Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 Sep, 2025 | 06:14 PM

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார்.

கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார்.

இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்" நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/225604

  • Replies 68
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.

  • பெருமாள்
    பெருமாள்

    அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலக

  • பெருமாள்
    பெருமாள்

    தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf தடை செய்யப்பட்ட வலைக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார்.

எனக்கு தமிழ்நாட்டு வாக்குரிமை இருக்குமெண்டால்....என்ரை வாக்கு ஈழத்து மருமோனுக்குத்தான்.😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார்.

இவர் தமிழ்நாட்டு மக்களை தான் ஏமாற்றுகின்றார் என்று பார்த்தால் ஈழ தமிழர்களையும் சேர்த்து ஒரு வழி பார்க்க வேண்டும் என்று தான் நிற்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

வரும்கால முதல்வர் வாழ்க.

கதையோடு நிற்காமல் செயலிலும் இறங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விஜய் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க.. அதேவேளை அண்ணண் தம்பி சண்டையைவிட்டு நாம்தமிழர் வெளியவரணும்.. ஏற்கனவே சீமானின் பஸ் வெற்றிபாதையைவிட்டு விலகி ரொம்பதூரம் போய்விட்டது.. இது பத்தாதுன்னு காரணமே இல்லாம விஜை திட்டி பள்ளத்தை நோக்கி போயக்கொண்டிருக்கு.. விஜய் react பண்ணாத வரைக்கும், நீங்க என்ன கூச்சலிட்டும் ஒரு பயனும் இல்ல…விஜய் மீது நீங்கள் வைக்கும் எந்த தரக்குறைவான விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிக்க போவதில்லை… இது உங்களுக்கு தான் மென்மேலும் மன உளைச்சலை கொடுக்க போகிறது…எவ்வளவு சீக்கிரமா மீள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மீண்டு விடுங்கள் நாம் தமிழர் உறவுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

பருவகால அரசியல்வாதிகள் மக்கள் வாக்குகளை கவர்வதற்கு பல கதைகளை அடித்து விடுவார்கள், அதைக்கண்டு நாம் உச்சம் கொள்ளக்கூடாது. இவ்வளவு காலமும் நடிகர் விஜய் அவர்கள் ஆழ் உறைநிலையிலா இருந்தார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்காள பெருமக்கள் மரங்களில் ஏறி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வாக்காள பெருமக்கள் மரங்களில் ஏறி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

நாங்கள்… தமன்னாவை பார்க்க, பனை மரத்தில் ஏறினோம்.

அவர்கள்… விஜயை பார்க்க, வேப்பமரத்தில் ஏறுகின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள் விஜய் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க.. அதேவேளை அண்ணண் தம்பி சண்டையைவிட்டு நாம்தமிழர் வெளியவரணும்.. ஏற்கனவே சீமானின் பஸ் வெற்றிபாதையைவிட்டு விலகி ரொம்பதூரம் போய்விட்டது.. இது பத்தாதுன்னு காரணமே இல்லாம விஜை திட்டி பள்ளத்தை நோக்கி போயக்கொண்டிருக்கு.. விஜய் react பண்ணாத வரைக்கும், நீங்க என்ன கூச்சலிட்டும் ஒரு பயனும் இல்ல…விஜய் மீது நீங்கள் வைக்கும் எந்த தரக்குறைவான விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிக்க போவதில்லை… இது உங்களுக்கு தான் மென்மேலும் மன உளைச்சலை கொடுக்க போகிறது…எவ்வளவு சீக்கிரமா மீள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மீண்டு விடுங்கள் நாம் தமிழர் உறவுகள்...

அப்ப சபரீசனிட்ட வாங்கின 100 கோடிய நீங்க கொடுப்பீங்களா🤣

3 hours ago, zuma said:

பத்தோடு பதின்றோகவேனும் முக்கிய சந்தர்பங்களில் குரல் கொடுத்துள்ளார். போராட்ங்களிலும் கலந்துள்ளார்.

