Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.......

ஆகா சாப்பாடு மட்டுமல்ல

சோப்பு போட்டு குளிக்க வார்த்தும் விடுவார்கள்.

  • Replies 3.3k
  • Views 94.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

எல்லாம் தமிழ் கடவுள் குமாரசாமி கையிலத்தான் இருக்கு 🤣.

உஷ்….🤫🤫🤫

அவரின் பதிவத்தான் கொப்பி அடிச்சு, சில புதிய அப்கிரேட்டுடன் இறக்கி விட்டுள்ளேன்🤣.

vadivelu-memes-vadivelu-gif.gif

ஏனப்பா வேற ஆரும் கிடைக்கேல்லையே?

நான் மற்றப்பக்கம் பார்க்க......நீங்கள் இந்தப்பக்கம் பார்க்க🤣

mr-bean.gif

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரசோதரன் said:

🤣...........

ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.................😜.

போன வருடம் வாலிபாலில் இடது முழங்கால் சில்லு வெடித்தது. எக்ஸ்ரே எடுத்த போது, செலவு ஒன்று தான் வலதுகாலையும் எடுப்போம் என்று சொன்னார்கள். சரி என்று நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தபடியே மெதுவாக தலையை ஆட்டினேன்.

இடக்கால் வெடிப்பை உறுதி செய்த மருத்துவர், வலக்கால் எப்படி இருக்கிக்கின்றது என்று பார்த்தார்........ வலக்கால் சில்லு ஏற்கனவே வெடித்து, ஆனால் இப்ப ஒட்டியிருக்கின்றது என்று சொன்னார்.......🫢.

அன்று வீட்டில் என்னை மிதிக்காமல் விட்டதே பெரிய விசயம்.........🤣.

உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ குரு.......................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ குரு.......................

ஆஆஆ அதெல்லாம் அவருடைய மனைவி பார்த்துக் கொள்ளுவா.

file-KupSNBtQ7xb2JCpzMUTRoW?se=2025-03-2

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

vadivelu-memes-vadivelu-gif.gif

ஏனப்பா வேற ஆரும் கிடைக்கேல்லையே?

நான் மற்றப்பக்கம் பார்க்க......நீங்கள் இந்தப்பக்கம் பார்க்க🤣

mr-bean.gif

இதில யாரை கொப்பி அடித்தால் நல்லம் என யோசிக்க கூட நேரம் இல்லை அண்ணை - டக்கெண்டு பாத்தான் - நீங்கள் எப்படியும் ஒரு திறமான இடத்தை, தேர்ந்து, ஆராய்ந்துதான் சரக்கை இறக்கி இருப்பியள் - அப்ப நானும் அதே ஓடரை போட்டு விட்டேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

KKR க‌ப்ட‌ன் ர‌க‌னா 😁...................

ப‌ந்தை வீன் அடிக்கும் வீர‌ர்.......................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இதில யாரை கொப்பி அடித்தால் நல்லம் என யோசிக்க கூட நேரம் இல்லை அண்ணை - டக்கெண்டு பாத்தான் - நீங்கள் எப்படியும் ஒரு திறமான இடத்தை, தேர்ந்து, ஆராய்ந்துதான் சரக்கை இறக்கி இருப்பியள் - அப்ப நானும் அதே ஓடரை போட்டு விட்டேன்🤣.

giphy.gif?cid=6c09b952qp1r5s0zcrz8e28cx6

நல்லகாலம் எனக்கு பிரக்கடிக்கேல்லை 😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதில யாரை கொப்பி அடித்தால் நல்லம் என யோசிக்க கூட நேரம் இல்லை அண்ணை - டக்கெண்டு பாத்தான் - நீங்கள் எப்படியும் ஒரு திறமான இடத்தை, தேர்ந்து, ஆராய்ந்துதான் சரக்கை இறக்கி இருப்பியள் - அப்ப நானும் அதே ஓடரை போட்டு விட்டேன்🤣.

