Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

03 JUN, 2025 | 03:33 PM

image

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியை ஒருவரே மரணமடைந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

54.jpg

அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 

கணவன், மனைவி  இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்றையதினம் காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து  கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216456

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தாங்கள் கல்வி சமூகம் என்று வேறு சொல்லி கொள்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இருவரின் வாழ்வும் தொலைந்தது.

எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காணம் வெளியாகியுள்ளது.

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றையதினம் (03) இடம்பெற்றிருந்தது.

பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலம்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

மேலதிக விசாரணை

நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார்.

Vavuniya Crime: Wife Brutally Killed

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார். இதன் பின்னர் தான் அவரை கொலை செய்ததாகவும் வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamilwin.com/article/vavuniya-teacher-murder-shocking-news-1749018816

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இதே மாதிரி சம்பவம் ஒன்று கனடாவிலும் பல வருடங்களுக்கு முன் நடந்ததாக ஞாபகம் இருக்கு.அதை செய்ததும் தமிழர் தான்.

ஏன் தான் இப்படியான காட்டுமிராண்டி வேலைகளை செய்கின்றார்களோ தெரியவில்லை.

8 hours ago, island said:

மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?

இதை ஒத்த இன்னொரு சம்பவத்துக்கான எம்மவர்களின் பின்னூட்டங்களும், செய்தியை உள்வாங்கிய விதமும் எனக்கும் அண்மையில் கவலையை ஏற்படுத்தி இருந்தது.

ஒரு தமிழ் இளைஞன் (21 வயது என நினைக்கின்றேன்), நீரில் மூழ்கி இறந்து விட்டார். அந்த செய்தியைக் கேட்டவுடன், அவரது காதலியும் தற்கொலை செய்துவிட்டார்.

எம்மவர்களின் பின்னூட்டங்களில் 90 சதவீதமானவை, அப் பெண்ணை மிகவும் பாராட்டியும், இது தான் உண்மையான காதல் , காவியக் காதல், புனித காதல், என்றெல்லாம் மெய்சிலிர்த்து இருந்தனர்.

தாலிபானிசம் என்பது கொலைகளை மட்டுமல்ல, தற்கொலைகளையும் ஆதரிக்கும் (தற்கொடைகளை அல்ல). இப்படியான சமூகத்தில் போலி மதிப்பீடுகளின் மூலம் தான் ஒருவரை எடை போடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்பட்டவர் கற்பிணி பெண் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலையாளி இரு உயிர்களை கொலை செய்துள்ளார். செய்தியின் பிரகாரம் கொலைகளை திட்டமிட்டு செய்துள்ளார்.

இந்த செய்தியை நேற்று பார்த்தேன். இவற்றுக்கு என்னதான் பின்னூட்டம் வழங்குவது? வீதி விபத்து மரணங்கள் ஒரு புறம், தற்கொலை மரணங்கள் ஒரு புறம், இவற்றுடன் அவ்வப்போது கொலைகள். இந்த அவலங்களையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் வாழவேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன்.

ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம்.

கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு என்னதான் பின்னூட்டம் வழங்குவது?☹️

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் விவாகரத்து இலகுவாக்கப்பட வேண்டும். புனிதப் படுத்துதல்கள் தவிர்க்கப் பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன்.

ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம்.

கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.

இருவருக்கும் ஒத்து வரவில்லை கணவனை விட காதலன் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைக் கவர்ந்து விட்டார் . இருவரும் பிரிந்து வாழ்வதுதான்இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும்.மேலும் இருவருக்கும் வேறுபிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கொடுரமான கொலையின் மூலம் சாதித்தது என்ன இரண்டு உயிர்கள் அழிந்தத மட்டுமல்ல கொலை செய்தவரின் வாழ்க்கையும் அழிந்து விட்டது.அந்தப் பெண்ணின் காதலன் போட்டோக்களை அனுப்பியதும் மிகவும் தவறான செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன்.

ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம்.

கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.

செய்திகளின் பிரகாரம் இன்னொருத்தரின் மனைவியுடன் தொடர்புவைத்து பிள்ளையையும் உருவாக்கிவிட்டு, அதை அந்த பெண்ணின் கணவனிடமும் தெரிவித்து இரண்டு உயிர்களின் கொலை வரை செல்வதற்கு வழிவகுத்த 21 வயது நபருக்கு உங்கள் அறிவுரை என்ன? இவருக்கு என்ன தண்டனை? இவர் சமூகத்தின் முன் அறியப்படவேண்டிய தேவை இல்லையா? இவ்வளவும் நடந்த பின்னர் இன்னோர் பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடாத்த போகின்றாரா? இவரது வாக்குமூலம் அறியப்படும்போதே மிகுதி உண்மைகள் புலப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபெண்ணை அதுவும் கர்ப்பிணியாய் இருப்பவரின் உயிரை எடுக்க யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது? இதைப்பின்பற்றி ஏனைய அறிவு கெடடதுகளும் முயலக் கூடும். சமூகத்துக்கு ஒரு தப்பான எடுத்துக்காட்டு .பிரச்சினையை சற்று ஆறப்போட்டு ஒரு தீர்வுகண்டிருக்கலாம். ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் புத்தி தடுமாறிவிடடது .