நன்றி மறப்பது நன்றன்று

நேற்றைய நாகை உரையில் நான் அவதானித்த விடயம்.

ஏனையை பிரச்சனைகளை பற்றி விஜை பேசிய போது எழுந்த மக்களின் சத்தம், ஈழத்தமிழர் பற்றி சொன்ன போது அதே அளவில் வரவில்லை.

இதுதான் எப்போதும் தமிழ் நாட்டின் மனநிலை. 2009 இலும் கூட.

ஆகவே ஒரு அடையாள ஆதரவை மீறி வேறு எதை எதிர்பார்தாலும் அது எம் மடமையே.

முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிழலி said:

முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.

மொழிபெயர்ப்பு

விஜையை தமிழ் நாட்டில் அரசியல் செய்ய வேண்டாம் என சொல்லவும் 🤣.

பிகு

விஜையும் ஒரு சராசரி அரசியல்வாதியே.

தமிழ் நாட்டில் மீன் வள கொள்ளையர் = அப்பாவி மீனவர்கள் என்ற மாபெரும் விம்பம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இதை சர்வகட்சி கூட்டத்தில் ஏற்று கொண்டாலே ஒழிய, தனி ஒரு கட்சி இப்படி சொல்வது அரசியல் தற்கொலைக்கு சமனானது.

விஜை அரசியல் தற்கொலை செய்யவில்லை, எனவே அவர் எமக்கு ஆதரவாக எழும்பும் சிறு குரல் கூட வேண்டாம் என சொல்லும் நிலையிலா நாம் இருக்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கன் மீடியா எல்லாம் விஜய் புலிகளுக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிவிட்டாராம்.. கதறிக்கொண்டிருக்கின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் பேரைக் கூட சொல்லத்தைரியமில்லை.இருந்தாலும் அவர் பேசியதை வரவேற்கலாம். விஜை இந்த விடயத்தைப் பேசி இருப்பதால் அது ஊடக வெளிச்சம் பெறும். காலம்கடந்தாவது ஒப்புக்கு ஒரு வரி பேசி விட்டு கடந்து போயிருக்கிறார்.இதை எல்லா அரசியல்வாதிகளும் பேசியிருக்கிறார்கள். நாளைக்கு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

3 hours ago, goshan_che said:

அப்ப சபரீசனிட்ட வாங்கின 100 கோடிய நீங்க கொடுப்பீங்களா🤣

விகடன் வாங்கிய காசுக்கு ஒரு செய்தியை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு சிவனே என்று இருக்கிறது.மேற்கொண்டு அதை உறுதிப்படுத்த எந்தச் செய்தியைுயும் வெளிவிடவில்லை.சீமான் எதிர்ப்பாளர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொணடு நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

விகடன் வாங்கிய காசுக்கு ஒரு செய்தியை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு சிவனே என்று இருக்கிறது.மேற்கொண்டு அதை உறுதிப்படுத்த எந்தச் செய்தியைுயும் வெளிவிடவில்லை.சீமான் எதிர்ப்பாளர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொணடு நிற்கிறார்கள்.

  1. அண்ணன் விஜி அண்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை போனவர், ஏன் விகடன் மேல் 1000 கோடி மானநஸ்ட வழக்கு போடவில்லை? (மானம் இருந்தால்தானே நட்டம் ஆக முடியும் என்கிறீர்களா🤣).

  2. முக முத்து இறந்தால் அவர் மகள் தேன் மொழியை அல்லவா சந்திக்க வேண்டும்? ஏன் முத்துவின் சிற்றன்னை மகன் ஸ்டாலினை இரெண்டு அரசியல் புரோக்கர்கள் சகிதம் சந்தித்தார்.

  3. இந்த சந்திப்புக்கு பின் ஏன் திமுக மீதான விமர்சனத்தை தடாலடியாக குறைத்து, அப்படியே விஜையை பார்த்து மூர்க்கமாக குரைக்க ஆரம்பித்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வடக்கன் மீடியா எல்லாம் விஜய் புலிகளுக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிவிட்டாராம்.. கதறிக்கொண்டிருக்கின்றன..

