Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

BatticaloaJanuary 30, 2025
bvbgh-696x522.jpg

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது. இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும்  நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இப்பாரிய விபத்து” குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால உதவியாளர்களின் பணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
https://eelanadu.lk/அமெரிக்காவில்-பயணிகள்-வி/

  • கருத்துக்கள உறவுகள்

வொஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

வொஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந் நாட்டு நேரப்பு புதன் கிழமை (29) இரவு 09.00 மணியளவில் (02:00 GMT) மணியளவில் ஓடுபாதையை நெருங்கிக் கொண்டிருந்த போது, 78 பேர் வரை அமரக்கூடிய விமானம் ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானதாக விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மோதலின் போது விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 விமானம், கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மோதலை அடுத்து விமானம், ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய ஏறியில் விழுந்ததாக வொஷிங்டன், டி.சி.யில் அவசரகால பதிலைக் கையாளும் பிரிவினர் கூறியுள்ளனர்.

மீட்பு பணியாளர்கள் தற்சமயம் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1418886

  • கருத்துக்கள உறவுகள்

கவனக்குறைவால் வந்த கவலையான விடயம் 

Edited by theeya

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஜனவரி 2025, 03:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்தது.

இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள ரோனால்ட் ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையம் அனைத்து விமானங்களையும் தரையிறக்கியுள்ளது.

அமெரிக்கா: நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன நடந்தது?

ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

உயிரிழப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா?

சிபிஎஸ் செய்தி நிறுவனம் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறது. இந்த விமானம் இரண்டாகப் பிளந்து போடோமேக் ஆற்றில் விழுந்திருப்பதைக் காண முடிவதாகவும் ஹெலிகாப்டர் தண்ணீரில் தலைகீழாக விழுந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

காவல் மற்றும் தீயணைப்புப் படையினர் உயிருடன் இருப்பவர்களை தண்ணீரில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இருட்டும், உறையும் குளிரும் மீட்புப் பணிகளை சவாலாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தும்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்?

விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பார்க்வே வழியாக கார் ஓட்டிச் சென்றபோது, விமானம் மோதியதை தான் பார்த்ததாக அரி ஷுல்மன் என்பிசி வாசிங்டன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முதலில் விமானம் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது என்று கூறும் அவர், திடீரென விமானம் வலதுபுறமாகத் திரும்பியதாகவும், விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் சீராக வரத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த நேரத்தில் அது "மிகவும் தவறு" என்று எனக்கு தெரிந்துவிட்டது. அந்த பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதை கடந்த காலங்களில் பார்த்திருந்த அவர், ஒரு விமானத்தின் அடிப்பகுதி அந்த இருட்டான நேரத்தில் தெரியக்கூடாது என்று கூறினார். அந்த தீப்பொறிகள் விமானத்தின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நீண்டு சென்றது.

விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விமான விபத்தை பார்த்ததாக ஜிம்மி மசியோ கூறுகிறார்.

வானில் ஒரு 'ஒளிவீச்சு' உருவானதை பார்த்ததாக அவர் நினைவுகூறுகிறார். ரீகன் விமானநிலையத்தை நோக்கி செல்லக் கூடிய விமானங்கள் வழக்கமான பாதையில் செல்லவில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார்.

அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வந்தடையும் வரை, அவர் வானில் பார்த்தது குறித்து, பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்கிறார்.

உறையும் குளிரில் மீட்புப் பணி

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து
படக்குறிப்பு,வாசிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர்

தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உறையும் குளிர் அவர்களின் பணியை சவாலாக்கியுள்ளது.

வாஷிங்டன் டிசியின் ஆளுநர் மேயர் பவுசர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவசர சேவை பணியாளர்கள் "மிகவும் இருட்டான, குளிரும் சூழலில்" மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை மிகவும் துயரமானது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் விமான நிலையத்தில் இருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டஹெலிகாப்டர்

தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் பிரிவு தலைவர் ஜான் டானலி, மீட்புப் பணிகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்று கூறுகிறார், "மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது" என்று குறிப்பிட்டார் அவர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8:58 மணிக்கு அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரில் விமானம் இருப்பதை கண்டனர். தற்போது 300 வீரர்கள் மீட்புப் பணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வாசிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்தில் திரண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

போடோமேக் ஆற்றுப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கியுள்ளது, இந்த ஆறு வாஷிங்டன் டிசி வாயிலாக பாய்கிறது என, டிசி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைப்பதற்கு உதவும் படகுகள் மூலம், விமானத்தின் பாகங்கள் தேடப்பட்டு வருவதாக, அத்துறை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எனது மனைவி 20 நிமிடங்களில் தரையிறங்க போவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்" என்று ஹமாத் ராசா கூறுகிறார். அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த தனது மனைவி வருவதற்காக ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

"இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்குவோம் என்று கூறினார். அவரை யாராவது தண்ணீரிலிருந்து மீட்டு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் என்ன கூறினார்?

