Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

உண்மை சுடும். வந்தார் வரத்தார் என்பதன் வலியை புரியாதவர்கள் அதிலும் நானும் வந்தார் வரத்தார் தான் என்ற அப்பாவித்தனத்துடன்.....????? நீங்களே அதற்கு ராஜாவாக இருக்க பொருத்தமானவர்.

அப்புறம் ஆதாரம்: யாழ்ப்பாணத்தில் தீவக மக்கள் தான் அதிகம் வாழ்கின்றனர் என்பதற்கு ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?

விசுகர், கருத்து வறட்சி ஏற்படும் போது...

கண்டபடி அடித்து விடுவதை எல்லாம், கணக்கில் எடுக்கக் கூடாது.

சிலரின் கடந்த கால கருத்துக்களை அவதானித்துப் பார்த்தால்...

பல இடங்களில், சாணி அடித்த வேலைகளையே இங்கும் செய்வதால்....

இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை.

கை உழையும் மட்டும், தொண்டை தண்ணி வற்றும் மட்டும்...

"அலட்டி" விட்டு போகட்டும் என்று கடந்து செல்லுங்கள் விசுகர். 😂

Edited by தமிழ் சிறி

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

உண்மை சுடும். வந்தார் வரத்தார் என்பதன் வலியை புரியாதவர்கள் அதிலும் நானும் வந்தார் வரத்தார் தான் என்ற அப்பாவித்தனத்துடன்.....????? நீங்களே அதற்கு ராஜாவாக இருக்க பொருத்தமானவர்.

அப்புறம் ஆதாரம்: யாழ்ப்பாணத்தில் தீவக மக்கள் தான் அதிகம் வாழ்கின்றனர் என்பதற்கு ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?

வந்தார், வரத்தார் என்பது வசைவு சொல் அல்ல.

நான் இப்போ வசிக்கும் ஊரில் பத்து தலைமுறைகளாக இருந்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த ஊரின் சேர்ச் இரும்பு கதவு அவர்களின் முப்பாட்டனின் கொல்லையில் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்து வாய் வழி வரலாறாக 100 வருடங்களுக்கு முன் வந்த கடும் பனி பொழிவு பற்றி தெரிகிறது.

அந்த ஊரில் எது வழக்கம், எது புதிதாக வந்த பழக்கம் என தெரிகிறது.

நல்ல வேலை அல்லது பள்ளிகூடம் என்பதற்காக இங்கே வந்து குடியேறிய வந்தான் வரத்தானாகிய நான் - இந்த ஊரின் வழமைகள், வரலாறு பற்றி அறியாமல் இருப்பது இயல்பானது.

இதில் எந்த வலியும் இல்லை.

அப்படி இருப்பதாக நீங்கள் சொல்வது வெறும் பாசாங்கு.

Playing the victim card.

ஆதாரம் - யாழ்பாணம் என நான் சொல்லவில்லை. நல்லூரில் இப்போ இருப்பவர்கள் பலர் தீவகத்தில் இருந்து 50 வருடத்தில் குடியேறியோர் என்றே கூறினேன். இது என் வாழ்க்கை அவதானத்தின் பால் எழுந்த கருத்து.

நல்லூரை ஓரளவு அறிந்தோருக்கு நான் சொல்வது புரியும்.

இலங்கை குடிசன மதிப்பீட்டில் கூட இந்த கேள்வி கேட்கப்படாத போது, இதற்கு நீங்கள் கேட்கும் வகையில் ஆதராம் எங்கும் இராது.

5 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர், கருத்து வறட்சி ஏற்படும் போது...

கண்டபடி அடித்து விடுவதை எல்லாம், கணக்கில் எடுக்கக் கூடாது.

சிலரின் கடந்த கால கருத்துக்களை அவதானித்துப் பார்த்தால்...

பல இடங்களில், சாணி அடித்த வேலைகளையே இங்கும் செய்வதால்....

இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை.

கை உழையும் மட்டும், தொண்டை தண்ணி வற்றும் மட்டும்...

