Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 51
  • Views 3.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்க

  • இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என. கொழும்பு, பேரா தவிர ஏனைய பல்கலைகழக மருத்துவ, பொறியல் மாணவர்கள் கூட இப்படி பேச்சு ஆங்கிலத்தில் தடுமாறுவதை கண்டுள்ளேன். ஆனால் ஒரு சில வருட

  • ரசோதரன்
    ரசோதரன்

    விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னா

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நியாயம் said:

நன்றி இணைப்புக்கு   நியாயம்     

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹன விஜய வீரவிற்கு  பாராளுமன்றத்தில் வீர வணக்கம் செலுத்திய ஒருவர் என்றால் அது வைத்தியர் அர்ச்சுனா MP  யாகத்தான் இருக்குமென்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

1) சுமந்திரனுக்கு நன்றி கூறிய காரணத்தால் அர்ச்சுனா ரமநாதன் அவர்கள்  இன்றிலிருந்து சுமந்திரன் நோயால் பீடிக்கப்பட்டவர்களால் வெழுத்து வாங்கப்படுவார்,....🤣

2) மேதகு விற்கும் ரோகண விஜேவீரவிற்கும் ஒருங்கே அஞ்சலி செலுத்தியபடியால் எழக்கூடிய  பிரச்சனைகளை சமன் செய்துள்ளார். 

👏

  • கருத்துக்கள உறவுகள்

எனது அவதானிப்புகள்

1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது.

2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும்.

3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே.

4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார்.

5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார்.

6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார்.

7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது.

8. 65% கொடுக்கலாம்.

9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று.

ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...................... 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய சட்டங்கள் இருந்தாலும்  மே.தகு , இறந்த மாவீரர்களை நினைவு கூரல். றோகண விஜய வீர தமிழர்களை கொல்லவில்லை. அவருக்கான வீர வணக்கம் ஒரு அரசியல் வருடல் என கொள்லாமா?
இனப்படுகொலை என பா.மன்றத்தில் சொல்ல ஒரு துணிவு வேண்டும். அது மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டும் எமக்கான நீதி கிடைக்கும் வரை.
நன்றி  மறக்காமல் திரு சுமந்திரனுக்கு நன்றி சொல்லி தான் வைத்தியர் ஆக கடந்து வந்த மிக கடினமான பாதைகளை விபரிக்கிறார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ( அவர் சுயேட்சையாக  இருந்தாலும்)  கொடுக்கும் நேரம் கூட இவ்வளவு "பேதி நேரம் " மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

நன்றி இணைப்புக்கு   நியாயம்     

வாட்ஸப் குழுமம் ஒன்றில் இந்த காணொளி பகிரப்பட்டது கந்தையர்.

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நேரம் அதிகம் எடுத்து கொண்டதால் உரையை முடித்துக்கொள்ளும்படி கேட்ட்கும் பொது 20 செகண்ட் , 15 செகண்ட் 10  செகண்ட் 5 செகண்ட் என்று அவைத் தலைவருக்கே நேரம் காட்டி உரையை முழுவதுமாக முடித்தது கூட வித்தியாசமாக இருந்தது.

திரு ராமலிங்கம் அவர்களின் உரையை முழுமையாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் சற்றே தடுமாறினார், பலமுறை அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த பிமல் ரத்னாயக்க சாடையாக ராமலிங்கம் அவர்களின் சட்டையை சற்றே பிடித்து இழுத்து சிக்னல் கொடுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று.

ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...................... 

காணோளி பற்றிய உங்கள் கருத்தென்ன?

2 hours ago, Kapithan said:

1) சுமந்திரனுக்கு நன்றி கூறிய காரணத்தால் அர்ச்சுனா ரமநாதன் அவர்கள்  இன்றிலிருந்து சுமந்திரன் நோயால் பீடிக்கப்பட்டவர்களால் வெழுத்து வாங்கப்படுவார்,....🤣

2) மேதகு விற்கும் ரோகண விஜேவீரவிற்கும் ஒருங்கே அஞ்சலி செலுத்தியபடியால் எழக்கூடிய  பிரச்சனைகளை சமன் செய்துள்ளார். 

👏

அப்படியா? நடக்க சந்தர்ப்பம் இல்லை என் கிறேன்.  சவாலுக்கு தயாரா?

