Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

14 DEC, 2024 | 01:20 AM
image
 
அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். 

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 

அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர். 

அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது , 

அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும். 

அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள் 

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/201226

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

அட,  இஞ்சை பார்றா இவரின்ர கதையை. ஆண்டவனுக்கே சவால் விடும், கடமையும் கட்டுப்பாடும்  கண்ணியமுமுள்ள இந்தப்புனிதனையா மக்கள் எதிர்க்கிறார்கள்? சாவகச்சேரியில் நோயாளர்களை அம்போ என்று விட்டிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் போய் குந்தியிருந்தவர்களை எப்படி ஏற்றுக்கொண்டார் இவர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது ; அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறிதரன் எம் பி. கருத்து

14 DEC, 2024 | 08:01 PM
image

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (14) வவுனியாவில் தமிழர் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம் பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வெள்ளிக்கிழமை (13) யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவுக்கும்  அரச உத்தியோகத்தர்களுக்கும் முரண்பாடு என வருகின்ற செய்தி தொடர்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாக இருக்கிறார்கள். அறிவுபூர்வமாக படித்துத்தான் அவர்கள் அந்த பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது. மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும்.

எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகி செயல்படுவோம்.

சபாநாயகரின் இராஜினாமா தொடர்பில் கேட்டபோது,

சபாநாயகராக இருப்பதற்கு கலாநிதி பட்டமோ எந்தவிதமான பதவி நிலைமைகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனினும் அவர் தனது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார். எனினும் அவர் அந்த பதவிக்கு உரியவர் அல்ல என்று சிலர் அடையாளப்படுத்துவதன் காரணமாக பெருந்தன்மையோடு ஜனநாயக முறைப்படி தனது கட்சியையும் மக்களையும் கருத்தில் கொண்டு தனது நல்ல மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கோடு ராஜினாமா செய்திருக்கின்றார். இது வரலாற்றில் முன்னுதாரணமாகும்.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு இடையில் அவர் பெற்ற பட்டம் உண்மையாக இருந்தாலும் கூட அந்தப் பட்டம் உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் தான் விலகி இருப்பேன் என்று கூறுவது மிகப்பெரும் ஜனநாயகமாகும். அந்த வகையில் சபாநாயகர் மேற்கொண்ட விடயத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

தமிழ் கட்சிகளோடு பயணிப்பது தொடர்பில் பதிலளிக்கையில்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து பயணிக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்களுடைய மத்திய குழு மற்றும் அரசியல் குழுவிலே கலந்துரையாடி  தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்பாக சேர்ந்து செயல்படுதல், இணைந்து பயணிப்பது தொடர்பான விடயங்களை பற்றி பேசலாம்.

நாங்கள் யாரையும் வெளியில் விடவில்லை. இப்போதும் ஒற்றுமையாக பலமாக செயல்படுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

தேர்தலுக்கு முன்னரும் பகிரங்கமாக கோரிக்கையை முன்வைத்தவர்கள் எங்களுடைய கட்சியினர் தான். பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்ற போது எல்லா மேடைகளிலும் அதனை தெளிவாக கூறியிருக்கிறேன். எங்களுடைய கட்சியை பலப்படுத்துவதற்கும் கூட்டமைப்பை உருவாக்கி மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆணையை தாருங்கள் என்று கேட்டிருந்தேன்.

அந்த ஆணையை மக்கள் தந்திருக்கிறார்கள். எனினும் தனி மனிதனாக நான் அதனை செய்ய முடியாது மத்தியகுழு மற்றும் அரசியல் குழுவின் கூட்டு முடிவின் பிரகாரம் அந்த ஒற்றுமைக்கான பாலத்தையும் பயணத்தையும் மேற்கொள்வோம்.

https://www.virakesari.lk/article/201294

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அட,  இஞ்சை பார்றா இவரின்ர கதையை. ஆண்டவனுக்கே சவால் விடும், கடமையும் கட்டுப்பாடும்  கண்ணியமுமுள்ள இந்தப்புனிதனையா மக்கள் எதிர்க்கிறார்கள்? சாவகச்சேரியில் நோயாளர்களை அம்போ என்று விட்டிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் போய் குந்தியிருந்தவர்களை எப்படி ஏற்றுக்கொண்டார் இவர்?