"அலட்டி" விட்டு போகட்டும் என்று கடந்து செல்லுங்கள் விசுகர். 😂

கடை முதலாளி சுமந்திரனின் ஆள் எண்ட கதையை நம்பி சோல்டர் பேக்கோடு விமானத்தில் இருந்து குதித்தாகிவிட்டது… இனி கால் முறிந்தாலும், கழுதெலும்பே உடைந்தாலும் வலிக்காத மாரி நடிப்பதை தவிர வேறு வழியில்லை.

மற்றையவர் கொஞ்சம் மேலால் தண்ணி ஊற்றியதற்கே, சசி வர்ணம் கரைந்து, உள்ளே இருக்கும் சங்கி-வர்ணம் புலப்பட்டு விட்டது. அவரும் Google street view ஆதாரத்துக்கு அவதூறை பதிலாக கக்கி விட்டு ஓடியவர், ஓடியதுதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2025 at 03:13, goshan_che said:

இந்த கடை இருக்கும் இடம் எந்த வகையிலும் கோயில் சுற்றாடல் என்று சொல்லவே முடியாத இடம்.

https://maps.app.goo.gl/j6B5Xka2XdNfNcLD7?g_st=com.google.maps.preview.copy

பிகு

படங்களை பார்த்தால் நல்ல அழகாக உள்ளது

கூகிள் வரைபடத்தின்படி, Barista cafe உணவகம் இருக்கும் இடத்திற்கும் நல்லூர் கோவில் இருக்கும் இடத்திற்குமான தூரத்தை விட சென்ற் ஜேம்ஸ் சேர்ச் தான் மிக அண்மையில் உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

499673404_10171121056245368_659993684940

thumb_large_ui.jpg

சைவ உணவுகள் மட்டும் பரிமாறப் படும் என... அறிவிக்க வைத்த,

வேலன் சுவாமி ஜீ... அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். animiertes-applaus-smilies-bild-0024.gif animiertes-applaus-smilies-bild-0015.gif

முட்டையும் அசைவம் என்ற படியால்.... இனி அந்த உணவகத்தில் இருந்து, முட்டை பொரிக்கின்ற வாசம் கூட... வெளியே வரப்படாது. வந்தால்.... மீண்டும் போராட்டம் வெடிக்கும். ஆமா.... 😂

நல்லூர் கந்தனுக்கு அரோகரா.... என்று கும்மி அடியுங்க. animiertes-applaus-smilies-bild-0009.gif animiertes-applaus-smilies-bild-0005.gif 😂

வேல்... வேல்... வெற்றி வேல். animiertes-applaus-smilies-bild-0002.gif animiertes-applaus-smilies-bild-0002.gif animiertes-applaus-smilies-bild-0002.gif

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

வேலன் சுவாமி ஜீ...

வேலையில்லா சுவாமி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும்.

நீங்களும் சசி வர்ணம் கிளப்பிய அவதூறு புயலில் சிக்கி கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்

5 hours ago, goshan_che said:

நான் எங்கும் “தீவார்” என குறிப்பிடவில்லை. தீவு பகுதி மக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

மற்றும் முன்பே ஒரு முறை யாழில் சொன்னது போல் என் தாய் வழி பாட்டனார் பல தலைமுறைக்கு முன் நெடுந்தீவு, அதேபோல் என் அம்மம்மாவின் அம்மா, பிறந்தது நாரந்தனை.

ஆகவே நான் தீவார் என சொல்லவில்லை, அப்படி சொன்னால் அதை என்னை நானே சொல்வது போல் ஆகும்.

ஆனால் நான் சொன்ன கருத்தில் - நல்லூரில் இப்போ இருக்கும் பலர் கடந்த 50 வருடத்துள் தீவுபகுதியில் இருந்து வந்து குடியேறியோர் எனவே அவர்களுக்கு ஊரின் வரலாறு தெரியாது இருக்ககூடும் என்பதில் மாற்றம் இல்லை. அது ஒரு பாகுபாடான கருத்தும் இல்லை.

ஐயனே ஞான பண்டிதா😂

உங்கள் எழுத்தில் குறை இல்லை...... சொல்லில் கூட குறை இல்லை ....ஆனால் பொருளில் தான் குறை தொக்கி நிற்கின்றது

பொருள் மயக்கம் இருந்தாலும் சரி செய்துவிடலாம்......

