Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-426.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் இப்படி கூறியதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.

அதேநேரம் அவர், ஜெலென்ஸ்கியை “மிகவும் துணிச்சலானவர்” என்றும் அழைத்தார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்ப் இந்த விடயங்களை பேசினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர், மொஸ்கோவுடன் முதல் உயர்மட்ட அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி ட்ரம்ப் நிர்வாகம் அதன் மேற்கத்திய பங்காளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பின்னர் இந்த வார சந்திப்புகள் வந்துள்ளன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, போருக்கு ஜெலென்ஸ்கியைக் குற்றம் சாட்டியதுடன், முன்னதாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தவறியதற்காக அவரைத் திட்டினார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கும், உக்ரேன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்கான சில வகையான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவார் என்று நம்புகிறார்.

அதேநேரம் வெள்ளியன்று வொஷிங்டனுக்கான தனது விஜயத்தில், உக்ரேனின் அரிய பூமி கனிம வளங்களை அமெரிக்கா அணுகும் ஒப்பந்தத்தில் ஜெலென்ஸ்கி கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1423446

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு

February 28, 2025 12:13 pm

ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது
பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் வருகையும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார்.

அவரது இந்த விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஒரு விரிவான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று டிரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் எதிர்காலத்தில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அமெரிக்கா எதனையும் வழங்காது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/meeting-between-trump-and-chelensky-today/

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி

அமெரிக்க அதிபர் மற்றும் உக்கிரேன் அதிபருக்கிடையே மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, கனிம வள ஒப்பந்தம் கைசாத்திடபடவில்லை, இரு அதிபர்கள் இணைந்த பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடைபெறாமலேயே ஜெலன்ஸ்கியினை ட்ரம்ப் துரத்தி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போருக்கு முடிவு கட்டும் பேச்சுவார்த்தை உக்கிரேனுக்கு சாதகமாக இல்லாத நிலையிலேயே ஐரோப்பிய த்லைவர்கள் ட்ரம்புடனான சந்திப்பின் பின் உக்கிரேனுக்கு அமெரிக்க சார்பு நிலையினை ட்ரம்ப் எடுக்க கூடும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் உக்கிரேன் அதிபரை வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரான்ஸ் உக்கிரேன் கனிமங்களில் ஆர்வம் காட்டுவதாக செய்தி வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு

February 28, 2025 12:13 pm

ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது
பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் வருகையும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார்.

அவரது இந்த விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஒரு விரிவான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று டிரம்ப் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் எதிர்காலத்தில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அமெரிக்கா எதனையும் வழங்காது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/meeting-between-trump-and-chelensky-today/

இது வரை யாரும் கண்டிராத ஓவல் அலுவலக சந்திப்பாக இருந்தது😂.

கமெராக்களுக்கு முன்னிலையில் வைத்தே செலன்ஸ்கியை அவமானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, இடையே புகுந்த (புண்ணாக்குப் பயல்!) ஜேடி வான்ஸ், செலன்ஸ்கியைப் பார்த்து "நீங்கள் ராசதந்திர வழிகளில் தீர்த்திருக்க வேண்டும்" என்றார். செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அது ஜேடி க்கும், ட்ரம்புக்கும் சுட்டு விட்டது.

அடிப்படையில், ட்ரம்ப், ஜேடி வான்ஸ் போன்ற வலது சாரிகளின் ஒரு இயல்பு தங்கள் இமேஜ் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வின்மை - feeling insecure. உள்மனத்தில் இருக்கும் பாதுகாப்புணர்வின்மை தான் வெளியே பெண்கள், சிறு பான்மையினர், தங்களிடம் சார்ந்திருப்போர் நோக்கி அதட்டலாகவும், அதிகாரமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.

கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து. ட்ரம்பின் கனிம வளச் சுரண்டலில் இருந்து தற்போதைக்குஉக்ரைன் தப்பி விட்டது . அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி

நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.

நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை.

தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது.

உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

காணொளி

நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.

2 minutes ago, நிழலி said:

நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை.

தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது.

உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.

அடுத்த 4 வருடங்களுக்குள், ஒரு கட்டத்தில் புரின் ஓவல் அலுவலகம் வரக் கூடும். அப்போது எப்படி இந்த இருவரும் குனிந்து நின்று வழிவார்கள் என்பதையும் ஊடகங்கள் பதிவு செய்யும்.

அது தான் இன்னும் அருவருப்பான காட்சியாக இருக்குமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

காணொளி

நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.

மற்ற நாட்டவர்கள் இப்படியான ஒரு நாளை கரிநாள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.............. நாங்கள் ஒவ்வொரு நாளிலும் இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்த்து, ஒரு கரித்துண்டாகவே நிற்கின்றோம்......................☹️.