எரிக் சொல்கைமை அணுகி சத்தியமூர்த்தி அவர்களுக்கும் அர்ச்சனா அவர்களுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நல்லெண்ண அடிப்படையில் ஆரம்பித்து வைக்க இயலாதா?

ஆனானப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பிலேயே தனிநபர்களுக்கும், பிரிவுகளுக்கும் இடையில் பல்வேறு போட்டிகள், சச்சரவுகள் காணப்பட்டன.

தமிழருக்கு தனிநாடு எல்லாம் சரிவராது. ஒருத்தனுக்கு கீழ் அடிமையாக வாழவேண்டும் என்பதுதான் தலைவிதி.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8246.jpeg.a5be22cd85407b2637436d7566d178af.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

large.IMG_8246.jpeg.a5be22cd85407b2637436d7566d178af.jpeg

யாரை சொல்கிறார்? 3 என் பி பி + சிறி?.

பா(ர்)வம் வாத்தி…🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

யாரை சொல்கிறார்? 3 என் பி பி + சிறி?.

பா(ர்)வம் வாத்தி…🤣

ஆமாம், உங்கள் ஊகம் சரி.  அத்துடன் ஶ்ரீதரனின் உரையில், அரச அதிகாரிகள் எங்களை விட படித்தவர்கள் அவர்களுடன் அணுகுவதற்கு  ஒரு முறையுள்ளது என்று ஶ்ரீதரன் கூறிய கருத்துக்கு அர்சுனா தனது முக நூலில், அவருக்கு அது பொருந்தலாம் அதனால் தனக்கு பொருத்தமானது ஶ்ரீதரன் ஐயா எனக்கு பிரயோகிக்க கூடாது என நக்கலாக பதிலளித்துள்ளார். 😂

( ஆனால், அர்சனாவின் அணுகுமுறை ஊழலை நிரந்தரமாக  ஒழிக்க உதவுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனெனில் ஊழல் என்பது அதிகாரிகளில் மட்டும் தங்கி  இல்லை  ஒட்டு மொத்த மக்களிலுமே அந்த ஊழல் கலாச்சாரம் ஊடுருவி உள்ளது.  காசை எறிந்து  தமது வேலைகளை விரைவாக முடிப்பதில் புலம் பெயர் தமிழர்கள் விண்ணர்கள். அவர்களில் பலரே  அர்சசுனாவின் ஆதரவாளர்கள் கூட. அதிகாரிகள் ஊழல் செய்ய வேண்டும். அதை பொது வெளியில் அம்பலப்படுத்தி நான் ஹீரோ ஆகவேண்டும் என்பதே அர்சசுனாவின் மனவோட்டம் போல தெரிகிறது. காலப்போக்கில் அவர் தனது போக்கை மாற்றி சரியாக செயற்படலாம். அவருக்கு  திறமை , தகைமை  உண்டு என்பது மறுப்பதற்கில்லை.)  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

தகமை உண்டு…திறமை….பார்ப்போம்.

அவையடக்கம் சுத்தமாக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

தகமை உண்டு…திறமை….பார்ப்போம்.

10 கள்ளருக்கு மத்தியில் ஒரு நேர்மையானவனால் எதையுமே புடுங்க முடியாது.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுணா, கௌசல்யா மீது புதியதொரு வழக்கு பதிவு! யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதி இன்றி பிரவேசித்ததாக!

https://www.facebook.com/61553765198144/videos/553260104348965/

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

தகமை உண்டு…திறமை….பார்ப்போம்.

அவையடக்கம் சுத்தமாக இல்லை.

ஆம் 

திறமை இருந்தாலும் இந்தப்பெரிய மாபியாக்கூட்டத்துடன் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக் குறியே. ஆனால் நிச்சயமாக இந்த மாபியாக்கும்பல் புலத்திலிருந்து  இயக்கப்படுவது அல்ல.  இயக்கவும் முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

தகமை உண்டு…திறமை….பார்ப்போம்.