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியிருந்தார்.

"விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானம் தெளிவாக உள்ளது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தன."

"அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறுபுறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, ஹெலிகாப்டர் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் ஏன் கூறவில்லை"

"இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும். இது சரியே இல்லை" என்று ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்திக்க அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கேட்டுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் போக்குவரத்து செயலர் சீயன் டஃபி நிலைமைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

"எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் " - அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராபர்ட் ஐசோம், இந்த விபத்து குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து ஏர்லைன்ஸ் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த அவரது வீடியோவில், விமானத்தின் தகவல்களையும், அதில் இருந்தவர்கள் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.

உள்ளூர், மாநில மற்றும் தேசிய அதிகாரிகளுடன் தங்கள் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்" என்று கூறிய அவர், வாஷிங்டன் டிசிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஒரு குழுவை அனுப்பியிருப்பதாகவும், தானும் அங்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏர்லைன்ஸ் விபத்து; 30 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்!

அமெரிக்க ஏர்லைன்ஸ் விபத்து; 30 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்!

64 பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய பயணிகள் ஜெட் விமானம், அமெரிக்க இராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகொப்டருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து விமானம் குளிர்ச்சியான பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

New-Project-21-8-600x338.jpg

NBC யின் வொஷிங்டன் துணை நிறுவனமான NEWS 4 செய்திச் சேவை, ஆற்றில் இருந்து 30 க்கும் மேற்பட்ட உடல்களை மீட்கப்பட்டதாக தெரிவித்தது.

கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜெட் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியது.

அதேநேரம், ஹெலிகொப்டர் பயிற்சியின் போது மூன்று வீரர்களை ஏற்றிச் சென்றதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயணிகள் ஜெட் விமானம் ரீகனில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தபோது நடுவானில் மோதல் ஏற்பட்டது.

இதேவேளை விமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1419069

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் உயிர் தப்புவது சாத்தியமில்லை என கூறுகிறார்கள்.(Experts)

  • கருத்துக்கள உறவுகள்

நடுவானில் மோதிய பயணிகள் விமானமும் ஹெலிக்கொப்டரும் - விபத்திற்கு முன்னர் இடம்பெற்ற உரையாடல்கள் வெளியாகின

Published By: RAJEEBAN   30 JAN, 2025 | 05:22 PM

image

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ஹெலிக்கொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி  ஆற்றில் விழுந்து நொருங்கிய சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ள அதேவேளை விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற விடயங்களை உரையாடல்களை  விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில்  பதிவான விடயங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

விமானங்களில் இடம்பெறும் உரையாடல்களை பதிவுசெய்யும் நம்பகதன்மை மிக்க லைவ்ஏடிசி. நெட் இறுதி நிமிட உரையாடல்களை வெளியிட்டுள்ளது.

பட்25 என்ற அழைப்புகுறியை கொண்டிருந்த ஹெலிக்கொப்டரில் பயணித்த மூவரும்  உரையாடிய விடயங்கள் வெளியாகியுள்ளன.

american_flight_crash_1.jpg

அந்த ஹெலிக்கொப்டர் 64 பயணிகள் மற்றும் விமானப்பணியாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த சிஆர்ஜே 700 பயணிகள் விமானத்துடன் மோதுவதற்கு முன்னர் தங்களிற்குள் பேசிக்கொண்டிருந்த விடயங்கள் வெளியாகியுள்ளது.

பட்25 உங்கள் பார்வையில் சிஆர்ஜே உள்ளதா? அதன் பின்னால் கடந்து செல்லுங்கள் என விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இந்த உரையாடல் பதிவாகி ஒரிரு செகன்ட்களில் மற்றுமொரு விமானத்திலிருந்து  விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் வருகின்றது.

டவர் நீங்கள் அதனை பார்த்தீர்களா,? என அவர் கேட்கின்றார் அவர் விபத்து இடம்பெற்றதையே குறிப்பிடுகின்றார்.

இதன் பின்னர் ஒரு விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஏனைய விமானங்களை ரீகன் வோசிங்டன் தேசிய விமானநிலையத்தின் வேறு ஒடுபாதைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றார்.

