Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27 APR, 2025 | 01:17 PM

image

லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியதாவது: “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.

எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தானில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

https://www.virakesari.lk/article/213062

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அணுவாயுதங்கள் இருக்கிறது என்று சொல்லுவது ஒரு சாதாரண நடைமுறையாகிவிட்டது. அவருக்கு ஒரு வீடு இருக்கிறது, இவருக்கு இரண்டு மனைவி இருக்கிறது என்பது போல. என்னே உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி எம்பி இளங்குமரனும் பேசி உள்ளாராம் நாங்கள் ஜேவிபியினரும் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபி எம்பி இளங்குமரனும் பேசி உள்ளாராம் நாங்கள் ஜேவிபியினரும் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் தான்.

இதெல்லாம் சந்திர சேகரன் குடுக்கிற உசார்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி

அப்பாஸி ஒரு அப்பாவி விஷயம் தெரியாமல்

ஜேவிபி யின் இளங்குமரன் 2021 இல் புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறியது போல

ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார் :

3 hours ago, ஏராளன் said:

35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபி எம்பி இளங்குமரனும் பேசி உள்ளாராம் நாங்கள் ஜேவிபியினரும் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் தான்

😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியதாவது: “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்

குடிக்காமல். தண்ணீர் குடிக்காமல். எப்படி உங்கள் ஆயுதங்களை பாவிக்க முடியும் ??

இலங்கையையும். கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுத போர் மூளுமா?

April 28, 2025 6:00 am

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகல் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையே எந்நேரமும் யுத்தம் மூளக் கூடுமென்ற அச்சமான நிலைமை நிலவுகின்றது. இரு நாடுகளும் தத்தமது எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன.

இதேவேளை காஷ்மீர் பஹல்காம் பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையை இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் 7 வீடுகள் குண்டுவைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுக்கு நெருக்கமானவர்களாக இருந்த 200 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய_பாகிஸ்தான் எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிப்பதாக அறிவித்துவிட்டது. பாகிஸ்தானும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே எந்த வேளையிலும் போர் மூளக் கூடுமென்ற பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, அவர்களது வீடுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூபா 20 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வீடுவீடாக பயங்கரவாதிகளை தேடி கண்டறியும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் மும்முரமாக தீவிரப்படுத்தி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இதுஇவ்விதமிருக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கருத்துத் தெரிவிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், பாடசாலைகள், -கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், ஒட்டுமொத்த தேசத்தின் இரத்தமும் கொதிக்கிறது” என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

“இந்த பயங்கரவாதத் தாக்குதல் என் மனதை உடைத்துவிட்டது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த என் சொந்தங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது. இது அவரது கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது. எனினும் இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?

இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். அப்படி நடந்தால், இரு நாடுகளின் முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுத்தம் மூண்டால், இரு நாடுகளின் நிர்வாக தலைநகரங்கள் கடுமையாகப் பாதிப்படையும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிடம் இப்போதைக்கு 160- தொடக்கம் 170 வரை அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்தியா மீது முதலில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால், இந்தியா மொத்தமாக பாதிக்கப்பட்டு விடாது. மீண்டும் பதிலடியாக சக்தி வாய்ந்த தாக்குதலை திருப்பிக் கொடுக்கும். எனவே, பாகிஸ்தான் இந்த விடயத்தில் நிதானமாகவே நடந்து கொள்ளுமென்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் அணு ஆயுதத் திறன் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். அணு ஆயுதங்களை சுமந்து செல்ல தேவையான ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கின்றன. குறிப்பாக அக்னி வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 700 கி.மீ முதல் அதிகபட்சமாக 5000 கி.மீ வரை தாக்கக்கூடியவையாகும். எனவே கன்னியாகுமரியில் இருந்து இந்த ஏவுகணையை அனுப்பினாலும் அது பாகிஸ்தானை துல்லியமாக தாக்கும் என்று போரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல பிரித்வி எனும் மற்றொரு வகை ஏவுகணைகளும் இந்தியாடம் இருக்கின்றன. இவை குறைந்த தூர இலக்குகளை தாக்கும். இது தவிர நீர்மூழ்கி கப்பலிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் K-15, K-4 வகையான ஏவுகணைகளும் இந்தியாவிடம் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா ‘No First Use’ எனும் கொள்கையை பின்பற்றி வருகிறது. அதாவது ‘ஆயுதங்களை நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்பதுதான் இந்தியாவின் கொள்கையாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் வசமும் 165- தொடக்கம் 170 எண்ணிக்கை வரையான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஷாஹீன், கவுரி மற்றும் நாசர் என்கின்ற பெயரில் பாகிஸ்தான் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்திருக்கிறது. இவை சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும் இவற்றால் நீண்ட தூரத்திற்கு போக முடியாது. குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரத்தில் மட்டுமே இந்த ஏவுகணைகள் பயணிக்கும்.