அவர்களுக்கும் டி ஆர் பி க்கு விஜைதான் தேவைபடுகிறார் போலும் 🤣.

யார் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர் விடயம் எப்போதும் தமிழக தேர்தல் அரசியலில் ஒரு non issue தான்.

83, 2009 இல் கூட அப்படித்தான்.

ஆனுர ஆட்சியில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் பலருக்கு கூட இது ஒரு non issue ஆகிவிட்ட நிலையில், புலம்பெயர் திரள் நிதிக்கு ஆசைபடுபவர்கள் மட்டும்தான் புலிகள், தலைவர் என கூவி கூவி வித்து கல்லா கட்டுவார்கள்.

படத்துக்கு 250 கோடியை விட்டு விட்டு அரசியலுக்கு வரும் விஜைக்கு திரள்நிதி-யாசகத்தில் ஆர்வம் இல்லாதிருப்பது வியப்பல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நிழலி said:

முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.

திமுக கட்சியினரிடமும் இதே கேள்வியை/ வேண்டுகோளை வைக்கலாமே நிழலியாரே?

3 hours ago, குமாரசாமி said:

திமுக கட்சியினரிடமும் இதே கேள்வியை/ வேண்டுகோளை வைக்கலாமே நிழலியாரே?

இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.

ஓம் நீங்கள் எழுதியதை யாழ்களத்தில் கண்டுள்ளோம்.

இலங்கை கடல் வளங்களை கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை ஈழ தமிழர்களை பேய்காட்டுவதற்காக தொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்வோம் என்பது அனைத்து தமிழ்நாட்டு கட்சிகள் ஊடகங்களின் கொள்கையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.

அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலகில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை வைத்து இருக்கும் ரோலர்கள் சத்தம் சந்தடி அற்று அழிக்க தொடங்கி விட்டன இதற்க்கு பல அரசியல் பின் புல காரணிகள் உள்ளன அதே வேளை இலங்கை சிங்கள அரசோ உடனடியாக நடவடிக்கைக்களை எடுக்காமல் வட கிழக்கில் தமது நீண்ட கால சிங்கள அரசியல் நலனை பேணுவதிலேயே குறியாக உள்ளது . அத்து மீறி இயற்கையான பவள பாறைகளை அழித்து நாசம் பண்ணும் கடல் கொள்ளையர் மீது மென்மையான அணுகுமுறையை கையாண்டு கொண்டு இலங்கையின் வடகிழக்கு எங்கும் விரைவான கடவு சீட்டுகளை இலகுவாக கிடைக்கும் வண்ணம் பல அலுவலங்களை திறந்து வைக்கின்றது அதனால் பல்லாயிர கணக்கான இளையோர்கள் மாற்று வழி தேடி செல்கின்றனர் .

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள்

https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf

தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அரிய வகை பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனைக்குளம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி

இதேபோல் ராமேசுவரம் முதல் மண்டபம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்ட குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு பவளப்பாறைகள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மீன்களும் அதிகம் காணப்படும்.

அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..!

கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா கடல் பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்களையும், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மீன்களையும் அதை நம்பியுள்ள மீனவர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட  மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சயப் பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரியவகை உயிரினங்கள்தான், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதுபோன்ற மீன்கள் மற்றும் அதை நம்பியுள்ள மீனவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியான ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார் வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ள இந்தக்காப்பகம், இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள், இந்தப் பகுதியில்தான் காணப்படுகின்றன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து இப்பகுதி காணப்படுகிறது. மேலும் கடற்பஞ்சுகள், பவளங்கள், கடல்விசிறிகள், இறால்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, வாழை தீவு ஆகிய தீவுகளும் மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றில் கடினவகை பவளப் பாறைகளும் அடங்கும்.

