Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக தம்பதியர் சார்பில் வழக்கறிஞர் மூலம் நவம்பர் 19 (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி சார்பில் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், உணர்வு ரீதியான காரணங்களால் இருவரும் பிரிய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"மணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சாய்ராவும் அவரது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானும் பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்திருக்கிறார்கள். திருமண பந்தத்தில் ஏற்பட்ட உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் பிரியும் முடிவுக்கு இருவரும் வந்தார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தாலும், இருவரின் பந்தத்தில் ஒருவித அழுத்தம் இருந்தது. இருவருக்கும் நடுவே இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருவராலும் அந்த இடைவெளியை குறைக்க முடியவில்லை" என்று வந்தனா ஷா குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி முகமை தகவலின்படி, விவாகரத்து முடிவை சாய்ரா பானு முதலில் வெளியிட, பின்னர் இருவர் தரப்பிலும் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மிகுந்த வலியுடன் திருமண பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்ததாக சாய்ராவும் ஏஆர் ரஹ்மானும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வாழ்க்கையின் இந்த கடினமான கட்டத்தில் இருந்து வெளியே வர, மக்கள் தங்களது தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுமாறு இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய்ரா பானு - ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் 1995-ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு கதீஜா, ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் "இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வாழ்க்கை

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன் தான் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார்.

விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம்.

1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை அவர் இசையமைத்த படங்கள் தொடர்ந்து அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தன.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது 32 ஆண்டுகால இசை வாழ்க்கையில் ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட உலகின் உயரிய பல விருதுகளை வென்றுள்ளார்.

திலீப்குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது 23-வது வயதில் 1989-ஆம் அண்டு இஸ்லாமைத் தழுவினார். தன்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது எளிய வாழ்க்கை மற்றும் மனித நேயம் என்று அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த ஒரு நேர்காணலில், "இஸ்லாம் என்பது ஒரு பெருங்கடல். அதில் 70-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அன்பை போதிக்கும் சூஃபி தத்துவத்தை நான் பின்பற்றுகிறேன்." என்று தெரிவித்தார்.

57 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர், 2 கிராமி மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார்

2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையை பெற்றார்.

விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசினார். "நான் கீழே அமர்ந்திருந்தபோது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ.. இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்." என்று பின்னர் ஒரு தருணத்தில் அவர் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் இணைந்து ரஹ்மான் பணிபுரிந்துள்ளார். மக்களை ஒருங்கிணைக்க இசை ஒரு கருவியாக இருக்கும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து.

தேசிய கீதம் முதல் தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வரையில் இவருடைய இசை பரவியிருந்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் என்னவாக இருக்கும்? 😎
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

காரணம் என்னவாக இருக்கும்? 😎
 
இவ‌ரின் இசைய‌ கேட்டு தான் வ‌ள‌ந்தேன் தாத்தா

இவ‌ர் மிக‌வும் நேர்மையான‌ ம‌னித‌ர்.................திற‌மையான‌ இசைய‌மைப்பாள‌ர்....................இவ‌ரின் இசையில் சிறுவ‌ய‌தில் நான் கேட்ட‌ முத‌ல் பாட்டு

(முக்காலா முக்க‌பில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளையும் த‌ன் இசை மூல‌ம் திரும்பி பார்க்க‌ வைத்த‌வ‌ர்......................ஈழ‌த்தின் மேல் அதிக‌ ப‌ற்று அத‌ற்க்கு அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ஓன்றே சாட்ச்சி

அந்த‌ பாட்டை ஜ‌ரோப்பாவிலும் பாடின‌வ‌ர்...................

அந்த‌ பாட்டு இதே 

கேட்டால் க‌ண் க‌ல‌ங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

காரணம் என்னவாக இருக்கும்? 😎
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான இசைத் திருவிழாபோல் இருந்தது . .........!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் இசைய‌ கேட்டு தான் வ‌ள‌ந்தேன் தாத்தா

இவ‌ர் மிக‌வும் நேர்மையான‌ ம‌னித‌ர்.................திற‌மையான‌ இசைய‌மைப்பாள‌ர்....................இவ‌ரின் இசையில் சிறுவ‌ய‌தில் நான் கேட்ட‌ முத‌ல் பாட்டு

(முக்காலா முக்க‌பில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளையும் த‌ன் இசை மூல‌ம் திரும்பி பார்க்க‌ வைத்த‌வ‌ர்......................ஈழ‌த்தின் மேல் அதிக‌ ப‌ற்று அத‌ற்க்கு அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ஓன்றே சாட்ச்சி

"முக்காலா முக்கப்பிலா ஓ லைலா " என்பதன் அர்த்தம் என்ன ராசா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

"முக்காலா முக்கப்பிலா ஓ லைலா " என்பதன் அர்த்தம் என்ன ராசா? 😂

கிட்டத்தட்ட 

"சரியான போட்டி (இது) காதலி " என்ற கருத்தை கொண்ட வரி

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் முதலில் தாய்க்கு அவன் சராசரி பிள்ளைதான் என்பதுபோல்

என்னதான் ரஹ்மான் விருதுகள் வாங்கி குவித்தாலும், உலக இசைமேதைகளில் ஒருவரா இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் நீண்டகாலம் ஆண்ட ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையாளனா இருந்தாலும் ஒரு நல்ல கணவனா அவர் மனைவிக்குஇருந்திருக்க வாய்ப்பேயில்லை.