ஆனால், பாகிஸ்தான் ‘நாங்கள் முதலில் தாக்க மாட்டோம்’ என்கின்ற கொள்கையை பின்பற்றவில்லையென்று இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிற்குப் பதிலாக ‘தேவைக்கேற்ப பயன்படுத்துவோம்’ என்கின்ற கொள்கையை பின்பற்றி வருகிறது.

இரு நாடுகளும் அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் இந்தியாவில் டெல்லி, மும்பை, புனே, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் தாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

பாகிஸ்தானை பொறுத்தவரை இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பேஷாவர் போன்ற நகரங்கள் தாக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

எப்படி இருப்பினும் அணு ஆயுத தாக்குதல் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மீது நடத்தப்பட்டாலும், அது காற்றில் பக்கத்து நகரங்களுக்கும் பரவும். எனவே அணு ஆயுதம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலைமை இவ்வாறிருக்கையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ரசூல் மக்ரே (வயது 45) பயங்கரவாதிகளால் நேற்றுமுன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கடும் கொந்தளிப்பில் உள்ள சூழலில் தற்போது சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போருக்குத் தயார் நிலையில் பாகிஸ்தான்:

கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானவை அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130 அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எங்கு உள்ளன என்று யாருக்கும் தெரியாது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவை மட்டுமே குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன” என அவர் கூறியுள்ளார்.

04-3-2.jpgஇந்தியா_- பாகிஸ்தான் இடையே கடந்த 1960- ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக பாகிஸ்தானில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இதேசமயம், இந்துக்களின் பிரதானமான புனித யாத்திரைகளில் ஒன்றான அமர்நாத் யாத்திரையிலும் பஹல்காம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவனோடு தொடர்புபடுத்தப்படும் அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பயணம் இந்து மதத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரையில், அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பல பாதைகளில் ஒன்று பஹல்காம் வழியாகச் செல்கிறது. 32 கி.மீ தூர அமர்நாத் யாத்திரையை நடந்தோ அல்லது குதிரைகள் மூலமாகவோ செல்லத் தொடங்கும் முன்னர் பக்தர்கள் பலர் பஹல்காமில் முகாமிட்டுச் செல்கின்றனர்.

அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் பைசரனில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த வருடம், ஜூலை 3 ஆம் திகதி அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ளது. இந்த யாத்திரைக்காக, இந்தப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சுற்றுலாப் பயணிகள் வருகின்ற காலப்பகுதி இதுதான். சுற்றுலாத்துறையின் முதுகெலும்பை இந்தத் தாக்குதல் உடைத்துவிட்டது. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் இந்த விதத்தில் குறிவைக்கப்படுவார்கள் என்று யாருமே நினைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இதற்கு முன்பும் கூட ஜம்மு காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2000ஆம் ஆண்டில் நுவான் முகாமில் நடைபெற்ற தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். 2017ஆம் ஆண்டில், குல்காம் பகுதியில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள்.

இங்கு சுற்றிப் பார்க்க வந்தவர்கள் இப்போது ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறியுள்ளனர். இத்தகைய கொடூரமான சம்பவத்துக்குப் பிறகு பைசரனின் இந்த அழகான பள்ளத்தாக்கு எப்போது சுற்றுலாப் பயணிகளால் மீண்டும் நிரம்பி வழியும் என்பது தெரியவில்லை.இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அங்கிருந்து மோதலுக்கான வாய்ப்புகள் இன்னும் விரிவடையலாம் என்பதே யுத்த ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக உள்ளது.

பாகிஸ்தானின் மிகப் பிரபலமான பத்திரிகையாளரும், ஆய்வாளருமான நஜம் சேத்தி பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சியான சமா தொலைக்காட்சியில் பேசும்போது, “இரண்டு விஷயங்களை வைத்து இந்தியா போரை ஆரம்பித்து விட்டது என்று பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும். ஒன்று நீரை நிறுத்துவது, இன்னொன்று கராச்சி துறைமுகத்தை மறிப்பது. இந்த இரண்டையும் பாகிஸ்தான் போர்ச் செயல்பாடுகள் என்றுதான் கருதும். அப்படி ஒரு சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூட நமக்கு உரிமை இருக்கிறது. இதில் பாகிஸ்தானின் எண்ணம் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் பாகிஸ்தானுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை” என்று கூறியிருக்கிறார்.

