Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

@கிருபன் ஒரு சுருக்கம் தர முடியுமா. இறுதிப் போட்டியில் இந்த இந்த அணி வெல்லும் என்று கணித்தவர்கள் எத்தினை பேர். யார், எந்த அணி என்று தேவையில்லை. எத்தனை பேர் எந்த அணி என்று தெரிந்தால் பம்பலா இருக்கும்.

இப்பத்தான் பாதிக்கிணறு தாண்டி இருக்கு! எல்லாம் அடுத்த பாதியில் தலைகீழாக மாறும்! அதனால் நம்பிக்கையுடன் பொறுத்திருந்து உன்னிப்பாக அவதானிக்கவேண்டும்.

அணிகளின் தற்போதைய நிலைகள்:

large.IMG_0669.jpeg

தற்போது பட்டியல் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளில் ஒன்றை ஐபில் சம்பியனாகக் கணித்தவர்கள்!

DC - 0

PBKS - 0

GT - 0

RCB - 3

baboon-monkey.gif

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 34வது போட்டி மழை காரணமாகத் தாமதமாகியதால் 14 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் ரிம் டேவிட்டின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி இலக்கை அடையக்கூடிய ஓட்டவிகிதம் குறைவாக இருந்தமையால் ஆட்டமிழக்கால் 33 ஓட்டங்கள் எடுத்த நெஹால் வதேராவின் பங்களிப்புடன் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0668.jpeg

முதலாவது இடத்தை @நந்தன் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாதுகாப்பாகத் தக்கவைத்துள்ளார். @goshan_che மீண்டும் தனக்குப் பிரியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!

நாயகன் மீண்டும் வரான்…

எட்டுத்திக்கும் ஜெயம்தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

சென்னை அணி பவர் பிளேயின் முக்கியமான 6 வது ஓவரை அஸ்வின், ஓவர்டன் என ஏற்கன்வே பலதடவை அடிவாங்கும் பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் மீண்டும் கொடுப்பது (குறிப்பிட்ட ஓவரில் குறைந்தது 20 ஓட்டங்களை கொடுப்பார்கள்).

திரிப்பாதி போர்மில் இல்லை என்றாலும் விடாப்பிடியாக ஆட வைப்பது,

மத்திய பகுதியில் போர்மில் இல்லாத வீரர்களை தொடர்ந்து பேணும்போது, சென்னை அணியில் வான்ஸ் பேடி போல சிறந்த இளையோர் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்வது, இவர் பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யாவினை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என கூறுகிறார்கள் அவரை விட இவர் அடித்தாட கூடியவர் என கூறப்படுகிறது.

இதனை பார்த்தாலும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என புரிவதில்லைதான்.

ஆனால் அந்த லக்னோ போட்டியில் பந்த் போர்மில் இல்லாமல் இருந்தவர் ஓரளவாக சென்னை அணியுடன் விளையாடியமையால் அரை சதத்தினை எட்டியிருந்தார் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தனது போர்மிற்கு வந்து விடுவார்.

பந்த் மிக சிறப்பாக அணியினை வழிநடத்தி வந்திருந்தார் அந்த போட்டியில் குழப்பமாக முடிவுகள் எடுத்திருந்தார் என்பது உண்மைதான் ஆனால் அது மட்ச் பிக்சிங் என்பது கொஞ்சம் ஓவரான விடயம்.

2 hours ago, கந்தப்பு said:

இவர் முன்பு மும்பாய் டெல்லி போட்டி பற்றியும் எழுதியிருந்தார். சென்னை, மும்பாய் அணிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவ்வணிகள் வென்றாலும் தோன்றாலும் இவ்வணிகள் விளையாடும் போட்டிகளுக்கு இவ்வணிகளின் இரசிகர்கள் போட்டிகள் பார்க்க செல்வார்கள். நான் நினைக்கிறேன் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறார் என நினைக்கிறேன்.