29 வருட திருமண வாழ்வில் பாதிக்காலம் அமெரிக்கா ஐரோப்பாவிலும், வட இந்தியாவிலும், லண்டனிலும் டுபாயிலும்தான் கழிந்ததென்றால் மீதிக்காலம் இரவில் இசையமைப்பு பகலில் தூக்கம், மனைவிக்கென்று நேரம் ஒதுக்கியதில்லையென்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கார்.

கணவன் என்று இருப்பவன் எப்போபாரு ஆர்மோனியமும் கீபோர்ட்டும் என்று இருந்தால் வாழ்வு நரகம்தான், இவரது சகலை நடிகர் ரஹ்மான் இசையமைப்பாளர் ரஹ்மானின் முதலிரவு நாளன்று வீட்டுக்கு போன் பண்ணியபோது ரஹ்மானின் புது மனைவிதான் பேசினாராம் என்ன நீ பேசுறே எங்கே அவர் என்று கேட்டால் முதலிரவு அன்றே ரஹ்மான் பக்கத்து ரூமில் வீணை பிளே பண்ணி பாத்துக்கிட்டிருந்தாராம்னு இணையத்தில் தகவல் உலா வருகிறது.

இதில் ஒருபெண் எவ்வளவு தூரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பாரென்பது சாதாரணமாய் உணரகூடியதொன்று.

தனக்கு சொந்தமானவன் வெறுமனே தன்னை குழந்தை பெற்றுக்கொள்ளூம் இயந்திரமாக பாவிப்பதை எந்த பெண்ணும் ரசிக்கமாட்டாள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.

வயசானகாலத்திலும் இந்தியாவில் பாதிநாள் டுபாயில் உள்ள ஸ்ரூடியோவில் மீதிநாள்  என்று ரஹ்மான் இசையை 24 மணிநேரமும் கட்டிக்கொண்டு அழுதால் எவர்தான் எஸ்கேப் ஆகமாட்டார்.

மற்றும்படி ரஹ்மான் இன்னொரு பெண் தொடர்பு என்பதெல்லாம் இலகுவாக நம்பகூடிய விஷயமா தெரியவில்லை.

இளமையும் அழகும்  இருக்கும் காலத்தில் உலக அழகிகளிலிருந்து  உள்ளூர் கிழவிகள்வரை ரஹ்மான் அலைவீசிய நேரத்தில் எந்த பெண்ணுடனும் கிசு கிசு இல்லாத மனிதன், இப்போ கண்பார்வை மங்கி சோடாபுட்டி கண்ணாடியுடன் திரியும் காலத்தில் கட்டுப்பாட்டை மீறூவாரா தெரியல.

இது தனிமனிதன் பற்றிய விமர்சனங்களல்ல, அவர்களாகவே தமது தனிமனித விஷயங்களை  குடும்பமாக பொதுவெளிக்கு எடுத்து வந்ததால் அனைவரும் அதுபற்றி பேசுவார்கள்.

எது எப்படியோ காரணங்கள் என்னவென்று மலிந்தால் ஒன் லைன் சந்தைக்கு வரும்தானே பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பேர்களிடமும் சரக்கு முடிந்து விட்டது இளசு கூட அந்த பாட்டை இப்படி பாடினேன் இப்படி பாடினேன் என்கிறதே தவிர புதுசா ஒன்றும் போடவில்லை இவரும் முக்கால வுக்கு பின் பெரிதாய் காணவில்லை தங்களை மக்கள் மறந்து விடுவார்களோ எனும் பயத்தில் மீடிய ஆட்டம் ஆடுகிறார்கள் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, valavan said:

நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் முதலில் தாய்க்கு அவன் சராசரி பிள்ளைதான் என்பதுபோல்

என்னதான் ரஹ்மான் விருதுகள் வாங்கி குவித்தாலும், உலக இசைமேதைகளில் ஒருவரா இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் நீண்டகாலம் ஆண்ட ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையாளனா இருந்தாலும் ஒரு நல்ல கணவனா அவர் மனைவிக்குஇருந்திருக்க வாய்ப்பேயில்லை.

29 வருட திருமண வாழ்வில் பாதிக்காலம் அமெரிக்கா ஐரோப்பாவிலும், வட இந்தியாவிலும், லண்டனிலும் டுபாயிலும்தான் கழிந்ததென்றால் மீதிக்காலம் இரவில் இசையமைப்பு பகலில் தூக்கம், மனைவிக்கென்று நேரம் ஒதுக்கியதில்லையென்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கார்.