ஆனால் பொருளில் இன்னொரு பொருள் தொக்கி நிற்பதையே நாம் 😅

கடைந்து எடுத்து தெளிந்து...... அன்னம் போல உங்கள் சபையில் முன்வைத்தோம் .😇

பிழை நீயப்பா இன்றும் பிழை நீயப்பா😃

சரிசெய்து தொடரும் அப்பா ........😂

வேலா ... கந்தா .....கடம்பா ......கார்த்திகேயா😇

எல்லாம் உம் செயலப்பா ...... 😊

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவு என்று அறிவிக்க வைத்த வெற்றியை கொண்டாட வேலன் சாமி வீட்டில் கோழி குழம்பும் குவாட்டருமா பார்ட்டியாம். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

குறித்த கடை நல்லூர் குறுக்கு தெரு பருத்திதுறை வீதி சந்தியில், கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டருக்கும் அப்பால் உள்ளது.

இதை மறைத்து கோவிலில் திருவிழா நேரம் வளைவு கட்டும் இடத்தில் இருப்பது போல் பொய்யை பரப்பினார் சசி வர்ணம்.

அதை Google street view ஆதாத்துடன் கேள்வி கேட்டதும் டென்சன் ஆகி விட்டார்.

ஆரம்பத்தில் இதை சுமந்திரன் ஆளின் கடை என்றார்கள்.

பின்னர் சிங்களவர் கடை என்றார்கள்.

முதலில் மொக்கன் கடை போல் மாட்டு எலும்பை வீதியில் போடுவார்கள் என்றார்கள்.

இல்லை இது ஒரு கோப்பி கடை என மெனுவை எடுத்து போட்டதும் அந்த கதை அப்படியே அமுங்கி விட்ட

கற்பனை செய்து பாருங்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் இனப்படுகொலை என ICC இல் வழக்கு தொடுத்து ICCஆதாரம் கேட்டால் இதே போல தான் ஒவ்வொரு தவணைக்கும் மாற்றி மாற்றி ஒவ்வொரு சப்பை காரணங்களை சொல்லி வழக்கையே சொதப்பி விடுவர். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

நல்லூர்க் கோயில் தற்போது இருக்குமிடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை முஸ்லிம்களிடம் இருந்து பன்றியிறைச்சியினை கிணற்றுக்குள் எறிந்து அப்போதைய இந்துத் தலிபான் கூட்டம் கைப்பற்றியது என்பதும் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை என்ற வரலாற்றுப் பதிவுநூலைப் படித்திருந்தால் படித்தவர்களுக்குப் புரியும்.

முஸ்லிம்களுக்கு சொந்தம் இல்லை. முஸ்லிகளுக்கு எழுதி கொடுக்கப்படவில்லை.

அரச காணி - அதன் பெயர் குருக்கள் வளவு.

முஸ்லிகள் வாழ அனுமதிக்கப்பட்டது. அரசு / அரசன் தன செய்தது.

(பன்றி தலையை போட்டு, போடப்பட்ட அந்த கிணற்றின் இடத்தையும் அதை 'நள்ளிரவு இருள்' வேலையாக செய்ததே எனது மூதாதையர் என்றதையும் முன்பு வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்.)

உண்மையில் 2-3 தரம் போடப்பட்டது. அதை வைபவமாலை சொல்லவில்லை. ஏனெனில் பன்றி இறைச்சி அசுத்தம் என்றாலும், அது நீக்கப்படக்கூடியது / அகற்றப்படக் கூடியது முஸ்லிம்களுக்கு.

இறுதியில் தான் (அறிந்த்து / சிந்தித்து) பன்றி தலை போடப்பட்டது.

( இஸ்லாமில் ஒரு கதை இருக்கிறது - முகமது (எஎன்று தான் நினைக்கிறன்) ஒளிந்து இருந்த இடத்தில அவரை பிடிபப்தற்கு தேடிக்கொன்டு இருந்தவர்கள் கைவிட்டு போக ஆயத்தமாகிய வேளையில் பன்றி வெளிவந்து தலையை காட்டியதால் தான் மீண்டும் சல்லடை போட்டு தேடி அவரை பிடித்ததாக. இதனால் தான் பன்றி முஸ்லிகளுக்கு ஒவ்வாதது. இதை கேள்விப்பட்டு / அறிந்து பன்றி தலை போடப்படது. ).

