Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டபின் வயிற்றை தடவினால் வயிறு பெருக்கும்😂

Gut bomb: That turkey burger could kill you, and here's why | Grist

பெண்கள் பச்சையாக அரிசி சாப்பிட்டால் கல்யாண தினமன்று நல்ல அடை மழை பொழியும்

(எந்த மழை😂)

  • Replies 113
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில

  • இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ ச‌ம்ப‌ம் இருக்கு அதில் எதை சொல்ல‌.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌ல‌ ச‌ம்ப‌ம் இருக்கு அதில் எதை சொல்ல‌.................

பையன்.... உங்களுக்கு நிறைய சம்பவங்கள் தெரிந்திருக்கும்.
ஒவொன்றாக சொல்லுங்க. வாய் விட்டு சிரிப்போம். 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  soave deco peacock feathers animated blue 

மயில் இறகு... கண்ணில் பட்டால், கண் தெரியாமல் போய் விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

  soave deco peacock feathers animated blue 

மயில் இறகு... கண்ணில் பட்டால், கண் தெரியாமல் போய் விடும். 

இதை புத்த‌க‌த்துக்குள் வைத்தால் ப‌டிப்பில் முன்னேற்ற‌ம் வ‌ரும் என்று சொல்லி சில‌ தோழிக‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் புத்த‌க‌ம் கொப்பிக்கை வைச்சு இருந்த‌வை த‌மிழ் சிறி அண்ணா😁👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பையன்.... உங்களுக்கு நிறைய சம்பவங்கள் தெரிந்திருக்கும்.
ஒவொன்றாக சொல்லுங்க. வாய் விட்டு சிரிப்போம். 😂

ஆண்டு வ‌டிவாய் நினைவில்லை

சும்மா விளையாடிட்டு இருந்த‌ நாங்க‌ள் அந்த‌ வ‌ழியால் ஒரு பாம்பு வ‌ர‌ எல்லாரும் தூர‌த்தில் நின்று வேடிக்கை பார்த்தோம்

அப்ப‌ என்னை வீட‌ வ‌ய‌தில் மூத்த‌ ம‌ச்சான் மார் சொல்லிச்சின‌ம் உங்கா பாப்பு உன்னை ப‌ட‌ம் எடுத்திட்டுது இண்டைக்கு இர‌வுக்குள் உன்னை கொத்தும் என்று...............பாம்பு எந்த‌ பிலிம்ரோல் போட்டு எடுத்திச்சோ என‌க்கு தெரியாது ஹா ஹா 

புளிய‌ம் கொட்டைய‌ விழுங்கினா வ‌யித்துக்குள் புளிய‌ம‌ர‌ம் வ‌ள‌ரும் இப்ப‌டி ப‌ல‌ க‌தைக‌ள்😁👍.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

இதை புத்த‌க‌த்துக்குள் வைத்தால் ப‌டிப்பில் முன்னேற்ற‌ம் வ‌ரும் என்று சொல்லி சில‌ தோழிக‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் புத்த‌க‌ம் கொப்பிக்கை வைச்சு இருந்த‌வை த‌மிழ் சிறி அண்ணா😁👍...........................

பையன்... மயில் இறகை புத்தகத்துக்குள் வைத்தால், குட்டி போடும் என்றும்  சொல்வார்கள். 😂

10 minutes ago, வீரப் பையன்26 said:

ஆண்டு வ‌டிவாய் நினைவில்லை

சும்மா விளையாடிட்டு இருந்த‌ நாங்க‌ள் அந்த‌ வ‌ழியால் ஒரு பாம்பு வ‌ர‌ எல்லாரும் தூர‌த்தில் நின்று வேடிக்கை பார்த்தோம்

அப்ப‌ என்னை வீட‌ வ‌ய‌தில் மூத்த‌ ம‌ச்சான் மார் சொல்லிச்சின‌ம் உங்கா பாப்பு உன்னை ப‌ட‌ம் எடுத்திட்டுது இண்டைக்கு இர‌வுக்குள் உன்னை கொத்தும் என்று...............பாம்பு எந்த‌ பிலிம்ரோல் போட்டு எடுத்திச்சோ என‌க்கு தெரியாது ஹா ஹா 

புளிய‌ம் கொட்டைய‌ விழுங்கினா வ‌யித்துக்குள் புளிய‌ம‌ர‌ம் வ‌ள‌ரும் இப்ப‌டி ப‌ல‌ க‌தைக‌ள்😁👍.........................