என்னையா இது அர்ச்சுனா எம்பி அவசரத்தில் தேர்தல் விண்ணப்பங்களை நிரப்பி முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி தங்கம் கையெழுத்துப் போடாமல் விண்ணப்பம் கொடுத்த் கதை மாதிரி இருக்கு. நாமளும்தான் கொப்பி அடிச்சம்.குசா மப்பில செலக்ட் பண்ணிய முடிவுகனள கொப்பி அடிச்சு விட்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

முதல் qualifier இல் வெற்றிபெறும் அணி நேரடியாக பைனலுக்கு போய்விடும். அதே அணி இரண்டாவது qualifier இல் வெல்லமுடியாது!! இரண்டிற்கும் நீங்கள் SRH என்று தெரிவுசெய்திருக்கிறீர்கள்!! அதனால்தான் மாற்ற விரும்பினால் மாற்றும்படி சொன்னேன்!

அகஸ்தியன் , கேள்விகள் 71 , 72 இற்கான விடைகளை சரிபார்க்கவும்!!

தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Ahasthiyan said:

தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.

திருத்திப் போடுங்க கிருபன் ஏற்றுக் கொள்ளுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்

நம்ம கமிந்து மென்டிஷ் பயிற்சிப் போட்டிகளில் கலக்கிறாராம்.

ஹர்டிக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாடத் தடை. சென்ற வருட ஜபில்லில், மும்பாய் இந்தியனின் பந்து வீச்சு விகிதம் குறைவானதால், தலைவரான பாண்டியா தடைசெய்யப் பட்டுள்ளார்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

என்னையா இது அர்ச்சுனா எம்பி அவசரத்தில் தேர்தல் விண்ணப்பங்களை நிரப்பி முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி தங்கம் கையெழுத்துப் போடாமல் விண்ணப்பம் கொடுத்த் கதை மாதிரி இருக்கு. நாமளும்தான் கொப்பி அடிச்சம்.குசா மப்பில செலக்ட் பண்ணிய முடிவுகனள கொப்பி அடிச்சு விட்டிருக்கிறீர்கள்.

அப்ப என்ன, கோசானுக்கு இம்முறை கோவிந்தாவா. நாமம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🤣...........

ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.................😜.

போன வருடம் வாலிபாலில் இடது முழங்கால் சில்லு வெடித்தது. எக்ஸ்ரே எடுத்த போது, செலவு ஒன்று தான் வலதுகாலையும் எடுப்போம் என்று சொன்னார்கள். சரி என்று நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தபடியே மெதுவாக தலையை ஆட்டினேன்.

இடக்கால் வெடிப்பை உறுதி செய்த மருத்துவர், வலக்கால் எப்படி இருக்கிக்கின்றது என்று பார்த்தார்........ வலக்கால் சில்லு ஏற்கனவே வெடித்து, ஆனால் இப்ப ஒட்டியிருக்கின்றது என்று சொன்னார்.......🫢.

அன்று வீட்டில் என்னை மிதிக்காமல் விட்டதே பெரிய விசயம்.........🤣.

அப்ப கனடா வாலிபால் போட்டிக்கு யூலையில போறீங்கள்?

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🤣...........

ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.................😜.

போன வருடம் வாலிபாலில் இடது முழங்கால் சில்லு வெடித்தது. எக்ஸ்ரே எடுத்த போது, செலவு ஒன்று தான் வலதுகாலையும் எடுப்போம் என்று சொன்னார்கள். சரி என்று நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தபடியே மெதுவாக தலையை ஆட்டினேன்.

இடக்கால் வெடிப்பை உறுதி செய்த மருத்துவர், வலக்கால் எப்படி இருக்கிக்கின்றது என்று பார்த்தார்........ வலக்கால் சில்லு ஏற்கனவே வெடித்து, ஆனால் இப்ப ஒட்டியிருக்கின்றது என்று சொன்னார்.......🫢.

அன்று வீட்டில் என்னை மிதிக்காமல் விட்டதே பெரிய விசயம்.........

