Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 NOV, 2024 | 08:04 PM

image
 
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளது பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கைது சம்பவத்தில் கிராம அலுவலருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள். 

மேலும் வேறு சிலரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முகநூல் பதிவுகளை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்கள்.

https://www.virakesari.lk/article/200045

  • Replies 164
  • Views 9.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

  • நிழலி
    நிழலி

    சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்

அனுர பிரிகேட் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அனுர பிரிகேட் எங்கே?

சட்டம் நீதி எல்லோருக்கும் சமன் என்கிறார்கள். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

பேஸ்புக் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தைப் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் கஜந்தரூபன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றும், புதிய நாடாளுமன்றம் அது தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி அநுர உள்ளிட்ட பல தரப்பினரும் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். எனினும், என்ன காரணத்துக்காக கடந்த அரசாங்கங்களால் தமிழர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதோ அதேநிலைமை தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.  (ப)

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

#Eelam #srilanka #jaffna #uthayandigital #news

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சவுடன் அரைமணித்தியாலத்திலை நிற்கிற அமைச்சர் அந்த இடத்தில் நின்றிருக்க வேணுமே..

அதை படமெடுத்து விற்றுப்பிழைக்கும் கூட்டம் பத்து நிமிசத்தில் நின்றிருக்குமே..

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில்  தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தமாக எந்த அடையாளங்களும் இல்லாமல் மாவீரர் நாளை அனுஷ்டிக்கலாம் என அமைச்சக உத்தரவு உண்டு.

ஜேர்மனியில் இருந்து கொண்டு தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் தரவேற்றினாலே தூக்குகின்றார்கள். நிலைமை இப்படியிருக்க.....

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் அனுபவத்தில் பாடம் படிக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் அனுபவப்பட வேண்டியதுதான். 

😏

4 hours ago, alvayan said:

அடிச்சவுடன் அரைமணித்தியாலத்திலை நிற்கிற அமைச்சர் அந்த இடத்தில் நின்றிருக்க வேணுமே..

அதை படமெடுத்து விற்றுப்பிழைக்கும் கூட்டம் பத்து நிமிசத்தில் நின்றிருக்குமே..

இயலாமை வெளித் தெரிகிறது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவில்  தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தமாக எந்த அடையாளங்களும் இல்லாமல் மாவீரர் நாளை அனுஷ்டிக்கலாம் என அமைச்சக உத்தரவு உண்டு.

ஜேர்மனியில் இருந்து கொண்டு தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் தரவேற்றினாலே தூக்குகின்றார்கள். நிலைமை இப்படியிருக்க.....

குசா, 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று பதவிக்கு வந்தவர்கள், அரியணை ஏறியதும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க மாட்டோம் ஆனால் பயன்படுத்தவும் மாட்டோம் என சுருதியை மாற்றினார்கள்.

இன்று அதே சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது சரியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, MEERA said:

சந்திரிக்கா தொடக்கம் மகிந்த ஈடாக  இதே வாக்குறுதிகளை தானே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
அதை நம்பிக்கொண்டு வாழ்வது யார் தவறு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சந்திரிக்கா தொடக்கம் மகிந்த ஈடாக  இதே வாக்குறுதிகளை தானே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியென்றால் அநுரவையும் அவனது கூட்டத்தையும் எதற்காக சிலர் வராது வந்த மாமணியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்பாகப் பேசுவோரும் புலநாய்வுத்துறையினரால் இன்றுவரை அச்சுருத்தப்பட்டே வருகின்றனர்.
 
அப்படியான ஒருவர்தான் பவநேசன். தமிழர் தாயகத்தின் அனைத்து மூலைகளுக்கும் (எல்லையோரக் கிராமங்கள் உட்பட) சென்று காணொளிகளைப் பதிவிடுவது, ஊரவர்களுடன் பேசுவது, முன்னைய காலங்களுக்கும் இன்றிருக்கும் நிலைமைகளுக்குமான வித்தியாசத்தினை மக்களிடமிருந்தே கேட்டு அறிவது, சிறுவர்களுடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வது என்பது இவரது வழமை. இவரை அண்மைக்காலமாக எல்லையோரக் கிராமங்களுக்குச் செல்வதையோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதையோ செய்யவேண்டாம் என்று வீட்டிற்கு வந்த புலநாய்வுத்துறையினர் அச்சுருத்தியிருந்தனர். இதன் பின்னர் அவர் அவ்வாறான காணொளிகளை வெளியிடுவதை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் சில ஊர்களுக்குச்  சென்று வரத் தொடங்கினார். இதனையும் செய்யவேண்டாம் என்று மீண்டும் புலநாய்வுத்துறையினர் இவரது வீட்டிற்குச் சென்று அச்சுருத்தியிருந்தனர். அநுர ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது ஆட்சியில் நடக்கும் நல்ல விடயங்கள் குறித்தும், தமிழர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்றும் அடிக்கடி இப்போது பேசிவரும் நிலையில் நேற்றைய முந்தினம் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் புலநாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்து தமக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இவர் மாவீரர் தினம் குறித்தோ, தலைவரின் பிறந்த தினம் குறித்தோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதுதான் உண்மை.  

