Jump to content

2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?  

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?

2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியபோது தமக்கான விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணித் தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், அவர்களை தமது மீட்பர்களாக ஏற்றுக் கொண்டாடியமைக்கும் இன்று அநுர அரசைத் தமிழர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கும் இடையே மிகவும் அபாயகரமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று இலங்கை அரசியலின் முன்னைய இருள்படிந்த அத்தியாயங்களிலிருந்து தம்மை முழுமையாக வெளியேற்றிக்கொண்டவர்களாக மைத்திரி ரணிலின் கூட்டணி அரசாங்கம் காட்டிக்கொண்டு மக்களின் முன்னால் வந்தது. இனவாதத்தைக் களைவதாகவும், புதியனவற்றை உள்வாங்கி முன்மாதிரியான ஆட்சியை வழங்குவதாகவும், நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகவும்,ஈழத் தமிழர்கள் உட்பட எல்லோருக்குமான நீதியை வழங்கப்போவதாகவும் அது உறுதியளித்திருந்தது. இதனையடுத்து இந்த நல்லிணக்க அரசாங்கம் தான் உறுதியளித்ததன்படி போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்து வில‌க்கினை நீக்கிவிடும், இறுதிக்கட்டப்போரில் நடந்த போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி, தண்டித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியினை வழங்கும், தமிழர்களின் நீண்டகால அரசியல்ப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கும் என்கிற நம்பிக்கையில் அன்று தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மைக் காட்டிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேசமும் நல்லிணக்க அரசாங்கத்தை நிபந்தனையின்றி ஆதரவளிக்கும் முடிவினை எடுத்திருந்தன.

ஆனால் அந்த நம்பிக்கைகள் எல்லாம் இறுதியில்ல் முற்றாகவே இல்லாதொழிக்கப்பட்டு சுவடுகளும் தெரியாமல் அழிந்துபோயின. 

 கீழ்நோக்கிய நச்சுச் சுழற்சி

 தாம் எல்லாவற்றையும் தருவோம் என்று ஆட்சிப்பீடம் ஏறிய ரணில் மைத்திரி நல்லாட்சி எந்தவகையான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவோம், வடக்குக் கிழக்கை இராணுவ நீக்கம் செய்வோம், தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கே மீளவும் வழங்குவோம், போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வழங்குவோம் என்று அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் சிறிது சிறிதாகப் புறக்கணிக்கப்பட்டு ஈற்றில் முற்றாகவே கைவிடப்பட்டுப் போயின. ஆனால் அந்த அரசாங்கம் மீது உள்ளூரிலும், சர்வதேசத்திலும் பெரும் எடுப்புடன் வளர்க்கப்பட்ட நற்பெயரை தனக்கெதிரான விமர்சனங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகவும், தான் செய்யப்போவதாக உறுதியளித்த விட‌யங்களைச் செய்யாது, இனப்பிரச்சினையில் பங்குகொண்ட இனங்களுக்கிடையிலான சமரசத்தையும், நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகிறோம் என்று கூறிக் கூறிக் காலத்தை விரயமாக்குவதற்காகவும் மட்டுமே பாவித்தது.

2015 இல் ஆட்சிக்கு வந்தவுடன் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையத்துடன் இணைந்து இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான தீர்மானத்தைச் சேர்ந்தே நிறைவேற்றியது, அல்லது அணுசரணை அளித்தது. யுத்தக் குற்றங்களை விசாரிப்பது தொடர்பான மனிதவுரிமைச் சபையின் தீர்மானத்தை நல்லாட்சி அரசு ஏற்றுக்கொண்டபோது அதனை மிகவும் தாராளமான, முன்னேற்றகரமான ஒரு படி என்றே சர்வதேசம் நம்பியது. ஆனால் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் தலைவர் சயிட் ராட் அல் ஹுஸ்ஸெயின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவது அவசியம் என்று கோரியபோது, நல்லாட்சி அரசாங்கம் அதனை நிராகரித்த தருணத்தில் அதுவரை அது தான் செய்வதாகக் கூறிய அனைத்து வாக்குறுதிகளுமே பொய்யானவை என்பது நிரூபண‌மாகியது. யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலினை உறுதிப்படுத்துவதற்கான நேர்மையான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்குப் பதிலாக காலத்தைக் கடத்தும் நோக்கில் காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் அமைப்பு எனும் பெயரில் மீண்டும் மீண்டும் தோற்றுப்போன உள்ளூர்ப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கியது. ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடித் தாருங்கள், கொல்லப்பட்டு விட்டால் அதுகுறித்த தகவல்களையாவது தாருங்கள் என்று இரைஞ்சிக் கொண்டிருக்கும் வேளை, அதனைச் சரிசெய்கிறோம் என்ற கோசத்தோடு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் காணமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆணைக்குழு நம்பகத்தன்மையினை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அரசியல் தலையீடுகளினால் சுயமாகச் செயற்படும் சுதந்திரத்தையும் அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இழந்துவிட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவை ரணில் - மைத்திரி அரசு உருவாக்கியதன் நோக்கமே சர்வதேசத்திலிருந்து வரும் அழுத்தங்களை மழுங்கடிக்கவும், தமக்கான கால அவகாசத்தை நீட்டித்துக்கொண்டு கறைபடிந்த அரசியலைத் தொடரவும்தான். இதில் வேதனை என்னவென்றால் இந்த ஆணைக்குழு உண்மையாகவே தமக்கான நீதியைப் பெற்றுத்தரும், காணமலாக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கையில் இதன் பின்னால் மன்றாடியபடி சென்ற தமிழ் மக்களின் பரிதாபகரமான ஏமாற்றம்தான். தமிழ் மக்கள் நீண்டகாலமாகக் கோரிவரும் சர்வதேசத் தலையீட்டுடனான விசாரணைகளைப் புறந்தள்ளி, உள்ளூர் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே தம்மால் எதனையும் செய்வது குறித்துச் சிந்திக்க முடியும் என்று பிடிவாதமாக நின்ற நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களுக்கான விசாரணையினையோ அல்லது அதற்கான நீதியையோ வழங்க எந்தப் பொறிமுறையினையும் பாவிக்க விரும்பாது ஈற்றில் கைகழுவி விட்டது என்பதே உண்மை. 

