Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒவ்வொரு ஆவணமும் பல கட்டங்களாக பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே அவை ஆவனப்பிரிவிற்கு மாற்றப்படும், அவற்றில் பல பல வகை பரிசோதனை தரவுகள் இயந்திர செயற்பாடு என பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகள் மீளாய்வுக்குள்ளாக்கப்படுகிறது.

4 minutes ago, ரசோதரன் said:

அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்:

சமீபத்தில் இரண்டு தடவைகள் இது செய்திகளில் வந்து இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி குத்து ஐவியினூடாக திரவங்கள் ஏற்றியிருந்தார்கள். இப்பொழுது விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது.

இன்னொரு நிகழ்வில், மருத்துவரும் தாதிகளும் இல்லாமல், இவர்களே ஒரு பிரசவம் பார்த்தது. இங்கேயும் விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது.

நான் சிறுவயதில் இருந்த போது எங்களூரில் மிகக் கைராசியான 'பரியாரி' ஒரு மருத்துவரே அல்ல. அவர் ஒரு மருத்துவமனை ஊழியர். வீட்டில் வைத்து மருந்து கொடுத்தார், கட்டுப் போட்டர்,................ நானும் போயிருக்கின்றேன்.

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

 

 

ஒரு வைத்தியரின் வேலையினை வைத்தியர்தான் செய்யமுடியும் இங்கு கூறப்படுவது அவர்கள் ஏற்கனவே செய்த தற்காலிக வேலைகளை தொடர்வதற்கு நிரந்தர வேலை ஆக்குவதற்கு ஆதரவு வழ்ங்குதல் மட்டுமே.

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

ஏராளன்

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட

ஏராளன்

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

Edited by யாயினி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, vasee said:

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

கவலைப்படாதீர்கள் பெட்டியினை கட்டி தயாரக வைக்கவும், தற்காலிக ஊழியர்கலை பதவி நீக்கம் செய்தபின்னர் அவர்களின் வேலை கிடைக்க வாய்ப்புண்டு ஆனால் வைத்டியர் வேலை கிடைக்காது.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

ஒரு வைத்தியரின் வேலையினை வைத்தியர்தான் செய்யமுடியும் இங்கு கூறப்படுவது அவர்கள் ஏற்கனவே செய்த தற்காலிக வேலைகளை தொடர்வதற்கு நிரந்தர வேலை ஆக்குவதற்கு ஆதரவு வழ்ங்குதல் மட்டுமே.

தற்காலிக வேலைகளை நிரந்தரம் ஆக்குவதற்கு நானும் ஆதரவே, வசீ...........

ஆனால், இவர்கள் தற்காலிக வேலையில் இருக்கவில்லை. தொண்டர் ஊழியர்களாகவே, பலர் சம்பளம் இல்லாமல் கூட இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே நான் Volunteer Job பற்றியும், தொண்டர் ஆசிரியர்கள் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். தொண்டர் ஆசிரியர் பிரச்சனை நான் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கூட அங்கே இருந்தது.

இவர்களுக்கு கூட பயிற்சிகள் வழங்கி, பணி வழங்கி, அதை நிரந்தரமாக்கலாம் என்று தான் நானும் சொல்கின்றேன். ஆனால் இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன்.

அனுபவத்தில் சில வேலைகளை மட்டுமே கற்றுக் கொள்ளலாம். பல வேலைகளுக்கு வேறு விதமான அடிப்படைகளும் தேவை என்பதை சொல்லவே அந்த உதாரணங்களைச் சொல்லியிருந்தேன்.................👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?

மிகவும் முட்டாள்தனமான ஆரம்பம். தனது இருப்புக்குத் தானே குழிதோண்டுகிறார். 

மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டிய விடயங்களில் அவசரக் குடுக்கைத்தனமான வேலைகள் எங்கே கொண்டுபோய் விடும் என்பதை இப்போதே யூகிக்க முடியும். 

Good Luck Dr. அர்ச்சுனா 

🥺

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆரம்பத்தை பார்த்ததில் நல்ல தொரு காணெளி. தமிழில் காணொளி என்றால் ஜேவிபியை கண்மூடிதனமாக புகழ்வது என்ற நிலையில் பேட்டி காண்பவர் சரியான கேள்விகள் கேட்கின்றாரே. மிகுதியை பின்பு பார்க்கின்றேன்
தமிழ் இன அழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தான் தங்கி இருக்கின்றது என்று சில மாதங்கள் முன்பு வரை முழக்கமிட்ட கனடா  ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவர்  இப்போது அணுரா பிரிகேட்டில் சேர்ந்து  அநுரகுமார திசாநாயக்கவின் புகழ் முழக்கமாம்🤣