அந்த கிணறு தான் இப்போது உள்ளது. பருத்தித்துறை வீதி இப்போது உள்ள கோயிலை அன்றி வளையும் இடத்துக்கும், கோயில் வீதி உள்ள இடையேயும் கோயிலிலுக்கு எதிர்பக்கமாக உள்ள காணி துண்டில் இருப்பது. புனருத்தாரணம் செய்யபட்டு உள்ளது.

இப்போதைய கோயிலின் ஆரம்பம, போர்த்துக்கேயருக்கு முதல் முத்திரை சந்தியில் இருந்த இடத்தில் இருந்து (இப்பொது தேவாலயம் உள்ள இடம்). தேவாலயத்துக்கு பக்கமாக நல்லூரின் பெயரில் முதல் கொட்டில் மடாலயம் போடப்பட்டது கிருஷ்ண ஐயர், மாப்பாணர் சேர்ந்து, பின் அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்து விட்டது, இது சுருக்கமாக.

அனால், வைபவ மாலையில் சொல்லப்பட்ட மிக முக்கியமானதை இங்கு எவராவது சொல்லி இருக்கிறார்களோ தெரியாது.

அதன் படி, தமிழரின் அரச (இராச்சிய) அதிகாரம் (ஆட்சி) சங்கிலியடன் (சங்கிலி குமாரன், செகராசா சேகரம் 2 உடன் முடிவடைந்து விடும்.) மீண்டும் உருவாகாது என்பது.

அகத்தியரின் அடி சீடரான ஒரு முனி (பெயர் மறந்து விட்டது), பரராசசேகரத்துக்கு சொன்னதாக.

சுருக்கமாக.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, யாயினி said:

சசியண்ணா நீங்கள் இப்படி சொல்லக் கூடாது

அவர். சொல்லவில்லை,.......சொன்னவர் லண்டனிலிருந்து

16 hours ago, யாயினி said:

  17 hours ago, goshan_che said:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆரம்பத்தில் இதை சுமந்திரன் ஆளின் கடை என்றார்கள்.

அப்படியா நான் அதைக்கவனிக்கவில்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

அவர். சொல்லவில்லை,.......சொன்னவர் லண்டனிலிருந்து

மன்னித்துக் கொள்ளவும் சசியண்ணா..தவறை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சைவ உணவுகள் மட்டும் பரிமாறப் படும் என... அறிவிக்க வைத்த,

கடவுள் எங்கும் இருக்கிறார் என்று இந்துமதம் சொல்கிறது .

..நல்லுரில். தன் கடவுள் இருக்கிறாரா???

கோவிலில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரா ??

இல்லை கடவுள் இறைச்சிலுமிருக்கிறார்.

இறைச்சி கடையிலுமிருககிறார். நான் சொல்லவில்லை இந்து சமயம் சொல்கிறது

எப்படி ??? கடவுள் துணிலுமிருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று ஆகவே எங்கும் கடவுள் இருக்கும் போது எங்கும் மாமிசம் இருக்க முடியாது ....முடியுமா??

மனிதர்கள் கட்டிய கோவில்களில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று எப்படி?? சொல்ல முடியும் ??? கோவிலுக்கு 300 மீற்றர்களுக்கு அப்பால். கடவுள் இல்லையா???

ஆகவே எங்கும் மாமிச கடைகள் நிறுவ முடியாது ........

இந்த உயிர்களை படைத்தவர் கடவுள் தான் ...அவர் படைத்த ஒரு உயிரினம் மற்ற உயிரினத்தை சாப்பிடும் சாப்பிடுகிறது இது ஒரு வட்டம் போல் ஒன்றையொன்று பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர்கள். ..இது கடவுளின் ஏற்பாடுகள் படைப்புகள்

கோவில் சுழலில். மற்ற உயிர் இனங்கள் ஒன்றையொன்று பிடித்து சாப்பிடுவதில்லையா??