தனது ஆட்சிக்காலத்தின் முடிவில் தமிழரின் அவலங்கள் குறித்த எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது, தன்மீது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வைக்கப்பட்ட நம்பிக்கைகளைச் சிதறடித்து காலத்தை வீணடித்துச் சென்றது நல்லாட்சி அரசு. அதுமட்டுமல்லாமல் நல்லாட்சி என்கிற போர்வைக்குள் ஒளிந்திருந்த அதே பழைய பேரினவாதிகள் ஆட்சி கவிழ்ந்தபோது மீண்டும் தமது இனவாத முகங்களை மிக எளிதாக மக்கள் முன் காட்டிக்கொண்டு வெளியே வந்து, தமக்கு முன்னால் ஆட்சிபுரிந்த சிங்களப் பேரினவாதிகளுக்கும் தமக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லையென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையின் ஜனாதிபதியாக நல்லாட்சி அரசில் பணியாற்றிய மைத்திரிபால சிறிசேன தன்னை சிங்கள பெளத்த ஜனாதிபதி எனும் நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் விலக்கிக் கொள்ளவில்லை என்பதுதான். அதனாலேயே ரணிலுடனான முறிவின்போது மிக எளிதாக அவரால் தனது அதே சிங்களப் பேரினவாத முகத்தை மக்கள் முன் காட்டக் கூடியதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் வெளியே வந்து பேசிய மைத்திரி, போர்க்குற்ற விசாரணைகள் என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனக்கொலை என்று தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பகிரங்காமாக அறிவித்தார். இத்தனைக்கும் அவரது நல்லாட்சி அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து போர்க்குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் ஒன்றினை உருவாக்க வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

 எந்தச் சிங்கள பெளத்த இனவாதிகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தமிழ் மக்களின் அவலங்களுக்கான நீதியினைப் பெற்றுக் கொடுப்பார் என்று நம்பி ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவினைத் தேர்தலில் பெற்றுக்கொண்டும், சர்வதேசத்தின் முற்றான நம்பிக்கையினை பின்புலமகாகக் கொண்டும் ஆட்சிக்கு வந்தாரோ, அதையெல்லாவற்றையும் மிக எளிதாகத் தூக்கி எறிந்துவிட்டு மைத்திரியால் அதே சிங்கள பெளத்த இனவாதிகளின் கூடாரத்தில் இயல்பாகவே சென்று இணைந்துகொள்ள முடிந்தது. அவரது ஆட்சியின் கீழ் சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன, அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள் போன்றவை முற்றாகக் கைவிடப்பட்டன. தமிழர் தாயகம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும் வழமைபோன்றே அதிகாரத்துடன் நிலைநாட்டப்பட்டுத் தொடரலாயிற்று.

மைத்திரியின் இந்தக் குத்துக்கரணத்தினால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டன. நல்லாட்சி அரசின் வருகையோடு பின்னுக்குத் தள்ளப்பட்ட பல சிங்களப் பேரினவாததிகள் மீண்டும் தலையெடுக்க வழி திறக்கப்பட்டது. இந்த இனவாதிகளின் மீள்வருகையோடு, சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் நவீன தந்தையர்களான ராஜபக்ஷே சகோதரர்கள் 2019 இல் பேரெழுச்சியுடன் ஆட்சிப்பீடம் ஏறவும் மைத்திரியின் நடவடிக்கைகள் வழிசமைத்துக் கொடுத்தன.

தொடரும்...............

  • Thanks 2
  • Replies 76
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந

Justin

நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு,

ரஞ்சித்

ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் இனவாதிகளிடமிருந்து வேறுபட்டவராக, மேம்பட்டவராக, முற்போக்குச் சிந்தனையுடையவராக நம்பியிருந்தனர். ஆனால் தானும் மற்றைய சிங்கள பெளத்த இனவாதிகளைப் போன்றே தமிழ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் இனவாதிகளிடமிருந்து வேறுபட்டவராக, மேம்பட்டவராக, முற்போக்குச் சிந்தனையுடையவராக நம்பியிருந்தனர். ஆனால் தானும் மற்றைய சிங்கள பெளத்த இனவாதிகளைப் போன்றே தமிழர்களின் நலன்களுக்கெதிரானவர்தான் என்பதை அவர் நிரூபித்தார். நல்லாட்சி அரசின் ஜனாதிபதியுடனான ரணிலின் பலப்போட்டி அவரை ஈற்றில் பிரதமர் எனும் பதவியிலிருந்து தூக்கியெறிந்ததுடன், 2018 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் தெற்கின் இனவாதிகளின் தலைவனும், இலட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலையின் சூத்திரதாரியுமான மகிந்த ராஜபக்ஷவிடம் அப்பதவி கொடுக்கபட வழியமைத்துக் கொடுத்தது. ஆனால் நான்கு வருடங்களின் பின்னர் கொத்தாபய மற்றும் மகிந்தவின் காட்டாசியினால் களைப்படைந்த மக்கள் அவர்களைத் தூக்கியெறிய, அவர்களின் செல்லப்பிராணியான ரணில் மடியில் நாட்டின் ஜனாதிபதியெனும் பொறுப்பு வந்து வீழ்ந்தது. 

ரணிலினதும், மைத்திரியினதும் பொதுவான குணவியல்புகள் என்னவென்றால் தம்மை எத்தனை தூரத்திற்கு முற்போக்குச் சிந்தனைவாதிகள் என்று அவர்கள் காட்டிக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முனைந்தாலும் , தாமும் ஏனையவர்களைப்போன்றே அதே சிங்கள பெளத்த பேரினவாத முகாமிலிருந்து வருபவர்கள் தான் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை. 

ரணில் ஜனாதிபதியாக வலம்வந்த காலத்திலும் நாட்டின் மிகவும் முக்கியமான இனப்பிரச்சினைக்கான தீர்வினை அவர் வழங்கவோ அல்லது அது தொடர்பான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தவோ அவர் சற்றேனும் விரும்பவில்லை. இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மிக எளிதாக அவர் புறங்கையினால் தட்டிவிட்டுச் சென்றார். இவை எல்லாவற்றையும் அவர் தனது ஆட்சியைப் பாதுகாக்கவும், சிங்கள பெளத்த பேரினவாதிகளைப் பாதுகாப்பதற்காவுமே செய்தார். 

இவரது அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்ட ஈழத் தமிழர்களும், சர்வதேச சமூகமும் செய்ததெல்லாம் இவர்மீதான அழுத்தங்களைப் பின்னுக்குத் தள்ளி, அவற்றால் உருவாகக் கூடிய விளைவுகளைத் தடுத்துவிட்டது மட்டும்தான். சர்வதேசத்திலிருந்து தனக்குக் கிடைத்த ஆதரவினைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை வழங்குவதற்குப் பதிலாக இனப்பிரச்சினை உருவாகக் காரணமாகவிருந்த அதே பேரினவாதச் சிந்தனைகளை அவர்  முன்னெடுத்து வந்தார்.