தோழர் தம்பியும் உணர்ச்சிவசப்படுகின்றார் அவ்வளவு  மக்கள் விசுவாசம்   ....யாழ் தோழர் தம்பியும் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகளிடம் கை ஏந்துவது போல தெரிகிறது...காசு வேணுமாம் முதலீடு செய்ய ...
டக்கியரின் பிரிகேட் யாழ் வைத்திய சாலையில் அட்டகாசம் செய்ய 
ஜெ.வி.பி பிரிகேட் இந்த தம்பி ஊடாக புகுந்து டக்கிக்கே ஆப்பு வைத்திருக்கினம் ....வைத்திய சாலையில் ..அதை  இடதுசாரி தவ்வல் சொல்லுகின்றார் இந்த வீடியோவில்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, ரசோதரன் said:

அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்:

உதாரணமாக, அன்று மட்டக்கிளப்பில் கொளுத்தும் வெயிலில் ஓட்டப்போட்டி ஓடி ..வயிறு கொழுவி, மயக்கமுறும் தறுவாயில் வைத்தியசாலை சென்று...

இவருக்கு, அப்படி படிப்பு, பயிற்சி இல்லாதவர் பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

(அந்த பையனை 2-3 மணித்தியாலம் கவனிக்காதது மாத்திரம் அல்ல, பார்த்த போது சும்மா தண்ணீரை  கொடுத்தார்கள் என்றே செய்தி  வந்தது. பார்த்தது வைத்தியர் அல்ல என்றும் ...) 

இது எப்படி நடைபெற்றது?

நன் அன்றே யோசித்தது இது போன்றது நடந்து இருக்கலாம் - அதாவது படிப்பு, பயிற்சி இன்றி, வேளையில் கட்டமைக்கப்பட்ட வேலையில்-பயிற்சி இல்லாது  வேலை பழக்க எத்தனிப்போர்.

சொன்னது நடைபெற்று இருக்கிறது 

1. பணிகள் சுமத்தப்பட்டது.

2. விடயத்தை அறியாது, தண்ணி விடாய் என்று விளங்கி ...

நான் நினைக்கிறன், அப்படி பார்த்த போது  கூட உப்பு நீரை கொடுத்து இருந்தால் அந்த பையன் பாதிப்புகளுடன் தப்பி இருக்கலாம்.

Edited by Kadancha
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

தற்காலிக வேலைகளை நிரந்தரம் ஆக்குவதற்கு நானும் ஆதரவே, வசீ...........

ஆனால், இவர்கள் தற்காலிக வேலையில் இருக்கவில்லை. தொண்டர் ஊழியர்களாகவே, பலர் சம்பளம் இல்லாமல் கூட இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே நான் Volunteer Job பற்றியும், தொண்டர் ஆசிரியர்கள் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். தொண்டர் ஆசிரியர் பிரச்சனை நான் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கூட அங்கே இருந்தது.

இவர்களுக்கு கூட பயிற்சிகள் வழங்கி, பணி வழங்கி, அதை நிரந்தரமாக்கலாம் என்று தான் நானும் சொல்கின்றேன். ஆனால் இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன்.

அனுபவத்தில் சில வேலைகளை மட்டுமே கற்றுக் கொள்ளலாம். பல வேலைகளுக்கு வேறு விதமான அடிப்படைகளும் தேவை என்பதை சொல்லவே அந்த உதாரணங்களைச் சொல்லியிருந்தேன்.................👍

நான் உங்களை தவறாக புரிந்து கொள்ளவில்லை, மிக நேர்மையான ஒரு கருத்தாளர் மற்றவரின் மனம் நோகாமல் அதே நேரம் நகைசுவையாக பதிலளிப்பவர்.

3 minutes ago, vasee said:

இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன்.

இது முக்கியமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, vasee said:

நான் உங்களை தவறாக புரிந்து கொள்ளவில்லை, மிக நேர்மையான ஒரு கருத்தாளர் மற்றவரின் மனம் நோகாமல் அதே நேரம் நகைசுவையாக பதிலளிப்பவர்.

👍............

இங்கு எல்லோரையும் எனக்கு பிடித்திருக்கின்றது என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்............ நம்புங்கள்..............🤣.

47 minutes ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
 

இது தான் என்னைப் போன்றவர்களுக்கு அர்ச்சுனா மீது இருக்கும் பயம்....................😌.

அமைச்சருடன் சந்திப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்று சொல்லி இவ்வளவு விளமபரப்படுத்தி விட்டு, தொண்டர் ஊழியர்களின் செய்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக ஆக்குகின்றேன் என்று சொல்லிவிட்டு.................... இப்பொழுது புது வேலை கொடுக்கப் போகின்றாராம்...............🫣.

'ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்..................' இது என்ன கொடுமை........

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, Kadancha said:

நான் நினைக்கிறன், அப்படி பார்த்த போது  கூட உப்பு நீரை கொடுத்து இருந்தால் அந்த பையன் பாதிப்புகளுடன் தப்பி இருக்கலாம்.

எனது இளம்பிராயத்தில் வைத்தியரிடம் போக பயம், ஒரு தடவை வயிற்றில் உள்ள பூச்சிக்காக வைத்தியசாலை மருந்து கொடுத்தார்கள் அதனால் பக்க விளைவு ஏற்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள், வைத்டியர் ஊசி குத்த போகிறார் என்ற பயத்தில் ஏற்கனவே பல்கீனமாக இருந்த நான் மயக்கமாகிவிட்டேன், அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்து ஊசி மூலம் ஏற்றும் சேலைனை குத்திவிட்டார்கள்.😁

4 minutes ago, ரசோதரன் said:

இது தான் என்னைப் போன்றவர்களுக்கு அர்ச்சுனா மீது இருக்கும் பயம்....................😌.

அமைச்சருடன் சந்திப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்று சொல்லி இவ்வளவு விளமபரப்படுத்தி விட்டு, தொண்டர் ஊழியர்களின் செய்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக ஆக்குகின்றேன் என்று சொல்லிவிட்டு.................... இப்பொழுது புது வேலை கொடுக்கப் போகின்றாராம்...............🫣.

'ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்..................' இது என்ன கொடுமை..,,,,,,,

சில சமயம் சரியாக கதைப்பது போல இருக்கும் ஆனால் அப்படியே அதற்கு எதிர்மாறாக பின்னர் நிகழ்கிறது, இவரை யாராலும் வெல்ல முடியாது.😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Justin said:

இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff)

நீங்கள் ஊகித்ததுதான் சரி.

முதலில் இந்த Auxiliary என்பதை தொண்டர் என மொழிபெயர்ப்பவர்களை பிடித்து உதைக்க வேண்டும்.

எல்லா Auxiliary யும் volunteer Auxiliary இல்லை. இங்கே இவர்களுக்கு வேதனம் கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன்.

ஆகவே இவர்களை துணை-ஊழியர் என அழைப்பதே பொருத்தமாய் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு   முன்பு வந்திருந்தது. 
அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? 
அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு   முன்பு வந்திருந்தது. 
அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? 
அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.

அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார்..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா.☝️

அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு..... 👏

மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே....!💕

கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே....!☝

அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.🙏

யாழ்ப்பாணத்தில் இருந்து  அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்.😘

இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.😊

மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது👇

நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால்,  consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்).....

இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 🥰

இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்.🙏💕

சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை .💕

முகப் புத்தகம்.

10 hours ago, alvayan said:
10 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு   முன்பு வந்திருந்தது. 
அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? 
அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.

Expand  

அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார்

இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.

மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂
அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால்  உசாராக இருப்பார்கள். 
😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂
அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால்  உசாராக இருப்பார்கள். 
😂 🤣

மற்றவர்கள் வம்பு தும்புக்குப் போறதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்கு மேலாக தொண்டர் சேவையில் வேலை ஆற்றிய 170க்கும் மேற்பட்ட, 300 பேர் வரை வேலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது, தொண்டர் கனிஷ்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது சம்பந்தமாக எனக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை முறையான விதத்தில் சுகாதார அமைச்சருடனும் பிரதி சுகாதார அமைச்சருடனும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுடனும் இன்றைய தினம் நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களுடைய பிரதிநிதிகள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு வந்திருந்து தங்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சுகாதார அமைச்சரிடமே சொல்லும் அளவுக்கு தேசிய அரசாங்க சக்தி மக்கள் மத்தியில் இதயத்தை வென்றுள்ளதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற அடிப்படையிலும் ஒரு வைத்தியர் என்ற அடிப்படையில் ஒரு வைத்திய நிர்வாகி என்ற அடிப்படையிலும் ஒரு மக்களின் சேவகன் என்ற அடிப்படையிலும் ஒரு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவாளன் என்ற அடிப்படையிலும் அது தவிர தமிழ் மக்களின் அன்புக்குரியவன் என்ற அடிப்படையிலும் அவர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தார்கள். 

இது எட்டபட்ட முடிவுகள் பின்வருமாறு..
1. சுகாதார அமைச்சர் மேற்படி கனிஸ்ட தர சேவை அடிப்படையில் தொண்டராக கடமை ஆற்றிய இளைஞர் யுவதிகளிடம் அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார். 

