Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • கருத்துக்கள உறவுகள்

SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்தம் ஆகக்குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த வகை ‘வக்கிரக’ வீடியோக்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் சராசரியாக ஆயிரம் பேர் இதெல்லாம் பிரமாதம் என்று லைக் இடுகிறார்கள்.

ஆதலால், இங்கு மனப்பிறழ்வு ஒருவருக்கல்ல! நம்முடைய பாதிச் சமூகம் இப்படித்தானிருக்கிறது.

இவருடைய அத்தனை வீடியோக்களின் கென்டன்ட், வறியவர்களுக்கு உதவி செய்தல். இப்படி உதவி செய்வதன் மூலம் இலகுவாக பரபல்யம் அடைதல். அந்த பிரபல்யத்தால் தலைக்குள் ஏறும் கனத்தில் இப்படி அயோக்கிய அதிகாரம் பண்ணுதல். இதுதான் இவர்களுடைய பிழைப்பு.

இந்த உதவிகளுக்குரிய மொத்த பணத்தையும் லட்சக் கணக்கில் வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களே தாரைவார்க்கிறார்கள். அப்படி அனுப்பும் பெருந்தகைகள் கணக்குக் கேட்பதுமில்லை, அது எப்படி வறியவர்களின் தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் அழித்தொழிக்கிறது என்பது மட்டில் அக்கறைகொள்வதுமில்லை.

ஆக இந்த அயோக்கிய யூடியூப்பர் போன்றவர்களின் பிரபல்யம் என்பதும், அதனால் வெளிப்படும் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் என்பதும் ஆயிரக்கணக்கான தமிழர்களால் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சமூகப் பொறுப்பற்ற, accountability to affected victims என்கிற ஒன்று கிஞ்சித்தும் இல்லாத புலம்பெயர் தமிழ் தனவந்தர்களால் கொடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு அறிவு மயிர் வரும்வரை, இந்த நச்சுப் புழுக்களை இங்கிருந்து ஒருபோதும் நசுக்கித்தள்ள முடியாது.

நன்றி - https://www.facebook.com/share/p/1ZifUXekXu/?mibextid=wwXIfr

டிப்பர்ல பாவம் அப்பாவிகள் எவன் எவனோல்லாம் அடிபட்டு சாகிறான்... இவனும் அதே ரோட்ல தான் போய் வாறான்... ஒரு கேடு வருதில்லையே..👇

https://www.facebook.com/share/v/168fX8nFdu/?mibextid=wwXIfr

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஓணாண்டி.

இந்த பதிவின் மூலம்

நீங்கள் யார் என்றும் கண்டு பிடித்து விட்டேன்.

ஆனால் யாருக்கும் சொல்ல

மாட்டேன்.

டவுட்டு கிளியராச்சு

  • கருத்துக்கள உறவுகள்

சுடச்சுட செய்து விட்டிருக்கிறாங்கள்.. 🤣🤣👇

24 minutes ago, வைரவன் said:

நன்றி ஓணாண்டி.

இந்த பதிவின் மூலம்

நீங்கள் யார் என்றும் கண்டு பிடித்து விட்டேன்.

ஆனால் யாருக்கும் சொல்ல

மாட்டேன்.

டவுட்டு கிளியராச்சு

யாரோ யார் பெத்த பிள்ளையோ..🤣🤣🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுடச்சுட செய்து விட்டிருக்கிறாங்கள்.. 🤣🤣👇

யாரோ யார் பெத்த பிள்ளையோ..🤣🤣🤣

கெட்டிக்காரர்....சுடச் சுட..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானனவர்களை யூடுபுக்கு விளக்கமா ரிப்போர்த்பன்னிவிட்டால் காணும் தமிழடியான் இங்கு கத்துவதை விட்டு நேரே ரிப்போர்ட் பண்ணலாமே இலகுவாக முடக்க வழி இருக்க இவர் இவ்வளவு ஏன் கத்துகிறார் ?

அவங்களுக்கு ஏல்லா மொழியும் தெரியும் ai செய்த வேலை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்தம் ஆகக்குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த வகை ‘வக்கிரக’ வீடியோக்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் சராசரியாக ஆயிரம் பேர் இதெல்லாம் பிரமாதம் என்று லைக் இடுகிறார்கள்.

தாயக மக்களுக்கு உதவி செய்ய வேணும் என்ற நல்லெண்ணத்துடன் பல புலம் பெயர் உறவுகள் இருக்கின்றனர் .அதை சாதகமாக பாவித்து ஒரு சில யூ டியுப்பினர் தப்பான செயலில் ஈடுபட்டிருக்கலாம்.