2015 ஆம் ஆண்டின் நல்லாட்சிக்கும் இன்றைய அநுரவின் ஆட்சிக்குமிடையிலான ஒற்றுமைகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. ஆனால் இந்த நச்சுச் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வர அநுரவிற்கு இன்னும் காலம் இருக்கிறது. இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அவரது கட்சியால் காத்திரமான மாற்றங்களைச் செய்யும் அரசியற் பலம் இருக்கிறது. இதனைச் செய்து தன்னை நியாயமானவர் என்று நிரூபிக்கும் சுமை அவரிடம் ஏற்றப்பட்டிருக்கிறது. பேச்சுக்களில் மட்டுமே நின்றுவிடாது காத்திரமான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக  ஆணைக்குழுக்களை, அடையாளத்திற்கான அமைப்புக்களை உருவாக்கி அவர் காலம் கடத்துவாராகில் அவரும் அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஏனைய பேரினவாதிகள் போன்றவர்தான் என்பதை மக்களுக்குக் காட்டப்போகின்றது. அவரது முன்னோடிகள் போல இவராலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படவிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அநுரவினால் நிச்சயமாக தேவையான மாற்றங்களைச் செய்யமுடியும், அதற்கான அரசியட்பலமும் அவருக்கு இருக்கிறது. அவரது ஆட்சியின் ஆரம்பநாட்களில்த்தான் நாம் இன்னமும் நின்றுகொண்டிருக்கிறோம். ஆனாலும் அவரது ஆட்சி மற்றையவர்களினதைக் காட்டிலும் வேறுபட்டது என்று நம்புவதற்கான காரணங்களை அவர் இன்னமும் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. அவரது ஜனாதிபதி தேர்தல்ப் பிரச்சாரத்தின்போது அவர் வெளியிட்ட போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன், பெளத்த மதத்திற்கும் புத்த சாசனத்திற்கு அதியுயர் முன்னுரிமை வழங்குவேன் என்ற வாக்குறுதிகள் இன்னமும் தமிழ் மக்களின் காதுகளில் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. பதவிக்கு வருமுன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது குறித்துப் பேசிவந்த அநுரவின் அரசு இன்றோ அதிலிருந்து பின்வாங்கி வருகிறது. சிறுபான்மை இனங்களான தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராகவே அதிகளவு பாவிக்கப்படும் இச்சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதனைச் சரியான வழியில் பாவிப்போம் என்று அநுரவின் தோழர்கள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் பல போர்க்குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்று சர்வதேசத்தால் அடையாளம் காணப்பட்ட பல போர்க்குற்றவாளிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருந்தோ அல்லது அதன் தூதரகங்களில் இருந்தோ மீளப்பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக மேலும் பல போர்க்குற்றவாளிகளை அவரது அரசு அரவணைத்து வருவதுடன் புதிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்க்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவினாலும் இன்னும் சில மேற்குநாடுகளினாலும் போர்க்குற்றவாளி என்று கண்டறியப்பட்டு பயணத் தடைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சவேந்திர சில்வா உள்ளிட்ட பேர்போன போர்க்குற்றவாளிகள் அநுரவின் அரச விழாக்களிலும், வைபவங்களிலும் தொடர்ச்சியாக அழைக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டு வருகிறார்கள்.  இது ஒரு அபாயகரமான, கவலைதரக்கூடிய ஆரம்பம் என்றுதான் படுகிறது.

தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்குமான படிப்பினை

 தமிழர்களைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடம் மிகவும் தெளிவானது. வெற்று வாக்குறுதிகளும், அரசியல் நாடக மேடைகளும் ஒருபோதுமே காத்திரமான விளைவுகளைத் தராது. ஒருவரின் முன்னைய செயற்பாடுகளின் அடிப்படையில் அவர் குறித்து சந்தேகம் கொள்வதற்கும் அவரை தவறானவர் என்று கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்குவதற்கும் இடையே வேறுபாடு இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாகப் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்ட பின்னணியில்த்தான் தமிழர்கள் சந்தேகம் கொண்டு இன்றைய அரசியலை அவதானிக்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். சிங்கள ஜனாதிபதியொருவர் தமிழர்களுக்கான நீதியினை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனும் ஆண்டாண்டு கால ஒடுக்குமுறையினூடான‌ அநுபவத்தின் படிப்பினையினை 2105 இல் தமிழர்கள் மீண்டும் கற்றுக்கொண்டார்கள் அல்லது நினைவுபடுத்திக் கொண்டார்கள். ஆகவேதான் சிங்களவர்களிடமிருந்து வரும் இன்னுமொரு ஆட்சித்தலைமை மீது தமிழர்கள் மிக அவதானமான சந்தேகங்களைக் கொண்டிருக்கிறார்கள், கேள்விகளைக் கேட்கிறார்கள். போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள், வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவ விலக்கு, சுய நிர்ணய உரிமை என்று பலவிடயங்கள் குறித்து அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களும் அநுர அரசின்மீது வைக்கப்படுகின்றன.

சர்வதேசச் சமூகத்தைப்பொறுத்தவரை 2015 இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு மீது அவர்கள் வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அவர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் வழிமுறை மாற்றப்படவேண்டும் என்பதையே அவர்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் மேடைகளில் அள்ளிவீசப்பட்டும் பொய் வாக்குறுதிகளை அப்படியே நம்பிவிடக்கூடாது என்பதை அவர்கள் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். சர்வதேச பொறிமுறை ஒன்றினூடான விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள் என்பது சமரசமின்றி மையப்படுத்தப்பட்டு, இதனோடு இணைந்த ஏனைய அவசியமான விடயங்கள் குறித்த செயற்பாடுகளுக்கான அழுத்தம் கொடுக்கப்படுதல் முக்கியமானது. சர்வதேசத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பும், அழுத்தமும் இல்லாமற்ப் போகுமிடத்து தம்மை எவ்வளவு தூரத்திற்கு முன்னோடிகளாக, மாற்றுச் சிந்தனையாளர்களாக, மாற்றத்திற்கான அடிக்கற்கலாக காட்டிக்கொண்டு எந்தச் சிங்களத் தலைமை ஆட்சிக்கு வந்தாலும் அதனால் பெறப்படும் நண்மை எதுவும் இல்லையென்பதை சர்வதேசம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆட்சிக்கு வரும் எவரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, அவர்களுடன் நல்லிணக்கத்தை வளர்த்துக்கொள்வதனூடாக போர்க்குற்றவாளிகளையும் அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளையும் மேலும் மேலும் பலப்படுத்தி பொறுப்புக்கூறலில் இருந்து விலக்களிப்பதுதான் சர்வதேசம் செய்யப்போகிறது, இதனையே 2015 இலும் அது செய்தது. 

இது உண்மையான செயற்பாடுகளுக்கான தருணமே அன்றி வெற்று வாக்குறுதிகளுக்கானது அல்ல. மீண்டும் மீண்டும் தவறுகள் நடக்க அனுமதிக்கப்படுமிடத்து அதன் விளைவுகள் முன்னையதைக் காட்டிலும் பாரதூரமாகவே இருக்கப்போகின்றது.

முற்றும்

நன்றி: கலாநிதி துஷியன் நந்தகுமார்

தமிழ் கார்டியன் இணையத்தளம்

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத்தமிழ் மக்கள் மாற்று கட்சிகளை நாடியிருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலத்துக்கு தேவையான கட்டுரை ரஞ்சித்.