விமானவிபத்து இடம்பெற்ற தருணத்தில் கிராஸ் கிராஸ் கிராஸ் இது எச்சரிக்கை மூன்று என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிப்பதை கேட்க முடிகின்றது.

சற்று முன்னர் என்ன நடந்தது தெரியுமா? 33 வது ஓடுபாதைக்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது, நாங்கள் காலவரையறையின்றி நடவடிக்கைகளை நிறுத்தப்போகின்றோம் என மற்றுமொரு விமான போக்குவரத்துகட்டுப்பாட்டாளர் தெரிவிக்கின்றார்.

ஹெலிக்கொப்டரும் விமானமும் விபத்துக்குள்ளாகி ஆற்றிற்குள் விழுந்துவிட்டன என மூன்றாவது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கின்றார்.

ஆற்றின் நடுப்பகுதியில் இது இடம்பெற்றிருக்கவேண்டும் நான் தீப்பிளம்புகளை பார்த்தேன், என மற்றுமொருவர் தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/205364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை உலுக்கியுள்ள விமானவிபத்து – பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் பலி

skaters_killed-780x470.jpg

அமெரிக்காவில்  ஹெலிக்கொப்டருடன் மோதி விபத்துக்குள்ளான அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் ரஸ்யாவின் பிரபல பனிச்சறுக்கு வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான யெவ்ஜினா சிஸ்கோவாவும் ( 52) வடிம் நவுமொவ்வும் ( 55) பயணித்ததாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தம்பதியினர் 1991 முதல் 96ம் ஆண்டுவரை ரஸ்யாவிற்காக ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாடி தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்றவர்கள்.

ரஸ்யாவில் தங்கள் பனிச்சறுக்கல் விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்கள் பின்னர், அமெரிக்காவில் குடியேறி பயிற்சியாளர்களாக மாறியிருந்தனர்.

skaters_killed.jpg

அமெரிக்காவிற்காக விளையாடிய அவர்களின் மகனும் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டியொன்றில் கலந்துகொண்டுவிட்டு 13  பனிச்சறுக்கு  வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தவேளையே இவர்களது விமானம் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த 13 பனிச்சறுக்கு  வீரர்களும் ரஸ்யாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பிள்ளைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஸ்யாவிற்காக  பனிச்சறுக்கு  போட்டிகளில் விளையாடிய இன்னா வோலியன்ஸ்கயா என்ற வீராங்கனையும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.

america_flight_crash_3.jpg

இதேவேளை விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில்  பனிச்சறுக்கு விளையாட்டு சமூகத்தை சேர்ந்த பலர் பயணித்தனர் என்பதை அமெரிக்காவின் பனிச்சறுக்கல் விளையாட்டிற்கான  தலைமை அமைப்பு உறுதி செய்துள்ளது.

இந்த விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் கன்சாஸ் விச்சிட்டாவில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

skaters_kiiled.jpg

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத இந்த  பெருந்துன்பியல் சம்பவத்தினால் நாங்கள்மனமுடைந்துபோயுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது..

https://akkinikkunchu.com/?p=310279

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விபத்து; விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விபத்து; விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டி.சி.க்கு அருகே இராணுவ ஹெலிகொப்டருடன் மோதி, பொடோமாக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழன் (30) மாலை நிலவரப்படி, பொடோமேக் ஆற்றில் இருந்து குறைந்தது 40 உடல்கள் மீட்கப்பட்டதாக சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று வொஷிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 உடல்கள் மீட்கப்பட்டதாக சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திகள் தெரிவித்தன.

Image

அதேநேரம், விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து கருப்பு பெட்டிகள் எனப்படும் விமான தரவு பதிவுகள் மற்றும் காக்பிட் குரல் பதிவுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று ஆதாரங்களை மேற்கொள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கருப்பு பெட்டிகள் விமானத்தில் என்ன தவறு நடந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களை வழங்க உதவும்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆய்வகத்தில் கருப்பு பெட்டி ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்படும்.

புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து விமானம் குளிர்ச்சியான பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

விபத்து குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான பணியமர்த்தலின் தரம் குறைக்கப்பட்டது பேரழிவிற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் கூட்டத்தில் வியாழக்கிழமை (30) உரையாற்றும் போதே ட்ரம்ப் இந்த கருத்தினை முன்வைத்தார்.

https://athavannews.com/2025/1419110

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்காக காத்திருந்த இளம் விமானி, இந்திய வம்சாவளியினரின் மகள் - பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் - அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Published By: RAJEEBAN    31 JAN, 2025 | 11:40 AM

image

அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதி ஆற்றில் விழுந்து நொருங்கிய அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ள குடும்பங்களின் இதயங்களை மேலும் நொருங்கச் செய்யும் தகவலாக இது அமைந்துள்ளது.