ஆக மகிந்த - கோத்தா ஆட்சிக்கும் சந்தர்ப்பவாதத் தமிழர்கள் கடவுளாகப் போசிக்கும் அநுரவிற்கும் இடையே தமிழர் நலன் என்று வரும்போது வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்று பதவிக்கு வந்தவர்கள், அரியணை ஏறியதும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க மாட்டோம் ஆனால் பயன்படுத்தவும் மாட்டோம்

சிறு திருத்தம்.

அவர்கள் பயங்கரவாதச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று கூறவில்லை. பயன்படுத்தப்படாத சட்டத்தினை வைத்திருப்பதில் என்னபயன், அதனை நீக்கிவிடலாமே என்று ஏன் எவரும் இதுவரை கேட்கவில்லை? 

அதாவது சட்டம் நீக்கப்படப்போவதில்லையென்பதனூடாக, அவ்வபோது பாவிக்கப்படப்போகிறது என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.

இச்சட்டத்தினை ஊடகவியலாளர்களுக்கெதிராகவும், செயற்பாட்டாளர்களுக்கெதிராகவும் பயன்படுத்துவதையே எதிர்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். 

அதாவது சட்டம் நீக்கப்படப்போவதுமில்லை, பாவிக்கப்படாமல் இருக்கப்போவதுமில்லை என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

பயங்கர தடைச்சட்டம் மிகப்பெரிய ஆயுதம் சிங்களவருக்கு. அதை அவர்கள் கைவிடுவார்கள் என்று எம்மவர் சொல்வது தான் மிகப் பெரிய ஏமாற்றுதல். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ரஞ்சித் said:

அப்படியென்றால் அநுரவையும் அவனது கூட்டத்தையும் எதற்காக சிலர் வராது வந்த மாமணியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்? 

அடுத்தது என்னவென்று அனுர கட்சிக்காரருக்கே தெரியாது....நிலைமை இப்படியிருக்க எதிர்வு கூறல் சிங்கங்களை என்னவென்பது?😂

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை கொண்டாட அனுமதித்ததாக கூறி அனுரவுக்கு ஏன் சாராயக்கடை சிறி மாவீரர் நாள் நடக்க முன்பே அவசரப்பட்டு நன்றி நக்கினார்?

மேலே குசா அண்ணை கூறியது போல இனவாதம் அப்படியேதான் இருக்கிறது.

தாம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப - அனுரவுக்கு வெள்ளை அடிக்கிறனர் சாராய சிறி போன்றோர்.

இது 2ஜி வழக்கில் இருந்து தப்ப கருணாநிதி ஆடிய நாடகத்தின் சின்ன வேர்ஷன்.

  • கருத்துக்கள உறவுகள்

அறகலய போராட்டம் முடிந்து சில காலத்தில் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்து எதிர்காலத்தில் இணைந்த போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஒரு கோட்பாட்டு ரீதியான ஒருமைப்பாட்டையும் நட்புறவையும் வளர்பதற்காக தென்பகுதியில் இருந்து மக்கள் போராட்ட குழுவின் சார்பில் வசந்த முதலி வந்திருந்தார். அப்போது அனைத்து தமிழ் தேசியவாதிகளும் இதற்கு எதிராகவே கருத்து தெரிவித்திருந்தார்கள்.