2. சுகாதார அமைச்சர் நேரடியாகவும் மற்றும் பிரதி அமைச்சரும் கலந்து கொண்டது தேசிய மக்கள் சக்தி மக்களின் நலன் கருதி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இன்று நேரடியாக  தெரிந்து கொண்டார்கள்.

3. அப்போது யாழ் போதனா வைத்திய சாலையில் மொத்தம் 170 தொண்டர் ஊழியர்களில் 84 பேருக்கு மட்டும் சிறப்பாக பட்டி ஒன்று அணிவிக்கப்பட்டு சுகாதார உத்தியோர்களை இரண்டு பாகங்களாக பிரித்து அவர்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தப்பட்டிருப்பது மற்றும் ஏற்கனவே வேலை செய்து சுகாதார அமைச்சரை சந்தித்த ஊழியர்களை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றி இருப்பதை சுகாதார அமைச்சர் தெரிந்து கொண்டார். 

4. கனிஷ்டா ஊழியர்கள் மட்டுமல்ல தாதிய ஊழியர்கள் அது தவிரவும் வைத்தியர்களுக்கான கார்டர் கிரியேஷன் இனிவரும் காலங்களில் நடக்க இருப்பதால் சுகாதார அமைச்சர் அவ்வாறான அரசாங்க வேலைகள் கூறும் பட்சத்தில் முதலில் வேலை செய்த 170 பேருக்கும் யாழ் போதனா வைத்திய சாலையில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கின்ற 84 பெயருக்குமோ அல்லது வேலை செய்யாமல் இருக்கின்ற மிகுதி ஊழியர்களுக்கோ எந்த முன்னுரிமை அடிப்படையும் வழங்கப்படாது என்பதை உறுதி செய்தார். 
170 பேரையும் சமமாக பாவித்து 170 பேருக்கும் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்பின் போது சுகாதார அமைச்சரை சந்தித்தார்கள் என்ற அடிப்படையில் பழிவாங்கவோ அல்லது இப்போதும் வேலை செய்கிறோம் என்ற அடிப்படையில் அந்த 84 பேருக்குமோ தனித்தனியாக முன்னுரிமை கிடைக்காது என்பதை தெளிவாக சொல்லியிருந்தார். 

5. ஆதலால் எந்த வாக்குறுதிகளையும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கக்கூடாது மற்றும் 170 சுகாதார கணித்த ஊழியர்களையும் கொழும்புக்கு போனார்கள் இங்கே நின்றார்கள் என்ற அடிப்படையில் தனித்தனியாக பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதை செயலாளர் ஊடாக கடிதம் மூலம் தெரிவிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். 

6. அதற்கான கடிதத்தையும் வெகுவிரைவில் போதன வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுப்பி வைப்பதாக மதிப்புக்குரிய சுகாதாரச் செயலாளர் வைத்தியர் அணில் ஜெயசிங்க அவர்கள் உறுதியளித்திருக்கிறார். 

இவ்வாறான ஒரு சமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாகி காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 

இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள். 

உங்களில் ஒருவன்

❤️
முகப் புத்தகம்.

Posted
15 hours ago, ரசோதரன் said:

 

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

 

 

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

இதுக்கு மட்டும் மருத்துவம் சொல்லாதீர்கள் @ரசோதரன்

அடுத்த செங்கன்களில் அது உங்களுக்கும் கொத்தி விடும் 😋

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

குறைந்தபட்ச இடைவெளி பேணப்படாமையால் வந்தநிலை இது!!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

🤣...................

காய்ச்சல் போல தெரியும், ஆனால் இது காய்ச்சல் இல்லை, நிழலி...................

இது உடம்புச் சூடு............. நீங்கள் கொஞ்சம் சூட்டு உடம்புக்காரர் போல................ மருந்து மாத்திரை தேவையில்லை.............. அதுவா அடங்கும்...............😜.

** டாக்டரா, இல்லையா என்று என்ற பிரச்சனை இன்னமும் முடியவில்லை. நீங்கள் வேற புதிதாக ஒரு டாக்டரை இறக்கி விட்டிருக்கிறீர்கள்...............

12 minutes ago, விசுகு said:

இதுக்கு மட்டும் மருத்துவம் சொல்லாதீர்கள் @ரசோதரன்

அடுத்த செங்கன்களில் அது உங்களுக்கும் கொத்தி விடும் 😋

🤣.................

நிழலி இந்தக் கதவால் வந்தால், நான் அந்தக் கதவால் ஓடி விடுவேன், விசுகு ஐயா............

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

 

தொடர்ந்து கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டால் விரைவில் குணமாகும்.