அது சரி ரசோ சார்....உங்கடை வீட்டிலை என்ன விளையாட்டு விளையாடுறியள்..இரண்டு கை மணிக்கட்டிலை உடையுது...இரண்டு முழங்கால் சில்லுவெடிக்குது.....என்னதன் நடக்குது உங்கை...😆...பிரியன் சார் கிட்டத்தானே இருக்கிறியள்.. ஒருக்கா எட்டிப்பாருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2025 at 03:30, கிருபன் said:

இன்னும் வந்து சேரவில்லை! புள்ளிகள் திங்கள்/செவ்வாய் மட்டில்தான் வரும்

முதல் போட்டி நடக்குதோ தெரியாது. கொல்கத்தாவில் நல்ல மழை பெய்யும் என்பதினால் போட்டி சிலவேளை நடக்கமால் போய்விடும். உங்களுக்கும் புள்ளிகள் வழங்க தேவை வராது

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2025 at 08:47, வீரப் பையன்26 said:

எங்கை cricket வ‌ர்னையாள‌ர் @vasee அண்ணாவை காணும் , ஜ‌பிஎல் குப்பைய‌ கொட்ட‌னும் 😁

ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் ப‌ல‌ நாட்டு வீர‌ர்க‌ளை ப‌ற்றி மைதான‌த்தை ப‌ற்றி குப்பை கொட்டி விட்டோம்

ப‌ல‌ உற‌வுக‌ள் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்திய‌ ந‌ம்பி க‌ள‌த்தில் குதிச்சு இருக்கின‌ம்

வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி எங்க‌ளை க‌ரை சேர்ப்பாரா லொள்...................

On 20/3/2025 at 16:56, செம்பாட்டான் said:

வசி வருவார். அவர் வந்து மணிக்கடைச் சுத்த ரசோதரன் தடுத்து ஆட, கோசான் துள்ளிப் பிடிக்க, ஈழப்பிரியன் கமட்டுக்க சிரிக்க, கந்தப்பு அவரோட உரச, எல்லாம் இனிதே நடக்கும்.

நாம குப்பையைக் கொட்டுவம்.

விடுமுறையில்தான் நல்லா நேரம். ஒரு தட்டுத் தட்டி விடுங்க. ஒன்றுமே தெரியாது என்று சாம்பியன் கிண்ணத்தில போட்டுத் தாக்கினீங்களே.

வாங்க சீக்கிரமா.

எனக்கும் ஐ பி எல் தூரம்தான்,

ஆனால் சும்மா எதனையாவது கிறுக்கி விட்டு பொழுதை போக்கலாம் என இறங்கியுள்ளேன் (அனைத்து போட்டியிலும் அதே நிலைதான்).

நான் வெளிநாடு வந்த ஆரம்பத்தில் எனது ஆங்கிலம் மிக மோசம், நான் தங்கியிருந்த வீட்டில் என்னுடன் மற்றும் இருவர் இருந்தார்கள் அவர்கள் நான் வருவதற்கு முன்னரே வந்திருந்தார்கள்.

அதில் ஒருவருக்கு என்னைப்போலவே ஆங்கிலம் மோசம், மற்றவர்தான் எனக்கு ஆரம்பத்தில் மொழி பெயர்பாளர், ஆனால் ஆங்கிலத்தினை எழுத்துக்கூட்டி வாசித்து அறியும் அளவு சிறிதளவு இருந்தது.

அதனால் எனது குடியேற்ற விண்ணப்பங்களை நானே நிரப்புவதுண்டு, அதில் என்னை பற்றிய கேள்விக்கு பதில் அழிப்பதில் சிரமம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை, ஆனால் எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தனது விண்ணப்பங்களை வேறு ஒருவரிடம் கொண்டு சென்று நிரப்புவார்.

அவரை அனைவரும் மதிக்கும் நிலையில் இருப்பார், அவரது குடும்பமும் அப்போது வந்திருக்கவில்லை அதனால் மற்ற இளைய எனது நண்பர்களுடன் இருந்தார்.

எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தன்னுடன் என்னையும் கூட்டி போவார் (என்னிடம் கார் இல்லை), அவர் தனது விண்ணப்பத்தினை நிரப்ப போய்விடுவார் நான் அந்த வீட்டில் இருக்கும் மற்ற நணப்ர்களுடன் அரட்டை அடிக்க போய்விடுவேன் (தப்பி தவறி கூட அங்கிளை பார்ப்பதில்லை) , எனது நண்பர் ஒரு நாள் கூறினார் அங்கிள் (அவரை அப்படித்தான் அழைப்பது) உன்னை ஒரு மாதிரியோ என தன்னிடம் கேட்டதாக கூறினார்.

