Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

Last updated: April 9, 2025 2:17 pm

Published April 9, 2025

ஞாயிறு மலர்

9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஏப். 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது

9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்

2024-2025-ஆம் ஆண்டில் தமிழ் நாடு 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2011-2012-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பின்படி 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த தமிழ் நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-2025-ஆம் ஆண்டில் ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது என ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித் துள்ளது. இதற்குமுன், 2017-2018-ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவீதம் இருந்தது. 2020-2021-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சமாக 0.07 சதவீதம் என பதிவாகியது. இந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது. பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் எனப்படுகிறது. பணவீக் கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே இயல்பான வளர்ச்சி வீதம் ஆகும்.

இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

2024-2025-ஆம் ஆண்டு தமிழ் நாடு, 14.02 சதவீதம் இயல்பான வளர்ச்சி வீதத்தினை பெற்று இன்று இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலமாக திகழ்கிறது.
இந்தியாவிலேயே முதலிடமாக தமிழ்நாடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-இல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி, நிறை வேற்றிவரும் திட்டங்களே காரணமாகும்.பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயண திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 தரும் தமிழ்ப் புதல்வன் திட்டம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
அய்.நா. அமைப்பு பாராட்டிய மக்களைத் தேடி மருத்துவ திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், ஏழை, எளியோர் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், ஊட்டச்சத்தை உறுதிசெய்திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாசர் குடியி ருப்பு மேம்பாட்டு திட்டம் முதல்வரின் முகவரி திட்டம், 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி முதலீடுகள் வாயிலாக பெருகும் 32 லட்சத்து 4 ஆயிரத்து 895 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் மற்றும் புதிய உச்சம் எனும் வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

https://viduthalai.in/110383/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-3/

  • Replies 78
  • Views 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஒரு சில இலங்கை தமிழ் தற்குறிகள், சமூக வலைத்தளங்களில் வரும் தமிழகத்தின் பொருளாதாரத்தை பற்றியும், அதன் தலைமைத்துவத்தை பற்றியும் தவறான தகவல்களை எந்தவித கேள்விகளுக்கும் உற்படுத்தாமல் பரப்பிவருகின்றார்கள்

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமி

  • goshan_che
    goshan_che

    கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரி

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

திராவிடத்தால் வீழ்ந்தோம்🤣

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் திராவிடம் என்று பேசியதை விட தமிழ் தமிழ் என்று பேசியது தான் அதிகம். அப்படியானால் தமிழ் தான் உயர்த்தி இருக்கவேண்டும் 🤗

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் திராவிடமா, தமிழா என்று கூறுவதே தற்குறி தனமான வாதம். தமிழரின் மரபு இனம் திராவிடம் என று மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீ மனிதனா அல்லது தமிழனா என்று கேட்பதை போலவே இந்த கேள்வியும்.

Edited by island

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில இலங்கை தமிழ் தற்குறிகள், சமூக வலைத்தளங்களில் வரும் தமிழகத்தின் பொருளாதாரத்தை பற்றியும், அதன் தலைமைத்துவத்தை பற்றியும் தவறான தகவல்களை எந்தவித கேள்விகளுக்கும் உற்படுத்தாமல் பரப்பிவருகின்றார்கள், ஆனால் யதார்த்தத்தில் அதற்க்கு எதிர்மறையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

திராவிடத்தால் வீழ்ந்தோம்🤣

தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃

இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா?

அதை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக இயற்கை வளம் உள்ளதாக கூறுகின்றார்கள்.

ஒரு ஆங்கில அறிஞர் தமிழ்நாடு தனித்து ஆட்சி செய்து ஆளக்கூடிய வளங்கள் எல்லாம் உள்ளது என எழுதியதாக வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் திராவிடம் என்று பேசியதை விட தமிழ் தமிழ் என்று பேசியது தான் அதிகம். அப்படியானால் தமிழ் தான் உயர்த்தி இருக்கவேண்டும் 🤗

பூவ…பூ எண்டும் சொல்லலாம்…புய்ப்பம் எண்டும் சொல்லலாம்…நீங்க சொல்றமாரியும் சொல்லலாம் அண்ணே🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அனால், திராவிட காட்ச்சிகள் இருந்ததால் (பெரும்பாலும்) வரவில்லை.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்த இருந்தாலும் இந்த வளர்ச்சி வந்து இருக்கும்.