இத்தகைய அரிய பகுதியைப் பாதுகாக்கத் தவறியதோடு, அதற்காகத் துவங்கப்பட்ட உயிர்கோள காப்பகம் எனும் அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்தவும் தமிழக அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

``தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பணி கடல்வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமூக மேம்பாட்டை உயர்த்துவது ஆகியவைதான். இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியுடன் இயங்கி வந்தது.

இந்நிலையில், ஐ.நா. உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியானது, கடந்த 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் திட்டத்தை நீடித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், நான்காண்டுகளுக்கு ரூபாய் 10 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்யாமல் இதுவரை 5.96 கோடி ரூபாய் மட்டுமே அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 0.74 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் அத்திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாகக் கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க்கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட பாரம்பர்ய மீனவர்களிடமே அக்கடமையை ஒப்படைப்பதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட 2000-வது ஆண்டு தொடங்கி இன்றுவரை பதினேழு ஆண்டுகளில் அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், கண்துடைப்புக்காக சில கூட்டங்களை மீனவர்களை வைத்து நடத்திவிட்டு, அரசின் பணத்துக்கு கணக்கு எழுதிய வேலைதான் நடந்தது. எனவே, அறக்கட்டளையின் செயல்பாடு முடியவில்லை. இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள்.

தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. அவற்றைக் கடத்திச் செல்லும் சிலர், சென்னையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடத்திச் செல்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப் பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் தொடங்கி உள்ளது. பவளப்பாறைகள் கடத்தல் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலைக் கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவற்றாலும் கடல் வளம் பெரிதும் அழிந்து கொண்டிருக்கிறது.

கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல. அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகளே. இத்தகைய பவளப்பாறைகள், கடலின் தட்பவெப்பத்தை பேணிக்காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. எனவே, மீண்டும் தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தற்கால சூழலுக்கு ஏற்ப, விதிகளில் மாற்றம் செய்து, மத்திய அரசு மற்றும் ஐ.நா. நிதியுதவியுடன் செயல்படச் செய்ய வேண்டும். இதன் மூலம் மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களை பாதுகாக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.vikatan.com/literature/arts/124980-is-gulf-of-mannar-biosphere-reserve-trust-going-to-be-shutdown

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் முதல்வராக வருவதை உற்சாகமாகக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மக்களும் தமிழச்சிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2025 at 21:06, goshan_che said:
  1. அண்ணன் விஜி அண்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை போனவர், ஏன் விகடன் மேல் 1000 கோடி மானநஸ்ட வழக்கு போடவில்லை? (மானம் இருந்தால்தானே நட்டம் ஆக முடியும் என்கிறீர்களா🤣).

  2. முக முத்து இறந்தால் அவர் மகள் தேன் மொழியை அல்லவா சந்திக்க வேண்டும்? ஏன் முத்துவின் சிற்றன்னை மகன் ஸ்டாலினை இரெண்டு அரசியல் புரோக்கர்கள் சகிதம் சந்தித்தார்.

  3. இந்த சந்திப்புக்கு பின் ஏன் திமுக மீதான விமர்சனத்தை தடாலடியாக குறைத்து, அப்படியே விஜையை பார்த்து மூர்க்கமாக குரைக்க ஆரம்பித்தார்?

விஜியின் வழக்குகளளை ரத்து செய்ய கேட்டு சீமான் தொடுத்த வழக்கில் சீமானுக்கு சாதாகமான தீர்ப்பு வந்துள்ளது.