ரசோதரன் இல்லாத நேரம் நான்தான் டாக்ரர்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

வடக்கு கோளம் முழுக்க இது வைரஸ் காலம் போல, கிருபன்.

இங்கும் எல்லோரும் சீறிச்சீறிக் கொண்டே வருகின்றார்கள், போகின்றார்கள், விளையாடுகின்றார்கள்.......... (நிழலி செய்வதையும் செய்கின்றார்கள்.................🤣)

எவரையும் விடாது இது............. ஆனால் இதை விட்டால் எங்களுக்கு விடுமுறையும் கிடையாதே.......

  • Haha 1
Posted
44 minutes ago, கிருபன் said:

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

வருத்தம் என்று குடும்ப வைத்தியரிடம் போனால் (தமிழ் மருத்துவர், பரியோவான் கல்லூரி பழைய மாணவர்). 

டொக்டர்: "Flue shot ஷொட் எடுத்ததோ"

நான்: "இல்லை டொக்டர்...நான் ஒரு நாளும் எடுப்பதில்லை"

டொக்டர்: "உமக்கு 50 வயசாச்சு என்று நினைவில்லையோ.. இந்த பழைய வீரம் எல்லாம் இனி இல்லை...  அதுவும் உமக்கு இந்த வருடம் நிமோனியா வந்து போனது... இனி இப்படி எடுக்காட்டி அடிக்கடி அதுவும் வரும்.  இனிமேல் அது எடுக்காமல் இந்தப் பக்கம் வரக் கூடாது"

என்று மனிசன் பேசிப் போட்டுது.

