Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/199367

  • கருத்துக்கள உறவுகள்

உருப்பட்ட மாதிரித்தான்.  JVP க்குக் கொடுக்கப்படும் சமிங்சை என்ன? 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை சந்திப்புக்கள் நடந்திருக்கும்.ஒரு அங்குல முன்னேற்றமாவது கண்டார்களா?இந்தியா போட்ட ஒப்பந்தத்தையே கடந்த கால சிங்கள சிறிலங்கா அரசுகள் மதிக்கவில்லை.அதுவும் குறிப்பாக தற்போதைய அரசு இந்திய இலங்கை ஒப்பந்ததை வழக்குப் போட்டு செயலிழக்க வைத்த அரசு.இந்த இலட்சணத்தில் இந்தியத் தூதரைச் சந்தித்து என்ன புடுங்கப் போகினம் .தங்கள் நாட்டு மீனவர்களையே காப்பற்றத் துப்பில்லாத இந்திய அரசு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உருப்பட்ட மாதிரித்தான்.  JVP க்குக் கொடுக்கப்படும் சமிங்சை என்ன? 

☹️

இது ஒரு அழுத்தம் இல்லையா? இவர்கள் செய்வது சரி என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா அனுரா இலங்கை அரசியலில் இருந்து உலகில் இருந்து விடுதலை ஆகுகின்றார் அதற்கான வேலைகள் மும்முரமாக நடை பெறுகின்றன .

ஒருகாலமும் இந்த அழகானா தீவை சுபிட்சமாக அபிவிருத்தி அடைந்த நாடாக இருக்க பக்கத்தில் உள்ள வடக்கங்கள் விட மாட்டார்கள் அதே போல் தலாதா மாளிகையில் தமிழர் எதிர்ப்பு கருத்துக்கள் வைத்து அங்குள்ள பிக்குகள் செய்யும் தமிழர் எதிர்ப்பு அரசியலும் நிறுத்தனும் நடக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உருப்பட்ட மாதிரித்தான்.  JVP க்குக் கொடுக்கப்படும் சமிங்சை என்ன? 

☹️

வேறை என்ன புலிகளின் அரசியலமைப்பை கடைசி யுத்தத்தில் நடேசன் போன்றவர்களை தேடி தேடி போட்டு தள்ள சொல்லி விட்டு தேர்தலில் ............... ஒரு தும்பு கட்டையை தேர்தலில் நிக்க வைத்தாலும் தமிழ் மக்கள் வாக்கு போட்டு வெற்றி பெற வைப்பார்கள் என்று திமிர் மமதை பேச்சை கதைத்தவர்கள் யார் ?

19 minutes ago, பெருமாள் said:

அநேகமா அனுரா இலங்கை அரசியலில் இருந்து உலகில் இருந்து விடுதலை ஆகுகின்றார் அதற்கான வேலைகள் மும்முரமாக நடை பெறுகின்றன .

உண்மையான இதய சுத்தியுடன் அனுரா நடந்து கொண்டால் அவரின் பாதுகாப்பில் அவர் கவனமெடுப்பது மிக மிக முக்கியமானது டெல்லி எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு இருக்காது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, பெருமாள் said:

அநேகமா அனுரா இலங்கை அரசியலில் இருந்து உலகில் இருந்து விடுதலை ஆகுகின்றார் அதற்கான வேலைகள் மும்முரமாக நடை பெறுகின்றன .

சரியாக சொன்னீர்கள். 
நல்ல அமைதியோ கெட்ட அமைதியோ......
இலங்கையை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சரியாக சொன்னீர்கள். 
நல்ல அமைதியோ கெட்ட அமைதியோ......
இலங்கையை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.

அதை முதலில் சிங்களவர்கள் புரிந்து கொள்ளனும் .புரிந்து கொண்டால் இலங்கை தீவு அழகிய சொர்க்கம்  நடக்குமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, பெருமாள் said:

அதை முதலில் சிங்களவர்கள் புரிந்து கொள்ளனும் .புரிந்து கொண்டால் இலங்கை தீவு அழகிய சொர்க்கம்  நடக்குமா ?

சிங்களவர்களுக்கு தமிழர்கள் அன்றும் இன்றும் நேசக்கரம் நீட்டியவர்கள்.
மோட்டு சிங்களவன் அதை தவறாக புரிந்து கொண்டு நடந்தால் யார்தான் என்ன பண்ணுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இது ஒரு அழுத்தம் இல்லையா? இவர்கள் செய்வது சரி என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்)

இலங்கைத் தமிழர்  இந்தியாவின் தூக்குதடிகள் அல்ல. 