சாப்பிடுகின்றன. ....இது கடவுளின் ஏற்பாடுகள் ஆகும் 🙏.

கோவில்கள் கட்டுவதின். மூலம் கடவுளை குடியமர்த்த முடியாது ஏனெனில் அவர் எங்குமே இருக்கிறார்

வழிபாடு செய்வதன் மூலம்

அர்ச்சனைகள். செய்வதன். மூலம்

அதிக பணத்தை செலவு செய்வதன். மூலம் நாங்கள் நினைத்ததை பெற்றுக்கொள்ள சாதித்துக் கொள்ள முடியாது ....

அங்கே அந்த கடை இருப்பதில் எந்தவொரு பிரச்சனையில்லை பிரச்சனை உங்கள் மனதில் தான் உண்டு” எதிரகருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

மன்னித்துக் கொள்ளவும் சசியண்ணா..தவறை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.

இல்லை முடியாது தொடர்ந்தும் தவறுகள் விட்டால் மன்னிக்க முடியாது 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/5/2025 at 08:14, Kandiah57 said:

மிக சிறந்த மேளக்காரன். கைதடியை சேர்ந்தவர் தான் அவருடைய பெயர் பழனி அந்த காலத்தில் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடம் பெற்றவர் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம். பரிசு பெற்றவர் முதலமைச்சர் பெயர் தெரியாது கைதடி சந்தியில் வந்து நின்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடி விடும் பொதுவாக மேளகாரர். எல்லாம் மச்சம். சாப்பிடுவார்கள் ஆனால் கோயில் மேளக்காரர். மதிப்பு இல்லாதவர்கள் சோம்பேறிகள். அவர்கள் சாப்பிடுவதில்லை மக்கள் மச்சம். சாப்பிடுவார்களா ?? இல்லையா?? என்று பார்ப்பதில்லை .....நன்றாக மேளம் அடிப்பாரா. ?? என்று தான் பார்ப்பார்கள்

பழனிக்கு சாராயமும் ஆட்டிறைச்சியும் இல்லாட்டி மேளத்தில கை வைக்க மாட்டார்.நல்லா மூசி மூசி தவில் கச்சேரி வைப்பார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

சைவ உணவு என்று அறிவிக்க வைத்த வெற்றியை கொண்டாட வேலன் சாமி வீட்டில் கோழி குழம்பும் குவாட்டருமா பார்ட்டியாம். 😂😂

நானா, கோழி இறைச்சி இல்லையாம் பன்றி இறைச்சியாம்!

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

பழனிக்கு சாராயமும் ஆட்டிறைச்சியும் இல்லாட்டி மேளத்தில கை வைக்க மாட்டார்.நல்லா மூசி மூசி தவில் கச்சேரி வைப்பார். 😂

ஆமாம் நல்ல சுருள். தலைமயிர். நீங்கள் நேரில் பார்த்து உள்ளீர்களா?? ?? அவருக்கு கொடுத்த பட்டம் தவில். வித்துவன். அல்லது வேறு தெரியாது .......நல்ல மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

நானா, கோழி இறைச்சி இல்லையாம் பன்றி இறைச்சியாம்!

சரி நைனா! பன்றி இறைச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு உணவகத்தை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் - வடக்கு ஆளுநரிடம் சைவ அமைப்புகள் வேண்டுகோள்

24 MAY, 2025 | 04:58 PM

image

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் நல்லை சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை சைவ அர்ச்சகர் சபை, சைவ பரிபாலன சபை, அகில இலங்கை சைவ மகா சபை, சைவ வித்யா விருத்தி சங்கம், இலங்கை சைவசமய பேரவை உட்பட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்துகற்கைகள் பேராசிரியர், திருக்கேதீச்சரம் அறங்காவலர் ஆகியோர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