ஏனெனில், தமிழ் நாடு நிர்வாக சேவையே கொள்கைகளை வகுப்பது, ஆட்சிக்கு வரும் கட்சிகள் அங்கங்கே சிறு மாற்றங்களை செய்யலாம்.

முக்கியமாக கொள்கை தொடர்ச்சியை பேணுவது, தமிழ் நாடு நிர்வாக சேவை.

உதாரணம், சமூக பாதுகாப்பு, 70 கடைசியில், 80 தொடக்கம் வேலையில்லா திண்டாத்திலும், பேணப்பட்டது.

அது மிக முக்கியமானது, இப்போதைய வளர்ச்சியில்.

அனால், பொதுவாக, ஒரு சில கட்சிகளை தவிர. கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட, 1991 தொடங்கிய தாராளமயம் சார்ந்த பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டன என்பதும்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்

Here’s an overview of the economic growth of Indian states over the last 10 years (2013–2023 to 2023–2024), based on Gross State Domestic Product (GSDP) trends:

Top Performing States (High Growth)

  1. Gujarat – Avg. ~8-10% (Consistent growth due to manufacturing & ports)

  2. Maharashtra – Avg. ~7-9% (Financial hub, services & industry)

  3. Karnataka – Avg. ~8-10% (IT, startups, and tech-driven growth)

  4. Tamil Nadu – Avg. ~7-9% (Auto, textiles, and FDI inflows)

  5. Telangana – Avg. ~9-11% (Post-bifurcation IT & pharma boom)

  6. Andhra Pradesh – Avg. ~7-9% (Infrastructure & services push)

Fast-Growing Smaller States & NE

  • Goa – Avg. ~6-8% (Tourism & mining)

  • Himachal Pradesh – Avg. ~6-7% (Hydroelectricity & agriculture)

  • Assam – Avg. ~6-8% (Improving infrastructure & oil)

States with Moderate Growth

  • Uttar Pradesh – Avg. ~5-7% (Large population, recent infra push)

  • Madhya Pradesh – Avg. ~6-7% (Agriculture & manufacturing)

  • Rajasthan – Avg. ~6-7% (Mining & renewable energy)

  • West Bengal – Avg. ~5-7% (Mixed, slowed by political factors)

States with Slower Growth

  • Punjab – Avg. ~4-6% (Agrarian stress, low industry)

  • Jharkhand – Avg. ~4-6% (Mining-dependent, fluctuating)

  • Bihar – Avg. ~5-7% (Low base, but improving)

Key Trends (2013–2023)

  • Southern & Western states dominated growth due to industrialization & services.

  • Gujarat, Maharashtra, Karnataka, Tamil Nadu, and Telangana were leaders.

  • Eastern & Northern states (Bihar, UP, Odisha) saw growth but at a slower pace.

  • Post-COVID recovery was faster in states with strong manufacturing/IT (e.g., Karnataka, TN).

Data Sources

  • RBI State Finances Reports

  • Ministry of Statistics & Programme Implementation (MoSPI)

  • Economic Surveys of States

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

திராவிடத்தால் வீழ்ந்தோம்🤣

உண்மை தான் ஆனால் இலங்கை தமிழர்களாலேயே வளர்ந்தோம். பொருளாதாரத்தில் வளர்ந்தோம். 😀

மலர் என்றும் சொல்லலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

இதை தற்குறித்தனம் என்று சொல்வதா அல்லது ஆங்கில மொழியில் உள்ள வறுமை என்று சொல்வதா என தெரியவில்லை.

அதுசரி, தாங்கள் களத்தின் ஒரு நிர்வாக உறுப்பினராக இருந்து கொண்டு மூலம் இல்லாத தரவுகளை இணைத்துள்ளீர்கள். chatgptஐ உபயோகித்து சரி, தங்களுக்கு சார்பான தரவுகளை மாத்திரம் தந்துள்ளீர்கள்.