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன. ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இது தொடர்பான கேள்விகளை அமைதியாகவே எதிர்கொண்டார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு, விஜயின் அரசியல், தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் திருமாவளவன் விரிவாகப்  பேசினார். ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்: திருமாவளவனின் முடிவுக்கு என்ன காரணம்? கூட்டணி கணக்குகள் மாறுபடுமா? திமுக மீதான மன்னராட்சி விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா பேச்சு வி.சி.க-வின் பலவீனத்தை காட்டுகிறதா? திமுக கூட்டணி குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுவது ஏன்? - அமைச்சர் நேரு கூறியது என்ன? தலித் முதல்வர்: திருமாவளவனின் கருத்து திமுகவிற்கு வைக்கப்பட்ட குறியா?   கேள்வி: புத்தக வெளியீட்டு விழா தொடர்பான நிகழ்வுகள் தி.மு.க. கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தின. அதற்கு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு மட்டும்தான் காரணமா? பதில்: ''கூட்டணிக்குள் இதனால் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணிக் கட்சியைச் சார்ந்த யாரும் சலசலப்பில் ஈடுபடவில்லை. சமூக ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து யாரும், அந்த விழாவுக்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை. அது நான் எடுத்த முடிவு. 'இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல, அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா, விஜயும் அம்பேத்கரைப் பற்றிப் பேசுவார், நானும் அரசியல் பற்றிப் பேச மாட்டேன், அம்பேத்கரைப் பற்றி பேசுவேன்' என்று ஒரு மூத்த அமைச்சரிடம் சொல்லும்போது, 'அது உங்கள் விருப்பம், நாங்கள் தலையிட முடியாது' என்றுதான் சொன்னார். ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டில் எங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஆளுங்கட்சியை தனது முதன்மை எதிரியாக விஜய் பிரகடனப்படுத்தியிருக்கும்போது அவரோடு மேடையில் நிற்பது இப்போதைக்கு சரியாக இருக்காது என நினைத்தேன். ஏனென்றால், நானும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி அது. தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல. அது நான் எடுத்த முடிவு.'' தாலிபன் அமைப்பில் விரிசலா? தலைமையை விமர்சிக்கும் இந்த மூத்த அமைச்சர் யார்?24 டிசம்பர் 2024 உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்கள் பட்டியல் - அம்பானி குடும்பம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?24 டிசம்பர் 2024 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனக் கேட்பது குற்றமல்ல' கேள்வி: 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை நீங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகிறீர்கள். அதே விஷயத்தைத்தான் ஆதவ் அர்ஜுனா திரும்பவும் பேசுகிறார். அதில் ஏன் பிரச்னை வருகிறது? பதில்: ''திரும்பவும் அதை அவர் சொன்னதில் பிரச்னையில்லை. அப்படி ஒரு முழக்கத்தை வைத்தால் அது தி.மு.கவுக்கு எதிரான முழக்கம் என தி.மு.க. சொன்னதா? அல்லது நாங்கள்தான் சொன்னோமா? 'தி.மு.கவிடம் கோரிக்கையை வைக்கிறோம், தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கிறோம்' என நாங்கள் யாரும் சொல்லவில்லை. தி.மு.கவும் வி.சி.க. 'எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள், எங்களிடம் பங்கு கேட்கிறார்கள்' என்று சொல்லவில்லை. இதையெல்லாம் ஊடகங்கள்தான் ஊதிப் பெருக்கினார்கள். 'இவர்கள் தி.மு.கவுக்கு மறைமுகமாக அழுத்தம் தருகிறார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அதைக் கொடுக்கவில்லையென்றால் வெளியேறுவார்கள் போலிருக்கிறது' என இவர்களாக தங்கள் யூகத்தைப் பரப்ப ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்களில் பேசக்கூடிய தனி நபர்களும் இதையெல்லாம் ஊதிப் பெருக்க ஆரம்பித்தார்கள். விஜயும் நானும் ஒரே மேடையில் ஏறப்போகிறோம் என புக்கத்தை வெளியிட்ட நிறுவனமோ, நானோ, ஆதவ் அர்ஜுனாவோ அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியை ஒரு தமிழ் நாளிதழ் வெளியிட்டது. அப்படியாகத்தான் அந்த விஷயத்தை அரசியலாக்கினார்கள். அவர்கள் இப்படி அரசியல்படுத்தியதால், மேடையில் நின்றாலும் அரசியல்படுத்துவார்கள், வேண்டாம் என முடிவெடுத்தேன். அதேபோல, 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' எனக் கேட்பது குற்றமல்ல. அப்படியே தி.மு.கவிடம் கேட்டாலும் குற்றமல்ல. முடிந்தால் எங்களுக்குக் கூடுதல் இடங்களைக் கொடுங்கள், அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என தோழமை அடிப்படையில் கேட்கக்கூடாதா? அதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், குறுக்கே நிற்பவர்கள், 'பாருங்கள் விடுதலைச் சிறுத்தைகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்' என, அது ஏதோ தவறு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தி.மு.க. அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மத்தியில் கூட்டணி ஆட்சி இருப்பதைப்போல, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என 2016 காலகட்டத்திலேயே, மக்கள் நலக் கூட்டணி உருவாகும் முன்பே ஒரு கருத்தரங்கை நடத்தியிருக்கிறோம்.'' ஒரு கையில் பைபிள், மறு கையில் துப்பாக்கி - பிரேசில் நகரை நடுங்கச் செய்யும் இவர்கள் யார்?24 டிசம்பர் 2024 ஆபாசப் படங்கள் ஆண்களின் பாலியல் இச்சைகளை எவ்விதம் மாற்றுகின்றன?