கணவன் என்று இருப்பவன் எப்போபாரு ஆர்மோனியமும் கீபோர்ட்டும் என்று இருந்தால் வாழ்வு நரகம்தான், இவரது சகலை நடிகர் ரஹ்மான் இசையமைப்பாளர் ரஹ்மானின் முதலிரவு நாளன்று வீட்டுக்கு போன் பண்ணியபோது ரஹ்மானின் புது மனைவிதான் பேசினாராம் என்ன நீ பேசுறே எங்கே அவர் என்று கேட்டால் முதலிரவு அன்றே ரஹ்மான் பக்கத்து ரூமில் வீணை பிளே பண்ணி பாத்துக்கிட்டிருந்தாராம்னு இணையத்தில் தகவல் உலா வருகிறது.

இதில் ஒருபெண் எவ்வளவு தூரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பாரென்பது சாதாரணமாய் உணரகூடியதொன்று.

தனக்கு சொந்தமானவன் வெறுமனே தன்னை குழந்தை பெற்றுக்கொள்ளூம் இயந்திரமாக பாவிப்பதை எந்த பெண்ணும் ரசிக்கமாட்டாள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.

வயசானகாலத்திலும் இந்தியாவில் பாதிநாள் டுபாயில் உள்ள ஸ்ரூடியோவில் மீதிநாள்  என்று ரஹ்மான் இசையை 24 மணிநேரமும் கட்டிக்கொண்டு அழுதால் எவர்தான் எஸ்கேப் ஆகமாட்டார்.

மற்றும்படி ரஹ்மான் இன்னொரு பெண் தொடர்பு என்பதெல்லாம் இலகுவாக நம்பகூடிய விஷயமா தெரியவில்லை.

இளமையும் அழகும்  இருக்கும் காலத்தில் உலக அழகிகளிலிருந்து  உள்ளூர் கிழவிகள்வரை ரஹ்மான் அலைவீசிய நேரத்தில் எந்த பெண்ணுடனும் கிசு கிசு இல்லாத மனிதன், இப்போ கண்பார்வை மங்கி சோடாபுட்டி கண்ணாடியுடன் திரியும் காலத்தில் கட்டுப்பாட்டை மீறூவாரா தெரியல.

இது தனிமனிதன் பற்றிய விமர்சனங்களல்ல, அவர்களாகவே தமது தனிமனித விஷயங்களை  குடும்பமாக பொதுவெளிக்கு எடுத்து வந்ததால் அனைவரும் அதுபற்றி பேசுவார்கள்.

எது எப்படியோ காரணங்கள் என்னவென்று மலிந்தால் ஒன் லைன் சந்தைக்கு வரும்தானே பார்க்கலாம்.

மணம் முடித்து 29 வருடங்கள்!
மூன்று பிள்ளைகளுக்கு பெற்றோர். அந்த இளைமை காலத்தில் சகிப்பு தன்மையுடன் வாழ்ந்தவர்கள்.அந்த பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி திருமண வயது வந்த பின் பெற்றோர் பிரிவதை நியாயப்படுத்துகின்றீர்கள்.

சாதாரணமாக இளவயதுகளில் சண்டை பிடித்து வாழ்ந்து முதுமைக்காலத்தில் உனக்கு நான் எனக்கு நீ என வாழும் வாழ்க்கைதான் மனித வாழ்க்கை.

மனிதனின் பாதி வாழ்க்கையில் மண வாழ்க்கை முறிவென்றால் அதற்கு காரணங்கள் வேறாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர். ரஹ்மான் குழு கிட்டாரிஸ்ட் மோகினி தே கணவரை பிரிந்தார்!

Kumaresan MNov 20, 2024 15:23PM
mohini.jpg

ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்து அறிவித்த சில மணி நேரங்களில் அவரின் கிட்டாரிஸ்ட் மோகினி  தேவும் கணவரை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மனைவி சாயிரா பானு ஆகியோர் பிரிந்து செல்வதாக நேற்று இரவு அறிவித்தனர். 29 ஆண்டு கால இல் வாழ்க்கைக்கு பிறகு, இந்த தம்பதி இத்தகைய முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த  அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் கிட்டாரிஸ்டாக உள்ள மோகினி தேவும்  தன் கணவரும் கம்போசருமான மார்க் ஹார்ட்சர்ச்சை பிரிவதாக இன்ஸடாகிராமில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள   பதிவில் ‘ நானும் மார்க்கும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இனிமேலும், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கப் போகிறோம். தொடர்ந்து, மாமோஜி, மோகினி தே குழுக்களில் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம் . எங்கள் முடிவை மதிக்கவும்.  நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தந்தை இசைக்குழுவில் பணியாற்றியதால், மோகினிக்கு இயல்பாகவே இசை மீது அதிக ஆர்வம் இருந்தது.  10 வயதில் இருந்து கிட்டார் வாசிக்க தொடங்கினார். தற்போது 29 வயதான மோகினி தே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து உலகம் முழுக்க 40 இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது முதல் இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,  ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்த சில மணி நேரங்களில் மோகினி கணவரை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
https://minnambalam.com/cinema/bassist-mohini-dey-announces-separation-from-husband/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் முதலில் தாய்க்கு அவன் சராசரி பிள்ளைதான் என்பதுபோல்

என்னதான் ரஹ்மான் விருதுகள் வாங்கி குவித்தாலும், உலக இசைமேதைகளில் ஒருவரா இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் நீண்டகாலம் ஆண்ட ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையாளனா இருந்தாலும் ஒரு நல்ல கணவனா அவர் மனைவிக்குஇருந்திருக்க வாய்ப்பேயில்லை.