பாம்பு... படம் எடுக்கின்ற, கதையும் ஊரிலை உலாவியது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... மயில் இறகை புத்தகத்துக்குள் வைத்தால், குட்டி போடும் என்றும்  சொல்வார்கள். 😂

பாம்பு... படம் எடுக்கின்ற, கதையும் ஊரிலை உலாவியது. 🤣

அப்ப‌ சின்ன‌ வ‌ய‌து தானே என்ன‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொன்னாலும் உண்மை என‌ ந‌ம்புவ‌து த‌மிழ் சிறி அண்ணா............ உங்க‌ட‌ சிறுவ‌ய‌தில் இந்த‌ பாம்பு ப‌ட‌ம் எடுக்கும் பூச்சாண்டி க‌தை யாரும் சொல்லி இருக்கின‌மா😁.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ சின்ன‌ வ‌ய‌து தானே என்ன‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொன்னாலும் உண்மை என‌ ந‌ம்புவ‌து த‌மிழ் சிறி அண்ணா............ உங்க‌ட‌ சிறுவ‌ய‌தில் இந்த‌ பாம்பு ப‌ட‌ம் எடுக்கும் பூச்சாண்டி க‌தை யாரும் சொல்லி இருக்கின‌மா😁.........................

  Attacking Snake GIFs | Tenor   Cobra GIFs - Find & Share on GIPHY

ஓம் பையன். பாம்பு படம் எடுக்கிற கதை எனக்கும் சொன்னவை. 😂
மேலே படத்தில் உள்ள மாதிரித்தான்... பாம்பு படம் எடுத்து வைத்திருக்கும் என்று, 
கனகாலம் நம்பிக் கொண்டு இருந்தனான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

  Attacking Snake GIFs | Tenor   Cobra GIFs - Find & Share on GIPHY

ஓம் பையன். பாம்பு படம் எடுக்கிற கதை எனக்கும் சொன்னவை. 😂
மேலே படத்தில் உள்ள மாதிரித்தான்... பாம்பு படம் எடுத்து வைத்திருக்கும் என்று, 
கனகாலம் நம்பிக் கொண்டு இருந்தனான்.  🤣

பாம்பை க‌ண்டால் ப‌டையே ந‌டுங்கும் நீங்க‌ள் ப‌ட‌த்தை போட்டு காட்ட‌ ஹா ஹா😁...............

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480726184_940220321616588_69533665359478

தேனை... தலையில் தேய்த்தால், நரை முடி வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலை தின்றால் முடி உதிராது கறுப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2024 at 08:39, தமிழ் சிறி said:

//சந்திர மண்டலத்துக்கு சென்று கூட... அரிசி கொண்டு வந்து தருவோம்.//
ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா.... 50 வருசத்துக்கு முன் சொன்னது.
இருக்கிறதிலை... இதுதான், முதல் பொய் என நினைக்கின்றேன். 😂

எனக்கு என்னமோ அவர் சரியாக சொல்லி சரியாக செயல்பட்டார் என்றே தோன்றுகிறது இன்று வன்னியில் மற்ற பிரதேசங்களில் இருக்கும் வயல்கள் எல்லாம் சிறிமா காலத்தில் உருவானதுதானே? நீர்ப்பாசன முறைமையை உருவாக்கி சிறுபோகம் பெரும்போகம் என்று இரண்டு முறை நெல்விதைக்க கூடிய வழி சமைத்தார் வீட்டு காணிகளுக்கு பெரிய பம்புகள் ( Pump) வைத்து நீர்ப்பாசன முறை இருந்தது. நாங்கள் சிறு வயதில் அந்த தொட்டிகளில்தான் குளிப்போம் ......... இப்போ விஞ்ஞானம் என்கிறார்கள் எல்லாம் காய்ந்து கிடக்கிறது ......... சிங்கள பகுதிகளிலும் பார்த்தேன் எல்லாம் காடுகளாகத்தான் கிடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

கறிவேப்பிலை தின்றால் முடி உதிராது கறுப்பாக இருக்கும்.

கறிவேப்பிலை யில் இரும்புச்சத்து உண்டு ..வளர்ச்சிக்குஉதவும். தலைக்கு வைக்கும் எண்ணையில் கறிவேப்பிலைகள் தூளாக்கி போட்டு போட்டு (ஒருசொட்டும் தண்ணீர் இல்லாமல்) காய்ச்சி தலைக்கு தடவினால் முடிவளர்ச்சி கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

குளிக்கும் போது உடல் முழுவதும் நனைய வேண்டும். ஒரு இடத்தில் நனைக்க தவறினால் அதனூடாக சனி பிடித்து வாட்டும் (இது கர்ணன் கதை படித்ததிலிருந்து தொடங்கியது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13ம் இலக்கம் ராசி இல்லாத இலக்கம். அதை இன்றும் பரவலாக நம்புகின்றார்கள் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif?cid=6c09b952gvozhy8v1tlecl2rnd

வயது முதிர்ந்த நாக பாம்புகளின் வாயில் பெறுமதி மிக்க... ஒளி வீசும் இரத்தினக் கற்கள் உள்ளது. அவை இரவில்... இரை தேடும் போது, அதனை கக்கி விட்டு அந்த ஒளி வெளிச்சத்தில் இரை தேடும்.