2001ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மோசமான விமானப் பேரழிவாக இந்த துயரம் மிக்க சம்பவம் கருதப்படும்.

துணை விமானி சாம் லில்லே --கப்டன் ஜொனதன் கம்போஸ்

sam.jpg

சாம் லில்லே தனது திருமண நாளிற்காக காத்திருந்த இளம் விமானி, ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களிற்கு முன்னர் அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதிய அமெரிக்க எயர்லைன்ஸ்  பயணிகள் விமானத்தை செலுத்தியவர்.

நடுவானில் மோதுண்ட விமானமும் ஹெலிக்கொப்டரும் அதன் பயணித்தவர்களுடன் வேர்ஜீனியாவின் பொட்டொமக் ஆற்றில் விழுந்தன.

சாம் விமானவோட்டியாக பணிபுரிய ஆரம்பித்தவேளை நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன் என தெரிவிக்கின்றார் அவரின் தந்தை டிமோதி. முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகனின் இழப்பு என்னை மிக மோசமாக பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் அழக்கூடியமுடியவில்லை உறங்கமுடியவில்லை என தெரிவிக்கின்றார்.

நான் அவனை மீண்டும் பார்ப்பேன் என தெரியும், ஆனால் எனது இதயம் வேதனையால் துடிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமானத்தின் துணை விமானி லில்லேயின் தந்தை, தனது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பது அவன் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினான்.

நான் மிகவும் நேசித்த ஒருவரை இழப்பது பெரும்துயரம் என தெரிவித்துள்ள தந்தை, எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள் இது எனவும் தெரிவித்துள்ளார்.

துயரத்தில் சிக்குண்டுள்ள தந்தை 20 வருடங்களாக அமெரிக்க இராணுவ விமானியாக பணிபுரிந்தவர். பயணிகள் விமானம் சரியான நடைமுறையையே பின்பற்றியது என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டரின் இராணுவ விமானி மிகப்பெரும் தவறிழைத்துள்ளார். அது என்னை காயப்படுத்தியுள்ளது ஏனென்றால் அவர்கள் எனது சகோதாரர்கள் நான் எனது மகனையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

combass.jpg

அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியான ஜொனதன் கம்போசும் உயிரிழந்துள்ளார், 2022 இல் கொம்போஸ் விமானத்தின் கப்டனாக பணிபுரிய ஆரம்பித்தார் என அவரை நன்கு அறிந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் அற்புதமான மனிதன் பறப்பது அவருக்கு பிடிக்கும் குடும்பத்தை அவர் மிகவும் நேசித்தார் என அவரை பற்றியறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

american_flight_crash_people_killed22.jp

அஸ்ரா ஹூசைன் ராசா

விமானவிபத்தில் உயிரிழந்தவர்களில் அஸ்வரா ஹூசைன் ராசாவும்( 26) ஒருவர் என அவரின் மாமனார் வைத்தியர் ஹசீம் ராசா சிஎன்என்னிற்கு தெரிவித்தார்.

இந்திய வம்சாவளியினரின் மகளான இவர் 2020 இல் இந்தியானா பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 2023  ஆகஸ்ட்டில் தனது காதலனை கரம்பிடித்தார்.

asra.jpg

ராசா வோசிங்டன் டிசியை தளமாக கொண்ட ஒரு ஆலோசகர், அவர் விசிட்டாவிற்கு மாதத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து அங்குள்ள ஒரு மருத்துவமனை திட்டத்தில் பணியாற்றினார் என அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205408

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு, உடல்களை தேடும் பணி நிறுத்தம் - சமீபத்திய தகவல்கள்

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஜனவரி 2025
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் புதன்கிழமை இரவு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. நொறுங்கிய விமானம், போடோமேக் ஆற்றில் விழுந்தது.

அந்த விமானத்தில் 60 பயணிகளும் 4 விமான குழுவினரும் இருந்தனர். ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேரும் இருந்தனர். மொத்தமாக, 67 பேரும் இந்த விபத்தில் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், விமானத்தின் தரவுகளும் விமானி அறையின் குரல் பதிவுகளும் அடங்கிய முக்கியமான கருவியான கருப்புப் பெட்டியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான சிபிஎஸ் ஊடகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கருப்புப் பெட்டியின் மூலம், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆய்வகத்தில் கருப்புப் பெட்டி சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஆபத்தான சூழல் காரணமாக இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக டைவிங் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ் ஊடகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்கள் அனைத்திலும் தாங்கள் தேடிவிட்டதாக கடலில் மூழ்கி தேடும் டைவர்கள் தெரிவித்தனர்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த வாஷிங்டன் டிசியின் தீ மற்றும் அவசர உதவி சேவைகள் துறையின் தலைவர் ஜான் டொனெல்லி, அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதுகுறித்துப் பேசியபோது அவர், "இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருப்பதாக நாங்கள் நம்பவில்லை," என்று கூறினார்.