அவையடக்கம் சுத்தமாக இல்லை.

இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் பிரசன்னமாகியிருந்த எனது அண்ணாவுடன் கதைத்தேன். அவர் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு;
1. அருச்சுனா கேள்வி கேட்டது தப்பில்லை ஆனால் மற்றவர்க்ளுக்கு கதைப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கவில்லை.
2. அருச்சுனா சிலரை தனிப்பட தாக்கி கேள்வி கேட்டதுமல்லாமல் அவர்களின் பதவிக்கு அவசியமில்லாத தகமைகள் அவர்களிடம் உள்ளதா என தனிப்பட தாக்கியுள்ளார்.
3. அன்றையநிகழ்ச்சிநிரலை சரியாக கொண்டு செல்லவிடாமல் மின்சாரசபைப்பிரச்சினையையும் சத்தியமூர்த்தியின் பிரச்சினையையும் மாத்திரம் கதைத்தார்.
4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை.
5. இவ்வளவும்நடந்ததன் பின் தான் பின்வரிசையில் இருந்த கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் சத்தம் போட்டார்கள் அருச்சுனாவைப் பார்த்து வெளியே போகுமாறு. முன்வரிசையில் இருந்த அரச அதிகாரிகள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைச்சர் எத்தனையோ தடவை சொல்லியும் அருச்சுனா கேட்கவில்லை.
இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி,
1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும்.
2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும்.
3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும்.
4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர்.
5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை.
6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே).
7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு.
8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம்.
இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

மிக்க நன்றி.

இதை வாசிக்க ஆங்கிலத்தில் லூஸ் கனன் என்பது போல் அருச்சுனாவும் ஒரு focus இல்லாமல் சுழட்டி அடிப்பதாக படுகிறது.

வேலிக்கு ஓணான் சாட்சி. நிர்வாக திறன் இன்மை, வினைத்திறனுடன் செயலாற்ற முடியாமைக்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயம் said:

வேலிக்கு ஓணான் சாட்சி. நிர்வாக திறன் இன்மை, வினைத்திறனுடன் செயலாற்ற முடியாமைக்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

நியாயம்,
நான் முதலே சொன்னது போல் சொல்வது சுலபம் செய்வது கடினம்.நானும் இங்கு வரமுதல் ஒரு திணைக்களத்தில் வேலை செய்தேன். சில திணைக்களங்கள் மிக வினைத்திறனானது ஆனால் மற்ற திணைக்களத்துடன் சேர்ந்து வேலைசெய்யும் போது அவர்களின் வினைத்திறனும் பாதிக்கப்படும். கனக்க அரசியல்நியமனங்கள் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை (குறிப்பாக டக்ளஸ் மற்றும் அங்கயனால் வழங்கப்பட்டவை).

நீங்கள் ஒரு திணைக்களத் தலைவராக இருந்து பார்த்தால் தெரியும். இங்கு யூகேயில் தனியார்நிறுவனத்திலேயே அரசாங்கநிறுவனங்கள் சம்பத்தப்படும் போது ஒரு ஒப்புதலுக்கு மாதக்கணக்கில் சிலவேளைகளில் வருசக்கணக்கில் செல்கிறது (நான் ஒரு சின்ன ஒப்புதலுக்கு 2022 இலிருந்து காத்திருக்கிறேன் இன்னும் கிடைக்கேலை)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அர்ச்சுணா, கௌசல்யா மீது புதியதொரு வழக்கு பதிவு! யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதி இன்றி பிரவேசித்ததாக!

https://www.facebook.com/61553765198144/videos/553260104348965/

சத்தியமூர்த்தி ஐயா மேலுள்ள முறைப்பாடுகளையும் விரைவாகப் பொலிசில் வழக்கு பதிந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, RishiK said:

சத்தியமூர்த்தி ஐயா மேலுள்ள முறைப்பாடுகளையும் விரைவாகப் பொலிசில் வழக்கு பதிந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

இது, சத்தியமூர்த்தியோடு சேர்ந்து ஊழல் செய்த யாராவது விசில் ஊதும் வரை, சாத்தியமில்லாத விடயம்.