என் பி பி  தான் நினைத்ததை செய்ய போகிறது. பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசப்போகும் ஒரே ஒருவர் அர்ஜுனாவாக தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை

இலங்கைத் தமிழரில்  பல படித்ததாக சொல்லிக்கொள்பவர்களின் ஆங்கில மொழித் திறன் அவ்வளவு தான், தான் படித்த பாடத்தில் மட்டுமே ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்கும் ( அதுவும் மருத்துவதில் Latin and Greek  தான் அதிகம் ) அதைத் தவிர சுய கற்றல் கிடையாது, காரணம் பல்கலைக்கழகம் முடித்த உடனேயே அரைப்படித்த எங்கள்   சமூகம் இவர்களுக்கு புலமையாளர் என்றும் கலாநிதி என்றும் பட்டம் வழங்கும், இதனால் இவர்கள் தாம் உண்மையிலேயே புலமையாளர் தான் என்று நம்ப வைக்கப் படுகின்றார்கள், விளைவு  ஒரு கடிதம் இலக்கணப் பிழை இன்றி எழுதத் தெரியாது. 

அண்மையில் Colombo telegraph இல் இலங்கை சட்டத்தரணிகளின் ஆங்கிலப் புலமையின் வறட்சி பற்றி கட்டுரை வந்தது, சட்டத்தரணி சுகாசை நினைத்துப் பார்த்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகிடி said:

இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என.

கொழும்பு, பேரா தவிர ஏனைய பல்கலைகழக மருத்துவ, பொறியல் மாணவர்கள் கூட இப்படி பேச்சு ஆங்கிலத்தில் தடுமாறுவதை கண்டுள்ளேன்.

ஆனால் ஒரு சில வருடம் வெளிநாட்டில் இருந்த பின் நல்ல முன்னேற்றமாக இருக்கும்.

அதே போல் சுயபாசவுக்கு முந்திய தலைமுறையில் ஒரு லிகிதரிடம் இருந்த ஆங்கில திறனும், நிர்வாக இயலுமையும் இப்போ ஒரு மாவட்ட அரச அதிபரிடம் கூட இல்லை.

இதில் இவர்களை பிழை சொல்ல முடியாது. கல்வி கொள்கை வகுப்பாளர் விட்ட பிழை.

ஒரு காலத்தில் மலேசியா, நைஜீரியாவுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஏற்றுமதி செய்த நாடு.

இப்போ மறுபடியும் ஆங்கிலத்துக்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பிரதமராக வருபவர் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் PPE - politics, philosophy and economics படித்திருக்க வேண்டும் என்ற எழுதாத விதி இருந்தது. தொழில்முறை அரசியல்வாதிகள் சகல தகுதியுடனும் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் அருச்சுனா உள்ளே தள்ளப்பட்டார். ஒரு 6 மாதங்கள் கொடுத்துப்பாருங்கள். 
அதற்கிடையில் யாரும் வழக்குப்போட்டு தகுதி நீக்கமடையாமல் இருந்தால் நல்லதொரு அரசியல்வாதியாகப் புடம் போட்டு வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

காணோளி பற்றிய உங்கள் கருத்தென்ன?

காணோளி பற்றிய என் கருத்தை தான் அங்கே பதிந்திருந்தேன், நுணாவிலான். 

இதே போலவே தான் விக்கினேஸ்வரன் ஐயாவும் முதலாவது உரையை ஆற்றியிருந்தார் என்பதன் மூலம் இவை எல்லாம் கேட்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதி வாசிக்கப்படும் உரைகள் என்று சொல்லியிருந்தேன். இவர்கள் போன்றவர்கள் எந்த காத்திரமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்று நான் நம்பவில்லை என்பதும் அதன் பொருள். அது தான் நாம் அறிந்த வரலாறும்.

இன்னும் இன்னும் அகலமாக தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் அகதிகள், வெளிநாடுகளில் ஒற்றைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒரு பரந்த பார்வை இருப்பது போல கூட இந்த உரை தெரியலாம். ஆனால் பாரளுமன்றத்தில் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளிலேயே அர்ச்சுனா தன்னை மட்டுமே சுற்றி வரும் ஒருவர் என்பது தான் மீண்டும் மீண்டும் தெரிகின்றது.

நித்தியின் அல்லது ஜக்கியின் ஒரு பேச்சை கேட்டீர்கள் என்றால், அவையும் அசத்தலாகவே இருக்கும். எல்லாவற்றையும் தொகுத்து, அந்த மனிதர்களையும் சேர்த்துப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் ஏமாற்றுகளாகவே தெரியும், முடியும்.

