Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்

புலவர் ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் நடக்குதில்லை 🤣

முதல் நாள் முதல்வர் அமெரிக்கன் அய்யா மெல்ல மெல்ல நகர்வதைப்பார்த்தால் அகஸ்தியனுக்கு அடுத்த சுமைதாங்கி அவராகத் தான் இருப்பார்😂

நன்றி வாத்தியார்

Just now, நந்தன் said:

நன்றி வாத்தியார்

ரெண்டு பேருமே தீவான் தான்

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன், சூர்யகுமார் யாதவின் அதிரடிப் புயல்வேக அரைச் சதங்களுடனும், நமன் டீர், கோர்பின் பொஷ் ஆகியோரின் கமியோ விளாசல்களுடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், கேஎல் ராஹுல் வேகமாக அடித்தாடத் திணறியதாலும் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் விராட் கோலியின் நிதானமான அரைச் சதமும், க்ருனல் பாண்டியாவில் அதிரடியான அரைச் சதமும் 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0734.jpeg

இன்றைக்கு மோசமான நாள். இரண்டு முட்டைகள் முதன் முதலாக. கீழே போகும் வேகம் வேகமாயிருக்கு.

பராபரமே. இப்பிடி நாமம் இழுக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை எங்கடை கோஷான் சே எங்கே எண்டு தேடிப்பாத்தா 😅

என்ரை காணிக்கு ரெண்டு காணி தள்ளிப் பின்னால நிக்கிறார் 😂

மனுஷன் ஒரு நோக்கத்தோடைதான் வந்து கொண்டிருக்கிறார் 😀

சில வேலை முதல்வர் நந்தனாரை துரத்த வெளிக்கிட்டாரோ 😛

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இதுக்குள்ளை எங்கடை கோஷான் சே எங்கே எண்டு தேடிப்பாத்தா

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

@goshan_che எனக்கு மேலே நிற்கிறார்.

ரொம்பவும் ஆச்சரியம்.

கொடுப்புக்குள் சிரிக்கிறது தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் அணி இன்றைய குஜராத் அணியுடனான போட்டியில் துருவ் ஜுரலை ஏன் 3 ஆவதாக களமிறக்கக்கூடாது?

அவசரப்பட்டு சாம்சனை காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் போட்டிக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இல்லை, சென்னை அணி போல ராஜஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது.

ஜுரலினினை ஒரு போட்டியில் உக்கார வைப்பதற்கு பதிலாக 3 ஆவது இடத்தில் களமிறக்கினால் அவர் தனக்கு தேவையான நேரத்தினை எடுத்துக்கொள்ள 3 ஆவது இடம் நல்ல பொருத்தமான இடம்.

சாம்சனும் அடிக்கடி காயத்தினால் உள்ளே வெளியே என இருக்கிறார், ஜுரலுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை ஏன் குடுக்கக்கூடாது, இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்கும்(சாம்சனுக்கு மாற்றீடு), அத்துடன் எமக்கும் 2 புள்ளிகள் கிடைக்கும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

ஆனால் எனக்கு 2 புள்ளிகள் கிடைக்காதே 😀. நான் குஜராத்தையல்லோ தெரிவு செய்தனான்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதாயில்லை. யாராவது கலைச்சு எட்டிபிடியுங்கோ 😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

ஆனால் எனக்கு 2 புள்ளிகள் கிடைக்காதே 😀. நான் குஜராத்தையல்லோ தெரிவு செய்தனான்.

நானும் குஜராத்தான், ஜுரல் 3 ஆவதாக வந்தால் அப்படி ஒரு வேலை செய்துவிடுவார் எனும் நம்பிக்கைதான்,🤣

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் வெளி நாடு போக அவரின் காணியை நான் பிடிப்போம் என்டால் ஒருத்தர் போட்டிக்கு நிக்கிறார்.☹️😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, செம்பாட்டான் said:

இன்றைக்கு மோசமான நாள். இரண்டு முட்டைகள் முதன் முதலாக. கீழே போகும் வேகம் வேகமாயிருக்கு.

பராபரமே. இப்பிடி நாமம் இழுக்கக் கூடாது.

சரி . ...... சரி .....நாமம்தான் என்று முடிவெடுத்திட்டியள் ........ அதிலும் ஒரு சிக்கல் .....நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா ....... வடகலை என்றால் மீண்டும் மேலே போக வாய்ப்பிருக்கு ...... தென்கலையென்றால் வாய்ப்பில்லை ராஜா ..... கோவிந்தா கோவிந்தாதான் .......... சீக்கிரம் முடிவெடுங்கோ . ....... ! 😂

images?q=tbn:ANd9GcT35-VfVQER0XjNlBIG1Z3

மேலே உள்ளது வடகலை . .......!