42 minutes ago, பெருமாள் said:

1) அநேகமா அனுரா இலங்கை அரசியலில் இருந்து உலகில் இருந்து விடுதலை ஆகுகின்றார் அதற்கான வேலைகள் மும்முரமாக நடை பெறுகின்றன .

2) ஒருகாலமும் இந்த அழகானா தீவை சுபிட்சமாக அபிவிருத்தி அடைந்த நாடாக இருக்க பக்கத்தில் உள்ள வடக்கங்கள் விட மாட்டார்கள் அதே போல் தலாதா மாளிகையில் தமிழர் எதிர்ப்பு கருத்துக்கள் வைத்து அங்குள்ள பிக்குகள் செய்யும் தமிழர் எதிர்ப்பு அரசியலும் நிறுத்தனும் நடக்குமா ?

1) 100

2) நாம்  இலங்கைத் தமிழர்களாக நம்பிக்கையூட்டினால் ஒருவேளை உங்கள் விருப்பம்போல  நடக்கலாம். 

21 minutes ago, குமாரசாமி said:

சரியாக சொன்னீர்கள். 
நல்ல அமைதியோ கெட்ட அமைதியோ......
இலங்கையை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.

பழி புலம்பெயர் விபு க்கள் மீது போடப்படும். 

19 minutes ago, பெருமாள் said:

அதை முதலில் சிங்களவர்கள் புரிந்து கொள்ளனும் .புரிந்து கொண்டால் இலங்கை தீவு அழகிய சொர்க்கம்  நடக்குமா ?

தமிழர்  நாம்  முதலில் இலங்கைத் தமிழர்களாக நடக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kapithan said:

பழி புலம்பெயர் விபு க்கள் மீது போடப்படும். 

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஹிந்தியனுக்கும் விடுதலைப்புலிகள் வியாபாரப்பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

தமிழர்  நாம்  முதலில் இலங்கைத் தமிழர்களாக நடக்க வேண்டும். 

பலமுறை நடந்து ஏமாந்து கொண்டோம் இனியும் நம்ப சொல்கிறிர்கள் வேணாம்யா பேராண்டி நம்ம கட்டை இந்த புலம்பெயர் தேசம்களில் வேகி போகட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

பலமுறை நடந்து ஏமாந்து கொண்டோம் இனியும் நம்ப சொல்கிறிர்கள் வேணாம்யா பேராண்டி நம்ம கட்டை இந்த புலம்பெயர் தேசம்களில் வேகி போகட்டும் .

நாம்  இந்தியாவை குறிப்பாகத் தமிழ்நாட்டை எங்கள் தாய்த் தமிழகமாகவே இதுவரை  கருதி வந்திருக்கிறோம். இது வரலாறு. 

இனிமேலாவது இலங்கைத் தமிழராக நடந்துகொள்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்

வரிசையா ஓடிட்டானுகள் முதலாளியுடன் கூத்தடிக்க 
இதுதான் இவங்க சர்வதேசத்துக்கு சொல்லும் செய்தி. இது மட்டும்தான் இவர்களால் முடிந்ததும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சிக்கு சந்திப்பதற்கு வேறு ஆட்கள் கிடைக்கவில்லையோ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தமிழரசு கட்சிக்கு சந்திப்பதற்கு வேறு ஆட்கள் கிடைக்கவில்லையோ??

ஒருதரும் சந்திக்க மாட்ட எண்டிட்டினம்...என்ன செய்வது ..இருப்பை காட்ட இதையாவது செய்ய வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தம் இல்லாம உலக -அரசியல்- வரலாறு புத்தகமெல்லாம் மேசையில் கிடக்கு .. ? முக்கியமானது இல்லையாப்பா..!

BIG_ginger.png

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

வரிசையா ஓடிட்டானுகள் முதலாளியுடன் கூத்தடிக்க 
இதுதான் இவங்க சர்வதேசத்துக்கு சொல்லும் செய்தி. இது மட்டும்தான் இவர்களால் முடிந்ததும் 

திருப்பி திருப்பி இந்தியாவின் காலை பிடித்துத் தான் இலங்கைத் தமிழர்கள் வாழ வேண்டுமா என்ன? 

இலங்கைத் தமிழர் தனி தேசிய இனம், இந்திய தமிழர்களும் தமிழர்களே எனினும் எங்கள் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்க இந்தியனுடன் செல்வதை விட சிங்களாவரோடு சேர்ந்து விட்டுக்கொடுத்து வாழ்வது  தான் சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

பலமுறை நடந்து ஏமாந்து கொண்டோம் இனியும் நம்ப சொல்கிறிர்கள் வேணாம்யா பேராண்டி நம்ம கட்டை இந்த புலம்பெயர் தேசம்களில் வேகி போகட்டும் .