 உங்களை  மாட்டிவிட்டு அவர்கள் தப்பிவிடுவார்கள். ஆகவே அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டாம் என்று பல புலம்பெயர் தேசியவாதிள் முகநூல் மூலம் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.  இதில் ஈடுபட்டால் அரசு உங்களை கைது செய்யும், எனவே அதில் பங்கெடுக்காதீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். ( அறகலய போராட்டதின் போதும் இதையே கூறினர் என்பது வேறு விடயம்) 

எதிர்பார்தது போலவே யாழ் பல்கலை மாணவர்கள் வசந்த முதலியின் அழைப்பை நிராகரித்தனர். உங்கள் பிரச்சனை வேறு. எங்கள் பிரச்சனை வேறு, உங்களுடன் நாம் இணைந்து வேலை செய்ய முடியாது என்று யாழ் மாணவர்கள் கூறிவிட்டார்கள்.  வசத்த முதலி கேட்டது உடனடி போரட்டதிற்கான அழைப்பை அல்ல. எதிர்காலத்தில் பயங்கரவாத தடை சட்டதிற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளபட்டும் போது கோட்பாட்டு ரீதியில் அதில் இணைவதற்கான அழைப்பையே.  இரு பகுதிக்கும  பொதுவான பிரச்சனைகளில் கூட குறைந்த பட்ச ஒத்துழைப்புடன் செயற்பட முடியாத அளவுக்கு குறுகிய சிந்தனை கொண்டதாக சிந்திக்கும் சுயநலமிகளாகவே  உலகமெங்கும் உள்ள தமிழ் தேசியவாதிகள் உள்ளனர். பயங்கரவாத தடை சட்டதை தானாக அரசு நீக்கினாலொழிய தீவிர தேசியம் பேசும் வெத்துவேட்டுகளால் எதையும் செய்ய முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

முன்னைய போராட்டத்திற்கு தமிழர்களின் ஆதரவைக் கேட்டு, அனுமதி பெற்றா செய்தார்கள் தொடங்கினார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட இளைஞனின் நிலமை இப்போது என்ன? பிணையில் வெளியில் வந்து விட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

பயங்கரவாத தடை சட்டதை தானாக அரசு நீக்கினாலொழிய தீவிர தேசியம் பேசும் வெத்துவேட்டுகளால் எதையும் செய்ய முடியாது.  

இது இலங்கை அரசு தொடர்பான மோசமான விம்பத்தினையே பிரதிபலிக்கும், சட்டம் அனைவருக்கும் பொதுவானது ஆனால் சட்டத்தினை வலுவிலக்க செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளே பல மனித் உரிமை மீறல்கள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறல்களாக தொடர்கின்றது.

தற்போதுள்ள அரசு கூட இந்த பயங்கரவாத தடை சட்டத்தினை  நீங்க விரும்பாததன் மூலம் நாட்டில் இன முரண்பாட்டினை தொடர விரும்புகிறதோ எனும் சந்தேகத்தினை சிறுபான்மை மக்களிடம் ஏற்படுத்திவிடலாம்.

ஒரு நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நிலவுகிறது எனும் நிலை காணப்பட்டால் அது பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல, இந்த அடிப்படை புரியாமல் இவர்கள் என்ன ஆட்சி செய்து கிழிக்கப்போகிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

ஆம் 

பயங்கர வாத தடைச்சட்டம் இருக்கும் வரை இலங்கை மீது சர்வதேசமோ தமிழரோ நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அதுவரை இலங்கை அமுங்கி கொண்டே இருக்கும். அனுரா இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையின் மீட்பராக தன்னை உயர்த்திக் கொள்வாரா அல்லது அதே சகதியில் மூழ்கி சிங்கள மக்களாலையே தூக்கி எறியப்படுவாரா? காலம் சொல்லும்..

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இதன் மூலம் வலுப்படும். ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்ட மிக மோசமான ஒரு இனவாதக் கட்சி என்பதால் அது வெல்லக் கூடாது என தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். 

இன்று நடப்பவை எனக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை.

இன்னும் நிறைய நடக்கவுள்ளன.

மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள  அங்கு மிகவும் வரவேற்கின்றனர்.

வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த முதலிகேயையும் மக்கள் விடுதலை முன்னணியையும் வேறு வேறாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன இங்கு. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் , சிங்களத்தில் அந்தரே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மாணவர் அமைப்பின் பின்னால் இருப்பதே மக்கள் விடுதலை முன்னணி தான். 

சரி, விடயத்திற்கு வரலாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டு வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்தார், சரி. இன்று நடப்பது அவரது மாணவர் அமைப்பின் பின்னால் இருக்கும் அரசுதானே? ஏன் நேரடியாக அரசிடமே இதனை நீக்குங்கள் என்று அவர் கேட்கக் கூடாது? ஆக, அவர் அன்றைக்கு வந்தது மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் செயற்படும் தனது அமைப்பிற்கெதிராக ரணிலும், ராஜபக்சேக்களும் எடுத்த நடவடிக்கைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகத்தான். ஆனால் இன்றோ நிலைமை வேறு, தனது கட்சியே ஆட்சியில் இருக்கிறது, ஆகவே தடைச் சட்டத்தை நீக்கவேண்டிய தேவை அவருக்கில்லை, ஆகவே அவர் அதுகுறித்து இனிமேல் பேசபோவதுமில்லை.