மேலும், தனது குழுக்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 27 உடல்களையும், ஹெலிகாப்டரில் இருந்து ஒரு உடலையும் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா: நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன நடந்தது?

ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

விபத்துக்கு பைடன் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய டிரம்ப்

இந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், "இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக" குறிப்பிட்டார்.

"இதன் பின்னணியைக் கண்டறியும் வரை ஓய மாட்டோம்" என்று குறிப்பிட்ட டிரம்ப், விமான போக்குவரத்து துறையில் பணியாற்றுவோர் அதிகபட்ச தரத்துடனும் அறிவுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்துக்கு பைடன் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டிய டிரம்ப், பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார்.

"விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள், உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களை பணியமர்த்தியதாக" குற்றம் சாட்டிய டிரம்ப், வெளிப்படையாக "பைடன் நிர்வாகத்தை, குறிப்பாக முன்னாள் போக்குவரத்து செயலாளரை" குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டன் டிசி விமான விபத்து: பைடன் நிர்வாகத்தை டிரம்ப் குற்றம் சாட்டுவது ஏன்? என்ன பேசினார்?

ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 35,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய நிர்வாக அமைப்பு. அவர்களில் ஒரு பகுதியினர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்.

அங்கு "முன்னாள் போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக்கால் நியமிக்கப்பட்டவர்கள் விமானப் போக்குவரத்தைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தும் தகுதியுடையவர்கள் என்று தான் நம்பவில்லை" என்றும் கூறினார்.

ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு வெள்ளையர்களால் நிரம்பியுள்ளதாகக் கூறி, அதில் பன்முகத்தன்மை கொள்கையின்படி பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் அதன் தரம் குறைந்துவிட்டதாக" டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் "டேப்களை" கேட்டதாகக் கூறிய அவர், "விமானம் அனைத்தையும் சரியாகச் செய்து கொண்டிருந்ததாகவும்" வழக்கமான "பாதையில் இருந்ததாகவும்" அவர் கூறுகிறார்.

ஆனால், ஏதோ காரணத்தால் ஹெலிகாப்டர் அதே உயரத்தில் இருந்ததாகவும் அது நம்ப முடியாத அளவுக்கு மோசமான கோணத்தில் சென்றதாகவும் டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன் டிசி விமான விபத்து: பைடன் நிர்வாகத்தை டிரம்ப் குற்றம் சாட்டுவது ஏன்? என்ன பேசினார்?

பட மூலாதாரம்,BERND DEBUSMANN JR/BBC

அதோடு ஹெலிகாப்டர், மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் என எப்படி வேண்டுமேனாலும் திருப்பக்கூடிய திறன் கொண்டது எனக் குறிப்பிட்ட டிரம்ப், அந்த ஹெலிகாப்டர் தவறான பக்கமாகத் திருப்பியுள்ளது," என்று கூறினார்.

இந்த விபத்துக்கு பன்முகத்தன்மை கொண்ட பணியமர்த்தல் கொள்கைகளுக்குப் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், "மூளை திறன் மற்றும் உளவியல் தரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டிய சில வேலைகள் உள்ளன" என்றார்.

மேலும், தனது நிர்வாகம் மிக உயர்ந்த தரநிலைகளைக் கொண்டுள்ளதாகவும் முந்தைய அரசின் கீழ் தரநிலைகள் அதற்கு எதிர்மாறாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்?

விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பார்க்வே வழியாக கார் ஓட்டிச் சென்றபோது, விமானம் மோதியதை தான் பார்த்ததாக அரி ஷுல்மன் என்பிசி வாசிங்டன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முதலில் விமானம் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது என்று கூறும் அவர், திடீரென விமானம் வலதுபுறமாகத் திரும்பியதாகவும், விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் சீராக வரத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த நேரத்தில் அது "மிகவும் தவறு" என்று எனக்கு தெரிந்துவிட்டது. அந்த பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதை கடந்த காலங்களில் பார்த்திருந்த அவர், ஒரு விமானத்தின் அடிப்பகுதி அந்த இருட்டான நேரத்தில் தெரியக்கூடாது என்று கூறினார். அந்த தீப்பொறிகள் விமானத்தின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நீண்டு சென்றது.

விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விமான விபத்தை பார்த்ததாக ஜிம்மி மசியோ கூறுகிறார்.

வானில் ஒரு 'ஒளிவீச்சு' உருவானதை பார்த்ததாக அவர் நினைவுகூறுகிறார். ரீகன் விமானநிலையத்தை நோக்கி செல்லக் கூடிய விமானங்கள் வழக்கமான பாதையில் செல்லவில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார்.

அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வந்தடையும் வரை, அவர் வானில் பார்த்தது குறித்து, பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்கிறார்.

உறையும் குளிரில் மீட்புப் பணி

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து
படக்குறிப்பு,வாசிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர்

தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வந்ததாகவுவந்ததாகவும். உறையும் குளிர் அவர்களின் பணியை சவாலாக்கியுள்ளது.

வாஷிங்டன் டிசியின் ஆளுநர் மேயர் பவுசர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவசர சேவை பணியாளர்கள் "மிகவும் இருட்டான, குளிரும் சூழலில்" மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வந்தனர் என்று தெரிவித்தார்.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டஹெலிகாப்டர்

"எனது மனைவி 20 நிமிடங்களில் தரையிறங்க போவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்" என்று ஹமாத் ராசா கூறுகிறார். அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த தனது மனைவி வருவதற்காக ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

"இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்குவோம் என்று கூறினார். அவரை யாராவது தண்ணீரிலிருந்து மீட்டு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் என்ன கூறினார்?

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

'இந்த விபத்து தவிர்த்திருக்கக் கூடியது' - டிரம்ப்

இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியிருந்தார்.

"விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானம் தெளிவாக உள்ளது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தன."

"அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறுபுறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, ஹெலிகாப்டர் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் ஏன் கூறவில்லை"

"இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும். இது சரியே இல்லை" என்று ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்திக்க அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கேட்டுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் போக்குவரத்து செயலர் சீயன் டஃபி நிலைமைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்

ரம்பின் வேலை ஆட்களை குறைக்கும் நடவடிக்கையால்...
அமெரிக்காவில் பலர் கலக்கத்தில் உள்ளார்களாம்.

இந்த விமான விபத்து நடந்த போது... 
விமான கட்டுப் பாட்டு கோபுரத்தில்... இருவர் செய்யும் வேலையை, 
ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். 

விமான கட்டுப்பாட்டு அறை... பலரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டிய 
பொறுப்பில் உள்ளது. அங்கு பணத்தை சேமிக்கும் வேலையை செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

மீட்பு பணி தொடருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன்

ரம்பின் வேலை ஆட்களை குறைக்கும் நடவடிக்கையால்...
அமெரிக்காவில் பலர் கலக்கத்தில் உள்ளார்களாம்.

இந்த விமான விபத்து நடந்த போது... 
விமான கட்டுப் பாட்டு கோபுரத்தில்... இருவர் செய்யும் வேலையை, 
ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். 

விமான கட்டுப்பாட்டு அறை... பலரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டிய 
பொறுப்பில் உள்ளது. அங்கு பணத்தை சேமிக்கும் வேலையை செய்யலாமா?

கெலி வந்து இடம் வலம் என்று மாறிமாறி போய் விமானத்தில் முட்டியதைப் பார்த்தால் சந்தேகமாகவே இருக்கிறது.

எலானின் அறிவுரையில் பல வேலைத் திட்டங்கள் நடக்குது.

இருவரும் சேர்ந்து தளம்பப் போகிறார்கள் போல.

குடியேறிகளை நாடு கடத்துவதற்கு எதிராக பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்  @ரசோதரன் @நீர்வேலியான் இருவரும் களத்தில் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்களின் மக்களைப் போலவே தான், அண்ணா, இந்த மக்களும். ஒரு வாழ்வைத் தேடி ஓடி வந்தவர்கள். அதில் சிலர் சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்பவர்கள் ஆகவும் இருப்பார்கள் தான். எங்கள் மக்களில் சிலரும் அப்படி நடந்து கொண்டவர்கள் தானே............... அதற்காக எல்லோரையுமா பிடித்து அனுப்புவது.........................😌.

____________________________________

அந்த விமான விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. மிக அருகிலேயே எத்தனையோ தடவைகள் அதே இடத்தில் முன்னர் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. மிகவும் நெருக்கமான வான் மற்றும் பறக்கும் பிரதேசம் அது. அங்கு இராணுவ பயிற்சிப் பறப்புகள மிகவும் கவனமாக இருக்கப்பட வேண்டியவை. 200 அடிக்கு கீழே பறந்திருக்க வேண்டிய பயிற்சி உலங்கு வானூர்தி, 300 அடிகளுக்கு மேலே போய்விட்டது. இந்த மிகக் குறைந்த உயரத்தில், இவ்வளவு கட்டுப்பாடான பிரதேசத்தில், விமானிகளால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.....................

