தமிழரசு. 63327 
சைக்கிள் 27986 
ஊசி 27855
சங்கு 22513

மிச்சம் கணக்கில எடுக்காம நேரடியா 5 % க்கு குறைந்த கழிவுக்கு விடுவம்.

முன்னிலை வகிக்கும் NPP க்கு 1 போனஸ். 

5% கழிக்க, 16265 கீழ பெற்றோர் கழிந்தனர்.

முதல் சுற்று, 

80830+63327+27986+27855=199998

ஒரு சீற்றுக்கான வாக்குகள் 199998/5 அண்ணளவாக 40000. 

இரண்டாம் சுற்றில் 

தேசிய மக்கள் சக்தி 80830-80000= 830 (2+போனஸ் 1=3)
தமிழரசு 63327-40000=23327(1சீட்)
மற்றவர்களுக்கு முதல் சுற்றில் இல்லை, 

இரண்டாம் சுற்றில் 

தேசிய மக்கள் சக்தி 830 
தமிழரசு  23327 
சைக்கிள் 27986 
ஊசி 27855
சங்கு 22513

மிச்சம் இருக்கிற 2 சீட். 

இரண்டாம் சுற்றில் சைக்கிள் மற்றும் ஊசி முன்னிலை வகிப்பதால், ஆளுக்கு 1 சீட். 

🏛 படிப்பறிவு அதிகமான யாழ்ப்பாணத்தில நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 32767. கிட்டத்தட்ட ஒரு சீட்டுக்கான வோட். 
🏛 ஈசல் போல நிறை பேர் கேட்டதால, 5% வீதத்துக்கு குறைந்த என்று, பயனற்று போன வோட் 125312 வோட்ஸ். இது செல்லுபடியான வோட்டின் 38%  தெரியுமா?💀💀💀ஓமைகாட் OMG 😨

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, satan said:

அர்ச்சுனாவின் திறமையை இனிமேற்தான் பாராட்ட வேண்டும். அதற்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு வேண்டியதை நேரடியாகவே கேட்கமுடியும். அரசியல்வாதிகள் கேட்பதேயில்லையே.

ஆனால் என் பி பி யின் 3 பேரை இப்பவே பாரட்ட தயார்? அனைவரும் புதுமுகங்களே.

இதில் அருச்சுனாவுக்கு கொஞ்சம் சமூக அக்கறை இருப்பதாவது முன்பே தெரிந்தது.

ஏனையோர் தெற்கின் கட்சி தலைமை சொல்லுவதற்கு தலை ஆட்டும் பூம் பூம் மாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

12 பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு

நடைபெற்று முடிந்துள்ள 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக 12 பெண்கள் பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மேற்படி வேட்பாளர்களில் நான்கு தமிழ் பெண்கள் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/312172

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1464.jpg
12 பெண்களை மக்கள்  NPP க்காக தெரிவு செய்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

மாவீர‌ர் நாள் வ‌ருது தானே அதில் தெரியும் அனுராவின் உண்மையான‌ முக‌ம்.................................

அது அனுரவை பொறுத்த வரை வரலாறு..அதை உங்களை தடையின்றி அனுஸ்டிக்க அனுமதிப்பார். 

ஆனால் திம்பு, கிம்பு என கிளம்பினால் தும்பு போக வெளுப்பார்.

8 minutes ago, புலவர் said:

May be an image of 3 people and text

அவனுகள நட்டாற்றில விட்டதும் இல்லாம நக்கல் வேற🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் சிங்களவர் கோட்டையாகவே மாறிவிட்டது சாவகச்சேரி ,  ஊர்காவற்துறை, கிளிநெச்சியை தவிர.
கிழக்கு மாகாணத்தில் கல்குடா பட்டிருப்பு👍

1 hour ago, goshan_che said:

என் பி பிக்கு யாழில் போட்டவர்கள் சுயநலமிகள்தான்.

ஏனையோர் தெற்கின் கட்சி தலைமை சொல்லுவதற்கு தலை ஆட்டும் பூம் பூம் மாடுகள்.

💯

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் என் பி பி யின் 3 பேரை இப்பவே பாரட்ட தயார்? அனைவரும் புதுமுகங்களே.

இதில் அருச்சுனாவுக்கு கொஞ்சம் சமூக அக்கறை இருப்பதாவது முன்பே தெரிந்தது.

ஏனையோர் தெற்கின் கட்சி தலைமை சொல்லுவதற்கு தலை ஆட்டும் பூம் பூம் மாடுகள்.

ஐயா.... அர்ச்சுனா ஒன்றும் ஜனாதிபதியுமல்ல, அவர் கட்சியை சார்ந்தவருமல்லர். இன்று முழு அளவிலான வெற்றி பெற்றவருடன் அர்ச்சுனா மட்டும் போய் போராட முடியுமா? அநுர கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனையை நேரடியாக கதைக்க முடியும், இல்லை ஜனாதிபதியே அவர்களுடன் கலந்துரையாட முடியும். தனக்காக வாக்களித்தவர்கள் என அவர் மனம் மாறி நல்லது செய்யவும் கூடும். பல கை ஓசையில் அர்ச்சுனாவின் ஒருகை ஓசை எடுபடுமா? நீங்கள் இப்போ அர்ச்சுனாவோடு கோத்து விட முயற்சிக்கிறீர்கள். முதலில் ஒருவருடமாவது பொறுத்திருங்கள், அநுர என்ன செய்கிறாரென பார்ப்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

May be an image of 3 people and text

இனிமேல் மட்டக்களப்பான்ஸ் இடம் தமிழரசுக்கட்சியைக் கொடுத்துவிடுங்கள். அவனுகள் திருந்துவானுகள்.