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா கேள்வி: ஆகவே 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை வெறும் தத்துவார்த்த அடிப்படையில்தான் முன்வைக்கிறீர்களா? பதில்: ''சாதி ஒழிய வேண்டும் எனச் சொல்கிறோம். சாதியை இன்று உடனே ஒழித்துவிட முடியுமா? சாதி ஒழிப்பு என்பது எங்கள் இலக்கு. அதை நோக்கிய ஒரு பிரசாரத்தை மேற்கொள்கிறோம். எல்லோரும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறோம். அதைப்போலத்தான் இதுவும். 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்றால் விளிம்பு நிலை மக்கள் அதிகாரத்தில் பங்குபெற வேண்டுமென அர்த்தம், ஏழை, எளிய மக்கள் பங்கு பெற வேண்டும், அவர்கள் அதிகாரத்தைப் பெற வேண்டுமென அர்த்தம். அவர்கள் ஒவ்வொரு முறை வாக்களித்த பிறகும், அதே மாதிரியான வாழ்க்கை முறையில் இருக்கக்கூடாது. முன்னேற்றத்தை அவர்கள் உணர வேண்டும். இதனை ஒரு கோரிக்கையாக, கோட்பாடாக முன்வைக்கிறோம். 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் என்ற அர்த்தமில்லை.'' பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லையா? கேள்வி: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? பதில்: ''அது மேம்போக்காக சொல்லப்படும் குற்றச்சாட்டு. 2001ல் நாங்கள் பொதுத் தொகுதி கேட்டோம். கிடைக்கவில்லை. 2006ல் நாங்கள் பொதுத் தொகுதியை வாங்கி முகையூரில் சிந்தனை செல்வனை நிறுத்தினோம். 2011ல் பொதுத் தொகுதிகளை வாங்கினோம். உளுந்தூர்பேட்டை பொதுத் தொகுதியில் யூசுப்பும் சோழிங்கநல்லூர் பொதுத் தொகுதியில் எஸ்.எஸ். பாலாஜியும் நிறுத்தப்பட்டனர். 2021ல் இரு பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறோம். 2001ல் மட்டும்தான் கிடைக்கவில்லை. 2006ல் இருந்து தொடர்ந்து பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். ஆகவே, பொதுத் தொகுதியே தர மறுக்கிறார்கள் என்பது மேம்போக்காக சொல்லப்படும் கருத்து.'' சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி 'ஷியாம் பெனகல்'24 டிசம்பர் 2024 பழைய காரை விற்றால் 18% ஜி.எஸ்.டி. - புதிய அறிவிப்பால் யாருக்கு பாதிப்பு?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ''தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி'' என்கிறார் திருமாவளவன் கேள்வி: பொதுத் தொகுதிகளைப் பெற்றாலும் அதில் தலித் அல்லாதவர்களை நிறுத்தி வெற்றிபெற முடியுமா? பதில்: ''பொதுத் தொகுதியில் தலித் அல்லாதவரை நிறுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது நமது ஆசை. ஆனால், யாதார்த்தத்தில் சமூக இருப்பு என்னவாக இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கோ, அதிகாரத்திற்கோ வர மாட்டோம் என்றால் யாரை வேண்டுமானால் எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம். ஆனால், ஒரு கூட்டணிக்குள் சில இடங்களைப் பெற்று, ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும் எனும் போது ஒரு தொகுதியைக்கூட எதிரிக்கு விட்டுவிடக்கூடாது என்பதுதான் முக்கியமானது. 'பாருங்கள், ஒரு பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டோம்' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? அப்படிச் செய்தால் அந்தத் தொகுதியை எதிரிக்கு விட்டுக்கொடுத்ததைப்போல ஆகிவிடும். ஒரு வேட்பாளரை நிறுத்தும்போது கட்டாயமாக வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் அங்கே இருக்க வேண்டும். தோல்விதான் கிடைக்கும் எனக் கருதி முடிவெடுத்தால் அது நல்ல அரசியல் அல்ல. வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்றால் அதற்கேற்றபடியான கணக்குகள்தான் தேவை. சமூகத்தின் இருப்பின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கின்றன. அரசியல் கட்சிகளின் முடிவின் அடிப்படையில் சமூகத்தின் இருப்பு இல்லை. ஒரு தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலோ, இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலோ அங்கே வன்னியர் வேட்பாளரையோ, இஸ்லாமிய வேட்பாளரையோ நிறுத்த வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து வாக்களிக்கும் பொது உளவியலையும் பெற்றிருக்கிறார்கள்.'' 'தலித் கட்சி மட்டுமல்ல பிற கட்சிகளும்தான்' கேள்வி: உத்தர பிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்டவர் முதலமைச்சராக முடிகிறது, ஆனால், சமூக நீதி பேசும் தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசினாலே பிரச்னையாகிறது என்ற விமர்சனம் இருக்கிறது... பதில்: ''துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென குறிப்பிடுவதை யார் பிரச்சனையாக்கியது? எல்லாமே ஊடகங்கள்தான். தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருப்பவர்கள், அந்தக் கூட்டணியைச் சிதைக்க நினைப்பவர்கள்தான் இதைச் செய்கிறார்கள். தி.மு.க. அப்படி ஏதும் சொல்லவில்லையே. துணை முதலமைச்சர் பதவியைக் கேட்க வி.சி.கவுக்கு என்ன தகுதியிருக்கிறது என யாரும் கேட்கவில்லையே.. துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென ஆதவ் அர்ஜுனா கேட்டது ஒரு பொதுவான கோரிக்கை. அவர் உள்நோக்கத்தோடு கேட்டதாக ஊடகங்கள் சொல்லின. ஆகவே அது ஒரு விவாதமாக மாறியது. உ.பியில் நடந்ததைப்போல இங்கே நடக்கவில்லையே என்று கேட்டால், ஒவ்வொரு மாநில அரசியலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு துருவ அரசியல்தான் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஏன் தலித் கட்சி வளரவில்லையெனக் கேட்கிறீர்கள். அதே காலகட்டத்தில் உருவான பா.ம.கவும் வளர முடியவில்லையே... ஏன், ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற எந்தக் கட்சியுமே ஒரு கட்டத்திற்கு மேல் வர முடியவில்லையே. 