இராணுவ விமானங்களும், சாதாரண விமானங்களும் ஒரே அலைவரிசையில் தொடர்பு கொள்வதில்லை. ஒன்று VHF, மற்றையது UHF. இது எப்போதும், எங்கேயும் உள்ள நடைமுறைதான். ஆகவே அவர்கள் இருவரும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியவில்லை................ 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

விபரமான தகவல்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கெலி வந்து இடம் வலம் என்று மாறிமாறி போய் விமானத்தில் முட்டியதைப் பார்த்தால் சந்தேகமாகவே இருக்கிறது.

எலானின் அறிவுரையில் பல வேலைத் திட்டங்கள் நடக்குது.

இருவரும் சேர்ந்து தளம்பப் போகிறார்கள் போல.

குடியேறிகளை நாடு கடத்துவதற்கு எதிராக பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்  @ரசோதரன் @நீர்வேலியான் இருவரும் களத்தில் உள்ளார்கள்.

வாக்கு போட்டு தெரிவு செய்வது     பிறகு  ஆர்ப்பாட்டம் செய்வது 

 இது ஒரு பொழுதுபோக்கு தான்     🤣.   அக்கா கமலாக்கு போட்டு தெரிவு செய்திருக்கலாம் .......இல்லை இல்லை  ட்ரம்ப்  வந்தால் வரி குறையும் என்றார்கள் 

வரி குறைந்து விட்டதா.????   

எங்களுக்கு 23 -2-25 இல் தேர்தல்      நான் CDU  போடலாம் என்று இருக்கிறேன்    பிள்ளைகள் தான் சொன்னார்கள்   மற்றும்படி   ஜேர்மன் அரசியல்   எனக்கு அவ்வளவு தெரியாது    

ஜேர்மன் யாழ் கள உறுப்பினர்கள் யாருக்கு போடுவார்கள் என்பதும் தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்  @ரசோதரன் @நீர்வேலியான்  இருவரும் களத்தில் உள்ளார்கள்.

👍

தகவலுக்கு நன்றி விருப்பு அடையாளம் முடிவடைந்து விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

எங்களுக்கு 23 -2-25 இல் தேர்தல்      நான் CDU  போடலாம் என்று இருக்கிறேன்    பிள்ளைகள் தான் சொன்னார்கள்   மற்றும்படி   ஜேர்மன் அரசியல்   எனக்கு அவ்வளவு தெரியாது    

CDU யும்  AFD யும் தற்போது ஒரு பாதையில் தான் பயணிக்கப்போகின்றார்கள் போல் இருக்கின்றது. இவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும் குறைவில்லை.

எல்லாவற்றையும் விட சொந்த நாட்டில் பிரச்சனை என அகதியாக வந்து விட்டு.....வந்து தங்கிய இடத்தில் தங்கள் அஜாரக வேலைகளை செய்தால் யார்தான் கொதி நிலைக்கு வரமாட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன்

ரம்பின் வேலை ஆட்களை குறைக்கும் நடவடிக்கையால்...
அமெரிக்காவில் பலர் கலக்கத்தில் உள்ளார்களாம்.

இந்த விமான விபத்து நடந்த போது... 
விமான கட்டுப் பாட்டு கோபுரத்தில்... இருவர் செய்யும் வேலையை, 
ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். 

விமான கட்டுப்பாட்டு அறை... பலரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டிய 
பொறுப்பில் உள்ளது. அங்கு பணத்தை சேமிக்கும் வேலையை செய்யலாமா?

இப்ப துவங்கியிருப்பது வெறும் ட்ரைலர், மெயின் பிக்சர் இனித்தான் இருக்கு. வரும் நாலு வருடங்கள் எப்பிடிபோகபோகுதோ தெரியவில்லை. சிலர் மூளைக்கும் வாயிற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள், இவர் அந்த மாதிரி ஒரு கேஸ். தனது கம்பனியை நடத்துவதுபோல், வாறவன் போறவன் எல்லாரையும் மிரட்டி நாட்டை நிர்வாகிக்கலாம் என்று நினைக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

அந்த விமான விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. மிக அருகிலேயே எத்தனையோ தடவைகள் அதே இடத்தில் முன்னர் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. மிகவும் நெருக்கமான வான் மற்றும் பறக்கும் பிரதேசம் அது. அங்கு இராணுவ பயிற்சிப் பறப்புகள மிகவும் கவனமாக இருக்கப்பட வேண்டியவை. 200 அடிக்கு கீழே பறந்திருக்க வேண்டிய பயிற்சி உலங்கு வானூர்தி, 300 அடிகளுக்கு மேலே போய்விட்டது. இந்த மிகக் குறைந்த உயரத்தில், இவ்வளவு கட்டுப்பாடான பிரதேசத்தில், விமானிகளால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.....................