'ஒருவரின் கருத்து அவரைத் தாண்டிப் போவதில்லை.................' என்று ஒரு வரி இருக்கின்றது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளை தாண்டி, அவர் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பேதும் இல்லை என்று இதைப் பொருள் கொள்ளலாம்.     

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என.

இது தான் நான் உண்மையில் சொல்ல வந்தது, எதற்கு இந்த உண்மையைச்  சொல்லி தேவையில்லாமல் வேண்டிக் கட்டுவேண்டும் என்று சுற்றி வளைத்துச் சொன்னேன்.

மொழி வெறியால் நாம் இழந்தது அதிகம் 

15 hours ago, goshan_che said:

ஒரு சில வருடம் வெளிநாட்டில் இருந்த பின் நல்ல முன்னேற்றமாக இருக்கும்.

அது வெளிநாட்டில், வெளிநாட்டில் இருக்க வேண்டியது போல் இருந்தால் தான் நடக்கும், அங்கேயும் போய் திரும்பவும் தமிழரோடு சேர்ந்து தான் வாழ்வேன் என்றால் அதிலும் மாற்றம் வராது 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

காணோளி பற்றிய என் கருத்தை தான் அங்கே பதிந்திருந்தேன், நுணாவிலான். 

இதே போலவே தான் விக்கினேஸ்வரன் ஐயாவும் முதலாவது உரையை ஆற்றியிருந்தார் என்பதன் மூலம் இவை எல்லாம் கேட்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதி வாசிக்கப்படும் உரைகள் என்று சொல்லியிருந்தேன். இவர்கள் போன்றவர்கள் எந்த காத்திரமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்று நான் நம்பவில்லை என்பதும் அதன் பொருள். அது தான் நாம் அறிந்த வரலாறும்.

இன்னும் இன்னும் அகலமாக தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் அகதிகள், வெளிநாடுகளில் ஒற்றைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒரு பரந்த பார்வை இருப்பது போல கூட இந்த உரை தெரியலாம். ஆனால் பாரளுமன்றத்தில் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளிலேயே அர்ச்சுனா தன்னை மட்டுமே சுற்றி வரும் ஒருவர் என்பது தான் மீண்டும் மீண்டும் தெரிகின்றது.

நித்தியின் அல்லது ஜக்கியின் ஒரு பேச்சை கேட்டீர்கள் என்றால், அவையும் அசத்தலாகவே இருக்கும். எல்லாவற்றையும் தொகுத்து, அந்த மனிதர்களையும் சேர்த்துப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் ஏமாற்றுகளாகவே தெரியும், முடியும்.

'ஒருவரின் கருத்து அவரைத் தாண்டிப் போவதில்லை.................' என்று ஒரு வரி இருக்கின்றது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளை தாண்டி, அவர் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பேதும் இல்லை என்று இதைப் பொருள் கொள்ளலாம்.     

ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் ஆங்கில உரைகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக மட்டத்தில் இருந்த ராஜதந்திரிகள் மட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. அதை கேட்கவே தூதரகங்களில் உள்ள பல ராஜதந்திரிகள் பாராளுமன்ற  கலரிக்கு வருவதுண்டு. ஆனால் இந்த attraction ஐ வைத்து முழுமையான சர்வதேச பரப்புரைகளை அன்றைய தமிழர் தரப்புகள் செய்து அதை ஒரு political investment ஆக மாற்றவில்லை.   ஆகவே,  இவ்வாறான உரைகளை தாண்டி ஒட்டு மொத்தமான தமிழர் தரப்பால் செய்யப்படும் அரசியல் தான் படிப்படியாக எமக்கு பலனைத் தரும். தமிழரிடையே மட்டும் பெயரெடுப்பதற்காக பேசப்படும் வீர உரைகளால் கிஞ்சித்தும் பிரயோசனம் இல்லை.  

நினைவேந்தலுக்கு முழுமையான தடை இருக்கும்  போது மகிந்த காலத்தில் பெட்டிப்பாம்பாக இருந்த கஜே இப்போது அதற்கான அனுமதியை அரசு உத்தியோகபூர்வமாக கொடுத்த பின்னர் அது போதாது என்று  முழங்குவது தமிழரிடையே பெயரெடுக்கவும் இதை பேசுவதால் அரசங்கத்தான் எனக்கு எந்த ஆபத்தும் வராது என்ற துணிச்சல் மட்டுமே.    இதனைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் பல உண்டு. அவைகள் பற்றி  கவனமெடுக்க வேண்டும்   ஆக்கபூர்வ நடைமுறை அரசியலை செய்ய வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் ஆங்கில உரைகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக மட்டத்தில் இருந்த ராஜதந்திரிகள் மட்டத்தில் பிரபல்யமாக இருந்தது

அமிர் நன்றாகக் கதைப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என. ----

அதே போல் சுயபாசவுக்கு முந்திய தலைமுறையில் ஒரு லிகிதரிடம் இருந்த ஆங்கில திறனும், நிர்வாக இயலுமையும் இப்போ ஒரு மாவட்ட அரச அதிபரிடம் கூட இல்லை.