முதல் கட்டமாக யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட நல்லூர் ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை சிவபுண்ணிய பிரதேசமாக மாநகர சபை வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். இதையே ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்றி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலய நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும் மேற்படி உணவகம் பன்னாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கையின் சட்டம் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள் எனவும், அவர்கள் நல்லூரில் தமது நிறுவனத்தின் கிளையை எந்தவொரு அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது திறந்தமை திட்டமிட்ட நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்ச் சைவப்பேரவையினர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், அனுமதியற்ற வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இளைய சமூகத்தை வழிப்படுத்தும் வகையில் அறநெறிக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான யோசனை தொடர்பிலும் தமிழ்ச் சைவப்பேரவையினர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து தனியார் கல்வி செயற்பாடுகளையும் வெள்ளி மாலையும், ஞாயிறு மதியம் வரையிலும் மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்து நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். அத்துடன் அறநெறி வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் அறநெறி வகுப்புக்கான வருகை மற்றும் செயற்பாடுகளை கட்டாயக் கல்வியின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

சில பாடசாலைகளில் மாணவர்களை சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடைவிதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவப்பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டனர்.

தமிழ்ச் சைவப் பேரவையினரின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/215584

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே உங்கள் சசிவர்ணம் பேசுகிறேன் புதிதாக "சங்கி வர்ணமாம்" 🤣

சொல்ல வேண்டிய கருத்தை தெரிய வேண்டிய கருத்தாளருக்கு, தெரிந்துகொள்ளும் விதத்தில் பதில் எழுதி ஆயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக பேசுபொருளாக இருந்த Barista நிறுவனம் நிலைமைகளை புரிந்து கொண்டு ஒரு முடிவையும் எடுத்துவிட்டது.

யாழ்களமும், வந்தான் வரத்தான், தீவான் (அதுதான் அந்த தீவு மக்கள்) இப்படி புதிதாக நல்லூரில் குடி வந்த மக்களை வியப்புக்குரியோடு அன்னியபடுத்தி கருத்து சொல்வதையும் ஏற்றுக்கொண்டாயிற்று.

கோஷன் அப்படி இல்லை என்று வாதாடினாலும் ஒரு உரையாடலில் அந்த குறிப்பிட்ட பதங்கள் வந்ததே தவறு என்று தான் நான் பார்க்கிறேன்.

இந்த திரியை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாக வாசித்து வருபவர்களுக்கு தெரியும் எங்கே, எப்படியான நையாண்டி கருத்துக்களில் இருந்து உரையாடல் தடம் புரண்டது என்பதை அவதானிக்க.

இது ஒன்றும் யாழ் களத்திற்கு புதிதல்ல, இவற்றை பக்குவமாக ஏற்றுக்கொண்டு நடுநிலை வகிப்பதை போல அல்லது கடந்துபோகும் உன்னத நிலைக்கு யாழ்களம் வந்தாயிற்று.

இனி இதிலே குந்தி இருந்து மேலும் மேலும் பிச்சைக்காரன் சொறிந்த புண்ணாய் கருத்து எழுத ஒன்றும் இல்லை.

நன்றி 🥰

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படும் இடம், பருத்தித்துறை வீதி, நல்லூர் குறுக்கு தெரு சந்தி (வரலாற்றின் படி நல்லூர்).

(சற்று அப்பால், பருத்தித்துறை வீதி இடது பக்கமாக வளைந்த்து, முத்திரை சந்தி , பழைய நல்லூர், யமுனாரியுடன் சேர்ந்து - முத்திரை சந்திக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் உள்ள இடம்.)

உண்மையில (பழைய) நல்லூரின் (நெல்லூரின்) எல்லை - வடக்கே சட்டநாதர் கோயில், கிழக்கே வெய்யில் உகர்ந்த பிள்ளையார் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், தெறக்கே மூத்த விநாயகர் கோயில். அந்த அளவு சுற்று பிரதேசம். அனால், அது நல்லூர் கோயில், இராசதானியும் சேர்ந்த அமைப்பில்.

ஆனால். அதெல்லாம் கைவிடப்பட்டு, (நெல்லூரை நல்லூராக்கி), இப்போது உள்ள நல்லூர் கோயில்.

இந்த இடம், குறிப்பாக, திருவிழாவுக்கு barrier போடும் சந்தி (எல்லை), திருவிழா வளாகத்துக்குள் பிரவிவேசிக்கும் இடம். அதில் அசைவ உணவு இருந்தால், திருவிழா காலங்களிலும் இருக்கும்.