இன்னும் வாசிக்கவில்லை.

ஆனால் உங்கள் கேள்விக்கான பதில்.

1 hour ago, ரஞ்சித் said:

2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?

இல்லை.

அதை விட பன்மடங்கு கூடிய கண்ணை குருடாக்கி கொண்டு நம்பும் நம்பிக்கையை அனுர மீது வைக்கிறார்கள்.

குறிப்பாக புலம்பெயர் தமிழர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவையான உங்கள் கட்டுரை👍 கட்டுரையை  நன்றாக பின்பு படிப்பேன். தலைப்பை வைத்து சொல்கின்றேன் கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அனுரகுமார திசநாயக்க மீது தான் வைத்திருக்கிறார்கள்.  சிறிசேனா வந்த போது இப்படி எதுவும் நடக்கவில்லை இப்போ இழுத்து பிடித்து தமிழீழம் மட்டுமே தீர்வு என்று  சொன்ன வாயால் அனுரகுமார திசநாயக்க பற்றி பிரசாரமே செய்கின்றார்கள்.இவ்வளவும் அவர் சிங்கல மக்களால் வெற்றி அடைந்தவுடன் தான் ஆரம்பித்தது.
சிறிசேனாவை ஆதரிப்பது என்று  முடிவு தமிழரசு கட்சி முதலே எடுத்தது.

அனுரகுமார திசநாயக்க ஆட்சியில்  வாழ்க வளமுடன் இலங்கை தேசமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுராவின் பிளான் இது தான்.

இப்போதைக்கு தமிழ் இனப்பிரச்னை பற்றி கதைக்காமல் விடுவது, அல்லது இதே போக்கில் இன்னும் 4 வருடங்களுக்கு இழுத்தடிப்பது. அதே நேரத்தில் ஏனைய மக்கள் பிரச்சனைகளைக் கையாளும் விஷயத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது.இப்படியே நாளைக் கடத்தி தமிழ் மக்களின் இனப் பிரச்னை குறித்த கொதிக்கும் மனப்பாங்கினை ஓரளவுக்கு குளிர் நிலைக்கு கொண்டு வருவது. பின்னர் சிங்கள மக்களும் விரும்பும் தீர்வை வழங்குவது. 83 ம் ஆண்டில் பிரச்சனையை பார்த்த தமிழ் மக்களின் பெரும் எண்ணிக்கை 2014 இல் 70 வயதைக் கடந்து இருக்கும். புதிய தலைமுறை தமிழர்களிடம் பழைய தலைமுறைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு இல்லை. கிட்டத்தட்ட கொழும்பு தமிழ் லிபரலுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம் போல..

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, பகிடி said:

அனுராவின் பிளான் இது தான்.

இப்போதைக்கு தமிழ் இனப்பிரச்னை பற்றி கதைக்காமல் விடுவது, அல்லது இதே போக்கில் இன்னும் 4 வருடங்களுக்கு இழுத்தடிப்பது.

உண்மை அவருக்கு இது மிகவும் இலகு தமிழர்கள் ஐஸ் கிரீம்மாக மாறி அவர் கப்பிற்குள்ளே நிற்கின்றார்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுர அரசினை இனவாதம் பேசாமல் ஆட்சிக்கு வந்த அரசு என சிறுபான்மையினரால் பார்க்கப்படும் அரசு, அதே சிறுபான்மையினரின் உரிமைகள், போர் குற்ற நீதி, சமூக நீதி என வரும் போது அப்போதும் இதே நிலை எடுத்தால் அனுர அரசு தனது முழு பதவிக்காலத்தினை மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களையும் எவ்வாறு எதிர் கொள்ளமுடியும் என தெரியவில்லை, மக்கள் திருட்டு பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல இருக்க விரும்புவது யதார்த்தத்தினை எதிர்கொள்ள விரும்பாத நிலை அல்லது ஒரு நப்பாசை அவர்களுக்கு முழுமையான ஆட்சி காலத்தினை முடிக்கும் வரை இலவு காத்த கிளியாக இருக்க விரும்புவதற்கு தயாரக இருப்பதற்கு தடையாக அனுர அரசின் மீது உள்ள குறைபாடுகளை கூறுபவர்களை மூர்க்கமாக எதிர்க்க முற்படும் இந்த வகை தீக்கோழி ஆபத்து வரும் போது மணலுக்குள் தலையினை புதைப்பது போன்ற ஒரு வகை நடவடிக்கையாகும்.

ஆனால் அனுர அரசிற்கு இவ்வாறான எந்த நெருக்குதலும் இல்லை, அவர்கல் தமது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்ன்னமே தெளிவாக கூறிவிட்டார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனப்பிரச்சனை இலங்கையில் உருவாகி 75 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தமிழர் சார்பில் அரச அடக்குமுறைக்கு எதிராக தலைமை வகித்தோரால் எதையும் உருப்படியாக செய்ய முடியவில்லை. தலைமுறை தலைமுறையாக இளம் குருத்துக்களை அவர்கள் வாழவேண்டிய தில் பலி கொடுத்து,  மக்களை கல்வி, பொருளாதார ரீதியிலும்,  மக்கள் தொகை அடிப்படையிலும்  பலவீனப்படுத்தியதை தவிர இந்த வரட்டு தேசியவாதிகளால் எதையும் சாதிக்க முடியவில்லை.

பந்தி பந்தியாக வரட்டு தேசியவாதம் பேசி புலம்பும் பேர்வழிகளுக்கு நான் கூறிக்கொள்வது  என்ன வென்றால், தாயகத்தில் தமிழ்  மக்கள் பிள்ளைகளை பெறுவது போராடி  அழிந்து போக அல்ல.   உங்களுடைய பிள்ளைகளை எப்படி புலம் பெயர் நாடுகளில் படிப்பித்து சொகுசாக வளர்கக விரும்புகின்றீர்களோ அதே போன்ற ஆசை அவர்களுக்கும் உள்ளது. தாம் ஜாலியாக வாழ்ந்து கொண்டு தமது சந்திதியையும் அப்படி வாழ வைத்துக்கொண்டு மக்களை அறிவு ரீதியாக சிந்திக்க விடாது   உணர்சசி வசப்படுத்தும் வரட்டு தேசிய  கருத்துக்களை எழுதி தாம் இறப்பதற்குள் அடுத்த தலைமுறைக்கும் அள்ளி வைத்துவிட்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பில்  பந்தி பத்தியாக விஷ கருத்துக்களை விதைக்கும் சுயநலமிகள் இதை சிந்திக்க வேண்டும்.   

