Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thailand.jpg

தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்…

மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா.

இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது.

இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார்.

இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 – நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார்.

இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://thinakkural.lk/article/313627

  • கருத்துக்கள உறவுகள்

“தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂
தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣
ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, தமிழ் சிறி said:

“தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂
தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣
ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃

தாய்லாந்து மஜாஜ்ஜில் இரண்டு வகைகள் உள்ளது என்பதை சிறித்தம்பியவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

தாய்லாந்து மஜாஜ்ஜில் இரண்டு வகைகள் உள்ளது என்பதை சிறித்தம்பியவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 😎

1) ஆண் செய்யும் மசாஜ்.
2) பெண் செய்யும் மசாஜ்.
மேலே உள்ள இரண்டும்தானே குமாரசாமி அண்ணே. 🧐
அல்லது வேறு ஏதாவது இருக்காண்ணே…. 😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

“தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂
தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣
ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃

மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க…..

சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣

அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.

49 minutes ago, ஏராளன் said:

இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே,

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க…..

சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣

அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.

உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும்.

யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள், 
“சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும்.

யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள், 
“சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.

இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை.

அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார்.

இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். 

வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தாய்லாந்து மஜாஜ்ஜில் இரண்டு வகைகள் உள்ளது என்பதை சிறித்தம்பியவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 😎

1 hour ago, குமாரசாமி said:

ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂
தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣
ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை.

அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார்.

இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். 

வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.

நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும்.

“யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

1) ஆண் செய்யும் மசாஜ்.
2) பெண் செய்யும் மசாஜ்.
மேலே உள்ள இரண்டும்தானே குமாரசாமி அண்ணே. 🧐
அல்லது வேறு ஏதாவது இருக்காண்ணே…. 😂

முழங்கையால அமத்தி மஜாஜ் செய்தால் அது வேறை 🙃
வெண்டிக்காய் விரல்களால் தடவி மஜாஜ் செய்தால் அது வேறை 😍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை.

அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார்.

இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். 

வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.

எனக்கு இது பிடித்தமானது. ஆனால் இறுதி தலை முறிப்பில் உயிர் ஒருக்கா போய் மீண்டும் வரும்.🤣

நீங்கள் பார்த்த அந்த வீடியோவை நானும் பார்த்து தொலைத்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார் 
இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

1) ஆண் செய்யும் மசாஜ்.
2) பெண் செய்யும் மசாஜ்.
மேலே உள்ள இரண்டும்தானே குமாரசாமி அண்ணே. 🧐
அல்லது வேறு ஏதாவது இருக்காண்ணே…. 😂

கனடாவில் உந்த குளிர் எண்ணெய் வைத்து மசாஜ்  செய்ய விசேட பணமாம்..அதாலை நான் அந்தப் பக்கமே போறதில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார் 
இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.

கழுத்துப் பிடிப்பு தானாகவே சரியாகிவிடும் அக்கா. சுடுதண்ணி பாக் இளம் சூட்டில் வைத்துப் பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார் 
இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.

DHgate.com:Mens Soft Fleece Neck Gaiter Neck Warmer Winter Windproof Tube  Scarf for Outdoor Sports:Fashion Accessories Arctic (2 Pack) Thick Heat Trapping Thermal Neck Warmers, Neck Gaiter Set  Fleece Unisex : Amazon.sg: Fashion

நிலாமதி  அக்கா.... இப்போ குளிர்காலம். நமது கழுத்துப் பகுதி மிகவும் உணர்வுபூர்வமான பகுதி.
அதனை குளிர் பிடிக்காமல் பாதுகாத்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது எனது சொந்த அனுபவம். கழுத்தை சுற்றி எப்பவும் Muffler scarf போன்றவற்றால் வெப்பமாக வைத்திருப்பது அவசியம். முக்கியமாக வெளியே செல்லும் போது குளிர் காற்று அடிக்காமல் இருக்க இதனை பின்பற்ற வேண்டும். 

அதிலும்... சிலருக்கு Muffler அவ்வளவாக பிடிக்காது. அதற்குப் பதிலாக Fleece துணிகளில் கழுத்துக்கு மட்டும் பாவிக்கக் கூடியமாதிரி சிறிய அளவில் உடலுக்கு உறுத்தாத துணிகளில், வாங்கக் கூடியமாதிரி பலவடிவங்களில் கடைகளில் உள்ளது.  அதனை வாங்கி அணியுங்கள். கழுத்துப் பிடிப்பு எட்டியும் பார்க்காது. பல வருடங்களாக இந்த Fleece துணிகளையே வீட்டில் எல்லோரும் பாவிப்பார்கள். உடலில் அணிந்திருக்கும் உணர்வே தோன்றாது. குளிருக்கும் பாதுகாப்பானது.