எனவே தவிர்ப்பது common sense. அந்தந்த சூழலுக்கு, கலாசாரத்துக்கு ஏற்றவாறு.

அந்த இடத்தை சொல்லுவது கந்த புராண கலாசார இடம் என்று (இது அங்கு புதிததாக வந்தவர்களுக்கு தெரியாது,)

(நல்லூரில் வைரவ மடையின் போது ஆடு வெட்டும் வழக்கமும் இருந்தது. நாவலர் அதை தடுக்க போய், அவரின் காதை வெட்ட முயன்ற அளவுக்கு பிரச்சனை வந்தது. ஏனெனில், ஆட்டின் காதை கீறி, நேர்ந்து, கணங்களை திறந்த்து விட்டே பூசை, ஆடு வெட்டுடது பூசையின் ஒரு பகுதி. முருகவழிபாட்டில், ஆட்டு கிடாய் இரத்தத்தை, தினையுடன் பிசைந்து, கிடாய் இறைச்சி உடன் நைவேத்தியம் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மாவிளக்கில் இப்போதும் குங்குமத்தால் (இரத்தம் வடிவது போல) அலங்காரம் செய்வது. இப்படியானதை ஒதுக்கு புறத்தில் க்கோட இப்படி செய்வதை சமூகத்தின் பெரும் பகுதிக்கு விருப்பம் இல்லை)

அனால் வேலன் சாமி செய்வது, மாநகர சபை எல்லைக்குள் அசைவ உணவுக்கு தடை - இது தேவை இல்லாதது. பிரச்சனைகளை உருவாகும். அத்துடன் ஒரு முக்கியமான பொருளாதார பகுதி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

499673404_10171121056245368_659993684940

thumb_large_ui.jpg

சைவ உணவுகள் மட்டும் பரிமாறப் படும் என... அறிவிக்க வைத்த,

வேலன் சுவாமி ஜீ... அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். animiertes-applaus-smilies-bild-0024.gif animiertes-applaus-smilies-bild-0015.gif

முட்டையும் அசைவம் என்ற படியால்.... இனி அந்த உணவகத்தில் இருந்து, முட்டை பொரிக்கின்ற வாசம் கூட... வெளியே வரப்படாது. வந்தால்.... மீண்டும் போராட்டம் வெடிக்கும். ஆமா.... 😂

நல்லூர் கந்தனுக்கு அரோகரா.... என்று கும்மி அடியுங்க. animiertes-applaus-smilies-bild-0009.gif animiertes-applaus-smilies-bild-0005.gif 😂

வேல்... வேல்... வெற்றி வேல். animiertes-applaus-smilies-bild-0002.gif animiertes-applaus-smilies-bild-0002.gif animiertes-applaus-smilies-bild-0002.gif

இலண்டன் சாமியாருக்கு ஜே போட்டு, இப்ப கூனி குறுகி நிற்பவர் யார் என உங்களுக்கும் எனக்கும் தெரியும்.

அதே நிலை உங்களுக்கும் வரக்கூடாது என நல்லூரில் ஒரு ஒரு ரூபாய் அர்ச்சனை செய்துள்ளேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

ஐயனே ஞான பண்டிதா😂

உங்கள் எழுத்தில் குறை இல்லை...... சொல்லில் கூட குறை இல்லை ....ஆனால் பொருளில் தான் குறை தொக்கி நிற்கின்றது

பொருள் மயக்கம் இருந்தாலும் சரி செய்துவிடலாம்......

ஆனால் பொருளில் இன்னொரு பொருள் தொக்கி நிற்பதையே நாம் 😅

கடைந்து எடுத்து தெளிந்து...... அன்னம் போல உங்கள் சபையில் முன்வைத்தோம் .😇

பிழை நீயப்பா இன்றும் பிழை நீயப்பா😃

சரிசெய்து தொடரும் அப்பா ........😂

வேலா ... கந்தா .....கடம்பா ......கார்த்திகேயா😇

எல்லாம் உம் செயலப்பா ...... 😊

அவ்வையே, தமிழ் வாத்தியாரே,

நீங்கள் பொருள் விளங்கியது என் பிழை அல்லவே…

காரை தீவு தான் நாம் என பெருமிதம் கொள்ளாமல் காரை நகர் என தாமே பெயர் மாற்றி கொண்டதில் நான் ஒரு கூட்டு தாழ்வு மனச்சிக்கலை காண்கிறேன் தமிழ் குரவரே.

