Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!

மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி அரசாங்கம் நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்த பிறகு, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். 

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். 

இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. 

எனவே, மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை. 

மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.hirunews.lk/tamil/390161/மாகாண-சபைத்-தேர்தலை-கால-தாமதமின்றி-நடத்தக்-கோரும்-சுமந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாகாண சபை முதல்வராக... வர, சுமந்திரன் அந்தரப் படுகிறார் போலுள்ளது. 
அது சரி... "பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது" என்று சொல்வார்கள்.
 😂

விக்கியர் தலைமையில் இருந்த மாகாண சபைக்கு... 
குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்ததே சுமந்திரன் தானே. 😎

சுமந்திரன்... மாகாண சபை தேர்தலில் நின்றால், 
அனுரா கட்சிக்கும், அர்ஜுனா கட்சிக்கும்
 "ஜாக்போட்" பரிசு காத்திருக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூஞ்சூறு சும்மா குறுக்க ஓடுது,??

பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாணசபை தலைவர் இரண்டில் ஒன்று உறுதி?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

44 minutes ago, விசுகு said:

மூஞ்சூறு சும்மா குறுக்க ஓடுது,??

பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாணசபை தலைவர் இரண்டில் ஒன்று உறுதி?

36 minutes ago, nochchi said:

தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?

மாகாணசபத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமா,  வேண்டாமா? 

அதற்குப் பதிலைக் கூறுங்கள் முதலில். ......

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, nochchi said:

தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?

அதேதான்... நொச்சி.  வந்த வேலையில்...பலதை  முடித்து விட்டார். 
இன்னும்  மிஞ்சி இருக்கிறதையும்... "வெட்டி சாய்ப்பம்" என்று புறப்பட்டு விட்டார்.

அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில்... 
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராஜா கஜேந்திரனும்  சந்தித்தித்தமையும்... 

சுமந்திரனுக்கு... "வயிற்று எரிச்சலை" ஏற்படுத்தி இருக்கும். 
அதை குழப்ப வேண்டுமென்றால்... இப்போ மாகாணசபை மூலமாக உள்ளே வந்துதான் 
ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார் போலுள்ளது.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kapithan said:

மாகாணசபத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமா,  வேண்டாமா? 

அதற்குப் பதிலைக் கூறுங்கள் முதலில். ......

😁

மாகாணசபைத் தேர்தல் நடாத்தப் பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. 
ஆனால்...

இலங்கையின் தமிழ் மக்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும் இரு  மாகாண சபைகள்  கிடைக்க இருந்தது. அதில் கிழக்கில் இருந்ததை... சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்தபின்... மிஞ்சி இருந்தது விக்கியர் தலைமையில் இருந்த வடக்கு மாகாண சபை. 

அதனை பொறுக்க முடியாத  சுமந்திரன்... இல்லாத குடைச்சல் எல்லாம், சி. வி. கே. சிவஞானம் மூலமாக கொடுத்து அதை இயங்க விடாமல்... இறுதியில்   ஜனாதிபதிவரை சென்று,  அதனை முடக்கியவர்தான் சுமந்திரன்.

அவர்... மீண்டும் மாகாண சபை தேர்தல் வேண்டும் என்று கேட்பது முரணின் உச்சம்.
தனக்குத் தேவை இல்லாவிடில்... குழப்பி அடிப்பது.
இப்போ... தனக்குத் தேவை என்றவுடன், தேர்தல் வேண்டும் என்று சொல்வதைத்ததான் தவறு என்கிறோம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்தான் இயங்க விடாமல்  முடக்கியவர் என்று கூறுவதற்கு தங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது ? 

ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்கிற கதையாக இருக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Kapithan said:

சுமந்திரன்தான் இயங்க விடாமல்  முடக்கியவர் என்று கூறுவதற்கு தங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது ? 

ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை என்கிற கதையாக இருக்கக் கூடாது. 

அப்போதைய பத்திரிகைகளில்... வடக்கு  மாகாணசபை  அங்கத்தவர்களால் 
பகிரங்கமாக சுமந்திரனை குற்றம்சாட்டி  தெரிவிக்கப்பட்ட  கருத்துக்களே அவை. 

அத்துடன்.... அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கூட, 
சுமந்திரனின் தலையீட்டைப் பற்றியும், மாகாணசபைத் தேர்தலை 
மீண்டும் நடத்த வேண்டாம் என்று, சுமந்திரன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

நான் எனது நினைவில் உள்ளதை வைத்தே எழுதுகின்றேன். 
உதாரணத்துக்கு ஒன்று கீழே உள்ளது. 

எல்லா... ஆதாரமும் என்னால் திரட்ட எனக்கு நேரம் இல்லை. 
ஆர்வம் இருந்தால்... நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள். 