ஆனால் இப்படியானவைக்கும் இங்கு இந்த நாட்டில் வரவேற்புகள் இருக்கின்றன...............🫣.

1 hour ago, Justin said:

செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார்.

இன்று நடந்த நிகழ்வில் இருந்து இந்த வரி தான் வரலாற்றில் நிலைத்து நிற்கும் போல.............😜.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

மற்ற நாட்டவர்கள் இப்படியான ஒரு நாளை கரிநாள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.............. நாங்கள் ஒவ்வொரு நாளிலும் இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்த்து, ஒரு கரித்துண்டாகவே நிற்கின்றோம்......................☹️.

ஆனால் இப்படியானவைக்கும் இங்கு இந்த நாட்டில் வரவேற்புகள் இருக்கின்றன...............🫣.

இடுக்கண் வருங்கால் நகுக.😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

இடுக்கண் வருங்கால் நகுக.😄

🤣........

ஒரேடியாக 24 மணிநேரமும் நகுக வேண்டும்.................. அவ்வளவு இடுக்கண்கள் இவர்களால்.............

இவர்களைக் கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்குப் பதிலாக, என்னைக் கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள்.......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

எனது சதிக்கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சதி யை இழந்து, கோட்பாடு ஆகிறது🤣.

It’s all part of Putin’s plan.

செலன்ஸ்கி கொடுக்க முடியாததை டிரம்ப் கேட்பது, பின்னர் அமெரிக்காவுக்கு கூப்பிட்டு இப்படி சண்டை பிடிப்பது. அதை சாட்டி டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது.

இப்போ அமெரிக்காவில் டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுக்க தேவையான political cover ஐ இந்த சந்திப்பு மூலம் ஏற்படுத்தி கொண்டார் டிரெம்ப்.

வான்ஸ் சண்டையை கிளப்பியது வேணும் எண்டேதான். டிரம்பும் வான்சும் சொல்லி வைத்து செய்தது அது (coordinated attack ).

  • கருத்துக்கள உறவுகள்
BBC News
No image preview

Zelensky told to leave White House after clashing with Tr...

The US president calls his Ukrainian counterpart "disrespectful" and says "make a deal or we're out".

ட்ரம்பின் கருத்து அமெரிக்காவின் கருத்து. அமெரிக்க மக்கள் ட்ரம்பை தொற்கடித்தபின் மீண்டும் தெரிவு செய்திருக்கிறார்கள். ட்ரம்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கமலா வின் விஞ்ஞாபனத்தை விட அமெரிக்காவுக்க கூடுதல் அனுகூலமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.எந்த ஓரு நாட்டுக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கும் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கை மாறாது. அமெரிக்காவில் ட்ரம்ப் வெளியுறவு அதிகாரிகளை மீறி முடிவுகளை எடுக்கிறாரா?இல்லை உண்மையிலேயே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை அவர் சரியாகப் பின்பற்றுகிறாரா?பிறக்சிற்கு ட்ரம்ப் ஆதரவு புட்டின் ஆதரவு ஸ்ராமரும் ஆதரவு கூட்டிக்கழித்துப் பார்த்தால் தலைசுத்துது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் இன்று செலண்ஸ்கியின் வெள்ளை மாளிகை விஜயம், 1987 இல் தலைவரின் டெல்லி அசோகாஹோட்டல் விஜயம் போன்றது என எழுதினேன்.

தலைவரை மூடிய அறைக்குள் அதிகாரிகள் மிரட்டினர், செலன்ஸ்கியை ஓவல் ஆபீசில் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மிரட்டினர்.

செலன்ஸ்கி வான்ஸ் என்ன செய்ய முனைகிறார் என்பதை புரிந்து - தூண்டிலில் சிக்காமல் விட்டிருக்கலாம். வாய் இருப்பதால் கட்டாயம் கதைக்க வேண்டியதில்லை.

1 minute ago, புலவர் said:

அமெரிக்காவில் ட்ரம்ப் வெளியுறவு அதிகாரிகளை மீறி முடிவுகளை எடுக்கிறாரா?இல்லை உண்மையிலேயே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை அவர் சரியாகப் பின்பற்றுகிறாரா

ஆம்…இதுவரை இரு கட்சிகளும் கடைபிடித்த மாறா வெளியுறவு கொள்கையை டிரம் தூக்கி குப்பையில் போட்டு விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

செலன்ஸ்கி வான்ஸ் என்ன செய்ய முனைகிறார் என்பதை புரிந்து - தூண்டிலில் சிக்காமல் விட்டிருக்கலாம். வாய் இருப்பதால் கட்டாயம் கதைக்க வேண்டியதில்லை.