தாயகத்தில் ஊழல் விடயங்களில் குழுவாக ஈடுபடுவர். பதவி நிலையில் சத்தியமூர்த்திக்கு மேலே இருப்பவரும் செய்வார், கீழே இருப்பவரும் செய்வார். எல்லோரும் மௌனமாக இருந்து ஒருவரையொருவர் காப்பாற்றுவர்.

யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரைப் பிடித்தது போல, யாராவது இரகசிய ஒலி/ஒளிப் பதிவு மூலம் தான் இவர் போன்றவர்களை மாட்ட வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை.
 
👍................

கேள்விகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும்.............. அவருக்கு பதில்களும் தேவையில்லை, முடிவுகளும் தேவை இல்லை....................🫣.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி,
1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும்.
2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும்.
3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும்.
4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர்.
5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை.
6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே).
7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு.
8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம்.
இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்

சரியான திட்டமிடல் இல்லாமலும்,எதோ ஒரு காரணத்திற்காகவும்  அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்புறது...கேட்டால்  சிங்கள அரசு ஒன்றும் தருவதில்லை என்று சொல்றது.
9 மணிக்கு வேலைக்கு 9 மணிக்கு தான் வீட்டை இருந்து வெளிக்கிடுறது...12 மணி எண்டவுடனே வீட்ட சாப்பிட ஓடி வாறது,5 மணி என்றவுடனே பறக்கிறது, இடையிடையே சொந்த அலுவல்கள் என்று வெளிக்கிடுவது ,பத்தாததற்கு ஆளாளுக்கு அரட்டை 
சிங்கள பகுதிகளில் ஒரு நாளில் முடிக்கிற வேலையை தமிழர் பகுதிகளில் 6 மாதத்திற்கு இழுத்தடிக்கிறது ...பிறகு நேரமின்மையால் வேலை முடியல்ல என்று குற்றம் சொல்றது  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது.

ஆமாம்  நான்  படித்து விட்டு வேலை தேடிய காலத்தில்  கைதடி கிராம அபிவிருத்தி சங்கத்தின்  வரிஅறவிடும். வேலை செய்தேன்   அது ஒரு ஊத்தை வேலை   அதை விட  கோப்பை கழுவினால் நல்ல வருமானம்     100 ருபாய் சேர்ந்து கொடுத்தால்   10 ருபாய் தருவார்கள்   வரி காட்டதவர்கள்.  

1,...பெரும் தொகையான.  காணிகள் அடைத்து ஒன்றும் செய்யாமல் வைத்து இருப்பார்கள் 

2,....பெரிய பதவிகளிலிருப்பார்கள்.  பணக்காரராக இருப்பார்கள்   

3,...ஏழைகள். பெரும்பாலும்   80 %   அளவில் வரி காட்டியிருக்கிறார்கள் 

இனி விசயத்துக்கு வருகிறேன்     

ஒரு றோட்டு போடும் ஒப்பந்தம்   அங்கே வேலை செய்யும் சீப் கிளார்க்     அந்த ஒப்பந்ததை   ஒரு சனசமூக நிலையத்தின் பெயரில் எடுத்து செய்தார்  இந்த சனசமூக நிலையம் சாதி குறைந்த மக்களுடையது   இவர் வாடா,..போடா,.....என்றால் அப்படியே நடப்பார்கள்.    