இல்லை இல்லை  அவர்கள் சிந்திக்க போவதில்லை. தமது வாழ் நாள் முழுவதும் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் மன நோயாளர்களாகவே இவர்கள் இருப்பார்கள். எனவே இந்த மன நோயாளர்களின் பத்தி எழுத்துகளை முற்றாக  புறக்கணித்து  காலத்துக்கு ஏற்ப தம்மை தகவமைத்துகொண்டு அறிவுசார் ரீதியில் புதிய தந்திரோங்களின் அடிப்படையில் தாமாக சிந்தித்து செல்வதே   புதிய தமிழ் தலைமுறையினருக்கு இப்போது உள்ள வழி.  இதன் மூலமே புதிய தலைமுறை இலங்கையில் தமது இருப்பை பாதுகாத்து எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும். 

Edited by island
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, island said:

இங்கே யார் இப்போ ஊரில் உள்ள மக்களை ஆயுதம் ஏந்தி போராடும் படி அறைகூவல் விடுத்தது?

ஏன் நடக்காத ஒன்றை நடப்பதாக சொல்கிறீர்கள்? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

இங்கே யார் இப்போ ஊரில் உள்ள மக்களை ஆயுதம் ஏந்தி போராடும் படி அறைகூவல் விடுத்தது?

ஏன் நடக்காத ஒன்றை நடப்பதாக சொல்கிறீர்கள்? 

நீங்கள் அவ்வாறு கூறவும் இல்லை  கூறப்போவதும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். 

ஆனால்,  அவ்வாறான நிலையை உருவாக்க இங்கு யாழுக்குள்  மட்டுமல்ல வெளியிலும்  பலரும் முயன்றுவருகின்றனர். அவர்களை நோக்கியே  எனது எழுத்து இருந்தது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, island said:

நீங்கள் அவ்வாறு கூறவும் இல்லை  கூறப்போவதும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். 

ஆனால்,  அவ்வாறான நிலையை உருவாக்க இங்கு யாழுக்குள்  மட்டுமல்ல வெளியிலும்  பலரும் முயன்றுவருகின்றனர். அவர்களை நோக்கியே  எனது எழுத்து இருந்தது. 

நீங்கள் என்னை நோக்கி எழுதவில்லை என்பதை ஊகித்தே இருந்தேன்.

ஆனால் 75 வருடமாக சுயநிர்ண கோரிக்கையை போட்டடித்த படியால் இனி அதை கேட்ட கூடாது என்பது தர்க ரீதியான நிலைப்பாடாக எனக்கு தெரியவில்லை.

ஒரு காலம் இருந்தது 2009 இன் பின்னர் கூட பல புலம்பெயர் ஆட்கள் தனி நாட்டு கனவில் இருந்தார்கள்.

ஆனால் இப்போ அவர்களே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, 

அனுர சரணம் கச்சாமி என்று பாடுகிறார்கள்.

ஆனால் 2024 தேர்தலிலும், எமது மக்கள் சுயநிர்ணயம் கோரும் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்கை அளித்துள்ளனர்.

வாக்குகள் சிதறின என்பதுதான் உண்மை. மக்கள், நீங்கள் இப்போ உந்திதள்ளும், அனுரவின் ஈரச்சாக்கு இலங்கை தேசியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தே வாக்களித்துள்ளனர்.

இதைதான் மேலே கட்டுரை சொல்கிறது.

நிலமை இப்படி இருக்க, உங்கள் நிலைப்பாடு ஊரில் உள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேடானாதாகவும் எனக்கு படுகிறது.

Edited by goshan_che
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, goshan_che said:

இந்த பத்தி எழுத்தாளர்களது கட்டுரைகள் எல்லாமே அரசியல் அலசல், ஆய்வு என்ற பெயரில் இருந்தாலும் வெறுமனேயே எதிர் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை சகட்டுமேனிக்கு அள்ளி வீசும் குற்ற அறிக்கைகளாகவே இருக்கிறதே தவிர அந்த சந்தர்பங்களில் எல்லாம் அதை சரிவர கையாள்வதில் தமிழர் தரப்பின் தவறுகள் என்ன என்பதையோ எவ்வாறான வழி முறையின் மூலம் தமிழ் மக்கள் படிப்படியாக தமது இலக்குகளை அடையலாம் என்பதை விபரிப்பனவாக இல்லை. அப்படி செய்வதாக  இருந்தால் தமது  காழ்புணர்ச்சை தீர்கக  தமக்கு  ஒவ்வாத அரசியல்வாதிகளை தேர்தெடுத்து ( Cherry pick)  அவர்களை போட்டுத்தாக்குவர்கள். மற்றப்படி ஒட்டுமொத்தமான  தமிழர் அரசியலில் எமது பக்க தவறுகளை கூறுவமோ விமர்சன கண்ணோட்டதுடன் அதை அணுகுவதோ ஏதோ  தெய்வ குற்றம் என்பது போன்ற தோற்றத்தையே இவர்களது ஆய்வு என்ற பெயரில் வரும் குற்ற அறிக்கைகளில் காணலாம்.  

பாரிய பலத்தைடன் இருக்கும் பேரின வாத அரசுடன் யுத்தம் புரியும் போதோ பின்னர் பேச்சு நடக்கும் போதோ எண்ணிக்கையில் குறைந்த  அடக்கப்படும் இன தலைமைகளுக்கு அதிக பொறுப்பு இருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்வு எம் தரப்பில் இருந்ததா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். 

அப்படியே எவரவது அந்த பக்கத்தை சற்றே  தொட்டாலே “ஐயோ கொச்சை படுத்தீட்டான்” என்று ஒப்பாரி வைத்து ஊரைக் கூப்பிடுவதும் பின்பு கைக்கூலி, துரோகி என்று தீட்டி தீர்பதுமே வழமை என்பதை உணர்ந்து நீங்களும் அதை பற்றி உரையாடுவதை  தந்திரோபாய ரீதியில் தவிர்கக முனைவீர்கள்.  உங்களது அந்த அணுகுமுறையை நான் குறை கூறவில்லை. அது ஒரு கருத்தாளனின் உரிமை  அதை நான் மதிக்கிறேன். 

தாயகம் தேசியம், சுயநிர்ணயம் என்ற கோசத்தை முன்வைத்து பொதுவேட்பாளர் வட கிழக்கு மாகாணங்களில் பெற்ற வாக்குகளின் சத வீதம் என்ன? 