இந்த யூ டியுப்பரினால் பலனடைந்த பல தாயக உறவுகள் உண்டு ..அடுத்த தேர்தலில் இவர் ஜெ.வி.பி யின்

வேட்பாளராக வருவதற்கும் சந்தர்ப்பம் உண்டு...

அரசியலை தீர்வை விட அபிவிருத்தி தான் முக்கியம் என நாங்கள் நினைத்தது தப்பு...

அரச கட்டமைப்போ,அல்லது தொண்டு நிறுவனமோ ,அரசியல்கட்சியோ முன்னின்று செய்ய வராத காரணத்தால் இந்த தனிநபர்கள்(யூ டியுப்பர்) களத்தில் இறங்கி செயல் பட தொடங்கி விட்டார் .யூ டியுப்பர்கள் இதை ஒர் முழு நேர தொழிலாக எடுத்துள்ளனர் .நல்ல வருமானம் வரும் தொழில் ஆனால் நிரந்தரம் இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கின் செந்நிற கட்சியினர் வடக்கின் அபிவிருத்திக்கு புலம் பெயர் உறவுகளின் உதவிகளை கேட்கின்றனர் அல்லோ...புலம் பெயர் டமிழன் இழிச்சவாயாங்கள் காசு கேட்டா தருவாங்கள் என பாடம் எடுத்ததே இந்த செந்நிறகட்சியின் வடக்கு யூ டியுப்பர்ஸ் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

தாயக மக்களுக்கு உதவி செய்ய வேணும் என்ற நல்லெண்ணத்துடன் பல புலம் பெயர் உறவுகள் இருக்கின்றனர் .அதை சாதகமாக பாவித்து ஒரு சில யூ டியுப்பினர் தப்பான செயலில் ஈடுபட்டிருக்கலாம்.

இந்த யூ டியுப்பரினால் பலனடைந்த பல தாயக உறவுகள் உண்டு ..அடுத்த தேர்தலில் இவர் ஜெ.வி.பி யின்

வேட்பாளராக வருவதற்கும் சந்தர்ப்பம் உண்டு...

அரசியலை தீர்வை விட அபிவிருத்தி தான் முக்கியம் என நாங்கள் நினைத்தது தப்பு...

அரச கட்டமைப்போ,அல்லது தொண்டு நிறுவனமோ ,அரசியல்கட்சியோ முன்னின்று செய்ய வராத காரணத்தால் இந்த தனிநபர்கள்(யூ டியுப்பர்) களத்தில் இறங்கி செயல் பட தொடங்கி விட்டார் .யூ டியுப்பர்கள் இதை ஒர் முழு நேர தொழிலாக எடுத்துள்ளனர் .நல்ல வருமானம் வரும் தொழில் ஆனால் நிரந்தரம் இல்லை ...

புத்த்ரே..உங்கள் முடிவை தயவு செய்து ஆராய்ந்து...பாருங்கள்..இவர்மீது...தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

புத்த்ரே..உங்கள் முடிவை தயவு செய்து ஆராய்ந்து...பாருங்கள்..இவர்மீது...தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது..

இவர் நல்லவர் என சொல்ல வில்லை ...இவரின் பதிவுகளை நான் முன்பு பார்த்து கொண்டிருந்தேன் ..இப்ப பார்ப்பதில்லை ஒரு சில கருத்துகள் எனக்கு ஒத்துவரவில்லை ...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்தை பரப்ப வெளிக்கிட பார்ப்பதை தவிர்த்து விட்டேன் ...

மதம் மாற்றும் செயலிலும் ஈடுபடுவதாக ஒர் பதிவு உண்மை பொய் தெரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இவர் நல்லவர் என சொல்ல வில்லை ...இவரின் பதிவுகளை நான் முன்பு பார்த்து கொண்டிருந்தேன் ..இப்ப பார்ப்பதில்லை ஒரு சில கருத்துகள் எனக்கு ஒத்துவரவில்லை ...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்தை பரப்ப வெளிக்கிட பார்ப்பதை தவிர்த்து விட்டேன் ...