ஐரோப்பியர்கள் வாயால் மட்டும் உதவாமல் செயலாலும் உதவுவார்களா? ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் சமாளிக்கமுடியாவிட்டால், செலன்ஸ்கி பேசாமல் ஹங்கேரி, துருக்கியின் உதவியுடன் புட்டினோடு ஒரு டீல் பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஐரோப்பியர்கள் வாயால் மட்டும் உதவாமல் செயலாலும் உதவுவார்களா? ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் சமாளிக்கமுடியாவிட்டால், செலன்ஸ்கி பேசாமல் ஹங்கேரி, துருக்கியின் உதவியுடன் புட்டினோடு ஒரு டீல் பேசலாம்.

இதற்கு மேல் இராணுவ ரீதியாக உதவமாட்டார்கள் என நினைக்கிரேன்.

ஸ்டாமர் - டிரம்ப், செலன்ஸ்கி இடையே ஒற்றுமைக்கு முயல்வதாக தெரிகிறது.

ஹெங்கேரி இன்னொரு பெலரூஸ் - முழுவதுமாக புட்டின் காலில் விழ சொல்லுவார்கள்.

துருக்கிதான் இப்போதைக்கு உள்ளதில் நல்ல தீர்வு.

புட்டினுக்கும் துருக்கி எண்டால் பயம்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் தொடங்கிய போதே கூறியது தான். ரஸ்யாவை அடிக்க அமெரிக்கா தேடியவர்கள் யூக்ரேனியர்கள் என்பதை புரிய பல மொக்கு சாமிகளுக்கு பிடித்த ஆண்டு 3 வருடங்கள். தற்போது யூக்ரேன் இழந்தது தனது மக்கள், சொத்து, முக்கியமாக விலைமதிப்பற்ற நிலம்.

இன்று செலன்ஸ்கியை அவமதித்த அமெரிக்கா அழத்தான் தோன்றியது.

சுயநல பாஸ்ரட் அமெரிக்க அரசு சேகுவாராவில் தொடங்கி இன்று செலன்ஸ்கியில் நிற்கிறது.இன்னும் தொடரும்.உலகம் இவர்களை உணராத வரை முடிவு இவரை போலவே எல்லோருக்கும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை.

தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது.

உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.

இதை முதல் தரம் அமெரிக்க செய்தது போல் ஆச்சரியப்படுகிறீர்கள். வரலாறே காலை வாரியது தான். சேகுவாரா வரலாறை பாருங்கள்.

முழு நேற்றோ நாடுகளும் பொருளாதார தடையிலிருந்து அதி நவீன ஆயுதங்கள் பணம் என வழங்கியும் முடிவு???

இப்போ ரஸ்யாவுடன் டீலை பண்ண முதல் போர் தொடங்க முதல் ரஸ்யாவுடன் டீலை பண்ணுமாறு இதே யாழ்களத்தில் கூறியவர்கள் விரல் விட்டு எண்ண கூடியவர்கள் தான்.

6 hours ago, கிருபன் said:

ஐரோப்பியர்கள் வாயால் மட்டும் உதவாமல் செயலாலும் உதவுவார்களா? ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் சமாளிக்கமுடியாவிட்டால், செலன்ஸ்கி பேசாமல் ஹங்கேரி, துருக்கியின் உதவியுடன் புட்டினோடு ஒரு டீல் பேசலாம்.

அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி யூக்ரேனிடம் கொடுத்தவர்கள் நேட்டோ நாடுகள்.

துருக்கியை நம்புவதை விட ரஸ்யாவையே நம்பி விடலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

போர் தொடங்க முதல் ரஸ்யாவுடன் டீலை பண்ணுமாறு இதே யாழ்களத்தில் கூறியவர்கள் விரல் விட்டு எண்ண கூடியவர்கள் தான்.

6 hours ago, nunavilan said:

துருக்கியை நம்புவதை விட ரஸ்யாவையே நம்பி விடலாம்

டொனால்ட் ரம்பின் அருவருப்பான நடத்தையால் விளாடிமிர் பூடின் மகிழ்ந்திருப்பார்

யாழ் நுணாவிலானாலும் விளாடிமிர் பூடின் உறுதியாக மகிழ்ந்திருப்பார்

11 hours ago, nunavilan said:

இப்போ ரஸ்யாவுடன் டீலை பண்ண முதல் போர் தொடங்க முதல் ரஸ்யாவுடன் டீலை பண்ணுமாறு இதே யாழ்களத்தில் கூறியவர்கள் விரல் விட்டு எண்ண கூடியவர்கள் தான்.

நீங்கள் சொல்வது மிகச் சரி நுணா.