விகடன் அதை சிறு கிசு கிசுவாகப் போட்டுள்ள செய்திக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க இந்தத் தேர்தல் நேரத்தில் சீமான் நேரத்தை வீணடிப்பது அவசிமற்றது. திமுகவை எதிர்த்தால் பாஜகவின் B ரீம் விஜைய எதிர்த்தால் திமுகவின் B ரீம் இப்படியே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்ற சீமான். விஜை முதல் மாநாட்டில் திராவிடத்தேசியமும் தமிழ்த்தேசியமும் தனது அரசியல் கொள்கை என்று முரண்பட்ட தெளிவற்ற கொள்கையை வெளியிட்ட அன்று இரவே விஜையின் கருத்தை எதிர்த்து கருத்துத்தெரிவித்துள்ளார். 10 நிமிடப் பேச்சில் மேலோட்டமாக விஜை 30 செக்கனில் பேசிய விடயத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு ஒரு சில நிமிடங்கள் விஜைஜைப் பற்றிப் பேசியதும் அதுவும் எந்த ஊடகங்கள் சீமானை இருட்டடிப்புச்செய்தனவோ அதேதிமுக ஊடகங்கள் பெரிது படுத்துவதும் அதை அணில்குஞ்சுகள் காவித்திரிவதும் நகைப்புக்குரியது

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, புலவர் said:

விஜியின் வழக்குகளளை ரத்து செய்ய கேட்டு சீமான் தொடுத்த வழக்கில் சீமானுக்கு சாதாகமான தீர்ப்பு வந்துள்ளது.

இது சம்பந்தமான திரியில் அலசி, அண்ணனை கிழித்து காயப்போட்டிருக்கு…நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும்.

49 minutes ago, புலவர் said:

விகடன் அதை சிறு கிசு கிசுவாகப் போட்டுள்ள செய்திக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்க இந்தத் தேர்தல் நேரத்தில் சீமான் நேரத்தை வீணடிப்பது அவசிமற்றது. திமுகவை எதிர்த்தால் பாஜகவின் B ரீம் விஜைய எதிர்த்தால் திமுகவின் B ரீம் இப்படியே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்ற சீமான். விஜை முதல் மாநாட்டில் திராவிடத்தேசியமும் தமிழ்த்தேசியமும் தனது அரசியல் கொள்கை என்று முரண்பட்ட தெளிவற்ற கொள்கையை வெளியிட்ட அன்று இரவே விஜையின் கருத்தை எதிர்த்து கருத்துத்தெரிவித்துள்ளார். 10 நிமிடப் பேச்சில் மேலோட்டமாக விஜை 30 செக்கனில் பேசிய விடயத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக திமுக பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு ஒரு சில நிமிடங்கள் விஜைஜைப் பற்றிப் பேசியதும் அதுவும் எந்த ஊடகங்கள் சீமானை இருட்டடிப்புச்செய்தனவோ அதேதிமுக ஊடகங்கள் பெரிது படுத்துவதும் அதை அணில்குஞ்சுகள் காவித்திரிவதும் நகைப்புக்குரியது

சீமான் விஜையை முன்பே விமர்சிக்க தொடங்கி விட்டார் என்பது உண்மை.

ஆனால் ஸ்டாலின், சீமான் சந்திப்புக்கு பிந்தான் மிக கீழ்தரமாக விமர்சிக்கிறார்.

#வாங்கின காசுக்கு அதிகமாவே கூவிறாண்டா கொய்யால மொமெண்ட்

சீமாம் சபரீசனை சந்தித்தார் என செய்தி போட்டது யுடியூப் ஊடகம் அல்ல.

தமிழகத்தின் முண்ணனி நிறுவனமான விகடன்.

இது பொய்யானால் - சபரீசன், சீமான் இருவருக்கும் அது பெரிய அவதூறு.

ஆனால் இரு கள்ளரும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் கள்ள மெளனம் காப்பது - விடயம் உண்மை என்பதையே காட்டுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கு. அண்ணி விடயத்தில் பாஜக வக்கீலை பிடித்து உச்ச நீதிமன்றை வளைத்த சீமான் - விகடன் மீது வழக்கு போட முடியாது என்பது நொண்டிசாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்):

  1. இந்தி எதிர்ப்பு

  2. நீட் தேர்வு எதிர்ப்பு

  3. ஊழலை அடியோடு அழித்தல்

  4. சமூகநீதியை ஏற்படுத்தல்

  5. இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல்

  6. கச்சதீவை மீட்டல்

  7. இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல்

  8. ........

ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது.

பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.