29 வருட திருமண வாழ்வில் பாதிக்காலம் அமெரிக்கா ஐரோப்பாவிலும், வட இந்தியாவிலும், லண்டனிலும் டுபாயிலும்தான் கழிந்ததென்றால் மீதிக்காலம் இரவில் இசையமைப்பு பகலில் தூக்கம், மனைவிக்கென்று நேரம் ஒதுக்கியதில்லையென்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கார்.

கணவன் என்று இருப்பவன் எப்போபாரு ஆர்மோனியமும் கீபோர்ட்டும் என்று இருந்தால் வாழ்வு நரகம்தான், இவரது சகலை நடிகர் ரஹ்மான் இசையமைப்பாளர் ரஹ்மானின் முதலிரவு நாளன்று வீட்டுக்கு போன் பண்ணியபோது ரஹ்மானின் புது மனைவிதான் பேசினாராம் என்ன நீ பேசுறே எங்கே அவர் என்று கேட்டால் முதலிரவு அன்றே ரஹ்மான் பக்கத்து ரூமில் வீணை பிளே பண்ணி பாத்துக்கிட்டிருந்தாராம்னு இணையத்தில் தகவல் உலா வருகிறது.

இதில் ஒருபெண் எவ்வளவு தூரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பாரென்பது சாதாரணமாய் உணரகூடியதொன்று.

தனக்கு சொந்தமானவன் வெறுமனே தன்னை குழந்தை பெற்றுக்கொள்ளூம் இயந்திரமாக பாவிப்பதை எந்த பெண்ணும் ரசிக்கமாட்டாள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.

வயசானகாலத்திலும் இந்தியாவில் பாதிநாள் டுபாயில் உள்ள ஸ்ரூடியோவில் மீதிநாள்  என்று ரஹ்மான் இசையை 24 மணிநேரமும் கட்டிக்கொண்டு அழுதால் எவர்தான் எஸ்கேப் ஆகமாட்டார்.

மற்றும்படி ரஹ்மான் இன்னொரு பெண் தொடர்பு என்பதெல்லாம் இலகுவாக நம்பகூடிய விஷயமா தெரியவில்லை.

இளமையும் அழகும்  இருக்கும் காலத்தில் உலக அழகிகளிலிருந்து  உள்ளூர் கிழவிகள்வரை ரஹ்மான் அலைவீசிய நேரத்தில் எந்த பெண்ணுடனும் கிசு கிசு இல்லாத மனிதன், இப்போ கண்பார்வை மங்கி சோடாபுட்டி கண்ணாடியுடன் திரியும் காலத்தில் கட்டுப்பாட்டை மீறூவாரா தெரியல.

இது தனிமனிதன் பற்றிய விமர்சனங்களல்ல, அவர்களாகவே தமது தனிமனித விஷயங்களை  குடும்பமாக பொதுவெளிக்கு எடுத்து வந்ததால் அனைவரும் அதுபற்றி பேசுவார்கள்.

எது எப்படியோ காரணங்கள் என்னவென்று மலிந்தால் ஒன் லைன் சந்தைக்கு வரும்தானே பார்க்கலாம்.

அண்ணா ரஹ்மான் அவ‌ர் ம‌னைவியை எவ‌ள‌வு நேசித்த‌வ‌ர் என்று ஒரு நிக‌ழ்ச்சி மூல‌ம் பார்க்க‌ முடிந்த‌து 

அந்த‌ நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்து 5வ‌ருட‌ம் இருக்கும் அந்த‌ நிக‌ழ்ச்சியில் ரஹ்மானின் இர‌ண்டு ச‌கோத‌ரிக‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌வை...................ரஹ்மான் த‌ற்போது ஹிந்து தொட்டு ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் இசை அமைக்க‌ வேண்டி இருக்கு...............ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கு ரஹ்மான் த‌ன‌து ம‌னைவிய‌ அழைத்து சென்று இருக்கிறார்

ரஹ்மான் விள‌ம்ப‌ர‌ தாரி கிடையாது தான் என்ன‌ செய்யிறேன் குடும்ப‌த்தோடு எங்கை நிக்கிறேன் என‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் அவ‌ர் சிறு புகைப‌ட‌த்தை கூட‌ ப‌திவேற்ற‌ம் செய்த‌து கிடையாது......................