இராணுவ விமானங்களும், சாதாரண விமானங்களும் ஒரே அலைவரிசையில் தொடர்பு கொள்வதில்லை. ஒன்று VHF, மற்றையது UHF. இது எப்போதும், எங்கேயும் உள்ள நடைமுறைதான். ஆகவே அவர்கள் இருவரும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியவில்லை................ 

அண்மையில் திறந்த வெளியில் நிகழ்ந்த அவுஸ்ரேலிய தின நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட்டேன் (நிகழ்ச்சி இறுதியில் நிகழ்த்தும் வாணவேடிக்கைக்காக).

கடுமையான வெப்பம் பின்னர் சடுதியாக வெப்பம் குறைந்தது, ஆரம்ப பாடசாலையில் படிக்கும் எனது மகன் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார், மைதானத்தில் இருந்த கொடிகள் கிழக்கு மேற்காக பறந்தன ஆனால் மேகம் வடக்கு தெற்காக நகர்ந்தது அது ஏன் காற்றுக்கள் இரு வேறு திசைகளில் நகர்கிறது என (Windshear).

விமான தரையிறக்கம் என்பது இலகுவான விடயமல்ல என கூறுகிறார்கள், விமானத்தில் சில பாதுகாப்பு பொறிமுறைகள் தரையிறங்கும் போது செயற்பாட்டிற்கு வந்து விடும் அதுவே சில சந்தர்ப்பங்களில் பாதகமாக அமைகிறது.

காணொளி

பயணிகள் விமான நிலையத்தில் எதற்கு விமான படையினர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

CDU யும்  AFD யும் தற்போது ஒரு பாதையில் தான் பயணிக்கப்போகின்றார்கள் போல் இருக்கின்றது. இவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கும் குறைவில்லை.

எல்லாவற்றையும் விட சொந்த நாட்டில் பிரச்சனை என அகதியாக வந்து விட்டு.....வந்து தங்கிய இடத்தில் தங்கள் அஜாரக வேலைகளை செய்தால் யார்தான் கொதி நிலைக்கு வரமாட்டார்கள்?

ஆமாம் சரி தான்    உங்களுடைய வாக்கு     எந்த கட்சிக்கு  ????  

எந்த கட்சி ஆட்சி அமைக்கும்   ??   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

இப்ப துவங்கியிருப்பது வெறும் ட்ரைலர், மெயின் பிக்சர் இனித்தான் இருக்கு. வரும் நாலு வருடங்கள் எப்பிடிபோகபோகுதோ தெரியவில்லை. சிலர் மூளைக்கும் வாயிற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள், இவர் அந்த மாதிரி ஒரு கேஸ். தனது கம்பனியை நடத்துவதுபோல், வாறவன் போறவன் எல்லாரையும் மிரட்டி நாட்டை நிர்வாகிக்கலாம் என்று நினைக்கிறார். 

இவருக்கு வாக்கு போட்ட மக்களுக்கு இது அல்லது இவரைப் பற்றி முன்பே தெரியும் தானே ????   

அக்கா  கமலாவை   வீட்டில் இருத்தி.  விட்டார்கள்     

சோதிடம்.  சொல்கிறது ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சனிப்பெயர்ச்சி பணக்காரர்கள். ஆக்கும் என்று அதை தான்  டரம்ப்மும். சொல்கிறார்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இவருக்கு வாக்கு போட்ட மக்களுக்கு இது அல்லது இவரைப் பற்றி முன்பே தெரியும் தானே ????   

அக்கா  கமலாவை   வீட்டில் இருத்தி.  விட்டார்கள்     

சோதிடம்.  சொல்கிறது ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சனிப்பெயர்ச்சி பணக்காரர்கள். ஆக்கும் என்று அதை தான்  டரம்ப்மும். சொல்கிறார்  🤣

எனக்கென்னவோ சனியன் தலைக்குமேல் நின்று ஆடப்போவது போல் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நீர்வேலியான் said:

எனக்கென்னவோ சனியன் தலைக்குமேல் நின்று ஆடப்போவது போல் உள்ளது

யார்? அமெரிக்காமேல் நின்று ஆடும் டிரம்பைச் சொல்கிறீர்களா??😳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.