கீழே உள்ளது தென்கலை . .......!

ஏதோ என்னால் முடிஞ்ச உதவி . ..... ஆனால் நான் உங்களைத் தாண்டிப் போக வழி விடணும் . ........ கடைசி நாலைந்து முறை ஒரே முட்டைதான் .......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

493289402_3956017781306854_1610042209423

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் ........... மிக மிக மதிப்பான ஒரு காலை ........... ! 🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

ஆனால் எனக்கு 2 புள்ளிகள் கிடைக்காதே 😀. நான் குஜராத்தையல்லோ தெரிவு செய்தனான்.

எனது $1 KAYO சந்தா முடிந்துவிட்டது, இன்றைய போட்டியில் ஜுரலின் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளது, நிங்கள் எதில் ஐ பி எல் பார்க்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

Pitch and conditions

Four of the seven games in Jaipur have been won by the chasing side since last year, with the average first innings score being 184. Day temperatures have crossed 40 degrees celsius; while the evenings will be a tad cooler, there's no escaping the oppressive heat that will take a toll on the players' fitness.

180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி ஈட்டலாம் என்பது கிரிக் இன்போவின் ஆடுகள அறிக்கை கூறுகிறது.

ராஜஸ்தான் அணியின் மத்திய துடுப்பாட்ட பகுதி கடந்த போட்டிகளை மிக சாதகமான நிலையில் இருந்து அதனை தோல்விக்கு எடுத்து சென்றுள்ளது.

ராஜஸ்தான் அணியின் பராக், ஜுரல், கெட்மெயர் இந்த மூவரும் அந்த அணியின் துடுப்பாட்ட மத்திய பிரிவில் மிக சிரமத்துக்குள்ளாகின்றனர் என கிரிக் இன்போ தளம் கூறுகிறது.

இந்த மூவரையும் ராஜஸ்தான் துடுப்பாட்ட வரிசையில் எங்கே கொண்டு போய் மறைத்து வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது மாற்றுவழிகள் செய்யலாமா என யாழ்கள போட்டியாளர்களிடம் நகைசுவை ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெறும் கல கலப்பிற்கான விடயம் அதனால் யாருடைய கருத்து மிக சிறப்பாக உள்ளதென பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் அணியில் பல இடது கை ஆட்டக்காரர்கள் விளையாடுவதால் வோசிங்கடன் சுந்தரும் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, சுழல் பந்துவீச்சாளர்களுக்கெதிராக மிக குறைந்த ஓட்டவிகிதங்களை கொண்ட வீரராக ஜுரல் உள்ளார் என கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, vasee said:

எனது $1 KAYO சந்தா முடிந்துவிட்டது, இன்றைய போட்டியில் ஜுரலின் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளது, நிங்கள் எதில் ஐ பி எல் பார்க்கிறீர்கள்?

https://mob.touchcric.com/

https://crichd.tv/sky-sports-cricket-live-stream-me-1

கைபேசியைவிட்டு கணனியில் பார்க்கவும்.

6 hours ago, சுவைப்பிரியன் said:

கோசான் வெளி நாடு போக அவரின் காணியை நான் பிடிப்போம் என்டால் ஒருத்தர் போட்டிக்கு நிக்கிறார்.☹️😀

தம்பி நான் யன்னலால ஏற்கனவே துண்டைப் போட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது நான் 16 ஆவது இடத்திலா😱.

இதன்பிறகாவது ஐபிஎல் பூராவும் மேட்ச் பிக்சிங் என்பதை நம்புங்கப்பா🤣.

அப்பவே சாத்திரக்காரன் சொன்னவர் - பத்தில வியாழன் பதிய விட்டு கிளப்புமாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சரி . ...... சரி .....நாமம்தான் என்று முடிவெடுத்திட்டியள் ........ அதிலும் ஒரு சிக்கல் .....நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா ....... வடகலை என்றால் மீண்டும் மேலே போக வாய்ப்பிருக்கு ...... தென்கலையென்றால் வாய்ப்பில்லை ராஜா ..... கோவிந்தா கோவிந்தாதான் .......... சீக்கிரம் முடிவெடுங்கோ . ....... ! 😂

images?q=tbn:ANd9GcT35-VfVQER0XjNlBIG1Z3

மேலே உள்ளது வடகலை . .......!

கீழே உள்ளது தென்கலை . .......!