  • கருத்துக்கள உறவுகள்

காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான்.

தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

Edited by வாலி

கொலை செய்தவனிம் கூற்றை அப்படியே நம்புகின்றனர பலர்.

கொலை செய்யப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண் தன் பக்க நியாயங்களை கூறுவதற்கு கூட சந்தர்ப்பம் இல்லாத நிலையில் கொலைஞன் கூறுவதை அப்படியே எந்தக் கேள்வியும் இன்றி நம்புகின்றனர். அல்லது அப்படி நம்ப விரும்புகின்றனர்.

உண்மை முற்றிலும் வேறானதாகக் கூட இருக்கலாம்.

கொலைகாரன் எப்பவும் தன் செயலை நியாயப்படுத்ததான் செய்வான். தன்னால் கொல்லப்பட்டவர் மீது பிறருக்கு வெறுப்பை வரச் செய்வதன் மூலம் தன் செயலை நியாயப்படுத்தவே முயல்வான்.

அதை அப்படியே நம்புகின்றவர்களை என்னவென்பது?

படுகொலைகளை செய்தவர்களுக்கு கூட தம் பக்க நியாயங்களை சொல்வதற்கு சட்டங்களும் நீதி அமைப்பும் இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை வழங்காது உடனடியாக தண்டனை கொடுப்பதும் அதை நியாயப்படுத்துவதும் காட்டுமிராண்டித்தனம்.

Edited by நிழலி
விடுபட்டதை சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டித்தனத்தை நியாயபடுத்தும் சமுதாயத்தின் போக்கு சகிக்க முடியவில்லை 😟

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

செய்திகளின் பிரகாரம் இன்னொருத்தரின் மனைவியுடன் தொடர்புவைத்து பிள்ளையையும் உருவாக்கிவிட்டு, அதை அந்த பெண்ணின் கணவனிடமும் தெரிவித்து இரண்டு உயிர்களின் கொலை வரை செல்வதற்கு வழிவகுத்த 21 வயது நபருக்கு உங்கள் அறிவுரை என்ன? இவருக்கு என்ன தண்டனை? இவர் சமூகத்தின் முன் அறியப்படவேண்டிய தேவை இல்லையா? இவ்வளவும் நடந்த பின்னர் இன்னோர் பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடாத்த போகின்றாரா? இவரது வாக்குமூலம் அறியப்படும்போதே மிகுதி உண்மைகள் புலப்படும்.

மிகத்தவறான செயல். சட்டங்கள் திருத்தப்பட்டு இவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, வாலி said:

காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான்.

தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

இப்படியான செயல்களை நவநாகரீக மேற்குலகத்தினர் சர்வ சாதாரணமாகத்தானே செய்கின்றனர்? அங்கே தலை வெட்டோ அல்லது கைகால் முறிப்புகளே இல்லை. ஒருவருக்கு பிடிக்கவில்லை இல்லையே ஒத்து போகவில்லை என்றால் விலகி போகின்றார்கள். மறு வாழ்வை,மறு துணையை தேடுகின்றார்கள்.

துணைவிக்கு தன்னை பிடிக்கவில்லை. இன்னோருவருடன் தொடர்பு என்றால் தலையெடுப்பது தீர்வல்ல.அது காட்டுமிராண்டித்தனம் என்பது என் கருத்து.

8 hours ago, வாலி said:

காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான்.

தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

இந்தக் கொலை மூலம் தனது மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை உலகம் முழுவதும் பறைசாற்றியுள்ளார். இப்போது அந்தத் தன்மானம் எங்கே போனது ?

இன்று போட்டோக்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இறந்தவரின் கருவின் டிஎன்ஏ அப்குப்பாய்வு மூலம் இக் குழந்தை கணவரினுடையது தான் என்று நிரூபித்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க முடியுமா ?

கோபத்தில் நிலைகுலைந்து ஒரு கொலை செய்வது வேறு. தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போகுமளவுக்குக் குரூரமான இந்தத் தன்மானத்தான் ஒரு மிருகமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான்.

தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

மன்னிக்கவும் வாலி, நீங்கள் கூறியது போல பெண்கள் சிந்திக்க வெளிக்கிட்டால் இலங்கையில் உள்ள பல ஆயிரம் ஆண்களின் தலை எப்போதோ உருண்டிருக்கும். இலங்கையின் ஆண்களின் ஜனத்தொகையில் பாரிய வீழ்சசியும் ஏற்பட்டிருக்கும்.