யுத்த குற்றங்கள் பற்றி இங்கு கூறப்பட்டது. இதைப் பற்றி முன்னரே கூறியிருந்தேன்.  இருந்தாலும் திரும்ப  அது பேசு பொருளாகி இருப்பதால் மீண்டும்  எழுதுகிறேன். ஶ்ரீலங்காவில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் தனது படையினரை சர்வதேச விசாரணைக்கு அனுப்பாது. அதை நன் சரி என்று கூறவில்லை. அது தான் ஜதார்த்த நிலை. 1990 ல் ஆயுதமின்றி சரண்டைந்த இலங்கை பொலிசாரை சுட்டு கொன்ற போராளிகளை தம்மிடம் விசாரணைக்கு தருமாறு சர்வதேசம் தலைவர் பிரபாகரனிடம் கேட்டிருந்தால்  அவரும் அநுர எடுக்கும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருப்பார். 2002 பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்களை ராஜீவ் கொலை விசாரணைக்காக இன்ரபோல் தேடுகிறதே, உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்க, “நடக்கிற விடயங்களைப் பேசுவோம்” என்று கேலியாகப் பதிலளித்தவர் அவர். இதை நான் கூறுவது யாரையும் குற்றம் சொல்ல அல்ல.  உலக ஜதார்ததம் அது தான் என்பதை புரிய வைக்கவே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடும்பத்தில் ஒருவரை வெளி நாட்டுக்கு அனுப்புவம் என்று கட்ச்சி தொடங்கினால்( சும்மா ஒரு கற்படபனைக்கு சாத்தியம் எனடால்)  அனுராவும் இல்லை தேசியம் பேசும் கட்ச்சிகளும் கட்டுக்காசு கூடக் கிடைக்காது.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

நீங்கள் என்னை நோக்கி எழுதவில்லை என்பதை ஊகித்தே இருந்தேன்.

ஆனால் 75 வருடமாக சுயநிர்ண கோரிக்கையை போட்டடித்த படியால் இனி அதை கேட்ட கூடாது என்பது தர்க ரீதியான நிலைப்பாடாக எனக்கு தெரியவில்லை.

ஒரு காலம் இருந்தது 2009 இன் பின்னர் கூட பல புலம்பெயர் ஆட்கள் தனி நாட்டு கனவில் இருந்தார்கள்.

ஆனால் இப்போ அவர்களே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, 

அனுர சரணம் கச்சாமி என்று பாடுகிறார்கள்.

ஆனால் 2024 தேர்தலிலும், எமது மக்கள் சுயநிர்ணயம் கோரும் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்கை அளித்துள்ளனர்.

வாக்குகள் சிதறின என்பதுதான் உண்மை. மக்கள், நீங்கள் இப்போ உந்திதள்ளும், அனுரவின் ஈரச்சாக்கு இலங்கை தேசியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தே வாக்களித்துள்ளனர்.

இதைதான் மேலே கட்டுரை சொல்கிறது.

நிலமை இப்படி இருக்க, உங்கள் நிலைப்பாடு ஊரில் உள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேடானாதாகவும் எனக்கு படுகிறது.

நன்றி சகோ 

உண்மையில் இது போன்ற கருத்துக்கள் என் போன்றவர்களை ஒதுங்குங்கள் என்பது தான். 

ஆனால் நான் இருப்பது என் இனத்திற்கு எவ்வளவு பலம் என்பதையும் நான் விலகுவது (நான் மற்றும் என்னைச் சார்ந்த அடுத்த அடுத்த தலைமுறை) எவ்வளவு பலவீனம் என்பதையும் தூர நோக்கோடு சிந்திப்பதால் மட்டுமே தொடர்கிறேன். மற்றும்படி என் வாழ்வில் இனம் சார்ந்த எனது செயற்பாடுகளால் எனக்கு மன நிம்மதியை தவிர இழப்பு பல கோடி பணம் மற்றும் மணித்துளிகள் மட்டுமே..

எனவே என் போன்றவர்களை தூக்க படாதபாடு படுபவர்கள் யாருக்கு நன்மை செய்ய விளைகிறார்கள்.??? தமிழருக்கா??? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந்தால் நமக்கென்ன? இப்போது இருப்போரை விட அவர்கள் மோசமானவர்களா நாம் எதையும் இழப்பதற்கு?" என்று கேட்ட ரஞ்சித்தே இன்று ஜேவிபி யின் ஆபத்துகளைப் பற்றித் தேர்வு செய்த கட்டுரைகளை இணைப்பது காலம் எவ்வளவு மாறி விட்டதெனக் காட்டுகிறது.

ஏனெனில், புலத்தில் இருக்கும் தீவிர தமிழ் தேசியர்கள் பலர் எதிர்பார்க்காத ஒரு புதிய வகையான ஆபத்து அனுர அரசிடமிருந்து வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தேர்ந்தெடுத்த சில பிரச்சினைகளை அவர்கள் உணரக் கூடிய வகையில் தீர்ப்பதன் மூலம், அனுர அரசை நோக்கி ஒரு soft corner ஐ உருவாக்குவது. அந்த நட்புணர்வை வைத்து தீவிர தேசியம் மட்டுமல்ல, தீ கக்காத தேசிய உணர்வின் பக்கமிருந்து கூட தமிழர்களை இழுத்தெடுப்பது, என இந்த மென் முயற்சிகள் தான் அந்த ஆபத்து.

வடமாராட்சியில், யுத்த காலத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் இப்படித் தான் மக்கள் "அங்கிள்" என்று அழைக்கக் கூடிய வகையில் மக்களோடு நட்பாக இருந்தாராம். "இதயத்தை வெல்லுதல்" என்ற புதிய அணுகுமுறையைக் கைக்கொண்ட அந்த சிங்கள அதிகாரி மாற்றலாகிச் செல்லும் வழியில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்டார்.

தமிழ் மக்களின் சில பிரச்சினைகளை கொஞ்சம் பரிவோடு ஒரு சிங்களத் தரப்பு அணுகினாலே தமிழ் மக்களின் தரப்பில் இருக்கும் தீவிர தரப்பிற்கு தங்கள் இருப்புப் பறிபோய் விடுமென்ற அச்சம் வந்து விடும். இந்த அச்சத்தையும், படபடப்பையும் மேலே இருக்கும் கட்டுரையிலும், யாழுக்கு வெளியே கேள்விப் படும் உரையாடல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக, நேற்று உள்ளூர் மாவீரர் தினம் இங்கே. இந்த தேர்தலைப் பற்றியும், தமக்கு உவப்பானோர் பலர் ஓரங்கட்டப் பட்டதைப் பற்றியும் விரக்தியோடு பேசினார்கள். அச்சம் அப்படியே வெளித்தெரிந்தது - palpable fear! 

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித் உங்கள் பதிவுக்கு நன்றி.

இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை.

ஆனாலும் 2015 இல் மைத்திரிக்கு நிபந்தனையில்லாத ஆதரவையும் 

எமது மக்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதையும் எதிராக எழுதியபோது

@பாலபத்ர ஓணாண்டி   @நிழலி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

இங்கு வெள்ளை வான் இல்லை கிரீஸ்பூதம் இல்லை. ஒரு துண்டு பாணுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று பலதையும் சொன்னார்கள்.அங்குள்ளவர்களின் நிலமையைப் புரிந்து கொண்டேன்.

இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில் அதுவும் எதுவித பந்தோபஸ்தும் இல்லாமல்(சுமந்திரன் போகும்போதே 4 அதிரடிப்படையாட்கள் போவார்கள்)போய் தோழில் கைபோட்டு கதைக்கிறார்.மழை பெய்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் நிற்கிறார்.

எமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தாயகத்து மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

3 hours ago, Justin said:

 ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரான்ஸில் இருக்கும் ஒரு கடும்போக்கு  தமிழ் இனவாதி அநுரா வருவதை வரவேற்று தனது முகநூலில் எழுதியிருந்தார்.(முன்பு ஒரு பதிவில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்)    

அநுர ஐனதிபதியாக வந்தால்  பாரிய அடக்குமுறைகளை தமிழ் மக்கள் மீது செய்வார். எமக்கும் அது தான் தேவை. தமிழீழம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தனது புதிய பாய்ச்சலைத் தொடங்கும் என்று அநுர தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளவார் என அக மகிழ்ந்திருந்தார். அதே ஆட்கள் இப்போது பதட்டப்படுகிறார்கள்

 முன்பு 2005 ல் ரணில்  ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் கிடைக்காது, மகிந்தவை கொண்டு வந்தால் அவருடன் யுத்தம் புரிந்து தமிழீழம் எடுக்கலாம் என்று மகிந்தவை கொண்டு வந்த பின்னர் பதட்டப்பட்டதைப் போலவே  இப்போது இவர்கள்பதட்டப்படுகிறார்கள்.   (ஐயோ தெய்வக்குற்றம்  புரிந்துவிட்டேனோ!😳 escape😂 

Edited by island
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, island said:

இந்த பத்தி எழுத்தாளர்களது கட்டுரைகள் எல்லாமே அரசியல் அலசல், ஆய்வு என்ற பெயரில் இருந்தாலும் வெறுமனேயே எதிர் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை சகட்டுமேனிக்கு அள்ளி வீசும் குற்ற அறிக்கைகளாகவே இருக்கிறதே தவிர அந்த சந்தர்பங்களில் எல்லாம் அதை சரிவர கையாள்வதில் தமிழர் தரப்பின் தவறுகள் என்ன என்பதையோ எவ்வாறான வழி முறையின் மூலம் தமிழ் மக்கள் படிப்படியாக தமது இலக்குகளை அடையலாம் என்பதை விபரிப்பனவாக இல்லை. அப்படி செய்வதாக  இருந்தால் தமது  காழ்புணர்ச்சை தீர்கக  தமக்கு  ஒவ்வாத அரசியல்வாதிகளை தேர்தெடுத்து ( Cherry pick)  அவர்களை போட்டுத்தாக்குவர்கள். மற்றப்படி ஒட்டுமொத்தமான  தமிழர் அரசியலில் எமது பக்க தவறுகளை கூறுவமோ விமர்சன கண்ணோட்டதுடன் அதை அணுகுவதோ ஏதோ  தெய்வ குற்றம் என்பது போன்ற தோற்றத்தையே இவர்களது ஆய்வு என்ற பெயரில் வரும் குற்ற அறிக்கைகளில் காணலாம்.  

பாரிய பலத்தைடன் இருக்கும் பேரின வாத அரசுடன் யுத்தம் புரியும் போதோ பின்னர் பேச்சு நடக்கும் போதோ எண்ணிக்கையில் குறைந்த  அடக்கப்படும் இன தலைமைகளுக்கு அதிக பொறுப்பு இருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்வு எம் தரப்பில் இருந்ததா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். 

அப்படியே எவரவது அந்த பக்கத்தை சற்றே  தொட்டாலே “ஐயோ கொச்சை படுத்தீட்டான்” என்று ஒப்பாரி வைத்து ஊரைக் கூப்பிடுவதும் பின்பு கைக்கூலி, துரோகி என்று தீட்டி தீர்பதுமே வழமை என்பதை

இதில் முரண்பட முடியாது. ஆனால்….

9 hours ago, island said:

என்பதை உணர்ந்து நீங்களும் அதை பற்றி உரையாடுவதை  தந்திரோபாய ரீதியில் தவிர்கக முனைவீர்கள்.  உங்களது அந்த அணுகுமுறையை நான் குறை கூறவில்லை. அது ஒரு கருத்தாளனின் உரிமை  அதை நான் மதிக்கிறேன். 

இது உண்மையிலேயே தந்திரோபாயம் அல்ல. 

எழுதுபவகளின் குறைகளை விடுத்து விட்டு, அவர்களின் cherry picking ஐ தவிர்த்து விட்டு, அவர்கள் சொல்லும் விடயத்தினை மட்டும் அணுகுவதே நாம் செய்ய கூடியது என நினைக்கிறேன்.

அந்த விடயம் யாதெனில்… எல்லோரும் பிழை விட்டுள்ளார்கள், விட்டுள்ளோம்.

இதில் புலிகள் பிழை விட்டார்கள் என இவர்கள் சாகும் வரை ஏற்கப்போவதில்லை, அதை மீள, மீள சொல்லிக்கொண்டிருந்தால் எல்லோரும் ஒரே இடத்தில் நிண்டு சுத்த வேண்டியதே.

ஆகவேதான் அதை அப்படியே விட்டு விட்டு, ஒத்த கருத்துக்கள் மீது கவனம் வைக்கிறேன்.

நம்மை வேறுபடுத்தும் கருத்துக்களை மீள, மீள உரைக்கும் போது ஒன்றாக முன்பே போவது இயலாத காரியமாகிறது.

யாழ் ஒரு சிறுதுளி.

எம் இனத்தின் அரசியல் அதன் பெரிய ஸ்கேல்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, island said:

தாயகம் தேசியம், சுயநிர்ணயம் என்ற கோசத்தை முன்வைத்து பொதுவேட்பாளர் வட கிழக்கு மாகாணங்களில் பெற்ற வாக்குகளின் சத வீதம் என்ன? 

அது கொள்கையை மக்கள் நிராகதித்தமை அல்ல. ஜனாதிபதி தேர்தலில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என மக்கள் நினைக்கவில்லை.

அத்தோடு தமிழரசு கட்சி அதை ஆதரிக்கவில்லை.

இப்படியான நிலையில் இந்த மாதிரி ஒரு வேட்பாளரை நிறுத்துவது சரியா, பிழையா என யாழில் நான் கேள்வி எழுப்பி - அப்படி நிறுத்தின் எல்லோரும் உடன்பட்டு நிறுத்த வேண்டும் என்று எழுதினேன்.

அதன் பின் வரவில்லை, ஆனால் @நிழலி தொடர்ந்து இது எதிர்மறையான விழைவைதரும் என எழுதினார். அதுதான் நடந்தது.

சின்ன வயதில் படித்த ஒற்றுமை அற்ற எருதுகளின் கதைதான்.

நாம் ஒற்றுமையாக ஒரே அணியில் திரளாதவரை, வாக்குப்பலமும், செயல்பலமும், சிதறிக்கொண்டே இருக்கும்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

காலத்துக்கு தேவையான கட்டுரை ரஞ்சித்.

