Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 MAY, 2025 | 07:20 AM

image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  இன்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழநனதவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்லில் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியவரான இரத்தினம் ஜெகதீசனும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1000273940__1_.jpg

1000273989.jpg

1000273989.jpg

1000273979.jpg

1000273979.jpg

1000273972.jpg

https://www.virakesari.lk/article/215011

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8345.jpeg.5b3727c7d5b54eed70e0

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தை மீட்கும் கனவுடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், அவர்களை முன்னின்று தலைமைதாங்கி தன்னையும், தன் குடும்பத்தினரையும் ஆகுதியாக்கிய தலைவருக்கும் வீரவணக்கங்கள். சிறிலங்கா அரசின் இனவழிப்பு போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரில் மரணித்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

376ae2f4eeb9e6c81ef039934f3a0d50.gif

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த...

போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கும், அவருடன் தோளோடு தோள் நின்று போராடி வீரச்சாவைடைந்த போராளிகளுக்கும் வீரவணக்கம்.

சொல்லெணா துன்பங்களை அனுபவித்து இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

இன்னொரு முள்ளிவாய்க்கால் வராமல் தடுப்பதே அம்மக்களுக்கு செய்யும் பரிகாரம் ஆகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்

புதிய இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறுகின்றது.

முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குருவினால் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது.

பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியள, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் | Mullivaikkal Remembrance Day 2025 May 18

மூன்றாம் இணைப்பு

தமிழினப் படுகொலையின் 16 ஆண்டு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுமுன்னர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆரம்பமாகியுள்ளன.

இரண்டாம் இணைப்பு

தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாரான முள்ளிவாய்க்கால் மண்...குவிந்துள்ள மக்கள்

தமிழினப் படுகொலை நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நினைவேந்தலுக்கு தயாராகியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏராளமான மக்கள் நினைவு முற்றத்தில் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - பா.பிரியங்கன் 

முதலாம் இணைப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும்.

இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது.

பொதுச் சுடர் ஏற்றுதல் 

அதன்படி, முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும்.

இதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்படும். பொதுச் சுடர் ஏற்றப்படும் சமநேரத்தில் நினைவேந்தலில் பங்கேற்பவர்கள் தீபங்களை ஏற்றுவர். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்படும்.

பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் | Mullivaikkal Remembrance Day 2025 May 18

பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக காலை 6.30மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் போரில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், “தமிழினப் படுகொலை நாளான மே 18 தினத்தில் (இன்று) நாம் அனைவரும் திரளாகக் ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் அநீதிக்கு நீதி வேண்டியும் ஒன்றுபடுவோம். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்ற விடயத்தை உரத்துச் சொல்ல இணைவோம்" என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு, கிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆமஸ்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்துவதற்கு அரசியல் கட்சிகள், பொதுக் கட்டமைப்புகள், பொது நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

 தமிழின அழிப்பின் அடையாளம்

தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் 4 கட்ட ஈழப் போர்களாக நடைபெற்றன. இறுதிப் போர் கட்டம் 2006 - 2009 மே வரை நீடித்தது.

மோதலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டனர்.

பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் | Mullivaikkal Remembrance Day 2025 May 18

இறுதியாக முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்புக்குள் மக்கள் முடக்கப்பட்டபோது மனித குலத்துக்கு எதிரான விரோத செயல்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்கள் - துயரங்களை - அழிவுகளைச் சந்தித்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் திகதி தமிழின அழிப்பின் அடையாள நாளாக தமிழ் மக்கள் நினைவேந்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட தமது இன மக்களுக்காக நீதி கோரும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

25-682961ac9a1e7.webp

25-682964f7848ee.webp

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://ibctamil.com/article/mullivaikkal-remembrance-day-2025-may-18-1747537623#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய தலைவர், போராளிகளுக்கும், உயிர்நீத்த பொதுமக்களுக்கும் வீர வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்🙏

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த...

போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

காணொளிய‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது இந்த‌ ம‌ண்ணுக்காக‌ தானே போராடின‌வ‌ர் என‌ மூதாட்டி சொல்லி அழும் காட்சி க‌ண்ணீரை வ‌ர‌ வைக்குது🙏😥...............

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-84-1.jpg?resize=600%2C300&ss

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்  16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று (18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.

இதேவேளை, இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
வவுனியாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று இருந்தது.

இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

IMG_20250518_104949.jpg?resize=600%2C338

DSC_0227.jpg?resize=600%2C400&ssl=1

IMG_6501.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1432209

  • கருத்துக்கள உறவுகள்

499252995_23921664780762541_659909676318

"பல்லாயிரக்கணக்கான" என்று இங்கு குறிப்பிடுகின்ற சொற்பதம் தவறு. "பல லட்சம்" என்பதே சரி. 1990 யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்னால் நடந்த 'தேனிசைச் செல்லப்பா' நிகழ்ச்சிக்குப் பிறகு 2003 வவுனியாவில் நடந்த 'பொங்கு தமிழுக்குப்' பிறகு அதிக அளவிலான தமிழ் மக்கள் ஒன்று கூடியது இன்று நடைபெற்ற 'முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வில்' தான். மேலே கூறிய இரண்டுக்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். இன்றைய நிகழ்வுக்கு மக்களை யாரும் அழைக்கவில்லை. மக்கள் தாமாகவே வந்தனர்.