மதம் மாற்றும் செயலிலும் ஈடுபடுவதாக ஒர் பதிவு உண்மை பொய் தெரியவில்லை

நானும் முதலில் அனுதாபப் பட்டு பார்த்தேன் ....ஆனால்....குடும்பமே எம்மை டம்மியாக்க வெளிக்கிட்டபோது...ஆதரவை நிறுத்திவிட்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இதனை நானும் பார்த்தேன்..நல்ல விளக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூப்பரின் செயல்; பெண்களின் தனித்துவம் – பாதுகாப்புக்கு எதிரானவை

adminMarch 9, 2025

abinanthan-youtube.jpg

இலங்கையின் பெண்களின் பாதுகாப்புக்காக செயலாற்றும் Unity for Women Safety Sri Lanka (UWSSL) என்ற அமைப்பு, சமீபத்தில் ஒரு YouTube Content Creator இனால் இடம்பெற்ற அவமதிப்பு சம்பவத்தை உறுதியுடன் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

உதவிக்காக அணுகிய குடும்பத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, அக்குடும்பத்திலிருந்த இளம்பெண், தனது தனிமனித உரிமையையும், மரியாதையையும் காக்க விரும்பி, காணொளியில் இடம்பெற மறுத்ததைக் காரணமாக கொண்டு, அவரை அவமதிக்கும் விதத்தில் வலியுறுத்தி, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

அந்த YouTuber கூறிய சில வார்த்தைகளில் சில:

“இவ என்ன ஐஸ்வர்யா இவைய காட்டித்தான் எண்ட video வ ஓட பண்ணோணுமா? வீடியோக்கு வரமாட்டியா?”

“யாரையும் லவ் பண்றியா?”

“18 வயதாகியும் இன்னும் பால்குடி மறக்கவில்லையா?”

“இப்படி நடித்தால் எனக்கு கோவம் வரும் ”

“அம்மாட கஷ்டம் தெரியாத பிள்ளை ”

இவ்வாறான நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்க முடியாதவை என்றும், பெண்களின் மரியாதை, தனித்துவம் மற்றும் பாதுகாப்புக்கு எதிரானவை என்றும் அறிவிக்கின்றோம்.

https://globaltamilnews.net/2025/213015/

  • கருத்துக்கள உறவுகள்

YouTube கிஷ்ணா சற்று முன் கைது என்று சொல்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

YouTube கிஷ்ணா சற்று முன் கைது என்று சொல்கிறார்கள்..

"யூ ரியூப்", "ரிக் ரொக்" காரருக்கு... இப்ப கஸ்ரகாலம் போலை இருக்கு.

பின்னை.... கிடைத்த சுதந்திரத்தை அளவுக்கு மீறிப் பாவித்தால்,

இதனையும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

அவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்திலேயே... தமிழ்ப் பகுதிகளில் செயல் படும் இணையம் நடத்துபவர்களைப் பற்றி கதைக்கும் அளவிற்கு இவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகள் இருந்துள்ளதை நினைக்க வேதனையாக உள்ளது.

எதற்கோ போராட வேண்டிய தமிழ் இனம்.. இப்போ இந்தப் புல்லுருவிகளை சமாளிக்க போராட வேண்டியுள்ளது பெரும் சோகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

YouTube கிஷ்ணா சற்று முன் கைது என்று சொல்கிறார்கள்..

ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Published By: Digital Desk 2

09 Mar, 2025 | 03:42 PM

image

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.

குறித்த youtuber பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. 

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த யூடியூப்பருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த யூடியூப்பர் வந்திருந்த நேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/208709

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு காசு அனுப்பினவையளையும் விசாரிப்பினமோ? கண்டிப்பாக அவர்கள் யாரென்று கிருஷ்ணா போலீசாரிடம் தெரிவிப்பார். அவைக்கும் கஸ்ரகாலந்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைந்த யூடியூப்பர்

09 Mar, 2025 | 03:47 PM

image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரிடம் இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். 

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து  பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து  இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர். 

இந்நிலையில், மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை,  நாடாளுமன்றில் சனிக்கிழமை (08) பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் குறித்த சம்பவத்திற்கு சபையில் கண்டனம் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/208688

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.

நாடு முழுக்க பட்டி தொட்டி எல்லாம் இவரைப்பற்றி பேசுது, இவருக்கு இது தெரியாதது வினோதமே. வழக்கம்போல் முதலாளி உத்தியோகத்துக்கு போய் மாட்டுப்பட்டிட்டார். யார் யார் எவ்வளவு அனுப்பினார்கள், அதில் இவர் எவ்வளவு கையாடினார், எல்லாம் கக்குவார். என்னமாதிரி சுமுத்தா போன தொழில் இப்படியாகிச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாரோ யார் பெத்த பிள்ளையோ..🤣🤣🤣

இப்போது இன்னார் பெற்ற பிள்யையே சீமனுக்காக யாரோ பெற்ற பிள்ளை என்று மாற்றி விடுகின்றனர் சீமனின் மூளை களுவல் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

482239217_1052969656866408_2512067650909

பண்டத்தரிப்பில் வைத்து Youtuber கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்!!!

Edited by தமிழ் சிறி

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.