இன்னும் வாசிக்கவில்லை.

ஆனால் உங்கள் கேள்விக்கான பதில்.

இல்லை.

அதை விட பன்மடங்கு கூடிய கண்ணை குருடாக்கி கொண்டு நம்பும் நம்பிக்கையை அனுர மீது வைக்கிறார்கள்.

குறிப்பாக புலம்பெயர் தமிழர்.

பண்டார நாய்க்கா,சிறில் மத்தியூ,தொடக்கம் இன்று விமல் வீரவம்ச உதயகம்பப்பிலா போன்றோர் இருக்கும் வரை தமிழர்கள் நித்திரை கொள்ளமுடியும் தமிழ் தேசியம் சுயம்பாக வளரும் ....

அன்று 50 வருடங்களுக்கு முன்பு  புலம்பெயர்ந்தவர்கள் உரிமை குரல் எழுப்பவில்லை ...தாயக மக்கள் தான் குரல் கொடுத்தனர் ....ஆகவே உரிமைகள் மறுக்கப்படும் பொழுது ....மக்கள் போராடுவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, island said:

யுத்த குற்றங்கள் பற்றி இங்கு கூறப்பட்டது. இதைப் பற்றி முன்னரே கூறியிருந்தேன்.  இருந்தாலும் திரும்ப  அது பேசு பொருளாகி இருப்பதால் மீண்டும்  எழுதுகிறேன். ஶ்ரீலங்காவில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் தனது படையினரை சர்வதேச விசாரணைக்கு அனுப்பாது. அதை நன் சரி என்று கூறவில்லை. அது தான் ஜதார்த்த நிலை.

இதில் ஆச்சரியமான விடயம் ஏதும் இல்லை.

ஆனால் இதை நாம் ஏற்று கொள்ளாமல் போராட வேண்டும்.

அரசியல் என்றால் அதுதானே?

அதுவும் விடுதலை அரசியல். விசாரணையால் நமக்கு என்ன நட்ட ஈடா வரப்போகிறது, இல்லை? அதை பயன்படுத்தி - நமக்கு ஒரு தீர்வை அடைய இப்போதும் வழி இருக்கிறது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, island said:

1990 ல் ஆயுதமின்றி சரண்டைந்த இலங்கை பொலிசாரை சுட்டு கொன்ற போராளிகளை தம்மிடம் விசாரணைக்கு தருமாறு சர்வதேசம் தலைவர் பிரபாகரனிடம் கேட்டிருந்தால்  அவரும் அநுர எடுக்கும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருப்பார். 2002 பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்களை ராஜீவ் கொலை விசாரணைக்காக இன்ரபோல் தேடுகிறதே, உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்க, “நடக்கிற விடயங்களைப் பேசுவோம்” என்று கேலியாகப் பதிலளித்தவர் அவர். இதை நான் கூறுவது யாரையும் குற்றம் சொல்ல அல்ல.  உலக ஜதார்ததம் அது தான் என்பதை புரிய வைக்கவே. 

இங்கேதான் நீங்களும் சுமந்திரனும் பிழை விட்டீர்கள்.

நீங்களோ, நானோ, சுமந்திரனோ புலிகளின் பிரதிநிதிகள் அல்ல. நாம் எம்மக்களின் பிரதிநிதிகள்.

நாம் கோருவது எம் மக்களுக்கு இலங்கை அரசு இழைத்த அநீதிக்கான விசராணையை. அதை நாம் கோருவது அதனை ஒரு துரும்பாக பாவித்து ஒரு நியாயமான தீர்வை எட்ட.

புலிகள் செய்தவை பற்றி எமக்கு கவலை இல்லை. அதை பாவித்து இப்போ எம் மக்களுக்கு நாம் ஒரு தீர்வை பெற முடியாது. ஆகவே அதை பற்றி நாம் கதைக்க வேண்டியதில்லை (நமக்குள் வரலாற்றில் இருந்து கற்று கொள்வதற்காக கதைப்பது அல்ல).

இலங்கை அதை பேச விரும்பினால் போய், புலிகள் இருந்தால் அவர்களுடன், அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என யாரும் இருந்தால் அவர்களுடன் பேசட்டும், விசாரிக்கட்டும்.

நாம் புலிகள் அல்ல. தமிழர்.

புலிகள் செய்தவற்றுக்கு பொதுமக்களாகிய நாம் ஒரு போதும் பொறுப்பு கூற வேண்டியதில்லை.

ஆனால் இலங்கை படைகள் செய்தமைக்கு, யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசே பொறுப்பு.

நாம் கோருவது எமக்கான நியாயமான விசாரணையை.

இதில் சுமந்திரன் தன் வகிபாகத்தை மீறி, எமது மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் - தானே ஐ சி சி நீதிபதிபோல் கதைக்க வெளிகிட்டுத்தான், சகலதையும் கவிழ்த்து கொட்டினார்.

Edited by goshan_che
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் உங்கள் பதிவுக்கு நன்றி.

இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை.

ஆனாலும் 2015 இல் மைத்திரிக்கு நிபந்தனையில்லாத ஆதரவையும் 

எமது மக்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதையும் எதிராக எழுதியபோது

@பாலபத்ர ஓணாண்டி   @நிழலி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

இங்கு வெள்ளை வான் இல்லை கிரீஸ்பூதம் இல்லை. ஒரு துண்டு பாணுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று பலதையும் சொன்னார்கள்.அங்குள்ளவர்களின் நிலமையைப் புரிந்து கொண்டேன்.

இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில் அதுவும் எதுவித பந்தோபஸ்தும் இல்லாமல்(சுமந்திரன் போகும்போதே 4 அதிரடிப்படையாட்கள் போவார்கள்)போய் தோழில் கைபோட்டு கதைக்கிறார்.மழை பெய்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் நிற்கிறார்.

எமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தாயகத்து மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.

இந்தியாவை பகைத்தாலும் அமெரிக்காவை பகைக்க கூடாது என்ற கொள்கையை நன்றாகவே அனுரா அரசு தெரிந்து வைத்துள்ளனர் ...
ஆகவே தமிழனை அரவணைத்து செல்ல வேண்டும் ..அரவணக்காத பட்சத்தில் இந்தியா ஒன்று இரண்டு என தொடங்கி பதிமூன்று வரை  கணக்கு சொல்லி கொண்டு மூக்கை நுழைக்கும் என்பதும் தெரியும்...ஆகவே தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை என சொல்லி காலம் கடத்தி மாகாணசபையை நடைமுறை சாத்தியமாக்க முயல்வார்கள் .மாகாணசபை நடை முறைக்கு வந்த பின்பு ....இந்தியா இலங்கை ஒப்பந்தம் கிழித்து எறியப்படும் .. 
அதன் பின்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எந்த செயல்பாட்டிலும் சிறிலங்கா துணிந்து செயல் படலாம் ..

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.