நாங்களும் அதே மாதிரி, சிங்கள பெளத்த இனவாத அரசுக்கு எதிராக போராடாமல், மாவட்ட சபையே போதும் என்று அன்றே காலில் வீழ்ந்து சரணாகதியாகி இருந்தால், அதாவது டீல் பேசி இருந்திருந்தால் பெருமளவான உயிரிழப்புகள், நிலப்பறிப்புகள், பொருளாதார இழப்புகளை தவிர்த்து இன்றைய நிலையினை அன்றே நாம் அடைந்து இருக்கலாம்.

தலைவர் தன்னையும் தன் மக்களையும் நம்பி ஏமாந்து போனார். செலன்ஸ்கி அமெரிக்காவையும், மேற்குலகையும் நம்பி ஏமாந்து போனார்.

பேசாமல் அன்றே காலில் வீழ்ந்து பாதங்களை நக்கிப் பிழைத்து இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

பாஸ்ரட் அமெரிக்க

🫢........

இதே வார்த்தையை நீங்கள் தமிழில் எழுதியிருந்தால், உங்களை கூண்டில் அடைத்திருப்பார்கள்.........🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மக்களையும் அமெரிகாவினையும் ஜெலென்ஸ்கி அந்த வெள்ளை மாளிகை சந்திப்பில் அவமானப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள், எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் கூறவும்.

ஆனால் கடவுள் புண்ணியத்தில் அமெரிக்காவிற்கிடையே கடல் உள்ளதால் தப்பி விட்டீர்கள் என சந்தடி சாக்கில் ஒரு நக்கல் அடிப்பார் அது ஒரு வேற லெவல், அது அமெரிக்க இராணுவத்தினரை அவமதித்தாக இருக்கலாம், ஆனால் அமெரிக்க மக்களையும் அமெரிக்காவினையும் அவமதித்ததாகத்தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூத்தாடி எங்களை எதிர்ப்பதா என நவீன கோலியாத்தும் அவனது

கையாட்களும் நினைத்திருக்கலாம்....

கூத்தாடி என்றாலும் உணர்வு உள்ள மனிதன் , மற்றும் ஒரு நாட்டின் தலைவன் என்பதே இப்போது நவீன கோலியாத்துக்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.

உக்கிரையின் யுத்தத்தில் யார் வென்றாலும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகுந்த லாபம் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2025 at 23:12, goshan_che said:

அமெரிக்காவில் ட்ரம்ப் வெளியுறவு அதிகாரிகளை மீறி முடிவுகளை எடுக்கிறாரா?இல்லை உண்மையிலேயே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை அவர் சரியாகப் பின்பற்றுகிறாரா

ஆம்…இதுவரை இரு கட்சிகளும் கடைபிடித்த மாறா வெளியுறவு கொள்கையை டிரம் தூக்கி குப்பையில் போட்டு விட்டார்.

அமெரிக்காவிற்கு உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உக்ரைனில் அமெரிக்காவின் அரசியல் , military tradition ஒத்துப்போகிறது என்றும் அமெரிக்கா உக்ரேனியர்களின் பக்கம் இருப்பதுதான் விலக்க முடியா முடிவு என்றும் பிரான்சு அதிபர் சொல்லியுள்ளார்.

On 28/2/2025 at 23:36, goshan_che said:

ஹெங்கேரி இன்னொரு பெலரூஸ் - முழுவதுமாக புட்டின் காலில் விழ சொல்லுவார்கள்.

இனி கங்கேரி பங்காளி ரம்பின் காலிலும் விழுத்து கும்பிடும் படி சொல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே செலென்ஸ்கி டொனால்ட் ரம்ப் அவர்களை சந்தித்து அடி வாங்காத குறையாக மூக்கேனப்பட்டு திரும்பி வந்தவர். இந்தமுறை என்ன தைரியத்திலை திருப்பியும் ரம்ப் அன்ட் கோ வை சந்திக்கப்போனார் எண்டு தெரியேல்லை? முந்தியே ரம்ப் ரஷ்ய ஆதரவாளர் எண்டு தெரிஞ்சும் போய் சாத்துப்படி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.அதை விட கொடுமை என்னெண்டால் பைடன் உக்ரேனுக்கு ஆயுதம் குடுக்கேக்க அமெரிக்கா தங்கப்பவுண் எண்டவர்கள் இப்ப தலைகீழாய் நிக்கினம்.🤣

அமெரிக்காவை யார் ஆட்சி செய்தாலும் ....அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவோ ஏனைய கண்டங்களோ தனித்து நின்று எதையும் செய்ய முடியாது. இதுதான் இன்றைய உலக யதார்த்தம்.அப்படி ஏதும் நடந்தால் அது உலக அதிசயம்.

பாவம் செலென்ஸ்கி மட்டுமல்ல நம்ம ஜேர்மனியும் தான்...😎

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதியும் உக்ரேன் ஜனாதிபதியின் சந்திப்பு பற்றி விலாவாரியாக ஆராயும் பேராசிரியர் அமிர்தலிங்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.