ரஹ்மானே சொல்லி விட்டார் இது எங்க‌ட‌ குடும்ப‌ பிர‌ச்ச‌னை ஊட‌க‌ங்க‌ளோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ த‌லையிட‌ வேண்டாம் என்று

ரஹ்மான் த‌ப்பான‌ ந‌ப‌ர் போல் சில‌ர் அவ‌ரை சித்த‌ரிக்க‌ விரும்புகின‌ம்

ரஹ்மானும் அவ‌ர் ம‌னைவியும் மீண்டும் ஒன்னு சேர‌ முய‌ற்ச்சி ந‌ட‌க்குது இரு த‌ர‌ப்பிலும் அவ‌ர்க‌ள் மீண்டும் ஒன்னு சேர்ந்தால் ( ப‌யில்வான் மாதிரியான‌ சில்ல‌றை காசுக்கு கூவும் கூட்ட‌த்தை ம‌க்க‌ள் புர‌க்க‌னிக்க‌னும் )......................................

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்….

இந்த செய்திக்கு என் ரியாக்‌ஷன்👇🤣

பகிடிதான் நோ ரென்ஷன் பிளீஸ்🙏

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாலி said:

வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும்.

ஒஸ்கார் விருதுவாங்கியவருக்கே இது தெரியாமல் போச்சுது. ஆனால் ஒன்றுமட்டும் விளங்கிது கட்டின பொண்டாட்டியிடம் நல்ல கணவன் என்ற விருது வாங்குவது மிக க்கடினமுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

‘எங்கள் அப்பாவின் கண்ணியத்தை சிதைக்காதீர்கள்!’: ஏ.ஆர். ரஹ்மானின் மகன் காட்டம்!

Kumaresan MNov 22, 2024 17:32PM
ameen.jpg

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாயிரா பானுவை பிரிந்தார். இதையடுத்து, சோசியல் மீடியாவில்  மோகினி தே என்ற கிட்டாரிஸ்ட்டுடன் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக வதந்தி கிளம்பியது. இந்த தகவலை சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா மறுத்திருந்தார்.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, ‘எனது தந்தை ஒரு லெஜன்ட். இசையில் மட்டுமல்ல மதிப்பு, மரியாதை, அன்பை செலுத்துவதிலும் அவர் லெஜண்ட்.

அவரை பற்றி தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும் போது வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை மற்றும் மரபு பற்றி பேசும் போது நாம் அனைவரும் உண்மை மற்றும் மரியாதையின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை எழுதுவதையோ  அல்லது பரப்புவதையோ தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் பாதுகாப்போம்’  என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹீமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ‘எப்போதும் நினைவு கொள்ளுங்கள். வதந்தி வெறுப்பை பரப்புபவர்களால் உருவாக்கப்படுகிறது. அறிவில்லாதவர்களால் பரப்பப்படுகிறது. முட்டாள்களால் நம்பப்படுகிறது ‘என்று தெரிவித்துள்ளார். மற்றோரு பதிவில் ரஹீமா, ‘நீங்கள்தான் எப்போதும் எங்களுக்கு ராஜா. நீங்கள்தான் எங்களுக்கு எப்போதும் தலைவர். வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானும் அவரின் மனைவி சாயிரா பானுவும் 29 ஆண்டு கால மண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் ஒரு மகன் உண்டு. அனைவருமே இசைத்துறையில்தான் உள்ளனர்.
 
https://minnambalam.com/cinema/lets-honour-his-dignity-ar-rahmans-son/

  • கருத்துக்கள உறவுகள்

வலிதரும் விவாகரத்து! எப்போது உணர்வாரோ ரகுமான்?

கனிவும், பணிவும், கர்வமில்லா மென்மையாளருமான ஏ.ஆர்.ரகுமானை அவரது மனைவி பிரிந்து செல்வதானது சமூகத் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் விவாகரத்து ஆச்சரியமானதல்ல என்றாலும், நமது பேரன்புக்குரிய ஒழுக்க சீலரான ரகுமான் விஷயத்தில் நடந்திருப்பது குறித்த ஒரு நுட்பமான அலசல்;

குடும்பம் என்ற அமைப்பே சமீப காலமாக கேள்விக்கு உள்ளாகி வருகிறது. எங்கெங்கு பார்த்தாலும் விவாகரத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குடும்ப நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. குடும்பங்களில் நிம்மதி பறி போவது சமூக இயக்கத்தையே பாதிக்கும் என்பதால், இது குறித்த பரந்துபட்ட விவாதங்கள் தேவைப்படுகின்றன.

இயற்கை விதிகளின்படி எதிரெதிர் பாலினமாகவுள்ள ஆண்,பெண் இருவருக்குமே பரஸ்பர துணை தேவைப்படுகிறது. பெண் இல்லாமல் ஆணும், ஆண் இல்லாமல் பெண்ணும் வாழ இயலாது. எனில், இந்த உறவை எப்படி கண்ணியத்துடன் ஏற்றுத் தொடர்வது என்பதே தற்போதைய சமூகத்தின் முன் உள்ள கேள்வியாகும்.