“இந்தியா கராச்சி துறைமுகத்தை மறித்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் மறிக்கப்படும். இதுமட்டும் நடந்தால் இந்தியா போரைத் தொடங்கி விட்டதாகத்தான் நாம் நினைக்க வேண்டும். போர் வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் போர் மூண்டால், எந்த நிலையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் இரண்டு நிலைகள் உள்ளன.

ஒருவேளை பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் தோற்றுப்போய் இந்திய இராணுவம் முன்னேறி பாகிஸ்தானுக்குள் வரலாம். அப்படி ஒரு சூழலில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது சூழல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியையாவது இந்தியா ஆக்கிரமிக்கலாம். அப்போதும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதேபோல், அணு ஆயுதத்தை நாம் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று நமக்கு எந்தக் கொள்கையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுதரப்பில், “அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது. ஆனால் வருங்காலத்தில் நிலைமையைப் பொறுத்து இந்தக் கொள்கை மாறலாம்” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னர் ஒரு தடவை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2025/04/28/featured/126221/அணு-ஆயுத-போர்-மூளுமா/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அதெல்லாம் மூளாது. வேணுமெண்டால் கல்லாலை எறிந்து விளையாடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனாவது சண்டை பிடிக்கிறதாவது.

சும்மா குறுக்கும் மறுக்கும் போர் விமானங்களை ஓட்டி விட்டு சண்டை முடிந்ததாக அறிவிக்கப்படும்.😆

துருக்கியில் இருந்து ஆயுதங்கள் பாகிஸ்தானில் வந்து இறங்கி உள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

494265209_1099196408911997_2018560823388

493758626_1099195748912063_7286104084078

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்; எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

29 APR, 2025 | 03:47 PM

image

இஸ்லாமாபாத்: இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும் அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “இந்திய இராணுவ ஊடுருவல் நிகழும். தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழலில் எத்தகைய யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

இந்தியா தாக்குதல் நடத்த உள்ளதற்கான சாத்தியம் குறித்து பாகிஸ்தான் இராணுவம் அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார். அதேநேரத்தில் விரைவில் ஊடுருவல் நிகழும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து அவர் கூறவில்லை.

பாகிஸ்தானின் அணு ஆயுத பிரயோகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவாஜா முகமது ஆசிப் “இவ்விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில் எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

போரை தவிர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிய கவாஜா முகமது ஆசிப் “வளைகுடா நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளை அணுகினோம். பிரிட்டன் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளோம். அரேபிய வளைகுடாவில் உள்ள எங்கள் நண்பர்கள் சிலர் இரு தரப்பினருடனும் பேசியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்று (திங்கள்) சீனா வேண்டுகோள் விடுத்தது. மேலும் நிலைமையை தணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாகவும் அது கூறியது.

இந்த விவகாரத்தில் தலையிடுவதில் இருந்து அமெரிக்கா ‘விலகி’ இருப்பதாக கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான உறவுகளை முடிவு செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினார். எனினும் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருப்பதாகவும்இ ‘பொறுப்பான தீர்வை’ நோக்கிச் செயல்படுமாறு வலியுறுத்துவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

https://www.virakesari.lk/article/213266

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2025 at 23:11, alvayan said:

இதெல்லாம் சந்திர சேகரன் குடுக்கிற உசார்...

ஜேவிபி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு தமிழ் பாடல் வெளியிட்டுள்ளது. உள்ளுர் ஆட்சி சபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் பிரபாகரனின் வெண்கலை சிலை ஒன்றை வல்வெட்டி துறையில் நிறுவுவார்களாம். பிரபாகரனின் அம்மா பார்வதி அம்மாவின் பெயரில் வல்வெட்டி துறையில் ஒரு துறைமுகம் அமைப்பார்களாம். இந்த பாடலின் போது பின்னணியில் அநுரகுமார திசாநாயக்க விஜய் மாதிரி நடந்து போகின்றார். சந்திர சேகரனும் தோன்றுகின்றார் பாடலில் ஒரு வரி வருகின்றது "ஜேவிபியின் கொள்கையும் தலைவரின் கொள்கையும் ஒன்றே"

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

494265209_1099196408911997_2018560823388

493758626_1099195748912063_7286104084078

நான் கேட்க நினைத்ததை படமாக தந்துள்ளீர்கள் ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் இலங்கை!

On 28/4/2025 at 18:04, வாதவூரான் said:

அதெல்லாம் மூளாது. வேணுமெண்டால் கல்லாலை எறிந்து விளையாடுவினம்

On 28/4/2025 at 03:44, ஏராளன் said:

லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

On 28/4/2025 at 16:57, கிருபன் said:

இந்தியாவிடம் இப்போதைக்கு 160- தொடக்கம் 170 வரை அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

உண்மைதானோ அல்லது ஒருவரை ஒருவர் பயமுறுத்துகிறார்களோ?