2001லிருந்து பா.ஜ.க. இங்கே அ.தி.மு.கவுக்கோ, தி.மு.கவுக்கோ மாற்றாக வர முயற்சிக்கிறது. அவர்களாலேயே வர முடியவில்லை. ஆகவே, இங்கிருக்கும் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.'' சென்னை அரிய உயிரினங்களை கடத்தும் சர்வதேச மையமாக திகழ்வது ஏன்? பிடிபட்டால் என்ன செய்கிறார்கள்?24 டிசம்பர் 2024 தேர்தல் நடத்தை விதிகளில் திடீர் திருத்தம் செய்த அரசு - மக்களால் இனி இதை பார்க்க முடியாதா?24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/ UDHAYSTALIN படக்குறிப்பு, ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை.'' விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? கேள்வி: நிலைமை இப்படியிருக்கையில் விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழக அரசியலில் என்ன இடம் அவருக்கு இருக்கும்? பதில்: ''விஜய் ஒரே மூச்சில் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் வாய்ப்பு இல்லை. ஆனால், ஊடகங்கள் அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எம்.ஜி.ஆரை ஒரு உதாரணமாக காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர். நீண்ட காலமாக தி.மு.கவிற்குள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறும்போது அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்தது. அதனால் அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மாஸ் ஹீரோ. அவருடைய ரசிகர்கள், தங்கள் திரையில் பார்த்த ஹீரோ நேரில் வருகிறார் என்பதால் பார்க்க வந்தார்கள். ஆகவே, அது ஒரு ரசிகர்கள் மாநாடுதான். அரசியல் ரீதியாக முறைப்படுத்தப்பட்ட பிறகு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். எங்கள் கட்சி மாநாட்டிற்கு வருபவர்கள் என்னைப் பார்க்க வருவதில்லை. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சக்திகள்தான் அங்கே வருகிறார்கள். நான் பேசும் அரசியல் சரியானது என நம்புபவர்கள்தான் வருகிறார்கள். விஜய் எம்.ஜி.ஆரைப் போல வந்துவிடுவார் என உசுப்பிவிடுகிறார்கள். யதார்த்தம் அப்படியானதல்ல. அவர் கடின உழைப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும்.'' எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து - தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பொருந்தும்?23 டிசம்பர் 2024 அம்பேத்கர் சர்ச்சையால் காங்கிரஸ் பலன் அடைந்ததா? ராகுலுக்கு சவாலாக பிரியங்கா மாறுவாரா?23 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/ACTORVIJAY படக்குறிப்பு, ''விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும்'' கேள்வி: தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும், ஆட்சியில் உள்ள தவறுகளை போதுமான அளவுக்கு விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பதில்: ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை. கூட்டணிக் கட்சிகள் தோழமையோடு சுட்டிக்காட்டத்தான் முடியும். சட்டமன்றத்திலோ, நேரிலோ அதைச் செய்யலாம். அறவழிப் போராட்டங்களின் மூலம் செய்யலாம். அதையெல்லாம் நாங்கள் செய்கிறோம். அ.தி.மு.கவைப்போல பேசினால்தான் விமர்சிக்கிறோம் என அர்த்தமா?'' வேங்கைவயல் விவகாரம் கேள்வி: குறிப்பாக, வேங்கைவயல் போன்ற விவகாரத்தில் நீங்கள் போதுமான எதிர்வினையாற்றவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.. பதில்: ''அது அறியாமையின் உளறல். பிரச்னை நடந்த மூன்றாவது நாள் புதுக்கோட்டையில் பத்தாயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். அப்போது தி.மு.க. அரசு என்னை தவறாக எடுத்துக்கொள்ளும் என நினைத்தேனா? அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். அதற்குப் பிறகுதான் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ராமஜெயம் இறந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அவரது அண்ணன் தி.மு.க. அரசில் முக்கியமான அமைச்சர். இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு என்பது ஒரு மிகப் பெரிய அமைப்பு. அந்த அமைப்புக்குள் பல நடைமுறைகள் இருக்கும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பிரச்னைக்காக தேர்தல் தொடர்பாக ஒரு பெரிய முடிவை நாங்கள் எடுக்க முடியுமா? அப்படிச் செய்ய முடியாது.'' கேள்வி: தமிழக சட்டமன்றம் செயல்படும் விதம் குறித்து கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், குறைவான நாட்களே அவை நடக்கிறது, போதுமான அளவுக்கு பேச அனுமதிப்பதில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்... பதில்: ''எந்தப் பின்னணியில் அதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. எல்லாக் கூட்டத் தொடரிலும் அவர் பேசுகிறார். வி.சி.கவுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகளை, அ.தி.மு.க., பா.ஜ.க., சொல்லலாம். கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சொல்கிறார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரிடம்தான் இதைப் பற்றிக் கேட்க வேண்டும்.'' கேள்வி: 2026லும் தி.மு.க. கூட்டணி இதேபோல தொடருமா? பதில்: தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. இப்படி ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8n75xej20o
    • கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣
    • இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு  உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன். வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.
    • சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.