நாம் சிங்களவர்கள் பார்வையில் இருந்தும் காரியங்களை நோக்க வேண்டும் பெருமாள். அவர்களுக்கு தமது இன மொழி அடையாளங்களை காப்பாற்ற இலங்கை என்ற இந்த சிறு தீவை விட்டால் வேறு போக்கிடம் இல்லை 

இந்தியாவோ இலங்கை தமிழரை தனது அரசியல் கருவியாக இலங்கையில் பாவிக்கின்றது. 

இலங்கையை அமைதியான தீவாக வைத்திருக்க இந்தியா ஒருபோதும் விடாது 

இந்த நிலையில் ஒரு சிங்களாவராக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

தமிழர்களுக்கு இந்தா பிடி என்று வெற்றிலை பாக்கு தட்டுடன் வட கிழக்கை இணைத்து தனி மாநிலமாக்கி போலீஸ் அதிகாரத்துடன் கொடுத்து விடுவீர்களா? அப்படி கொடுத்தால் இந்தியா மீண்டும் மீண்டும் இங்கு தமிழ் உணர்வை பட்டை தீட்டி (சீமான் வைகோ போன்றவர்கள் மூலம் ) ஒரு நெருப்பாக இலங்கை தமிழரை சிங்களவருக்கு எதிராக அடுத்த 50 வருடம் கழித்தும் பயன் படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?  

நாம்  விட்டுக்கொடுத்து சிங்களாவரோடு இணைத்து செல்வதே அமைதியான இலங்கையை உருவாக்கும்.

இந்தியாவின் கண்ணி வெடிகளாக நாம் ஏன் இருக்க வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அனுராவுடன் சந்தித்து கதைப்பதே சிறந்தது . இந்த கூட்டம் சிங்களவனை உசுப்பேத்தி பழைய நிலைக்கு தள்ள தான் இந்த அவசரம் .... திருந்தாத ...ஆனால் மக்களின் நிலைப்பாடு அனுராவுக்கு தெரியும் இந்த கதர்களை பொருள்படுத்த மாட்டார். நேருக்கு நேர் கதைப்பதே நல்லம் ...இந்த இடைத்தூதர்களை  நம்பி அழிந்தது போதாதா 

Edited by தமிழன்பன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசுக்கு இந்தியா கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்; தூதுவரை நேரில் சந்தித்து தமிழரசின் எம்.பிக்கள் வலியுறுத்து

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் அதன் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

https://thinakkural.lk/article/312520

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.

large.IMG_7799.jpeg.c1da480ef827b3d1403e

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2024 at 09:04, Kavi arunasalam said:

large.IMG_7799.jpeg.c1da480ef827b3d1403e

புதிய அரசமைப்பு, மீனவர் விவகாரம்; சம்பந்தன், சுமந்திரனுடன் இந்தியத் தூதர்  பேச்சு!

_118978225_tna-highcommissioner-03.jpg

_118978222_tna-highcommissioner-01.jpg

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு | Tamil Representatives Meeting Indian Ambassador

AVvXsEgu3lzLbyt5eoE4dbN-5LOjpg3yNM9Pu3YrQmP7GxnCixTfsxFjOl9i9BG_3DlQsOgZnLnH9hppb-T3vzukO1AOcBKQAOVvnfUY3JlZnmTHuQbg88MQnFTnU2pE7UbVHp0NeicUBIj_The1QTJkDElBwr6KpGWUoMaO6qHdB2iBfABRGZhHMxi2LQePY7iw=w640-h366  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு- -

Tamilmirror Online || இந்தியத் தூதுவர் - சுமந்திரன் சந்திப்பு

இந்திய தூதுவர்  சந்திப்புக்கள்.
அதிலும்... குழுவாக, கூட்டாக, சம்பந்தனுடன், சாணக்கியனுடன்,  தன்னந் தனியாக... என்று, 
சுமந்திரன் இந்தியத் தூதுவர்களை சந்திப்பதில் கில்லாடி. 

அப்போதெல்லாம்... ஓவியம் கீறுபவர்கள் கண்ணை இறுக மூடிக் கொண்டு இருப்பார்கள். 😂

ஸ்ரீதரன் சந்தித்தவுடன்  விழுந்தடித்து... ஓவியம் கீறத் தொடங்கி விடுவார்கள்.
அது... அவர்களின் டிசைன்.  😃

இதற்குள்... தாங்கள் நடுநிலைமை  என்று  சொல்லிக் கொண்டு திரிவார்கள். 
நாங்க... அதை  நம்பீட்டம்.   🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் கீற மட்டுந்தான் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.