On 28/4/2025 at 16:57, கிருபன் said:

இந்த பயங்கரவாதத் தாக்குதல் என் மனதை உடைத்துவிட்டது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த என் சொந்தங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம் ..... உங்களுக்கென்றபடியால்  இரத்தம் கொதிக்கிறது, மற்றவர்களின்  இரத்தத்தை வெளியேற்றி ரசிப்பீர்கள்.

நாலு பக்கத்தாலும் உலகை அழிக்கிறோமென அடம் பிடிக்கிறார்கள், அழியப்போவது தாங்களுந்தான் என்பதை உணராமல். பகிடி என நினைத்து வெருட்டுகிறார்களோ ஒரு பகுதி மற்றொரு பகுதியை? விளையாட்டு வினையாகப்போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, satan said:

நான் கேட்க நினைத்ததை படமாக தந்துள்ளீர்கள் ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் இலங்கை!

இந்தக் கூத்தையும் பாருங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் கூத்தையும் பாருங்கள். 😂

தமிழரையும் சிங்களவரையும் மோதவிட்டு ரசித்தவர்களின் வீரத்தை, நாமும் பார்த்து ரசிப்போமென்றால்; இந்தியாவை அடித்து விரட்டி விட்டார்கள் போலுள்ளதே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

icegif-504.gif

அவசரப் படாதீர்கள் சாத்தான். மா... புளிச்சுக் கொண்டு இருக்கின்றது.

எப்படியும் இன்று இரவு சண்டை தொடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்வு கூறுகின்றார்கள்.

நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெருட்டும் ஆனால் தொடங்காது என நான் நினைக்கிறன். தானே ஆசியாவின் வல்லரசு என எண்ணிக்கொண்டிருக்கிறது. தோற்றால்; அதன் நிலைமை என்னாவது? பிறகு இலங்கையே மதிக்காது அதுவும் தன் பங்குக்கு வெருட்டும். அப்படியொரு நிலைமை வரவேண்டும் என்பது எனது அவா. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

பிறகு இலங்கையே மதிக்காது அதுவும் தன் பங்குக்கு வெருட்டும்.

இப்ப மட்டும் என்னவாம்.

56 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள்.

அப்போ பியர் இல்லையா பாஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிய உளவுப்பிரிவு தங்களை இன்னும் சில தினங்களில் தாக்குவார்கள் என எதிர்வு கூறி உள்ளனர்.(India)

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப மட்டும் என்னவாம்.

அப்போ பியர் இல்லையா பாஸ்?

thirsty-drinking-milk.gif

நான்... பியர் குடிப்பதை நிறுத்தி, நான்கு வருடமாகி விட்டது ஈழப்பிரியன்.

இப்ப... ஒன்லி மில்க் தான் குடிப்பது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/reel/536881486084084 👈

👆 கண் முழியால்... பாகிஸ்தான்காரனுக்கு பயம் காட்டும் இந்திய இராணுவம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு தமிழ் பாடல் வெளியிட்டுள்ளது. உள்ளுர் ஆட்சி சபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் பிரபாகரனின் வெண்கலை சிலை ஒன்றை வல்வெட்டி துறையில் நிறுவுவார்களாம். பிரபாகரனின் அம்மா பார்வதி அம்மாவின் பெயரில் வல்வெட்டி துறையில் ஒரு துறைமுகம் அமைப்பார்களாம். இந்த பாடலின் போது பின்னணியில் அநுரகுமார திசாநாயக்க விஜய் மாதிரி நடந்து போகின்றார். சந்திர சேகரனும் தோன்றுகின்றார் பாடலில் ஒரு வரி வருகின்றது "ஜேவிபியின் கொள்கையும் தலைவரின் கொள்கையும் ஒன்றே"

எம்ஜி ஆர் சிலைக்கு இப்பவும் அங்கு கிடக்கும் மரியாதைக்கு ..இது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/reel/536881486084084 👈

👆 கண் முழியால்... பாகிஸ்தான்காரனுக்கு பயம் காட்டும் இந்திய இராணுவம். 😂

இதென்ன சிறியர் குறளி வித்தைபோல் இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதென்ன சிறியர் குறளி வித்தைபோல் இருக்கிறது .

உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத, குரங்கு சேட்டை இது.

இவர்களின் இந்த விளையாட்டை மற்ற நாட்டவர்கள் பார்த்து பைத்தியம் முற்றி விட்டது என்று சிரிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/4/2025 at 12:49, தமிழ் சிறி said:

நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள். 😂

திரைப்படம் எடுக்க நல்ல கதை கிடைச்சிருக்கு.....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.