ஏதோ என்னால் முடிஞ்ச உதவி . ..... ஆனால் நான் உங்களைத் தாண்டிப் போக வழி விடணும் . ........ கடைசி நாலைந்து முறை ஒரே முட்டைதான் .......... ! 😂

அப்பிடி இரண்டு விதம் இருக்கா. நாமம் இழுக்கிறது என்று ஆயிப்போச்சு. வடகலை என்ன தென்கலை என்ன. நமக்கு நித்தம் நாமம்தான்.

நீங்களும் நம்மோட சேர்ந்து ஒரே புள்ளி. வாங்க சேர்ந்தே நந்தன நோக்கிப் போவம். உங்கட பழைய ஜோடி. அவரப்பத்தித் தெரிஞ்சிருக்கும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

எனது $1 KAYO சந்தா முடிந்துவிட்டது, இன்றைய போட்டியில் ஜுரலின் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளது, நிங்கள் எதில் ஐ பி எல் பார்க்கிறீர்கள்?

smartcric

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

Pitch and conditions

Four of the seven games in Jaipur have been won by the chasing side since last year, with the average first innings score being 184. Day temperatures have crossed 40 degrees celsius; while the evenings will be a tad cooler, there's no escaping the oppressive heat that will take a toll on the players' fitness.

180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி ஈட்டலாம் என்பது கிரிக் இன்போவின் ஆடுகள அறிக்கை கூறுகிறது.

ராஜஸ்தான் அணியின் மத்திய துடுப்பாட்ட பகுதி கடந்த போட்டிகளை மிக சாதகமான நிலையில் இருந்து அதனை தோல்விக்கு எடுத்து சென்றுள்ளது.

ராஜஸ்தான் அணியின் பராக், ஜுரல், கெட்மெயர் இந்த மூவரும் அந்த அணியின் துடுப்பாட்ட மத்திய பிரிவில் மிக சிரமத்துக்குள்ளாகின்றனர் என கிரிக் இன்போ தளம் கூறுகிறது.

இந்த மூவரையும் ராஜஸ்தான் துடுப்பாட்ட வரிசையில் எங்கே கொண்டு போய் மறைத்து வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது மாற்றுவழிகள் செய்யலாமா என யாழ்கள போட்டியாளர்களிடம் நகைசுவை ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெறும் கல கலப்பிற்கான விடயம் அதனால் யாருடைய கருத்து மிக சிறப்பாக உள்ளதென பார்க்கலாம்.

நம்ம சிம்ரன தொடக்க ஆட்டக்காரரா அனுப்பி விடலாம். ஒருக்கா விட்டு அடிச்சுப் பாரக்கலாம்.

இன்றைக்கு அடிச்சாகனும். நம்மளுக்காக.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னது நான் 16 ஆவது இடத்திலா😱.

இதன்பிறகாவது ஐபிஎல் பூராவும் மேட்ச் பிக்சிங் என்பதை நம்புங்கப்பா🤣.

அப்பவே சாத்திரக்காரன் சொன்னவர் - பத்தில வியாழன் பதிய விட்டு கிளப்புமாம்🤣.

எப்போ பார்த்தாலும் உள்ளுக்குள்ள என்னமோ இருக்கப்பா என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆரோ எழுதின நாடகத்த ஆரோ நடிக்கினம் என்பது போல. நீங்களும் விடுறதா இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

எனது $1 KAYO சந்தா முடிந்துவிட்டது, இன்றைய போட்டியில் ஜுரலின் விளையாட்டை பார்க்க ஆவலாக உள்ளது, நிங்கள் எதில் ஐ பி எல் பார்க்கிறீர்கள்?

freehit.eu

சாய் சுதர்ஷன் இன்றைக்கு கனக்க பந்துகளை தின்றுவிட்டார்!!

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

47th Match (N), Jaipur, April 28, 2025, Indian Premier League

RR chose to field.

Gujarat Titans FlagGujarat Titans

(20 ov) 209/4

Rajasthan Royals FlagRajasthan Royals

Current RR: 10.45

 • Last 5 ov (RR): 60/3 (12.00)

Win Probability: GT 72.11% • RR 27.89%

  • கருத்துக்கள உறவுகள்

இன்னைக்கு எல்லா துஷ்டங்களையும் களைந்து, துரத்தி அடிக்கிறம். 2 புள்ளிய அள்ளுறம்.

பூசை ஒண்றப் போட்டம். ஏவிவிட்டது வேலை செய்யுது. பட்லர் விட்ட பிடியே அதுக்குச் சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பையனுக்காகப் பார்பம் என்டால் என்ரை சனல் வேலை செய்யுது இல்லை.☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.