நீங்கள் சொல்வதை பார்த்தால்.... சுமந்திரன் இவற்றை செய்திருக்க மாட்டார் என்று நம்புவதுபோல் தெரிகின்றது. அதுசரி... உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே. 😂

நேரம் பொன்னானது. நன்றி, வணக்கம். 🙏

https://www.samakalam.com/தலைகாட்ட-தயங்கும்-தலைவர/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

ஆகவே உங்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. சமூக ஊடகங்களில் எடுக்கப்படும் வாந்தியை அப்படியே நம்புகிறீர்கள். அல்லது உங்கள் நோக்கங்கள் நிறைவேறும்வரை நம்புவது போல நடிக்கிறீர்கள். 

இப்படியான ஆட்களுக்காகத்தான் சமூக ஊடகங்கள் வாந்தி எடுக்கின்றன. 

பதில் இல்லாவிட்டால்தான் உங்களுக்கும் விசுகருக்கும் நேரம் பொன்னானது என்கிற விடயம் ஞாபகத்திற்கு வருவது வழமையானது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... மாகாண சபை தேர்தலில் நின்றால், 
அனுரா கட்சிக்கும், அர்ஜுனா கட்சிக்கும்
 "ஜாக்போட்" பரிசு காத்திருக்குது. 🤣

சூடு கண்ட திருட்டு பூனை இனி தேர்தலில் நிக்காது பின்கதவால் வரவே முயற்சிக்கும் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பெருமாள் said:

சூடு கண்ட திருட்டு பூனை இனி தேர்தலில் நிக்காது பின்கதவால் வரவே முயற்சிக்கும் .

அப்படி வரும்போது கள்ளன் கள்ளன் என்று கத்த வேண்டியதுதானே,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kapithan said:

அப்படி வரும்போது கள்ளன் கள்ளன் என்று கத்த வேண்டியதுதானே,....🤣

ரோசம் மானம் உள்ளவர்களுக்கு சொன்னால் கொஞ்சமாவது உறைக்கும் உங்க ஆள் முதலில் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுகிறவரா என்று கேட்டு சொல்லுங்க .

சொன்னது போலவே அரசியலில் இருந்து ஓய்வுக்கு போக வேண்டியதுதானே பிறகேன் தொங்கி கொண்டு இருக்கிறார் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் இல்லாத ஒரு தமிழர் அரசியல் களம் எதிர்காலத்தில் வருவதற்கான சூழல் இப்போது உருவாகி இருப்பதை சுமந்திரன் உணர்ந்துள்ளார், அதன் வெளிப்பாடே இவரது இந்த அறிக்கை. 

நான் நினைக்கிறேன் விசையம் சுமந்திரனது கையை மீறிக்கொண்டு போகிறது. 

இப்படி இருந்தால் சுமந்திரனை எல்லோரும் மறந்துவிடக்கூடியநிலை வரும் என அவர்நினைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பெருமாள் said:

ரோசம் மானம் உள்ளவர்களுக்கு சொன்னால் கொஞ்சமாவது உறைக்கும் உங்க ஆள் முதலில் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுகிறவரா என்று கேட்டு சொல்லுங்க .

சொன்னது போலவே அரசியலில் இருந்து ஓய்வுக்கு போக வேண்டியதுதானே பிறகேன் தொங்கி கொண்டு இருக்கிறார் ?

புத்தியைப் பாவிக்காமல், ரோசம் மானம், சத்தியம் பாவம் புண்ணியம்,  கர்மவினை முற்பகல் செயின் பிற்பகல் விளையும் போன்ற கவைக்குதவாத விடயங்களைத் தோளில் சுமந்ததன் விளைவுதானே நாங்கள் எல்லோரும்  நாடோடிகளாக அலைவது? 

இனியாவது புத்தியைப் பாவியுங்கோ,..☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

சூடு கண்ட திருட்டு பூனை இனி தேர்தலில் நிக்காது பின்கதவால் வரவே முயற்சிக்கும் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன், 
இந்த ஆண்டு  ஆரம்பத்தில் நடந்த தமிழரசு கட்சித் தலைவருக்கான போட்டியில்...
அவருடைய சொந்தக்  கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப் பட்டார்.

பின்... சென்ற மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், 
தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டார். 

ஆக... சுமந்திரனுக்கு  இந்த  ஆண்டு...  "கனதியான" இரண்டு தோல்விகளை கொடுத்துள்ளது.

முன்னாள் பா. உ. சுமந்திரன்... இந்த இரண்டு தோல்விகளையும் ஏற்றுக் கொண்டு,
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே.. நல்லது.

அவர், மாகாண சபைத் தேர்தலில்  போட்டியிடுவாரேயானால்..
தமிழ்  மக்கள், வடக்கு மாகாண சபைக்கு... 

அனுரவின்  சிங்கள கட்சியை தெரிவு செய்வார்கள் என்பது 100 வீதம் உண்மை. 

Edited by தமிழ் சிறி
  • Like 2

தமிழீழம் கிடைக்காததற்குக் காரணம் சுமந்திரன் என்கிறீர்கள்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, விசுகு said:

மூஞ்சூறு சும்மா குறுக்க ஓடுது,??

பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாணசபை தலைவர் இரண்டில் ஒன்று உறுதி?

தமிழரசு கட்சியின் தேசியப் பட்டியல் மூலம்... தற்போது   பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்தியர் சத்தியலிங்கத்தை, பதவி விலக வைத்து... அவரை வடக்கு மாகாண சபைக்கு போட்டியிடச் செய்வதன் மூலம் பாராளுமன்றில் ஏற்பட்ட  வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கம் போல்   பின்கதவால் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார். 😎

முன்பு சுமந்திரன்...  " நான், தேர்தலில்  மக்களால் நிராகரிக்கப் பட்டால்...  தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன்" என்று கூறினாரே என்று நீங்கள் கேட்டால்... 
"அது... போன மாசம், இது... இந்த மாசம்" என்று சொன்னாலும்  சொல்வார். 😂

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்... ராஜதந்திர சிந்தனைகளை எல்லாம்,
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே... டக்கென்று கண்டுபிடித்து விடுவதுதான்  சுமந்திரனின் கஸ்ரகாலம். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

அனுரவின்  சிங்கள கட்சியை தெரிவு செய்வார்கள் என்பது 100 வீதம் உண்மை. 

என்ன நியாயம் இது, சுமந்திரனோட கோவிச்சு கொண்டு கால் கழுவாமல் இருப்பதா🤣. நமக்குத்தானே மணக்கும்🤣. சொறி வரும்🤣.

மாகாணசபை தேர்தல் வேண்டும்.

சுமன் தன் அடிப்பொடிகளை பாவித்து அதில் கேட்க முனைந்தால் - சிறி அதை தடுக்க வேண்டும். 

இல்லாவிட்டால் இவர் என்ன தமிழரசு கட்சி தலைவரா இல்லை மிக்சர் மாமாவா எண்ட கேள்வி எழும்.

அதுவும் முடியாவிட்டால்….சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி இணைந்து ஒரு பலமான தேர்தல் கூட்டை அமைத்து, சுமன், அனுர இருவரையும் தோற்கடிக்க வேண்டும்.

சுமனை சாட்டி கொண்டு இவர்கள் காலம் தாழ்துவதை, பிரிந்து நிற்பதை இனியும் ஏற்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, goshan_che said:

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப் படும் போது...
சூடு கண்ட பூனை, ஸ்ரீதரன் வேறொரு வியூகத்தை எடுப்பார் என நம்புகின்றேன்.

ஆனால்... நீங்கள் சொல்வது போல்... சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி அமைக்க தற்போது காலம் கனியவில்லை. ஓரிரு வருடத்தில் நடக்கலாம்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாவற்றிற்கும் சுமந்திரனை திட்ட முடியாthu.

மாகாண சபை முறையினை இல்லாதொழிக்க சிங்களவன் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கும்போது, மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டுமென கோருவது ஒரு சூட்சுமம்தான்.

அரசாங்கமே தேர்தல் நடத்தி தெரிவு செய்த ஒரு அமைப்பை அரசாங்கமே இல்லாதொழிப்பது சட்ட சிக்கலை எதிர்நோக்க கூடிய காரியம்தான்.

ஒருகாலம் மாகாணசபை முறையையே உப்பு சப்பில்லாதது என்று புறக்கணித்த எம் சமூகம், இன்று அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவது காலத்தின் பரிணாம துயரம்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சியின் தேசியப் பட்டியல் மூலம்... தற்போது   பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்தியர் சத்தியலிங்கத்தை, பதவி விலக வைத்து... அவரை வடக்கு மாகாண சபைக்கு போட்டியிடச் செய்வதன் மூலம் பாராளுமன்றில் ஏற்பட்ட  வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கம் போல்   பின்கதவால் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார். 😎

கஸ்ரகாலம். 🤣

இதேதான்...நான் நினைத்ததும் இதுதான்...அதுதான் அவர் நாடாளுமன்றத்தில் பொதுச் சுடலை கதை தைத்தவர்...மாகாணசபைதலைவராக வந்ததும் முதல் வேலை இதுதான்

  • Like 1
Posted

மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அதன் மூலம் கொஞ்ச அபிவிருத்தியாவது செய்யலாம். இப்போ எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்ப வேண்டியுள்ளது. சிங்கள கட்சிகள் மாகாண சபை மூலம் சில அதிகாரங்களை தமிழ் மக்கள் பெற்று விடுவார்கள் என்று நினைக்கிறார்கள் போலும்.
அனுர  சென்று இந்தியாவின் ஆலோசனையை பெறுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

மாகாணசபத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமா,  வேண்டாமா? 

அதற்குப் பதிலைக் கூறுங்கள் முதலில். ......

அநுரவும் தேர்தல் ஆணையாளரும் எடுக்கவேண்டிய முடிவென்றல்லவா நான் நினைத்தேன். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட  கெஞ்ச வேண்டிய  நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு   நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂  முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂

  • Like 2
  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.