சினிமா பிரபலங்கள் விஷயத்தில் நாம் பல திருமண முறிவுகளை பார்த்துள்ளோம்.

நடிகர் ஜெமினி கணேசன் – சாவித்திரி விஷயத்தில் ஏற்பட்ட பிரிவு சாவித்திரியின் வாழ்க்கையை பெரும் துயரத்தில் தள்ளியது.

நடிகர் கமலஹாசன் அடுத்தடுத்து மூன்று பெண்களோடு குடும்பம் நடத்தியதில் மூவரும் கடும் மன உளைச்சலில் அவரிடம் இருந்து விலகினர்.

சமீபத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் திருமண பந்தங்களும் முடிவுக்கு வந்தன.

பெரும்பாலான சினிமா கலைஞர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க மறுப்பவர்கள். சினிமா கலைஞர்கள் சுய ஒழுக்கத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட இணையருக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

திரைப்படத் துறையில் இருந்தாலுமே கூட, சுய ஒழுக்கத்தோடு வாழ முடியும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களும் உள்ளனர். கே.பி.சுந்தராம்பாள், சின்னப்பதேவர், நடிகர் சிவகுமார்..என சென்ற தலைமுறையினரை சொல்ல முடியும் என்றால், இந்த தலைமுறையில் ஏ.ஆர்.ரகுமான் சுய ஒழுக்கத்தில் கேள்விக்கு அப்பாற்பட்டவராக இருந்துள்ளார் என அவருடன் மிக நெருக்கமாக நீண்ட காலம் பயணித்த சக இசை கலைஞர்களே சொல்கிறார்கள். எனில், இந்த விவாகரத்து ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களின் மொழியிலேயே புரிந்து கொள்வோம்.

00009999.jpg

ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் 30 வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தான் இருக்கிறது.உடைந்த மனங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இருந்தாலும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் சேராமல் போனாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்

இது பற்றி சாய்ரா பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ராபானு எடுத்துள்ளார். அவர்கள் உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதும், இருவருக்கும் இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சவாலான தருணத்தில் அவரின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆக, ரகுமான் தவறான உறவை கொண்டுள்ளார் என்றோ, தன்னை வார்த்தைகளாலோ, பிசிக்கலாகவோ துன்புறுத்தினார் என்றோ அவரது மனைவி கூறவில்லை. இழப்பீடுகளோ, ஜீவனாம்சமோ கேட்கவில்லை. அதே போல ரகுமானும் தன் மனைவி மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

00008888-2.jpg

இந்த நிலையில் கோர்ட்டில் விவகாரத்து வழக்கு போடாமல் ஜூடீசியல் செப்பரேசன்’ (judicial seperation) என்ற ஏற்பாட்டின்படி இருவரும் தங்களை பிரித்துக் கொள்கிறார்கள்! இவர்கள் மனம் மாறி, பிறகு இணைவதற்கும் வாய்ப்பு உள்ளது. பிரிவானது இவர்களை சுயபரிசோதனைக்கு தள்ளும் போது இந்த மாற்றம் நிகழலாம்.

இந்த பிரிவை பொறுத்த வரையில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் ரகுமான் குடும்பத்திற்கு நேரம் தரவில்லை. அவரது பிசியான வேலை பளுவால் மனைவிக்கு கொஞ்சமும் நேரம் தர முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் குடும்ப விழாக்களுக்கு இருவரும் சேர்ந்து செல்வதோ, ஷாப்பிங் செல்வதோ என்பது இல்லாமல் போகிறது. இதனால் எல்லா உறவுகளுமே அன்னியப்பட்டு சாய்ராபானு சேர்ந்து வாழ்ந்தாலுமே தனிமையில் வாழ்வது போன்ற உணர்வையே அனுபவித்து மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். அவருக்கு தன் மனதில் ஏற்படுகிற எண்ணங்களை, வலிகளை, சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள வழியில்லாத தகிக்கும் தனிமையே இந்த முடிவுக்கு காரணமாகும்.

பொதுவாக பெண்கள் உறவுகளோடு பேசிப் பழகி, கலந்து வாழ விரும்புவார்கள். உறவுகள் தரும் சந்தோஷமே அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதிலிருந்து அவர்களை துண்டித்துவிட்டால், அவர்கள் துவண்டு போவார்கள்.

கணவனோடும், அவன் தொடர்பான உறவுகளோடும் கிடைக்கும் பிணைப்பும், பந்தமுமே அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நம்புவார்கள். அவருக்காகவே நான் இருக்கிறேன் எனும் போது அவரும் ஓரளவுக்கேனும் எனக்காகவும் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது இயல்பே! கணவனின் அன்பும், அக்கறையும், அருகமையும் இல்லாமல் ஒரு பெண் மண உறவை தொடர்வது என்பது அவளைப் பொறுத்த வரை ஒரு நரகமேயாகும்.