என்னைப்பற்றிய கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை எந்த கூறுவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை என நினைத்து அங்கிளிடம் உதவி கேளாதது பிரச்சினையாகிவிட்டது, இந்த போட்டிகளில் கூட எனக்கு தெரிந்ததை கிறுக்குவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை ஆனால் இது ஒரு கலகலப்பான திரி என்பதால் தொடர்ந்திருப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.

திருத்தமுடியாது. ஆனால் மாற்ற விரும்பினால் புதிய பதில்களை தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

அது சரி ரசோ சார்....உங்கடை வீட்டிலை என்ன விளையாட்டு விளையாடுறியள்..இரண்டு கை மணிக்கட்டிலை உடையுது...இரண்டு முழங்கால் சில்லுவெடிக்குது.....என்னதன் நடக்குது உங்கை...😆...பிரியன் சார் கிட்டத்தானே இருக்கிறியள்.. ஒருக்கா எட்டிப்பாருங்கோ..

தம்பீ 3000 மைல்கள்.

6 மணிநேரம் விமானபயணம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா said:

அப்ப கனடா வாலிபால் போட்டிக்கு யூலையில போறீங்கள்?

போகின்றோம் பிரபா................ நீங்களும் அங்கு வருகின்றீர்களா.......

13 hours ago, alvayan said:

அது சரி ரசோ சார்....உங்கடை வீட்டிலை என்ன விளையாட்டு விளையாடுறியள்..இரண்டு கை மணிக்கட்டிலை உடையுது...இரண்டு முழங்கால் சில்லுவெடிக்குது.....என்னதன் நடக்குது உங்கை...😆...பிரியன் சார் கிட்டத்தானே இருக்கிறியள்.. ஒருக்கா எட்டிப்பாருங்கோ..

வீடுகளில் எல்லோரும் எலிகள் தானே, அல்வாயன்.............. வெளியில் தான் எலிஃபண்ட்......🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பீ 3000 மைல்கள்.

6 மணிநேரம் விமானபயணம்.

இரண்டுபேரும் கதைக்கிற கதையைப்பார்த்தல் ..ஒருவேலிதான் எல்லைமாதிரிக்கிடக்கு..

57 minutes ago, ரசோதரன் said:

போகின்றோம் பிரபா................ நீங்களும் அங்கு வருகின்றீர்களா.......

வீடுகளில் எல்லோரும் எலிகள் தானே, அல்வாயன்.............. வெளியில் தான் எலிஃபண்ட்......🤣.

அட..இங்கைபார்டா ரசோவை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

போகின்றோம் பிரபா................ நீங்களும் அங்கு வருகின்றீர்களா.......

நான் அதற்கு அடுத்த கிழமை கல்யாண வீடொன்றிற்கு கட்டாயம் போகவேணும், அதனால் வாலிபாலுக்கு போகமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா said:

நான் அதற்கு அடுத்த கிழமை கல்யாண வீடொன்றிற்கு கட்டாயம் போகவேணும், அதனால் வாலிபாலுக்கு போகமுடியாது.

👍............

நாங்கள் இங்கு அமெரிக்க மேற்கு கரையில் வருடாவருடம் ஒரு போட்டியும் நடந்துகின்றோம். இருபது வருடங்களாக போய்க் கொண்டிருகின்றது. அமெரிக்க மேற்கு கரையின் பல இடங்களிலிருந்தும் நம்மவர்கள் வருவார்கள். எப்போதும் September Labor Weekend இல் தான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த தடவை லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் இது நடக்கப் போகின்றது..... நீர்வேலியானும், நானும் நிற்போம். முன்னர் ஒரு தடவை ஈழப்பிரியன் அண்ணா வந்திருக்கின்றார். நீங்கள் முடிந்தால் வாருங்கள்..................

  • கருத்துக்கள உறவுகள்

ஐ பி எல் போட்டிகளில் 12 நபர்கள் விளையாடலாம் (பொதுவாக கிரிக்கெட்டில் 11 நபர் விளையாடும் ஆட்டம்).