Fixing என்று இல்லை. ஒரு வித, கொடுக்கல் வாங்கல் என்ற தொனியில்தான் எழுதியிருக்கிறார். ஊகம்தான்.

2 hours ago, கிருபன் said:

இப்பத்தான் பாதிக்கிணறு தாண்டி இருக்கு! எல்லாம் அடுத்த பாதியில் தலைகீழாக மாறும்! அதனால் நம்பிக்கையுடன் பொறுத்திருந்து உன்னிப்பாக அவதானிக்கவேண்டும்.

அணிகளின் தற்போதைய நிலைகள்:

large.IMG_0669.jpeg

தற்போது பட்டியல் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளில் ஒன்றை ஐபில் சம்பியனாகக் கணித்தவர்கள்!

DC - 0

PBKS - 0

GT - 0

RCB - 3

baboon-monkey.gif

ஆகா. அந்தக் குரங்குப் படமே மிச்சக் கதையைச் சொல்லுது.

சாராம்சத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

35th Match (D/N), Ahmedabad, April 19, 2025, Indian Premier League

PrevNext

Delhi Capitals FlagDelhi Capitals

203/8

Gujarat Titans FlagGujarat Titans

(19.2/20 ov, T:204) 204/3

GT won by 7 wickets (with 4 balls remaining)

INNINGS BREAK

36th Match (N), Jaipur, April 19, 2025, Indian Premier League

Lucknow Super Giants FlagLucknow Super Giants

(20 ov) 180/5

Rajasthan Royals FlagRajasthan Royals

LSG chose to bat.Stats view

Current RR: 9.00  • Last 5 ov (RR): 59/2 (11.80)

Win Probability: LSG 37.51% • RR 62.49%

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

நாளைக்கு சுவி ஐயா, கந்தப்பு, நான் மூன்று பேருக்கும் பொங்கு சனி அல்லது மங்கு சனி...............🤣.

மும்மூர்த்திகளும் சுகமா?

  • கருத்துக்கள உறவுகள்

பதின்நாலு வயது பாலகனின் அதிரடி ஆட்டம்!! 👏

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோவுக்கு லக் ........ ராஜஸ்தானை 2 ஓட்டங்களால் வென்று விட்டது ........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் எவரும் அரைச் சதங்கள் அடிக்காவிட்டாலும் வேகமாக அடித்தாடியதால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது. அவர்கள் அடித்த வேகத்திற்கு இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூட எடுத்திருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் இறுக்கமான இறுதி ஓவர்களினால் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை.

பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களான சாய் சுதர்சன், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஜொஸ் பட்லர் ஆகியோரின் மிகவேகமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை!


இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும் அப்துல் சமட்டின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் உள்நுழைந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வேகமான 74 ஓட்டங்களுடனும், ரியான் பராக்கின் 39 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோதும் 18 வது ஓவரில் இருவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தமையாலும், இறுதி ஓவரை ஆவேஷ் கான் ஹெட்மயரின் விக்கெட்டை எடுத்ததோடு ஓட்டங்களைக் கொடுக்காது மட்டுப்படுத்தியதாலும் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களையே எடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0671.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் டிராவிட் கை, கால் ஏலாவிட்டால் வீட்டில் இருப்பதற்கு ஏன்தான் மைதானத்திற்கு வருகிறாரோ தெரியவில்லை! கடைசி இரண்டு மட்ச்களை தோற்றதற்கு அவரே காரணம்! அன்று ராணாவை அனுப்பாமல் பராக்கை அனுப்பினார்! இன்று ஹெட்மயரை அனுப்புவதற்கு பதிலாக ஜுரேலை அனுப்பி தோற்றார்! சாம்சனும் ட்ராவிட்டும் இல்லாவிட்டால் ராஜஸ்தான் இலகுவாக வெல்லலாம்! ஏலத்திலும் பட்லரை எடுக்காமல் வாய்பார்த்தார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 20 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

PBKS எதிர் RCB

05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

  • ஈழப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • எப்போதும் தமிழன்

  • அகஸ்தியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • வசீ

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? spouting-whale_1f433.gif

 

backhand-index-pointing-down_1f447.png

38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

MI எதிர் CSK

12 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • கிருபன்

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? turtle_1f422.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மும்மூர்த்திகளும் சுகமா?