அடுத்தது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் "உங்களின் பிரச்சினை வேறு எங்களின் பிரச்சினை வேறு" என்று கூறினார்களாம். சரி, தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றுவரை கூறும் கட்சியின் பின்புலத்தில் செயற்படும் வசந்தவிடம் வேறு எதைத்தான் யாழ் மாணவர்கள் கூறுவது? இவ்வளவு காலமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரினவாதிகளிடம் அடிபடும் பொழுது இவரோ, இவரது அமைப்போ அல்லது பின்னால் நின்று இயக்கும் கட்சியோ என்ன செய்தது? ஆக தமக்கு அடிவிழும்போது, தம்மீது தடைச் சட்டம் பாயும்போது தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

அடையாளம் துறந்து இலங்கையர்களாக மாறுவோம், சிங்களத் தேசியத்திற்குள் இணைவோம் என்று கூப்பாடு போடுவோர் தாங்கள் தமிழர் இல்லை, தமக்கென்று தனித்துவமான அடையாளம் இல்லை, தமக்கென்று தனியான கலாசாரமும், தேசமும், பண்பாடும் இல்லை என்று வெளிப்படையாக இங்கே கூறிவிட்டு அதனைச் செய்யட்டும், மீதியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

அறகலய போராட்டம் முடிந்து சில காலத்தில் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்து எதிர்காலத்தில் இணைந்த போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஒரு கோட்பாட்டு ரீதியான ஒருமைப்பாட்டையும் நட்புறவையும் வளர்பதற்காக தென்பகுதியில் இருந்து மக்கள் போராட்ட குழுவின் சார்பில் வசந்த முதலி வந்திருந்தார். அப்போது அனைத்து தமிழ் தேசியவாதிகளும் இதற்கு எதிராகவே கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அப்படி தமிழர்களின் சமஷ்டியை ஏற்று கொண்ட அவரை எதிர்த்த தமிழ் தேசியவாதிகள் ஜனதிபதி தேர்தலில் ஒற்றை ஆட்சி அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதில் இருந்து மாண்புமிகு ஜனாதிபதியின் கீழ் தமிழர்கள் எல்லாம் ஸ்ரீ லங்கனாக வாழ்வது எப்படி என்று வகுப்பு எடுத்து கொண்டிருக்கிறார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

வசந்த முதலிகேயையும் மக்கள் விடுதலை முன்னணியையும் வேறு வேறாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன இங்கு. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் , சிங்களத்தில் அந்தரே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மாணவர் அமைப்பின் பின்னால் இருப்பதே மக்கள் விடுதலை முன்னணி தான். 

ஜேவிபிக்கு சுவஸ்திகாவின் இயக்கம் கட்சி மக்கள் போராட்ட முன்னணி எதிரானது என்று கொழும்பில் இருப்பவர் நம்பிக்கையானவர் சொன்னார் அண்ணா. கோத்த பையாவை அகற்றுவதற்காக போராடிய போது  பலர் ஒன்றாக போராடி இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

ஆம் 

பயங்கர வாத தடைச்சட்டம் இருக்கும் வரை இலங்கை மீது சர்வதேசமோ தமிழரோ நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அதுவரை இலங்கை அமுங்கி கொண்டே இருக்கும். அனுரா இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையின் மீட்பராக தன்னை உயர்த்திக் கொள்வாரா அல்லது அதே சகதியில் மூழ்கி சிங்கள மக்களாலையே தூக்கி எறியப்படுவாரா? காலம் சொல்லும்..

அனுர சார்ந்தவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா,அவர்கள் அரசியல் எப்படியிருக்கும் என்பதை அடுத்த வருடங்களில் கவனிக்கலாம். அதற்கு முன் எந்த ஜோசியமும் சொல்ல முடியாது. இலங்கையில் இருப்பவர்களே அடுத்த அரசியல் கட்டம் எப்படியிருக்குமென ஊகிக்க முடியாத போது புலம்பெயர் தமிழர் ஆரூடம் சொல்வது வியப்பாக இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.