மாதவியிடம் சென்று வந்த கோவலனை கண்டிக்காமல் வரவேற்று பணிவிடை செய்த காரணத்தால் அந்த கண்ணகியை இன்றும் கற்புக்கரசியாக கொண்டாடி கோவில் கட்டி கும்பிடும் சமூகமல்லவா! கண்ணகி அன்று இதை செய்திருந்தால் பாதகி என்றிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்கள் ஒரு சமூகத்தையே விளிம்பு நிலைக்கு கொண்டு வருகின்றது.

இங்கு சிலர் அவதானித்தது போல் சமூக ஊடகங்களில் கொலை செய்தவருக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் தெரிவிக்கும் பல கருத்துக்கள் பரவலாக உள்ளன.

சில தினங்கள் முன் அல்சகீராவில் ஒரு செய்தி பார்த்தேன். அதில் 17 வயதான சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சிறுமி பாகிஸ்தானில் அவரது வீட்டில் வைத்து நெஞ்சில் இரு தடவைகள் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 22 வயது மதிக்கத்தக்க கொலையாளி பாகிஸ்தானின் இன்னோர் இடத்தில் வசிப்பவர் மிக நீண்ட பிரயாணம் செய்து சிறுமியை சந்திக்க வந்து கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். காவல்துறையினர் அவரை பிடித்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

எவ்வளவு சாதாரணமாக கொலையை செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகின்றது.

கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை இலங்கையில் நிறைவேற்றப்படுவது கொலை குற்றங்கள் செய்யப்படுவதை குறைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

மன்னிக்கவும் வாலி, நீங்கள் கூறியது போல பெண்கள் சிந்திக்க வெளிக்கிட்டால் இலங்கையில் உள்ள பல ஆயிரம் ஆண்களின் தலை எப்போதோ உருண்டிருக்கும். இலங்கையின் ஆண்களின் ஜனத்தொகையில் பாரிய வீழ்சசியும் ஏற்பட்டிருக்கும்.

ஆண்கள் எல்லோரையும் உங்களமாதிரியே நினைத்துவிட்டீர்கள்போல இருக்கு! ஆனால் உங்களுக்குத்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. மூன்றுதரம் தலாக் சொல்லீட்டு நாலுபேரோட இருக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Eppothum Thamizhan said:

ஆண்கள் எல்லோரையும் உங்களமாதிரியே நினைத்துவிட்டீர்கள்போல இருக்கு! ஆனால் உங்களுக்குத்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. மூன்றுதரம் தலாக் சொல்லீட்டு நாலுபேரோட இருக்கலாமே!

அடிக்கடி பல தடவைகள் எனது கருத்துக்களுக்குள் வந்து, அதற்கு தர்கக ரீதியில் பதில் சொல்லாமல் என்னை முஸ்லீமாக இனம் காட்டி வசைமாரி பொழிவதில் மும்முரமாக உள்ளீர்கள். அதற்கான காரணம் என்ன?

இதற்கு பதில் கூறும் கருத்தியல் நேர்மை உங்களிடம் இல்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், சக உறவுகளும் அறியவேண்டும் என்பதற்காக கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன் சுமதி என்னும் பெயரில் அல்லது கறுப்பி என்னும் பெயரில் (என்று தான் ஞாபகம்) அவர் பழைய திண்ணை இணைய இதழ்கள் உட்பட பல இடங்களில் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தார். நான் முன்னரோ, பின்னரோ தமிழில் அப்படியான கதைகளை எங்கும் காணவில்லை. அவருடைய பல கதைகளில் வரும் பெண்ணின் பார்வைகள் என்னை நிலைகுலைய வைத்தன. இந்த சம்பவம் போன்றே ஒரு கதையும் அவர் எழுதியிருந்தார். கதைக்களமாக கனடா இருந்தது. அந்தக் கதையில் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகின்றார். தற்கொலை என்று சொல்லுகின்றார்கள். இரு ஆண்களும் இறுதி ஊர்வலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அந்தக் கதையில் வரும் அந்தப் பெண்ணுக்காக இதை எழுதும் போதும் கண்கள் கலங்குகின்றன.

அரவிந்தனின் 'சிதம்பரம்' படத்தை இளைய வயதில் ஒரு தடவையும், பின்னர் சில வருடங்கள் முன் ஒரு தடவையும் பார்த்தேன். இதே போன்ற நிகழ்வுகள். ஒரு ஆண் அவ்ராகவே இறந்து போகின்றார். அடுத்தவர் சித்தம் இழந்து அலைகின்றார். உயிர் தப்பிய பெண் வழியற்று கோவில் ஒன்றின் வாசலில் வாழுகின்றார்.

எங்களின் சமூகத்திலும், இன்னும் பல சமூகங்களிலும் நான் உட்பட ஆண்களின் புரிதல்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. விலகிப் போய்க் கொண்டே இருக்கலாம். இதில் என்ன தன்மானம், தற்பெருமை, வீரம் குறைந்து போகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.