அப்போது.... மாட்டு சாணத்தை, அந்த இரத்தினக் கல்லின் மீது போட்டால்... பாம்புக்கு கண் தெரியாமல், இரத்தினைக் கல்லை விட்டுவிட்டு போய் விடும். பாம்பு போன பின்... அந்தக் கல்லை நாம் எடுக்கலாம்.

😂 🤣

இதையே பாம்புகள் புணரும்போது ஒரு வெள்ளை சேலை அல்லது வேட்டியால் மூடினால் இப்படி கல்லுவரும் என்பார்கள்.

On 21/2/2025 at 18:24, குமாரசாமி said:

13ம் இலக்கம் ராசி இல்லாத இலக்கம். அதை இன்றும் பரவலாக நம்புகின்றார்கள் 😂

1998 தை மாதம் வீடு வாங்கும்போது 13ம் திகதிதான் இரண்டு வழக்கறிஞர்களுக்கும் ஒன்றுமே இல்லை அந்த நாளில் எழுதுவமா என்றனர்.

எமக்கு பிரச்சனை இல்லை என்று அந்த நாளிலேயே எழுதினோம்.

13ம் திகதியை பலரும் மறுத்தபடியால் நல்லதாக போய்விட்டது.

அமெரிக்காவில் பல கட்டட பாரம் தூக்கிகளில் 13ம் இலக்கமே இருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இதையே பாம்புகள் புணரும்போது ஒரு வெள்ளை சேலை அல்லது வேட்டியால் மூடினால் இப்படி கல்லுவரும் என்பார்கள்.

மின்னல் விழும் போது... அதனை உடனே மண்ணை மூடி தாட்டு விட்டால், அவ்வளவும் வைரமாக மாறும். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் பல கட்டட பாரம் தூக்கிகளில் 13ம் இலக்கமே இருக்காது.

ஜேர்மனியிலையும் உதே நிலைமைதான். ரெஸ்ரோரன்ற் சாப்பாட்டு மேசையிலையும் 13ம் நம்பர் மேசை இல்லை. 😂

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

481958408_4311296875764177_4981915064346

பெரிய வயதிலும் உண்மையென நம்பிய பொய்கள் ........! 😪

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

481958408_4311296875764177_4981915064346

பெரிய வயதிலும் உண்மையென நம்பிய பொய்கள் ........! 😪

அண்ணை இது உண்மை தான் ஏன் பொய் எனகிறீர்கள். ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அண்ணை இது உண்மை தான் ஏன் பொய் எனகிறீர்கள். ??

காலமை மனிசி எனக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது , (வெள்ளிக்கிழமையில் அவவுக்கு வேலை கூட ) அந்நேரத்தில் இதுவேற கண்ணில் பட்டுது ......... வேறமாதிரி எழுதத் தோணவில்லை கந்தையா ............! 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

காலமை மனிசி எனக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது , (வெள்ளிக்கிழமையில் அவவுக்கு வேலை கூட ) அந்நேரத்தில் இதுவேற கண்ணில் பட்டுது ......... வேறமாதிரி எழுதத் தோணவில்லை கந்தையா ............! 😁

கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது 🤣😂. அண்ணை

என்ரை நிலமை. உங்களை விட பல மடங்குகள் மோசம் சொன்ன வெட்கம் வேண்டாம் 🙏

நீங்கள் கொடுத்து வைத்த மனிதன் உங்கள் மனைவி உங்களை கடவுளாக நினைத்து அர்ச்சனை செய்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

காலமை மனிசி எனக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது , (வெள்ளிக்கிழமையில் அவவுக்கு வேலை கூட ) அந்நேரத்தில் இதுவேற கண்ணில் பட்டுது ......... வேறமாதிரி எழுதத் தோணவில்லை கந்தையா ............! 😁

வெளிநாடுகளில் "அர்ச்சனை" வாங்குவது பல விதங்களில் பரவாயில்லை. தும்புத் தடி பாரம் குறைந்த பிளாஸ்ரிக்கினால் ஆனது, ஊரில் போல மரத்தடியால் ஆனதல்ல😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.