Reassessing S. W. R. D. Bandaranaike

எல்லாப் புகழும்... சிங்களம் மட்டுமே என்ற சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்காவுக்கே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அமிர் நன்றாகக் கதைப்பார்!

கதைப்பார், நன்றாக🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அமிர் நன்றாகக் கதைப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கதைப்பார், நன்றாக🤣

இப்ப எல்லோரும் எங்கன்ட பழைய ஆட்களின் ஆங்கில புலமையை புகழ்ந்து பேசுகின்றனர் ..இவர்கள் ஒரு காலத்தில் சொன்னார்கள் ...சிங்களவர்களுக்கு  தமிழர் மீது வெறுப்பு வருவதற்கு காரணம் தமிழர்கள் பிரித்தானிய ஆட்சிகாலத்தில் (பிரித்தானியாவின் பிரித்தாலும் கொள்கையினால் தான்) அதிகம் படிக்க சந்த்ர்ப்பம் கிடைத்து சிங்களவரை அடிமைபடுத்தினவையள் என்று ....

இப்ப சிங்களவனிடம் தமிழன் அடிமைப்பட்டு சொந்த மொழியில முன்னுக்கு வந்தாலும் அவனில பிழை பிடிக்கினம் ...வெளிநாட்டு தூதுவர்களாக ஆங்கிலத்தில் வியாக்கியானம் பேசி என்னத்தை கண்டோம்.... 
தொழில் தெரிந்தவனுக்கு ஆங்கில புலமை தேவையில்லை...

அனுராவுக்கு ஆங்கில புலமை எப்படி?
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

அனுராவுக்கு ஆங்கில புலமை எப்படி?

மானிட குல மீட்பருக்கு மொழி ஏது🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மானிட குல மீட்பருக்கு மொழி ஏது🤣

அது சரி ...புத்தருக்கு இங்கிலிசு தெரியுமே உலகத்தின் அரைவாசி பேரை தன்ட காலில் விழபண்ணியுள்ளார்.......
21 ஆம் நூற்றாண்டின் அவதாரம் ...ஜனாதிபதி பதவி ஏற்கும் பொழுது அவரின் தலையில் ஒர் ஒளிவட்டம் வந்து சுழன்று கொண்டிருந்தது அதை எந்த யூ டியுப்காரரும்  படம் எடுக்க முடியவில்லை ...பல அதிரடி முயற்சிகளை எடுத்தும் அவர்களால் படம் பிடிக்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, putthan said:

தொழில் தெரிந்தவனுக்கு ஆங்கில புலமை தேவையில்லை...

அனுராவுக்கு ஆங்கில புலமை எப்படி?
 
என்னுடைய மட்டத்தில் தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதிகம் இல்லை................

'குடைக்கம்பி முறிந்தது.............' என்று ஒரு பாட்டில் வரும் அல்லவோ, அதைப் போன்ற ஒரு மொழிப் பிரவாகம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் சிங்களத்தில் ஆள் அசத்துவார்...........

நீங்கள் சொல்லியிருப்பது போலவே தொழிலில் நன்றாகவே கைதேர்ந்தவர்.............. ரஜனியின் தமிழ் கூட நன்றாக இருக்கின்றது என்று தானே சொல்லுகின்றார்கள்..............

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய மட்டத்தில் தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதிகம் இல்லை................

'குடைக்கம்பி முறிந்தது.............' என்று ஒரு பாட்டில் வரும் அல்லவோ, அதைப் போன்ற ஒரு மொழிப் பிரவாகம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் சிங்களத்தில் ஆள் அசத்துவார்...........

நீங்கள் சொல்லியிருப்பது போலவே தொழிலில் நன்றாகவே கைதேர்ந்தவர்.............. ரஜனியின் தமிழ் கூட நன்றாக இருக்கின்றது என்று தானே சொல்லுகின்றார்கள்..............

👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.