Edited by zuma
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஏழைகள். அதிகம் உள்ள மாநிலம் எது????

தமிழ்நாடு எத்தனையாவது இடம்??

வீடுகள் இல்லாமல் நிறைய குடும்பம்கள். தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் குடிசைகளில். வாழ்கிறார்கள் சாப்பிட்டு வழி. இல்லாமல் தமிழ்நாடு வளர்த்தால். இவர்களின் வாழ்க்கையில் ஏன் மாற்றங்கள் ஏற்படவில்லை ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பூவ…பூ எண்டும் சொல்லலாம்…புய்ப்பம் எண்டும் சொல்லலாம்…நீங்க சொல்றமாரியும் சொல்லலாம் அண்ணே🤣.

எனக்கு சிலது அலர்ஜி. நான் சில பூக்களை தான் சொல்கிறேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அதுல 1 .86 % வாறது டாஸ்மாக் விற்பனையில்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

கேரளாவுக்கு எத்தனையாவது இடம்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

இதை தற்குறித்தனம் என்று சொல்வதா அல்லது ஆங்கில மொழியில் உள்ள வறுமை சொல்வதா என தெரியவில்லை.

அதுசரி, தாங்கள் களத்தின் ஒரு நிர்வாக உறுப்பினராக இருந்து கொண்டு மூலம் இல்லாத தரவுகளை இணைத்துள்ளீர்கள். chatgptஐ உபயோகித்து சரி, தங்களுக்கு சார்பான தரவுகளை மாத்திரம் தந்துள்ளீர்கள்.

Data Sources

வாசித்து விளங்க தெரியாவிட்டாலும் தற்குறிதனம் தான். கூகிளில் தேடினாலும் ஏ ஐ தான் தரவிகளை தேடி தருகிறது. நீங்கள் உங்களுக்கு சார்பான தகவலை தரும் போது ஏனையவர்கள் தரக்கூடாதா? வாசகர்கள் வாசித்து சரி பிழையை சொல்லட்டும்.

அது சரி நீங்கள் தரவு எடுத்த இடம் தெய்வீக தளமோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கேரளாவுக்கு எத்தனையாவது இடம்?

அழகிகள் முதலாவது இடம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அழகிகள் முதலாவது இடம் 😀

ஐயா இது தான் ஆராச்சி போல.

ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

தமிழரின் மரபு இனம் திராவிடம் என று மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழர்கள் திராவிட மரபினத்தவர்கள் என்பது வெளிப்படையானது. தமிழ் இனவெறி பேசுகின்ற சீமானோ திராவிட மலையாளத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

உண்மை தான் ஆனால் இலங்கை தமிழர்களாலேயே வளர்ந்தோம். பொருளாதாரத்தில் வளர்ந்தோம். 😀

மலர் என்றும் சொல்லலாம்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோடிகளில் பங்களா வாங்குமளவு பொருளாதாரம் மேம்பட்டிருக்கின்றது!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோடிகளில் பங்களா வாங்குமளவு பொருளாதாரம் மேம்பட்டிருக்கின்றது!

நான் வேண்டவில்லை ....வாலி. சில சமயம் வேறு யாழ் கள. உறவுகள் வேண்டியிருக்கலாம். கோஷான். வேண்டி இருப்பார் 🤣😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

கோஷான். வேண்டி இருப்பார் 🤣😀

கிழக்குக் கடற்கரை சாலையில் கோடிகளில் சொகுசு பங்களா வாங்குவதற்கு அவர் ஈழதமிழர்களை வைத்து திரள்நிதி அரசியல் செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.

கேரளா தவிர் ஏனைய இந்திய மாநில கிராமங்களுக்கு போனால் தமிழ் நாட்டின் வளர்ச்சி புரியும்.

22 hours ago, குமாரசாமி said:

அதை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக இயற்கை வளம் உள்ளதாக கூறுகின்றார்கள்.