இந்த பன்னிரண்டாம் ஆட்டக்காரரை (Impact player) இன்னொரு வீரருக்கு பதிலாக பயன்படுத்துவார்கள்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான நூர் அகமடினை இந்த ஆண்டு வாங்கியுள்ளார்கள், அவரை பந்து வீசுவதற்கு மட்டும் பயன்படுத்தி அவருக்கு பதிலாக வேறு ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை 12 ஆவது வீரராக தெரிவு செய்யலாம்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான இலங்கை பந்து வீச்சாளர் மதீச பத்திரன தனது பந்து வீச்சு பாணியினை மாற்றியுள்ளார் எனவும் (தற்போது லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணி) அதனால் அவர் முன்னர் போல் (முன்னர் லசித்தினை விட கிடையாக வீசுவார்) அவரது பந்து வீச்சு இல்லை என கூறப்படுகிறது.

அவுஸ்ரேலிய வேக பந்து வீச்சாளரரான நாதன் எலிஸ் சென்னை அணியில் உள்ளார், இறுதி ஓவர்களில் மிக சிறப்பாக பந்து வீச கூடிய எலிஸை சென்னை பயன்படுத்துமா என தெரியவில்லை.

மொத்தமாக 14 போட்டிகள் கொண்ட ஐ பி எல் போட்டிகளில் தெரிவு போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தமது மைதானத்தில் 7 போட்டிகள் விளையாடுகின்றன, இதில் 5 போடிகளையும் தமது மைதானத்திற்கு வெளியே 3 போட்டிகளையும் வென்றால் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகலாம்.

சென்னை ஆடுகளம் மெதுவாக இரட்டை தன்மை கொண்ட ஆடுகளமாக கடந்தகாலத்தில் இருந்துள்ளது, கடந்த ஆண்டில் வேக பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்கள், ஆனால் இந்த ஆண்டு ஜடேயா, அஸ்வின், நூர் அகமட் என 3 முண்ணனி சுழல் பந்து வீச்சாளர்களை சென்னை அணி கொண்டுள்ளது.

நூர் அகமட், குல்தீப் போல இடது கை மணிக்கட்டினால் சுழல் பந்து வீசும் பந்து வீச்சாளர்.

சென்னை அணியே குறைந்த ஓட்டங்களை ஆரம்ப ஓவர்களில் பெற்ற அணியாக உள்ளது, ஆனால் இறுதி ஓவர்களில் மிக அதிக ஓட்டங்களை பெற்ற அணியாகவும் உள்ளது.

ஒப்பீட்டளவில் அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணியாக சென்னை அணி இல்லாது இருப்பினும் எப்போதும் போல அரை இறுதிப்போட்டிக்கு இம்முறையும் தெரிவாகுமா(சென்னை வெல்லும் என கணித்துள்ளேன்)?

1 hour ago, ரசோதரன் said:

👍............

நாங்கள் இங்கு அமெரிக்க மேற்கு கரையில் வருடாவருடம் ஒரு போட்டியும் நடந்துகின்றோம். இருபது வருடங்களாக போய்க் கொண்டிருகின்றது. அமெரிக்க மேற்கு கரையின் பல இடங்களிலிருந்தும் நம்மவர்கள் வருவார்கள். எப்போதும் September Labor Weekend இல் தான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த தடவை லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் இது நடக்கப் போகின்றது..... நீர்வேலியானும், நானும் நிற்போம். முன்னர் ஒரு தடவை ஈழப்பிரியன் அண்ணா வந்திருக்கின்றார். நீங்கள் முடிந்தால் வாருங்கள்..................

நீங்கள் ஒரு சகலாகலாவல்லவனாக இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

வீடுகளில் எல்லோரும் எலிகள் தானே, அல்வாயன்.............. வெளியில் தான் எலிஃபண்ட்......🤣.

நீங்கள் எப்பிடி இருப்பீர்கள் என ஒரு அனுமானம் இருந்தது, இப்படி எலிஃபன்ட் என கூறி தலைகீழாக மாற்றிவிட்டீர்கள்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 போட்டிகள் நாளை ஆரம்பிக்கவுள்ளது.

நாளை சனி (22 மார்ச்) முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

KKR எதிர் RCB

இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.