அதே போல்தான் தீவக மக்கள் என்பதை தீவார் என பொருள் கொண்டதும், சொல் குற்றமோ, பொருற்குற்றமோ அல்ல, மாறாக வியாக்கியான குற்றம் என நயம்பட உரைக்கிறேன்.

7 hours ago, satan said:

அப்படியா நான் அதைக்கவனிக்கவில்லையே? 

ஊர்புதினத்தில் சுமனை போட்டு வாங்கிய மற்றைய திரியில் இது சொல்லப்பட்டது.

1 hour ago, ஏராளன் said:

தமிழ்ச் சைவப் பேரவையினரின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

சூப்பர்.

ஏலவே வெளிநாட்டு பண வரவை அரச கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் உட்பட பல ஆப்புகளுக்கு ஆவன செய்த ஆளுனரிடமே இன்னும் ஒரு ஆப்பை தாமாகவே கொண்டு போய் கொடுத்துள்ளார்கள்.

இந்த இனத்துக்கு, சமஸ்டி, பொலிஸ், காணி உரிமைதான் இல்லாத கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

கோஷன் அப்படி இல்லை என்று வாதாடினாலும் ஒரு உரையாடலில் அந்த குறிப்பிட்ட பதங்கள் வந்ததே தவறு என்று தான் நான் பார்க்கிறேன்.

பார்வையில்தான் கோளாறு. எழுத்தில் அல்ல. நல்ல கண்வைத்தியரை பார்க்கவும்.

1 hour ago, Sasi_varnam said:

இந்த திரியை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாக வாசித்து வருபவர்களுக்கு தெரியும் எங்கே, எப்படியான நையாண்டி கருத்துக்களில் இருந்து உரையாடல் தடம் புரண்டது என்பதை அவதானிக்க.

மிகவும் காரசாரமாக ஆனால் கண்ணியமாக போய் கொண்டிருந்த திரியை நடுநிலை நக்கிகள் என்ற பதபிரயோகம் மூலம் முதலில் நாறடித்தவர் யார் என்பதை மேலே போய் பார்க்கவும்.

1 hour ago, Sasi_varnam said:

இனி இதிலே குந்தி இருந்து மேலும் மேலும் பிச்சைக்காரன் சொறிந்த புண்ணாய் கருத்து எழுத ஒன்றும் இல்லை.

பரிஸ்டா மாதிரி போய் கொண்டிருந்த உரையாடலை, வந்து இரெண்டாம் பதிவிலேயே கள்ளு தவறணை ரேஞ்சுக்கு இறக்கி விட்டீர்கள்.

வந்த வேலை முடிந்தால் கிளம்ப வேண்டியதுதானே.

நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் மீண்டும் வந்து இன்னொரு திரியை நாறடிக்கும் வரை நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

அனால் வேலன் சாமி செய்வது, மாநகர சபை எல்லைக்குள் அசைவ உணவுக்கு தடை - இது தேவை இல்லாதது. பிரச்சனைகளை உருவாகும். அத்துடன் ஒரு முக்கியமான பொருளாதார பகுதி.

ஆமாம் அரியலை கூட மாநகரசபைக்குள். அடங்கியது இல்லையா ?? இப்படி பார்க்கும் போது தமிழர்கள் அசைவம் சாப்பிட முடியாது ஏனெனில் ஒவ்வொரு கோவிலும். ஒன்று தொடங்கி மூன்று கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிறது இவை பெரிய கோவில்கள் இதைவிடவும் சின்ன சின்ன கோவில்கள் நிறையவே உண்டு” சின்னன். பெரிசு அற்றமுறையில். ஒவ்வொரு கோயிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலும். அசைவம் கடைகளில் விற்றக்கூடாது ....சமையல் செய்யக்கூடாது ....என்றால் வடமாகணத்தில் எவரும் அசைவம் சாப்பிட முடியாது ....முடியுமா?????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.