🤣........

நந்தன் தனி மூர்த்தி ஆகிவிட்டார் அண்ணா.......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ்

  • ஈழப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • எப்போதும் தமிழன்

  • அகஸ்தியன்

வழமையாக முட்டைக் கோப்பி குடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனார் வெற்றிகளைக் குவிக்கிறார்...மேலும்பல வெற்றிகளைக் காண வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣........

நந்தன் தனி மூர்த்தி ஆகிவிட்டார் அண்ணா.......

நலங்கிள்ளி என்று ஒரு மன்னன்..... 😂சங்க காலத்து மன்னன்.....

கோவூர் கிழார் என்ற புலவர்😂 அவனை மட்டுமே பின்தொடர்ந்து..... அவன் புகழ் பாடி வந்தார்..... ஒருமுறை மந்திரி ஒருவர் கேட்ட கேள்விக்கு..... கிழார் , நான் நலங்கிள்ளி கூட்டத்துக் கலைஞன்....... பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன்........... அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று மட்டுமே பதில் கூறினார்

அது போல இங்கே எங்கள் புலவர் முதல்வர் நந்தனாரையே பின்தொடர்வது அவருடைய புகழ் பாட என்பதே அன்றி வேறொன்றுமல்ல😇

வாழ்க முதல்வர் புகழ்

  • கருத்துக்கள உறவுகள்

அவிஸ்கான் 4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை எடுத்ததுடன் அதில் 6 பந்துகள் (ஒரு ஓவர்) டொட் பந்துகளை போட்டு போட்டியையே மாற்றி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

ராகுல் டிராவிட் கை, கால் ஏலாவிட்டால் வீட்டில் இருப்பதற்கு ஏன்தான் மைதானத்திற்கு வருகிறாரோ தெரியவில்லை! கடைசி இரண்டு மட்ச்களை தோற்றதற்கு அவரே காரணம்! அன்று ராணாவை அனுப்பாமல் பராக்கை அனுப்பினார்! இன்று ஹெட்மயரை அனுப்புவதற்கு பதிலாக ஜுரேலை அனுப்பி தோற்றார்! சாம்சனும் ட்ராவிட்டும் இல்லாவிட்டால் ராஜஸ்தான் இலகுவாக வெல்லலாம்! ஏலத்திலும் பட்லரை எடுக்காமல் வாய்பார்த்தார்கள்!

எப்பிடீங்க ராஜஸ்தான் தோத்தாங்கள். ஒன்று மட்டும் உண்மை. நமக்கு முட்டை தாறதுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ. செய்தாச்சு.

இன்று முழுதும் ஒன்றுமே பார்க்க முடியவில்லை. என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரியாது.

6 hours ago, ஈழப்பிரியன் said:

வழமையாக முட்டைக் கோப்பி குடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

நீங்க வேற. நம்மோட ராசி நல்ல ராசி. ஏன் இதுக்க சேர்ந்தீங்க

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

பதின்நாலு வயது பாலகனின் அதிரடி ஆட்டம்!! 👏

அந்தப் பையனை விளையாட வச்சிட்டாங்களா. வாவ்..... போட்டுப் பிளந்திருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

489913734_1058567219654148_8029620452516

இனிய காலை வணக்கம் . ........ ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

491751892_3843723395880822_6381453907911

அழுத பிள்ளை பாராட்டுப் பெறும் ......... ! 😂

Surya Kumar Yadav  ·

LSG Owner Sanjiv Goenka Meet To Emotional Vaibhav Suryavanshi & Appreciate His Batting After LSGvsRR .........!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மும்பாய் சென்னை போட்டியின் பின்னர் சென்னை விசிறிகளின் சார்பாக🤣.