அந்த றோட்டுக்கு  இலவசமாக கிணற்றின் மக்கியை  எடுத்துப் போட்டு    வேலையை முடித்து விட்டார்   

அவர் தான்  வேலையை சரி பிழை   பார்ப்பது    ஒன்று இரண்டு போத்தல்களை எடுத்து கொடுத்து   பெரும் தொகை பணத்தை சுருட்டி விட்டார்   

அர்சசுனா    கேள்விகள் கேட்பதில்.  பிழை இல்லை    

இரண்டாவது சம்பவம்   எனது நண்பன்  அவனது   தமையன்.  ஒவசியர்.  வேலை    எங்களில் ஒரு   15. பேர். வரும்   வாங்காடா    ஒரு கையெழுத்திட்டால்.   தேனீர்    வடை  வேண்டி தாருவேன்.  என்றான்    அந்த நேரம்  இப்படி ஒருவன் சொன்னால்  விட முடியுமா??? 🤣🤣🤣

எல்லோரும் போனேம்.  யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து   சுண்டுகிளிப். பக்கம்   10. நிமிடங்கள் நடை.   பெரும் தெருகள்.  அலுவலகம் இருந்தது    வரியாக. நின்று   கையெழுத்திட்டு  பணத்தை வேண்டி  அவனிடம் கொடுத்தோம்.  அதாவது  நாங்கள் றோட்டு ஒப்பந்தம் ஒன்றில் வேலை செய்தோம்   என்று வவுச்சார்.  போலியாய் அவனாது அண்ணா  தாயாரித்து இருந்தார்   

பணத்தையும் கொள்ளை அடித்தார்  

இந்த அரச ஊழியர்களை நம்ப. முடியுமா???  🙏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

காலப்போக்கில் அவர் தனது போக்கை மாற்றி சரியாக செயற்படலாம்.

😀  இதை தவிர உங்கள் கருத்தில் மிகுதியை ஏற்று கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

கனக்க அரசியல்நியமனங்கள் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை (குறிப்பாக டக்ளஸ் மற்றும் அங்கயனால் வழங்கப்பட்டவை).

ம்..... இதற்காகத்தான் இவைகளை ஆராய, ஆணைக்குழுக்கள் அமைத்து சம்பந்தப்பட்டவர்ளை விலக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முயல்கிறார் ஜனாதிபதி. அதற்கிடையில் அவரை வீட்டுக்கனுப்ப முயற்சிக்கிறார்கள் எல்லாத்துறையினரும். இது ஜனாதிபதிக்கு கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல. தேவையற்ற குடைச்சல்களை கொடுத்து திசை மாற்றுகிறார்கள் பிரச்சனையை. அவரோடு இருப்பவர்களே இதற்கு ஒத்துழைப்பார்களா தெரியவில்லை. ஏனெனில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்!  

  • கருத்துக்கள உறவுகள்

எம்.பி அர்ச்சுனா உள்நுழைய தடை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் என்றும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. 

அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு பிப்ரவரி 7, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று எம்.பி.யிடம் தெரிவித்துள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ்.பொலிஸாரிடம் எம்.பி.யை ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/எம்-பி-அர்ச்சுனா-உள்நுழைய-தடை/175-348838

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்ப முன்னர் நடந்ததை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள்!
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

சரியான திட்டமிடல் இல்லாமலும்,எதோ ஒரு காரணத்திற்காகவும்  அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்புறது...கேட்டால்  சிங்கள அரசு ஒன்றும் தருவதில்லை என்று சொல்றது.
9 மணிக்கு வேலைக்கு 9 மணிக்கு தான் வீட்டை இருந்து வெளிக்கிடுறது...12 மணி எண்டவுடனே வீட்ட சாப்பிட ஓடி வாறது,5 மணி என்றவுடனே பறக்கிறது, இடையிடையே சொந்த அலுவல்கள் என்று வெளிக்கிடுவது ,பத்தாததற்கு ஆளாளுக்கு அரட்டை 
சிங்கள பகுதிகளில் ஒரு நாளில் முடிக்கிற வேலையை தமிழர் பகுதிகளில் 6 மாதத்திற்கு இழுத்தடிக்கிறது ...பிறகு நேரமின்மையால் வேலை முடியல்ல என்று குற்றம் சொல்றது  

ரதி அக்கா, சிங்களப் பகுதிக்கு வருடத் தொடக்கத்திலேயேநிதி ஒதுக்கிவிடுவார்கள். மற்றது ஒப்பீட்டளவில் வேலையைத் திறம்படச் செய்யக்கூடிய தனியார்நிறுவனங்கள் தென்பகுதியில் கூட

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.