115474558.jpg

ஏ.ஆர்.ரகுமான் சர்வதேச அளவில் பிசியான ஒரு இசை அமைப்பாளர்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு,

ஒவ்வொரு பொழுதும் ஒரு பெரிய விஐபியின் சந்திப்பு,

இசையறாத இசைப்பணி,

இத்துடன் ஒரு சர்வதேச தரத்திலான இசைக்கல்லூரியையும் நிர்வகிக்கிறார்.

எத்தனை உயரம் சென்றாலும், அவர் மேலும், மேலும் பறக்க நினைக்கிறார்.

எத்தனை விருதுகள் கிடைத்தாலும், அவர் மேன்மேலும் சாதிக்க ஓய்வின்றி பாடுபடுகிறார்.

உலகப் பேரழகிகளே ரகுமான் பார்வை தங்கள் மீது படாதா? என ஏங்கிய போதும், அவர் இசைந்து கொடுத்தவர் இல்லை.

இத்தனை பெருமைக்குரிய தன் அன்புக் கணவர் பார்வையும், கவனமும் தன் பக்கம் திரும்பாதா? என உடனிருந்து காத்துக் காத்துப் பார்த்து ஏமாற்றமடைந்ததன் விளைவே, அவர் மனைவி எடுத்த முடிவாகும்.

29 வருட காத்திருப்பு என்பது மிக நீண்ட காத்திருப்பாகும். ரகுமான் தன்னுடைய இறுதி மூச்சு வரை இப்படித்தான் வாழ்வார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? என அவர் மனைவி வருந்துவதில் யாரும் குறை சொல்ல முடியாது.

ரகுமானின் முன்னோடியான இளையராஜாவும் இப்படித்தான் தன் மனைவியை அலட்சியப்படுத்தினார். இதே அனுபவங்களை அவரது மனைவியும் அனுபவித்தார். அதன் விளைவை இளையராஜாவும் சந்திக்க நேர்ந்தது என்றாலும், அவர்களுக்கு இடையே பிரிவு என்பது ஏற்படவில்லை.

பொதுத் தளத்தில் அவரவர் துறையில் வரலாற்று நாயகனாக ஒருவர் சாதிக்க துடிப்பதும், அடைந்த புகழை தக்க வைக்க தொடர்ந்து உழைப்பதும் தவறில்லை. ஆனால், யார் ஒருவர் வாழ்வதற்கும் அன்பே அடிப்படை. வாழ்க்கை துணையும், குடும்பமுமே நம்மை வாழ வைக்கும் ஆதார சக்தியாகும். ஆண்களின் உலகம் மிகப் பெரிது. ஆனால், பெண்களின் உலகம் என்பது பெரும்பாலும், கணவனும், பிள்ளைகளுமே!

000000-1.jpg

ரகுமான் தன் மனதிற்கு சாந்தியும், அமைதியும் வேண்டி தர்க்காக்களுக்கும், மசூதிகளுக்கும் செல்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டு, தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அவரது மனைவியோ கணவனின் தரிசனத்திலும், அருகமையிலுமே அந்த மனநிறைவை காணத் துடித்தார். அது ஒருபோதும் கிடைக்க வாய்ப்பில்லை எனும் போது, விரக்தியின் விளிம்புக்கு சென்றுள்ளார். இவ்வளவு மென்மையான கலைஞனால் தன்னை மட்டுமே எண்ணி வாழும் தன் மனைவியின் வலிகளை உணர முடியாதது துரதிர்ஷ்டமே!

வாழ்க்கை பல பரிமாணங்களைக் கொண்டது. தொழிலில் கிடைக்கும் வெற்றியும், பணமும், புகழும் மட்டுமே வாழ்க்கையல்ல. இதை ரகுமானைப் போன்றவர்கள் உணர்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/19921/ar-rahuman-wife-divorce/

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

 வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.

வாலி எழுதியதை பார்த்து விட்டு….

டிரம்ஸ் என்றால் காலால் மிதித்து மிதித்து அடிக்க வேண்டும் என யாரேனும் முடிவெடுத்தால் - பின் விழைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல🤣.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

வாலி எழுதியதை பார்த்து விட்டு….

டிரம்ஸ் என்றால் காலால் மிதித்து மிதித்து அடிக்க வேண்டும் என யாரேனும் முடிவெடுத்தால் - பின் விழைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல🤣.

எல்லாம் அளவோடு இருந்தால் தான் உணவு. இங்கே எல்லாவற்றையும் பணம் விழுங்கி முன்னால் நின்று வழி நடாத்துதல் தான் காரணம். பணம் வேண்டும் அதிலும் அதிகம் வேண்டும். அத்துடன் அதுவும் வேண்டும். இவை இரண்டும் அதிக அளவில் சமமாகக்கிடைத்தல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சாத்தியமற்றது.  எனவே...

அது சரி எல்லாப் புகழும் தனுசுக்கே என்று ஒன்று போய்க்கிட்டிருக்கே?? உயிரே நீதானே நீதானே என்று இருவரும் பாடியது ?????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, வாலி said:

இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.