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2025 at 14:47, செம்பாட்டான் said:

அவர்களுக்கு நடுவில் வரும் துடுப்பாட்டக்காரர்களாள்தான் பிரச்சினை. அதனை நிவர்த்தி செய்யத்தான் இவர் உதவுவார். அதனால்தான் சங்கரோ என்று நினைத்தேன்.

ஓவர்டன் அவர்களுக்குத் தேவை. பேபிய impact sub ஆகக் கொண்டு வரலாம். அப்படியாயின் டூபே தொடங்க வேணும். அப்படியாயின் சங்கர்தான் பலி. திருப்பாதி மூன்றாம் இடத்துக்குத் தேவை.

வெளியநாட்டு வீரர்களில் நூர் அகமது, பத்திரனா,ரச்சின் ஜடேஜா கட்டாயம் விளையாடுவார்கள். பேபி AB விளையாடவேண்டும் என்றால் 4 வது வெளிநாட்டு வீரர் ஓவர்டனுக்கு பதிலாகவே விளையாடுவார். ஆனால் ஓவர்டன் ஒரு பந்து வீச்சாளர்.

Baby AB யும் ஒன்று இரண்டு ஓவர்கள் போடக்கூடியவர். ரச்சின் ஜடேஜா, விஜய் சங்கர் போன்றவர்களும் 1,2 ஓவர்கள் போடக்கூடியவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இன்றைய மும்பாய் சென்னை போட்டியின் பின்னர் சென்னை விசிறிகளின் சார்பாக🤣.

காணொளி

இன்றைய போட்டியில் மும்பாய் வெல்லும் என எழுதியிருந்தாலும் நான் சென்னை அணிக்கே இன்று ஆதரவு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

நீங்க வேற. நம்மோட ராசி நல்ல ராசி. ஏன் இதுக்க சேர்ந்தீங்க

இது நானா அமைத்த கூட்டமல்ல

தானா சேர்ந்த கூட்டமுங்கோ.

9 hours ago, செம்பாட்டான் said:

எப்பிடீங்க ராஜஸ்தான் தோத்தாங்கள். ஒன்று மட்டும் உண்மை. நமக்கு முட்டை தாறதுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ. செய்தாச்சு.

இதைத் தான் இன்னமும் யோசிக்கிறேன்.

100 வீதம் இவர்கள் வெல்லுவார்கள் என்று

மும் மூர்த்திகளுக்கும் நாமம் வேறு போட்டாபிறகு கடைசி பந்து வீச்சில் தோற்கிறார்களே.

2 hours ago, கந்தப்பு said:

இன்றைய போட்டியில் மும்பாய் வெல்லும் என எழுதியிருந்தாலும் நான் சென்னை அணிக்கே இன்று ஆதரவு

நானும் தான் கந்தப்பு.

இவர்களை நம்பி பெரிய முதலை விட்டுட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

491751892_3843723395880822_6381453907911

அழுத பிள்ளை பாராட்டுப் பெறும் ......... ! 😂

Surya Kumar Yadav  ·

LSG Owner Sanjiv Goenka Meet To Emotional Vaibhav Suryavanshi & Appreciate His Batting After LSGvsRR .........!

அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்

இப்போ தான் அழுத பிள்ளை பாராட்டுப் பெறுவதைப் பார்க்கிறேன்.

புகைப்பட கலைஞர் சுவிக்கு பாராட்டுக்கள்.

2 hours ago, கந்தப்பு said:

இன்றைய போட்டியில் மும்பாய் வெல்லும் என எழுதியிருந்தாலும் நான் சென்னை அணிக்கே இன்று ஆதரவு

கந்தப்பு இன்றைய போட்டியின் போது தல ஓய்வை அறிவிக்கப் போகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தப்பு இன்றைய போட்டியின் போது தல ஓய்வை அறிவிக்கப் போகிறாரா?

நிச்சியமாக இல்லை

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.