ஒரு ஆங்கில அறிஞர் தமிழ்நாடு தனித்து ஆட்சி செய்து ஆளக்கூடிய வளங்கள் எல்லாம் உள்ளது என எழுதியதாக வாசித்த ஞாபகம்.

ஆனால் மீனை, மண்ணை தவிர, நிலக்கரி, தாதுக்கள், எண்ணை என சகல வளத்தையும் அகழும் அதிகாரம் மத்திய அரசிடமே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

இந்தியாவில் ஏழைகள். அதிகம் உள்ள மாநிலம் எது????

தமிழ்நாடு எத்தனையாவது இடம்??

வீடுகள் இல்லாமல் நிறைய குடும்பம்கள். தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் குடிசைகளில். வாழ்கிறார்கள் சாப்பிட்டு வழி. இல்லாமல் தமிழ்நாடு வளர்த்தால். இவர்களின் வாழ்க்கையில் ஏன் மாற்றங்கள் ஏற்படவில்லை ???

தமிழ் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் 2.2% சதவீதம்.

பீஹாரில் 34#. குஜராதில் 12%. அண்ணளவாக.

ஆந்திரா, தெலுங்கானா 6%. கர்நாடகா 7.5.

பல வட இந்திய மாநிலங்கள் 27,22, 15 க்கு மேல்.

https://en.m.wikipedia.org/wiki/Poverty_in_India

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

ஏனெனில், தமிழ் நாடு நிர்வாக சேவையே கொள்கைகளை வகுப்பது, ஆட்சிக்கு வரும் கட்சிகள் அங்கங்கே சிறு மாற்றங்களை செய்யலாம்.

இந்தியா முழுக்க இருப்பது Indian Administrative Service எனப்படும் நிர்வாக சேவைதான்.

இதற்குள் ஒவ்வொரு வலயத்துக்கும் ஒரு பிரிப்பு இருக்கும். உதாரணமாக IAS - Tamil Nadu Cadre. இதில் தமிழ்நாட்டவர்கள், தமிழ் நாட்டில் பணி செய்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் தேசிய சேவைக்கு அழைக்கப்படலாம்.

ஆனால் IAS அதிகாரிகளின் தரம் இந்தியா முழுவதும் ஒன்றேதான்.

பீஹாருக்கும், தமிழ் நாட்டுக்கும் வித்தியாசம் அரசியல் தலைமைத்துவம்.

நிர்வாக சேவை அதிகாரிகள் கொள்கை முடிவை எடுப்பதில்லை. அவர்கள் ஆலோசனை சொல்வார்கள், அரசியல்வாதிகள் எடுத்த முடிவை அமல்படுத்துவார்கள்.

தமிழ்நாடு, கேரளா, மஹராஸ்டிரா முன்னேற, பீஹார் பிந்தங்க காரணம் நிர்வாக சேவையின் தரம் அல்ல, மாநில ஆட்டியாளரின் தரம்.

21 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்களாலேயே வளர்ந்தோம்.

தமிழ் நாட்டு பொருளாதர வளர்ச்சியில் ஈழதமிழன் சீலை, நகை, சினிமா மூலம் கொடுத்த இலாபம், மிக, மிக, மிக சொற்பமானது.

எங்களுக்குத்தான் இது பெரிய காசு, தமிழ் நாட்டு பொருளாதாரத்துடன் ஒப்பிட்டால் - தூசு.

20 hours ago, Eppothum Thamizhan said:

அதுல 1 .86 % வாறது டாஸ்மாக் விற்பனையில்!

நாம் வாழும் நாடுகளில் மது, சிகரெட், சூது, மூலம் அரசுகள் ஈட்டும் வருமான சதவீதம் இதை விட கூட இருக்கும் என. நினைக்கிறேன்.

டாஸ்மார்க்குக்கு நான் ஆதரவில்லை. ஆனால் புத்தர் முதலமைச்சர், யேசு நிதியமைச்சர் அல்லாத நாடு/மாநிலம் ஒன்றில் இது பெரிய சதவீதமாக எனக்கு படவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.