வீணை,உடுக்கு,புல்லாங்குழல் எல்லாம் பாவித்து தான் மூன்று பிள்ளைகளையும் பெற்று ....அவர்களும் கலியாணம் செய்து/செய்யும் வயதில் இருக்கின்றார்கள்.29 வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கை பிரிவு மனப்பான்மை வருகிறதென்றால் அது பாலியல் பிரச்சனையாகவே இருக்க முடியும். பாலியல் ஈர்ப்பு என்பது சகிப்பு தன்னமையுடன் வருவது. 30 வருட திருமண வாழ்க்கையின் பின் சகிப்பு தன்மை இல்லையெனில் அது தற்கொலைக்கு சமம்.

அடுத்தது... 

இளவயதில் என்னதான் கூத்தடிச்சாலும் திருமணம் என வரும் போது தன் இனம் தன் மொழி தன் மதம் தன் மண்  மக்களை மணம் முடித்தால் பிற்கால வாழ்க்கையில் அதிக பிரச்சனை வராது. இது நான் நேரடியாக கண்ட அனுபவவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அது சரி எல்லாப் புகழும் தனுசுக்கே என்று ஒன்று போய்க்கிட்டிருக்கே?? உயிரே நீதானே நீதானே என்று இருவரும் பாடியது ?????

ஓ…நீங்கள்…சுசித்திரா தனுஷ்-கார்திகுமார் பற்றி சொன்ன கோணத்தில் இதை அணுகுகிறீர்களா🤯
நான் அப்படி நினைக்கவில்லை.

தனுசுடன் வேலை பார்த்த, அமலா பால், டிடி, விஜை ஜேசுதாஸ், சுச்சி,ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என அனைவரும் வேலை செய்து முடிந்த சில மாதங்களில் டிவோர்ஸ்.  

அதைத்தான் சொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

எல்லாம் அளவோடு இருந்தால் தான் உணவு. இங்கே எல்லாவற்றையும் பணம் விழுங்கி முன்னால் நின்று வழி நடாத்துதல் தான் காரணம். பணம் வேண்டும் அதிலும் அதிகம் வேண்டும். அத்துடன் அதுவும் வேண்டும். இவை இரண்டும் அதிக அளவில் சமமாகக்கிடைத்தல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சாத்தியமற்றது.  எனவே...

அது சரி எல்லாப் புகழும் தனுசுக்கே என்று ஒன்று போய்க்கிட்டிருக்கே?? உயிரே நீதானே நீதானே என்று இருவரும் பாடியது ?????

விசுகர்!
ஒரு சில தொழில்கள் குடும்ப வாழ்க்கைக்கு உதவாதவை. அந்த வேலையில் மண்டையை மூழ்கடித்தே ஆக வேண்டும்.நேரகாலம் இருக்காது.விடுமுறை காலங்கள் இருக்காது. சனி ஞாயிறு போன்ற ஓய்வு நாட்கள் இவர்களுக்கு இல்லை. 

வாலிப வயதில் எல்லாம் சரியாக  அமைந்தது போல் இருக்கும். வயது போகப்போக.... 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரிந்த இருவருமே பாலியல் தொடர்புகள் இட்டு குறை ஏதும் சொல்லவில்லை. 

நாம்தான் புதியதாக எம் கற்பனை குதிரையை தட்டி விட்டு கதை புனைகிறோம்.

அவர்கள் இருவரும் சொன்னது - காதல் இருந்தும் தமக்குள் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி வந்து விட்டது என்பதை மட்டுமே.

இது மிக இயல்பான காரணமாக எனக்கு தெரிகிறது.

29 வருடம் என்பது நீண்ட காலம் எனிலும், ஈர்ப்பு இல்லாத போது, கிடந்து ஏன் உழலுவான் என்று நினைத்துள்ளனர் போலும்.

நாம் வாழும் நாடுகளில், 50 வயது தாண்டிய எத்தனை பேர் நாட்டில் 6 மாதம், புலம்பெயர் நாட்டில் 6 மாதம் என இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனைவிகள் பெரும்பாலும் புலம்பெயர் நாட்டில்தான் இருப்பார்கள்.

ஊரில் கூட பல உறவுகள், கணவன் முன் அறையில் தானே போட்டு சாப்பிடுவார், மனைவி வீட்டில் என்ற நிலையில் 80 களிலேயே நான் கண்டதுதான்.

இவையும் கூட அறிவிக்கப்படாத டிவோசுகள்தான்.

இப்படி சமூக ஓப்பனைக்காக இழுத்து கொண்டு போவதை விட, பிரிந்து வாழும் முடிவு அவர்களுக்கு பிடித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே முடியும்.

பிள்ளைகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள்.

இருவருக்கும் இனிவரும் வாழ்க்கை மனம்போல அமைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரவர் தனிப்பட்ட விடயம் அதில் மூக்கை நுளைப்பது அழகல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.