Edited by நந்தி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG-1464.jpg
12 பெண்களை மக்கள்  NPP க்காக தெரிவு செய்துள்ளார்கள்.

அதில் நான்கு பெண்கள் தமிழ் பெண்கள். வரட்டு தீவிர தமிழ் தேசியவாதிகளிடம்  இருந்து இவ்வாறான நல்ல  செயல்களை எதிர்பார்கக முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

May be an image of 3 people and text

fun-meme.jpg

வட்சப்பில் வந்த மீம் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கிடைக்கும் தேசிய பட்டியலை வன்னிக்கு கொடுக்க வேண்டும்

நல்ல கருத்து ஆனால் வன்னிக்கு ஏற்கனவே 4 தமிழர்கள் தெரிவு எனவே அம்பாறைக்கு கொடுப்பதே சிறப்பு, ஏனெனில் இந்தக் காகங்களால் அங்கு சரியான தொல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

ஐயா.... அர்ச்சுனா ஒன்றும் ஜனாதிபதியுமல்ல, அவர் கட்சியை சார்ந்தவருமல்லர். இன்று முழு அளவிலான வெற்றி பெற்றவருடன் அர்ச்சுனா மட்டும் போய் போராட முடியுமா? அநுர கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனையை நேரடியாக கதைக்க முடியும், இல்லை ஜனாதிபதியே அவர்களுடன் கலந்துரையாட முடியும். தனக்காக வாக்களித்தவர்கள் என அவர் மனம் மாறி நல்லது செய்யவும் கூடும். பல கை ஓசையில் அர்ச்சுனாவின் ஒருகை ஓசை எடுபடுமா? நீங்கள் இப்போ அர்ச்சுனாவோடு கோத்து விட முயற்சிக்கிறீர்கள். முதலில் ஒருவருடமாவது பொறுத்திருங்கள், அநுர என்ன செய்கிறாரென பார்ப்பதற்கு.

ஐயா,

இப்படி ஜனாதிபதி கட்சி வோட்டு போட்டுத்தான் காரியம் சாதிக்க வேணும் என்டா அதை 1977 இல் அதி உத்தமர் ஜேஆர், அல்லது 2010 இல் புனிதர் மகிந்தர், அல்லது 2019 இல் கோமான் கோட்டவுடன் சேர்ந்து செய்யச்சொல்லி ஏன் நீங்கள் மக்களை கேட்கவில்லை?

அனுர என்ன வானில் இருந்தது வந்த

மீட்பரா?

முள்ளிவாய்க்கால் நேரம் காலம் தாழ்த்தாது போரை முடியுங்கள் என மகிந்தவை அழுத்திய கட்சியில் அப்போதே இவர்தான் தலைவர்.

அனுரவுக்கு நீங்கள் வாக்களிப்பதாயின்…போர்குற்ற விசாரணை, காணாமல் போனோர், காணி, பொலிஸ் அதிகாரம், அதிகர பகிர்வு இவை எதுவும் தமிழருக்கு தேவை இல்லை என நீங்கள் கருதுவதாகவே அர்த்தம்.

அப்படித்தான் இலங்கை அரசு இதை விளம்பரப்படுத்தும். உலகமும் ஏற்கும்.

இந்த நிலைப்பாட்டை எடுத்த மக்களை நான் தூற்றவில்லை, ஆனால் இத்தனை கால இழப்பை மறந்து இப்படி செய்தத்து, சுயநலத்தின் அடிப்படையிலே ஒழிய கொள்கைக்காக அல்ல. அதைத்தான் நான் சொல்கிறேன்.

அத்தோடு எதிர்கால பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்காத ஒரு முடிவும் கூட.

அருச்சுனா குழு இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்காவிட்டால் நான் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பதை ஏற்றிருப்பேன்.

ஆனால் இங்கே அவர் ஒரு மாற்றாக இருந்தார்.

அவரை விட அவர் குழுவில் நம்பிக்கை தரும் புதியோர் இருந்தனர்.

ஆனால் நேரடியாக அனுரவிடம் சலுகை பெறும் எண்ணமே என் பி பி க்கு போட வைத்தது.

நான் எனது பயண கட்டுரையில் எழுதியதையும், அதற்கு நீங்கள் கொடுத்த பதிலையும் மீள வாசியுங்கள். 

21 minutes ago, நந்தி said:

இனிமேல் மட்டக்களப்பான்ஸ் இடம் தமிழரசுக்கட்சியைக் கட்சியைக் கொடுத்துவிடங்கள். அவனுகள் திருந்துவானுகள்.

அதே👏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.