அதில்  Fleece சட்டைகளும் உண்டு. முன் எச்சரிக்கையாக அதனையும் பாவிப்போம். உடலை எப்போதும் வெப்ப நிலையில் வைத்திருக்க  Fleece துணிகளைப் போல் சிறப்பான உடைகள் வேறு எதுவும் இல்லை என்பது எனது அனுபவம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

முழங்கையால அமத்தி மஜாஜ் செய்தால் அது வேறை 🙃
வெண்டிக்காய் விரல்களால் தடவி மஜாஜ் செய்தால் அது வேறை 😍

சும்மா வார்த்தைகளால் சொன்னால் நம்பமாட்டாம்🤣

11 hours ago, விசுகு said:

எனக்கு இது பிடித்தமானது. ஆனால் இறுதி தலை முறிப்பில் உயிர் ஒருக்கா போய் மீண்டும் வரும்.🤣

நீங்கள் பார்த்த அந்த வீடியோவை நானும் பார்த்து தொலைத்தேன். 🤣

எனக்கும்தான் அண்ணை. என்ன செய்வது வீடியோவை பார்த்தாச்சு🤣

8 hours ago, நிலாமதி said:

சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x  ரே எல்லாம் எடுத்து  வித்தியாசம்   ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார் 
இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது  .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா?  பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.

உங்கள் கணவர் சொல்வது சரிதான்.

கம்யூட்டர் முன் இருக்கும் posture முக்கியம்.

போதிய தூரம், உயரத்தில் ஸ்கிரீன், மவுஸ், கீ பாட் ஒருக்க வேணும்.

அதே போல் படுக்கும் மெத்தை சரியில்லை, பழசாகினாலும் இந்த பிரச்சனை வரும்.

சித்தாலேப வை போட்டு மெலிதாக அளுத்தி விட்டு சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்தால் சரி வரலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

DHgate.com:Mens Soft Fleece Neck Gaiter Neck Warmer Winter Windproof Tube  Scarf for Outdoor Sports:Fashion Accessories Arctic (2 Pack) Thick Heat Trapping Thermal Neck Warmers, Neck Gaiter Set  Fleece Unisex : Amazon.sg: Fashion

நிலாமதி  அக்கா.... இப்போ குளிர்காலம். நமது கழுத்துப் பகுதி மிகவும் உணர்வுபூர்வமான பகுதி.
அதனை குளிர் பிடிக்காமல் பாதுகாத்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது எனது சொந்த அனுபவம். கழுத்தை சுற்றி எப்பவும் Muffler scarf போன்றவற்றால் வெப்பமாக வைத்திருப்பது அவசியம். முக்கியமாக வெளியே செல்லும் போது குளிர் காற்று அடிக்காமல் இருக்க இதனை பின்பற்ற வேண்டும். 

அதிலும்... சிலருக்கு Muffler அவ்வளவாக பிடிக்காது. அதற்குப் பதிலாக Fleece துணிகளில் கழுத்துக்கு மட்டும் பாவிக்கக் கூடியமாதிரி சிறிய அளவில் உடலுக்கு உறுத்தாத துணிகளில், வாங்கக் கூடியமாதிரி பலவடிவங்களில் கடைகளில் உள்ளது.  அதனை வாங்கி அணியுங்கள். கழுத்துப் பிடிப்பு எட்டியும் பார்க்காது. பல வருடங்களாக இந்த Fleece துணிகளையே வீட்டில் எல்லோரும் பாவிப்பார்கள். உடலில் அணிந்திருக்கும் உணர்வே தோன்றாது. குளிருக்கும் பாதுகாப்பானது.

அதில்  Fleece சட்டைகளும் உண்டு. முன் எச்சரிக்கையாக அதனையும் பாவிப்போம். உடலை எப்போதும் வெப்ப நிலையில் வைத்திருக்க  Fleece துணிகளைப் போல் சிறப்பான உடைகள் வேறு எதுவும் இல்லை என்பது எனது அனுபவம்.

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

முழங்கையால அமத்தி மஜாஜ் செய்தால் அது வேறை 🙃
வெண்டிக்காய் விரல்களால் தடவி மஜாஜ் செய்தால் அது வேறை 😍

இதை விட்டுவிட்டீர்களே

Sandwich Massage in dadar mumbai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, உடையார் said:

இதை விட்டுவிட்டீர்களே

Sandwich Massage in dadar mumbai

முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

ஒரு தடவை தமிழ் கடை ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காகப் போயிருந்தேன்.

சரியாக வெட்டி முடிந்ததும் முடி வெட்டியவர் திடீரென என் தலையை இரு கைகளாலும் பிடித்து இடது வலது பக்கமாக மாறி மாறித் திருகினார்.

என்ன நடக்கிறது என்று சுதாகரிக்க முன் பின்னாலிருந்து முழங்கையை மடக்கிக் கழுத்தை நெரித்து மேலே இரண்டு தடவை தூக்கி கழுத்தில் நெட்டி முறித்தார். அதிர்ச்சியிலிருந்து மீள சில வினாடிகள் எடுத்தது.

மசாஜ் செய்தவராம்.

இனிமேல் யாரிடமும் கேட்காமல் இப்படிச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இணையவன் said:

இனிமேல் யாரிடமும் கேட்காமல் இப்படிச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன்.👋

அனுபவமில்லாமல் செய்பவர்கள் பலர் ரிப்ஸுற்காக,

எனக்கு பிரச்சனையில்லை, பல வருடங்களுக்கு முன்பே மொட்டை விழுந்திடுச்சு😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, உடையார் said:

இதை விட்டுவிட்டீர்களே

Sandwich Massage in dadar mumbai

நன்றி உடையார், அடுத்த முறை எவ்வளவு செலவு என்றாலும் பரவாயில்லை  
"சான்ட்விச்"  மசாஜ் தான், செய்யிறது. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.