இன்று கூடிய சுமார் இரண்டு லட்சம் மக்களை ஒழுங்குபடுத்த யாரும் இல்லை. அப்படி இருந்தும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் தாமாகவே அமைதியாக ஒன்று கூடிப் பின்னர் தாமாகவே அமைதியாகக் கலைந்து சென்றனர். அங்கு ஸ்ரீலங்கா காவல்துறைக்குப் பெரிதாக வேலை இருக்கவில்லை! 16 வருடங்களுக்கு முன்னர் இதே மண்ணில் மண்ணுக்காய் மாண்டு போன மண்டியிடா வீரனின் ஆன்மா இந்த மக்களை வழி நடத்துகிறது என்று நான் கூறினால் மிகையில்லை!

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

499458463_1141393901336800_4145618829317

  • கருத்துக்கள உறவுகள்

498932315_1016087843962095_6606103819842

உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து,

எழுந்து நின்ற போராட்டம்!

உலக நாடு... உதவி கொடுத்து,

சூழ்ந்து செய்த சதியாட்டம்!

Sj Tâmïzhâñ

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

499458463_1141393901336800_4145618829317

🙏🙏🙏...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்திற்கு என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் : அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் - ரவிகரன் எம்பி.

Published By: DIGITAL DESK 2

18 MAY, 2025 | 04:51 PM

image

பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் மே -18, தமிழினத்தை அழித்த நாளாக இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. குண்டுகள் பொழிந்து பலரையும் அழித்தொழிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசாங்கத்தினுடைய இனவாதிகள் சேர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறையை எங்களுடைய தமிழினத்தின் மேல் பாய்ச்சப்பட்ட நாளாக மே 18 இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றது. 

இந்நாளுக்கு யாராவது பதில்  கூறியே ஆகவேண்டும். பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக சொல்கின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் சொல்லியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம்  செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் .

எம் மக்களுடைய ஆத்மா சாந்தியடைய மக்கள் கூடி அனுஷ்டிக்கின்றார்கள் என்றால் அம்மக்களின் வேதனைகளை  எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மே 18 நாளுக்குரிய தீர்வினை இலங்கை அரசாங்கமும் , சர்வதேச நாடுகளும்  வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/215081

Edited by ஏராளன்
என்றோ ஒருநாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. மாவட்டத்தில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

18 MAY, 2025 | 04:52 PM

image

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது இனஅழிப்பு வாரம் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலமாக சென்று காந்திபூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் அகவணக்கமும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இறுதி யுத்ததில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது இறுதி காலப்பகுதியில் பரிமாறப்பட்ட கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_6428.JPG

IMG_6535.JPG

WhatsApp_Image_2025-05-18_at_15.08.17.jp

WhatsApp_Image_2025-05-18_at_15.08.12.jp

https://www.virakesari.lk/article/215082

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு

Published By: VISHNU

18 MAY, 2025 | 07:09 PM

image

மட்டக்களப்பு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (18)  தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

IMG_4691.JPG

தமிழ் தேசிய மக்கள் முன்னண மே 18 தமிழ் இன அழிப்பின் நினைவேந்தல் வாகரை முகத்துவாரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மீனவர் கட்டித்தில் கட்சியில் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

IMG_4676.JPG

இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்படகட்சியின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர்.

IMG_4669.JPG

IMG_4668.JPG

IMG_4656.JPG

IMG_4634.JPG

IMG_4650.JPG

https://www.virakesari.lk/article/215096

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

Published By: DIGITAL DESK 2

18 MAY, 2025 | 05:22 PM

image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் சாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

அவர்கள் சுடர் ஏற்றி மலர் தூபி நெஞ்சறுந்த அஞ்சலியைத் தந்தனர்.

2025_05_18_14_52_IMG_2156.JPG2025_05_18_15_13_IMG_2238.JPG2025_05_18_14_54_IMG_2167.JPG2025_05_18_14_55_IMG_2171.JPG

https://www.virakesari.lk/article/215084

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த ஈழ உறவுகளுக்கு என் அஞ்சலிகள்..!💐😔

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாளில் உயிர் நீர்த்த தலைவர், போராளிகள், பொது மக்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.

த‌லைவ‌ர் இறைவ‌ன் ஆகி இன்றுட‌ன் 16ஆண்டுக‌ள் ஆகி விட்ட‌து🙏🙏🙏...................

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌த்தில் வ‌சிக்கும் எம் உற‌வுக‌ள் முள்ளிவாய்க்கால் ம‌ண்ணில் இருந்த‌ ப‌டி க‌த‌றி அழுத‌தை பார்க்க‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌ தொட‌ங்கிட்டு😭😭😭😭😭😭......................

இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் தெரிந்து விட்ட‌து சிங்க‌ள‌வ‌ன் இந்தியாவின் துணையோட‌ நிக‌ழ்த்தின‌ இன‌ப் ப‌டுகொலை......................இந்த‌ முறை ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளில் நினைவு கூற‌ப் ப‌ட்ட‌து....................

ஒரு நாள் த‌மிழ‌ர்க‌ள் ப‌ட்ட‌ வேத‌னைக்கு விடிவு வ‌ரும்🙏..............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

25-68297a9e88c42.webp

25-68297a9f7ec26.webp

சிங்களத்தின் கொடுமையான இனவாதத்தினை புடம் போட்டுக்காட்டும் இன்னொரு சாட்சி படம்.

ஒரு புத்த பிக்கு கூட இந்த பொது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதை விட தமிழ் பேசும் பிக்குகளே கலந்து கொள்ளவில்லை எனும் போது...... சிங்கள இனம் திருந்தவே வாய்யில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.